சங்கம் சொல்லாத கவிதை நீ
2
நள்ளிரவு இரண்டு..
நிவாவிற்கு துணைக்கு வந்த ஜோதீஷ், நிவி!
“நிவி! இனி இதுபோல நைட் அவுட் கூட்டிட்டு போகாதே பா.. வீட்டில் திட்டுராங்க..”
“ஏனாம்?” ஆணவமாக புருவம் தூக்கி நிவா..
“எனக்கும் வேலை இருக்கும்ல..”
“என்னா வேலை என்னைத் தாண்டி?” எகிறினாள் எதிரிலிருந்தவள்..
“பேர் கெட்டுப் போவுது..”
“ஓஹோ.. இவ்ரு அவ்ளோ பெரிய அப்பாடக்கர் போடா போடா நாய்க்கு பேரு கூட இருக்கா.. எருமை நான் வா ன்னா வரணும் போன்னா போணும் அதான் உன் வேலை.. என்ன இடையில சத்தம் வருது? என்ன கொழுப்பு ஏறி போச்சா? கொன்றுவேன் ராஸ்கல்..” செம்ம திட்டு
பிடிச்சா ஒரு கைப்பிடிக்கு அடங்க மாட்டாள் இந்த அழகு ராட்சசி.. ஆறரை அடி 150 கிலோ மாமிச மலை அவளிடம் பம்மி நின்றது.. அவளின் ஒவ்வொரு மிரட்டலுக்கும் பயந்தது.. தாஜா பண்ணி குழைந்தது..
“சரி சரி நிவி.. இரவில் வெளியில் போவத குறையேன்.. பகல்ன்னா வரேன்.. “
“என்ன பண்ண? எல்லாரும் நைட் தான் பஜன் வைக்கிறாங்க.. சரி போ நல்லா தூங்கி ரெஸ்ட் எடு.. நாளை காலை 10மணிக்கு சார்ப்பா வந்திடு.. சின்ன ஷாப்பிங் இருக்கு.. பூஜா சாமியார் புதுசா 26 புக்ஸ் ரிலீஸ் பண்ணியிருக்கார் வாங்கோனும்..”
ஜோதி டயத்தை பார்த்தான்.. பேச்சு வார்தையிலேயே அரைமணிநேரம் போயிருக்க.. இனி வீட்டுக்கு போக 3 ஆகும்.. சாப்பிட்டு தூங்க 4 ஆகும்.. மீதம் 5 மணிநேரம் தூங்க இருக்கு சந்தோசம்!
“சரி சரி வரேன் நிவி.. பத்திரமா போ.. நல்லா தூங்கு! குட்நைட் மா..” கைகாட்டி சாலைக்கு போனவனை..
ஜோ! ஜோ!” சப்தமாய் அழைத்தாள் நிவி
“சொல்லுமா..”
“ஐ லவ் யூ டா மை ஸ்வீட் டெடி! ” காந்த சிரிப்பு நிவியெனும் கண்ணழகியிடமிருந்து..
“சரிடாமா!..” பளிச்சென்று அந்த பெரிய சைஸ் கரடி பொம்மை முகம் மலர.. கையசைத்து தன் கார் எடுத்துக்கொண்டு சென்று விட..
இந்த ஊமை நாடகமெல்லாம் சிசி கேமராவில் சாட்சியா பார்த்திருந்தார் ராஜன்..
மகள் வாசல் வரும் நேரம் போன் பண்ண சொல்லி வாட்ச்மேன் கிட்டே சொல்லியிருக்க, அவரும் கடமையை செய்திருக்க.. கண்ணில் காட்சிகள் சிக்கியது.. இனி பொறுக்க முடியாது.. சங்கரி சொன்னது அனைத்தும் உண்மை.. வயசு பொண்ணு நடத்தை இப்படி இருந்தா.. அனுதினம் கோடி கோடியாக சம்பாரித்து என்ன? விரக்தி கூடியது..
சுகர் பிரஷர் மாத்திரை எடுக்க மறந்தது இரவு தீர்த்தம் குடித்தவர்.. உண்ணவில்லை .. வயிறு காந்தியது.. சங்கரி இருந்தால் இப்படி விட மாட்டார்.. திட்டியாவது சாப்பிட வைத்துவிடுவார்.. தாய் காணாபிள்ளை ஏக்கம் போல இவருக்கு வர கண்ணில் நீராய் துளிர்த்தது..
ஒரே கணம் தான் “அந்த” சிந்தனை குறுக்கால ஓடுச்சு.. அவரால் செல்ல மகளை கண்டிக்க முடியாது ஆனால் வேறு ஆள் விட்டு சிறப்பா செய்யலாம்.. அந்த காலத்திலேயே பெண் சண்டியர் என்று பேர் வாங்கிய சிந்தாமணி அத்தை வீட்டில் விட்டால் என்ன?
கல்யாண வீடு சாக்கு வச்சி இந்த இம்சியை அங்கு விட்டுற வேண்டியது தான்..
சரிவருமா? வருதோ இல்லையோ? அன்றாட நடத்தை அட்டவணை மாறினால் மாற்றத்துக்கு வாய்ப்பு இருக்கு.. ஒத்தை பெண்ணாய் வளர்ந்ததால் இவளுக்கு வாழ்க்கை பற்றி அனுமானமில்ல.. கண்டதே காட்சி கொண்டதே கோலம்ன்னு இருக்கா.. மாறனும்னா மாற்றம் வரணும்
நிவியை காணாது இருக்க முடியாது?! இதயத்தின் ஓரத்தில் ராஜனுக்கு வலித்தாலும் கூட்டு குடும்பத்தில் தானே விடுறோம்.. பத்திரமா பார்த்துப்பாங்க.. சம்மு கிட்டே விசாரிசிப்போம்..
இங்கு ராஜன் நிவி வாழ்வை புரட்டி போடும் அவர் பிள்ளை பாசத்துக்கு எதிரான முடிவு எடுத்திருக்க.. இது ஏதும் அறியா கள்ளப்பூனை நிவியா கதவு திறந்து உள்ளே வர, தகப்பனின் சோபாவிலேயான படுக்கைக் கண்டு விழி விரித்து ஆச்சரியம் கொண்டாள்..
“டாடி.. என்னதிது? இப்படி? இங்கே படுத்துருக்கீங்க?” அப்பாவியா கேட்க உருகிவிட்டார் தகப்பன்..
இந்த பால்முகம் தானே அவரை கண்டிக்க விடாது தடுக்குது.. எவ்ளோன்னாலும் செலவழிச்சுக்கோ கார்ட் கொடுக்குது.. தரையில் நடக்காதே அம்மு என் தலையில் நட! கொஞ்ச வைக்குது.. கண்டிச்சு வைங்க சொல்லும் மனைவியை சர்தான் போடி! சொல்ல வைக்குது.. ஆயிரம் பிசினஸ் எதிக்ஸ் மணிக்கணக்கில் பேசி எதிராளியை மிரள வைக்கும் இவரின் மேன்மைமிகு நாக்கு.. எப்பவும் போல இன்றும் ஓங்கி ஒலிக்க அஞ்சி..
“என்னை விடு நிவிம்மா .. நீ சாப்டியா?”
“இல்லப்பா இன்று பவுர்ணமி விரதம்.. இரா ஆராதனை போய்ட்டுத்தான் வரேன்..”
“ம்ம்ம்.. நல்லது.. எப்போ மடத்தில் சேரப் போற?”
“சேரணும்.. ஆனா ஸ்வாமிஜி என்னை சந்நியாசி ஆக்கும் முன்னாடி உங்களை பார்க்கணும் பேசணும் சொன்னார் டேடி”
“என்ன பேசணுமாம்?” கூர்ப்பாய் கேட்க..
“அவரால் ஆசிரமம் நடத்த முடிலையாம் நம்ம சொத்தில் சிலதை கொடுத்தால் நிறய பேர் வாழ்வாங்களாம் புண்ணியமாம்.. அதுபற்றி”
“ம்ம்ம் நல்லது நல்லது.. கொஞ்சம் தானே கொடுத்துடலாம்.. போதுமாமா?!!” சுர்ர்ர் ன்னு உச்சிக்கு ஏறிய கோபத்தை கட்டுப்படுத்தி ..
“போதாதுப்பா.. எனக்கே தெரியும்.. நான் சொன்னேன் எங்கப்பா நான் கேட்டா எல்லாமே கொடுத்துடுவார் வாங்கிதரேன்னு.. பணம் பண்ணுவதெல்லாம் எங்கப்பாக்கு ஈசி தூசி .. அவர் தான் என்னை நம்ப மாட்டுறார்.. சிரிக்கிறார்ப்பா..”
“நல்லவர்! ம்ம்ம்!”
“ரொம்ப நல்லவர்ப்பா!”
“சரிம்மா நான் உனக்காக பூஜா சாமியார் கிட்டே பேசுறேன்.. அதுக்கு முன்னே நாளை மதியம் பூவிளஞ்சோலை போறோம்”
“ஏன்? ஏன்? புதுசா? முடியாது.. என்னால் வர முடியாது .. எனக்கு நாளைக்கு பிளான் இருக்கு..”
“அதெல்லாம் வந்து பார்த்துக்கலாம்.. சொந்தத்தில் ஒரு கல்யாணம் அவசியம் போகணும்..”
“உமாவை அனுப்பிவிடுங்க டேடி.. அது தெண்டதுக்குத் தானே இருக்கு ..”
உமா சங்கரி தாயின் முழு பேர்.. ஹாஹா.. தந்தையின் லிட்டில் பிரின்சஸ் உலகத்தில் தாய்க்கு இவ்ளோதான் பவர்..
“அவதான் இல்லையே நாம ரெண்டு பேர் தான் போகணும் நிவிமா”
“அது எதுக்கு சும்மா ஸீன் போட்டு ஆச்சி வீட்டில் உக்கார்ந்துட்டு இருக்கு .. நீங்க ரொம்பவும் பிரீடம் கொடுக்கிறீங்க டேடி.. ஒரு காட்டு காட்டுங்க.. உமா சரியில்ல” நிவி சிணுங்கி புகார் வைக்க.. மகளின் விவரமேயில்லா புகார் தகப்பன் இதழில் நகை தர.. “என் செல்லப்பொண்ணு கறந்த பாலிலும் தூய்மையானவள்” பூரித்தார்..
“அப்பாக்கு பசிக்குது குட்டிமா.. ஏதாவது கொண்டு தரியா”
“இதோ டேடி..” சிட்டாய் பறந்த நிவி.. திக்கா பூஸ்ட் கொண்டு வந்து தர.. அவளையும் குடிக்க வச்சு இவரும் அருந்தி..
“நாளை லெவேனோ கிலாக் ரெடியாயிரு!! நிவி”
“நோ டேடி..”
“குலதெய்வ பூஜைக்கும் ஏற்பாடு பண்ணனும்டா ஊரில் நிறய வேலை அப்பாக்கு இருக்கு..”
“ஓ.. ஒரு நாள் தானே..”
“இல்ல! ரெண்டுவாரம்”
“ஆ…ங்ங்.. முடியாது! முடியாது..”
“வீட்டில் அம்மா இல்ல பாப்பா.. நானும் ஜெர்மன் போறேன் உனக்கும் இங்கு சேப் இல்ல.. அங்கு போய்த்தான் ஆகணும்.. ” சாக்கு மேலே சாக்கு அடுக்கினார் .. மகள் திணறும் அளவு
“நோ டேடி.. ப்ளீஸ்.. உமாவை வேணும்னா இங்கு கூப்பிட்டுக்கலாம்” மகள் அடம் பண்ண… அவள் வழிக்கே போனார் ராஜன்
“பூஜா சாமியார் கிட்டே பேசவா? வேணாவா?”
“சரி வரேன்..” முகத்தை மூணு முழத்துக்கு தூக்கி வச்சு சம்மதித்தாள் சின்ட்ரெல்லா தேவதை நிவ்யா..
