கோல்மால் காதல்

This entry is part 8 of 11 in the series கோல்மால் காதல்

கோல்மால் காதல்

கோல்மால் காதல்

கோல்மால் காதல்

கோல்மால் காதல்

கோல்மால் காதல்

கோல்மால் காதல்

கோல்மால் காதல்

கோல்மால் காதல்

கோல்மால் காதல்

கோல்மால் காதல்

கோல்மால் காதல்

கோல்மால் காதல்

கோல்மால் காதல்

கோல்மால் காதல்

கோல்மால் காதல்

கோல்மால் காதல்

கோல்மால் காதல்

கோல்மால் காதல்

கோல்மால் காதல்

கோல்மால் காதல்

கோல்மால் காதல்

கோல்மால் காதல்

கோல்மால் காதல்

14 கோல்மால் காதல் 
அந்த இருட்டுக்குள் சந்து பொந்து காடுமேடெல்லாம் ஓடிக்கொண்டிருந்தான் ஸ்ரீராம் அவனை தொடர்ந்து 10 பேர் கத்தி அருவாள் இன்னும் பல ஆயுதங்களோடு அவனைத் துரத்திக் கொண்டிருக்க நீ என்னடா என்ன பிடிக்கிறது நான் ராக்கெட் மாதிரி பறப்பேன் பாரு என்று கண்ணை மூடிக்கொண்டு பிடித்தான் ஓட்டம் ..(எதிர்த்து அடிக்கிறவன் மட்டும் ஹீரோ இல்லை பிடிக்க முடியாம ஓடுறவனும் ஹீரோதான்) 
“எந்த நேரத்தில இந்தியாவில் வந்து கால் வச்சேனோ தெரியல..  நேருக்கு நேர் படத்தில் சூர்யா ஒரு பாட்டில நிக்காம ஓடுவார்..  அது மாதிரி என் நிலைமையும் ஆகிப்போச்சு..  அப்போ ஓட ஆரம்பிச்சது இன்னும் நிக்கல. . எல்லாருக்கும் என்ன பார்த்தா விரட்டணும்னு தோணுதா? இல்ல நானாதான் போயி எந்த வம்புலையும் விழுறேனா  தெரியலை..  நேத்து தான் அந்த சண்டாளி வயக்காடு வயக்காடா  துரத்தினா..  இப்போ இந்த வேட்டி கட்டின பன்னிங்க என்ன துரத்துக என்ன காரணத்துக்குன்னு சொல்லிட்டுதான் விரட்டுங்களேன்டா..   எவ்வளவு தான் நானும் வலிக்காத மாதிரியே நடிக்கிறது.. சத்தியமா முடியலடா..  ஒரு பொண்ண பாத்து ஆசைப்பட்டது தப்பாடா எம்பி.பிஎஸ். எம் டி படிச்ச ஒரு டாக்டரை வரைமுறை இல்லாமல் வச்சி செய்றீங்களே” என்று மனதுக்குள் கதறிக்கொண்டே ஓட ..(அட அநியாயமே என் ஹீரோவ அழ வைக்காதீங்கடா )
ஒரு இடுவைக்குள் ஒளிந்துகொண்டான் ஸ்ரீ..  அவனைத் தேடி வந்தவர்கள் சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு இவன் இருந்த திசைக்கு எதிர் திசையில் செல்ல ஒரு தடியன் மாத்திரம் இவனிருந்த இடுவைக்குள் வர திருதிருவென முழித்தான் ஸ்ரீராம்..
 அந்த தடியன் கத்தி மற்றவர்களை அழைக்க போகவும் வேகமாக ஓடிப்போய் அவன் வாயை பொத்திய ஸ்ரீராம்
 “இங்க பாருங்க பாஸ் நீங்க நினைக்கிற மாதிரி நான் கரிகாலன் இல்லை ஐ அம் பாவம்.. ஐயம் பிரம் சிங்கப்பூர் எனக்கு இந்த அடிதடியெல்லாம் பண்ணி பழக்கமில்லை..  ஆபரேஷன் மட்டும்தான் பண்ணுவேன்.. இறைச்சி வெட்டுற கத்திய இப்படியெல்லாம் தூக்கிட்டு ஓடக் கூடாது..  அது உங்களுக்கும் நல்லதில்லை.. எனக்கும் நல்லதில்லை “..
அவன் கையை தட்டி விட்ட அந்த தடியன்” நீ கரிகாலன் இல்ல ஸ்ரீராம்னு எல்லா மயிரும் தெரிஞ்சுதாண்டா உன்னை கொல்ல தேடிட்டு இருக்கோம்” என்று சொல்ல..
 “அப்போ இது நமக்கு விரித்த வலைதானா?” சிறிது நேரம் யோசித்தவன் 
“உங்களுக்கு கல்யாணம் ஆயிடுச்சா “என்று சம்பந்தமே இல்லாமல் கேள்வி கேட்க
 அவன் தலையை சொரிந்து கொண்டே இல்லை என்று பதில் சொல்ல
 வேகவேகமாக தன் செல் போனை எடுத்தான் அதில் ஒரு போட்டோவை எடுத்து அவன் கையில் காட்டியவன்” இந்த பொண்ணு என்கூட சிங்கப்பூர்ல வேலை பார்க்கிறா..  அவளுக்கு மாப்பிள்ளை தேடிதான் இந்த ஊருக்கு வந்தேன்..  அது என்னவோ தெரியல.. என்ன மாயமோ தெரியல இந்த மாதிரி கிராமத்து ஆள் அதுவும் அடிதடி பண்றவனதான் கல்யாணம் பண்ணிக்குவேன்னு ஒத்த கால்ல ஒன்பது வருஷமா நிற்கிறா.. உங்களை பார்த்தவுடனே நீங்க தான் அவளுக்கு ஏற்ற ஜோடின்னு முடிவே பண்ணிட்டேன்..  ஒரு தடவை இந்த பொண்ணு போட்டோவை பார்த்துட்டு அதுக்கு பிறகு என்ன  கொலை பண்ற  ஜாப்ப பாருங்க” என்று போட்டோவை அவன் கையில் திணிக்க (பேசியே வசியம் பண்ணிருவான் என் ராசா..  நீதான் மெச்சிக்கணும் மூதேவிய அதானே மக்களே நீங்க சொல்றது)
வெளிப்படையாகவே அந்த தடியன் இளித்து கொண்டு அந்த போட்டோவை பார்த்தான் 
“பொண்ணு பேரு என்ன தம்பி ?நம்ம சாதியா? நமக்கு ஒத்து போகுமா? சமையல் மற்ற வேலைகளையெல்லாம் தெரியுமா?” என்று கேட்க 
“அதெல்லாம் டாப் டக்கரா செய்யும்க .. பேரு 
எமி ஜாக்சன் “என்று ஐ பட எமி ஜாக்சன் போட்டோவை காட்டினான்..(இது எமிக்கு தெரியுமாடா சண்டாளா) 
” எலி ஜாக்சனா?  பேரே ஒரு மார்க்கமா இருக்கே.. நம்ம குடும்பத்துக்கு ஒத்துப் போகுமா தம்பி?”
 “அதெல்லாம் ஒத்து போகும் .. பாருங்க அடக்கமான பொண்ணு..  முழு நேரமும் முக்காடு போட்டுதான் சுத்தும்..  அந்த பொண்ணோட சுண்டுவிரலை கூட வெளியே பார்க்க முடியாது..  அடக்கத்துக்கு மறுபெயர் எமி ஜாக்சன் தான்”.. (எப்படா ?நான் அப்படி பார்த்ததே இல்லை)
 “ஆள் எல்லாம் நல்லாத்தான் இருக்கு தம்பி .. ஆனா இந்த பேர் இழவுதான் நல்லாயில்லை..  எலி பூனைன்னுட்டு”..
” உங்களுக்கு பிடிக்கலைனா குஞ்சாயின்னு மாத்தி வச்சிறலாம் ஒன்னும் பிரச்சனை பிரச்சனையில்லை”..
” சரி தம்பி அப்போ இந்த பொண்ணு பேசி முடிச்சிடுங்க..  உங்களுக்கு எவ்வளவு புரோக்கர் கமிஷன் வேணும்”..
” ப்ரோக்கர் கமிஷனெல்லாம் வேண்டாம் ரெண்டு நாள் வரைக்கும் என்ன கொலை பண்ற பிளானை தள்ளி வச்சா போதும் செய்வீங்களா” என்று அவன் முகத்தை பார்க்க..
 “இவ்வளவு நாள் பொண்ணு கிடைக்காம அலைஞ்சேன் தம்பி.. ரவுடி பயன்னு ஒருத்தரும் பொண்ணு கொடுக்கல..  இவ்வளவு தங்கமான பொண்ணு பார்த்து எனக்கு முடிச்சி வைக்க போறீங்க..  உனக்காக இரண்டுநாள் பொறுத்திருக்க மாட்டேனா .. ஒன்னும் பிரச்சனையில்ல நான் எங்க பாஸ் கிட்ட எப்படியாவது சொல்லி சமாளிச்சுக்கறேன்..  இந்த பொண்ண குடும்பத்தோடு இங்கே கிளம்பி வரச் சொல்லுங்க..  அடுத்த நல்ல முகூர்த்தத்திலேயே கல்யாணத்தை முடிச்சிடலாம் “என்ன சொல்ற..
 “நான் என்னங்க சொல்றது..  அவளுக்கு யோகம் அடிச்சு கொளுத்துது .. உங்களை மாதிரி அறிவு கொத்தமல்லி கிடைக்கப் போகுது .. இப்பவே போன் போட்டு வர சொல்றேன்” என்று தன் போனில் கரிகாலனுக்கு போன் போட்டவன்..
” ஹலோ எமிஜாக்சன் நான் ஸ்ரீ பேசுறேன்.. உனக்கு கொலை பண்ற அடியாள்தான் புருஷனா வேணும்னு சொன்னல்ல .. இதோ இப்ப  என்ன கொல்ல பத்து பேர் வந்தாங்க..  அதுல வாட்டசாட்டமா அழகான ஒருத்தர பிடிச்சு வச்சிருக்கேன்..  போட்டோ எடுத்து அனுப்புறேன் கப்புன்னு பிடிச்சுக்கோ” என்று சொல்ல 
கரிகாலன் பதறிப்போய் “டேய் உனக்கு எதுவும் இல்லையே “என்று கேட்க
” நான் பேசுவதை மட்டும் கேளு .நீ எதுவும் குறுக்க பேசாத எமி” என்று ஸ்ரீராம் குறிப்பால் உணர்த்த 
“சும்மா இருடா உனக்கு இந்த அடிதடியெல்லாம் ஒத்து வராது ஸ்ரீ .. உன்னால முடியவும் செய்யாது..  ஒழுங்கா சென்னைக்கு வண்டி ஏறி வர்ற வழியைப் பாரு .. நான் இன்னைக்கி கிளம்பிடுவேன் மத்தத நான் பாத்துக்கறேன்”.. என்று கரிகாலன் முடிவை சொல்லிவிட ..
“சரி இப்பவே கல்யாணம் பண்ணிக்கணும் போல இருக்குதா அவ்வளவு அவசரம் கூடாது  நிதானமா வா பண்ணிக்கலாம் ” இன்று  போனை வைத்தான்  
போனில் பல விதமாக அவரை போட்டோவும் பிடித்துக் கொண்டவன்..  அவனுக்கு தன் போனிலிருந்து எமிஜாக்சன் சேலையிலிருந்த பல படங்களை  அனுப்பி  தாயிடம் காட்டுமாறு சொல்லிவிட ..
சரி என்று தலையாட்டிவிட்டு “ரொம்ப சந்தோசம் தம்பி “என்று அவனைக் கட்டிப்பிடித்துவேறு மகிழ்ச்சியை தெரிவித்தவர் எமிஜாக்சனை கல்யாணம் செய்யப் போகும் கனவில் மனிதன் நடந்து போக..(யோவ் போயி குடும்ப குத்துவிளக்க ஐ படத்தில பாரும்வோய்)
” நல்லவேளையாக இந்த பொண்ணு சேலை கட்டின போட்டோ இருந்துச்சு..  செத்தே போயிருப்பேன்  எமி இல்லைனா..வாழ்க எமி ஜாக்சன் நாமம் “என்றவன் கிளம்பி தன் வீட்டிற்கு போக .. 
அப்பத்தா இன்னும் இரண்டு நாட்களில் ஸ்ரீ க்கும் குறிஞ்சிக்கும் கல்யாணம் முடிவு செய்திருந்தார்..  அரசல்புரசலாக ஸ்ரீயும் குறிஞ்சியும் அங்கங்கு ஒன்றாக சேர்ந்து சுற்றுவது அவர் காதுக்கு வந்திருக்க..  இனி உடனே திருமணத்தை முடித்து வைக்க வேண்டும் இல்லை என்றால் பெயர் கெட்டுவிடும் என நினைத்து அவர் இந்த விஷயத்தை செய்திருக்க.. 
 சந்தோஷப்பட வேண்டியவன் மூஞ்சை தூக்கி வைத்துக் கொண்டிருந்தான் இன்று ராத்திரியே அவன் இடத்தை காலி பண்ணவில்லையென்றால் நாளை பேப்பரின் முதல் பக்கத்தில் ஸ்ரீராம் வெட்டுப்பட்டு கிடக்கும் படம் தான் வரும் ஏனென்றால் எப்போதும் இவர்களிடமிருந்து தப்பிக்க முடியாது..
சிறிது நேரம் யோசித்தவன் அனைவரும் தூங்கிய பிறகு வேகமாக குறிஞ்சி வீட்டிற்கு செல்ல..  வெளியே குறிஞ்சியின் அப்பா குடித்துவிட்டு உருண்டு கொண்டிருக்க 
“யோவ் மாமா உன் பொண்ண பார்க்கணும் எந்த ரூம்ல இருக்கா” என்று கேட்க கண்களைத் திறந்து பார்த்தவர் அரைகுறை போதையில்” கல்யாணம் இன்னும் ரெண்டு நாள்ல இருக்குல்ல அதுக்குள்ள உனக்கு என்ன அவசரம்” என்று தெளிவாக கூற 
“இந்த ஆளு மத்த நேரத்துல எல்லாம் தெளிவா இருக்க மாட்டார் இப்ப ரொம்ப தெளிவா பேசுகிறாரே” என்று அவன் தன் பேண்ட் பாக்கெட்டில் இருந்து குவாட்டரை எடுத்து அவர் கையில் திணிக்க( அண்ணனும் தம்பியும் குவாட்டரோடையே அலைவான்க போல) 
“ஹிஹி மாப்பிள்ளை என் பொண்டாட்டியும் பக்கத்துல படுத்து கிடப்பா..  மாத்தி தூக்கிட்டு போயிடாத.. பிறகு நான்னு நெனச்சு விளக்குமாறு பிய்ய பிய்ய அடிப்பா” என்று இளித்து வைக்க தலையிலடித்துக் கொண்டவன் வேகமாக உள்ளே சென்று குறிஞ்சியை அலேக்காக தூக்கி கொண்டு நாலு கால் பாய்ச்சலில் பேருந்து நிலையம் நோக்கி ஓட ஆரம்பித்தான்..  தூக்கத்திலிருந்தவள் அரண்டு முழிக்க அது ஸ்ரீ என்றதும் ஒய்யாரமாக அவன் கழுத்தைக் கட்டிக் கொண்டவள்..
“இப்ப எங்க போறோம்” என்று டோரா ஸ்டைலில் கேட்க ..
“அதுவா கண்ணம்மாபேட்டை சுடுகாட்டுக்கு போறோம்.. முழிச்சிட்டல்ல இறங்கி என்கூட ஓடி வாடி” என்று அவளை இறக்கி விட ..
“சொல்லு மாமா எங்க மாமா போறோம்” என்று அவனை பிடித்து தொங்க..
” மெட்ராஸுக்கு போறோம்டி “என்று அவன் ஓடிக்கொண்டே சொல்ல ..
“மாமா இன்னும் ரெண்டு நாள்ல நம்ம ரெண்டு பேருக்கும் கல்யாணம் இப்போ ஓடுனா ஊரெல்லாம் தப்பா பேசாத மாமா கல்யாணத்த முடிச்சுட்டு போகலாம்” என்று அவள் சொல்ல.. 
“அதற்கெல்லாம் நேரமில்லை இங்கேயிருந்தா எனக்கு கருமாதி பண்ணிருவாங்கடி ..அதனால மெட்ராஸ்ல போய் கல்யாணம் பண்ணிக்கலாம்”..  
“முடியாது மாமா நான் உன்கூட வர மாட்டேன் .. ஆச்சி எனக்கு நூறு பவுன் போடுறேன்னு சொல்லிருக்கு உன் கூட இப்போ ஓடி வந்தா .. எனக்கு சல்லிப் பைசா தராது “என்றவள்  நின்றுகொள்ள 
அவள் கன்னத்தை பிடித்து தன் பக்கமாக இழுத்தவன்..
“நான் என்ன விஷயத்தை பேசிகிட்டிருக்கேன் நீ 100 பவுன் பத்தி பேசிகிட்டிருக்க .. உனக்கு என்ன விட நகைதான் முக்கியமாடி” என்று கேட்க 
யோசிக்காமல் டான் என்று பதில் சொன்னாள் குறிஞ்சி 
“ஆமா மாமா எனக்கு நகை தான் முக்கியம் ..அதோட என் கல்யாணத்துக்கு எவ்வளவு ஆசையெல்லாம் வெச்சிருக்கேன் தெரியுமா..  கல்யாணத்துக்கு முதல் நாள் சங்கீத் பங்க்ஷன் வைக்கணும்..  கையில் மருதாணி போடணும் ..  கலர் கலரா டிரஸ் போட்டு போட்டோ சூட்.. போ மாமா என் ஆசையெல்லாம் நிராசையாக்காத..  நான் வரமாட்டேன் நீயும் போகாத வா”..  என்று அவள் வீட்டு பக்கமாக இழுக்க..
“உயிரை வாங்காதடி.. அங்க ஒருத்தன் என்ன போட தேடிக்கிட்டுருக்கான் நீ மருதாணி போடறதப் பத்தி பேசுறியேடி கொஞ்சமாவது மனசாட்சியோடு பேசுடி உன் மாமா சண்டைக்கெல்லாம் வோர்த்தே இல்லையடி.. செத்துருவேன்டி..  இதுக்கு மேல உன் கிட்ட எப்படி என்னோட நிலைமையை விளக்க”.. 
“அதெல்லாம் நான் பாத்துக்குறேன் மாமா .. நீ வா நம்ம ஜெகஜோதியாக கல்யாணம் கட்டிக்கலாம்..  இப்படி நட்ட நடு ராத்திரி கள்ளக்காதலர்கள் மாதிரி ஓடி போனா நல்லா இருக்குமா ..  சங்கீத்க்கு என்ன டிரஸ் போடலாம்னு யோசிக்கலாம் 
நாயே நாயே என்று அவள் மண்டையில் கொட்டியவன் “சங்கீதா  நம்ம  ஆதித்யன் கூட போயி ரொம்ப நாளாகுது நம்ம கல்யாணத்துக்கு வேற யாரையாவது கூட்டிட்டு வந்து பங்ஷன் பண்ணலாம்  சொன்னா கேளு வாடி “என்று அவளை ஒரு காய்கறி லோடு வண்டியில் ஏற்ற..
 “மாமா கூட்டிட்டு போறதுதான் கூட்டிட்டு போற..  ஒரு ஏசி வண்டியில ஓரமா சீட்டு போட்டு கூட்டிட்டு போ மாமா..இப்படி காய்கறி வண்டில கூட்டிட்டு போறியே மாமா..  நீ சிங்கப்பூர்ல காய்கறி விக்கிறவனாவா இருந்த .. எனக்கு இப்போவே உண்மை தெரிஞ்சாகணும்” என்று மீண்டும் நின்றுகொள்ள 
அவளை அலேக்காக தூக்கி தக்காளி மூடை மேல் போட்டவன்
” மெட்ராஸ்  வர வாயத் திறந்த அத  அப்படியே கடிச்சி வச்சிருவேன் ஜாக்கிரதை..  இங்க சமாதியாகிருவேனோன்னு பயத்தில  நானிருக்கேன்..  ஏசி பஸ் வேணுமாம் இனி வாயத் திறந்த இந்த லோடு வண்டியிலையே உன் வயித்த லோடாக்கி விட்டிருவேன் .. தள்ளி உட்கார்டி..
கப்பென்று அவள் வாயை மூடி கொள்ள.. அவனுக்கு எதிர்காலம் இவளோடு எப்படியிருக்கும் என்பது இப்பவே தெரிந்தது..
ஸ்ப்பா இப்பவே கண்ண கட்டுதே என்று அவளருகில் போய் அமர..
வண்டி சென்னை நோக்கி பாய..
கரிகாலன் வண்டி அலங்காநல்லூர் நோக்கி பாய்ந்து வந்தது..  சீட்டிலிருந்த அவன் பொண்டாட்டியின் கண்களில் ஆயிரம் வாட்ஸ் மின்சாரம் பாய்ந்தது.. கோவத்தில் முகமெல்லாம் சிவந்து போய் உட்கார்ந்திருந்தாள்..
என்னடா செஞ்சி தொலைச்ச..
சை இவன்களை வச்சி மேய்க்கிறதுக்கு நாலு ஈமு கோழி வளர்க்கலாம் போல ..   

Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *