கோதுமை ரவை உப்புமா

கோதுமை ரவை உப்புமா

தேவையான பொருட்கள்:

சம்பா கோதுமை ரவை – ஒரு கப்
பெரிய வெங்காயம் – 1
பொடியாக நறுக்கிய பீன்ஸ், கேரட், பட்டாணி – 1/2 கப்
பச்சை மிளகாய் – 6
இஞ்சி – 1 துண்டு
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – தேவையான அளவு
தண்ணீர் – 3 கப்

தாளிக்க:

கடுகு – 1 tsp
உளுத்தம் பருப்பு – 1 tsp
கடலைப்பருப்பு – 1 tsp
கறிவேப்பிலை – 1 ஆர்க்க்கு

செய்முறை:

முதலில் சம்பா கோதுமை ரவையை வாணலியில் எண்ணெய் விடாமல் மிதமான தீயில் வறுத்து ஆற வைத்துக் கொள்ளவும்.

பின் வாணலியில் 50 ml அளவிற்கு எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் கடுகு உளுத்தம்பருப்பு கடலைப்பருப்பு கறிவேப்பிலை தாளித்து, நறுக்கிய பச்சை மிளகாய், இஞ்சி, பெரிய வெங்காயத்தைச் சேர்த்து வதக்கவும். பின் நறுக்கிய காய்கறிகளைச் சேர்த்து நன்றாக வதக்கவும்.

காய்கறிகள் நன்கு வதங்கியதும் 3 கப் அளவிற்கு தண்ணீர் சேர்த்து காய்கறிக் கலவையைக் கொதிக்க விடவும். 

இரண்டு நிமிடங்களுக்குப் பிறகு வறுத்த ரவையை சிறிது சிறிதாகச் சேர்த்து கைவிடாமல் கிளறவும்.

வாணலியில் மூடிபோட்டு அடுப்பை சிறு தீயில் வைத்துக் காய்கறி கலவையுடன் சேர்த்த ரவையை வேக விடவும்.

ஐந்து நிமிடங்களுக்குப் பிறகு மூடியைத் திறந்து கிளறி விடவும். மேலும் ஐந்து நிமிடங்களுக்கு  மூடி வைத்து வேகவிட்டு எடுத்தால் உதிர் உதிரான சுவையான கோதுமை ரவை உப்புமா தயார்.

* கோதுமை ரவை உப்புமாவுடன் தேங்காய்ச் சட்னி, தயிர் அல்லது  நாட்டுச் சர்க்கரை சேர்த்து சாப்பிடலாம்.

** காய்கறிகள் இல்லாத சமயத்தில் வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி மட்டும் சேர்த்து  உப்புமா செய்யலாம்.  அப்போது அடுப்பை ஆஃப் செய்தபிறகு ஒரு கைப்பிடி தேங்காய்த் துருவல் சேர்த்தால் சுவையாக இருக்கும்.


*** புளிப்புச் சுவை தேவைப்படுவோர் காய்கறிகள் சேர்த்து வதக்கிய பின்னர் தக்காளி சேர்க்கலாம். அல்லது உப்புமாவைப் பரிமாறும் சமயத்தில் எலுமிச்சைப் பழச்சாறு சில துளிகள் சேர்த்துக் கொள்ளலாம்.

**** நீரிழிவு நோயாளிகள் மற்றும் டயட்டில் இருப்பவர்களுக்கு ஏற்ற உணவு இது. 

Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *