கொஞ்ச(சு)ம் காதல் வேண்டும்
கொஞ்சும் காதல் வேண்டும் -19
பார்ட்டி முடிந்து சௌமியை அவள் அபார்ட்மென்டில் இறக்கிவிட்ட சஞ்சீவ் அவள் கைகளை பிடித்து கொண்டு அந்த நேர இனிமையை ரசித்தான்..
கனவு மாதிரி இருக்குல்ல.. எது??.. இப்படி நீங்களும் நானும் கையை பிடிச்சிட்டு நிக்கிறது. நடக்கவே நடக்குதுனு நினைச்சு எவ்ளோ நாள் தவிச்சு இருக்கேன்..
அவளை இழுத்து செல்லமாக நெற்றியில் முட்டி.. “புத்து, உன்ன அவ்ளோ சீக்கரம் என் கிட்ட இருந்து யாராலயும் பிரிக்க முடியாது.. நான் வேணுனா இது கனவில்லை நிஜம் தான்னு நிரூபிக்கவா.. எப்படி??.. இப்படி என அவள் முகம் நோக்கி குனிய
அவன் கள்ள சிரிப்பே காட்டி குடுத்தது.அவன் என்ன செய்ய போகிறான் என்று..
“ச்ச்சு, போங்க சஞ்சு இன்னைக்கு டோஸ் ஓவரா ஆகிடுச்சு போதும் பாய் நான் போறேன் என கலகலவென்று சிரித்தவறு சென்றுவிட்டாள்.. அவளின் சிரிப்பின் ஆயுள் விடியும் வரை மட்டுமே என்பதை அறியாமல்..
காலையில் பரபரப்பாக கிளம்பி தயாரானவள் சௌமி இன்னும் எழுந்தரிக்காது உதட்டில் புன்னகை தவழ உறங்கி கொண்டு இருந்தவளை எழுப்ப மனம் வராது. அவள் மட்டும் கீழே சென்றாள். கார் பார்க்கிங்கில் தன் காரை எடுக்க வந்த வருண் நிதி தன் ஸ்கூட்டியை எடுப்பதை கண்டவன்.. அவளிடம் சென்று அவள் வண்டியில் ஏறி அமர..
ஏய்.. மாஸ்டர் என்ன இது இப்படி வந்து பின்னாடி உக்காந்துன்டிங்க..
ப்ச்.. ரெண்டு பேரும் ஒரே இடத்துக்கு தான போரோம்.என்ன ட்ராப் பன்னமாட்டிய பேபி..
கார் என்னாச்சு.??.
செம ஹங்ஓவர்(hangover) பேபி.. இப்போ என்ன கூட்டிட்டு போவியா மாட்டிய அத மட்டும் சொல்லு. இல்ல நான் கேப்லே போயிக்குறேன்..(ஐயடா சரி போ பாக்கலாம்) என முறுக்கி கொண்டு போவது போல் பாவனை செய்தவனை..
ஹையோ! மாஸ்டர் வாங்க கோவிச்சுக்காதீங்க..
ஹம் லிப்ட் குடுக்கிறதுக்கே நாம கெஞ்ச வேண்டி இருக்கே.. என்றவளின் பின்னால் ஏறி இரு பக்கமும் கால் போட்டு அமர்ந்தவன்.. முகத்தில் சில்மிஷ புன்னகை..
ஹா நிதி எதுக்கு இவ்ளோ வேகமா போற.. எனக்கு பயமா இருக்கு என அவள் இடையை பிடிக்க..
ஹா.. மாஸ்டர் வண்டி 20 கூட தாண்டலயா.. ஷ் போ நிதி எனக்கு இன்னும் தல சுத்துது அதனால இதுவே எனக்கு வேகம் தான் என்றவாறு அவள் இடையை இன்னும் இறுக்கமாக பிடித்தவன். அவள் இடையின் வளைவை தன் விரல் கொண்டு அளக்க..
ஹா.. ஹாம்.. படுத்துறானே.. ஹாங்வ் மாஸ்டர் கூசுது ப்ளீஸ் வண்டி ஓட்ட முடியலயா.. ப்ச் நான் ஒன்னுமே பன்னல நிதி ஒரே மயக்கமா இருக்குமா அதான் பிடிமானதுக்கு பிடிச்சு கிட்டேன் என்றவன் விரல் அவள் இடையை அழுத்தி பிசைய..
இதுக்கு கேக்காமலே இருந்துருக்கலாம்..(டூ லேட் மா.)நிதி உன் பொறுமைய சோதிக்குறானே..
அவளை மேலும் சோதிக்கவே வந்தது வேகத்தடை அவனுக்கு சாதகமாய்..
ஆஆ. அவுச்.. யோவ் மாஸ்டர் என்னைய இது.. எது பேபி..என ஒன்றும் அறியாது கேட்டவனை முறைத்த படி..
ம்ம் உன் கை எங்கய்யா போகுது என அவள் இரட்டை திமில்களை பிடித்திருந்த அவன் கைகளை சுட்டி காட்டியாவாறு கேட்க..
ஹிஹி. அது ஸ்பீட் பிரேக்ல கை தவிரி மேல பட்ருச்சு.. எதே கை தவிரி மேல போகுமா..(அவனுக்கு மட்டும் போகுதாம்) ப்ச் போ நிதி நான் என்ன சொன்னாலும் நம்ப மாட்ற.. ஹுக்கும் நம்பிட்டாலும்.. என்றவள் வண்டியை எடுக்க..
அதன் பின் வந்த அத்தனை வேக தடைகளையும் ஒதுங்கியே சென்றவளை கடுப்புடன் பார்த்தவன்.. அவள் பின்னழகை பருகியவாறு அவள் பின்னங்கழுத்தில் உதடுகுவித்து காற்றை ஊத அவள் மெல்லிய ரோமங்கள் சிலிர்ப்பதை கண்டவன் தன் கற்றை மீசை கொண்டு அவள் கழுத்தில் இசை மீட்ட..
ஹா. ஹாம்.. யோவ் மாஸ்டர் இப்படியே பன்ன இறங்கி டாக்ஸில போயான்னு இறக்கி விட்ருவேன் ஒழுங்கா கை கால வச்சிக்கிட்டு வாங்க இல்ல அவ்ளோ தான்..என பொங்கியவளை..
ஹிஹி..சாரி ப்பா அது தெரியாம பட்ருச்சு அதுக்கா இப்படி கோவிச்சுக்குவ சரி இனி உன் மேல இனி இடிக்க மாட்டேன் என்று தன் கைகளை கட்டி கொண்டவனை..
அவ்ளோ நல்லவனா டா நீ என பார்த்தவளை.. குறும்பாக பார்த்தவன்.. அவள் வண்டியை எடுக்க கைகளை முன் பக்கமாக விட்டு அவளை மொத்தமாக கட்டி கொண்டவனை..ஹே என்னது இது.. நீ தான சொன்ன இடிக்க கூடாதுனு அதான் இப்படி பிடிச்சிகிட்டா உனக்கும் சுலபமா வண்டி ஓட்டலாம் என கண்ணடித்தவனை ஆக மொத்தம் என்ன வெறுப்பேத்த முடிவு பண்ணிட்டீங்க.. என கோவமாக கேட்டவள் இதழில் ரகசிய புன்னகை.. அதை கண்ணாடி ஊடே பின்னால் இருந்து பார்த்தவனுக்கும் புன்னகை அரும்பியது.. இவர்களின் இந்த புன்னகையை மொத்தமாக எடுக்கவென..
ஹோட்டல் கஸானாவில் நுழைந்தார் எ. சி. பி. இராவணன்..(பெயரை கேட்ட சும்மா அதிருதுல )
அதிரடியாக உள்ளே நுழைந்து சோதனை நடத்தி.. ஸ்டோரேஜ் ரூமில் இருந்து உடலை கை பற்றி. அதிரடியாக சஞ்சீவை கைது செய்தவர்..
வெளியே வந்து நிருபர்களுக்கு பேட்டி அளித்தவர்..
“ஹோட்டல் ஸ்டோரேஜ் ரூமில் இருந்து அடிபட்ட ஒருவரை மீட்டு இருக்கோம்.. அவர் தொடர்ந்து தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்க பட்டு உள்ளார்.. இது சம்மந்தமாக ஹோட்டல் உரிமையாளர் சஞ்சீவை விசாரணைக்கு அழைத்து செல்கிறோம்.. என்றவரை வழி மறைத்த செய்தியாளர்கள்..
சார் உங்க மேல கையூட்டு வாங்குனது, அடிதடி, பெண்கள் விஷயத்தில் மிகவும் மோசமானவர் போன்ற குற்றசாட்டுக்கள் இருக்கே அது பத்தி நீங்க உங்க கருத்தை இதுவரை எங்கயும் சொல்லவில்லையே..
அப்போ அது எல்லாம் உண்மை தான என்று வீரமாக கேட்ட செய்தியாளரை பார்த்த வேங்கையின் வேட்டையாடும் பார்வையே சொன்னது அவன் கதை முடிந்தது என..
அவன் பார்வையே அந்த செய்தியாலரை எதோ செய்ய.. அப்போது தான் அருகில் இருந்த மற்ற ஒரு செய்தியாளர்.
“யோவ் !உனக்கு அறிவு இருக்காயா.. யாருகிட்ட என்ன கேள்வி கேட்டுட்ட.. போன வாரம் தான் இவர பார்த்து கேள்வி கேட்ட நாளை விடியல் பத்திரிகையாளர.. அவர் வண்டி லாரி மேல மோதிடுச்சுனு அவரை இவனே கொண்டு போய் ஹாஸ்பிடல்ல சேர்த்து இருக்கான்..
ஆனா ஊருக்கே தெரியும் அவர்கிட்ட வண்டியே இல்லன்னு.. அவ்ளோ ஏன்யா அவரே நான் வண்டி ஒட்டி தான் விழுந்துட்டேன்னு சொல்ல வச்சான் இப்போ அவர் எழுந்து நடக்க முடியாம கெடுக்குறாரு, அப்படிப்பட்டவன்கிட்ட போய் என்ன கேட்டு வச்சிருக்க போ எங்கயாவது போய் தப்பிச்சிக்கோ அவன் மனுஷன் இல்லையா பெயருக்கு ஏத்த போல நிஜ அரக்கன் அவன் கண்ணுல மாட்டிக்காத அப்புறம் அவ்ளோ தான்.. என்றவரை பீதியாக பார்த்து வைத்தான்..
இதற்கிடையில் ஹோட்டலை அடைந்த நிதி மற்றும் வருண்.. சஞ்சீவை போலீஸ் கைது செய்வதையும், இராவணன் செய்தியாளருக்கு அளித்த பேட்டியையும், செய்தாயாளர்கள் இராவணன் பற்றி பேசியதையும் கேட்டவர்கள் அதிர்ந்து நின்றனர் என்றால்..
அங்கே அடிப்பட்டதாக கூற படும் நபரை ஆம்புலன்சில் ஏற்றினர்… அது யார் என பார்க்க சென்றவர்கள் அதிர்ச்சியின் உச்சிக்கே சென்று விட்டனர்.. ஆம் அந்த நபர் ஹரி ஹரியே தான்..
சஞ்சீவை முன்னாள் ஜிப்பில் அழைத்து செல்ல இவர்களும் அதன் பின்னாலேயே தொடர்ந்து சென்றனர்..
காவல் நிலையத்திருக்குள் சென்ற சஞ்சீவை விசாரணை கைதிகள் அமரும் இடத்தில் நெக்குறுக்கி அமர்ந்திருந்தான்..
உள்ளே சென்ற நிதி மற்றும் வருண்..
ஐயோ சீனியர் என்னாச்சு எதுக்கு நீங்க இப்படி இவங்களோட உட்கார்த்துட்டு இருக்கீங்க.. பாருங்க வருண் சீனியர..என்றவள் கண்களிலும் கண்ணீர்..
சஞ்சீவ் என்ன நடந்துச்சு, எப்படி போலீஸ் வந்தாங்க ஹரிக்கு என்ன ஆச்சு..
தெரில வருண் காலையில எப்பவும் போல தான் ஆபீஸ் ரூம் போய்ட்டு கிச்சேனையும் ஸ்டோர் ரூமையும் செக் பன்ன போன போது உள்ள ஹரி அடிபட்டு இருந்தான்.. அவனுக்கு என்னாச்சு பார்த்திட்டு இருந்த போது திடிர்னு போலீஸ் உள்ள வந்துட்டாங்க அப்புறம் என்ன நடக்குது புரிஞ்சுக்கிறதுகுள்ள இங்க கூட்டிட்டு வந்துட்டாங்க வருண்..
எனக்கு ஒன்னுமே புரியல வருண். ஹரி தலையில அடிபட்டு சீரியஸ் அஹ் இருக்கான். அவன் வந்து சொன்னாதான் என்ன நடந்ததுனு தெரியும்.. இவங்க வேற அவன் பொழைக்கலனா ஹோட்டல சீல் வச்சிடுவோம்னு சொல்றாங்க வருண் எனக்கு ஒன்னுமே புரியல.
நீ கவலை படாத சஞ்சீவ் உன்ன எப்படியும் வெளியே எடுத்துடுவோம் என அவனுக்கு ஆறுதல் சொல்லிக்கொண்டு இருக்கும் போது..
யோவ்..யாருயா இது கொலை குற்றவாளி கிட்ட இவங்கள பேச விட்டுட்டு வேடிக்கை பார்க்கறது என்றவாறு உள்ளே வந்தான் இராவணன்
சார் அவர் ஒன்னும் குற்றவாளி இல்ல.. சஞ்சீவ் அப்படியெல்லாம் பன்னி இருக்க மாட்டார் என்ற நிதியை..
ஓ. அப்படியா எங்களுக்கு வேற வேலை இல்லாம தான் நாங்க அவனை புடிச்சிட்டு வந்திருக்கோமா.. ஆமா யாரு நீ, அவனுக்கு எதுக்கு இப்படி பரிஞ்சிகிட்டு பேசுற,,
நான் அவரோட ஜூ…ஸ்டாஃப்.. ஓ ஸ்டாஃபா..ஆமா உன் ஓனர்க்கு ஒன்னுனா இப்படி துடிச்சிட்டு வர.. அவ்ளோ நெருக்கமோ??..என அவளை நெருங்கி நின்று ஒரு மார்க்கமாக கேட்டான்..
அவன் லேசார் பார்வையை சொல்லியாது அவன் நிதியை பார்வையாலே துகிலுரிக்கிறான் என்று.. அப்பார்வையில் அருவறுப்பு உற்று நிதி அவர் எனக்கு அண்ணா மாதிரி என அவன் கண்களை கூர்மையாக பார்த்தபடி பதில் சொன்னாள்..
அவன் மேலும் எதோ கூற வரும் முன் நிதிக்கும் ராவணன்க்கும் இடையில் வந்து நிதியை மறைத்தார் போன்று நின்ற வருண்.. அவனை பார்த்து..
தேவை இல்லாததை பேசாதீங்க சார்.. கேஸ பத்தி பேசுவோமா சார்… என அழுத்தமாக கூறியவனை மேலும் கீழும் பார்த்து விட்டு எட்டி பின்னால் இருந்த நிதியையும் பார்த்தவன்..
ஓ இந்த கேஸ் உங்களுக்கு நிரம்ப முக்கியம் போல என நிதியை பார்த்து கொண்டே கூறியவனை..
கண்களாலே கூறு போட்டான் வருண்..
சார் உங்களக்கு யாரு தகவல் சொன்னது. எப்படி அங்க வந்திங்க கொஞ்சம் சொல்ல முடியுமா..
என்ன சார் விட்ட ஏன் வந்திங்கனு கேப்பிங்க போல.. எங்களுக்கு வந்த தகவல் வச்சி தான் வந்தோம்.. அங்க இவர கையும் களவுமா பிடிச்சிட்டோம்.. என்றவன் அதற்கு மேல் அங்கே நிக்காமல்..
யோவ் ஏட்டு உள்ள யாரா இருந்தாலும் விட்ருவீங்களா.. என்னைய தனியா எதும் வாங்கிட்டியா..
அய்யயோ சார் எனக்கு எதும் தெரியாது சார் அவங்கள உள்ள வந்துட்டாங்க சார்.. இதோ இப்போ அனுப்பிடுறேன் சார்..
சீக்கிரம் அனுப்பிட்டு எஃப். ஐ. ஆர். போட்டு எடுத்துட்டு வா உள்ளவாய
ம்மா இங்கலாம் நிக்கக்கூடாது மா போங்க, போங்க சார்..
இருவரும் இயலாமையுடன் வெளியே வந்தனர்..
இப்போ என்ன பன்றது வருண்.. ஹாஸ்பிட்டல் போய் பார்ப்போம் அங்க ஹரிக்கு என்னாச்சு மொதல்ல பார்ப்போம் வா என புறப்பட்டு சென்றனர்..
அங்கே மருத்துவமனையில் ஹரியை தீவிர சிகிச்சை பிரிவில் சேர்த்து சிகிச்சை நடைபெற்று கொண்டு இருந்தது. அங்கே வாயிலில் நிதியை கண்டதும் ஹரியின் தாய் ஓடிவந்தார்..
அம்மாடி பாருமா அவனை இப்படி பாக்கவ தவிமிருந்து பெத்தேன். எம் புருஷன விட இவன தானமா மலை போல நம்பி இருந்தேன். இவனுக்கு ஒன்னுனா கூட பாக்க எனக்கு வசதி இல்லையேமா.. அவனுக்கு ஒன்னும் ஆகாதில்ல மா என கதரியவரை ஆறுதல் படுத்தினாள்..
அவனுக்கு ஒன்னும் ஆகாது மா இருங்க டாக்டர் கிட்ட பேசிட்டு வரோம்..
இப்போ எப்படி இருக்கான் டாக்டர்..
இப்போ எதுவும் சொல்ற மாதிரி நிலைமை இல்ல மா.. அவனுக்கு பின்னந்தலைல பலமா யாரோ அடிச்சு இருக்காங்க பிளாட் வேற நிறைய லாஸ் ஆகி இருக்கு.. எதுவா இருந்தாலும் 24 மணி நேரம் கழிச்சி தான் சொல்ல முடியும். என வழக்கமான டாக்டர் போல் கூறிவிட்டு சென்று விட்டார்..
வருணும் நிதியும் அடுத்து என்ன செய்வது அறியாது நின்றனர்..
