கூடலின் சங்கமம்
கூடலின் சங்கமம் – Manmadhan
பிற்கால சோழர்களில் மிக சிறப்பான துவக்கத்தை கொடுத்த விசயலாய
சோழனின் ஆட்சி காலம் அது..
சோழ தேசத்தின் எல்லைகள் விரிவடைந்து கொண்டே இருக்க ,
அதே சமயம் ஊரெங்கும் சாலைகள் கட்டுமானப்பணியும் ,மரங்கள் நடும் பணியும் முடுக்கிவிடப்பட்டிருந்த வசந்த காலம் அது…
தஞ்சையில் இருக்கும் மக்கள் பெரும்பாலும் தஞ்சைக்கு வெளியே உள்ள பிரதேசங்களில் பணிபுரிய அணிதிரண்டு கொண்டிருந்த சமயத்தினில் ,
சோழத் தேசத்தின் பழையாறை நகரின் எல்லையில் வீற்றிருக்கும்
மலைக்கிராமம் அத்தியூரில் மக்கள் பரபரப்பாய் நடமாடி கொண்டிருந்தனர்…..
யாழினியின் குடிலை தவிர!
காண்போரின் கண்களை கொள்ளை கொள்ளும் மோகினி யாழினியின் தினசரிப் பொழுதுகள் மணற்கடிகாரத்தினை மாற்றி மாற்றி வைத்து காத்திருக்கும் சூழலிலேயே நகர்வதை எங்ஙனம் விவரிப்பேன்…
அத்தியூரின் ஆடலரசி “யாழினி”யின் தினசரி பொழுதுகள் காத்திருந்து காத்திருந்து கண்கள் பனிப்பூக்களாய் ,
மின்னிய பொலிவு இழக்கவும் துவங்கி இருந்தன..
மணற்கடிகாரத்தினில் பார்வையை குவித்திருர்த யாழினியின் விழிகளை அவள் செவியில் விழுத சத்தங்கள் சலனப்படுத்தியது..
அவளுக்கு தூரத்தினில் குதிரையின் காலடி ஓசைகள் மிக இரைச்சலாய் கேட்டது…
அவள் மனம் திடிரென பரவசமாய் ஆகி கால்கள் சட்டென தரைக்கு மேலே எழும்பி ஓடிவந்து திரைச்சீலை விலக்கி தன் தலைவன் வருகிறாரா என்று பார்த்தாள்..
பனிக்காலத்து அந்திம பொழுதினில் ஊடலாய் பிரிந்திரிந்த தலைவி யாழினியை நாடி ,
குதிரையின் மீதேறி பறவை வேகத்தில் வந்து கொண்டிருந்த தலைவன் சத்யவேந்தன் சிற்றரசனுக்கு உரிய கம்பீரத்தோடு தரையினில் இறங்கினான்…
பசலையில் பொன்னிறமாய் மஞ்சள் பூத்த வண்ணம் தனித்திருந்த சகியினை பார்த்தமாத்திரத்தில் கனிகூர்ந்து அவனது திண்தோள் சற்றே இளகி அவளுக்கான இளைப்பாறும் இடமாகி போக ஓடிவந்தவள் காதலுடன் அணைத்து கொஞ்சி மகிழ, அகமகமாய் மகிழ்ந்தான் சத்யய வேந்தன் …
அவளது தலையில் தன் கையில் வைத்திருந்த வாகை மலர்களால் பின்னியிருந்த மகுடத்தை சூட்டினான் ..
அத்தியூர் சிற்றூர் அரசியின் தோற்றப்பொலிவு சடுதியில் யாழினிக்கு வந்ததும் வேந்தன் அவளது உச்சி நெற்றியினில் முத்தமிட்டான்…
அவனது மார்பில் சாய்ந்திருந்தவள்
“உங்கள் நிழலின் அரவணைப்பை தான் கேட்டேனே ஒழிய,
மகுடங்களை அல்ல ” என்று முன் கோபித்தாள் யாழினி!
“பொன்னால் மகுடம் அணிவித்திருப்பேன்,
ஆனால், பொன்னினும் மேலான, பட்டு போலே ஒளிரும் குணவதி உனக்கு பொன் மகுடம் போதாதென்று எண்ணியே நான் பெருமை மிகுந்த வாகை மலர்களை அணிவித்தேன் ” என்று ஒருவாறாக அவளது மனதை தேற்றுவித்தான் ..
இருவரும் ஒருவரை ஒருவர் கரம் பற்றி உருகி ,
எரிதழலாய் ஒன்றென நின்றே எரிந்து கூடி கிளைத்து மகிழ்ந்தனர்,
இருவரும் இருந்த குடிலினை சுற்றி இருந்த வனத்தில் இருந்து பறவைகளின் சப்தங்கள் நில்லாமல் கேட்டவண்ணம் இருந்து பின்னே ஒலி குறைந்து,
நிசப்பதம் குடிகொள்ளும் போது,
பேரின்பத்தின் மையலில் சங்கம கூடலின் உச்சத்தினில் தலைவி யாழினியின் ஒலிச்சப்தங்கள் அவள் மனநிறைவை தலைவனுக்கு உணர்த்த, .தலைவன் வேந்தனும் புணர்ச்சியின் விவேக கூடலில் மகிழ்ந்து உச்சம் அடைந்தான்,
மனதோடு மனதாய் அரவணைக்கும் காதலை நாடி காத்திருந்த பிரியசகி பேரின்ப கூடலில் சித்தம் நிறைந்து மகிழ்வில் இளைப்பாற தொடங்கி சற்றே கண்ணயர்ந்து கோரைப்பாயின் மீது சொக்கி கிடந்தாள்,
சொக்கி கிடந்தவளை விட்டு விலகாது தொடர்ந்தே,
தாமரை பூக்களை அள்ளிக்கொள்வதை போலே அள்ளி அணைத்து,
மீண்டும் மீண்டும் முத்தமிட்டு கொண்டே இருந்தான் தலைவன்.
கூடலில் முத்தெடுத்து மயங்கி கிறங்கிய தலைவியோ சங்கமத்தின் பின்னே அன்பின் நிமித்தம் தலைவன் தந்த முத்தத்திற்காய் ஏங்கி மீண்டும் ஓர் கூடலை நாடி ஆழ்ந்த துயிலில் மூழ்கினாள்.
பொழுதுகள் கரைந்தன,
நள்ளிரவின் கடும் குளிர் இருளில் துயிலில் இருந்த தலைவியின் நெற்றியில் முத்தமிட்டு,
கிஞ்சிற்றும் சிறு சத்தம் ஏதுமின்றி அறையிலிருந்து நீங்கினான் தலைவன்.
தலைவி கண் விழிப்பாளா? .
மீண்டும் வரைவின் மன்ற உறவில்லா
காதல் கதை தொடருமா. ?
பார்ப்போம்….
#Manmadhan
