காரிகையின் கனவு கண்ணாளன் யாரோ…
கதவு டும் டும் எனத் தட்டும் சத்தம் கேட்க…
ச்ச… ச்சா… இந்த வீட்ல ஒரு கதவு தட்டுனா கூட யாரும் திறக்க போக மாட்டாங்க. எல்லாத்துக்கும் நம்மளே போவ வேண்டியது தா இருக்கு….
என கத்தி கொண்டு கதவைத் திறந்தால் தியா…
நீ என்ன வெட்டி முழிக்கிற வேலையை கிழிக்கிற. …
என்று உள்ளிருந்து அவள் பாட்டியின் குரல்…
இந்தக் கெழவிக்கு நம்மல டேமேஜ் பண்றதே விளையா போச்சு…
என புலம்பிக்கொண்டு எதிரி இருந்த நபரை பார்க்க…
வாயில் கையை வைத்து சிரிப்பை அடக்கி சிரித்துக்கொண்டு இருந்தான் ஆதவன். ..
( அவளின் மாமன் மற்றும் அத்தையின் தவ புதல்வன் அவன்)
இவனா….
இவன யாரு இங்க வர சொன்னது..
ஐயோ என்று புலம்பிக்கொண்டே இருக்க…
அந்த பக்கம் போய் போலம்பு…
என்று அவளை தள்ளி விட்டு வீட்டுக்கு அவன் செல்ல…
ஏய்…. ய்ய்…. எருமை எதுக்குடா தள்ளி விட்டுட்டு வந்த. .
என அவனோடு அவள் மல்லுக்கு நிக்க..
அதை சட்டு செய்யாது சோபாவில் அமர்ந்தவன். ..
அத்த ஒரு காபி…
என அவன் ஏழம் போட…
அதவ் கண்ணா….
அதவ் குட்டி…
எனப் பல்வேறு கோணங்களில் குடும்பம் மொத்தமும் அவனை கொஞ்சி தீர்த்தது…
இவனை யார் இப்ப இங்க வர சொன்னது. …
சும்மாவே.. இந்த கிழவியை பிடிக்க முடியாது. இப்ப கேட்கவும் வேணுமா என்ன. ..
அடுத்து அன்னைக்கும் திட்ட மறக்கவில்லை அவள். …
இந்த அம்மா…
சும்மாவே இது கண்ணுக்கு நான் தெரியவே மாட்டேன்.
இதுல அது அண்ணன் மக வந்தா என்ன எங்க பாக்கும்.
உனக்கு ஏன் அவன பாத்து இவ்வளவு பொறாமை அப்படின்னு கேட்கும்…
ஏதோ சம்மர் ஆல் டேய்க்கு வந்தா பரவால்ல. …
வார வாரம் ஞாயிற்றுக்கிழமை சனிக்கிழமை இங்க தான் இருக்கிறான்.
அதுவும் பக்கத்துல வீடு வெச்சுகிட்டு. ..
இங்க என்னன்னா இப்பதான் பல வருஷன் கழிச்சு வர்ற மாதிரியும்…
அவங்க பாக்குற மாதிரியும் தான் சீன்…
தெனைக்கும் இந்த முகரைய தானே பாக்குறாங்க….
சனிக்கிழமை ஞாயிறு இங்கதான் இருக்கான்.
அப்புறம் என்ன தான் கொஞ்சுவாங்கலோ ஒன்னும் புரியல.
அத்தை அடுப்புல எதோ இருக்கு போல. ..
ஒரே தீஞ்ச வடையா வருது. ..
இல்ல கண்ணு என்று அவர் சொல்ல. …
அப்போ, உங்க பொண்ணோட வயிறு நெனைக்கிறேன் என்று சொல்ல. ..
குடும்பம் மொத்தம் ஒரே சிரிப்பு ரகளை தான்.
ச்ச… இதுங்களுக்கு வேற வேலையே இல்ல… என தன் அறைக்கு சென்றவள் தன் பையில் இருந்து ஒரு டைரிய எடுத்து படிக்கத் தொடங்கினாள்…
நேரம் போனது தெரியவில்லை…
ஒரு மணி நேரம் கடந்து இருக்கும். ..
அவள் கையில் இருந்த டைரி பின்பக்கமாக பறிக்கப்பட்டது.
ஐயோ… டைரி என்று எழுந்து திரும்பி பார்க்க. ..
ஆதவன். ..
ஏய்…. அத… குடு… டா… என்று அவன் கையில் இருந்து வெடுக்கென்று அவள் பரிக்க முயன்றால். ..
அவன் அந்த தைரிய பிரித்து பார்க்க. …
ஏய்… அத பிரிக்காம கூடுடா…
பிரிக்க கூடாதா. ..
ஆமா. ..
படிக்கக் கூடாதா. ….
ஆமா. ..
அப்போ நான் பிரிப்பேன் படிப்பேன்…
என்று பிரித்து படிக்க…
முதல் பக்கத்தில். ..
“என் இதயம் நிறைந்த என்னுக்காய் என் வரிகள்” என இருக்க…
அடிப்பாவி. ..
லவ் பண்றியா..
இரு… இரு… பாட்டி கிட்ட சொல்ற…
உன் திருட்டுத்தனத்தை என்று பாட்டி என அவன் கத்தும் முன் அவன் வாயை பொத்தியவள்..
லூசு … லூசு … அத நான் எழுதல டா…
அது என்னது இல்ல.
அப்புறம் எப்படி அது உன் கைக்கு வந்துச்சு …
என் ஃப்ரெண்ட் ஓடது…
அடிப்பாவி … என்னமா பொய் சொல்ற. ..
ஏ.. லூசு நம்பு. .. என்று அவள் கெஞ்ச…
அவன் அடுத்த பக்கம் புரட்டி பார்த்து படிக்க. ..
ஆமா… நீ சொல்றது கொஞ்சம் நம்புற மாதிரி தான் இருக்கு. ..
ஏன்னா கவிதை நல்லா இருக்கே. உனக்கு அந்த அளவுக்கு மண்டையில மசாலா எங்க இருக்கு என்று அவன் சொல்லி சிரிக்க. ..
நீ ஏதாவது சொல்லு எனக்கென…
எனக்கு டைரி வேணும் என்று மன நினைத்தவள்…
ஆமாம்… சாமி போட்டுவிட்டு டைரியை வாங்க முற்பட…
தரமாட்டேன் என அவன் போக்கு காட்ட…
அது என் பிரண்டுது டா விளையாடாத தா….
நான் படிச்சிட்ட அப்புறமா தரேன் போ …
என்னது நீ படிக்க போறியா…
அது அவளுக்கு தெரிஞ்சா திட்டுவா…
உன்ன தானே திட்டுற எனக்கு என்ன வந்துச்சு…
என அவன் நகர்ந்து விட்டான் டைரியோடு…
**********************************
மாலை வேளையில் டைரியை அவளிடம் தந்தவன்…
பரவால்ல உனக்கு கூட அறிவாளி எல்லாம் பிரண்டா இருக்காங்க..
இந்த மாதிரி ஒரு ஆளு பொண்ணா கிடைக்க …
அந்த பையன் கொடுத்து வச்சிருக்கணும். ..
ஆமா என்ன பண்றா அந்த பையன்..
எந்தப் பையன். …
உன் பிரண்டோட ஆளு. ..
ஆளா… ஆளு எல்லாம் இல்ல அவளுக்கு. …
ஆளு இல்லையா…
ஓ.. கல்யாணம் அன பெண்ணா அது….
அய்யோ இல்ல ….
ஏய் என்ன நீ லூசா இல்ல நா லூசா…
ஆள் இல்லங்குற. ..
கல்யாணம் ஆகலங்குற…
அப்புறம் எப்படி இந்த கவிதை. ..
அது அவ வீட்டுக்காரருக்கு…
கல்யாணம் ஆகலன்னு சொன்னேன் அப்புறம் எப்படி வீட்டுக்காரர் பைத்தியம். ..
ஃபியூச்சர்ல வருவாருல அவருக்கு அவ எழுதினது. ..
சரி மாப்ள என்ன பண்றாரு. ..
ஐயோ ஆண்டவா அவளுக்கு மாப்பிள்ளையே பாக்கல…
அவ யாரையும் லவ் பண்ணல…
கல்யாணமும் ஆகல…
எப்படியோ கல்யாணம் ஒன்னு ஆகும் இல்ல…
இப்ப வரப்போற புருஷனுக்கு எழுதி இருக்கா போதுமா. ..
ஓ அப்படியா. .
அதுக்கு முதலிலேயே ஒழுங்கா தெளிவா சொல்லி இருக்கலாம் இல்ல பைத்தியம். …
டைரியை பிடுங்கிக் கொண்டு.
இவன்தான் பைத்தியம் …
சும்மா சும்மா 100 வாட்டி பைத்தியம் பைத்தியம் சொல்லி வெறுப்பேத்தறான்.
இவன் தான் பைத்தியம். ..
என்று தனக்குள் அவள் செல்லி கொண்ட செல்ல . ..
அங்கு மேசை மேல் இருந்த அவளது கைபேசியில்…
ஏய் மறக்காம என் டைரிய எடுத்துட்டு வந்துது டி…
என ஒரு மெசேஜ் வந்தது. ..
அதை எடுத்துப் பார்த்த ஆதவன்…
அந்த எண்ணிற்கு தனது கைபேசியில் இருந்து பிரைட் ஃப்யூச்சர் ஃபார் யூ சம கவிதைங்க.
யாருக்கு கொடுத்து வச்சிருக்கோ. …
ரெண்டு கவிதை படிச்ச எனக்கே உங்கள கல்யாணம் பண்ணிக்கலானு தோணுது. …
நீங்க என்ன நினைக்கிறீங்க. ..
என மெசேஜ் அனுப்ப…
“கதிரவன் மீது காரிகை அவள் காதல் கொள்வளோ…
இல்லை கனல் கோபம் கொள்வளோ…
காலமே விடையாய்…
காரிகையின் கனவு கண்ணாளன் யாரோ…
காத்திருக்கும் காதல் கை சேருமா…
