காதல் மீறவா காவலா…24

This entry is part 1 of 3 in the series காதல் மீறவா காவலா

காதல் மீறவா காவலா

காதல் மீறவா காவலா…24

காதல் மீறவா காவலா…24

காதல் மீறவா காவலா…25

காதல் மீறவா காவலா…25

காதல் மீறவா காவலா…27

காதல் மீறவா காவலா…27

காதல் மீறவா காவலா -24

 ச்சே கல்யாணம் பண்ணிட்டு நிம்மதியா சந்தோஷமா இருக்கலாம் பார்த்தேன் அதுலயும் மண்ணள்ளி போட்டுருச்சு இந்த வாத்தியாரம்மா இவரும் கோல்ட் மெடல்னு டார்ச்சர் பண்றாரே இதுக்கு ஒரு முடிவு கட்டியே ஆக வேண்டும்…என முடிவு கட்டிக் கொண்டு எழுந்தவள் நேராக சென்றது ஆதியிடம் தான்…
 அவனோ அங்கு நடுக்கூடத்தில் அமர்ந்து தாடியை மழித்து கொண்டு இருந்தான்…அந்த சின்ன கண்ணாடியை பார்த்து மழிப்பதில் சிரமம் இருந்தாலும் நேரமின்மை காரணத்தால் தனக்குத்தானே சுயமாக தாடியை மழித்து கொண்டிருந்தான்
 அவன் எதிரே போய் நின்றவள் அவன் செய்து கொண்டிருக்கும் வேலை முடியும் வரை காத்திருக்கும் பொறுமை இல்லாமல் ஆதியின் கையில் இருந்த அந்த சின்ன கண்ணாடியை மது பறித்துக்கொண்டாள்…
 ஏன் எதற்கு என எந்த கேள்வி கேட்டாலும் அதற்கு குதற்க்காமாக தான் பதில் வரும் என்பதால் அமைதியாகவே அவள் கையில் இருக்கும் கண்ணாடி விம்பத்தில் தன் உருவத்தை பார்த்து தன் வேலையை தொடர்ந்தான்…
க்ஹம் என்ற தொண்டை கணைத்தாள் அதற்கு அவனிடம் இருந்தும் எந்த பிரதிபலிப்பும் இல்லாமல் போகவே…
என்னங்க(2…)
யாரை சொல்றா…?என ஆதி சுற்றியும் முற்றியும் பார்க்க…
 ஆதி உங்கள தான் கூப்பிட்டேன்…
ஓ என்னதானா திடிர்னு நீ அப்படி கூப்பிட்டியா அதான் கொஞ்சம் குழம்பி போயிட்டேன் சொல்லுமா என்ன விஷயம்…??
“ம்ஹும்ம் போங்க ஆதி உங்களுக்கு எப்பவுமே விளையாட்டு தான்…!” என மலர் சிணுங்க
எதே… என்னடா நடக்குது இங்க நாம சாதாரணமா பேசுனாலே மூஞ்ச தூக்கி வச்சிட்டு போவா…. இன்னைக்கு என்ன இவ தானா வந்து பேசுறா…. என வியந்தவன்… எதாவது உள்குத்து இருக்குமோ…?? மாட்டிக்கத ஆதி உஷாராகிடு…!!” என தனக்கு தானே எச்சரிக்கை படுத்திக்கொண்டான்….
என்னங்க என்ன…ஹங்க…என குரலை குழுத்து அழைக்க…
” எம்மாஆ சும்மா இருக்குறவனை உசுப்பேத்தி விடுறாளே… அம்மாடி மது உனக்கு என்னதான் வேணும் சீக்கிரம் சொல்லிடுமா மனுஷனால சஸ்பென்ஸ் தாங்கமுடியல…!!”என அவஸ்த்தையாக நெளிந்து கொண்டே கேட்டான் ஆதி அவன் அவஸ்த்தை அவனுக்கு தானே தெரியும்…
அது அது என பேசியபடியே ஷேவிங் செய்து கொண்டு இருந்த ஆதியின் அவன் கையில் பொருட்களை கை பற்றியவள் கைகளை விலகி கொண்டு அவன் மடியில் அமர்ந்தாள்…
ஏ என்ன பண்ற பதறினான் ஆதி அடியில் இருக்கும் ரகசியம் தெரிந்து விடுமே என்கிற பயம் அவனுக்கு…
இருங்க நானே ஷேவ் பண்ணி விடுறேன்…
அம்மா தாயே அதெல்லாம் ஒன்னும் வேணாம் முதல்ல நீ எந்திரி அப்புறம் உன்னை வன் கொடுமை பண்ணேன் மண் கொடுமை பண்ணேன்னு சொல்லுவ… எனக்கு எதுக்கு வம்பு ஆள விடு தன் கையே தனக்கு உதவி எல்லாம் நானே பாத்துக்கிறேன்… ஆதி மடியில் கட்டிய பூனை என அவஸ்தையில் நெளிந்தான்…
 ச்சு போங்க ஆதி அது எதோ உங்க மேல இருக்குற கோவத்துல திட்டி விட்டேன்… ஏன் எனக்கு அந்த உரிமை இல்லையா என கேட்டவள் தோரணையோ இல்லைனு சொல்லிடுவியா நீ என்கிற ரீதியில் இருந்தது…
இருக்கு இருக்கு உனக்கு என்கிட்ட எல்லா உரிமையும் இருக்கு ஆனா இப்போ மட்டும் என் மேல இருந்து எந்திரிச்சிடுமா… என ஆதி கெஞ்சினான்…
முடியாது எனக்கு உங்ககிட்ட உரிமை இருக்குன்னு என்கிட்டயும் உங்களக்கு உரிமை இருக்கு அதனால என் புருஷனக்கு நான் தான் சேவ் பண்ணியே தீருவேன்… என பிடிவாதம் பிடிக்க…
இங்க பாரு நீயாதான் விரும்பி இது பண்ற இதுக்கு உண்டான பலனையும் நீதான் அனுபவிக்கணும்…. அப்புறம் ஐயோ அம்மான்னு என்னை குத்தம் சொல்ல கூடாது சொல்லிட்டேன்…
ஹா பெருசா என்ன வந்துட போகுது என்கிற தைரியத் தில் அவளும் ஒத்து கொண்டால்…
 யூடுப் வீடியோவை பார்த்து பார்த்து ஆதிக்கு சேவ் செய்ய துவங்க… தான் வந்த நோக்கம் மறந்து ஆதிக்கு ஷேவிங் செய்வதில் மும்ரமாக ஈடுபட்டு கொண்டு இருந்தவளை தான் தன் விழிகளால் களவாடி கொண்டு இருந்தான் அவளின் காவல் கணவன்…
கண்டிஷனர் போட்டு பராமரிக்கும் அவளின் மிருதுவான முடி முகத்தில் மோத அதன் சுகந்தமான நறுமணத்தை உள்வாங்கியவனுக்கு போதை தலைக்கு ஏறியது… பிறை நெற்றி பொன் வண்டு கண்கள் வலைவான நாசி ஆரஞ்சு மிட்டாய் இதழ்கள் பார்த்து பார்த்து கள்ளுரும் கண்களானது ஆதிக்கு…
 உள்ளுக்குள் ஈழம் உணர்ச்சிகளை மனதுக்குள் கொடுத்து வைக்கலாம் ஆனால் உடலுக்கும் விழும் உணர்ச்சிகளை அவ்வளவே இருதில் அடக்கி வைக்க முடியுமால் ஆடி நின்றது 
அஹ்ஹ் ஆதி கீழ ஏதோ குத்துது…
 அதெல்லாம் ஒன்னும் இல்லம்மா நீ பண்ணு… என சமாளித்தான் 
 இல்லைங்க ஏதோ குத்துது இருங்க நான் எழுந்து பார்க்கிறேன்…
 கேட்டுச்சு போ அதெல்லாம் ஒன்னும் இல்லம்மா இப்பதான் ஞாபகம் வந்தது பேண்ட் பாக்கெட்டில் துப்பாக்கி வச்சிருந்தேன் அது தான் குத்து இருக்கும் என மதுவை எழவிடாமல் தன் மடியோடு இறுக்கி பிடித்து இருந்தான் 
 ஆதி என்ன சமாதானம் சொல்லியும் மது நெளிந்து கொண்டே இருக்க…. அவள் கவனத்தை திசை திருப்ப எண்ணி மது என்கிட்ட என்னவோ சொல்ல வந்தியே அது என்னமா…
அதுவா அது வந்து பாவம் நீங்க வெளில குற்றவாளி கிட்ட போராடுறீங்க வீட்டுக்கு வந்தும் நீங்களே எவ்ளோ வேலை செய்விங்க அதனால நான் காலேஜ் போகல இருக்கேன்பா… என பச்சாதாபம் ஏற்படும்படி கூறினால்…
 அதான செய்தி புலி ஏன் பதுங்கினதுனு இப்பதானே புரியுது… வாடி என் வெள்ள தக்காளி உன்னை என்ன பாடுபடுத்தின எல்லாத்துக்கும் வச்சி செய்கிறேன்…
 அத பத்தி எல்லாம் நீ கவலைப்படாத மது எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்… விக்ரம் என் தங்கச்சியை ஒரு போலீஸ் ஆக்கும் போது… நான் மட்டும் என்ன சும்மாவா நானும் உன்னை ஒரு கலெக்டர் ஆவது இல்லனா ஐபிஎஸ் அதிகாரியாக ஆவது ஆக்கியே தீருவேன்… என் சபதம் எடுத்தான் அந்த காவலன்…
ஐயோ அப்படி எல்லாம் எதுவும் பண்ணி வச்சிடாதீங்க…என மிரண்டால் பேதை…
இல்லை மது நான் சொன்னா சொன்னது தான் உங்க அம்மாகிட்ட வேற வாக்கு குடுத்துட்டேன் அதுனால நீ கட்டாயம் படிச்சே ஆகணும்… நான் படிக்க வைக்காம ஓய மாட்டேன்…என சீரியஸாக பேசி மதுவை கலங்க வைக்க…
ஐய்யயோ அதெல்லாம் ஒன்னும் வேணாங்க… எனக்கு படிக்க இஷ்டம் இல்லை நானே அந்த டீச்சரம்மா டார்ச்சர்ல தான் காலேஜ் சேர்ந்தேன்பா இதுல என்னை போய் கலெக்டர் ப்ளீஸ் எனக்கு படிக்க வேணாம் என அழுதே விடுபவள் போல் மது கெஞ்ச…
அச்சோ என் செல்ல தக்காளி அழும் போது கூட நீ அழகுடி என மனதுக்குள் கொஞ்சி கொண்டவன் வெளியே விராப்பாக…
என்ன மது இப்படி சொல்ற…இப்போ நான் என்ன பண்றது விருப்பம் இல்லாம உன்னை வற்புறுத்தவும் கூடாது அதே சமையம் உங்க அம்மாக்கு கொடுத்து வாக்கையும் மீற கூடாது… என தீவிரமாக சிந்திக்கும் பாவனை செய்ய…
எதாவது செய்யுங்க ஆதி ப்ளீஸ் 
 ம்ம்ம் என்கிட்ட ஒரு ஐடியா இருக்கு ஆனா அதுக்கு நீ சரிப்பட்டு வரமாட்ட…
 என்னன்னு சொல்லுங்க ஆதி
 சொல்றேன் அதுக்கு முன்னாடி உனக்கு என் மேல இருக்குற கோவம் எல்லாம் போயிடுச்சா
 போயிடுச்சு ஆனா
 அந்த ஆனாவ விடு இப்போ நமக்கு ரெண்டு பேருக்கும் கல்யாணம் ஆயிடுச்சு சரியா நீ உடனே கன்சீவ் ஆகிட்டா நீ படிக்க தேவையில்லை. குழந்தை பிறக்கிற வரைக்கும் உன்னை யாரும் டிஸ்டர்ப் பண்ண மாட்டாங்க (என்ன ஒரு ராஜதந்திரம் )..
 குழந்தை பிறந்ததுக்கு அப்புறம் படிக்க சொன்னா…??
அதுக்கும் ஒரு யோசனை வச்சி இருக்கேன் நீ திரும்பவும் கன்சீவ் ஆகிடு… வரிசையா குழந்தை பெத்து உங்க அம்மா கையில கொடுத்துட்டா அவங்களுக்கு பேரை பசங்கள கொஞ்சறத்துக்கே நேரம் இருக்காது அப்புறம் உன்ன மறந்துடுவாங்க எப்படி ஐடியா… என தந்திரமாக ஐடியா சொல்ல…
 அதன் உள்ளர்த்தம் புரியாதவளோ நிஜமாவா…?? என கேட்க…
 நிஜமாவே தான்… என ஆதி இழுக்க
 அவனை சந்தேகமாக பார்த்தால் மது மலர்
பாத்தியா பாத்தியா என்னையே சந்தேகப்படுற நான் உன்னோட நல்லதுக்கு தான் சொன்னேன் எனக்கு ஒன்னும் பிரச்சனை இல்ல நீ படிச்சு கலெக்டர் ஆனா எனக்கு தான் பெருமை… என்ன படிக்கிறியா மது..?? என மிரட்ட
ஹன் அதெல்லாம் ஒன்னும் வேணாம் நீங்க சொன்ன மாதிரியே செய்யலாம்…என கூறியவளுக்கு வெட்கம் பிடுங்கி தின்றது…
என்ன சொன்ன என்ன சொன்ன திரும்ப சொல்லு மது… என லட்ஜை என்று கேட்டு வைக்க…
கணவன் முகம் காண மறுத்து பார்வையை தழைத்து கொள்ள… கண்கள் கனிவுற ரூஜ் தடவாமல் சிவந்த நிற்கும் மனையாளின் கன்னங்களை தன் கையால் வருடிட கூச்சம் கொண்டு நெளிந்தால் மாது…
 அவள் வழுவழுக்கண்ணத்தில் தன் சறுசொரப்பான கன்னத்தை வைத்து தேய்த்து விளையாடியவன்… அவள் பிறை நெற்றி கண்கள் நாசி என முத்தங்களை அடுக்கடுக்காக கொடுத்து வந்தவன் அவள் பாகு ஊரும் ஆரஞ்சு மிட்டாய் சுளை இதழ்களை நாவால் ருசித்து எச்சில் செய்து கீழ் இதழை கவ்வி இழுத்து ருசித்தவன் ஆவேசமாக அவள் மேல் இதழையும் சேர்த்து இழுத்து அணைத்தான்… ஆக்ரோஷமான முத்தத்தில் மது தலை மாறாமல் இருக்க தன் மறுக்கையால் மதுவின் பின்னந் தலையை சேர்த்து பிடித்து கொண்டு நீண்ட நெடிய முத்தம் ஒன்று கொடுத்தான்…
எச்சில் ஊறும் இதழ் முத்தத்தில் மோகங்கள் கட்டவிழ ஆசை வேர்கள் ஆர்ப்பரித்து நிற்க தூக்கிப் பிடித்த துப்பாக்கி முனையின் குறி அவளை நோக்கி இருக்க… விழித்து கொண்டது அவள் பெண்மை…
ஏய்ய் சீ என ஆதியிடம் இருந்து பிரிந்து எழுந்தாள்…
ஏய் மது எங்க போற… மோக வலை அறுபட்டதில் வந்த ஏமாற்றத்துடன் 
ஆங் உங்க துப்பாக்கிக்கு துரு பிடிச்சு போச்சு அதை என்னனு பாருங்க பொல்லாத வேலை எல்லாம் பண்ணுது… என ஆதியின் பிடியில் இருந்து நழுவி ஓட…
எடுத்து யூஸ் பண்ணி பார்த்தா தானா தெரிஞ்சிடும் என்னுடையது துரு பிடிச்ச துப்பாக்கியா இல்ல துலைச்சு எடுக்குற துப்பாக்கியான்னு…நில்லுடி ஓடாத…மதுஉஉஉ…என ஆதி துரத்தி பிடிக்க ஓடவும்
ஆதியின் செல் அழைப்பு விடுக்கவும் சரியாக இருந்தது… அதானே சரியான நேரத்தில் கரடி வேலை பார்க்க இந்த ரைட்டர் வந்துருமே என புலம்பிய படியே ஆதி அழைப்பை எடுத்து பேச…
அங்கு கூறப்பட்ட செய்தியை கேட்டு சற்று ஆடித்தான் போனான் ஆதி…
 

Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *