காதல் இனித்திடும் நரகமா?வலித்திடும் சொர்க்கமா?10

மங்கையவள் செவி உரசிய கூந்தல் கோபம் கொண்டது அவன் மேல் என் இடத்தை நீ பிடித்துக் கொண்டாயடா என்று துப்பாக்கி ஏந்தி நின்றவளின் பின்பக்கமாய் இருந்து ஒரு கரத்தால்  பாவையவள் இடைப்பற்றி மறு கரத்தால் துப்பாக்கி ஏந்தியவளின் கையைப்பிடித்து புதுவிதமான கன் சூட்டிங் முறையை பயிற்றுவித்து கொண்டிருந்தான் கள்வன்.
பல்லை கடித்த தாரிதா பளாரென்று ஒன்று வைத்தாள் கைலாஷ் கன்னத்தில்.
ஆவ்வ்…ஏன்டி அடிச்ச குள்ள கத்தரிக்கா.
டேய் வளர்ந்த வாழமரம் சூட்டிங் கத்து கொடுக்க சொன்னா நீ என்னடா பண்ணிட்டு இருக்க ஒழுங்கு மரியாதையா  சூட்டிங் மட்டும் கத்துக்கொடு கை மேல பட்டுச்சு ருத்ரா மேடம் கிட்ட  சொல்லிடுவேன் கண்களை உருட்டி தாரிதா மிரட்டிட அறைமனதாய் பயிற்சியில் கவனம் செலுத்தினான் கைலாஷ்.
👿👿👿👿👿👿👿👿👿👿👿👿👿👿👿👿👿👿👿
என்ன பண்ணுன புருவம் உயர்த்தி வினாவினாள் ருத்ர யாழினி.
“நா எவ்வளவோ பண்ணிருக்கேன் நீ எத கேக்குறே..” தோளை குளுக்கி கேட்டான் ராவணன் தன் நந்தவன தடாகத்தின் அருகில் அமர்ந்து.
உன் பொண்டாட்டிய என்ன பண்ணுனனு கேட்டேன்.
பொண்டாட்டி… பொண்டாட்டி ஹாஹா கொன்னுட்டேன்… விடுதலை வேனும்னு கேட்டா  அதான் இந்த பூமியில இருந்து விடுதலை கொடுத்துட்டேன் என்றவன் தடாரென தடாகத்தில் குதிக்க நீர்த்துளிகள் ருத்ரா மேல் தெறித்திட அந்நீரினை கைகளால் துடைத்து விட்டவள் சொன்னாள் அவனிடம்.
தேங்க் யூ… என்று 
ஏளனச்சிரிப்பை உதிர்த்த ராவணனும் கேட்டான் அவளிடத்தில்.
நிஜமாவே சமர்ஜித் பத்தி உனக்கு எதுமே தெரியாம தான் நிச்சயம் வரைக்கும் போனியா?? ஒரு DCP அவர் பொண்ணுக்கு ஒரு பொம்பளை பொறுக்கிய கட்டி வைக்க நினைப்பாரா என்ன…? அப்பாவும் மகளும் செர்ந்து நிச்சயதார்த்தம்ங்குற பேர்ல சமர்ஜித்க்கு செக் வச்சிருக்கிங்க Am I right?
 என்ன ஒன்னு நா அந்த வீடியோவ அனுப்புனதால  அவன சீக்கிரமா கொன்னுட்ட இல்லனா நிச்சயதார்த்தம் பண்ணி கொஞ்சம் கொஞ்சமா டார்ச்சர் பண்ணி கொன்றுப்ப அப்பறம் எதுக்கு தேங்க்ஸ் சொல்ற.
நா அதுக்கு தேங்க்ஸ் சொல்லவே இல்ல நா தேங்க்ஸ் சொன்னது என்னையும் என் குழந்தையையும் ஃபையர் ஆக்சிடன்ட்ல இருந்து சேவ் பண்ணுனதுக்கு.
வாட் யூ மீன் ருத்ரா நா எப்போ உன்ன சேவ் பண்ணுனேன் Are you crazy உனக்கு குழந்தை வேற இருக்கா என்ன?? எனக்கு தெரிஞ்சு உனக்கு இன்னும் கல்யாணம் ஆகல குழந்தை மட்டும் எங்க இருந்து வந்தது நீந்திக்கொண்டே ராவணன் நக்கல் தொனியில் கேட்க.
கோபம் கொண்ட கில்லர் குயினோ குதித்தாள் அதே தடாகத்தில்.
ருத்ரா குதித்த வேகத்தில் கால் இடறிவிட ராவணன் மார்பில் முட்டி அவனோடு சேர்ந்து நீருக்கடியில் மூழ்கினாள்.முரடனவனை சாய்க்கும் வலிமை மெல்லிடை கொண்டதுவோ என்னவோ பெண்மையின் மென் தீண்டலில் குளிர் நீரிலும் உஷ்ணம் கொண்டான் ராவணன்.
நீருக்கடியில் மூழ்கிய இளங்குயிலின் இடையை ஒற்றைக்கரத்தால் அழுந்தப்பற்றி மேல் தூக்கினான் அசுரனவன். அவன் தூக்கிய அடுத்த நொடி அவன் மார்முட்டி நின்றவள் நகக்குறி  பதிய பின் தோலினை கீறி பிய்த்து எடுத்தாள் ராவணேசனின் டாட்டூவை மறைத்த ஸ்கின் கலர் ஸ்ட்டிக்கரினை.
அப்போ இது என்ன மிஸ்டர் ராவன் என்றாள் அவனின் கைச்சிறையில் கைதான சிற்றிடையுடன்.
வெல்.. கண்டு  பிடிக்க மாட்டனு நெனைச்சேன் But you are a very smart girl சீக்கிரமா கண்டு பிடிச்சிட்ட.நா எதுக்கு உன்ன காப்பாத்துனேனு ரீசன் சொல்ல வேண்டிய அவசியம் எனக்கு இல்ல அதுவும் உன்கிட்ட சொல்லனும்னு அவசியம் இல்லவே இல்ல . இங்கே இந்த நிமிஷம் என்ன தோனுதோ அத்தான் நா செய்வேன் என்று தன் நெற்றியை தொட்டு காட்டியவன் கர்வம் கலந்த புன்னகை சிந்தி அவன் மூளை அந்நிமிடம் இட்ட கட்டளையை ஏற்று ருத்ர யாழினியவள் சுதாகரிக்கும் முன் விழுங்கினான் அவளின் தேன் இதழ்களை.
சட்டென நடந்த நிகழ்வில் கண்கள் விரிய அவனை கண்டவள் கரங்கள் சரமாரியாக அவனை தாக்கிட வளைக்கரங்கள் இரண்டையும் தன் ஒற்றைக்கையில் அடக்கியவன் கொய்து எடுத்தான் வன்மையாய் செம்மாதுளை இதழ்களை.
முரடனவன்  பிடியில் திமிறி திமிறி கைகளை விடுவித்துக் கொண்டவளால் தன் அதரங்களை விடுவிக்க முடியாமல் போய்விடவே இதழ் போர் நடத்தி கொண்டிருந்தவனின் முரட்டு இதழ்களை உதிரம் சொட்டிட கடித்து வைத்தவள் அதோடு மட்டுமல்லாது நகத்தால் அவன் மார்பை கீறிட கருப்பட்டி நிற தேகத்தில் செங்குருதி கசிந்தது. பெண்ணின் அனுமதி பெற்று மென்மையாய் கையாள அவன் ஒன்றும் நல்லவன் அல்லவே ராவணேசன் தசக்கிரீவ ராவணேசன்.
அவள் இதழை விடுவித்து பார்த்தவனை நீர்திவளை படிந்த அதரங்கள் மீண்டும் போதையேற்ற சட்டென சிறையெடுத்தான் ருத்ரா யாழினியின் இதழினை.
ருத்ரா கடினப்பட்டு அவன் மார்பில் கைவைத்து தள்ளிட  அரக்கனின் பற்களில் சிக்கியிருந்த உதடு வேகமாய் பிரிந்ததில் உதிரம் சொட்டி நின்றவள் எச்சரித்து சென்றாள் அவனை.
உன்னோட சாவு எப்பவாயிருந்தாலும் அது என் கைல தான் ராவன் மார்க் மை வேர்ட்ஸ். உன்னோட பொண்டாட்டி சாகல உயிரோட தான் இருக்கா கண்டிப்பா வருவா உன் உயிர எடுக்க கர்ஜித்தவள் குளத்திலிருந்து மேல் ஏறி செல்ல அவளை சொடுக்கி அழைத்தவனும் சொன்னான்.
இந்த ராவணன கொள்ள யாராலையும் முடியாது என்னோட சாவ நாந்தான் முடிவு பண்ணனும்.ஹாங் அப்பறம் என்ன சொன்ன என் பொண்டாட்டி சாகலையை ஹாஹா வெல்.. வரச்சொல்லு இந்த வாட்டி சரியா கொள்றேன்.என்ட் பேபி பொண்ணுங்க வீரமா இருக்கலாம் ஆனா இப்படி ஈரமா இருக்க கூடாது வேணும்னா என்னோட பேலஸ்ல டிரஸ் சேஞ்ச் பண்ணிட்டு போகலாம் எனக்கு ஒரு ப்ராப்ளமும் இல்ல சாதாரணமாய் தோள் குலுக்கி சொன்னவனை முறைத்வள் வேகமாய் வெளியேறினாள்.
தாரிதா மேல் சூட்டிங் அட்டாக் நடத்தப்பட்ட காஃபி ஷாப் மேனஜர் ராவணனிடம் இருக்க அவனை விசாரிக்க ராவண கோட்டைக்கு வந்து சேர்ந்தாள் ருத்ர யாழினி.ஆனாலும் ஒரு பிரயோஜனமும் இல்லை ராவணன் அடித்த அடியில் மேனஜர் எப்போதோ டிக்கெட் வாங்கிவிட.தன் மனதில் ராவணனின் மனைவி என்ன ஆனாள் என்ற சந்தேகத்தை அவனிடம் கேட்டு வைத்தவள் அதோடு விட்டிருக்களாம்.
அவன் கூர் விழிகளை உற்று நோக்கியவள் கண்டு கொண்டாள் தன்னை தீவிபத்தில் இருந்து காப்பாற்றியது ராவணன் தான் என்று அவனிடம் கேட்க அவனோ இல்லை என்றிட நன்றி கூற வந்தவளை நண்டு ரசம் போல் பருகிவிட்டான் கெட்டவன் அவன்.
ருத்ரா சென்றும் குளத்தில் இருந்து எழாமல் நீந்திக் கொண்டிருந்தவன் கவனத்தை கலைத்தது அவனின் தொலைப்பேசி அழைப்பு சுனேனா தான் அழைத்திருந்தாள் அழைப்பை ஏற்றவன் சுனேனா கூறிய செய்தியை கேட்டு ஃபோனை தூக்கி எறிந்திட அதுவோ கல்லில் பட்டு துகள் துகளாய் போனது.
ருத்ராஆஆஆ….. ஆக்ரோஷமாய் கத்தியவன் அடுத்த அரைமணி நேரத்தில் இருந்தான் வான் தொட்ட தன் Minicro tech MNC  கட்டிடத்தில்.
👿👿👿👿👿👿👿👿👿👿👿👿👿👿👿👿👿👿👿
ஏய் மல்லிகா இப்போ எதுக்கு இப்படி தலைல கைய வச்சிட்டு உட்காந்திருக்க?? அதான் நெருப்புல வேகாம தப்பிச்சிட்டியே அப்பறம் என்ன.
க்கும்.. உயிர் தப்பி என்ன ஆகுது அதான் என்னோட தொழில மொத்தமா ஊத்தி மூடிட்டாளே அந்த ருத்ரா அவள சும்மா விடக்கூடாது அவளையும் அந்த தொழில்ல இறக்கி அவ வாழ்க்கையவே நாசமாக்குனா தான் எனக்கு நிம்மதியா இருக்கும் என்று வன்மம் பொங்க உரைத்தாள் மல்லிகா.
உனக்கு ருத்ராவ அழிக்கனும் எனக்கு அந்த ராவணனை அழிக்கனும் ரெண்டு பேரையும் மோத விட்டோம்னோ ரெண்டு பேருல யாராவது ஒருத்தர் அவங்களுக்குள்ளேயே அடிச்சிக்கிட்டு செத்துடுவாங்க மிச்சம் இருக்குற ஆள நாம போட்டு தள்ளிடுவோம் என மதுவை அருந்திவிட்டு மல்லிகாவுடன் கட்டிலில் சரிந்தான் அவன்.
யார் அவன்…?
ராவணன் வேட்டை தொடரும்….

Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *