காதலது கண்ணில் கண்டேன்
அத்தியாயம் : 7
காதலது கண்ணில் கண்டேன்
ஆம் இன்று மது எப்போதும் பயணம் செய்யும் பேருந்தின் பேருந்து தினம் ஆனதால் காலை முதல் அந்த பஸ் முழுவதும் மாணவர்களால் அலங்கரிக்கப்பட்டு பாட்டும் நடனமும் என அவர்கள் ஆர்ப்பரித்து வர காலை வேறு மது பஸ்சில் பயணம் செய்ததால் மாலை தான் அவளால் அவள் பயணம் செய்ய பஸ்சில் ஏற முடிந்தது…
இவனோ அவள் ஏறிய பஸ் இது தானா என்று பார்த்து கொண்டே அந்த பஸ் ஐ பின் தொடர்ந்தான்…எப்படியாவது அவளை பிடித்து அவள் முகத்தில் இந்த வாழ்த்து அட்டையை விட்டு எரிய வேண்டும் என்ன திண்ணக்கம் இருந்தால் காதலிக்கிறேன் என்று இவள் கூறுவாள்..படிக்கும் வயதில் இவளுக்கு என்ன நினைப்பு இதை கொண்டு போய் அவள் தந்தையிடம் காட்டினால் தான் சரி ஆகும்…அவர் கொடுக்கும் மருந்தில் இனி என் பக்கம் வரவே கூடாது என கோபத்தின் உச்சத்தில் அவளை பின் தொடர்ந்து கொண்டு இருந்தான்…
அவனுக்கு அவள் எழுதி இருப்பதை கண்டதும் உண்மை தானோ என நினைத்து கொண்டு இருக்கிறான்…வரும் காலத்தில் அது உண்மை ஆகி விடும் என அறியவில்லை…அதும் அவன் உணரும் முன்பே..
இங்கே பஸ்சில் இதயம் முரளி யுவராஜ் வேறு அவளின் பாதுகாவலன் போல மதுவின் பின்னால் நின்று கொண்டு இருக்க அங்கே மாணவ மாணவியர் பாட்டு பாடி தாங்கள் பயணிக்கும் பஸ் இன் தினத்தை கொண்டாடி வந்து கொண்டு இருந்தனர்…
அதன் பயன் எப்போதும் நேர் வழியில் செல்லும் வாகனம் இன்று ஊரை சுற்றி கொண்டு வளைந்து கொண்டு எல்லாம் செல்ல ஒரோ ஆளாய் இறங்க வேண்டியவர்கள் இறங்கியும் இறங்காமலும் பயணம் செய்து கொண்டு இருந்தனர்..
அவர்கள் பயணம் செய்த பஸ் வழக்கமாக வரும் வழியில் வராததால் அங்கே இரு கட்சியினருக்கு இடையே கோஷ்டி பூசல் நடந்து கொண்டு இருக்க அந்த பகுதியில் இருக்கும் கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டு ஒரு மாயான அமைதி நிலவ அங்கே இரு கட்சி உடன்பிறப்புகளும் அடிதடியில் ஈடுபட்டனர்…இவர்களோ பஸ் டே கொண்டாடும் விதத்தில் வழமை போல வரும் வழியில் வாராமல் அங்கே கோஷ்டி பூசல் நடக்கும் பகுதிக்குள் அவர்களின் பேருந்து சென்றது…
பஸ் வேறு ஸ்பீடில் அங்கும் இங்கும் ஆடி கொண்டு வர இது போல பஸ்சில் பயணம் செய்பவர்களும் ஆர்ப்பரித்து வர பஸ் ஏதோ ஒரு ரோடு இடப்படாத சாலைக்குள் சென்ற வாகனம் ஒரு கண்ணாடி சில் ஏறி அந்த பஸ் பஞ்சர் ஆக நிலை தடுமாறி நின்றது… அது மிக சரியாக கோஷ்டி பூசல் நடக்கும் பகுதிக்கு ஒரு 30 மீட்டர் இடைவெளியில் நின்றது..
பஸ் நின்றதும் அனைவரும் நிலைதடுமாறி நிற்பதற்குள் மளமளவென ஒரு கூட்டம் இவர்களை கண்டு ஓடி வர பஸ் டிரைவர் ஏதோ நிலைமை சரி இல்லை என்பதை உணர்ந்த அவர் பஸ்சில் பயணம் செய்யும் அனைவரையும் இறங்கி ஓட சொன்னார்…வண்டியில் பயணம் செய்து கொண்டு இருந்த அனைவரும் வேகமாக இறங்க அங்கும் இங்குமாக ஓடினர்…அதில் பயணம் செய்த யுவராஜ் மற்றும் மதுவும் இறங்கி ஓட ஆளுக்கொரு திசையில் ஓடினர்…மதுவும் ஏதோ சந்துக்குள் ஓடி கொண்டு இருக்கிறாள்….தன் கையில் இருந்த புத்தகத்தை எல்லாம் எறிந்து விட்டு ஓடினாள்…அந்த கூட்டமும் எங்கே பிரச்சனை செய்யலாம் என காத்து இருந்தது போல அவர்களும் கண்ணில் பட்டத்தை எல்லாம் அடித்து நொறுக்கி தங்கள் எதிர்ப்பை காட்டி கொண்டு இருந்தனர்…
யுவராஜும் வேறு வழியில் சென்று தப்பித்து விட்டான்…அவனுக்கு மது ஆவது காதல் ஆவது தப்பித்தால் போதும் என்று தப்பித்து விட்டான்…அந்த கூட்டம் மட்டும் தங்கள் அடிதடியை நிறுத்தாமல் இருந்தனர்…மதுவின் நிலைமையோ மிகவும் மோசம் ஆனது.. ஓட முடியாமல் ஓடி கொண்டு இருந்தாள்..அங்கே அவள் சென்ற பகுதியில் சிறிது கோஷ்டியினர் கூட அங்கே போலீசார் நின்று எல்லோரையும் விரட்டி கொண்டு இருந்தனர்…கையில் லத்தி வைத்து கொண்டு கோஷ்டியினர் மட்டும் அல்லாது சில பொது மக்களும் அடி விழ மதுவோ ஒரு வழியாக ஓடி தப்பித்து ஒரு புதருக்குள் ஒளிந்து விட்டாள்…
பின்னால் வந்து கொண்டு இருந்த விக்ரம் எப்போதும் செல்லும் வழியில் செல்லாமல் வேறு வழியில் செல்வதை பார்த்து குழம்பி கொண்டே செல்ல சிக்னலில் இவன் நின்று வர அதற்குள் அந்த பஸ் பறந்து விட்டது…பின் அவனுக்கு எங்கே சென்றது என்று தெரியவில்லை… எப்படி இருந்தாலும் என்கிட்ட நீ சிக்காம இருக்க முடியாது உன்னால …இப்போவே போறேன் உன் அப்பன் கிட்ட அவரு கிட்ட காட்டுறேன் பொண்ணை வளர்த்தி வெச்சு இருக்க லச்சனத்தை பாரு கேக்க போறேன் என்று அவள் பின்னால் y என குறியை தொட்டு பார்த்து கொண்டே மனதுக்குள் நினைத்து வண்டியை முறுக்க வீட்டிற்கு செலுத்தினான்..
வீட்டிலோ டிவி யில் கோஷ்டி பூசல் என்பதை அறிந்து மாடு வீட்டில் அழகு மயிலும் , கோல்ட்டும் பதறி கொண்டு இருக்க மதி மற்றும் மிதுன் வீட்டிற்கு வந்து விடவே வெங்கி வேறு ஒரு கருத்தரங்கிற்க்கு சென்று இருக்க வீட்டில் உள்ள பெண்கள் மது இன்னும் வரவில்லையே என பதறி கொண்டு இருந்தனர்…அழகு மயிலும், கோல்ட்டும் மாறி மாறி வந்து வாயிலை பார்ப்பதும் போவதுமாக இருக்க செடிக்கு தண்ணீர் ஊற்றி கொண்டு இருந்த வாசுதேவன் என்னவென்று விசாரித்தார்…கோல்ட் மது வரும் சமயம் கழிந்து விட்டது இனியும் அவள் வரவில்லை என கூற வாசுதேவனோ ஒன்று ஆகாது கல்லூரியில் ஏதாவது வேலை இருந்து இருக்கலாம் அவள் பத்திரமாக வந்து விடுவாள் என்று ஆறுதல் கூறி கொண்டு இருக்கும் வேளையில் விக்ரம் தன் பைக்கில் அந்த தெருவில் நுழைய கோல்ட் மற்றும் அழகு மயில் மேலும் பதட்டம் அடைந்தனர்…
ஆசிரியர் இவனே வந்து விட அவளுக்கு இன்னும் வரவில்லையே என….வெங்கி வேறு அழைத்து மக்கள் அனைவரும் வந்து விட்டனரா வெளியே எங்கும் செல்ல வேண்டாம் நான் வர லேட் ஆகும் என கூறி இருக்க அதற்குள் விக்ரம் தன் தந்தையின் அருகில் வந்து பைக்கை நிறுத்தி என்ன விஷயம் என்பது போல பார்த்தான்…
அதற்குள் கோல்ட், ” தம்பி ராசா ஒரு உதவி வேணும் இன்னும் மது வீட்டுக்கு வரல …எங்கே போச்சு னு தெரில.. எப்போவும் இந்த நேரத்துக்கு வந்துடுவா…இன்னும் காணோம் …என் மகன் வேற வெளியூர் போய் இருக்கான்…அதான் கொஞ்சம் உதவி செய்ய முடியுமா “…என தயங்கி கொண்டே விக்ரம் முகத்தை பார்த்து அந்த வயதானவர் கேக்க , அவனோ செய்வேன் என்றோ செய்ய மாட்டேன் என்றோ ஒன்றும் கூறாமல் இருந்தான்..
கோல்ட் மற்றும் அழகுக்கு வேறு யாரிடமும் கேக்க தோன்றவில்லை …இவன் அவளின் ஆசிரியர் வேறு…வெங்கிக்கும் இவன் மீது ஒரு நல்ல அபிப்பாராயம் இருக்க அதான் ஒன்றும் யோசிக்காமல் உதவி கேட்டனர்…
வாசுதேவன் தான் நிலைமையை கையில் எடுத்து, ” அது எல்லாம் அவன் போய் பார்த்துட்டு வருவான் மா நீங்க கவலை படாதீங்க”… என்று கோல்டுக்கு ஆறுதல் அளிக்கும் விதத்தில் மகனிடம் நீ சென்று தான் ஆக வேண்டும் என்று மறைமுகமாக கூற அதை புரிந்து கொண்ட விக்ரம் ஒன்றும் கூறாமல் அழுத்தத்துடன் தன் தந்தையை ஒரு பார்வை பார்த்து விட்டு வண்டியை திருப்பினான்…
அவன் மனம் முழுவதும் அவள் அந்த பேருந்தில் ஏறினாலே எங்கே போய் தொலைந்தாள்..அந்த வண்டி வேறு, வேறு பாதையில் சென்றதே அங்கே தான் அடிதடி நடப்பதாக அப்பா கூறினாரே..என்று மனம் முழுவதும் அவளை பற்றி அவளை தேடுவதை பற்றி நினைத்து கொண்டு இருக்க அதில் அவனுக்கு அவள் மேல் உள்ள கோபத்தை சிறிது நேரத்திற்கு ஒதுக்கி வைத்து அவளை தேட தொடங்கினான்..
ஒரு வழியாக அந்த கோஷ்டி பூசல் நடக்கும் இடத்திற்கு வந்து விட தூரத்தில் அவன் கண்ணிற்கு அவள் ஏறிய பஸ் தென்பட விரைவாக வண்டியை செலுத்தினான்..
அங்கே யாரும் தென்படவில்லை..
அந்த பஸ் மட்டும் அங்கே நிற்க ஏதாவது அசம்பாவிதம் நடந்துவிட்டதோ என யோசித்து கொண்டே வண்டியை செலுத்தினான்..
கோஷ்யினர் மட்டும் அங்கு ஒன்றும் இங்கு ஒன்றுமாக நிற்க இன்னும் கலவரம் ஓய்ந்த பாடு இல்லை…போலீஸ் வந்து சம்பவ இடத்தில் கோஷ்டியினரை கலைத்து விட்டதற்கான விடயங்கள் தெளிவுபட இவளை எங்கே போய் தேடுவது என்று நினைத்து ஒரோ சந்து ரோட்டுக்குள்ளும் சென்றான்…
எங்கேயும் இவள் இருப்பதற்கான அறிகுறி இல்லை…அவன் மனதில் டென்ஷன் இல்லை என சொல்லி விடமுடியாது…ஏனோ ஒரு படபடப்பு மதுவுக்கு ஒன்றும் ஆகி விட கூடாதே என்று…அவன் கைகள் மட்டுமே வண்டியை செலுத்த அவன் கண்களோ நாலா பக்கமும் பறந்து விரிந்து தேடியது…அவள் எங்கேனும் தென்படுகிறாளா என்று தேடினான்..
எங்கேயும் கிடைக்காமல் இருக்க அங்கே ரோட்டில் ஒரு புத்தகம் கீழே விழுந்து கிடக்க அதை எடுத்து பார்த்தவன் அதில் மதுரயாழினி என்று எழுதி இருக்க இங்கே எங்காவது தான் அவள் இருப்பாள் என அவனின் உள்மனம் அறிவிக்க அங்கே ஒரு புதருக்குள் ஒளிந்து இருந்தாள்…
இவனின் பைக் அந்த புதரின் அருகில் வந்து நிற்க அவனின் பைக்கின் உறுமலை வைத்தே அவன் தான் என்பதை உணர்ந்த அவள் மெல்ல புதரில் இருந்து வெளியே வந்தாள்…அவள் முகம் சிறிது பீதியில் இருந்தது அவனை கண்டதும் அவள் ஆசுவாசம் அடைந்தாள்…
அவளும் அவன் முகத்தை பார்த்து முதலில் ஒன்றும் கூறவில்லை… வண்டியை மட்டும் முறுக்கி கொண்டே இருந்தான்…அவளை கண்டு விட்டோம் என்று அவனின் கண்கள் மட்டும் ஒரு நொடி மின்னியது…
அவளோ மனதுக்குள் இனி நான் தான் போயி நிக்கனும் இல்லாட்டி அப்படியே சிலை மாதிரி நிற்பாரு என்று மனதுக்குள் நினைத்து கொண்டே என்று அவன் அருகில் சென்றாள்..
“சார் நல்ல வேலை நீங்க வந்திங்க இல்லாட்டி இந்த கொசு கடியில இந்த புதருக்குளே தூங்கி இருப்பேன் “..என்று கூற அவனோ அவளை பார்த்து முறைத்தான்..
அங்கே அவள் வீட்டில் பதறி கொண்டு இருக்க அவளை தேடி நான் பதறி இங்கே வந்து அரைமணி நேரமாக தேடி அவள் கிடைக்கமாட்டாளா என டென்ஷனில் நான் இருந்தால் இவளுக்கு கொசு கடிச்சது தான் பெரிசா போயிடுச்சா…என நினைத்து அவன் முறைக்க
“என்ன சார் எப்போ பாரு முறைச்சுட்டே இருக்கீங்க”… என்று அவளோ இருக்கும் இடம் மறந்து அவனோடு வம்பு வளக்க நிற்க கடுப்பாகி போனான் விக்ரம்..
அதற்குள் அங்கே இங்கே என நின்று கொண்டு இருந்த கோஷ்டி ஆள்கள் இவர்களை நோக்கி வர ,”ஏறு”… என்றான் எதை பற்றியும் யோசிக்காமல்…
அவளோ அவன் சொல்வதற்கு முன்னே அவன் வண்டியில் ஏறி இருந்தாள்… முதல் முறை தந்தை மற்றும் தமையன் அல்லாது ஒரு ஆணின் பின்புறம் அமர அவனுக்கு ஒன்றும் தோன்றவில்லையா இயந்திர கதியில் வண்டியை செலுத்தினான்…
அவள் வேறு அவனை ஒட்டி அமர்ந்து இருக்க அவளின் தோள் அவனின் தோளில் உரச அவளின் வாசம் அவனை ஏதோ மயக்க இது எல்லாம் எல்லா சாதாரண மனிதனுக்கும் தோன்றும்…ஆனால் இவனுக்கோ எந்த வித சலனமும் இல்லாமல் அவளிடம், “கொஞ்சம் தள்ளி உக்காரு “..என்று கடுமையோடு அவன் கூற மதுவோ ஓ ரொம்பத்தான் என நினைத்து சற்று நீங்கி அமர்ந்தாள்…
அவனை விட்டு நீங்கி அமர்ந்தும் சடன் பிரேக் இடும் போது எல்லாம் அவனை இடிக்க அவனோ வண்டியை ஒட்டி கொண்டே முன் கண்ணாடியில் அவள் முகத்தை பார்த்து,” எதுக்கு இப்போ இடிச்சுட்டே வர தள்ளி உக்காரு “..என்று கத்த,
அவளோ , “இனி தள்ளி உக்கார்ந்தா கீழே தான் உக்காரனும் “..என்று கூற அவனோ மனதுக்குள் இந்த இம்சையை பேசாம விட்டுட்டே வந்து இருக்கலாம் என நினைத்தான்…இவளிடம் பேசி பயன் இல்லை என்பதை உணர்ந்த விக்ரம் வேகத்தை குறைத்தான்..
அதற்குள் இவர்கள் இருவரும் சிறிது தூரம் வந்து இருக்க அவளோ ஒன்றும் யோசிக்காமல் ,”என்ன சார் வண்டி இது …பேசாமல் நடந்தே போயி இருக்கலாம்”…என்று கூற அதை கேட்ட விக்ரம் கண்களில் y சிம்பிள் தெரிய அப்போது வண்டியை நிறுத்தினான்…
வண்டியை நிறுத்தியவன் வண்டி பையில் இருந்து அவள் எழுதிய அட்டையை எடுத்து அவளிடம் காட்ட கிட்டத்தட்ட அவள் முகத்தில் எறிந்தான் என்றே கூற வேண்டும்..இது என்ன என்பது போல மார்பில் கையை கட்டி அவளை அழுத்தத்துடன் பார்த்தான்…
அவளுக்கு இவருக்கு இவ்வளவு சீக்கிரம் தெரிஞ்சுடுச்சா என உள்ளுக்குள் குளிர் எடுத்தாலும் வெளியே அதை காட்டாமல் சாதாரணமாக இருப்பது போல அந்த அட்டையை பார்த்து கொண்டு நின்றாள்…
என் கண்கள் உனை தேடும்…
