கர்ப்பிணிக்குரிய சத்தான உணவுகள்

*\u2747\ud83d\udebaகர்ப்பக் காலத்தில் சாப்பிடவேண்டிய உணவு முறைகள்….!\ud83c\udf10\u26d4*
\u2726 கர்ப்ப காலத்தில் கர்ப்பிணிகள் குழந்தைக்கும் சேர்த்து அதிக அளவு கலோரி எடுத்து கொள்ள வேண்டும். பொதுவாக ஒரு நாளைக்கு 2,200 கலோரி மதிப்புள்ள உணவை உட்கொள்பவர், கர்ப்பிணி தாய்மாராக இருக்கும் பட்சத்தில் கூடுதலாக 300 கலோரி சத்துள்ள உணவு எடுத்துக் கொள்வது அவசியம்.

\u2726 கர்ப்பிணி பெண்கள் நான்கு மாதங்கள் வரை ஒரு நாளைக்கு 6 டம்ளர் பால் அருந்த வேண்டும். இது குழந்தைக்கு தேவையான கால்சியம் இதில் குழந்தைக்கு கிடைத்துவிடும்.

\u2726 கிஸ்மிஸ் பழம் நிறைய சாப்பிட்டால் வாந்தி கட்டுப்படும். மயக்கமாக இருந்தால் குளுக்கோஸ், ஹார்லிக்ஸ் போன்றவை குடிக்கலாம்.

\u2726 தலைவலி, காய்ச்சல், சளி, பல் வலி போன்றவைக்கு மருத்துவரிடம் கேட்காமல் எந்த மாத்திரையும் சாப்பிட வேண்டாம். சூடு தன்மை உள்ள பழங்கள் காய்கள் உணவுகள் அதிகம் சாப்பிட வேண்டாம்.

\u2726 சாப்பிட கூடாத பழங்கள் கொய்யா, பப்பாளி, அன்னாசி, கருப்பு திராட்சை. தினம் சாப்பிட வேண்டிய பழங்கள் ஆப்பிள், பச்சை திராட்சை, மாதுளை, ஆரஞ்சு.

\u2726 இறால், சிக்கன் போன்றவை கூட அதிகம் சூடு நிறைந்தவை. எனவே தவிர்ப்பது நல்லது. சிக்கன் நிறைய தயிர் சேர்த்து செய்து கொஞ்சமாக சாப்பிட்டு கொள்ளலாம்.

\u2726 நெல்லிக்காய் நிறைய வாங்கி சர்க்கரை பாகு காய்ச்சி அதில் நெல்லிக்காயை வேகவைத்து பாகில் ஊறவைத்து தினம் ஒன்று சாப்பிடலாம். பெருங்காயம், பூண்டு சோம்பு சிறிது குறைத்து பயன்படுத்தவும்.

\u2726 புரோக்கோலி மற்றும் ஸ்பினாச் கீரையில் அதிக அயர்ன் இருக்கு. இவை இரண்டையும் அடிக்கடி சமைத்து உண்ணலாம். ஸ்பினாச் சூப் கூட செய்து குடிக்கலாம்\ud83d\udd35\ud83d\udd34

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *