வெண் பளிங்குக் கிளிஞ்சல்கள் இரண்டு;
அதில்
வழுக்கிச் சென்று தலை குப்புறக்
கவிழ்ந்துவிட்டேன்!
அங்கே பார்த்தால் இன்னும் இரண்டு கனிந்த கரு நீல
நாவல் பழ உருளைகள்,
உருண்டுருண்டு எனை விழித்தால்
நான் என்ன செய்திடுவேன்?
தப்பிக்க முடியாமல் சறுக்கி விழுந்தேன்
அந்த வெண்பளிங்குக் கிண்ணத்தில்;
அதில் படுத்துக் கொண்டே அந்த நாவல் பழங்களைப்
பறிக்க முயன்றேன், அதில்
ஒன்று, வழுக்கிச் சென்று
வாய் பிளந்து, இரண்டாகி
உன் செவ்வாயில் ஒட்டிக் கொண்டன.
அது உன் பூவிதழா? நாவற்பழச்
செவ்விதழா தெரியவில்லை?
ஊதிப் பார்த்தபின்தான் தெரிந்தது அது சுட்ட பழம் என்று!
கனிந்த நாவற்பழ இதழ் மூடி,
கரு நீலக் கண்ணின் இமை மூடி,
உன் மடியிலமர்த்தி ஒரெ ஒரு முத்தம் கொடு
என் கருநீலக் கண்ணழகியே!
கவிதையைப் புனைந்தவர் டெய்சி ஜோசப்ராஜ்
நாவல்: இரவில் உதித்த
சூரியன்
