கருணைக்கிழங்கு குழம்பு
தேவையானவை:
*கருணைக்கிழங்கு – கால் கிலோ
*மிளகாய் வற்றல் – 5
*சீரகம் – 3 தேக்கரண்டி
*சிறிய வெங்காயம் – 10
*புளி – சிறிய எலுமிச்சை அளவு
*மஞ்சள் பொடி – அரைத் தேக்கரண்டி
*கறிவேப்பிலை – சிறிது
*எண்ணெய் – 3 மேசைக்கரண்டி
*உப்பு – தேவையான அளவு
செய்முறை:
*கருணைக்கிழங்கினை வேக வைத்து எடுத்து தோலை உரித்துவிட்டு சிறுசிறு துண்டுகளாய் நறுக்கிக் கொள்ளவும்.
*மிளகாய் வற்றல் சீரகம் உரித்த வெங்காயம் ஆகியவற்றை ஒன்றாய் அரைத்துக் கொள்ளவும்.
*புளியை சற்று ஊற வைத்து கரைத்து எடுத்துக் கொள்ளவும். அந்த புளித் தண்ணீரில் அரைத்த மசாலாவினையும் சிறிது மஞ்சத்தூள் மற்றும் தேவையான உப்பு போட்டுக் கரைத்துக் கொள்ளவும்.
*ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி அதில் அவித்த கருணைக்கிழங்குகளைப் போட்டு புளித் தண்ணீரில் கரைத்த மசாலாவினையும் ஊற்றி கொதிக்க விடவும்.
*குழம்பு நன்றாக கொதித்து கெட்டியானவுடன் லேசானத் தீயில் வைத்து எண்ணெய் தெளிந்தவுடன் இறக்கவும்.
