கனவும் கை வரும்…

ஓர் கிராமம் தழுவிய ஊரில் முருகனும் பிரபுவும் தோழர்கள்.. ஒன்றாய் ஆரம்ப பள்ளியில் படித்து நடுநிலையிலும் ஒன்றாகவே இருந்தார்கள்..

இவர்களுக்குள் என்ன ஒத்து போனது என்றால்.. முரடோ முரடு.. யார் பேச்சையும் மதிகாதுக..

அப்பா அம்மாவை மதிக்க மாட்டார்கள் உடன் பிறந்தவர்களை ஒதுக்கி வைப்பார்கள் .. சக பிள்ளைகளிடம் அடி தடி கெட்ட வார்த்தை பேசுவது.. பெண் பிள்ளைகளிடம் தொட்டு தொட்டு பேசி அழவிட்டு அதை இளக்காரமா பார்த்து ரசிப்பார்கள்..

மெய் அக்கறையுள்ள ஆசிரியர்கள் எடுத்து சொன்னாலும் காதில் ஏறல.. கேலி பண்ணி வெறுப்பேத்துவாரகள்..

பள்ளிக்கும் ஒழுங்கா போக மாட்டார்கள்.. சாப்பாடு கட்டி தருவதை எடுத்துட்டு.. மலை பாங்கான இடங்களுக்கு முள் புதர்கள் தோட்டங்கள் குளங்கள் குட்டைகள் என்று அங்கங்கு பிடிச்ச இடத்துக்கு போய் ஒற்றே விளையாட்டு கூச்சல்.. கும்மாளம் ..

அதே வாழ்வு முழுமைக்கும் சந்தோசம் என்றே நினைப்பு.. தறுதலைகள் என்றே இவர்கள் அவரரவர் வீட்டில் ஒத்துக்கப்பட்டார்கள்..

இவர்கள் எதிர்காலம் பற்றி அறியவில்லை..

மிச்ச பிள்ளைகள் அடங்கி இருப்பு பின்னாளின் வசந்ததுக்கு காத்திருப்பு ன்னு தெரில..

முருகனின் அப்பா திடீர் என்று ஓர் நாள் குடிக்கு அடிமை ஆனதால் நுரையீரல் பாதித்து இறந்தும் விட.. வீட்டில் முதன் முறை வறுமையின் சாயை கண்டான்.. அம்மா தான் உழைக்கணும் என்று வர.. வீட்டு வேலைக்கு போய் அவர்கள் கொண்டுவரும் மீத உணவு வகைகள் தான் உயிர் வாழ என்று ஆனது.. பள்ளிக்கு போனாலும் மதிய உணவுக்காக தான் என்றானது வறுமை வறுமை எங்கிலும் வறுமை.. நாளாக நாளாக உடைகளும் கிழிந்து புதிது வாங்க வழியிலாது போனது..

சுடு சோறுக்கு ஆசை வந்தது நாக்கு ஏங்கியது முருகனுக்கு.. பிரபுவும் சின்ன பையன் தானே இரக்கம் லாம் தெரில.. தன்னிடம் இருப்பதை பாதி கொடுப்பான் அவ்ளோதான்..

ஒருமுறை பிரபு வீட்டில் தெண்ட சோறு என்று தாய் ஏதோ ஒரு கோபத்தில் திட்ட..

ரோஷம் பிடிங்கி.. வீடே வேணாம்.. கடுப்பாகி..

முருகனையும் கூப்பிட்டு மலை பகுதிகளில் உள்ள ஓர் குடைவரையினுள் இருவரும் சோர்ந்து அமர்ந்திருந்தனர்…

அப்போது பெரிய உருவத்தில் அதிசயமா வெள்ளெலி ஒன்று ரொம்ப கம்பீரமா அங்கும் இங்கும் ஒய்யாரமா நடந்து கொண்டிருந்தது .. அதோடு நக்கலா ஓர் பார்வை 12 வயது சிறார்களை பார்த்துட்டு எதிரில் உக்கார்ந்துடுச்சு…

பசங்க தொடமுயற்சித்தால் கையில் சிக்கல.. விம்பம் இடம் மாறி கண்கட்டு வித்தை காட்டியது..

ச்சீ போ.. என்று இவர்களும் விட்டுவிட்டு.. கடிக்க மட்டும் செய்யட்டும் .. பிடிச்சி கொன்னு உப்பு மிளகாய் தடவி சுட்டு தின்றுவோம்.. ன்னு காண்டானார்கள்..

ஹாய் குட்டிஸ் உங்க பேர் என்ன? அது பேச..

இவர்கள் பயந்து எடுத்து ஓடி.. காட்டுப்பிள்ளையார் குடியிருக்கும் ஆல மரத்தின் பின்னே ஒளிய…

பேட் பாய்ஸ்.. ன்னு கல கலன்னு சிரிச்சது எலியார்..

அவர்கள் கண்ணில் பயம் பார்த்து..

பிள்ளையார் சாமியை காட்டி.. கிட்டே போய் மண்டியிட்டு கும்பிட்டு…

நான் ஓர் சாகாவரம் பெற்ற ஞானி.. என் பேர் மணிபூரகன்.. பல பல நூறாண்டுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *