கந்தர்வனின் ஏந்திழையே

கந்தர்வனின் ஏந்திழையே

கந்தர்வனின் ஏந்திழையே

கந்தர்வனின் ஏந்திழையே

கந்தர்வனின் ஏந்திழையே

கந்தர்வனின் ஏந்திழையே

கந்தர்வனின் ஏந்திழையே

கந்தர்வனின் ஏந்திழையே

கந்தர்வனின் ஏந்திழையே

கந்தர்வனின் ஏந்திழையே

கந்தர்வனின் ஏந்திழையே

கந்தர்வனின் ஏந்திழையே

கந்தர்வனின் ஏந்திழையே

கந்தர்வனின் ஏந்திழையே

கந்தர்வனின் ஏந்திழையே

கந்தர்வனின் ஏந்திழையே

கந்தர்வனின் ஏந்திழையே

கந்தர்வனின் ஏந்திழையே

1. கந்தர்வனின் ஏந்திழையே

தெரு முனையில் இருக்கும் பிள்ளையார் கோவிலில் எப்பொழுதும் போல பக்தி பாடல் ஒலித்துக்கொண்டிருந்தது…

ஆஃபீஸ் போகும் பொழுது அவருக்கு ஒரு அட்டெண்டன்ஸ் போட்டு விட்டு செல்லும் வழக்கமுடைய நம் நாயகி எப்பொழுதும் போல அன்றும் நின்றிருந்தாள் கோவிலில்…

“பிள்ளையாரப்பா இன்னிக்கு அந்த சிடுமூஞ்சி கிட்ட திட்டு வாங்காம இருக்கணும்… நீ தான் காப்பாத்தணும் அப்படி நீ மட்டும் காப்பாத்திட்ட… உனக்கு நான் சுண்டலும் கொழுக்கட்டையும் செஞ்சு தருவேணாம் ப்ளீஸ்…” என்று அவருக்கு ஐஸ் வைத்து விட்டு விறுவிறுவென்று கிளம்பிச் சென்றாள் தன் பணியிடம் நோக்கி…

 செல்லும்போதே மனதுக்குள் இன்று என்னென்ன நிகழ்வுகள் என்பதை குறிப்பெடுத்துக் கொண்டாள் அங்கே சென்றவுடன் அவன் கேட்கும் கேள்விகளுக்கு படபடவென்று பதில் மொழியா விட்டால் அவனின் தேள்கொடுக்கு நாக்கிலிருந்து தப்பிக்கவே முடியாது… 

அப்பப்பா அவனுடையது நாக்கா… இல்லை ஏ.கே 47 ரக துப்பாக்கியா… என்று பிரித்தறிய முடியாது…

பின்னே வரும் சொற்கள் அப்படி அல்லவா இருக்கின்றது.. மனதுக்குள் புகுந்து துளைத்து ரத்தம் சொட்ட வைத்து விடுவான் அவனின் வார்த்தைகளில்… 

எப்படியோ சென்னை டிராஃபிக்கில் நீந்தி கரை சேர்ந்து விட்டாள்…  அவளின் வீடு இருக்கும் இடமோ சென்னையில் தெற்கு மூலையில்… ஆனால் ஆபீஸ் சென்னையின் மையத்தில்…  நம் நாயகிக்கு பஸ் டிரெயின் என்றால் அலர்ஜி… கூட்ட நெரிசலில் உடம்பை பதம் பார்த்து விடுவார்கள்…  

அவளுக்கு எப்பொழுதும் அவளின் இரு சக்கர வாகனமே தோழி…  எங்கு சென்றாலும் அதன் துணை இல்லாமல் செல்ல மாட்டாள்…  பெட்ரோல் பற்றிய கவலை இல்லை… ஆபீஸுக்கு வரும் போகும் போக்குவரத்து செலவுக்கு பெட்ரோல் பங்க்கில் டேங்க் நிரப்பிவிட்டு பில் கொண்டு ஆபீஸில் கொடுத்தால் மட்டும் போதும்… பணம் அவள் கையில் சேர்ந்துவிடும்… 

இது எல்லோருக்குமான சலுகை கிடையாது… அவளுக்கு மட்டுமே தனி… பின்னே எம்டி இன் செக்கரட்டரி அல்லவா… அதனால் கிடைத்த வெகுமானம்… ஆபீஸில் உள்ளே வாகனம் நுழைத்து இவளுக்கான பார்க்கிங் ஏரியாவில் அவளின் வண்டியை நிறுத்தும்போது பார்த்துவிட்டாள் அந்த முசுடு ஆபீசிற்க்கு இவளுக்கு முன்னே வந்து விட்டதை அவனின் பார்க்கிங் இடத்தில் நிற்கும் அவனின் வாகனம் கண்டு…

பக்கென்று ஆனது அவளுக்கு… “அய்யோ போச்சு போச்சு…  இன்னைக்கு செத்தேன் பேசிப்பேசியே சாவடிச்சிடுவானே…” பயந்துகொண்டே தன் கடிகாரம் பார்க்க… இவள் அடித்து பிடித்து வந்ததில்… பத்து நிமிடம் முன்னதாகவே வந்தது புரிய… 

அப்போ இந்த முசுடு தான் சீக்கிரம் ஆபிஸ் வந்துருக்கு… ச்ச கொஞ்ச நேரத்துல பேஜாராக்கிட்டான்…  டென்ஷன் ஏறினால் சென்னை தமிழ் வாடை கொஞ்சம் அடிக்கும் அவளின் பேச்சில்… 

சென்னை தமிழ் எப்படியோ அப்படியே சிங்கார தமிழும்… கான்வென்ட் இங்கிலீஷும் கூட அத்துப்படி… 

என்னா விஷயமா இருக்கும்… இன்னைக்கு இவ்ளோ சீக்கிரம் துற வந்துட்டாரு… நேத்து எதுவும் சொல்ல கூட இல்லையே… 

புத்தி அது பாட்டுக்கு எங்கெங்கோ மேய்ந்தாலும் வழக்கமான வழக்கமாக உடல் தன் பாட்டில் வந்து லிப்ட் ஏறி ஏழாம் தள எண்ணை அழுத்தி தளம் வந்தவுடன் இறங்கி பயோ மெட்ரிக்கில் ரேகை பதித்து தன் அன்றைய வருகையை பதிவு செய்தாள்… 

எல்லாமே அவசரகதியில் செய்து வேகவேகமாக எம்.டி என்ற பெயர் பலகை பதித்த கதவில் சம்பிரதாயமாக இருமுறை தட்டி விட்டு… மே ஐ கம் இன் சர் என்று ஒலித்துக்கொண்டே உள்ளே நுழைய… 

அந்த பெரிய குஷன் சேரில் அவனின் பிரசன்னத்தை எதிர் பார்த்து வந்தவளுக்கு சற்று நிம்மதி கொடுத்தது அவனின் இல்லாமை… கூடவே வாஷ்ரூமில் இருந்து வரும் தண்ணீரின் சலசலப்பு… 

எம்.டி டேபிளில் ஒய்யாரமாக வீற்றிருந்த மிஸ்டர் விஷ்வரூபன் எம்.பி.ஏ. என்ற பெயர் பலகையை கையில் தூக்கி பார்த்து விட்டு… 

பேர பாரு… இதுக்கு பதிலா ஏகே 47ன்னு வச்சிருக்கலாம்… என்று அதுக்கு ஒரு கொட்டு வைத்தாள்… உரியவனை வைக்க முடியாத ஏக்கத்தில்… 

வாஷ்ரூமின் கதவு திறக்கும் சத்தத்தில் கையில் இருந்ததை பழயபடியே இருந்த இடத்தில் பத்திரமாக வைத்து நிமிர… 

வாஷ்ரூமின் உள்ளிருந்து வந்த உருவத்தை கண்டு கொஞ்சம் அதிர்ச்சியகாவே இருந்தது… 

ஏய் நீ இங்க என்ன பண்ற… என்றாள் அதிர்ச்சியில் குரலுயர்த்தி…

உள்ளிருந்து வந்தவனோ வாட்??? என்றான்…

வன்ட்டான்யா பீட்டரு… 

இதுக்கு விளக்கறதுக்குள்ள… ஹய்யோ… 

வாட் யூ ஆர் டூயிங் ஹியர்… 

ஒஹ்… ஜஸ்ட் கேம் டூ யூஸ் வாஷ்ரூம்… 

என்றான்… 

அப்போ அந்த முசுடு எங்க போச்சு… கீழ கார பாத்தேனே… எதிரில் இருப்பவனுக்கு தமிழ் தெரியாது என்ற தைரியத்தில் இவள் கொஞ்சம் சத்தமாகவே பேச… ஆனால் அவனுக்கு நன்றாகவே தமிழ் தெரியும் என்பது இவளுக்கு தெரியாது போனதால் பரிதாபம் தான்… 

அதற்கும் அவன் வாட் என்று கேட்டு வைக்க… 

இந்த கொசு தொல்லை தாங்க முடில டா சாமி… என்று கண்ணை மூடி நெற்றியில் கை வைத்து அவள் அபிநயிக்க…

எதிரில் இருந்தவனுக்கு மிக ரசமான நாடகம் இது… இவளுக்கு எதுவுமே சாதாரணமாக சொல்ல வராது… அவளின் ஒவ்வொரு வாக்கியத்திற்கும் அவளின் அபிநயங்கள் எதிரில் இருப்பவர்களை நான் இனி உங்கள் விசிறி என்று சொல்ல வைத்துவிடும்… 

இங்கு வந்து ஒரு மாதத்தில் இவளின் லூட்டிகளுக்கு விசிறி ஆகி விட்டான் இவனும்…அவளுக்கும் ஆவானோ…  இந்த இவன் என்பவன் நிர்பய்… 

விஷ்வாவின் வலது கை… அவனின் பிரதிபிம்பம் என்றும் கூட சொல்லலாம்… இன்னும் சுருங்க சொல்லவேண்டுமென்றால் விஷ்வாவின் அந்தரங்க காரியதரிசி… 

நிர்பய் தாண்டி தான் விஷ்வாவை யாரானாலும் அணுக முடியும்… இதுவரை இந்த இருவருக்குள் எந்த ஒரு பாகுபாடும் காட்டியதில்லை விஷ்வா… கம்பனிக்குள் மட்டுமே பாஸ் செக்ரேட்டரி என்று மற்றவர்களுக்காக காட்டப்படும் பிம்பம்…

விஷ்வாவின் கேடயம் அவன்… விஷ்வா சொல் என்றால் நிர்பய் செயல் ஆவான்… 

மொத்தத்தில் இருவரும் பார்ட்னர் இன் க்ரைம்… என்பது போல தான்… 

இவனின் தோற்றம் கொஞ்சம் வட மாநில சாயல் உடையதாக இருக்கும்… அதற்கு தோதாக அவனின் பெயரும் அமைந்து விட்டதால் அப்படியே விட்டுவிட்டான்… இந்த ஏற்பாடு விஷ்வாவிற்கும் தேவையாக இருந்தது சில காரியங்களுக்காக… 

இரண்டும் இரும்பு மனங்கள்… அதில் ஒன்று கொஞ்சமாக நாயகியிடம் மட்டும் இளக்கம் கொடுக்க துவங்கியுள்ளது… 

அவள் உள் வந்ததிலிருந்து அவளின் செய்கைகளை பார்த்துக்கொண்டிருந்த விஷ்வா அவளின் பின் வந்து நின்றான்… 

தன்னிடம் பேசிக்கொண்டிருந்தவன் தனக்கு பின்னால் பார்வை பதிக்க… என் கிட்ட பேசிக்கிட்டு இருக்கும்போது இந்த நெட்ட கொக்கு என்ன பின்னாடி பாக்குது… திரும்பி பார்க்க…

நா உலர்ந்து போனது அவளுக்கு… அவள் சொன்ன ஏகே 47 ரெடியாக இருந்தது அவளை நோக்கி சுடுவதற்கு…

பார்வையில் ஒருவரை மிரட்ட முடியுமா… இதோ செய்கிறானே… மிஸ்.தர்ஷினி இது தான் நீங்க ஆபீஸ்ல பிஹேவ் பண்ற லட்சணமா… 

அடேய் நெட்ட கொக்கு… இவன் இங்க தான் இருக்கான்னு கொஞ்சம் கண்ண காட்ட கூடாது… எப்படி கோர்த்து விட்டு வேடிக்கை பாக்குது பாரு எருமை… சாதா எருமை இல்ல டா நீ… டெல்லி எருமை… 

அய்யோ அய்யோ இன்னும் பாத்துக்கிட்டே இருக்கானே… கண்ணாலேயே கொலை பண்றது எப்படின்னு இவன் கிட்ட வந்து ட்ரெய்னிங் எடுக்கலாம் போல… 

ஸாரி சர்… என்று பம்மிக்கொண்டு பதில் வந்தது அந்த தர்ஷினியாக பட்டவளிடமிருந்து… 

அவனின் பின்னால் வந்தவரை பார்த்து கூம்பி இருந்த முகம் பளிச்சென்று ஆகியது தர்ஷிக்கு… அவளின் பழைய எம்.டி… தந்தையின் நண்பர்… சிறு வயதிலிருந்து பழகிய பழக்கத்தில்… 

விசு மாமா என்று கூவியே அழைத்து விட்டு பின் முன்னால் நின்ற கோபமுனியை பார்த்து கண்ணை இருக்க மூடி நாக்கை கடித்துக்கொண்டாள்…

எப்போ பாரு இவன் கிட்ட சிக்குறதே வேலையா போச்சு… 

அவனுக்கு அவனின் கேபினுக்குள் இப்படி கத்தி கூப்பிட்டு உறவுமுறை சொல்லி பின்னி பிணைந்து பிராண்டி பழகுவதெல்லாம் சுத்தமாக ஆகாத ஒன்று… 

இவளின் ஒவ்வொரு சேட்டைக்கும் நிர்பய் கண்ண கதுப்புக்குள் சிரிப்பை அடக்கி ரசித்துக்கொண்டிருக்க… 

விஷ்வாவிற்கு எப்பொழுதுமே தர்ஷியின் செயல்கள் எரிச்சல் மூட்டுபவை தான்… 

விசு மாமாவோ… ஹாய் டா பாப்பு என்று அன்புடன் அழைத்த விதத்தில் அவருக்கும் ஒரு கண்டனப்பார்வை கோபமுனி வீச… 

அவரின் பணி முடிவடைந்ததால் விடை பெறும் நோக்கில் ஓகே மிஸ்டர்.விஷ்வரூபன் இன்னும் ஏதாவது டவுட்ஸ் இருந்தா சொல்லுங்க… நான் வந்து கிளியர் பண்ணி கொடுக்கிறேன்… அவர் கிளம்பி வெளி செல்லும் பொழுதே அவளுக்கு கண் காட்டி விட்டு சென்றார்… 

நான் வெளிய வெய்ட் பண்றேன்… நீ வேலை முடிச்சுட்டு வா என்று… 

அவருக்கு இவளும் சத்தமில்லாமல் கண்களாலேயே பதில் அளித்திருந்தால் அவள் நம் தர்ஷியாக முடியாதே… 

முட்டை கண்ணை விரித்து… புருவம் மேலேற… ஓகே என சத்தம் வராமல் வாயைசத்தாலும் கையின் பெருவிரலில் தம்ப்ஸ் அப் காட்டி விடை கொடுக்க… 

கூறிய பார்வை ஒன்று தன்னை துளைப்பதை உணர்ந்த நொடி…  

சர் என்று மிடறு விழுங்கி கொண்டு அவனை விளிக்க… இனியாவது வந்து வேலை பாக்குறீங்களா… 

இன்னைக்கு என்ன அப்பாய்ன்ட்மெண்ட்ஸ் இருக்கு… என்று கேட்க… 

இன்னைக்கு ஓ.எம்.ஆர் கண்ஸ்டரக்ஷன் சைட் விசிட் சர்… அப்புறம் மதியம் பாம்பேல இருக்க அந்த எலக்ட்ரிகல் கபோனேன்ட்ஸ் கம்பெனி ஜி. எம் கூட ஒரு மீட்டிங் இருக்கு சர்… நம்ம ஆபீஸ்ல இன்னைக்கு ஷெட்யூல் அவ்ளோ தான் சர்… என்று முடிக்க… 

அந்த ஹௌசிங் போர்ட் டெண்டர் என்ன ஆச்சு… 

இன்னும் அது பத்தி எந்த ஒரு விஷயமும் வரல சர்…

அவளை ஒரு பார்வை பார்த்தவன்… நிர்பய் என்றான்…

அது இன்னும் ஒன் வீக்ல ஓபன் அகிடும் பாஸ்… நமக்கு போட்டியா இருக்கிறது ரெண்டு கம்பெனி தான்… ஒன்னு எஸ்கே க்ரூப்ஸ்… இன்னொன்னு மஹாஜன் ஹோம்ஸ்… 

ரெண்டு பேரும் நம்ம விட கம்மியா கோட் பண்ணல பாஸ்… அதனால நமக்கு தான் அந்த டெண்டர்… நோ ஒர்ரீஸ் பாஸ் என்றான் நிர்பய்…

தர்ஷி வாயில் கை வைத்து அவனை விடாமல் பார்த்தாள்… டேய்… என்னடா இது… என்று…

அதை எப்படி நம்ம கம்பெனிக்கு ஃபேவரா கொண்டு வந்தோம்னு மேடம் கிட்ட சொல்லு நிர்பய்… 

ரெண்டு கம்பனியோட பெர்சனல் செக்ரெட்டரியும் அவங்களுக்கு தேவையானது கொடுத்து கரெக்ட் பண்ணோம் பாஸ்… 

அப்புறம் என்ன… எல்லாமே வெற்றி தான்… அத்துடன் முடித்துக்கொண்டான் நிர்பய்… 

இப்பொழுது தர்ஷிக்கான அடுத்த கேள்வியாக வீ.ஆர். என்டெர்ப்ரைசஸ்க்கு லெட்டர் பார்வேர்ட் பண்ணிட்டியா… 

ரெடி பண்ணிட்டேன் சர்… இன்னைக்கு பார்வேர்ட் பண்ணிடுவேன்… 

இடியட்… நேத்து சொன்ன வேலை இன்னும் பெண்டிங்ல வச்சுருக்கியா… 

லேசி கூஸ்… உன்னை மாதிரி ஒரு ஆள் இருந்தா போதும்… கம்பனிய இழுத்து மூடிட்டு போக வேண்டியது தான்… 

அது தான் உன் மாமா இந்த கம்பனி என் கிட்ட வித்துட்டு போய்ட்டார் போல… 

இதுல இந்த மாதிரி நான்சென்ஸ் எல்லாம் என் தலையில கட்டிட்டு போயிட்டாரு… அவருக்காக தான் பாக்குறேன்… இல்லேன்னா கம்பனி டேக் ஓவர் பண்ண அன்னைக்கே உன்னை மாதிரி இடியட்ஸ் எல்லாரையும் தூக்கி இருப்பேன்…

கெட் லாஸ்ட் அண்ட் அவுட் ஆப் மை சயிட் யூ ஒரத்லெஸ் ஸ்டுபிட்… என்று கண்ட மேனிக்கு சுட்டு கொளுத்தி விட்டான் அவனின் வார்த்தைகளில்…

இன்னும் நின்னு இங்க என்ன வேடிக்கை பார்த்துட்டு இருக்க… போய் உன் வேலையை முடி இடியட்…

தப்பித்தோம் பிழைத்தோம் என்று வெளியில் ஓடி வந்து விட்டாள் தர்ஷி… வெளிவரும் போது எம்.டியின் பின்னால் ஒரு ரோபோ போல் நிற்கும் நிர்பய்யை ஒரு பார்வை பார்த்து விட்டே வந்தாள்… 

தன் சீட்டிற்கு வந்து அமர்ந்து தண்ணீரை மடக் மடக் என்று குடித்து கொஞ்சம் ஆசுவாசம் ஆகி கொண்டாள்…

யப்பா… என்னா திட்டு திட்றான்… நல்ல வேளை அந்த நெட்ட கொக்குக்கு தமிழ் தெரியாது… தெரிஞ்சிருந்தது போச்சு போச்சு மானம் போயிந்தி… 

ஆனாலும் இந்த கோவக்கா நடுநடுல மானே தேனே போல ஸ்டுபிட் இடியட் லேசி கூஸ்ன்னு எல்லாம் திட்டுச்சே… இது எல்லாம் கேட்டவனுக்கு நம்மள திட்றான்னு புரியாதா என்ன…

ச்ச… எவன் யா இந்த வார்த்தை எல்லாம் திட்டறதுக்கு மட்டும் தான் யூஸ் பண்ணனும்னு சொன்னது… வெரி பேட்…

எங்க இந்த மாமாவ காணோம்… என எட்டி பார்க்க ஜி. எம் ரூமில் இருந்தார்… 

ஹ்ம்ம்… அவருக்கு பழைய பாசம்… எல்லாரையும் விசாரிச்சுட்டு வரட்டும்…

அதுக்குள்ள இந்த கோவக்கா சொன்ன வேலைய முடிப்போம்… இல்லேன்னா அதுக்கும் நம்ம வச்சு செய்வான்… 

இவள் இங்கு வேலை முடிக்கும் முன்பே விஷ்வாவும் நிர்பய்யும் ரூமில் இருந்து வெளி வருவதை பார்த்து ஓடி போய் அவர்களுடன் சேர்ந்து கொள்ள… 

நின்று அவளை முறைத்தான் விஷ்வா… 

இப்போ என்ன ஆச்சு… இப்படி பஸ்ப்ப பார்வை பாக்குறான்… 

முடிச்சிட்டியா என கேட்க… முகத்தை தொங்க போட்டுக்கொண்டாள்… 

போய் முடி… என்று கிளம்பி செல்ல

அப்போ சைட் விசிட்… மதியம் ஜி. எம் மீட்டிங் என்று கேட்க… 

அது எப்படி முடிக்கணும்னு எனக்கு தெரியும்… உனக்கு சொன்ன வேலையை முடி… இடியட்… என்று நிர்பய்யுடன் கிளம்பி சென்று விட்டான்…  

ஹப்பாடா… இனி நிம்மதியா இருக்கலாம்… சரியான பேஜார் புடிச்சவன்… என்று வசை பாடிக்கொண்டே தன் வேலையில் மூழ்கி போனவளை பாப்பு என்ற இனிய குரல் தான் வெளிக்கொணர்ந்து… 

மாமா… வந்துட்டீங்களா… எல்லாரையும் பார்த்தாச்சா… பேசியாச்சா… என்ன சொல்றாங்க புது எம்.டி பத்தி… 

இங்க எதுவும் பேச வேணாம் பாப்பு… வா நாம வெளிய போவோம்… நிம்மதியா ஒரு கப் காபியோட பேசுவோம்… 

கண்டிப்பா… வாங்க போவோம்… 

பக்கத்தில் இருக்கும் ஒரு சின்ன ரெஸ்டாரண்டில்… இரண்டு கப் காபிக்கு ஆர்டர் கொடுத்துவிட்டு வந்தவுடன் பேச்சை ஆரம்பித்தார் விசு மாமா என்கிற விஸ்வநாதன்… 

என்னடா ரொம்ப கஷ்டமா இருக்கா… என்று வாஞ்சையுடன் கேட்க.. அதெல்லாம் இல்ல மாமா… ஆனா சரியான முசுடு… நீங்க ஏன் மாமா போயும் போயும் இந்த ஆள் கிட்ட நம்ம

கம்பெனிய கொடுத்தீங்க… வேற நல்ல ஆளா பார்த்து கொடுத்துருக்கலாமே… 

என்னோட பையன் கிட்ட கொடுக்காம நான் வேற யார் கிட்ட மா கொடுக்க முடியும்???

அவர் சொன்ன பதிலில் குடித்துக்கொண்டிருந்த காபி நாசியில் ஏறி இருமல் வந்தது அவளுக்கு…

என்ன??? பையனா…

 

Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *