குளிரே ! குளிரே . கொல்லாதே
அத்தியாயம்.2
நல்லா பாத்தியா? நீ பார்த்தது போட்டோவில் உள்ள இந்த பொண்ணைதானா? என்றான் விக்னேஷ்.
செத்துப் போன எங்க தாத்தா மேல சத்தியமா பாஸ் என்ற அருணின் முகத்தில் வேர்வை துளிகள் மலர துவங்கியிருந்தன.
செத்துப் போன மாயா பேயா வந்தா வெள்ளை சேவையில் அல்லவா வரணும்? இதென்ன வழக்கத்துக்கு மாறாசிகப்பு சேலை?
வெள்ளை காஸ்ட்யூம் பிடிக்கலையோ என்னமோ? எந்த கலர் சேலையில் வந்தா என்ன? பேய் பேய் தானே?
சரி வண்டிய எடு. கிளம்பலாம். சூரியன் உதிக்க ஆரம்பிச்சு பனிவிழகுது. ஹேட்லைட்டை ஆப் பண்ணு. அருண் வண்டியில் ஏறி ஹேட்லைட்டை அணைத்து விட்டு வண்டியை கிளப்பினான். சற்று தூரம் வந்ததும் முன் கண்ணாடியில் பார்த்த போது பின்புற பனி ஒரு பெண் உருவம் கொண்டு இடுப்பில் கைவைத்தபடி நின்றது.
மிஸ்ட் என்றான் விக்னேஷ்.
இது தற்செயல்னு சொன்னா செத்துப் போன எங்காத்தா கூட நம்பாது என்றான் அருண்.
பலமாக வீசிய காற்றில் அந்த பெண் உருவம் கலைந்து காற்றில் மறைந்தது.
இதை என்னன்னு சொல்ல போறீங்க? என்றான் அருண்.
நான் எதுவுமே சொல்ல போறதில்லை என்ற விக்னேஷ் அமைதியானான்.
இப்படி குளிரும்னு தெரிஞ்சிருந்தா ஸ்வெட்ட ரோ ரெய்ன்கோட்டோ கொண்டு வந்திருப்பேன்.
கழுகுமலையில் நடக்கிற அத்தனை மர்டரும் குளிர் காலத்துலதான். நடக்குது. அதனால தான் நம்ம இந்த டைம்ல அனுப்பியிருக்காரு கமிசனர். ஊருக்குள்ள போனதும் நீ சொன்ன எல்லாத்தையும் வாங்கிடுவோம். டோண்ட் ஓர்ரி.
அவ ருமட்டும் குளிருக்கு இதமா பொண்டாட்டிய கட்டி பிடிச்சு படுத்துக்கு வாரு .மொட்டப் பசங்க நாம மட்டும் கைல பிடிச்சுட்டு சுத்தனுமா? நான் கேஸ் கட்டை சொன்னேன்.
வெளியே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த விக்னேஷ் அந்த மாற்றத்தை கவனித்தான். அதுவரை சாலையோர மரங்களும் புதர்களும் பச்சை நிறமாக காட்சியளித்தது மாறி மெல்லிய சிவப்பு வண்ணத்தில் காண கிடைத்தன. அந்த மெல்லிய வண்ணமும் கொஞ்சம் கொஞ்சமாக அடர் சிகப்பு வண்ணத்திற்கு மாறுவதை கவனித்தான்.
விக்னேஷிற்கு முன்பாகவே அதை கவனிக்க துவங்கியிருந்த அருண் கவனீச்சீங்களா பாஸ்? என்றான்.
பாத்துட்டுத்தான் இருக்கேன் என்றான் விக்னேஷ்.
இதுக்கு எதாவது விளக்கம் இருக்கா?
அது கதை முடியும் போது தான் தெரியும். இப்பவே கேட்டா நான் என்னன்னு சொல்லுவேன்.
கார் சற்று தூரம் சென்றதும் பழையபடி பச்சை நிறத்தை மரங்கள் அணிந்து கொள்ள துவங்கியிருந்தன.
கழுகுமலை 5 கிலோ மீட்டர் என்ற போர்டு கண்ணில் பட்டதும் அருண் உற்சாகமானான்.
அப்பாடா. ஊர் நெருங்கிருச்சு
சாலையின் வளைவில் கார் திரும்பிய போது அந்த மூவர் காரை நெருங்கி மறித்தனர். சாலையின் நடுவே திடீரென முளைத்த அந்த மூவரை பார்த்து காரை நிறுத்தினான் அருண்.
தொந்தரவுக்கு மன்னிக்கவும் தோழர். நம் தோழர் ஒருத்தரை கழுகுமலையில் டிராப் பண்ணனும். கொஞ்சம் உதவுங்கள் தோழர் என்றான் மூவரில் ஒருவன்.
வரச் சொல்லுங்க தோழர் என்றான் அருண்.
வாங்க தோழர் என்றதும் அவர்களில் ஒருவன் முன்னால் வந்தான்.
நான் தமிழ்செல்வன். பசுமை உலகம் என்ற இயக்கத்தின் தலைவர் . ஸ்பெர்லைட்டை மூடுவது தான் எங்கள் இயக்கத்தின் லட்சியம் என்றபடி அருணின் கைகளை குலுக்கினான்.
பின்னால ஏறுங்க என்றான் அருண்.
நான் ஏறுவதில் உங்க நண்பருக்கு விருப்பமில்லை போல் தெரிகிறதே? என்றான் தமிழ்செல்வன்.
அப்படில்லாம் எதுவுமில்லை. ஏறுங்க. என்றான் விக்னேஷ்.
பின் சீட்டில் ஏறி உட்கார்ந்தவன் தன் தோழர்களிடம் விடை பெற்று கொண்டான்.
கார் நகர தொடங்கியது.
மேகமலை வழியாகவா வந்தீங்க ?
ஆமாம்
அப்ப மாயாவ பார்த்திருப்பீங்களே? தமிழ்செல்வனின் திடிர் கேள்வியில் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டனர்.
