கண்ணம்மா கனவில்லையா
ஏன்.. மிரண்டு விழித்து கேட்க…
வண்டி பார்த்து வாங்கிட்டு வருவேன்…கலக்ஷன்க்கு போணும்…அதான்…
சீக்கிரம் வா…பயமா இருக்கும்…டிவி கூட இல்ல…சொல்ல..
சசிக்கே அவள் மேல் இரக்கம் வந்தது…வேலை முடிஞ்சதும் ஓடி வந்துடுவேன் அபி…
கிளம்ப..இரு திருநீறு வச்சிக்க…அவ்ளே கொண்டு வந்து வைத்தும் விட அபி ஹாப்பி…
சசி…இப்ப..எதுக்கு…சலித்து…திரும்ப
ஒரு எக்கு எக்கி…லேசாய் மயிலிரறகால் வருடிய மாதிரி…கன்னத்து முத்தமொன்று…
சசியின் கண்ணம்மாவிடமிருந்து…..வாக்கு தவறவில்லை…
சசியின் வறண்ட…மனதுக்கு முதல் சாரல்…
ஜாதி மான் என் அபி..சொன்ன சொன்ன மாதிரி சரியா நிக்குறா.. eeee
முத்தத்திற்கு..
இவ்ளோ தான் சசியால் கமெண்ட் கொடுக்க முடிஞ்சுது…eeee
வானத்தில் பறக்கும் உணர்வு பனிக்கட்டி தொட்ட உணர்வு..பூ மோதி புரட்டிய உணர்வு ..அவனால் கவிதையாய் கூட சொல்லமுடில…
முத்தம் கொடுத்து ரொம்ப சந்தோசம் தான் அவனுக்கு..
ஆனா பத்தவே இல்லை…அவன் என்ன செய்வான்…
முத்தத்திற்கு மாற்றாக பல்லால கூட கடிச்சிருக்கலாம்..உறைச்சிருக்கும்…நினைத்துக்கொண்டான்…
அப்ப குட்டி பிள்ளைகளுக்கு இதை கொடுத்து ஏமாத்துராங்க…
அதுகளுக்கும் பத்தாதே…eeee
மொத்த கன்னத்து முத்தத்தையே சந்தேகத்தில் வைத்தான் சசி…ஹாஹா…
இந்த உப்பு சப்பில்லாத முத்தத்துக்கு படிக்கிறேன் ன்னு சொல்லி ஏமார்ந்துட்டேனே….!!!
வடிவேல் மாறி புலம்பிக்கொண்டான்…
படிக்கிறது எவ்ளோ கஷ்டம்…அதும் கணக்கு ..என்னவோ அன்றாட வாழ்க்கையில கூட்டல் பெருக்கல் கழித்தல் வகுத்தல் தான் வருது…
ஆனா இவனா ஒரு பார்முலா கொடுத்து இங்க அங்க மாதி போட்டு a க்கும் b க்கும் மதிப்பு கண்டு பிடிக்க சொல்லி…இத்தனை அட்டெம்ப்ட் எழுத வச்சி என் மதிப்பை கெடுத்துட்டாங்க…
நான்..எங்க போவேன் என்ன செய்வேன்…மண்டபத்தில் தனியாக புலம்பும் தருமி மாதிரி ரோட்டில் நடக்க நடக்க சசி ..புலம்போ புலம்பு ன்னு புலம்பல்…
படிக்கணுமா?…ஐயோ கடவுளே…!!! மருகினான்… eeee
பட்டறையில் கை பாட்டுக்கு வேலை செய்ய…
அபி ஏன் வேலைக்கு போகணும் மூட்ட தூக்கியாவது அவள நான் நல்லா வசிப்பேன்…என் அபி கிட்ட வேலை பார்க்கணும் மே தவிர அபி யார்கிட்டயும் வேலை பார்க்கக்கூடாது…உறுதி கொண்டான்…
6 மணி ஆக..ட்ரீட் தரச்சொல்லி தன்னை சுற்றிய சகாஸ் யை எப்படி சொல்லி சமாளிப்பது தெரியவில்லை…
காசு இல்லை…உண்மை அதுதான்.. வீட்டு பொருள்கள்.. எங்கு போனாலும் வந்தாலும் காசு…ஸ்டீல் கடைக்கு தரணும்…இப்ப சங்கர் காலெக்ஷன் போய்ட்டு வந்த பின் வண்டி வாங்கனும்…அதுக்கு எவ்ளோ ஆகுதோ?
ஒரே பொறுப்பு…பொறுப்பு..முடில..மூச்சிவங்கியது…
அவங்க மேல கை போட்டு சொல்ல நினைத்தவன் அபியின் திட்டு நியாபகம் வர சாதாவாய்…9மணிக்கு மேல வரேன் காசு தேட தான் போறேன்…
சாக்கு சொல்லிட்டு வந்துட்டான்…
ஒரு பிரின்ட் ..ஒரு ஆயிரம் இருந்தா குடு சசி ரெண்டு நாள் ல தரேன்..என் ஆளோட அவுட்டிங் டா….கேட்க…
முன்னாடின்னா காதல் வாழ்க சொல்லி எடுத்துக்கொடுத்து உற்சாக படுத்தியிருப்பான்…
இப்ப அவன் காதலே தடுமாறிட்டு நிக்குது பொருளாதாரம் இல்லாமல்..இதுல யார்த வளக்க….சோகம் வந்தது…
சுத்தமா இல்ல டா ..ட்ராயர் கூட பாரு ..சொல்ல..
அதுதான் அபிகிட்ட இருக்கே பணம்லாம்….eeee
இருக்கட்டும்டா…போய் விட்டான்..
ரஞ்சித் ஆச்சர்யப்பட்டு ..என்ன சசி ரெண்டே நாளுல ஆளே அப்படியே திருப்பி போட்ட மாதிரி ஆகிட்ட… பரவால்ல தங்கச்சி நல்லா ட்ரைனிங் தராங்க….போல..சிரிக்க…டில்லி சேர்ந்து கொள்ள…
சசி முகம் வெட்கத்தில் சிவக்க…
ரொம்ப சின்ன பையன்….சசி
பட்டறை களை கட்டியது..
என்ன சசி உறுபடிலாம் செய்ற அதுவும் செம்ம ஸ்டைலா …திரும்ப ரஞ்சித் இவன் செய்து கொண்டிருந்த டேபிள் பார்த்து கேட்க…
அதை ஆசையுடன் தடவி…..என் அபிக்கு செய்றேன்…. சொன்னவன்…
உழைக்க ஆசைப்பட்டு…
அடுத்த வாரம் வேலை கிடைக்கணும் னா என்ன செய்யலாம் ரஞ்சித்…நீ சொன்னமாறி புதுசா ஏதாவது செய்யணும்…என்ன செய்யலாம்?
ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் கேட் ..மாடி கைப்பிடி…ஷோ கிரில் செய்யலாம் சசி..நம்ம கிட்ட மெசின்ஸ் இருக்கு…இரும்புக்கு பதில் அது….இப்ப அதுதான் வீடுகளுக்கு பாஷன் கூட..முன்னாடியே சொன்னப்ப..உள்ளதே பாக்க முடில ன்னு தட்டி கழிச்சிட்ட.. இப்ப பண்ணலாம்…சசி…
செய்யலாம் ரஞ்சித்…இதுக்கு வேற கடை பார்க்கணும் ல..இன்னைக்கே பஜார்ல விசாரிச்சுட்டு வரேன்…
சசி கடைக்கு நேம் போர்டு மாத்தனும்…ss உம் செய்றோம் ன்னு தெரியரத்துக்கு…
ஓ..இத்தனை நாள் குப்பையா கடையை போட்டாச்சு இனி புதுசா ஒதுங்க வைக்கணும்…
சசி யோசிக்க..
என்ன ..ரஞ்சித் கேட்க…
எல்லாத்துக்கும் காசு வேணுமே?…வேறொன்னும் இல்லை..பார்க்கிறேன் …
சங்கர் கணிசமான தொகையோடு வர….பாய்ஸ் க்கு சம்பள பணம் கொடுத்துவிட்டு…
கடையை பூட்டி ..கணக்கு நோட்டுக்களை ஒரு பையில்
அடைத்துக் கொண்டு…..
வண்டியை பற்றி நகத்தில் விபரம் வச்சிருக்கும் மெக்கானிக் சகா வை வரச்சொல்லி ..வீட்டுக்கு வெளியிலேயே நின்று அபியிடம் பையை கொடுத்துவிட்டு காசு கேட்க..
வீட்டுக்குள்ள வா தரேன்…அவள் முறைத்துக்கொண்டு செல்ல…
ஐய இவ முகத்தை கழுவி விபூதி வை சொல்வாளே என்று..நொந்து கொண்டு சுற்றிக்கொண்டு போய் கை கால் கழுவி..வீட்டுக்குள் போய் பவுடர் போட்டு..தலைவாரி…
சாமியே சரணம் அய்யப்பா….என் அபி கொடுமையிலிருந்து என்ன காப்பாத்துங்க..முடில..என்று சரணடைந்து….eeee
அதும் அடிக்கடி முகம் கழுவச்சொல்லி…என் கலரே போச்சு….eeee
அபியிடம்…பணம் கேட்க…
என்ன சசி இங்க இருக்க உன்ன வெளில தேடுறேன்..வாசலில் வச்சி பணம் வாங்க கூடாது உள்ள வா ன்னு கூப்பிட்டேன்…
பார்த்தா இங்க இருக்க…என்ன பார்க்க காலேஜ் வாசலில் நிக்கும் போது இவ்ளோ மேக்கப் ல வருவ…இப்ப யாருக்கு இவ்ளோ சிங்காரம்?
சுள்ளுன்னு விழ….
அபி சும்மா பார்த்தாலே முறைக்கிறா ன்னு நெனச்சிட்டேன் போல….eeee
சசி அசடு வழிய….
ஆளப்பாரு… இன்னொன்னு கேக்குதாக்கும்….. அபி கண்ட மேனிக்கு சாட…
பணத்தை குடேன்…நல்ல பிள்ளையாய் வாங்கியவன்….கேட்டை பூட்ட வந்தவளிடம்….
ஒன்னுக்கே ஒன்னும் முடிலயாம்…இதுல இன்னொன்னா..போடி ..ஒல்லிக்குச்சி உடம்புக்காரி…
காதில் இவளுக்கு மட்டும் கேட்கும் வண்ணம் அவளுக்கு பிடிக்காத பட்ட பேர் சொல்லி வெறுப்பேத்தி ஓடிவிட்டான்…
வா வா…நைட்டு இருக்கு உனக்கு….முகம் கோபத்தில் சிவக்க அபி..காளியாய் நின்றாள்…
வந்தவனுக்கு….தலையணை யில் அடிகள் நிறைய கிடைத்தது…ஏகப்பட்ட திட்டுக்கள்….
வாவ்..செம தாலாட்டு சசிக்கு….eeeee
உங்க செல்வம் கல்யாணத்துக்கு வந்திருந்தப்ப எவ்ளோ சொன்னேன்…வேணாம்..உன் லவ்லாம் சரிப்பட்டு வராது ன்னு..ஒரே பேயாட்டம் ஆடிக்கிட்டு இப்ப ஒல்லிக்குச்சி சொல்ற போடா..கடைசியில் கண்ணில் கண்ணீர் வழிய சண்டையை நிறுத்தியவளை..
அவள் ரகளையில்
சும்மா கண் மூடி கிடந்தவன்…..எழுந்து உக்கார்ந்து….
நான் சும்மா தானே கூப்பிட்டேன்…இதுக்கெல்லாம் கண்ணீர் உடுர…எவ்ளோ தைரியமான பொண்ணு ன்னு நெனச்சிருக்கேன் ..இப்டிலாம் அழுது இமேஜ் டேமேஜ் பண்ணிக்கிற….ஆற்றியவன்…
வரம் கொடுப்பவன் போல கை வைத்து ..
நீ இன்றிலிருந்து குண்டம்மா என்றே அழைக்கப்படுவாய்… அபிராமி…eeeee
என்று தூய தமிழ் பேச….
கிண்டல் பண்ற..கெட்ட நாயீ… போடா எருமை பன்னி.. மலைமாடு கணக்க திமு திமு ன்னு வளர்ந்துட்டு.. வாயா அடிக்கிற..இன்னும் தலையணை அடி…
இந்த பேருக்கு அந்த பேர் எவ்ளோவோ பரவாயில்ல…வாய் கொழுப்பப்பாரு…திமிர்..உடம்பெல்லாம் திமிர்…கருவிக்கொண்டாள்…
ஒரே ஜாலியாய் அவளிடம் மொத்து பெற்று சுகமாய் இருந்தவன்..
அவளின் பழி வாங்கும் அடுத்த வார்த்தையை கேட்டு கதி கலங்கி விட்டான்…eeee
என் அபி இவ்ளோ இரக்கம் இல்லாதவளா??..என்று..
வா படிக்கலாம் சசி…. எனக்கு தூக்கம் வரல ..உனுக்கு போட்டு வச்சிருக்கிறத பாரு….
அவ்ளோ தான் பிளாட் சசி….படுத்து
இறுக்கி கண் மூடி..முகத்தையும் சேர்த்தே மூடி..நான் தூங்கிட்டேன்….சசி..சிறுபிள்ளை ஆக்ட்…
மதியம் முத்தம்லாம் கொடுத்தேன் ல..நீ ஏமாத்துற..போ.. உன் பேச்சு கா…சசி..
அபி கோவிக்க…
முத்தம் என்றதும் டீல் மாத்தி கேப்போம்…..இனியும் கன்னத்து ல கொடுக்கரத ஏத்துக்க முடியாது..முடியவே முடியாது….
பொங்கி எழுந்தவன்…
லேசாய் போர்வை நீக்கி அரைக்கண் நோக்கி…
அபி…
வா..எந்திரி நடிக்காத சசி…
நீ கணக்கு பார்த்தியா கடை நோட்டுலாம் கொடுத்தேனே…பேச்சை மாற்றி…
ஹாங் இதோடா..தலையும் புரில வாலும் புரில என்கிட்ட தள்ளிட்டு ஓடி போய்ட்டு இப்ப பாக்கலியா கேக்குற…அடிவாங்குவ பார்த்துக்க….
ஹுக்கும் இப்ப மட்டும் கொஞ்சிட்டு இருப்பதா இவளுக்கு நெனப்பு போல..போடி… ஒல்லி பெல்லி…
சரி நாளைக்கு பார்ப்போம்….
அபி அபி அபி…ன்னு சசி .இவளை அரிக்க…..
அபிக்கு என்ன…அபி
இப்ப நல்லா சுவரில் முதுகு சாய்த்து வசதியாய் அமர்ந்துகொண்டு…புருவம் உயர்த்தி கேட்க…
முத்தம் வேணாம் அபி….அவனின் கூற்றுக்கு
ஓ…அதிசயப்பட்டாள் அபி..உடனே சந்தேகம் வந்தது….படிக்காம இருக்க இந்த பக்கி ஏதோ பிளான் போடுது…பிராடு….
அப்படின்னா படிக்க மாட்டியா? ..சுள்ளென்று கேட்க..
அபி முத்ததுக்கு பதில் கடியேன்….பிலீஸ்…
என்னது…கடிக்கவா?
ம்ம்..முத்தம் ன்னா ஏதோ பெரியவிஷயம் போல ன்னு சரி சரி ன்னுட்டேன் ..அபி ..ஆனா அது கிக் கே இல்லை….
பரிதாபமாய் முகத்தை வைத்து…சசி சொல்ல…
அவன் ரியாக்ஷன் பார்த்து அபிக்கு சிரிப்பு தாங்கலை… eeeee
செல்லாது செல்லாது…நீ வேணும் னா கொடுத்துக்கோ…உனுக்கு உரைக்கும் நினைக்கிறேன்…
பந்தை லாவகமாய் அவனிடம் தட்டி விட்டாள் அபி..அவளுக்கு தினமும் னா முடியாது…
கிட்ட வந்தா
இவன் வாசமே பிடிக்கல..இவனை போய் எப்படி சகிச்சு …முத்தமிட்டு…
அப்ப கண்ண மூடிக்கோ..நானும் முடிக்கிறேன்…சாம்பிள் கிஸ்..எனக்கு போதும் ன்னா…இந்த டீல் தொடர்ந்துக்கலாம்…
எனக்கு திருப்தி இல்லன்னா இனி நீ 6 மாசம் கழிச்சி உன் ஒப்பந்தப்படி அப்ப மொத்தமா தா…
அப்படியே அப்பாவி மாறியே பேசி இன்னைக்கு எக்ஸ்ட்ரா முத்தத்திற்கு அடி போட்டான்…
இவனா வேணாம் என்பான்? ….மொக்கையா இருந்தாலும் தன் தேவி தரும் முத்தப்பூ இவனுக்கு அர்ச்சனைப்பூவே…!! EEEee
அபி ஏமார்த்துட்டாள்….!!! ரொம்ப நல்லவன் என்று நம்பி….
சரி..சீக்கிரம் குடு…வா படிப்போம்…
அபி தன் காரியத்தில் கவனமாய்…..சசியும் கர்மயோகியாய் தன்
காரியத்தில்….eeee
ஓவர் சந்தேகம் நம்ம சசிக்கு…இதுவாச்சும் எடுபடுதா? கிஸ் டெஸ்டிங்….eeee
அபியை தொட என்னவெல்லாம் சாக்கு….!!! இந்த கிறுக்கனுக்கு…
அபி இவன் கிட்ட வரும் தூரத்தை தன் பெரிய கண்கள் விரித்து செக் பண்ண….
இவனுக்கு அவள் கண்கள் ஏற்படுத்தும் தாக்கம் தாங்காமல் கண்ண மூடு அபி…
ரொம்ப பண்ண பார்த்துக்கோ… எச்சரித்தாள்…..
எனக்கு பயமா இருக்கு அபி…தன் நடுக்கத்தை இப்படி பாலிஷா சொன்னான்…
ம்ம்ம்..உதட்டை சிலுப்பி கண்கள் மூடி…..ஊசி போட போகும் போது முகம் போகுமே ஒரு போக்கு அப்படி ..அபி முகம் வைத்துக்கொள்ள…
சசி க்கு..மிக அருகில் அவள் தரிசனம்…எப்பவும் திருட்டுத்தனமாய் பார்த்து பார்த்து சரியா பார்த்ததில்லை இப்ப…உரிமையாய் பார்த்தான்…
அப்பப்ப என்ன அழகு….அம்மன் சிலையே தான் என் அபி…
மெச்சிக்கொண்டான்…
பிறை நெற்றியும் அடர்த்தி வளைந்த புருவமும்…பெரிய சிப்பிகளென இமை மூடிய விழிகளும்….மெல்லிய கூர் மூக்கும் அதில் ஓய்யாரமாய் வீற்றிறுக்கும் சிவப்பு கல் மூக்குத்தியும்…வட்ட முகத்திற்கு ஏற்ற அழகிய கன்னங்களும் …எல்லாவற்றிக்கும் ராணியாய் பன்னீர் ரோஜா இதழ்களும்…என்னை தொட்டு முத்தமிட்டுவிடு அழைக்கும் மோவாயும்..வாவ்..ஒவொவொன்றாய் பார்த்துக்கொண்டு வந்தவன்..கழுத்தை தாண்டி..கீழே பார்த்து…நைட்டி யில் ஒன்னும் தெரில eeeee கவலை கொண்டான்..
சின்னதோ?…eee
ரொம்ப பார்த்தான் சசி..இவன் தொல்லை நமக்கு முடில…
என்ன செய்ற சசி…அபி முகம் சுளிக்க….
பயந்து கன்னத்தில் அவன் உதடு ரேகை பதிய…அழுத்தி முத்தம் வைத்தான் …போர்ஸ் எவ்ளோ கொடுக்கணும் தெரியாம….eeee
சசி கணக்குல வீக்குங்க….
குளிர் கன்னங்களில் ஆண் சுவாச மூச்சோடு சூடான உதடுகள்…
சசிக்கு இதுவும் ஒன்னும் செய்யல…பத்தல..பத்தல…eeeee
அபிக்கு….சுடர் அறிவு கொண்டவள்…சுட்டு விட்டது அச்சிறு முத்தம் …சிலிர்க்கவைத்தது உயிர் வரை….
இவன் விலகிய பின்னும்….சுவரில் சாய்ந்திருந்தாள் மோனத்தில்….
அபி..
ம்ம்…
இது பிடிச்சிருக்கு….பொய் சொன்னான்..ரெண்டு நாள் போவட்டும் எங்கே வேணும்ன்னாலும் கடிச்சுக்க…காலில் விழுந்துக்கொள்ளலாம்….
பிலீஸ் இந்து மாதிரி ஒத்தி எடுக்கிற சீன் லாம் வேணாம்…
எத்தனை சினிமா பார்த்தோம் ரசிச்சோம்…அங்க முத்தம் கொடுத்தா இங்க நாடி நரம்பெலாம் ஜிவ் வின்னு ஏறும்….
அதும் இங்கிலிஷ் படம் பார்த்தா….கரைபுரண்டு ஓடும்…eeee
நிஜத்துல ஒன்னுமே இல்லையே??!!! சசி கவலை….
வடிவேலு மாறியே மோவாயில் விரல் வைத்து யோசித்தான்….
இப்ப கிறுக்கு தனத்தின் உச்ச கட்டமாக..
வேற யாருனா பண்றத பார்த்தா தான் உணர்ச்சி வருமா?..நமக்கே ன்னா வராதா?
அப்ப சினிமாலேயும் நம்மள மூணு மணிநேரம் இருட்டுல போட்டு ஏமாத்துராங்களா?
மண்டை காய்ந்தான்….
பாத்ரூம் போணும் வெளில வாயேன் சசி….
ஏன் இங்கேயே இருக்கே போ அபி…
இல்ல..அங்கேதான் போகணும் வாயேன்…
சரி வா…
பாவம்…அபியின் சதி திட்டம் தெரியாமல்… தன் இளமை சார்ந்த கவலை களோடு கூட ஆட்டுக்குட்டியாய் சசி போக..வெளியே அவனை போகவிட்டு…
இங்கு சமையலறை குழாயில் மின்னல் வேகத்தில் பெரிய பாத்திரத்தில் ….தண்ணீர் பிடித்து பின் வாசல் பாத்ரூம் லைட் போட போனவன் முதுகில் மார்கழி மாத குளிர் தண்ணீர் ஊற்றி …பெறுப்பேத்தினாள்…
சுடு தண்ணீர் பட்டவன் மாதிரி மூச்சி திணறி துடித்து போய்விட்டான் சசி…
அபி.ஈஈஈ..கத்திய கத்தில் இரவின் நிசப்தத்தில் எரியாவே அதிர்ந்து குலுங்கியது….
ரொம்ப கத்தாத.. ஒழுங்கா குளி ..ஓரெ வியர்வை நாத்தம்… இனி நைட்டும் குளிச்சா தான் வீட்டுக்குள்ள விடுவேன்…இல்லாட்டி போ மாடில படு….
ஐய..ஸ்கின் டிசீஸ் வரும்..என்சோப் லாம் இனி போடாத….கொன்றுவேன்…பார்த்துக்க …சொல்ல
இப்ப சோப்பு தா…அவன் வீரானாய்…..
இவள் சோப் +ஷாம்பூ தர..ரெண்டு பேரும் ஒன்றாய் யூஸ் பண்ணி பாதியாய் இருந்ததை லக்ஸ் விளம்பர் நடிகையாய் நுரையிலேயே குளித்து பின்பக்கம் பூரா நுரையால் தண்ணிர் போவாமல்… கரை கட்டி நின்றது….அப்படி ஒரு வெறி குளியல்..eeee
நாளைக்கு வேற சோப் என்ற ஒரே காரணத்தால்…eeee
துடைக்க டவல் தந்தவள்…சூடாய் காபியும் தர….வாவ்…
இப்ப வா படிக்கலாம்….பௌ….eeee
குளித்து முடித்து சுத்தப்பத்தமாய் அவளுடன் அமர்ந்தவனுக்கு…அவள் மீது லேசாய் உடல் வாசம்….
இவன் உடனே ….நாம தான் சுத்தம்….eeee பெருமையாய்…
இத்தனை நேரம் எருமையாய் மணத்ததை மறந்து….
குருவையே கணக்கெடுத்ததான்..சசி கத்துக்குட்டி…
நேரம் மக்களே…நேரம்….
அபி..!
சசிக்காக போட்டு வைத்திருந்த கணக்குகளை விவரித்து சொல்லிக்கொண்டிருக்க…
சசிக்கு தூக்கம் கண்ணை சொக்கியது…கணக்கு அப்படி மயக்கத்தை சசிக்கு தந்தது..
சசி…புரிஞ்சிச்சா?…
பாதி கண்ணில் ஓர் பார்வை பார்த்து நல்லா புரிஞ்சது… சமாளித்து முழித்து சொன்னான்…
தொடையில் நாலு கிள்ளு..கொடுத்து…
ஒழுங்கா பாரு…சசி…இந்த ஆன்ஸசர் எப்படி வந்துச்சு சொல்லு…என்க….
ஐயோ..மாட்டிப்பமே… முத்தம் வேற வாங்கி கொடுத்து ஏகப்பட்ட சிக்கலில் இருக்கேன்…கண்டிப்பா படிச்சே ஆகணும் போல இருக்கே…கவலை பட்டு…
அபி உடம்பெல்லாம் வலிக்குது…அலுப்பா இருக்கு…நாளைக்கு லீவு தானே..இன்னைக்கு பாடத்தையும் சேர்த்தே படிச்சுருறேன்….
உண்மையா சொல்லி வேண்டி நின்றான்…அவனுக்கு குளித்தாலும் மேல் வலி போகவில்லை….
இவளுக்கும் இரக்கம் தோன்றி விட….சரி…
நாளைக்கு நீயே தான் எடுத்துவச்சி உக்காரனும்…
சரி..சரி..முகம் பூவாய் மலர்ந்து…ஓடி போய் படுத்துக்கொண்டான் தன் பாயில்….
அவளும் விளக்கணைத்து வந்து படுக்க…
இவனுக்கு உடல் ஜிவு ஜிவுத்தது…
அவள் மெல்லுடலின் காந்த புலன் இவன் வரை பாய…
நைட்டியில் பார்த்த வடிவம் மிகுந்த கவலை தர…
அபி நல்லா சாப்பிடு…மெலிஞ்சு கிடக்க… பாரு…
அபி கொஞ்சம் ஊட்டமா ஆகட்டும் இன்னும் ஆறு மாசம் இருக்கே….eeeee
இவனுக்கு அவளின் இந்த சிலை அழகு பத்தவில்லை…
நினப்புதான்…eeee
இருக்கிற உடம்பு போதும் போ…
அவள் எப்பவும் போல முகத்தில் அறைந்தாற்போல் பதில் தர.
ஹுக்கும்…இவளை போய் சொன்னேனே …நொந்துகொண்டான்…
ஏதும் பேசாமல்
அமைதியாய் தூங்க விழைந்த போது…
சசியின் முத்தம் தந்த சிலிர்ப்பு…ஏதேதோ எண்ணங்களை அபிக்கு உண்டு பண்ண….
சசி.. அபியின் மென்மையான அழைப்பு
என்ன அபி…
உங்க செலவம் கல்யாணத்துக்கு முந்தின நாள் என்னால உன்னை லவ் பண்ணவே முடியாது விட்ரு… எவ்ளோ சொன்னேன்…கேட்டியா சசி?…இப்ப பாரு என்னை உன்னால் சகிக்க முடியல..உன்னை என்னால் சகிக்க முடில…நானும் அததெல்லாம் முடிஞ்சுது…இனி நடப்பதை பார்ப்போம் ன்னா..கூட நீ ஒத்து வர மாட்டுற…
எல்லாத்துக்கும் நானே தள்ளினா கொடுமை படுத்துற மாதிரியே பார்க்குற….போ சசி…
ஒரு மாதிரி மனசே வெறுமையா இருக்கு…தனியா இருக்கேன்…எங்கம்மா அப்பா தம்பி இல்ல…
யாரும் இல்லை உன்னால…ஆற்றாமை தாங்காமல்..
தேம்பி தேம்பி அபி அழ…
இது அவன் முத்தத்தின் வெக்கை ஏற்க தாளாமல் வந்த அழுகை..வெளியில் சொன்னது வேற…. அபி…!
சாரி அபி…ஏதோ தெரியாம செஞ்சிட்டேன்..உன்கிட்ட…இனி பொறுப்பா நடத்துகிறேன்…அழாதே… அபி…
இவனுக்கும் நெஞ்சில் பாரம் எற…தப்பு பண்ணிட்டோமோ?.
முதல் முறையாக தான் அன்று ஆடிய பேயாட்டத்தை நினைத்துப்பார்த்தான்…
செல்வம் கல்யாணத்துக்கு உறவு காரர்கள் என்ற முறையில் ..முன்னிரவு நிச்சயம்…காலை திருமணம்…என்று ..வந்திருந்தனர்..அபியின் குடும்பத்தினர்..அபியோடு…
அபி வந்த நொடியில் இருந்து அவள் மீதிருந்து இவன் கண்ணை இவனால் எடுக்கவே முடியவில்லை..
கனகாம்பர நிறத்தில் சுரிதார்உடை…
முழுக்க உடல் மூடி இலவர்சியாய்.. நகைகள் போட்டு.. தன் நீண்ட கூந்தல் பின்னி… தலை நிறைய மல்லிகை சரங்கள்….வாவ்…
இவன் கண்ணுக்கு அப்சரஸ் பெண்ணாய் தெரிந்தாள்…
அவன் வீட்டில் எல்லோரிடமும்…அபியை தான் கட்டிக்க போறேன் சொல்லியே திரிவான் கிறுக்கனாட்டும்…இதனால் இவன் அண்ணிகள்…அவளும் விரும்புகிறாள் போல..என்றே நினைத்து விட்டார்கள்…முறையும் இருந்ததால் எந்த தடையும் யாருக்கும் இல்லை…
ஒவவொரு ஞாயிறும் மதியத்திற்கு மேல் அபி வீட்டுக்கு ஓடிவிடுவான்…அபியின் தம்பி ஜீவா கூட கிரிக்கெட் விளை யாட சினிமா போக என்று பிளான் பண்ணி….
சித்ரா ஏற்கனவே இங்கு இருப்பதால் பெண் கேட்டால் வேணி தருவா ன்னு தனம் அம்மாக்கும் சம்மதம்..
அதனால் சசி வீட்டில் அபி தான் சின்ன மருமகள் என்று முடிவே பண்ணிவிட்டார்கள்…ஒரு தலையாகவே….
ரெண்டாவது அண்ணி கொஞ்சம் வாய் துடுக்கானவள்…
சசி ..கல்யாண பொண்ணு மாறியே இருக்கு அபி…இப்படியே நம்ம வீட்டுக்கு கூட்டிட்டு போயிரலாம்…இவனை உசுப்பேத்திவிட..மனைவியாகவே மனதில் வரித்தான்…சசி…
அவள் தங்க நிறம் இவனை ஈர்க்க…கண்ணும் உதடும் கட்டி இழுக்க….இத்தனை நாள் காட்டிய நிதானத்தை இழந்து காதலில் தத்தளித்தான்…
கன்னி பெண்ணின் அலங்காரங்கள் காளையின் மனதை கொள்ளை கொள்ள…
உன் விழிகளிலிலே…நான் வாழ்கிறேன்..பெண்ணே……
அந் நேரம்..
அவளை பார்த்து பாட தோன்றியது சசிக்கு…
9
அன்று….
சசியின் பார்வை…அபிக்கு பெருத்த சங்கடத்தை தர….
தன் தாயை எங்கும் போக விடாமல் கூடவே வச்சிருந்தாள்….
வீடு என்றால் ஒன்னும் இல்லை..விசேஷ வீடு அல்லவா?..
வேணியை வா வா என்று உறவுகள் அழைக்க…..சித்ரா விடம்
பார்த்துக்க சொல்லி போக…சித்ரா தன் ஓரகத்தி கலாவிடம் அவள் கைபிள்ளை காரி என்பதால் தன்னுடனே வைத்துக்கொள்ள…
அவள்
சசியை அவளோடு பின்னி கேலி பண்ண எரிச்சலானாள்…அபி…
இதுகளுக்கு அறிவே இல்லையா?..என்று கோபம்…
அவள் வெட்கமே இல்லாமல் கண்ட இடத்தில் அமர்ந்தபடி..முந்தானை மறைவில் தன் பிள்ளைக்கு பால் கொடுக்க இவள் அதை வெறுத்தாள்… கொஞ்சம் சுவர் பக்கமாகவாவது திரும்பி இருந்தா தான் என்ன? என்று…
என்ன பொம்பளை யோ? ன்னு…
வெளியில் ஆட்கூட்டத்தில்… அம்மாவை தேடி போய் எட்டிப்பார்க்க…..
வேணி மகள் முகம் கண்டு …நீ படு அபி.. கலா கூடவே..நாங்களும் வந்துடுறோம் …சாப்பிட்டுட்டு போ என்க…. ஒன்றும் வேணாம் ம்மா..சீக்கிரம் வாங்க….இவள் கலா இருந்த அறை நோக்கி போக..வழியில் சசி நின்றே விட்டான்…
ஐந்து நிமிஷம் பேசணும்…அபிமா..உன்கூட…
அக்கம் பக்கம் பார்த்து மிரண்டவள்..சசி இது தப்பு.!வேணாம்..நான் வரல…முரண்டு பிடித்து..நடக்க முயல…
அவள் கையை பிடித்து தர தர வென்று இழுத்து சென்றான்…அந்த சின்ன கல்யாண மண்டபத்தின் இருட்டு மாடிக்கு ..
விடு..சசி..கத்துவேன் பார்த்துக்க…பிடித்தமின்மையால் தன் கையை அபி பிடுங்க முயற்சிக்க…
இரும்பாய் இருந்தது சசியின்கரங்கள்…
ஓரிடத்தில் சுவற்றோரம் நிப்பாட்டி..அந்த இருட்டு பகுதியில்…அவளை ஓடமுடியாமல்..நன்றாக நெருக்கிக்கொண்டு….நெடுநாள் காதலனாய்..
ஐ லவ் யூ அபிம..ஐ லவ் யூ…விடாமல் சொல்ல….
இச்செயல் …இவளுக்கு எரிச்சல் கொடுக்க…
எங்கப்பாகிட்ட சொல்லிருவேன்…சசி..அப்புறம் கல்யாண வீடு ..சந்தோசம் கெட்டுரும்…விடு உன்னை எனக்கு பிடிக்கவே பிடிக்காது…
இதெல்லாம் அவன் காதில்விழவே..இல்லை…
காதல் பித்தம் தலைக்கேறி… அவள் புறங்கையில் முத்தமிட்டு…விரல்களை
எச்சில் பண்ணி உறிந்து சுவைக்க…சசிக்கு. இனிப்பாய் இருந்தது…
அவளுக்கு அருவெறுப்பை தர..கையை பிடுங்கி எடுக்க…
எழுவருசமா லவ் பண்றேன்…அபிமா..நீ வேணும்டா…புரிஞ்சிக்க…
ஏன் பிடிக்கல காரணம் சொல்லு அபிமா..
பிடிக்கல ன்னா பிடிக்கல…விட்ரு.. நீ நல்லவன்.. அதனால நான் இப்ப இப்படி நடந்துகிட்டத கூட யார் கிட்டயும் சொல்ல மாட்டேன்….போறேன் ..உன் கூட பேச பழக பிடிக்கும்…ஆனா கணவனா பிடிக்காது உண்மை அப்படி உன்னை எப்பவும் நினைக்கவும் முடியாது..சசி..விட்ரு பிலீஸ்…
நீ இல்லன்னா செத்துருவேன் அபி…
இந்த வரிகள் அபிக்கும்..கவலையை தர…
நான் உன் மனசு சபல படுற மாதிரி நடந்திருந்தா மன்னிச்சுறு சசி..ஆனா காதல் அப்படி இப்படி ன்னு மட்டும் பேசாத..விட்ரு பிலீஸ் நீயும் நல்லா இரு….
செத்துருவேன் அபி…எனக்கு பதில் சொல்லிட்டு போ..இப்ப ஓங்கியே கத்த…
தன் பெரிய விழிகள் விரிய பயப்பட்டாள்… அபி..
சத்தமா பேசாத சசி…யாராவது வரப்போறாங்க.. ..என்னை விட்டு நான் போறேன்..நீ பண்றது ஒன்னும் எனக்கு பிடிக்கல..
விடுடா லூசு என்னை….அவன் கிடுக்குப்பிடியில் இருந்து விடுபட முடியாமல் தவிக்க….
அவளின் பயம் யாருக்கோ? என்றது இவனுக்கு பிடிப்பு தர…
இவ இல்லன்னா வாழ முடியாது.யாருக்கோ விட்டு கொடுத்து விட்டு…தானும் எவளையோ கட்டி கொண்டு வாழ்வது என்பது …நடக்காது..
இன்னைக்கு இவளை விட்டா அப்புறம் என்றும் பிடிக்க முடியாது..குடும்ப பகை வந்துரும்…
சாகனும் முடிவு எடுத்தாச்சு… ஒன்னு நான் இன்னைக்கே சாகனும்…இல்லாட்டி இன்றே கல்யாணம் பண்ணி வாழனும்…
தீவிர தற்கொலை மனப்பான்மை உண்டாக….
திரும்ப பொம்மை போல ..கீழ் தளத்துக்கு தன் தாய் உறவினர்கள் கூடி இருந்த கூட்டி போக…விடு சரேத்சி..விடு..இவள் மறுப்பு குரல் அவனுக்கு கேட்கவே இல்லை…
அம்மா ..அபிக்கும் எனக்கும் மூணு வருஷ பழக்கம்…ரெண்டு பேரும் சுத்தாத இடமில்லை….ஹோட்டலுக்கெல்லாம் போனோம்…போட்டோ லாம் இருக்கு..இப்ப என்னை வேணாம்ங்குரா…எனக்கு அபி இப்ப வேணும் ..கல்யாணம் பண்ணிக்கணும்…
மாமா அத்தை சித்தப்பா எனக்கு அபி இப்பவே வேணும்..வேணும்…என்றவன்…பூ அலங்காரக்காரர்கள் வைத்திருந்த கத்தியை பிடுங்கி கையை கிழித்துக்கொண்டான்…
அருகிருந்தவர்கள் கத்தியை பிடுங்கி தூக்கி எறிய
சுற்றிலும் பதறியவர்கள்…
அவன் கையை ஒவ்வொருத்தரும் பிடிச்சி அழுத்தி துணி கொண்டு ரத்தம் பெருகிக்கொண்டே இருந்தது…
தனம்..ஐயோ என் பிள்ளை இப்படி பண்ணிட்டானே…
கட்டைக்குரலில் ஒப்பாரி வைக்க..அங்கு இருந்த பெரிய அண்ணன்கள் இருவரும் …
சசி ..!சசி..!என்று அனத்தி வா ஹாஸ்பிடலுக்கு
கூப்பிட…அண்ணிகள்..அக்காக்கள் ..குட்டி பிள்ளைகள் எல்லாம் அவன் பக்கம்…இருந்து கொண்டு சூழ்நிலை வித்தியாசமாய் அபிக்கு எதிராய்..
எனக்கு அபி வேணும்…அப்ப தான் டாக்டர் கிட்ட வருவேன்…இல்லன்னா…இன்னைக்கே செத்துருவேன்..எப்படியாவது…ஒரே பிடிவாதம்…
அபிக்கு சசியின் இந்த முகம் பேரதிர்ச்சி தர…விழித்து திருத்திருத்து நின்றவள்…ட்ஹான் தாய் தகப்பனை தேட…வேணி இவளிடம் வந்து…
புரியாமல் நிற்க…
சுற்றி உள்ள சொந்தங்கள் ஆளுக்கு ஒன்று பேச ஆரம்பித்தார்கள்…அபியை பற்றி…
சசி பொய் சொல்றான் அப்படிலாம்
எங்களுக்குள்ள ஒன்னும் இல்ல…இவள் கண்ணீர் தாரையாய் கொட்ட..சொல்ல..
ஒன்னும் இல்லாம தான் இத்தனை பேர் நடுவுல சொல்வானா?…
உங்க வீட்டுக்கு வரது போறது எல்லோருக்கும் தெரியும்..தனமும் நீ தான் மருமக ன்னுஇப்பக்கூட சொன்னா…
ஓவராய் பேச்க்
இந்த நேரத்தில்..
அம்மா அபி கிட்ட நீங்களே பேசுங்க…தனத்தை ஏவியும் விட்டான்..!
அந்தம்மா அவன் ஆசை பட்டது வீட்டுக்கு போவது காலேஜுக்கு போவது என்று கதையை திரித்து கூற…
வேணிக்கு… இந்த பிரச்சனை வருத்தம் தான் என்றாலும்..ஏன் அபி சசியை கட்டக்கூடாது?..
நல்ல பையன் அன்பா இருப்பான்? நல்லா வச்சிப்பான் ..தோன்றியது..
கட்டணும் ன்னே அவதூறு சொல்கிறான்.!அபியாவது வீட்டை விட்டு வெளியே போவததாவது…அபி க்கு வரும் முன் கோபத்துக்கு சசி மாதிரி அன்பா வச்சுகிற பையன் தான் சரி படும் என்பவர்….தன் கணவன் ஓவர் அகராதி பண்ணி.. இன்னும் இன்னும் அபியை அசிங்க படுத்த…
எல்லாம் உறவுக்காரங்க..ஊதி பெரிசாக்கி கல்யாணமே இனி அபிக்கு பார்க்க முடியாது….
பேச்சு வந்தது வந்து வந்தது தான்..அவனுக்கே கட்டி கொடுத்துட்டா.. எல்லாம் கால போக்கில் மாறிக்கொள்ளும்…. இந்தாள் பணம் நகைலாம் போட்டு கல்யாணம் பண்ணிக்கொடுக்க மாட்டான்..
சசி தான் அபிக்கு…சிறு வயசு தான்..பார்த்துக்கலாம்…
அழுது கொண்டிருந்த அபியிடம்.. தன் மனுவை தர..
தன் கை வளையலை உடைத்து …கைய கீறிட்டா பாவம் கட்டிக்கோ சொல்லுற…
இப்ப நான் கையை அறுத்துகிறேன்….
சசி எனக்கு வேணாம்…வேணாம்..
இவள் கண்ணாடி வளையல் கொண்டு கீறிக்கொண்டாள்…
அபி ஓடி வந்து தடுத்து அணைத்துக்கொண்டு..நீ வேணும்டி அபி…
அவனுக்கு வலித்தபோதும் சும்மா இருந்தவன்..இவளின் சிறு கீறலுக்கு கண்ணீர்விட…
கொடுத்து வச்சவ அபி…பொறாமை பட்டார்கள்..
அபி அப்பா இவனை அடிக்காத குறையாய் தள்ளி விட்டு..மகளை பாதுகாத்து.. கூட்டி போக விழய…
தனம் விழித்துக்கொண்டார்..தன் மகன் ஏதாவது செஞ்சாலும் செஞ்சிப்பான்…என்று
அபிராமி…
காலில் விழுந்து காரியம் சாதித்துக்கொண்டார்….
அபி இந்த செயலுக்கு …அமைதி காக்க..
சம்மதம் என்று கொண்டு ஏற்பாடுகள் ஏதேதோ செய்து..
ஒருவர் தாலி வாங்க ஓட
பூட்ட போன ஜவுளி கடையை திறக்கவச்சி இவர்களுக்கு புது துணி…
இப்படி ஓர் கலாட்டா ..மற்றும்..அபியை அவமான படுத்தி குற்றவாளியை நிறுத்தி பண்ண ராட்சச திருமணம்..
இப்படி ஆன பந்தத்தை தான் சரி பண்ண தான் அபி கொஞ்சம் கொஞ்சமாய் தன்னை சரி பண்ணி அவனையும் கொண்டுவர முயற்சிக்கிறாள்…
ஆறு மாசத்தை10 10 தாய் பிரித்த நம் கணக்கு பண்டிட் சசி..மாச காலண்டர் கடையில் எடுக்கும் போதே அசடு வழிந்தான் அவசரக்காரன் சசி….eeee
அபிக்கான டேபிள்…. அவளை இவன் திறமை கவிழ்க்க…
பரவால்ல தொழில்காரன் தான் மெச்சிக்கொண்டாள்…வெளிப்படையா….
பணம் வரவு செலவு மொத்தமும் கொடுத்து கணக்கு கொடுத்து வாங்கி வாங்கி….கடையின் போக்கை புரியவைத்தான்…
ஞாயிற்று கிழமைகளில் தனத்தாயை பார்க்க அக்கூட்டு குடும்பத்துள் இருவருமே சென்று விடுவார்கள்..இங்கு காலையில் டிபன் சாப்பிட்டு செல்பவர்கள்…உறவு கொண்டாடி…மதியம் அங்கு சாப்பிட்டு.சினிமா அல்லது பீச் என்று போய் வெளியில் லைட்டா உணவு எடுத்து வீட்டுக்கு வந்துவிடுவார்கள்….அன்று இரவு சீக்கிரம் படுத்து மறு வாரத்துக்கு ரெடி ஆவார்கள்….இது அவர்களுக்கு திருப்தியான சிக்கல் இல்லாத அட்டவணை ஆகியது
அகத்தில்…
நாளொரு சண்டை பொழுதொரு படிப்புமாய் இளம் தம்பதியரின்
குடும்ப வாழ்க்கை செல்ல…இப்ப வீட்டுக்கு மிக தேவையான சிறுக சிறுக பொருட்கள் வாங்கி கொண்டார்கள்..
அம்ச வேணி..மகளுக்கு தினமும் தன் சிரமம் பார்க்காமல் வேலை செய்து வைத்து போய்விடுவார்….அவள் வீட்டில் இருந்தாலும் கல்லூரிக்கு சென்றுருந்தாலும்…அவர்கள் துணி இன்னும் தனி தனியாய் இருப்பது அவருக்கு வருத்தமே..
ஆனால் மகள் சசியை பாவா என்று அழைப்பதும்…. முகம் சுருக்காமல் தன்மையாய் இருப்பதும் கண்டு சரியாகிடும் சீக்கிரமே ….நம்பிக்கை வந்தாலும்…உலகத்தில் உள்ள எல்லா சாமிகளையும் வேண்டி கொண்டே இருந்தார்..
தினமும் இப்ப இவளே சசியின் கன்னத்தில் முத்தமிட்டு பாடம் சொல்லி தருவாள்…முன்னேற்றம் மக்களே…eeee
ஆனால் பாவம் இப்ப…
பரீட்ச்சை முடிந்தது விட்டது சசிக்கு…எல்லா கேள்விக்கும் பதில் எழுதி இருக்கிறான்…. திருத்துபவர்கள் பாடு தான் இனி…eeeee
இப்ப சசிக்கு ….ஒரே காண்டு முத்தப் பொரி கிடைக்காது என்று…
புதிதாய் ஒரு இரும்பு கட்டில் வங்கிவிட்டதால் ..
இருவரும் ஒரே கட்டிலில் படுகிறார்கள்….
அபிக்கு..சசியின் சாதாரண தொடுகை கூட கரென்ட் ஷாக் அடிப்பதால் நடுவில் தலையணை வைத்துக்கொண்டு..படுக்கிறாள்….eeee
சசியின் காந்தம்..தினம் தினம்..அபியை ஈர்க்க….
இளம் கணவனாய் சசி….
அபியின் வார்த்தையை வேதமாகக் கொள்ளும் சசியின் அப்பாவி தனம்…அவள் உயிர் வரை தொட்டது….
இவள் கவனிக்காத்தப்ப….அவன் பார்க்கும் பொறுக்கிதனமான …கள்ளப் பார்வைகள் பெண்மையை இவளுள் சுரக்க வைக்க.. ..அவன் மேல் மயக்கம் வந்தது….
போடா கிறுக்கா…பொண்டாட்டியை யாருமே இப்படி பார்க்க மாட்டார்கள்…
முன்னொரு நிலா காலத்தில்..eeee
சசியை..
பிடிக்கவே பிடிக்காது சாதித்த மனம்..ஓகே தான் அவ்ளோ ஒன்னும் மோசமில்லை …போலாம் …ரைட்…போ.. போ.. என்றுவிட்டது…
அவற்றையெல்லாம் விட அதிக சுவை கொண்ட நிகழ்வு உண்டு….
அது…இப்ப….ரொம்ப ரொம்ப கவனிக்கத்தக்கது…..eeee
இவர்கள் கல்யாணம் ஆகி நான்காம் மாதம்…நடந்து கொண்டிருக்க…ஓர் நாளின் இரவு பொழுதில்…நடக்கக்கூட முடியாமல் தாள்ளாடி சசி..
சசி சின்ன பையன் ஆதலால்…
நீர் நாய்க்குட்டி?….eeeee..
தன் சாவி கொண்டு திறந்து வீட்டிற்குள் வர…அபி தன் பரிட்சைகளுக்காக படித்துக்கொண்டிருந்தவள்….
அவனை உற்று பார்க்க…இவனின் செய்கையே செஞ்சதை சொல்லி விட…
எரிச்சலானவள்…
சசி…..அழைக்க….
இவள் முகம் பார்க்க வெட்கப்பட்டு…
கைலியும் டவலும் கொண்டு போய் ..பின்புறம் முகம் கை கால் கழுவியவன்… ஹாலில் டிவி போட்டுக்கொண்டு வெறும் தரையில் ஏதும் பேசாமல்…கண் மூடி கிடந்தான்…
இப்ப டோன் மாற்றி…
சாப்பிடுங்க பாவா?….ஐய நல்லாவே இல்லை.. சசி வா போ தான் நல்லார்ந்துது…
அபிகிட்ட கேட்டாலும் அதுதான் சொல்லுவா…ஆனா தான் முதலில் மதிச்சா தான் மற்றவர்களும் மதிப்பார்கள் என்று மிக கஷ்டப்பட்டு கூப்பிடுகிறாள்…
சசி சசி..என்று நிமிடத்துக்கு நூறு முறை கூப்பிடுபவள் ஆயிற்றே…..
வேணாம் அபி…
என் இப்படி சசி ?…கோபத்தில்.மெய் உரிமை வந்தது..அபிக்கு…
பசிக்கும் சசி சாப்பிடு….
வேணாம்…முனகினான்..எந்திரிச்சு சாப்பிட முடியாதது தான் காரணம் ..eeee
படுத்துக்கொண்டதும்..போதை இன்னும் அதிகமாய் மூளைக்கு ஏற….பசி தெரிந்தாலும்…மூளை மட்டும் தனியாக ஆகாயத்தில் பறந்து கொண்டிருந்தது..உடல் தரையில் கனமாக கிடந்த உணர்வு…
வேணாம்…வேணாம்….வாய் மற்றும் எந்த பார்ட் கூடவும் தொடர்பு இல்லாமல் புலம்ப…
பசிக்கும் ரெண்டு பிடி சாப்பிட்டுட்டு படுத்துரு… சசி…
உன் மேல கெட்ட கோபத்துல இருக்கேன்..காலைல இரு கொல்றேன்…
காது நன்றாக கேட்டாலும் அபிக்கு லேட்டா தான் அபி குரல் ரீச் ஆச்சு…
கொல்றேன் சொன்ன வர்ட் ரொம்ப பிடிச்சி போச்சு…ஏஏஏஏஏ
அதிலேயே அவன் மயங்கி திளைத்து…மோனத்தில் கிடக்க…
மனசு கேட்காமல்அபி
சாதம் பிசைந்து கொண்டு வந்துபோட்டு
எழுப்பி சுவற்றி சாயவைத்து ஊட்டிவிட …
சசி…ரெண்டு வாய் வாங்கி ….
வேணாம் அபிமா…வேணாம்…..
ஏன்?சசி…
பதில் இல்லை…கண் மூடியிருக்க….தூங்கிட்டானா?…
அவன் தோளை தட்டி…
வேற என்ன வேணும் சொல்லுங்க ? கேட்க…
அவ்ளோதான் வாயை டாம் திறந்த மாதிரி திறந்து விட்டான்…
நீ வேணும் தருவியா?…முடில…அபிமா.. மெய் சொல்ல..
உதடு கடித்தாள் அபி…ஜிவென்று உடலெங்கும் மின் அலை…..
அபிமா…
ஆசையை தாங்க முடிலடா…ஒரு பொம்பள ரொம்ப என்னை ரொம்ப உசுப்பேத்திட்டா …முடில…அதனால தான் இப்படி…உனக்கு பிடிக்காத பழக்கத்தை கூட செஞ்சுட்டேன்…சாரிமா…
அபி…7வருஷம்டி…தாக்கு பிடிச்சேன்…இப்ப நீ கிட்ட இருக்கும் போது…கடிச்சி கடிச்சி மென்னு திங்க ஆசை பெருகுதடி… என் கிட்ட இருக்குரப்ப…பேரழகா இருக்கிறடி…தூரமா இருந்தப்ப கூட உன் குணங்கள் தெரில……உன் உடல் மட்டும் இல்லடி…நேர்மை….சுத்தம்….எல்லோரையும் சரியான இடத்தில சரியா வச்சிகிறது… படிப்பு..தவமா படிக்கிற….எது செஞ்சாலும்….முழுமையா அழகா செய்ற….தேவதைடி கண்ணம்மா நீ எனக்கு…..நீ எனக்கு கிடைச்சது வரம் டி…
நான் உனக்கு சாபம் ல…..போதை இப்ப அவனுக்கு உச்சத்தில்….
வேணாம் நான் உனக்கு இப்ப செத்துரவா? அபி….லேசாய் கண்ணில் நீர் வழிய…கேட்க…
அபிக்கும் கண்ணீர் வந்தது…இதன் பெயர் காதல் கூட கொள்ளலாம்…
நீ பீல் பண்ற மாதிரிலாம் இல்ல நான் சாதாரணமானவ….படு..சும்மா பொலம்பாத… நல்லாவே இல்லை…
சாதாரணம் போல சொல்லிவிட்டு…
இன்னும் ரெண்டே வாய் மட்டும் வாங்கிட்டு தூங்கிரு..காலையில் பார்த்துக்கலாம்…சரியா?
கெஞ்சி கெஞ்சி அவன் தேவைக்கு தந்து… வாய் துடைத்துவிட்டு…வா என்று..தோளில் தாங்கி
கட்டிலில் படுக்கவைக்க முயல…மல்லார்ந்து விழுந்தவன்….தன் மேல் அவளை போட்டுக்கொண்டான்…
உன்னை தரும் முதல் நாளே சொல்லிடு அபி..இப்ப மாறி மட்டையா கிடக்கணும்டி….ராவா இருந்தா தாங்கவே முடியாதுடி…அவ்ளோ ஆசைடி….உன் உடம்புல துணியே இருக்கக்கூடாது….லைட் ஆப் பண்ண கூடாது….செமையா ______ணும்டி..மிக மிக அந்தரங்கமான வார்த்தை அந்த செயலுக்குரியதை பச்சையாக சொல்ல…
படக்கென்று அவனைவிட்டு எழுந்துக்கொண்டாள்.. முன்னாடி சொன்னதை சின்னதாக்கி விட்டான்..கடைசி ஒற்றை வார்த்தையால்…
அபி அதிர்ந்துவிட்டாள்… அவள் இதெல்லாம் கேட்டது கூட இல்லை..
சசி பொறுக்கி பய..ச்சீ சீச்சீ… பேச்சை பாரு…திட்டினாள்..எந்திரி உன்னை என்ன செய்றேன் பாரு…கருவிக்கொண்டாலும்…
லைட் அணைத்து படுத்த போது…நினைக்க கூடாது ..தோண..அதுவே திரும்ப திரும்ப..வந்து அவளுக்கு இம்சை கொடுத்து இளமை உணர்வுகளை தூண்டிவிட்டது ….
ஊக்கியாக…. eeeeee
நிறய யோசித்தவள்….நாளைக்கு விருந்து சசிக்கு….முடிவு எடுத்தாள்…..
தன்னோடு வாழும் சசியின் பண்பை இத்தனை நாட்களில் நன்றாக அறிந்து கொண்டாள் அபி…
அவனின் காதலை தாண்டி இவளிடம் காட்டும் மரியாதை ஆச்சர்யமே….
இவள் பண்ணும் அடாவடிக்கெல்லாம் சிரித்தே சரி கொடுத்து இவள் மனதை வென்றேவிட்டான்…
காலையில் காலேஜ் கிளம்பும் போதாகட்டும்…சாயங்காலம் நேரம் கெட்ட நேரம் என்றாலும்..பொறுப்பாய் காத்திருந்து அழைத்து செல்வது ….இவளுக்கு மிகவும் பிடித்த ஒன்று…
கடையில் வேலை அதிகம் இருந்தாலும் …இவளுக்காய் காத்து அதுவும் செம டீசென்டா நிப்பான்…
எல்லோர் கண்ணும் அவன் மேல் பட.நீ இனி பெரிய ரோட்ல நில்லு ன்னுட்டா…யாருக்கிட்ட….eeee
என் புருசனாக்கும்… யாரும் பார்க்க கூடாது….அபி போங்கு….eeee
இருவரும் தள்ளி படுக்கும் ராப்பொழுதுகளில்… தோழனாக ..சசி இயல்பாய் எல்லாம் இவளிடம் பரிமாறிக்கொள்வான் ..தன் பார்க்கும் மனிதர்கள் வித்தியாசமான நடத்தைகள்…சிறுவன் போல பேசி பேசி…கிக்கி கீ..என்று கீச்சுக்குக்குரலில் சிரிப்பான்…பிரின்ட்ஸ் யோடு பேச நேரம் இருப்பதில்லை அவனுக்கு கடைக்கு போனால் ஜாப் பார்ப்பதற்கே பொழுது பத்தாதப்ப…எங்கு அரட்டைக்கு நேரம்?..
அந்த வெக்கையை எல்லாம் அபியிடம் தான் கொட்டுவான்… முதலில் லாம் ஏதோ என்பது போல கேட்பவள்…பின்னர் அவனின் மகிழ்ச்சியில் தானும் சேர்ந்துகொண்டு ..இவளும் சேர்ந்துவிடுவாள்…
இப்படி இருக்குமோ? அப்படி இருக்குமோ?என்று வேற கோணத்தையும் காட்ட….வித்தியாசமா புரிதல் வந்திருந்தது இருவருக்கும்…
வெளி உலகமே காணாத அபிக்கு தன் பார்வையில் கண்டு மகா பாரத சஞ்சயன் போல சசி சொல்ல…இவள் கற்பனைகள் அறியமைகளை …கற்ற அறிவை அதில் கலக்க ரொம்ப சுவை ஆகிவிடும் அந்த பேச்சுக்கள்…தொட்டுவிளையாட பேச அனுமதிக்கமாட்டாள்… அபி என்றாலும்….சசியின் ரகசிய பார்வை நன்றாக அறிவாள்… அவன் கண்களை அலையும் இடத்தை எப்பவும்…அவனுடன் இருக்கும் போது சரி பார்த்துகொள்வாள்..கழுத்தடியில் எப்பவும் ஷால் கிடAக்கும்…திருடன்…கண்ணை பார்த்து பேச மாட்டான்…உதட்டயே பார்த்து பார்த்து வைத்து இவளுக்கு ..சிலிர்ப்பை தருவான்….
ஒவ்வொரு நேரம்….வெளியில் வண்டியில் செல்லும் போது ஒட்டும் நேரங்களை கொஞ்சம் கூட வீண் பண்ண மாட்டான் …எருமை போல உரசி உரசி….அநியாயம் பண்ணுவான்….இவள் முறைக்க…பின் லேசாய் உரசி…இடம் பத்தல பொய்வேறு…eeeee
இனிமையானவன் சசி….கொஞ்சம் ரெண்டுவயசு கூடுதல் இருந்திருக்கலாம்…சின்னவனா ரொம்ப யூத் தா இருக்கான்…
இப்ப கட்டிலில் இவள் பக்கமாய் ஒழுக்களித்து குழந்தை போல தூங்கும் தன் இளம் கணவனை கர்வமாய் பார்த்தாள்…
என்னா அடம்… சாதிச்சுட்டானே…இப்படி பே ன்னு தூங்கும் இவன் இப்படிலாம் அநியாயம் பேசி கல்யாணம் பண்ணான் சொன்னால்…. பொய் சொல்லாத ம்மா என்பார்கள்…
அவள் ரோஜா இதழ்கள் மென்மையாய் மலர….
ராவா தாங்க மாட்டியா?..வாடா..உனக்கு அதுதான் ஸ்வீட் தண்டனை…அனுபவிச்சுக்கோ…..
அவனை சொன்ன போதே..இவள் உடல் முறுக்கியது.. அவனுக்கு மட்டுமா? என்று எதிர் கேள்வி கேட்டு….
இப்ப கூட போய்.. சம்மதம் என்று வாயில் கூட சொல்ல வேண்டாம்…கூட ஒட்டிப்படு…கட்டிக்கொள்வான்…பாம்பாய் பின்னி பிணைத்துக்கொள்வான்….சாகடிப்பான்…முத்தமிட்டே…
வெறியில் தான் படுத்துருக்கான்…
மனம் டெஸ்ட் பண்ணி தான் பாரேன் உசுப்பேத்த…
குடிச்சிருக்கான்.. பெரிய தப்பு பண்ணியிருக்கான்
சோ கிடையாது..போ போ.. தள்ளி போ…
ஹுக்கும் வாய்விட்டு சொன்னாதான் ..தருவ ன்னு நைசா குடிச்சுட்டு உளருற மாதிரி தான் மனச சொல்லியிருக்கான்…
புரிஞ்சிக்க …உணரு.. அபிராமி…
நீ சொன்ன மாறி இள வயசுகாரன்…பக்கத்தில உண்ண வச்சிகிட்டே சும்மா இருக்க சொல்றது பாவம் இல்லையா?
ஆண்மை என்பது யாதெனில் பிறன்மனை நோக்காதவன்…
நம்ம சசி …உன்னையே தமிழ் நாவல் கதாநாயகன் போல பார்க்கவே இல்லையே அபி…
பாவம் ஏதாவது அந்த அப்பாவி க்கு செய்யேன்….எப்பவும் அவனிடமே வழியும் அவள் கள்ள நெஞ்சம் அவனுக்கே சப்போர்ட் பண்ண…யோசித்தாள்…
விருந்து கொடுக்க….eeeee
விருந்து என்றதும் ..ஏதேதோ என்று நினைக்க வேண்டாம்…eeeee
அதே அதே….சசி ஏங்கும் அந்த உறவு…இளமைக்கு உயிர் உணவு…
எப்படியும் தரப்போவது…என்னைக்கென்றாலும் அவனுக்குத்தான்…அதை ஏன் பாவம் ? அடக்க முடியாம குடிச்சி அழியனும்?..இன்னிக்கு இதை சாக்கு வைக்கிறான்..நாளைக்கு நீ தரல போனேன் ன்னு சொல்லுவான் பயம் கொடுத்தது..
யாரும் விமர்சனம் பண்ணும்படி வாழ கூடாதுன்னே இப்படி பழசெல்லாம் ஒதுக்கி மாறி மறந்து சீராகிக்கொண்டிருக்கும் நேரத்தில் இவன் ஏதாவது சொதப்பி வைத்து திரும்ப அசிங்கப்பட் பிரியமில்லை …
அவனுக்கு சொந்தமானது அவனுக்கே….தரோம்…அவ்வளவே….
அவனுக்கு என்றால் இவள் உடலும் பூரித்து நிற்பது வெட்கத்தையே அபிக்கு தர…சசி எருமை கெடுத்துட்ட என்னையும்…அசிங்கமாவா பேசுற….
கெட்ட வார்த்தை பேசின ல…காலைல உனக்கு இருக்கு தீபாவளி…..வா வா….
ஒன்றும் உணர்வில்லாது மட்டையாகி கிடக்கும் பொழுதில் தவறி கூட தொடாது…பின் நாளின் ஆசை சொல்லும் தன் காதல் கணவனின் மீது பிரியம் அதிகம் தோன்றியது அபிக்கு…அவன் குறைகள் ஏதும் இப்ப கண்ணில் படவே இல்லை…
கணத்துக்கு கணம் நொடிக்கு நொடி காதல் பெருகியது..இது விசித்திரம்…
தரும் போது சொல்லா?..ம்ம்ம்..சொல்லுவேன் சொல்லுவேன்….
என்ன செய்வ சசி?
விளையாட தோன்றியது…அவனிடம்…
லவ்..
ஏழு வருஷம் ஏழு வருஷம் சொல்ரான்.. சித்ராக்கா கல்யாணம் ஆகி 8 வருஷம் இருக்குமே…இவன் எப்ப சொல்ரான் தெரிலேயே..ஏதோதோ சிந்தித்து நல்லா தூங்கிட்டாள் அபி..
சசிக்கு காலையில் எந்திரிக்கும் போதே தலை வலி பிச்சிஎடுத்தது… ரொம்ப நாள் ஆச்சு அந்த பழக்கத்தையெல்லாம் விட்டு….அதனால் ஹாங்கோவேர்…eeee
அபி கொல்லப்போறா !!!! பயந்தான்…
நேரமும் 8மணி காட்ட..கீழே அபி எந்திரிக்காமல் தூங்கி கொண்டிருந்தாள்…
அவ ஏன் கீழே படுத்துருக்கா?
அச்சோ… ரொம்ப கோபம் போல…
இனி…
அவங்கம்மா வீட்டுக்கு போயிருவாளோ?
இல்ல என் இப்படி பண்ண சசி? அழுவாளோ?
109 நாள் ஆகியிருக்கு ..போச்சே…திரும்ப ஆறு மாசம் தண்டனை தருவாளோ?…
உனக்கு அந்த தகுதி கிடையவே கிடையாது சொல்லிருவாளோ?
அடம் பிடிச்சி சாப்பிட மாட்டாளோ?
எல்லாத்தையும் கூட ஏத்துக்கலாம் சாப்பிடாம அடம் பண்ணா தான் கஷ்டம்….இன்னும் மெலிஞ்சி போயிருவா… நொந்துகொண்டான்..
நாம தானே நல்லா போய்ட்டு இருந்ததை கெடுத்தது…அந்த பொம்பளை அங்க இங்க கை வச்சா உனக்கு ஏன் சூடு ஏறுது…சசி மனம் கண்டித்தது….
அவளால் ஒன்னும் ஆகலை… அந்த நாயை தான் துரத்திவிட்டுட்டேனே…இது வேற… eeee
அபியின் விரல்கள் அப்படி அங்கிங்கு படனும் நினைச்சப்ப தான் ஆசைய தாள முடில…
அதெல்லாம் சாத்தியமா? தெரியாமலேயே…
என் அபி …என் ஏஞ்சல்…அவள் அப்படிலாம் தொடவேவேணாம்..அவ வந்தா மட்டும் போதும்… eeee
அவளுக்கு எந்த சிரமத்தையும் தராம “நானே” எல்லாம் பண்ணிடுவேன்….eeee
ஐயோ !!! இவரு உலக தியாகி மக்களே….eeee
லூசு சசி…காதலில் ஏது சிரமம்…ஒன்லி சுகம் தான் ஓருவருக்கொருவர் கொடுத்து வாங்கிபரிமாறிக் கொள்வது….
பண்டமாற்று முறை….eee
அவ எந்திரிக்கறதுக்குள்ள ஓடிரனும்….ஹாஹா..
புறக்கடைக்கு போனான் இப்பல்லாம் ஓபன் குளியல் தான்… அபி பச்சை தண்ணீர் ஊற்றுவதற்கு முன் இவனே தானாய் ஊற்றிக்கொள்வான்…இப்பல்லாம் ஜில் தண்ணி கூட உரைப்பதில்லை… eeee
ஐயன் டேபிளில் இவனுக்கு எடுத்து வைத்திருக்கும் சாதா ட்ரெஸ் செட்…கடைக்கு தனியா காக்கி செட்…பாலிஷ் போட்டு வைத்திருக்கும் பிளாக் ஷூ…பக்கத்திலேயே லைட் கலர் சாக்ஸ்…இவனை தேவனாய் நடத்தினாள் அபி…
அவன் அழுக்கு உலகம் இப்ப தூய்மையாய்..ஓர் லயமாய்…குளித்து முடித்தவன்….இன்று அங்கு போய் மாத்த அவசியமில்லை..காக்கி இங்கேயே போட்டுப்போம்…
அபி காலேஜ் போலயா?..இப்படி படுத்தே கிடக்கிறாளே…ஜூரமோ?
எழுப்பினா மாட்டிப்போம்… இப்படியே விட்டும் போகமுடியாது..வீட்டில் சாப்பிடலன்ன இவ சாப்பிடமாட்டா…
மனம் பாட்டுக்கு பேசிக்கொண்டே இருக்க…
காக்கி போட்டு….நல்லா தலைவாரி…அரும்பு மீசை கொஞ்சம் பட்டையாக மாறி இருக்க அதுக்கு ரெண்டு வாரு வாரி கொஞ்சம் பெருமைப்பட்டுக்கொண்டான்… தான் பெரிய ஆண் என்று…கல்யாணம் ஆகிருச்சி..கரன்ட் பில் கட்டுறேன்..வாடகை கொடுக்கிறேன்…இங்கிலீஷ் பேப்பர் …பாலுக்கு பணம் தரேன்…பொறுப்பாய்ட்டேன்…
பேங்க்ல அக்கௌன்ட் வச்சி பணம் மாத்தி உடுறேன்…அபி லேப் மூலமா…வாவ்.. நாங்க தொழில் அதிபராக்கும்….eeee
என்ன பிரின்ட்ஸ் தான் கட் பண்ணிட்டேன்..ரோட்டுல வெளில பார்த்தா என்ன மச்சி எப்படி இருக்க? என்ன பண்ற? கேள்வியோடு சரி..ஜனா வீட்டில் அது சாப்பிட்டோம் இதுனாப்பிட்டோம்…அவன் பொண்டாட்டி அண்ணே அண்ணே ன்னு எல்லோரையும் கூப்பிடுது.. சோறாக்கி போடுது….
செம சோசியல் டைப்…சசி.. ராஜா பொறந்த நாள்லாம் அங்க தான் கொண்டாடினோம்….
இன்னோரு நட்பூ பெருமை பேசிய போது இவனுக்கு குத்தியது..நாம ஒன்னுமே செய்யறதில்லை…
நீ கூட்டிட்டு தான் போயேன் சசி…
அபி உன்னையே வீட்டுக்குள்ள விட மாட்டா..
அவனுக்கு மட்டும் இல்லை இந்த ரூல்…
அவ காலேஜ் போறா வரா ..யாரையாச்சும் கூட்டிட்டு வராளா…யாரையும் இங்கு கூட்டி வந்ததுமில்லை…இவனை என் கணவன் என்று காட்டிக்கொண்டதும் இல்லை..போவது வருவது தெரியாமல்…அமைதியாய் அதிலும் கூட ஓர் பண்பு இருக்கும் அபியிடம்….
அபி எனக்கு கிடைக்க வேண்டிய பெண்ணே கிடையாது…ஓர் ராஜ வம்ச உடல் மனம் கொண்ட அமெரிகையான பெண்..இவளிடம் எந்த சில்லறைத்தனமான வேலைகளும் கிடையாது….ஆம் என்றால் ஆம்…இல்லை என்றால் இல்லை…ஒரே சொல்…ஒரே வில்…தீர்க்கமான தெளிவான சிந்தனை…கொண்டவள்…
கோபம் வந்தால் ..அம்மம்மா…என்னா வேகம்….
இப்ப அது தான் அவ முகத்தில் விழிக்க முடில…அவமானமா இருக்கு…
எழுப்பிடலாம் திட்டினாலும் பரவால்ல..அடிச்சாக்கூட வாங்கிக்கலாம்..
அவ அடிச்சிக்கிட்டா தான் டேஞ்சர்…
பக்கத்தில் அடித்துக்கொள்ள கூரான பொருள் எதாவது இருக்கா? பார்த்துக்கொண்டான்…
முன்னெச்சரிக்கையாக….eeee
அவன் காதல் பெண்…அபி..
மல்லார்ந்து ..முகத்தில் ஓன்றிரண்டு சிலுப்பிய முடிகளோடு…தன் புறங்கையை நெத்தியில் வைத்து…இன்னொரு கை வயிற்றில் குறுக்கில் போட்டு….துளி கூட துணி விலகாமல் மெழுகு பொம்மையாய் படுத்திருந்தாள்..சீராய் ஏறி இறங்கும் மார்பு மட்டுமே தூங்குவதை சொன்னது…
அபிமா….அபி..பயத்துடன்…எழுப்ப…
ம்ம்…காதில் கேட்டு அவளை அடைந்த மறுநொடி…
ஹாங்..என்ன ..சசி..அவன் முகத்தில் விழித்தாள்…அபி…
முதன் முதல் ஆர்வமாய் பார்க்க விழைந்தவள்..நைட் குடிச்சுட்டு வந்தான்..கவனி விடாத….அறிவு போட்டுக்கொடுக்க..
தன் வெளுத்த ரோஜா இதழ்களை சுழித்தவள்…
என்ன?…மிரட்டினாள்… புருவம் உயர்த்தி….
கிலி பிடித்தது சசிக்கு….பாவமாய் தலை குனிந்து கொண்டான்…
வழிந்தால் கொன்னே போட்ருவா…சசி மைண்ட்…
தலை கோதி ..ஏன் நயிட் அப்படி?…எழுந்து அமர்ந்து கேட்க…
இன்னும் தலையை கிழே போட்டான் சசி…குற்ற உணர்ச்சி தாங்க முடில…
அபி ஏதாவது முடிவு எடுத்துவிட்டால்..இந்த வீடு சௌகரியங்கள்..அமைதியான வாழ்க்கை எல்லாம் போயிரும்..பழைய படி பரோட்டா மாவுல தான் உருண்டு தூங்கனும்…முன்னாடி னா தெரில..இப்ப இவனுக்கே இவன் அம்மா வீடு கெட்ட நாத்தம் நாறுவது புரிந்தது…சேருவாறு அப்படி…eee
சுத்தம் பழகிவிட்டான்.. திருநீறு நெற்றியில் இட்டு கடைக்கு போனா அவ்ளோ ஒரு விளக்கம் கடையில்…முன்னாடி ஜாப் க்கு போய் கேட்டு வாங்கி செய்தததெல்லாம் ? மாறி..வரும் ஜாப் நேரத்துக்கு முடித்து தரணுமே ங்குற அளவு வியாபாரம் கணிசமாக வந்தது….அதுவரை தொழில் அவனை வாரி அணைத்துக்கொண்டது..
முன் போல அரட்டை பாதி வேலை பாதி என்று இருந்தால்..முன்னேற்றம் இருந்தே இருக்காது..சசி தாத்தா ஆகும் வரை அப்படியே இருந்திருப்பான்..
இப்ப வாழ்க்கை பற்றின நிதான குணம் சசிக்கு வந்திருந்தது….
இன்னைக்கு அபிகிட்ட என்ன சொல்வது? சிக்கல்.!சசிக்கு…
எழுந்தவள் பாத் ரூம் போக….
வெளியில் டில்லி குரல்..அண்ணே .சாவி..
போய் கதவை திறந்தவன்…கடை சாவியை கொடுத்து…திறந்து வேலை பாருங்க..இப்ப சாப்பிட்டுட்டு வந்துடுறேன்…..அனுப்பிவிட்டு…
டீச்சரம்மாவிடம் வந்து நின்றான்…
அவள் பல் விளக்கி முகம் கழுவி இருந்தாள்… திட்டு திட்டாய் தண்ணீர் முகமெங்கும்..
அவள்
அடர்த்தி புருவம்..கண் ரப்பை என்று….இவனுக்கு நாவால் அதை நக்கி எடுத்து சுவைக்கும் ஆசை ..நேரம் கெட்ட நேரத்தில் வந்தது….
10
மனம் ஒன்று நினைக்க ..சேவகனாய் கை டவல் எடுத்து நீட்டி..
காலேஜ் போலயா?….eee
வாங்கி முகம் ஒற்றியவள்…
அவன் பக்கா ட்ரெஸ்ஸிங் யும்… முகம் மட்டும் லேசாய் உப்பி கண் இமை வீங்கி நார்மலாக இல்லாததும் உத்து பார்த்துவிட்டு..
ஒரு முடிவு எடுக்கணும் அதுக்கு லீவு போட்டுட்டேன்…..என்று
இவனுக்கு திகில் கொடுத்து…
நேத்து ஏன் இப்படி?…ம்ம்ம்ம்….அதட்ட
சாரி அபிமா…கொஞ்சம் ஷேக் ஆகிட்டேன்..இனி..இதுமாதிரி நடக்கவே நடக்காது அபிமா…ப்ளீஸ் ..என்று தொடர்ந்து கெஞ்சி… இன்னும் ஆறுமாசம் கூட தள்ளி வச்சுக்க தாங்கிப்பேன்.. விட்டுட்டு போயிராத… அபி…
பாவம் போல அப்பாவியாய் கெஞ்ச…அந்த வளர்ந்த பிள்ளையின் கெஞ்சல் இவளுக்கு தாய்மை உணர்வை தர….
பெரிய மனது பண்ணுபவள் போல…
சரி இன்னையிலிருந்து 6 மாசம் கணக்கு வச்சுக்க பாவா…சரியா? குறும்பாய் சொல்ல…
அவளின் இந்த கேலி அவனுக்கு தான் புரியாதே…eee
முகம் மலர ஏத்துக்கொண்டான்…லூசு சசி…eee
இது குடிச்சத்துக்கு….பாவா….கெட்ட வார்த்தை பேசினத்துக்கு…என்ன செய்யலாம்?…
இன்னும் இடுப்பில் கைகொடுத்து மிரட்டி கேட்க…
நானா?…ஐயோ..அது நிறய வருமே?…என்ன வார்த்தை சொன்னேன் தெரிலேயே?…eee
பேஜாரானன் சசி….
காலில் விழுந்துடலாமா?….
யாரு அந்த பொம்பள?..அபி…
இவனுக்கு இன்னும் இன்னும்…சங்கடமாக ..
.
கெட்ட பொம்பளை அபி…ஒன்னும் இல்லை…இனி இப்படி நடக்கவே நடக்காது… உன் மேல ப்ரோமிஸ் அபிமா…எல்லாத்துக்கும் சாரி.. சாரி…. மா..
ரொம்ப கெஞ்சுவது இவளுக்கு அவன் மேல் பரிதாபம் கொடுக்க…விட்டுவிட்டாள்…
கிளம்பிட்டியா? பாவா..
ம்ம்ம்..சொல்லிட்டு போலாம் ன்னு நிக்குறேன்…
உடம்பு சரியில்லையா? அபி..கண்ணெல்லாம் சிவந்து கிடக்கு…
இயல்பாய் இவள் கழுத்தில் கை வைத்து பார்க்க…
இவள் உடலெங்கும் வீணை நரம்பை சுண்டி விட்டாற் போன்று ஓர் சுக அதிர்வு….
இவளுக்கு இன்று அவனுக்கு கொடுக்க போறோம் தெரியும்…
அதனால் உள்ளே அனலாய் வெளியே குளிராய் வினோத காய்ச்சல் கொண்டது உடல்…
அகன்ற அழகிய விழிகளில் செவ்வரி ஓடி மயங்கி பாதி தான் இமை திறந்து கிடந்தது…
அவன் தான் தாங்க முடியாது என்றான்…
இங்கோ இவள் நிலையோ அவனுக்கும் மேலோ?
நினைக்கும் வண்ணம் பெண்மை கனிந்து சிவந்து வெட்க சாயம் பூசி ஓர் பூரிப்பில் நிறைந்திருந்தது…
சசியை முழுதும் எட்டிப்பார்க்க முதன் முறை நாணம் தடுத்தது…
கழுத்து தொட்டு பார்த்தவன் குளிர்ந்து கிடக்க… நெத்தி தொட்டு…
தலை வலிக்கிதா?.
அபி ஏதும் சொல்ல விருப்பமில்லாமல்
ம்ம்ம்ம்ம்…
வா நீயே காபி போடு ரெண்டு பேரும் குடிக்கலாம்…கூப்பிட்டான் சசி..
ம்ம்….இப்ப ஷால் போடல அவ…
நிதானமாவே..சமையல் கட்டுக்கு போனவள்…
ஏற்கனவே அவன் உள்ளே எடுத்துவைத்திருந்த பாலில் இருவருக்கும் கலக்கி
கொடுத்து ..
உனக்கு கண்டிப்பா கடுமையான தண்டனை கொடுக்கணும் பாவா…இன்னைக்கு டிபன் நீ செய்…நான் வேடிக்கை பார்க்கிறேன்…
மேடையில் ஏறி உக்கார்ந்து கொண்டாள் சட்டமா…
சரி என்று பலி ஆடு போல தலை ஆட்டிய சசி…
என்ன டிபன் செய்ய அபி?
பூரி உருளை மசால்…
பொருள்களை இடம் காட்டி காட்டி சொல்லி செய்ய வைக்க..பரோட்டா கடை பத்தி தெரியும் ஆதலால் நல்லாவே செய்தான் …ஈசி யும் கூட…
கிழங்கு தான் அவனை பாடாய் படுத்தியது…வேலையும் இழுத்தது…
இருந்தாலும் மனம் தளராது அயராது செய்துமுடித்து… eeee…
அபியிடம்..பரவால்ல..கமெண்ட் வாங்கி….
தானும் உண்டு….இவள் இன்னொரு முறை கள்ளிச்சொட்டு காபி கொஞ்சமாய் போட்டு பாதி பாதி பிரித்து தர திவ்யமாய் ..நல்லா நுணச்சி ருசித்து நிறைவாய் கடைக்கு கிளம்ப…
பூட்டிட்டு போயிரு பாவா….நான் தூங்க போறேன்…அம்மா வந்தா அரை கிலோ ஆட்டுக்கறி வாங்கி கொடுத்து விடு….
விடை கொடுத்துவிட்டு கட்டிலில் அவன் படுத்து கலைந்து கிடந்த இடத்தில் படுத்தாள்…அவன் வாசம்…சுகமாய் கண் மூடினாள்…
நைட் சம்மதம் சொல்லும் போது என்ன சொல்லுவான்?
என்ன செய்வான்?..
சசி இப்ப உன் கிட்ட சொல்லியிருந்தா கடைக்கு இப்படி யூனிபார்ம் ல போவியா?…ஹாஹா…
பொறுக்கி….கெட்ட வார்த்தை பேசுற….அது நியாபகம் வர உதடு கடித்து கண் மூடி கொண்டாள்…என்னென்னவோ செய்தது..
அவன் இப்பவே அவளிடம் அப்படி நடந்து கொள்வது போல கற்பனை…
உடம்பு சோம்பேறி கொடுத்தது….நரம்பெல்லாம் முறுக்கி திருக்கி அவளை பின்னி கொண்டு எழ விடவில்லை….மயங்கி தூங்கி விட்டாள்..
சமயலறையில் அம்மா உருட்டுவது கேட்க…முழிப்பு வர..!எந்திரித்து போனாள்…
அம்மா வெங்காயம் நறுக்கி கொண்டிருக்க…
கொஞ்சமா மிளகு கறி செஞ்சுட்டு மிச்சத்தை குழம்பு வச்சிரு ம்மா… ரசம் ..ஒரு கிண்ணம்….
தலை கலைந்து.. கண் சிவந்து…கொட்டாவி விட்டு மகள் நலுங்கி நிற்க ..
உடம்பு சரியில்லையா?அபி..இப்படி இருக்க மாட்டியே…
கரிசனையாய் தாய் கேட்க..
நைட் எக்ஸாம் க்கு படிச்சேன்…அதான்…திரும்ப அவள்…கண் சொக்க…
சுத்தி போட்டுட்டு போறேன்..கண்ணு பட்டுப்போச்சு போல…
ஆமாம் ரொம்ப சசி கண்ணு பட்ருச்சு…ரகசியமாய் சிரித்துக்கொண்டாள் மகள்…
படுக்கிறேன் மா..போய் செல்லில் புதுப்புது காதல் பாட்டுக்களை போட்டு…மனதை காதலில் கரைத்தாள்….
அம்மா சுத்திப்போடும் வஸ்த்தைக் கொண்டுவந்து இவளுக்கு திருஷ்டி சுத்திட்டு…
இரவு மாப்பிள்ளைக்கும் இதே மாதிரி செய் அபி…
இப்ப மாப்பிள்ளை ரொம்ப திருத்தமா ஆகிட்டாரு…
கண்ணு படும்….பிள்ள…
…
இவள் சசி பத்தி பேசியதும்…சுகமாய் கேட்டு கிடந்தவள்…. சும்மா இருக்க…
செய்வியா? அபி…
கண்டிப்பா ….கல் உப்பை எடுத்து மூணு சுத்து சுத்தி …தண்ணி குழாயில் கரச்சி விடணும்…அவ்ளோ தானே செஞ்சிடுறேன்….ம்மா..சலித்துக்கொண்டாள்…
அம்மா விடை பெற்று போய்விட…
இவள் இப்படி இருக்க மாட்டாள்…குளிக்க கூட போர் அடிச்சு …ட்ரெஸ் பண்ணாம…சோம்பேறியாய்…
எல்லாம் சாயங்காலம் பார்த்துக்கலாம்…விடு….
திரும்ப படுக்கை…
மதியம் சசி வந்தப்ப.. நீயே போட்டு சாப்பிடு பாவா சொல்லி …உதட்டுக்குள் கள்ள சிரிப்பு சொருகி வைத்து…கண்ணை மூடி கிடந்தாள்…சுவற்றை பார்த்து….
உறக்கத்திற்கு அவன் அவளருகில் படுத்தபோது…..ஜிவ்வென்று ஈர்த்தது அவன் காந்தம்….
சாப்பிடு அபி…அத்தை ஆக்கி வச்சது அப்படியே இருக்கு….
இன்னும் கோபத்தில் தான் சாப்பிடாமல் இருகிக்கிறாளோ என்று சசி கேட்க…
பசிக்கல பாவா…அப்புறம் சாப்பிட்டுகிறேன்…
சாயங்காலம் சீக்கிரம் கடை சாத்திட்டு வா பாவா.. கோயிலுக்கு போலாம்…
எப்ப வர…
7 மணி போதும்….
சரி ..எங்க அபி?…
தெருமுனை பிள்ளையார் கோவில் தான்.
ஏதும் விஷேஷமா?..
ம்ம்ம்.நாலுமுழம் மல்லிப்பூ வாங்கிட்டு வா.கொஞ்சம் ஸ்வீட்ஸ்யும்..
சரி ..வாங்கிட்டு வரேன்….
சொன்ன படி..பொருட்கள் வாங்கி.. வந்து நிற்க…
இவள் கல்யாண புடவையில்…தேவதையாய்…எளிய அலங்காரத்தில் கண்களை உறுத்தாது…
இவனுக்கு புதிய செட் உடை…அம்மா முன்பு எடுத்து தந்தது…
சாப்டியா மதியம் அபி…சசி அக்கறையாக வினவ..
ம்ம்ம்…சொன்னாலும்…
அவள் சோர்ந்து தான் கிடந்தாள் ..லேசாய் மெலிந்து…ஒரே நாளிலேயே…காதல் சுமக்க முடியாமல்…
பசலை பாய்ந்து….!!!
7 வருஷம் எப்படி தாங்கினான் சசி..பாவம் ..என்று தன் இணையின் மேல் கனிவு வந்தது…
அவனும் குளித்து புது உடை போட்டு வர..இவள் அவன் வாங்கி வந்த பூவை…தன் நீள கூந்தலுக்கு போட்டியாக வைத்துக்கொண்டாள்…
இருவரும் காட்சி கவிதையாய் கோவிலுக்கு நடந்தே சென்றார்கள்…
அங்கு முழுமுதற் கடவுள் முன்….மனசார சாமி கும்பிட்டாள்.. இன்று தொடங்கும் தன் அகம் செழிக்க…
இருவர் பெயரும் நட்சத்திரமும் சொல்லி அர்ச்சனை கொடுக்க…
சசி எப்பவும் போல பிள்ளையாய் அவள் முந்தி பின்னாடி சுற்றிக்கொண்டு….இவள் அன்பை மொத்தமாய் வாரிக்கொண்டான்…
குங்குமம் நெற்றி வகிட்டில் வைக்க சொல்லி தர அப்படியே செய்தான்..ஆசையாய்….
இவளும் அவனுக்கு திருமண் இட்டு…இருவர் மனமும் நிறைவை எய்த..
மோனமாய் திரும்ப வீட்டுக்கு நடக்க…வாசலில்..
ஒரு வேலை இருக்கு அபி நீ போ .. முடிச்சுட்டு வரேன்…
வெளியில் நிறுத்தியிருந்த வண்டியை எடுக்க போக…
கையை பிடித்துக்கொண்டாள்….
தலை அசைத்து போகாதே என்பது போல…
ரொம்ப முக்கியமா? பாவா…
அபியின் கண் கவ்விய தன் கண்களை பிரிக்கமுடியாமல்…
சரி போன்ல சொல்லிக்கிறேன்…..விடு…
வண்டியை கேட் திறந்து உள்ளேவிட..
அவன் உடை மாற்ற போக….
இருக்கட்டுமே சசி…என்றாள்….
வா சாப்பிடலாம்…எடுத்துவைத்தாள்… டிவி பார்த்துக்கொண்டே..சசி சாப்பிட தொடங்க…
அபி…..குத்துக்கால் இட்டு..
தன் சிவப்பு கல் மூக்குத்தி மினுங்க…அவனையே பார்த்துக்கொண்டிருந்தாள்…ஆர்வமாய்…உதடு கொஞ்சம் கலர் மாறி இருந்தது…ஆளும் இப்ப பார்கிறமாறி இருக்கான்…உடம்பும் கறி வச்சிருக்கு… ம்ம்ம்…ரசித்தாள்…புதிதாய்…
உனக்கு ஏதாவது பிரச்சனையா? சசி…
என்ன? எதுக்கு? தெரியாமல் முழித்து…பின்
இல்லையே….
தினமும் டிவி ல 11 மணிக்கு மேல ஒரு டாக்டர் நிறைய சொல்றாரு ..அவரை போய் பாரு சசி…
11 மணி டாக்டரா?..இது விவகாரமா விஷயம் ஆச்சே…eeee
ஏன் இப்படிலாம் பேசுற அபி….புரியவே இல்லை….
புருஷன் முன்னாடி பொண்டாட்டி இப்படி அலங்காரம் பண்ணி குறு குறு ன்னு பார்த்துட்டே இருக்கா…அவளை பார்க்காம ஒருத்தன் டிவி யை பார்த்தா …கோளாறுன்னு தானே தோணும்…மெய் தானே சசி….
மிக அழகாய் வார்த்தை கோர்த்து ..உறவுக்கு சம்மதம் மறைவாய் அபி..கொடுக்க..
மக்கு சசிக்கு புரிய ஐந்து நிமிஷங்கள் ஆகின…
சசியின் சிறிய விழிகள் அதிர்ந்து விரிய…
சாப்பாடு இறங்கவே இல்லை…தொண்டையில் அப்படியே நின்றேவிட்டது…
நிஜமாவா? அபி…ம்ம்ம்…கண்கள் பளிச்சென்று மின் விளக்குகளாய் ஜொலிக்க…வெளிதெரியா அவன் அழகிய பற்கள் இலங்க…. இவள் முகம் பார்க்க விழய…
அவனை எதிர்கொள்ளமுடியாது… லேசாய் மூச்சு வாங்கியது .அபிக்கு…
தலைகுனிந்து கொண்டாள் நாணம் மிக…
அவளின் இந்த செய்கை அவனுக்கு sss… சொல்ல…
சமயலடிக்கு ஓடிவிட்டான் சசி…கை கழுவ…படு சுத்தக்காரனாய்…
அபி…
எச்சி கையால் தொடவிடமாட்டா….உஷார் சசி…eeee
ஹாஹா….
இன்னும் ஓவராய்….
பொறுப்பாய் எல்லா பாத்திரமும் சசி எடுத்து வைத்துவிட்டு…
தரையோடு அமர்ந்து தரை பார்திருந்தவளை…
அருகமர்ந்து…கை பிடித்து விரலில் இருந்து முத்தம் தர…
எதிர்பக்கம் முகம் திருப்பி கொண்டாள் அபி…உதடு கடிப்பதை அவன் பாரக்காவண்ணம்…
விரல்கள் தாண்டி…வளையல் தாண்டி முழங்கை ஊர்ந்து ஜாக்கெட் கை கிட்ட வந்த அவன் உதடுகள் பக்க கழுத்தில் முடிய
தாபம் தாளாமல் இவள் தன் நாடி கொண்டு அழுத்தி லாக்
பண்ண… தன் உதடை உருவியவன்…அவள் உதட்டை கடித்து கவ்வி அவள் இதழின் அமுதங்களை உறிய…அம்மம்மா…துடித்துவிட்டாள்… சுகத்தில்…
விடவே இல்லை அவன்…திரும்ப திரும்ப…நாட..அவன் வெறி…இன்னும் தேவை தேவை என்றது இவள் உடலும்…வெட்கமே இன்றி..
அவர்களின் அழகிய கூடு..
யார் தொல்லையும் கிடையாது… அவர்களால் அவர்களுக்கே அவர்களே உண்டாக்கின வீடு…
முத்தத்தின் சத்தம் விடாமல்…மூச்சு வாங்கி வாங்கி…நம்ப முடில அபி…தாங்க்ஸ் …தாங்க்ஸ் பிதற்றினான் அந்த அபிகிறுக்கன்…நிறைய தெரில அவனுக்கு…கொக்கி பற்றி தெரில…பாவாடை நாடா பற்றி தெரில…தடுமாறி போனான்…பெண்ணை பற்றி ஒன்னும் தெரில..ஆசைமட்டும் கழுத்துமுட்டும்… eeee
அபியே அவனுக்கு உதவி செய்ய….பரிசுபொருள் போல ஆர்வமாய்…..ஆசையாய் ..சசி பார்வை…eee
ரூம்க்கு போயிரலாம் சசி…அவன் அணைப்பில் சிக்கி முக்கி கிடந்தவள் மெதுவாக சொல்ல…
கலைத்து போட்ட துணிகளை அவளோடு அள்ளி கொண்டு…அவர்கள் அறைக்கு தூக்கி போனான்….சசி இரும்போடு வேலை பார்ப்பவன் வலிய உடல் கொண்டவன்…அசால்டாய் தன் கரும்பை சுமந்தான்..
லைட் எல்லாம் ஆஃப் பண்ணி…கட்டிலில் இவளை விட…
ஜன்னலில் முழு நிலா வெளிச்சம்…குளுமையாக… இதமாக இருவருக்கும்…
பட்டு சேலையில் இவள் அட்டையாய் சுருண்டு கொள்ள திரும்ப வெட்கத்தில்…
இப்ப உரிமையாய் விலக்கினான் சசி…திரும்ப முதலில் இருந்து…எதைவிடுவது கொள்வது தெரியாமல் மோகத்தில் தவித்தான் . அவ்விளைய கணவன்…
இவ்ளோ சுகமா இது?…அபி உதட்டைபிச்சி எடுத்து தின்றான்..
முத்தம் …முத்தம் …முத்தம்…..
முத்தம் வைக்க வைக்க அவ்விடத்தை மறந்து திரும்ப திரும்ப…முத்தமிட்டு…மெயின்க்கு வராமல் அட்டெம்ப்ட் ஸ்டுடென்ட் என்பதை நிரூபித்தான் சசி….eeee
அபியா முன்வந்து அவனை தன்னுள் கவிழ்த்துக் கொண்டப்ப… இவளை ஒருவழி ஆக்கி விட்டான்…
வலிக்குது…அவள் அவனை தள்ளிவிட…மிட்டாய் பிடுங்கின பிள்ளையாக சசி….
மெதுவா சசி..இவள் கண்ணில் நீர்ப்படலமாக விட்டுக்கொடுக்க….இருளிலும் அது சசிக்கு ..தெரிந்து விட…அவளைக்கட்டிக்கொண்டான்…
வேணாம் ..உனக்கு ஏதாச்சும் பிரோப்ளமா இருக்கும் டாக்டர் கிட்ட போய்ட்டு அப்புறம்…ம்ம்ம்இப்ப வேணாம்….
அவன் விட்டுத்தந்து..இது போதும்..இவள் வெற்றுடலை கட்டிக்கொண்டு அமைதி ஆக…
நீ வேணும் சசி இப்பவே வேணும்..உன்னை மாறி லூஸா 7வருசமெல்லாம் காத்திருக்க முடியாது……ஐ லவ் யூ சசி…மந்திரமாக அபி….அவன் உதட்டை கவ்வி….கொடியாய் பின்னிக்கொண்டு…அவ்ளோதான்…இருவருக்கும் வலிகளோடுதான் முதல் காதல்…
இருவரும் ஒருவருக்கொருவர் விரும்புகிறோம் நேசிக்கிறோம் புரிதலாய் இருக்கிறோம் சொல்ல இந்த உறவு ஒரு சாட்சி….அவ்வளவே…!!!!
இருவருக்கும்..முதல் அனுபவம்…..சசிக்கு ஆர்வக்கோளாறு தாங்காமல் உற்சாகமாக இருக்க…eeee
அபி தான் சோர்ந்து கிறங்கி போனாள்… இருந்த கொஞ்ச சத்தும் சசி போட்டு வாட்டிய வாட்டில் பாதியாய் குறைந்துவிட்டது…
அவள் காலை பூரி சாப்பிட்டதோடு சரி..பகலில் சசியை நினைத்து காதல் கனவு கண்டதால் பசிக்கவே இல்லை.. அதன் எபெக்ட்..இப்ப …eeee
அவன் அணைப்பை விட்டு எழுந்தவள்…உள்பாவாடையை மார்பில் கட்டிக்கொண்டு…சுருண்டு கசங்கி கிடந்த
பட்டு புடவையை நீவி மடித்து காற்றாட ஒரு சேரில் போட்டு விட்டு…
ரெஸ்ட் ரூம் போய் சுத்தமாகி ..முற்றிலும் வேறு உள்ளாடைகள் மாற்றி.. நைட்டி யை போட்டு…கொஞ்ச நேரம் …கண் அயர…
சசி…அபியின் கலைந்த கூந்தல் பூவோடு பின்னங்கழுத்தில் அழுத்தி முத்தமிட்டு அடுத்த உறவுக்கு அழைப்பு தர…
சுத்தமாகிட்டு வா சசி…கண் திறவாமலே அபி சொல்ல…
இவள் கைய எடுத்து அவன் தலையில் வைத்தான் பேசாமலே…
குளித்தே விட்டான்…அபியின் குணம் அறிந்து…eeee
அப்டியே ஈரம் துடைக்க கூட செய்யல சசி பக்கி…
அப்படியே படுத்திருக்க…ம்ம்..முறைத்தவள்…எழுந்து இவள் முகம் துடைத்த டவலால் துவட்டிவிட்டாள்… குழந்தைக்கு செய்வது போல…சொக்கித்தான் போனான் அந்த இளம் காதலன்..இந்த ஜென்மத்துக்கு இந்த சுகமே போதுமே …சசி மனம் களித்தது…
நைட்டியில் தெரியாத இடையை தொட்டு தடவ ஆசை பட்டு..கை யால் துழவ …அபிக்கு அது கூச்சத்தை தர ..லேசாய் நெளிய…அவனுக்கு இன்னும் ஆர்வம் கூட கைகள் விரல்கள் உதவியோடு திருட்டுத்தனமாய் மேலே ஏற.ஏற..பட்டென்று தட்டிவிட்டவள்…
நெத்தியோடு நெத்தியோடு முட்டி …
சேட்டை ..ம்ம்ம்..நீ அவ்ளோ பெரிய ஆளா? ஓய்ய்.. சசி…அழுக்கு பன்னி குட்டி….என்ன கை இஷ்டத்துக்கு அலையுது…லேசாய் தன் அழகிய எயிறுகள் இலங்க….கண்ணோடு கண் கொண்டு அபி கண்ணியமாய் காதல் பேச….
மயங்கி போனான் சிறுப்பிள்ளையாய் …சசி..
அசடு வழிந்து முழுக்க அவளை அணைத்துக்கொண்டு…
இது கனவு இல்லையே கண்ணம்மா?..அவள் கண்ணை விட்டு கண்ணை பிரிக்காது… கேட்க…
இல்லை ..என்பதாய் அபி தலை அசைக்க…
இவனால் சிவக்கவைக்கப்பட்ட ரோஜா அதரங்கள் சசி நாக்கில் எச்சில் ஊற வைக்க…
ஒரு முறை அபி?…லூசு மாறியே கேட்டான்…தப்பா…eeee
இவளுக்கு அது ஏதேதோ செய்யவா? கேட்கிறான் என்ற கற்பனையை தர…
முதலில் சாப்பிடலாம் சசி..அப்புறம்….ம்ம்ம்…நாணி சொல்ல..
இந்த முறை மட்டும் அபிமா முடில…அருகே நெருங்கி மோப்பம் பிடித்து கொண்டே பிலீஸ் அபி…
ம்ம்…முடிக்கக்கூட இல்ல உதடு கடித்து திரும்ப திரும்ப முத்தம் விடாமல்…போதாமல் அள்ளி அள்ளி குடித்து களைந்தவன்..மூச்சி வாங்கி நிறுத்தி …
இப்ப சாப்பிடலாம் வா…
அவ்ளோதானா சசி…பிராடு….அபி..eeee !!!!
அவளோடு சேர்ந்து இவனும் திரும்ப ஹாலில் டிவி அருகிலேயே தரையில் எடுத்து வைத்துக்கொண்டு …
சாப்பிட அமர்ந்தவன்…நிறைவாய் அபியை பார்த்து …
அபிம்மா….
சொர்க்கம் எப்படி இருக்கும் கேட்டா நம்ம வீட்டை சொல்வேன் அபி..அப்படி ஒரு சுகமா இருக்கு ..அபி..சந்தோசமா இருக்கு..நிம்மதியா இருக்கு அபிமா…
இச்சு இச்சு இச்சு என்று ஏடா கூடமான இடத்தில் வாய்வைத்து முத்தமிட…இன்னும் சுகத்தில் சோர்ந்தாள் அபி..
இது சூப்பர் சசி….அபி eeee !!!!
உணர்வில்லாது விழுந்து விடுபவள் போல மயக்கம் …உடல் பலகீனம்…
பிள்ளை தாங்க சத்து வேணும் அபி …சத்துள்ளது சாப்பிடு…தாய் சொன்னபோதெல்லாம் .. உதாசீனப்படுத்தியவள்…
புருஷன் வேகம் தாங்க முதலில் சத்துவேணும் போல இருக்கே…..இதைத்தான் மறைமுகமா சொல்லியிருப்பாங்க போல…முதல் உறவிலேயே மலைத்தாள் அபி…இன்னும் நிறைய நிறைய இருக்கு தெரியாமலேயே….eeee
அவனும் எங்கு சாப்பிட்டான்?..
பாதி சாப்பாட்டில் தான் எழுப்பிய சசியின் மேல பாசம் பெருக
சாப்பிடுங்க பாவா… கடைசியில் “ங்க” சேர்த்துவிட்டாள் வெற்றிகரமாக….
சசின்னே கூப்பிடேன் அபி..அது ரொம்ப நேட்சுரலா இருக்கு …..ஆச்சர்யமாய் சசி…
சும்மா சசி இது..அடுத்தவங்க முன்னாடி மரியாதையாய் பேசனும்ன்னு பயிற்சிக்கு கூப்பிடுறேன் பாவா….
நீங்களே சொல்லுங்க…நமக்கு என்ன தகுதி இருக்கு? மத்தவங்க மதிக்கிற அளவு…
இன்னும் 0 ல தான் நாம இருக்கோம் பாவா…
நாம் முதலில் ஒருதற்கொருத்தர் மரியாதை கொடுத்து வாழ பழகினோம்ன்னா மத்தவங்க சும்மா ஒரு நல்ல எண்ணமாவது வைப்பாங்க…
அப்புறம் கொஞ்சம் கொஞ்சமா சமுகத்துல நாமும் ஒரு ஆளுதான் ன்னு வளரனும் பாவா…அதுக்கு முக்கியமா..
இன்னும் ரெண்டு வருஷம் கழிச்சி பிள்ளை பெத்துக்கணும்…
அது உன்னை அப்பா ன்னு கூப்பிடனும்…நான் உன்னை ஒழுங்கா கூப்பிட்டா தான் அது உன்ன மதிக்கும்…பாவா…சரிதானே பாவா…
இவள் பிற்கால வாழ்க்கைக்கு இப்பவே நல்ல அடித்தளம் தயார்பண்ண முயற்சிக்க…
எல்லாம் சரி அபிமா…நாம் இருவர் மட்டும் நெருக்கமாய் இருக்கும் பொழுது வாடா போடா சொல்லு… நாய்யீ சொல்லு …பூன சொல்லு ..பன்னி சொல்லு.. சசி சசி ன்னு சொல்லிட்டே இரு அபி….
வெளியில் கூப்பிடுவது வெளி ஆட்களுக்கு…
எனக்கு எப்பவும் என் அபி தான்… சரியா.
சரி சசி…உடனே அபி அவன் அன்பிற்காய் ஒத்துக்கொள்ள….இருவரும் குருவிகள் போன்று ஒன்றாய் அமர்ந்து உண்ண தொடங்கினார்கள்…
அபிக்கு ஒரு கரண்டி சாதம் அதிகம் வைத்தவன்..கொஞ்சம் நல்லா சாப்பிடு அபி…சொல்ல
இவளுக்கு தன் தாய்சொல்வது போலவே இருக்க வலுவில் உண்டாள்…
டிவி யில் ஒரு டாக்டர் சிரத்தையாக சித்திரட்டை மூலிகையை இடித்துப்போட்டு சூப் போட்டு ஆண்மை உணர்வு பெருகும் …என்று அடுப்பை கிண்டி கொண்டிருக்க..
டிவி பாத்துக்கொண்டிருந்த சசிக்கு சிரிப்பு தாள முடில…
அபி..இவரா? நீ சொன்ன நல்ல டாக்டர்?..சமைக்கிறார்…ஹாங்..
ம்ம்ம்…முறைத்து ரிமோட்டை பிடுங்கியவள..இவரில்ல…என்று ஆஃப் பண்ணிவிட்டு…
வா..தூங்க போலாம்…..அபி கட்டிலுக்கு போக…
ஒட்டி படுத்தவர்கள்… அமைதியாய் இருந்தார்கள்..அபி ஏதோ சிந்தனையில் இருந்தாள்…
அபியின் இணக்கத்திற்கு…சசி…ஏங்க…கொக்கு மதியாய்…
பேச தொடங்கினாள் அபி
சசி பிள்ளைக்கு…ரெண்டு வருஷம் போகட்டும் சசி..உனக்கும் 24 முடிச்சிரும்..எனக்கும் 21 ஆகும்..பார்த்துக்கொள்ளலாம்…
தடுப்பு முறை தான் ரெண்டுபேரும் யோசிக்கணும் சசி…
இப்ப பண்ணது?…பிள்ளை வந்திருமா?..இவனே பச்ச பிள்ளையாய் கேட்க…
கடுப்பான அபி…ஒரு கிள்ளு கிள்ளி….இப்ப ஒன்னும் தெரியாத மாறியே பேசு…மூஞ்ச பாரு….அது மட்டும் எப்படித்தான் கத்துருக்கியோ? மூச்சு கூட விடமுடியாத அளவு எருமை மாறி மேல படுத்துகிட்டு..நிஜமாவே திட்டினாள் அபி…
ஒரே பாராட்டாய் போனது சசிக்கு…
அதை பற்றி அவள் திட்டதான் செய்தாள்.. ஆனால் இந்த மானம் கெட்ட சசிக்கு நரம்பெல்லாம் பாயாச சேமியா போல நட்டமாய் நின்றது….eeee
இது ஏதும் அறியாமல்
மிக அருகில் அவனை ஒட்டி நெஞ்சோடு நெஞ்சம் சேர்த்து…மிக ரகசியமாய்..
எனக்கு பாதுகாப்பான நாள் தான் சசி..நெட்டுல பார்த்துட்டேன்..
ஆனா இதேயெல்லாம் நம்ப முடியாது…உண்டாய்ட்டா நிச்சயமா கலைக்கவே மாட்டேன் சசி….ஏதாவது தடுப்பு முறை நீதான் சொல்லணும்டா…பன்னி…இந்த இடத்தில் அவன் தயவுக்காய் நைசா பழைய அபியாய் நைச்சியமாய் கேட்க…
மெடிக்கல் ஷாப் ல வாங்கிட்டு வரவா?…ம்ம்ம்..
இவள் முகம் பார்க்க…
ஐய..அதெல்லாம் வேணாம் சசி அசிங்கம்…இவள் முகம் கோண..
வேற என்ன செய்யலாம்?…வேணாம் ன்னு சொல்றியா?..
பயந்துகொண்டே கேட்டான்..முன்னாடி ன்னா என்னன்னே தெரியாது..இருக்க முடிஞ்சுது….சும்மா…
இப்ப …eeeee
ஏதோ தெரியும்…ஆனா இனி இருக்கமுடியாது….ஹாஹா..
சசி பாவம் போல முகம் வைத்து அபி பதிலுக்கு வெயிட்டிங்…..
உயிரோடு திங்க….
அபி மீனின் சம்மதத்துக்காய் சசி பூனை வைட்டிங்…eeee
ஏதாவது சொல்லுடா..உருப்படியா?…சசியின் சிறு இளம் முடிகள் ஓடிய வெற்று மார்பில்..நன்றாக சாய்ந்துகொண்டு..காலம் காலமாய் அதில் குடிகொண்ட திருமகளாய் அபி…ரொம்ப உரிமையாய் சிணுங்க….
இவனுக்கு் மெடிக்கல் ஷாப் விவரம் மட்டும் நல்லா தெரியும்…அது தவிர எந்த முறையும் தெரியாது..இவள் அது அசிங்கம் என்றால் என்ன செய்வது?….
முழித்தான்….கல்யாணம் பண்ணா நல்லா செட்டில் ஆகிட்டுத்தான் பொண்டாட்டிய தைரியமா தொடனும் போல…eeee
இப்படி அரையும் குறையுமா உருப்படியில்லாம செஞ்சி..ஆசைக்கு அடிமை ஆகி பிள்ளைய பெத்துட்டு…
கடைசிவரைக்கும் ….
வாய்க்கும் கைக்கும் பத்தாம வாழ்ந்து என்ன பலன்?
கடைசியில் இவளே ஒரு வழி சொல்லி…
சசி முடியுமா? என்று…திக்கி திணறி…
அதை காதில் கேட்டதும் அவனை உணர்வுகள் தூக்கி போட்டு மிதித்தது….
ம்ம்..முடியும்..ஆனா வேஸ்ட்டா போயிரும் ல்ல…அபி..
வாயவச்சி சும்மா இல்லாமல் சசி…பரிந்து பேச…eeee
கடுப்பான அபி…சரி பத்திரமா வச்சிகோ சசி….
ரெண்டு வருசத்துக்குள்ள நல்ல நிலைக்கு வருவோம் அப்ப பார்த்துக்கலாம்…
அவனை விட்டு விலகி…சுவற்றோரம் தள்ளி படுத்து..
தலையணைகளை நடுவில் முன் மாதிரி அடுக்க…
பதறி எடுத்து அவள் கைகளை பிடித்தவன்…
வாடி கூப்பிட்டுருக்கணும்….செய்யல….eeee
சரி அதேமாதிரி பண்ணிக்கலாம்….அபிமா….ரொம்பத்தான் பண்ற…மழலையாய் சிணுங்கிக்கொண்டு….தன்னோடு சேர்த்து அணைத்தான்…
லைட் போட்டுக்கவா அபி..முகமே தெரில…மோசமான திருடனாய்….eee
அவனுக்கு அபியின் அங்கங்கள் பார்க்கணும்…முதன் முறை கண்ணு திறக்காத நாய் குட்டியாய் முட்டி மோதி தட்டு தடுமாறி பண்ணியது ஒரு அனுபவம் என்றால்…ரெண்டவதும் ஒண்ணுமே பார்க்காமல் எப்படி?..eeeee..
ஜொள்ளினான்…
அவன் பார்க்கும் முதல் பெண்ணுடம்பூ..
அபிது தான்..
தன் அதர்ஷ பெண் அபிக்காக …7வருஷங்கள்…
நீண்ட நெடிய பாலை நாட்கள்… அக்காதலனின் காத்திருப்பு நாட்கள்…
தொடர்ந்து முட்டி முட்டி தட்டினாலும் திறக்காத இதயத்தை சுத்தியலால் அடித்து திறந்து வலுவில் நுழைந்தவன்….இன்று அதனுள் கலந்து துடிப்பாய் மாறினாலும்…
சசி…அறியா ஆண் ஆண் தான்… தேடல் உச்சத்தில் இருந்தது….
இருளில்..பெற்ற இன்பங்களையெல்லாம் ஒளியில் பெற இளம் ஆணுக்குரிய எதிர்பார்ப்பு இது..இயற்கையான உணர்வும் கூட..
அபியின் அழகிய பூவுடல் இவனுக்கு அதீத மயக்கம் கொடுக்க
உடம்பு சூடேறி முறுக்கியது… கணவனாய் கண்கள் அவளின் வடிவழகை…பார்வையிட்டுக்கொண்டிருந்தது…
முதல்முறைக்கே அதிக நாணப்பட்டு கல்யாணச்சேலையை கேடயமாக கொண்டு இழுத்து இழுத்து மூடி கொண்டவளை தந்ததே போதும்… பாய்ந்துவிட்டான் ….
முதல் உறவு வலிகளும்…கறை படிந்த உடைகளும்..நினைவு சின்னங்கள் வாழ் நாள்முழுதும்…..மறக்கவே முடியாது எந்த தம்பதியருக்கும்…..
சசி அடி போடி வாடி என்று கூப்பிட்டு.. காதல் கொள்ளும் பெண்ணல்ல..சசியின் அபி..அவனின் பெண் கடவுள் அவள்…
தான் உபாசித்த காளி தெய்வத்தின்…
அழகிய தனங்களையும்..பெண்மையின் அழகையும் கூட பாடி புகழ்தானாம்…காளிதாசன்…அதுபோல…
அபி …சசிக்கு காதல் பெண் மட்டுமல்ல…பூஜிக்கும் பெண்….
கல்யாணத்தில் பண்ணது அவளை யாருக்கும் விட்டே கொடுக்கமுடியா பிடிவாதம் …அவள் வேணும்..இல்லாட்டி தான் சாகனும்…என்றே செய்தது…அப்பவும் அங்கு அவன் சொன்னதனைத்தும் மனதார அவளோடு வாழ்ந்த வாழ்க்கையை தான்…அவள் அன்று கட்டிக்கொள்ளவில்லை என்றால் ட்ரைன் முன் விழுந்து மிகுந்த வலிகளோடு சிதறி சாக எண்ணம் கொண்டிருந்தான்….அவ்ளோ அன்று உடைந்திருந்தான்…தனத்தாய் அன்று அபி காலில் விழுந்து எடுத்து எப்படியோ காப்பாற்றிவிட்டார் மகனை…
அத்தனை கலாட்டா தாண்டி….கொக்காய் தவமிருந்து..மீனை கவ்விக்கொண்டு ஹாப்பி சசி….eeee
இன்று இப்பொழுது…காதல் பறவைகளாய்….
கணவன் மனைவி உறவிற்கு அர்த்தமான தாம்பத்தியத்தில்…முதல் கட்டத்தில்…
அனுபமில்லாதவர்களாய்…காமத்தை தங்களுக்கு தெரிந்த அறிவில் முயற்சிக்கிறார்கள்….eeee
கட்டிலில் …
ஒற்றை கையால் அபியைபிடித்துக்கொண்டு..
தலையணைகளை அதனிடத்தில் தள்ளிவைத்துவிட்டு…
அபிமா…இருட்டா இருக்கு எதுவுமே தெரில…நான் பாவம் ல…பிலீஸ் டா…இச்சு இச்சு..இச்சு…உச்சியில் முத்தமிட்டு கெஞ்சினான்…
மிக மிக மெல்லிய குரல்..இவளை தவிர யாருக்குமே கேக்காது…அவ்ளோ உயிர் இளக்கும் குரல்..
ஆண்கள் இவ்ளோ மென்மையா பேசுவாங்களா?…
இவள் இதுவரை அறியாதது…சசியை பற்றி…
அவனையே இன்று தானே வேண்டும் என்று தேடினாள்…
ஆர்மாய் அவன் முகத்தை பார்த்தாள்… தேவைகள் தவிப்பும் இருந்தாலும் எல்லையிலேயே ததும்பும் தன் கண்ணனின் காதலில் பூங்கோதையாய் மாறிபோனாள் ..அபி…
0 வாட்ஸ் போட்டுக்க..சசி…இதழ் ஓரமாய் சுழித்து அனுமதி தர…மஞ்சளும் சிவப்பும் கலந்த ஓர் ஒளிகலவை கொண்டது..அது…
போட்டவன்….மூச்சி வாங்கி கட்டிலில் மலர்ந்த தாமரையாய் வாசமாய் கிடைந்தவளின் மேல் படர்ந்தான்…உதடுகளை கவ்வி கொண்டு எச்சில் பண்ண..மோகத்தில் அபி கண் மூடபோன நேரத்தில்….. திறந்திருந்த ஜன்னல் கண்ணில் பட…
சசி ரோடு பார்த்த ஜன்னல் வெளிச்சம் அசைவு கொஞ்சம் உத்து பார்த்தா தெரியும்…வா அடைச்சுடலாம்… ஜன்னல் கொக்கிகளை இவள் போட..அவன் ஒரு போர்வையை கம்பிகளில் சொருகி மூடிவிட்டான்..
வேலை முடிந்து சசி அபியை பார்க்க…
அவள் இவனை பார்க்க வெட்கப்பட்டு.. கவிழ்ந்து படுத்துக்கிடக்க…கெண்டைக்கால் எறிய நைட்டி ..மெல்லிய வெள்ளி கொலுசுகள் தாண்டி…ஆ்டு சதையை காட்டி கொடுக்க…அதன் மேல் விரவிய குட்டி குட்டி ரோமங்கள் …பச்சை நரம்புகளுக்கு போட்டியாய்…
சசி பிரம்மிதான்..
பிரம்மிக்கும் வகையில் படைப்பை உருவாக்குவதால் தான்..அவன் பெயர் பிரம்மனோ?!!!
பெண்கள் மொத்தமும் அழகே உருவாக பிறந்தவர்கள்…என்ன கவர்ச்சியான உடம்பு…அப்பப்பா….ஆணுக்கு வரம் பெண்கள்…
அவள் கால்களை தடவி கொடுக்க…அவள் நைட்டிக்குள் காலை மறைக்க முயற்சிக்க …அப்படியே பிடித்து உடையை சசி மேலே சுருட்ட…
அவன் கையை பிடித்து தடுக்க முனைந்தாள்..அபி…
சசியின் இரும்பை கையாளும் காய்ப்பு பிடித்த வலிய கரங்கள் அவ் மெல்லிய எதிர்ப்புகளை ஒன்றுமில்லாமல் செய்ய…உதடு கடிக்க ஆசைதான் அபிக்கு…ஏற்கனவே அவன் பல் பட்டு அது நொந்து கிடக்க..உதட்டை சுருக்கி வைத்துக்கொண்டு… கண்ணை மூடி…அவனின் ஒவ்வொரு தொடுகைக்கும் துடித்தாள்..தவித்தாள்..மெல்லிய சப்தங்கள்..கொலுசொலிகள் வளையோசைகள் என்று…காதல் பண்டிகை… தன் இருப்பை உரைக்க..அழகான சங்கமம்…இருவரும் இரவெல்லாம் தூங்கவில்லை… சசி..அவளை கொஞ்சம் கூட முன்னும் பின்னும் நகரவிடவில்லை…
11
சசியும் அபியும்…
ஜோடி புறாக்களாய் வீட்டினுள் கொஞ்சி மகிழ்ந்து கூடி களித்தவர்கள்….
நிறைவாய் தூங்க முனைந்த போது…அபிக்கு அம்மா சொல்லிட்டு போனது நியாபகம் வர..ஓடி போய் அப்பொருளை கொண்டு வந்து சசிக்கு சுற்றி போட்டாள்…
எழுந்து நில்லு சசி என்க.. அவனுக்கு நிற்கவே முடியவில்லை அவ்ளோ டயர்ட்…eeee
இருந்தாலும் அபிக்காக. சமாளித்து நிற்க….
கிழக்கு முகம் பார்த்து நில்லு. சசி.. என்று மிரட்டி சுற்றி போட…
இதென்ன புது பழக்கம்…அபி என்று மெர்சலாய் விழி விரித்து…சசி….eeee
ஒரே நாளில் பாவா மேல அவ்ளோ கண்ணு போட்டுட்டியா? அபிமா…இவளை உரசி சரசமாய் கேட்க….
உங்க அத்தை தான்..மதியம்..சொல்லிட்டு போனாங்க…கேலியாய் சொல்லி
உதடு சுழித்து…
உண்மையிலேயே நீ அழகா தான் இருக்க…பாராட்டாய் அபி இவன் கடித்து சுவைத்து சிவக்க வைத்திருந்த உதடு பிரித்து புன்னகை அளவாய் சிந்த….
மயங்கித்தான் போனான் சசி….அவள் தெய்வீக பேரழகில்..
கணவனால்..ஆண்ட பெண்ணழகு… பூத்து …மின்னும் பொலிவில் தங்க சிலையாய் மினுமினுத்தாள்…. அபி…
போதவில்லை… சசிக்கு.. இன்னும் இன்னும்…தேட….எரியும் கண்கள்…தூக்கத்தை வேண்டி யாசிக்க…
செல் எடுத்து அலாரம் வைத்தான்…ஓரு மணி நேரம் மட்டும்… தூங்கலாம்… இப்ப 3.30…ஓகே….திருப்தியானான்…
இவள் உப்பை கரைத்து விட்டு..இருந்த பாலில் இருவருக்கும் சத்து பானம் கலக்கி வெதுவெதுபாய் அவனுக்கும் ஆத்தி கொடுத்து..தானும் குடித்து…
விளக்கணைத்து ..அவன் இளம் மார்பில் நிம்மதியாய் கண் மூடினாள்….
நெஞ்சுக்குள் ஏதோ ஓர் அமைதி அவளுக்கு..இத்தனை நாள் …தடுதல் கள் எல்லாம் தீர்ந்த மாதிரி…அடைப்புக்கள் எல்லாம் விலகின மாறி…
இனி சசிக்கு …இது கிடைக்கலை…என்று இருக்காது..அவன் வேலையை சரியாய் செய்து விடுவான்…
அவன் ரொம்ப சின்னவன்…நாமதான் ஆன்ட்டி லுக் வராம..உடம்ப பார்த்துக்கணும்….கவனமா உடம்ப மைன்டைன் பண்ணிக்கனும்…
தன் படிப்பும். இன்னும் ரெண்டே மாதத்தில் முடியும் நிலையில் இருக்க….அடுத்து வேலைக்கு போவதை யோசித்தவாரே..அப்ப தான் கண் சொக்கினாள் அபி…
சசி செல்லில் அலாரம் அடிக்க…இவளும் படிக்க எந்திரிக்க வைப்பது உண்டு…
அந்த நினைப்பில் தான் வைத்ததோ என்று டயம் பார்க்க…
இவளை வாரி சுருட்டின சசியின் கரங்கள்…திரும்ப முதலிலிருந்து…
முத்த அர்ச்சனை…தன் தேவி அபிராமிக்கு …அவளின் தாசனிடமிருந்து..
நீ தூங்கு சசி காலைல கடைக்கு போணும்…அபி எடுத்து சொல்ல..
பேசவே விடவில்லை.. சசி … தேடல்…தேடல்…. முன்னைவிட வேகமாய்…
ஆசையாய்…கொஞ்சோண்டு அனுபவம் வந்துருச்சுல….eeee
தகிரியம் ஜாஸ்தி வந்துருச்சு….முட்டி மோதினான்…அபியை அசத்தி…
அபியின் பால்வண்ண மேனி முழுதும் முத்தமிட்டு முத்தமிட்டு எச்சிலால்
புனிதம் செய்தான்.. நெளிந்து நழுவியவளை. இழுத்து கட்டி காதல் புரிந்தான்…கண் கூட திறக்க முடியவில்லை..தூக்கத்திலும் இவ்ளோ சேட்டை…
7 வருஷம் காத்திருப்பு இந்த நாளுக்காக.. அபி……
காதல் என்று சொன்னாலும்…இந்த உறவின்றி அது முழுமை கிடையாது…அபி..அபி…அபி…அழகா இருக்க…செம்மையா இருக்க…புலம்பி தள்ளிவிட்டான்…உச்சி மண்டையில் முதுகில் ஊறும் சுகம் தாளாமல்…
அபிக்கு இப்ப தான் ஸ்பார்க் ஆனது….7 வருஷம்….eeee
அதென்ன 7 வருஷம்..சசி…சித்ராக்கா கல்யாணம் ஆகி எட்டு வருஷம் இருக்குமே?..இவள் சந்தேகம் கேட்க…
அவன் அசடு வழிந்து தன் வேலையை தொடர….
இதில் ஏதோ இருக்கு..சொல்லு..இல்லாட்டி கிடையாது போ.. அவனை தன் மேலிருந்து தள்ள…சும்மா….eeee
இன்னும் அதிகமாய் அவளை ஆண்டான் ஏதோ மனதில் அவனுக்கு தோண….
வலிக்குது எருமை….திட்டினாள்…அவன் வேகம் வலிதான் தந்தது….
முரடு…சீப் போ…
ஐ லவ் யூ அபி….அபி..அபி…திரும்ப திரும்ப மந்திரமாய்..சொல்லி..தேவை முடித்தவன்…
நீ பெரிய பிள்ளை ஆன நாளிலிருந்து உன்னை நேசிக்கிறேன் அபி….வேர்வையும் வேக மூச்சும். கொண்டு..அசடு வழிந்து சொல்ல…
ச்சீ. சேத்து பன்னி… இடுப்பில் கிள்ளி வைத்தாள் அபி…
அதும் கூட சசிக்கு கிளு கிளுப்பை தர கிளுங்கி சிரித்து அபி மானத்தை வாங்கினான் சசி…
கெட்ட நாய்…போடா.. நல்லவனே.. பிஞ்சிலேயே பழுத்து போய் கிடந்திருக்க… பொறுக்கி…உன்னை போய்… அவள் மிகுந்த எரிச்சலுடன் திட்டி…அவன் மார்பிலும் தோளிலும்.. இன்னும் .தன் பஞ்சு கரங்களால் நாலு சார்த்த……
புன்னகை மாறா முகத்தோடு…அவள் இரு கரங்களையும் தன் சொர சொர காய்த்த கரங்களில் பற்றியவன்..நெஞ்சோடு இழுத்துக்கொண்டான்…
அவள் பலமில்லாதவள்.. கொடி போன்ற உடல் அமைப்பினவள்…இவனோ..வயது சிறிதெனினும் கடின வேலையில் இருப்பவன்..அவன் தொழிலே அவனுக்கு வலிய தேகத்தை தந்துவிட… ஓர் இழுப்பில் அவன் நெஞ்சில் போய் விழுந்தாள்…அபி ஒல்லி பெல்லி…
அபிமா…அண்ணன் கல்யாணம் நடந்தப்பவே பொம்மை மாறி நீ இருப்ப..கண்ணு பெருசா…லட்சணமா…எனக்கு அப்பவே உன் மேல கண்ணு தான்..பார்த்ததோடு சரி…நீ பெரிய பொண்ணு ஆனப்ப ..எங்க பேமிலி எல்லோரும் வந்திருந்தோம்…ஞாயிற்றுக்கிழமை தான் வச்சிருந்தீங்க…
உனக்கு ஸ்கை ப்ளூ பனாரஸ் சேலை எங்கம்மா எடுத்துட்டு வந்திருந்தாங்க…உனக்கு எத்தனையோ விதமான அலங்காரங்கள் பண்ணி போட்டோ எடுத்துட்ருந்தாங்க…
எங்கம்மா தந்த சேலை நீ கட்டிய போது..வனத்தில் இருந்து இறங்கி வந்த குட்டி தேவதை மாறி தெரிஞ்ச…
அப்ப மனசுக்குள் ஓர் மின்னல்…எங்க சொந்தக்கார தாத்தா…ஒருத்தரு ..உனக்கு தான்டா இந்த பொண்ணு பெரியவளாயிருக்கா…உன் முறை பொண்ணு தான் விடாத பேரா… சொன்னாரு…
கிண்டல் தான் பண்ணுறாரு.. தெரிஞ்சாலும்…அன்னைக்கு உன்னை பார்த்தது தான்….நெஞ்சில் விதை.வீழ்ந்துவிட்டது..நீ தான் என் மனைவி..எனக்காக பிறந்திருக்கா..பெரியப் பெண்ணாகியிருக்க…எனக்கே எனக்கு…நினைச்சிட்டேன்…
சித்ரா அண்ணி…ன்னால..கண்டிப்பா வயசு வரும் போது கேட்டா தந்துடுவாங்க …ன்னு லூசாட்டும்.. தினமும்..உன் நெனப்பிலேயே பைத்தியமா சுத்துவேன்….
ஏற்கனவே படிப்புல சுமார்.. இப்ப புத்தி வேற மாறி போச்சா..ஒன்னும் முடில…eee
இந்த பக்கம் உன்னை பார்க்க ஆசை பட்டு உன் தம்பியோட விளையாட வரேன்னு பேர் பண்ணிக்கிட்டு…உன்னை தான் பார்க்க வந்தேன் அபி…ஜீவாவும் பிடிக்கும்….என்னை ரொம்ப கொடுமை பண்ணுவான்…உனக்காக என்ன செஞ்சாலும் நான் கண்டுக்கமாட்டேன்…உன்னை லீவு நாளில் பார்த்துட்டு போய்ட்டா அந்த வாரமே நகரும் எனக்கு….
+2 பெயில்..அதோடு ஒரு பட்டறையில் வேலை பார்த்தேன்..தொழில் பிடிப்பட்டுச்சு…அம்மாகிட்ட காச வாங்கி..இந்த கடை போட்டேன்…ரொம்ப ஸ்லோவ் பிக்கப் தான்…ஒரே பிரின்ட்ஸ் தொல்லை ..தவிர்க்க முடில..வீட்டுலேயும்..யாரும் யாரையும் திட்ட மாட்டாங்க…தனிக்காட்டு ராஜா தான்..உன்ன மனசுக்குள்ள ரொப்பிக்கிட்டு ஒரு கவலை இல்லாம திரிஞ்சேன்…
கதையாய் தன் எண்ணங்களை உள்ளது உள்ளபடி சொல்ல…
இவள் விரிந்த விழிகளில் ஆச்சரியத்தோடு கேட்க…
அந்த கண்களுக்கு ஆசையாய் முத்தமிட்டான் சசி…என் அழகம்மா…. கொஞ்சினான்..உயிரில் இருந்து…
ஆனா….உன் கிட்ட லவ் சொல்ல தகிரியம் வரவே இல்லை..அபி..
ஏன் தெரியுமா?…உன் கிட்ட எந்த சிரிப்போ பார்வையோ..ஓர் அறியாமையோ என்றும் இருந்ததில்லை…யாரை பார்த்தாலும் உள்ளே போய்டுவ.. என்னை கண்டா.. அவ்ளோவா அலடிக்காம இருப்ப…மிடுக்கா திமிர் பிடிச்ச பொண்ணு மாறி…அந்த ஸ்டைல் எனக்கு உன் கிட்ட ரொம்ப பிடிக்கும் அபி ..சின்ன பெண்ணாய் பார்த்த அபியைவிட இந்த திமிரோடு கூடிய என் மகாராணி அபி ..என்னை அப்படியே அசத்தி வியக்க வச்சா…இவ்ளோ அமெரிக்யானவளா என் காதலி ன்னு பிரமிப்பு…
நாளாக நாளாக பைத்தியம் ஆகிட்டேன்…சின்ன சின்ன சிக்னல் தந்து பார்த்தேன்…உன் முகம் சுளிச்சப்ப..என் இதயம் …நகர்ந்தது அபி..வலிக்கும் அபி..தனியா என் அன்பை எப்படியாச்சும் புரிய வைக்கணும் ன்னு தான் உன் காலேஜ் வாசலில் வந்து வந்து நின்றது….
அப்பவும் முறைச்சுட்டு யாரோ மாறி கோபமா பார்த்துட்டு போயிட்ட..பேசவே முடிலயே..என் மனசு உனக்கு தெரிது..நீ நிராகரிக்குர..என்னை பிடிக்கல..புரிது..
புரிஞ்சாலும் ஏத்துக்க முடில…கிறுக்கன் மாறியே ஆகிட்டேன் அபிமா..சாரி மா…உன்னை கஷ்டப்படுத்தியதற்கு…
அவள் பிறை நெற்றியில் முத்தமிட்டு நெடு நாள் காதலன் மன்னிப்பு வைத்தான்…இன்று கேட்பதை போன்று..
கேட்டுக்கொண்டிருந்த அபியின் இதயமும்அமைதியில்…அவளை….போலவே..
அப்ப தான் செல்வம் கல்யாணம்…நீ வந்த..பேசினோம்…உன் எண்ணமும் அப்ப தெரிஞ்சாலும்….உன்னை விடவே முடியாது…காதலியா நினைக்கல..கணவன் மனைவியா வாழ்ந்தாச்சு அபி…
செத்துடலாம் ன்னு நெனச்சேன்… அதும் ட்ரைனில் விழுந்து…சிதறி…ரொம்ப வலியோடு சாக ஆசை…அபி…
சசி..இப்ப அன்பின் உச்சமாக…
அபியின் வெண்டை விரல்களை வாயுள் வைத்து சப்பிக்கொண்டே ..கண் மூடி சொல்ல…
இது பொய் கிடையாது….இவன் பொய்யன் கிடையாது…அபி இத்தனை நாள் வாழ்ந்த அனுபவத்தில்….
இப்ப அதிர்ந்து சசியின் முகத்தை பார்த்தாள் அபி…அன்றைய துயரம் இன்று…கொஞ்சமும் மாறாமல்….
சசி.சசி..சசி…இச்சு இச்சு இச்சு..என்று இவள் அவன் முகமெங்கும் முத்தமிட்டு தன் அன்பை வெளிப்படுத்தி சோகத்தை குறைக்க முயற்சிக்க….
இப்ப சசி வசதியாக…
நன்றாக படுத்துக்கொண்டு..அந்த மெல்லுடலாலை தன்னமேல பூமாலையாய் போட்டுக்கொண்டான்…
சாகனும் ன்னு முடிவு எடுத்த பிறகு தான் மனம் …மானம் மரியாதை நியாயம் அநியாயம் எல்லாம் தாண்டி…
என் இலக்கு நீ ..நீ..நீ மட்டுமே…ன்னு ஆன…அபி…
அப்புறம் தான் நடந்தது உனக்கு தெரியுமே….ம்ம்ம்ம் அவன் தன் நிலை சொல்லிமுடிக்க….
விக்கு விக்கு வென்று அழத் தொடங்கினாள் அபி…கண்ணில் உப்பு நிரூற்று….
ஏன்டா…விடுடா..ஏய்..அபிமா..என்ன?..ஏன் அழுற?…சசி தவிக்க…
ஏன் இப்படிலாம் முடிவு எடுத்து வச்சிருக்க லூசு மாறி…
சசி கிறுக்கா..நீ செத்துருந்தா கண்டிப்பா நானும் செத்துருப்பேன்….போடா லூசு….திட்ட
இந்த பதில் சசிக்கு…வியப்பு தர…
தலை சாய்த்து…அதெப்படி அபி?….மனதில் காதல் இல்லாமல்…
போ..லூசு..அப்பவே உன்னை பிடிக்கும் சசி…உன் மென்மை… பாசபார்வை… ஓர் கண்ணிய நடத்தை…இன்னும் ஏதோ கூட வச்சிக்கேயென்….ஆனா கணவன் என்கிறப்ப…சின்ன வயசு தான் இடிச்சிச்சு…உன்னை போய் லவ் பண்ணனுமா?…வேணாம்..சரி படாது…நானா என் கனவுகளுக்குள் ஆழ்ந்து விட்டேன்…
இன்னொரு பாக்ட் ..உனக்கு எதிராவும் இருந்தது சசி….
அது…
உன் குடும்பம் …..ஐயோ …எனக்கு பிடிக்கவே பிடிக்காது சசி…அழுக்கா இருப்பாங்க…பொய் ஓவரா பேசுவாங்க…உங்கண்ணன்கள் அத்தனை பேரும் குடிப்பாங்க… சோம்பேறிகள்..ஊரெல்லாம் கடன் வாங்கிட்டு…அசிங்கம் பண்ணுவாங்க…உங்கம்மாவா கோச்சிக்காத சசி…பார்த்தாலே எம்மா.. பயமா இருக்கும்..என்னா வாய்டா சாமி ன்னு…
ஆனா உன் மேல ஒரு சாப்ட் கார்னெர் இருந்ததால..ஹார்ஷா சொல்லாம….
உன் மனசு காயப்படமா..நீ வழி விடணும் ன்னு…ஒவ்வொரு வாட்டியும் என் விருப்பமின்மைய காட்டிட்டே இருந்தேன்..நீதான் வேதாளம் மாறி தொத்திக்கிட்டே திரிஞ்ச….
இப்ப.. நீ அப்படி ஏதாவது தப்பான முடிவுக்கு போய் இருந்தியனா…கண்டிப்பா அடுத்த நொடி நானும் ..பண்ணியிருப்பேன்…
இப்படி பேசாத..வாயை அடைத்தனை.. கையை முத்தமிட்டு…
காதல் உணர்ச்சில இல்ல…குற்ற உணர்ச்சியிலேயே….சசி…
ஸாரி..ஸாரி..சசி…அப்ப உன்னை பிடிக்கும்….கல்யாணம் பண்ணுகிற அளவுக்கு இல்ல…ஒரு எட்ட நின்று பழகும் நண்பனை போல மட்டுமே…
ஆனா இப்ப கேட்டா….
என்று…நிறுத்தி….தூங்காமல் கிடந்த செவ்வரியோடிய விழிகள் சுழட்டி அபிநயிக்க….
அசசிறுகணம் இடைவெளி தாங்காது சசி….
அப்படியே.. அவளை மொத்தமாய் பூங்கொத்தாய்
வாரிக்கொண்டவன்..மூச்சிவங்கி நெருக்கி கடித்து…..நொறுக்கி…ஓவர் காதலில் அபியை சாகடிக்க….eeee
சொல்லு அபி..சொல்லுமா….இப்ப கேட்டா?….குளிக்காய்ச்சல் வந்தவன் மாறி முனகினான்…
என் சசி தான் பெஸ்ட் லவர் இன் தி வேல்டு..பெஸ்ட் கிஸ்ஸர் டூ…. அபி டீச்சர் சான்றிதழ் வழங்க…
அவ்ளோதான்….
சசி தன் காதல் பெண் தெய்வத்தின் கடாட்சம் பெற்று..முக்தி நிலை கொண்டான்…eeeee
அக்கணம்….தெய்வ கணம்…இருவருக்கும் மட்டும் நிகழ்ந்த தெய்வீக நிகழ்வு….
அதிகாலை முன் தயாரிப்புக்களை ஆதவன் ரொம்ப கடைமையாய் செய்ய…இவர்கள் ஒருவர் நெஞ்சில் ஒருவர்..கவிதையாய் ஓய்ந்து தூங்கி கொண்டிருந்தனர்….
முதலில் எழுந்தது அபி தான்…
வெளியில் பளீரென்று வெளிச்சங்களும்..ஆள் நடமாட்டமும்…
8 மணி ஆகிவிட்டது என்பதை சரியாக சொல்ல…
வா..எந்திரி சசி நேரமாச்சு…கடை திறக்கும் நேரம் நெருங்கிடுச்சி……
என்று…உடைகள் இல்லா தன் உடலை கையில் கிடைத்த நைட்டி போட்டு மூட
பக்கத்தில் படுத்திருந்த கள்ளன்…பிடித்து இழுத்து வம்பு பண்ணான்.. போடவே கூடாது என்று…
அடிவாங்குவ பார்த்துக்க…அலாரம் வச்சி…லவ் பண்ற ஒரே ஆள் உலகத்துல நீ தான் சசி…பேட் பாய்…!எந்திரி… என்னை விடு…
வா நமக்கு நிறைய வேலை இருக்கு..இந்த போர்வை லாம் தோய்க்கணும்….எத்தனை துணி அழுக்கு பண்ணி வச்சிருக்க பன்னி…போய் ஊறவை…எனக்கு சோப்பு சேராது….நீ துவச்சி தா நான் அலசுறேன்…அம்மாவை இன்னைக்கு துவைக்க விட வெக்கமா இருக்கு….சசி…ச..அ …சி…
இவள் கழுதையாக கத்திய பிறகு…துணி துவைக்க எந்திரித்தான் வேங்கையாக….eeee
ஹாஹா..!!
முதலில் அலர…மலர..அபி குளித்துவிட்டு…
வீட்டின் வெளி கேட்டில் பையில் கிடக்கும் பாலை ….
வாசல் பேருக்கு தெளித்துவிட்டு.. கொண்டுவந்தவள்..சூடாய் முகம் கழுவி வந்தவனுக்கு கொடுத்தது தான்..
அடுத்து..இங்கு …காலைக்கு சமையல் செஞ்சுக்கிட்டே காணும் படியா வேலை வாங்கி கொண்டாள்…இவள் வீடு துடைக்க..அவன் மாப் பிழிந்து தர..இவள் வெண்பஞ்சு கைகளுக்குகெமிக்கல் சேராது …சசிக்கும் தெரியும் எனவே நன்றாக கேட்டு கேட்டு உதவி செய்தான்…
ஒரு செரட்டையை எரிய விட்டு..கையோடு …சாம்பிராணியும்…சசிக்கு முதலில் போட்டு…கடைக்கு கிளம்பு அனுப்பிவிட்டு..அச் சிறிய வீடு முழுக்க போட..
ஓர் தெய்வீக சூழல் உருவான திருப்தி அபிக்கு..
நேற்று…சசி செய்த அட்டகாசங்கள் எல்லாம்… சமநிலைக்கு வந்த ஓர் மனா நிலை…
ரொம்ப சேட்டை பண்ணுறான்..எருமை..எங்கிருந்து தான் இப்படிலாம் பண்ண தெரிதோ?…
ச்சீ.. சீ..
ஆளு பார்த்தா ஒண்ணுமே தெரியாதவன் மாதிரி இருக்கான்…நாயி… கொஞ்சிக்கொண்டாள் தன் மன்மதனை..!!
நல்ல ட்ரெஸ் போட்டு கிளம்பியவனை கூட்டி போய் சாமி முன்னாடி நிறுத்தியவள்….
நிதானமாய் சுடர்விட்டு கொண்டிருந்த திருவிளக்கின் முன் தம்பதி சமேதரமாய் விழுந்து கும்பிட்டார்கள்…
தங்கள் நன்றியை இறைக்கு வெளிப்படுத்தி…
நிறைவோ நிறைவு…இருவரின் முகங்களிலும்…
காலேஜ் போலயா? அபி…
இன்னும் ரெண்டு நாள் …லீவு தான் போடுறேன்…படிக்கிறது வீட்டிலேயே படிச்சிக்கலாம் சசி….அட்டெண்டன்ஸ் பெர்சண்டஜ் இருக்கு…
அங்கு அலஞ்சி எடுத்து படிப்பதற்கு..வீட்டிலேயே நிம்மதியா படிச்சி.. தூங்கி..படிச்சி..சாப்பிட்டு…ரிலாக்ஸ் சா படிச்சுடுவேன்…ரேங்க் கிடைக்கும் சசி..
ஓ… அபிமா…எவ்ளோ வேணும்ன்னாலும் படி…செலவு லாம் பத்தி கவலை படாத…. நான் இப்ப கொஞ்சம் தொழிலில் வேகம் எடுத்திருக்கேன்…இப்படியே போனா முன்னெறிடலாம் அபி…நல்ல நம்பிக்கை வந்துருச்சு…
ம்ம்…அதான் கணக்கு வழக்குலேயே தெரிதே…
சசி முறையா மூணு வருஷம் …பேங்க் ஸ்டேட்மெண்ட் பக்காவா காட்டிட்டு வந்தியென்னா..லோன் கிடைக்கும்…அடுத்த ஸ்டேஜ் உன் பட்டறைய எடுத்துட்டு போலாம்…
ம்ம் ….என் பிரின்ட் ஒருத்தன் பேங்க் ல ஒர்க் பண்றான்…விவரம் கேட்டுகிறேன்… பார்ப்போம்..அதுக்குள்ள ஊணனும் நல்லா…
கண்டிப்பா நல்லா வருவா சசி..உன் அபி சொல்றேன்….நம்பிக்கை இருக்குல்ல….
நெற்றியில் திருமண் இட்டு.. கன்னத்தில் மென்மையாய் முத்தமிட…
சொர்க்கம்…எங்கு இருக்கிறது?…
அது எப்படி இருக்கும்?..ஏதும் தெரியவேணாம்…
சசிக்கு தோன்றியது…
காதல் பெண்ணின் கண்களில் …
காட்டும் அன்பில்…
கொண்ட கற்பில்…
இயைந்து நின்ற பண்பில் …
பகரும் சொல்லில்…
ஆணின் சொர்க்கம் கண்டான்……சசி..
ஹா…என்ன..உடம்பில்..உள்ளது…ஒன்றும்.இல்லை…
அந்த உடல் கொண்ட ஆன்மாதான் உடலையே கவர்கிறது…
புது மயக்கம் ..சசிக்கு…
முடில இவன் தத்துவத்தை கேட்க….eeeee
தனக்கு இப்படி ஓர் தெய்வீக வாழ்வா?…அபியினால்…
இங்கு நிறைந்து எடுத்து வெளியில் கடைக்கு போனால் அவ்ளோ ஒரு மங்களம் தொழிலில்…முன்னே பின்னே தெரியாதவர்கள் கூட..இவ்ளோ சின்ன வயதில் இவ்ளோ திறமையா?…பாராட்டும் போது..
தானாய் அபியின் திருமுகம் சசிக்கு வந்துவிடும்…
என் அபிராமி அம்மை என்னுடன் குடி வந்த நேரம்…என்னையும் மனிதனாய் மதிக்கும் புறஉலகம்…
குடும்பம் அதன் செலவுகள்…எல்லாம் இவனின் உழைப்பை பெருமை படுத்தின…எனலாம்…
வாராவாரம் அம்மாக்கு…1000 2000 கொடுப்பதை…அபி…இப்படி கொடுத்தால் செலவு பண்ணிட்டு சும்மா இருப்பாங்க ன்னு..
இவர்கள் சேமிப்பில் சிறிதளவு எடுத்து வைத்து….மாசத்தின் முதல் ஞாயிறுகளில்…. தனம் அம்மாவிடம்..அபியே….5000 கொடுத்துவிடுவாள்…
அந்தம்மா இங்கு இவர்கள் வீட்டிக்கு வரும் பொழுதுகளில்…உணவு கொடுத்து..ஓய்வும் கொடுத்து….போகும் பொழுது…ஆயிரம் ரூபாய்…தந்துவிடுவாள்…. பெற்ற தாய்க்கு இவர்களின் நன்றிக்காக…..இன்னும் கூட அபிக்கும் சசிக்கும் செய்ய ஆசைதான்…பொருளாதாரம் பெருகட்டும் என்று காத்திருந்தார்கள்…
சசியின் அம்மா…
தனத்திற்கு எவ்ளோ கொடுத்தாலும் போதவே போதாது…கடன்கள்…சோம்பேறி மகன்களின் செலவுகள்..மகள்களின்.. வரவு..என்று ஏகப்பட்ட தொல்லைகள்…
இவர்கள் வீட்டில் அளவாகவே பொருள்கள் இருந்தன…புதிது வாங்க நிறய யோசனைகள் செய்தனர்…சமாளிக்கலாம் என்பதை பின்னாடி தள்ளி போட்டார்கள்..
அப்படி ஓர் தட்டுப்பாடு இருந்தும்…தாய் க்கு செய்யணும் என்பதில் அபி…உறுதியாய் இருந்து பணத்தில் இருந்து எடுத்தும் வைப்பாள்….
சசிக்கு கூட இந்த விஷயத்தில் நம் அம்மா தானே…என்ற அலட்சியம் உண்டு..
அபி கெட்டி…அது கூட இந்த காதல் பெண்ணை ரொம்ப பிடிக்கவைத்தது சசிக்கு..
அண்ணன் அண்ணிமார்களை குழந்தைகளை பெரிய வீட்டிலேயே இவர்கள் சந்திப்பதால்…அபியும் கல்லூரி போவதால்..இவர்கள் வீட்டிற்கு விருந்துக்கு வர விரும்ப மாட்டார்கள்…யாரும்..இவர்கள் தான் கன்னு குட்டிகளாய் அங்கு போவார்கள்..உறவுகளை விட்டுவிடாமல் பந்தகொடிகளை பற்றிக்கொண்டு….
அபி..தன் தாயை மன்னித்தாலும்… இப்போதைக்கு தாய் வீடு போகும் எண்ணம் இல்லை…ஜீவாவும் அப்பாவும்… அடிக்கடி சாயங்காலங்களில் வந்து போக…அபிக்கும் சசிக்கும்…முதலிரவுக்கு முந்திய வாழ்க்கை ரசமாகத்தான் போய்க்கொண்டிருந்தது…
இப்ப…
ஒரு லிஸ்ட் எழுதி தந்தாள்…
டில்லி கிட்ட வாங்கி கொடுத்துவிடு சசி…மதியத்துக்கு சமச்சுடுறேன்…
பிரியாணி…சிக்கன்65…சரியா…
கண்கள் லைட் ஹௌசாய் சசிக்கு…வாவ்…
செம்ம…அபி….அசைவ பிரியன் அவன்…
இன்னைக்கு எனக்கும் உடம்பே சரியில்லை அபி..லீவு போட்டுக்கவா?…
பக்கவாய் ட்ரெஸ் பண்ணிட்டு…பிள்ளை போல சாக்கு வைத்தவனை..
அபி…
இடுப்பில் கை வைத்து முறைக்க….
வா டிபன் சாப்பிடலாம் நகர்ந்து விட்டான்…eee
நல்ல பிள்ளையாய்…
இரவின் எதிரொலி அவளிடம் இல்லையே…முகத்தை முகத்தை பார்த்தான்…
என்ன சசி…
ஒட்டி நெருக்கி அவளுடன் அமர்ந்தவன்…தன் கைகளை இடுப்போடு அணைத்து…
செம வாசனையா இருக்க…அபி …ஆசையாய்..பேச…
தானாய் ரோஜா இதழில் சிரிப்பு வந்தது..அபிக்கு…
அவனின்…அழைப்பு இது…இவள் கண்டுகொண்டாள்… கேட்கிறான்…புரிய…
ம்ம்ம்…உன்னை மாறி சோப்பு போடமா குளிப்பேன்..நெனச்சியா சசி…
தெரியாத மாறியே…இவளும்…eeee
சசியின் கைகள் எல்லை மீற துடிக்க…
அபியின் அனுமதிக்கு காத்திருந்தான்…
உதட்டை சுளித்த முறைத்தாள் அவனின்..முறைப்பெண்…
சாப்பிட்டுட்டு கடைக்கு போய்ட்டு வா…மதியம்…ம்ம்ம்..சரியா?…அம்மாவை வரவேணாம் ன்னு சொல்லிரு சசி…
இப்ப இவள் அவன் மேல் சரிந்து கொண்டாள்… வசதியா…
உன் போன் இருக்கே நீயே சொல்லிரேன்… அபி…கொஞ்சி…
அவள் பட்டுக்கன்னதோடு தன் சொர சொர கன்னம் உரசி…தன்னுள் சுகத்தீ மூள… …பொசு பொசுவென பாம்பு மாறி மூச்சு விட்டான்….
வெக்கமா இருக்கு போ….ஏதாவது சாக்கு சொல்லிரு…ம்ம்ம்…
கோதுமை உப்புமா பண்ணியிருந்தாள்…
காய் போட்டு…அபி
ஊட்டி விடு அபி…மிஞ்சினான்… சசி…
இதெல்லாம் ஓவர் சசி…உன் கையாலேயே சாப்பிடு…ரொம்ப பண்ற…
பேசிக்கொண்டிருக்கும் போதே…
அண்ணே… டில்லி குரல்…
போய் சாவி கொடுத்துட்டு வந்த சசி…
நல்ல பிள்ளையாய் சாப்பிட..கூடவே இவளையும் சாப்பிட வைத்து கிளம்பி…
போய்ட்டு வரேன்…அபிமா…விடைபெற…
அவனுக்கான சத்து பானம் கொண்டு வந்து தந்தவள்.. குடிக்கும் வரை பார்த்து…கிளாஸ் வாங்கி…கையில் வைத்து…
சுவற்றில் சாய்ந்து…
அவனையே புருவம் உயர்த்தி…ரசனையாய் பார்த்தவாறே நிற்க…
என்ன?..என்ன?..என்று..இரு புருவமும்..நெளிய சசி…அபினயிக்க…
இவள்….
இங்கும் அங்கும் தலையை ஆட்டி….இல்லையே..என ..
பொய் சொல்ல..
இவன் பை என்று கையசைத்து விடை பெற…
நடு ஹாலில்…
தன் கைப்பொருளை ஒரு சேரில் வைத்தவள்..
ரெண்டு எட்டு சசியை நெருங்கி…
கட்டிக்கொண்டாள்…அதீத காதலால்…
நன்றி…சசி..என்னை…இப்படியாச்சும் கல்யாணம் பண்ணி அன்பை புரியவச்சத்துக்கு…
இச்சு இச்சு..ரெண்டு கன்னங்களுக்கு…முத்தமிட…
உதடுகள் என்ன பாவம் செய்தன…தீர்த்துக்கொண்டான் சசி…
லேசாய் லாவெண்டர் நிறம் மாறி இருந்த அவள் உதட்டை…விடவே இல்லை…என்னென்னெவோ செய்ய தூண்டியது அம்முத்தம்….
அவளை அப்படியே அள்ளிக்கொண்டான் கைகளில்…
தூக்கிக்கொண்டு கட்டிலுக்கு சென்று..படுகையில் விட்டு…அவசரப்பட…
உருண்டு பிரண்டவள்..சட்டை கசங்கும்..மதியம்..வா…சசி..மயக்கும் பார்வையோடு சொல்ல…
அப்ப துணி கசங்காமா நீயே கொடு…..வேண்டி நிற்க…
கட்டில் அருகே நின்றிருந்தவனை..இங்கே இருந்து…கன்னங்கள் தாங்கி… உதட்டை நாவில் வருடி..மென் முத்தம் தர…போதாது…அந்த குட்டி கோழியை…அப்படியே ஒரே அமுக்காய் அமுக்கி…வேணும் மட்டும் அமுதம் …அருந்தி தன் கடமைக்கு சென்றான் சசி….
இவள் உள்ளே கதவை பூட்டிக்கொண்டு…கொஞ்ச நேரம் படிக்கலாம் என்று அமர….அப்படியே நேரமும்..ஓட..11 மணி அளவில்…வெளி கேட் சத்தம் கேட்க…
டில்லி தான் பொருள்கள் வாங்கி வந்திருப்பான் என்று..கதவை திறக்க எழ…
சசி..கள்ளன்…கடைக்கு லீவு விட்டே வந்துவிட்டான்….eeee
கைகளில் பிரியாணி..65 பார்ஸல்களோடு…..eeeee
கையில் பார்சல்களோடு மயக்கும் கள்ளச் சிரிப்போடு நின்று கொண்டிருந்தவனை ….
ஆச்சர்யத்தில் தன் அகன்ற விழி விரித்து.. புருவம் உயர சசியை கண்டு அதிசயித்தாள் அபி…
அவள்..கொஞ்சம் கூட எதிர் பார்க்கவே இல்லை…கடை மூடுவது என்பது நடக்காத ஒன்று….
திறந்தே இருந்தால் தான் வாடிக்கையாளர் வருவாங்க…நம்பிக்கை வரும்..இப்படி நிறய இருக்கு….அபிக்கு இங்கு வந்ததிலிருந்து புரிந்து போனது…அதனால் சசியை எதற்கும் தொல்லை பண்ணுவதில்லை..
இரவு மட்டும் சீக்கிரம் வா சசி என்று வேண்டிக்கொள்வாள் தனியா இருக்க…பயந்து….
வெளி கதவெல்லாம் பூட்டி உள் வந்தவனை ..
என்ன இப்ப?….,டீச்சர்…..eeee
சங்கர் லீவ்… ரஞ்சித்தும் டில்லியும்…கம்பெனி ஒர்க் போய்ட்டாங்க…கடைல…அவசர வேலை ஒன்னும் இல்லை…வந்துட்டேன்….யாராவது தேடினா போன் பண்ணுவாங்க…
பொய்யா அள்ளி விட்டான்…அவங்க மூணு பேரையும் வெளி வேலைகள் பார்த்துட்டு வாங்க.ன்னு வலுவில் தள்ளிவிட்டு வந்துட்டான்..
ஆசை ..ஆசை..பேராசை ….இப்பொழுது ….
ஆசை தீரும் நாளும் எப்பொழுது?…
இப்ப சசிக்கு பிடிச்ச பாட்டு….eeee
ரெண்டுபேருக்கு பிரியாணி செஞ்சி எதுக்கு டயம் வேஸ்ட்…அதான் வாங்கிட்டே வந்துட்டேன்….
அழகிய உள்ளடங்கிய பற்கள் தெரிய ..சசி அசடு வழிந்த வாறே…பார்ஸல்களை நீட்ட…
காசு ரொம்ப செலவழிக்கிற சசி…கண்டித்தவாறே கை பொருள் வாங்கியவள்…சமயலறைக்கு போக…
பின்னோடே போனான் சசி…பூனை குட்டியாய்….
அடர் நிற நயிட்டி யில்…அவள் மஞ்சள் நிறம் கூடுதலாய் மினுங்க…வெள்ளி கொலுசு சப்தமிக்க மென்னடையோடு அன்னமாய் நடந்தவளின் இடையின் அசைவு….
சசிக்கு உன்மத்தம் கொடுக்க…
நைட்டியின் மறைவில் அதன் இருப்பே தெரியாததால் …
சட்டுன்னு…அவள் இடையை வேணும் ன்னே தேடி பிடித்து அணைக்க…
அபி கூச்சத்தில் துள்ளி குதித்துவிட்டாள்…பின் திருப்பி
சசி என்று கோபமே இல்லாமல் முறைக்க…
மிக ஆசையாய் அவளை கண்ணில் பருகியவன்….
குறுக்கு சிறுத்தவளே ..
என்னை குங்குமத்தில் கரச்சவளே….
நெஞ்சில் மஞ்ச தேச்சி குளிக்ககயில் …
என்னை கொஞ்சம் பூசு தாயே…
உன் கொலுசுக்கு மணியாக ….
என்ன கொஞ்சம் மாத்து தாயே…
லயமாய் மென்மையாய் பாட…வாவ்….அசந்துபோய் நின்றே விட்டாள்…
அவளுக்கு பாட்டு பிடிக்கும்..கேட்பதோடு சரி…ரசனை அவ்வளவே…சசி குரல் பிசிறில்லாம மலையாள பாடகர்கள் போன்று ஒலிக்க….வாவ் சொல்ல தோணியது…சாதகம் இல்லாது சாத்தியம் இல்லாதது இது…
எப்படி சசி இவ்ளோ நல்லா பாடுற…. வியந்து கேட்க…
அவளை தன் ஆட்காட்டி விரலால் சுட்டினான்…கவிதையாய்…
நானா?
ம்ம்ம்..தலையை இசைவாய் அசைத்தவன்…
உன்ன நெனச்சே…பாட்டு படிச்சேன்….
தங்கமே ஞான தங்கமே…..
பாடினான் நிறுத்தி நிதானமாய்…ராகம் மாற்றி…முகம் முழுக்க ஒளிர்ந்து சிரித்து பாட…..இவளுக்கும் அவன் மகிழ்ச்சி தொற்ற…
என்னென்னவோ செஞ்சு அசத்துற…ம்ம்ம்…
பார்சல்களை சமையல் மேடையில் பத்திரப்படுத்தி…
ஒயிலாய் அதன் மேல் சாய்ந்து நின்று…அவன் கன்னங்களை அழுத்தி வலிக்க இழுக்க…
சசி காதலனாய் மாறிபோனான்…
அவள் மீது சரிந்து…விரிந்த உதடுகளோடு பிறை நெற்றியில் அழுத்தி முத்தமிட….. மோகங்கள் ஆரம்பம் ஆக…
தன் ஓவிய பாவையை…பூங்கொத்து போல அள்ளிக்கொண்டு…தங்கள் ஒற்றை படுக்கை அறைக்கு போக…
எப்பவும்..இதே தானா? சசி…சிணுங்கினாள்..அபி…பிடிக்காத மாறியே….eee
அவனை பற்றி இன்னும் என்னென்ன இருக்கு தெரியவில்லை..அவளுக்கு…முந்தாநாள் வாழ்க்கை எப்பவோ வாழ்ந்த மாதிரி தோன்ற… நேற்றும் இன்றும் தான் அபிக்கு ஞாபகமே இருந்தது…
வேணும் அபி…இன்னும் கூட முழுசா உனக்குள் புக வழி இருந்தால் உன்கிட்டேயே கிடப்பேன் அபிமா…இது கூட போதலை அபி…இன்னும் இன்னும் இன்னும்..உன் ரத்தம் சதை நரம்புலெல்லாம் நான் கலக்கணும் அபிமா…
வெப்ப மூச்சுக்கள் எடுத்து ஆணாய் தன் பேராசைகளை கூற…
இன்னும் அவனை தன்னுள் இடுக்கிக்கொண்டாள்…ஒல்லி உடம்புக்காரி…
வச்சிக்க போடா ன்னு…ஆணவமாய்… இது சசி காதல் தந்தது….
இருவருக்கும் சரியான இளமை…பால் உணர்வுகள் முகிழ்த்தும் பருவம்…சமூகத்தின் திருமணம் எனும் ஒப்பந்தத்தின் அங்கீகாரம்..
எந்த ஒரு தடையுமில்லாமல்..மிக நேர்மையாய் இளமை பண்டிகையை கொண்டாடினார்கள்…
சுகமாய் களைத்தவர்கள்…. வேர்வையில் நனைந்து ஒருவராய் ஒருவர் துடைத்து விட காதல் கவிதை…
மோகமழை நின்ற பின்பும்
சாரல் சரசசத்தின் தூறல்கள்…விடவில்லை…
அவர்கள். நேச நகரத்தில்….
அபி…உன் கண்ணு ரொம்ப அழகு …அவள் கண்களையே பார்த்து…
கவிதை கற்பனை சொல்லவில்லை…தெரியவில்லை சசிக்கு…
அவளில் வியந்த..தன் மெய்களை எளிய வார்த்தையில் சசி சொல்ல ஆரம்பிதான்….
ம்ம்…இவள் செவ்விதழ் தானாய் மலர்ந்து விரிய…அபி
பெண்ணுக்கு இது பிடிக்கும்….தெரியாமலேயே….!!! சசி …
புருவம் கரு கருன்னு அடர்த்தியா …உன் எண்ணங்கள் போல அழுத்தமா இருக்கு அபி…
ம்ம்ம்….மேலும் கீழும் புருவம் ஏற்றி இறக்கி…அபி கர்வமாய்…தன் ஆணால் உணர்ந்தாள்…
மூக்குத்தியோட கூரா நிற்கும்…இந்த அழகிய மூக்கு நீ நிமிர்ந்து பார்க்கும் போது அதுவும் பார்க்கும் அபி…அப்படி ஒரு கம்பீரமா இருக்கும்…நான் நெருப்பு நெருங்காத…. சொல்றமாறி…அபி….
ம்ம்ம்…கவிதை சொல் கொட்டினாள் அபி…மெல்லிய வெட்கம் தோண….இப்ப
எதுவுமே வேணாம்..உன்னை பார்த்துட்டே இருந்தா கூட போதும் தோணும்…அபி…
அபிராமி அபிராமி ன்னு குணா படத்துல கமல் சொல்வாரு…கிறுக்கு மாறி எனக்கும் அப்படியே சொல்ல ஆசை
என் அபிராமி..அபிராமி…தன் மடியில் வாகாய் போட்டுக்கொண்டு அணைத்து காதில் பேர் சொல்ல….
அபிக்கு… உள் நெஞ்சில் ஈரம் சுரந்து ….பெண்மை பூக்கள் ஒவ்வொரு அணுவிலும் பூத்தது…
அவன் காதல் ஏழுவருசம் சொன்னாலும்…ஒரே நாளில் அடை மழையாய் கொட்டி தீர்க்கும் அன்பை சுமக்க முடியாமல் விழி நீர் பெருக…. தொண்டையில் அடைத்த ஏதோ உணர்வை விழுங்கி மறைக்க முயல…
ஏன்டா ?…கண்களை கண்ணீரோடு முத்தமிட்டு சுவைத்தவனை…..இன்னும் அணைத்து கொண்டாள்.. தளர்வாய்..தேம்பி அழனும் போல இருந்தது….
ஏன்டா என்னை இப்படி தாங்குற? தோளை உலுக்கி கேட்க ஆசை வந்தது…அபிக்கு…
உதடை உதுப்பி வைத்து அவனையே உத்து பார்க்க….
சசியின் விரல்கள் அதன் மென்மையை சோதிக்க…
கையை தட்டி விட்டாள்… கோணையாய் உதடு சுளித்து…
வாவ்..காதலை விட இன்நொடிசொர்க்கம்….!!!
முகம் திரும்பிய போது ஆடிய ஜிமிக்கிகள்…சசியை ஈர்க்க…
நச்சுன்னு ஒரு இச்சு அதுக்கு காதோடு சேர்த்து….
அவனிடமிருந்து நெளிந்து வளைந்து இறங்க பார்க்க…தன் வலிய கரங்களில் இழுத்து நெஞ்சுள் போட்டவன்…
என் பட்டு..கொஞ்சிக்கொண்டான்…உதடுகள் முகவலம் வந்து கழுத்துக்கு கீழே இறங்க…
அழைப்பு….
பசிக்குமே….நினைத்தாள் பாசமாய்…
அந்த நேரத்தில்…கருத்து ….eeee
இது பத்தல….அபி…சொல்லி கொட்டு வாங்கினான்….
பிராடு…. பொறுக்கி….கொன்றுவன் பார்த்துக்கோ…இப்படிலாம் பேசின… திட்டினாள்…
கேடி சசிஇப்படி ஓபனா சொன்னா…eeee
ஹாஹா..இளமையின் குறும்புகள்….
அறியாமைகள் தெரியாமைகள்.. அழகு…அழகோ அழகு…
அபியின் அழகிய இடை பகுதிக்கு வந்தவன்…சுழித்து கிடந்த நாபி கமலத்திற்கு முத்தமிட்டு முதல் மரியாதை செய்தான்…ஆசை காதலனாய்…
ஆண்டாண்டு காலமாய் ஆணின் கை பட்டு பட்டு தான்.. பெண் இனத்தின் இடையே சிறுத்து போச்சோ? அபி மா…
யாரும் அறியா மறைபொருள்..கண்டு கொண்டு புதிதாய் சசி சொல்ல…..eeee
அந்த இளம் ஆராய்ச்சியாளனை ஊக்குவிக்காமல்…அபி..இரக்கமே இல்லாமல்…
போடா லூசு…. என்ற பட்டம் கொடுத்து…
அவனிடமிருந்து..உருண்டு எழுந்து …ஆராய்ச்சியெல்லாம் முறியடிச்சுட்டு!!!
சசி சாப்பிடலாம்….கலைந்த முடிகளை சரிசெய்து அழைத்தாள்…
வா அபி….என அவன். ஏமாற்றத்தில் இழுக்க…..
திரும்ப அழைப்பு…
எனக்கு பசிக்குது சசி…பொய் சொன்னாள் அபி…
அடுத்த நொடி…பிரெஷ் ஆகிட்டு…தட்டு எடுத்துவைக்க இவள் பரிமாறினாள்..அவனை நல்லா திங்க விட்டு இவள்..கொத்த…எனக்காக நல்லா சாப்பிடு அபி…அவன் எடுத்து எடுத்து இவளை உண்ணச் செய்தான்…
திரும்ப ஓர் கூடல் ஓர் உறக்கம் இருவருக்குமான உலகம் எந்த தொல்லைகளும் இல்லாமல்…பகல் பொழுது விரைந்து ஓட…
சந்தியா பொழுதில்….
விளக்கேற்ற…குளித்து முடித்து சரியானவர்கள்….
இரவு ..சீக்கிரமே உணவு உண்டு விட்டு…
சசி மாடிக்கு கூப்பிட….
கரண்ட் செலவில்லாமல் led லைட் போன்ற மங்கிய நிலா ஒளி சும்மா கிடைக்க….eeee
இருவரும் வாட்டர் கேனும் பாயும் மட்டும் எடுத்து சென்று அமர….அபி மடியில் படுத்தே கொண்டான் சசி…விளையாட்டாய்..
ம்ம்ம்.ரொம்ப பண்ற சசி….இவள்….eee
பாட்டு லாம் எப்படி? சசி…சொல்லு…ஆவலாய் அபி…
என் பிரன்ட்ஸ் கானா படுவாங்க…. நானும் பாட முயற்சி செய்தேன்…எனக்கு சினிமா பாட்டு தான் பிடிக்கும்..அப்படியே …சுத்துறது….
அதுவும் உன்னை பார்க்கும் போதெல்லாம் மதியம் பாடின பாட்டு தான் மனசுல ஓடும்..என் முழு மனசையே சொல்ற மாதிரி…
ம்ம்ம்…
இன்னொரு பாட்டும்… இப்படி அனாந்திரமான இருக்கின்ற பொழுதில் பாட பிடிக்கும்…
உனக்காக என் ஆன்மா …பாடும் பாடல் இது…
உன் பதிலுக்காக காத்திருக்கும் தருணங்களில் தோல்வி யோடு வலியோடு …பாடுவேன் அபிமா…வலி கூட அவ்ளோ சுகமா இருக்கும்……தெரியுமா?..
என்ன பாட்டு சசி .ஆவலாய் அபி கேட்க…
பாடுறேன் கேளு….சும்மா அங்கங்கு எனக்கு பிடிச்ச வார்த்தை மட்டும் சேர்த்து பாடுவேன்…கிறுக்கனாட்டும்….கண்டுக்காத….ம்ம்ம்
எடுத்த எடுப்பிலேயே….மெயின் போய்ட்டான்….eeee
உன்னால என் கடல் அலை
உறங்கவே இல்லை….!!!!
உன்னால் என் நிலவுக்கு
உடல் நலம் இல்லை….!!!!
கடல் துயில் கொள்வதும்
நிலா குணம் கொள்வதும்
நான் உயிர் வாழ்வதும்…
உன் சொல்லில் உள்ளதடி
உன் இறுக்கம் தான் என் மனச
கொல்லுதடி கொல்லுதடி…
பெண்ணே என் பயணமோ
தொடங்கவே இல்லை….
அதற்குள் அது முடிவதா?
விளங்கவே இல்லை…
நான் கரையாவதும்
இல்லை நுரையாவதும்
வளர் பிறையாவதும்…
உன் சொல்லில் உள்ளதடி…
உன் மௌனம் தான் என்
மனதை கொல்லுதடி கொல்லுதடி….
பாடி மடியில் இருந்தவன் அவள் இடுப்போடு பாசமாய் கட்டிக்கொள்ள…அபிக்கு குற்ற உணர்ச்சி தான் பெருகியது…
ஆண் விரும்பி கட்டிக்கொண்டா அதிர்ஷ்டக்காரி!!!!
ஏன் வேணாம் ன்னு சொல்ற ? அபிராமி…
கல்யாண கலாட்டா வில் பேசிய பெண்கள் உணர்வு இன்று புரிந்தது…
நிஜமாவே அதிர்ஷ்டசாலிதான்….தான்….அபி பீல்…
உலகம் சொல்வது தான் பொருந்துகிறது…
தனி பாதைகள் என்று புதிரானவை புரிந்தது…
அதென்ன அனாந்திரமான நேரம் சசி?…
அவனை ஒழுங்கா படுக்க வைத்து அடர்ந்து படர்ந்து கிடந்த தலையை கலைத்து விட்டு கேட்க…eeee
சாதாவாய் பேசியதையும் சரியாக புரிந்து கேட்கும் அபியின் சூப்பர் ஸ்மார்ட்னஸ் பிடித்தாலும்…
நல்லா வசமா சிக்கிட்டோமே ….நொந்தான்…eeeee
சசி கண்ணை மூடிக்கொண்டு தூங்கிய மாதிரி நடிப்பு வைக்க..!
சசி பிராடு..கீச்சு குரலில் …கத்தி…
சம்திங் தப்பு ம்ம்ம்ம்….சொல்லித்தான் ஆகணும்….டேய்…அப்புறம் பேச மாட்டேன்…போ…..பாயைவிட்டு எந்திரிக்க…முயல
சொல்றேன் ..சொல்றேன்….இரு…அவளை அமர்த்தி….
கொஞ்சம் தண்ணிய போடும் போது…..eeeee
இதுவாக இருக்கும் நினைக்கவில்லை…ஆனால் சசி வாயாலேயே கேட்ட பொழுது….பிடிக்கவே இல்லை…
அபியும் சிறு பெண்தானே..வாழ்வின் எந்த அவலங்களையும் பார்க்காதவள்…அனுபவம் இல்லாதவள்…தான் கொண்டதே சரியானது என்று..புத்தக நெறிகள் மனதில் கொண்டு..இப்படி இப்படித்தான்…வாழணும் கோடுகள் கொண்டவள்…
இந்த ஒழுக்கக்கேட்டை…ஏற்றுக்கொள்ளமுடியாது….முகம் மாறி
உம் மென்று..உதட்டை உதுப்பி அமர்ந்திருந்தாள்..காதில் கேட்டது கூட நாக்கில் கசந்தது….
அபிமா அது ஒரு காலம் வகை தொகை இல்லாமல் அலைந்தது…இனிலாம் அப்படி நடக்கவாய்ப்பு இல்லை…நம்புமா…
இறுக்கி வைத்திருந்த உதடுகள் அபியின் மனதை சொல்ல…
அதை திறக்க தன் அதரம் கொண்டு முத்தமிட…
இவள் தள்ளிவிட..அவன் இன்னும் அழுத்தமாய் முத்திரை பதிக்க..அங்கு சின்ன காதல் யுத்தம்..சத்தமில்லாமல்..நடந்தது…
கொஞ்சம்…நிதானப்பட்ட அபி…
முந்தா நேத்து நைட் ஏன் அப்படி வந்த சசி?
மூணு மாசம் நல்ல பிள்ளையாய் இருந்த என்கிறதால விட்டேன்…ஏன் பண்ணுன?…. கறார் கண்ணம்மா கேட்க…
ஹி ஹி ஹி….வழிந்தான்..சசி….
சிலதெல்லாம் வெளில சொல்ல முடியாது அபி ..கடந்து போயிரனும்….சங்கடமாய் சொல்ல…
என் கிட்ட கூடவா?..
உன்கிட்ட மட்டும் தான்….eee
அப்ப இன்னொரு தடவ ….நடக்கும்…கேட்பேன்…இப்படி வெளில சொல்லமுடியாது…ன்னுட்டு…காரணம் காட்டி நீர் நாயா வருவ ..அப்படித்தானே சசி?…சூடாய்…
எம்மாடியோவ்!!!
இம்புட்டு அறிவாளியாய் நீ இருக்கக்கூடாது அபி….!!!!
தலை குனிந்தவாறே….
அது கடைத்தெருல ஒரு மாதிரி பொம்பள இருக்கும்..அது அன்னைக்கு ஏதோ பேசிட்டு இருந்துச்சு..சட்டுன்னு அங்கங்க கை வச்சுருச்சு….பேஜாராப் போச்சு ..அபிமா…அதை செம்ம திட்டு திட்டி அனுப்பிட்டேன்…ஆனா மனம் கேட்டு போச்சு…உன் நினைப்பு வந்துடுச்சு..நீ என்கிட்ட…முழுசா இருக்கணும் ன்னு தேடல் தொடங்கிருச்சு …மனசும் உடம்பும் அன்னைக்கு கண்ட்ரோல்ல இல்லை…அதனால …ஸாரி அபிமா…இனி நடக்கவே நடக்காது…
அந்த பொம்பளை கிட்ட உனக்கு என்ன பேச்சு? சசி….முகம் சுளித்து அபி…
அதுக்கு தொழில் தான் அது..என் கிட்ட பாசமா பேசும்…நேர்மையாவும் இருக்கும்…அன்னைக்கு அதுக்கு ஏதோ சோகம் போல….வா சசி…ன்னு…..eeee
சொல்லிக்கொண்டிருந்த சசி ..அபியின் கோபத்தில் சிவந்த முகத்தை பார்த்தவன்..நிறுத்திவிட்டான்….
எந்திரித்தே விட்டாள்…கிடு கிடுவென்று கிழே இறங்கி போய்விட்டாள்…
கோபம் மிக….
ஊடல்…ஊடல்..ஊடல்… மேலும் காதல் கவிகள் வனைய!!!!
அபி கோபம்..நம்ம சசிக்கு புதுசா என்ன?
ஆனா இது ஒரு மார்கமான ஊடல் என்பதால் அந்த இளம் கணவனுக்கு…கண்ண கட்டியது….eeee
பொதுவாய்…eee
பொம்பள பிள்ளையை மேய்ப்பது எப்படி?
யாராவது கிளாஸ் எடுத்தால் சசிக்கு ஒரு சீட் ஒதுக்கி வைங்கள்..
உங்க நம்பர்க்கு 50 ரூபாய் ரீசார்ஜ் பிரீ யா பண்ணிவிடுவான்…eeee
இன்றே இந்த ஆபர்…. eeee
நான் ரொம்ப நல்ல பையன் அபி..நான் இனி யார்பக்கமும் திரும்ப கூட மாட்டேன்..நல்லவளும் வேணாம் கெட்டவளும் வேணாம்…அபி..
பின்னாடியே அவள் போன இடம் எல்லாம் போனான்…
ஓரிடத்தில் அவள் நின்று முறைக்க …
அவர்கள் ஒற்றை படுகையறையின் பாத் ரூம் கதவு…
அசடு வழிய சசி..eeee
போய் ஒழுங்கா பழையமாறி கீழ பாய் விரிச்சி படு… அந்த பச்ச பிள்ளைய விரட்டினா…
நாய்க்குட்டி மாதிரியே திரியரத பாரு…இம்சை…
திட்டிக்கொண்டே பல் விளக்கும் போது…சசியை பின் பக்கம் திரும்பி பார்க்க..
அவன் கிழே பாய்விரித்து விட்டு அதையே வெறித்துப் பார்த்துக்கொண்டிருக்க…
சிரிப்பு வந்தது..அபிக்கு…
இந்த ஆட்டம் பிடிச்சிருந்தது…
ரொம்ப…ரொம்ப…தன் அப்பாவி சசி மேல் பிரியம் கூடியது…
சும்மா சும்மா அவன் இஷ்டத்துக்கு போனா கடிச்சி பிச்சி எடுக்கிறான்…நாய்…eeee
அவன் வேகத்தை மெச்சிக்கொண்டாள்..
ரகசியமாய் …தனக்கும் அதில் இருக்கும் விருப்பத்தை முழுசாக ஊடல் திரைக்கொண்டு மறைத்தாள்…
இளம் கணவன் சசிக்கு…
தனியா ? தனியா? தனியா?…வா…ரூம் எங்கும் எக்கோ அடிக்க…eee
முன்ன வேற மாறி அப்டியே இப்ப இருக்க முடியுமா?…
ஒல்லிக்குச்சி உடம்புகாரி…ரொம்ப சாகடிக்கிறடி…
அனத்தி தொணத்திக்கொண்டான்.. முடில…
தன்
ஒல்லி பெல்லி அபியை ஓரக்கண்ணால் சயிட் ஓ சைட்டு… eeee
இவளுக்கு மட்டும் கொஞ்சோண்டு சதை இருந்துச்சு செமையா இருக்கும்….
எடக்கு மொடக்கு ஏகாம்பரத்துக்கு ஏக்கம் வேறு….
இவ்ளோ ரணகளத்திலும் …குதூகலம்….eee
முகம் கழுவிக்கொண்டு டவல் கொண்டு துடைத்துக்கொண்டு வந்தவளை…
இன்னும் இன்னும் டெரரா வச்ச கண்ணு இமைக்காம பார்த்து …
மயக்க பார்க்க …
அவனுக்கு அது ஒழுங்கா கூட வரல …
ஐயோ பாவம்…!!! Eeee
டீச்சர் அபிக்கு…மெல்லிய புன்னகை இதழில் உதிக்க…மாட்டிக்கொள்ளாமல் டவல் கொண்டு மறைத்துக்கொண்டாள்…
அவன் பாவம் போல ..கிழே கிடக்க…ம்ம்ம்ம்
உலகே மாயம்…வாழ்வே மாயம் ..
வாழ்வில் நாம் காணும் சுகமே மாயம்….பீல்…eeee
விக்கல் வாரா குறை தான் சசிக்கு….eee
அம்புட்டு சோகம்… தேவதாஸ் மாறி ..
நாய்…???? அபி வளர்க்க உடுவாளா?…?????eeee
லைட் அணைத்து விடி விளக்கு போட்டு வந்தவள் கட்டிலேறி …ஒயிலாய் படுத்தாள்…
தானாய் வந்தது அந்த திமிர்..தந்தது அவளின் சசி….
இது ஓர் நூதன உணர்வு…
ஊடல் வேணாம் ங்குது..
ஆசை அவன் பின்னோடி வேணும்ங்குது…..ம்ம்ம்..
விசித்திரம்…தான்…
ஓர் நாளில் உயிரில் கலந்தான் …இது எப்படி?
இது என்ன ஜென்ம பந்தமா?தெரில அபிக்கு…
விளக்கணைத்த பின்னும் வரிவடிவமாய் தெரிந்த சசியை..
தன் கால் கொலுசை இன்னொரு காலோடு தட்டி ஒலி எழுப்பி ரசித்துக்கொண்டிருந்தாள்…ஊடல் ஆவியா போச்சு….
ஏதாச்சும் சமாதான படுத்துதா பாரேன்…கிறுக்கு…
டேய் சசி….
உனக்கு இருந்தாலும் இம்புட்டு விசுவாசம் ஆகாது …போய் கீழ படுன்னா படுத்துடுவியா?
கிறுக்கா…கெஞ்சனும் ல்ல…
இவன்லாம் ஏழுவருசமா லவ் பண்றானாம் ..பிராடு…
நானும் ரௌடி தான் ..நானும் ரௌடி தான்..மாறி..
நான் லவ் பண்றேன் லவ் பண்றேன்னு சொல்லிட்டு திரிஞ்சிருக்கான்…கெத்துக்காக…
ம்ம்ம்…
உதடு சுளித்து அழகாய்சிரித்துக்கொண்டாள்…தன் சசியை கொஞ்சி…
அவளுக்கே இக்கணம் பிடித்திருந்தது…
அமைதியா இருக்கணும்..மனம் உளறுவதை மட்டும் கேக்கணும் தோணிச்சு….
ஓர் தெய்வீக மயமான நேரம்….
அபி பாட்டுப் பாடவா?….ஆசையாய் …மயக்கலாம் ஏதாவது பேசி.. சரிபண்ணிக்கலாம்… eeee ன்னு தன் திருவாய் மலர்ந்தான் சசி..
சாரி சசி எனக்கு பாட்டுன்னா அலர்ஜி….நீ சும்மா இரு…அதுவே பத்து பாட்டு பாடியதற்கு சமம்…
என்று ஓர் மாபெரும் உண்மையை சொல்லி…அந்த வழியையும் கபால்ன்னு அபி அடைத்து விட…
வேறு என்ன செய்ய? மண்டைக் காய்ந்தான்..சசி..
போடா கால் அமுக்கு…கைய பிடி….சொல்லிக்கொடுக்க ஆளிலில்லை…
சசி….தன் இடத்தை விட்டு எந்திரிக்க …
எதற்கு எழறான்?….ம்ம்ம்ம்
அபிக்கு ஜிவ்வென்று உடல் அதிர்ந்தது…
ஏன்? எதற்கு?..இந்த இணைப்பில்லா சங்கிலி அதிர்வு… தெரில…
ஆதி அந்த காலந்தொட்டு…ஆணுக்கும் பெண்ணுக்குமான கம்பியில்லா தந்தி பரிமாற்றமோ?…
ஏனோ…சட்டென்று உலர்ந்த உதட்டை நுனி நாவினால் ஈரம்
வைத்துக்கொண்டாள் அபி…லேசாய் மூச்சு வாங்கியது….
சிறைப்பெற்றுருந்த ரெட்டை புறாக்கள் தூக்கம் கலைத்து பட படவென்று ரெக்கையடித்து விடுதலை தா வென்று…திடீரென புரட்சி செய்ய….நன்றாக உடல் குறுகிய சுருண்டுக்கொண்டாள் அபி..
பசலை தாங்க முடியாமல்…சுக நோவில் நடுங்கினாள்…
இதெல்லாம் ஓவர் ..தான் கொஞ்சம்…
ஆளுக்கு ஆள் உணர்ச்சிகள் மாறுபடும்..விதிப்படி …விலக்கு உண்டு…
அதெல்லாம் செல்லாது….இதோடா..பிராடுத்தனம்….eee
