கட்டா மீட்டா 1

மிட்டாய் 1

￰சென்னை

கைப்பந்து தலைமை அலுவலகம்

“என்ன??? மீட்டிங் அரேச் பண்ணியாச்சா சுப்பு”- தலைமை அலுவலகம் பொறுப்பாளரிடம் சுந்தர்ராஜன் கேள்வி கேட்க

இல்லை சார்… இன்னும் யாரும் வரவில்லை… அதான்” என்றான் தலையை சொறிந்தப்படி

“என்ன வந்து போயினு இழுக்குறிங்க மேனேஜர்… இங்க நடக்கும் எல்லாத்துக்கும் நீங்களும் ஒருவகையில் பொறுப்பு… ஆசோஷியேஷன் மெம்பெரா இருந்தா மட்டும் போதாது….

எல்லாம் ஒழுங்கா நடக்குதான்னு பார்க்கணும்…

இன்னும் ஒருமணி நேரத்துல எல்லாரும் டைம்க்கு இங்க ஆஜராகிருக்கணும் சொல்லிடுங்க… கமிட்டி மீட்டிங் இருக்கு” சுந்தர்ராஜன் கட்டளையிடும் தோணியில் தலைமை செயலாளர் உடனே ஏற்பாடுகள் செய்திட…

ஒருமணி நேரத்தில் கூடுதல் அவகசாமின்றி ஐந்து நிமிடம் முன்பே ஆசிய கைப்பந்து மீட்டிங் அறையில் அனைவரும் தலைமை பொறுப்பை தாங்கும் MR. சுந்தர்ராஜன் அவரின் ஆணைகிணங்க கூட்டம் கூடியிருந்தது…

நேரம் தவறாமல் உள்ளே வந்த சுந்தர்ராஜரைக் கண்டு அனைவரும் எழுந்து நிற்க

தனது கையை காண்பித்து அனைவரையும் அமரச்செய்தவர் ” ஹாய் பிரண்ட்ஸ் வெல்கம் யூ ஆல்… இங்க மீட்டிங் கூடியிருக்க காரணம் இருக்கு… அதற்கு முந்தி யாரும் என்ன ஏதோணு ஒரு முடிவுக்கு வரவேண்டாம்…

ஐம் ரைட்…

ஓகே… இங்க அனைவரையும் நான் கூடியிருக்க சொன்னது ஒரு முக்கியமா விஷயத்திற்கு… அதாவது நம்ப இந்தியன் டீம் கோச்க்கு நீங்க எக்ஸ்பிரியன்ஸ் ஆள போட சொல்லிருதிங்க இல்லையா…

நான் செலக்ட் பண்ணிட்டேன்” சுந்தர்ராஜன் இப்படி போது வெளியில் தெரிவித்ததும் அங்கு ஒரு சலசலப்பு எழுந்து அடங்கியது…

“ஹ்ம்ம்… அவரு ஒன்னும் நமக்கு தெரியாத கோச்சர் இல்ல… ஏற்கனவே இந்தியன் டீம்காக விளையாடி ஆசியன் ட்ரோப்பி வின் பண்ணி வாங்கி கொடுத்திற்காரு…

அவரு வேற யாருமில்லை நம்ப ருத்ராக்க்ஷன் தான்” சுந்தர்ராஜன் பேசிக்கொண்டிருக்கும் போதே கூட்டத்தில் ஒரு நிசப்தமான பெரும் அமைதி…

அந்த அமைதியே அவருக்கு உணர்த்தியது யாருக்கும் ருத்ராக்க்ஷனை பிடிக்க வில்லை என்று… இருந்தும் கோழியை கேட்டுக்கொண்டா குழம்பு வைக்க முடியும் என எண்ணி அமைதியாக இருக்க…

இருந்தும் கூட்டத்தில் ஒருவன் எழுந்து “சார்… நீங்க சொன்ன ஆளு டீம் விட்டு போய் நாலு வருஷம் ஆகுது சார்.. இப்போ கர்ரெண்ட்ல உள்ளவங்களை எடுக்காம முன்னாள் பிளேயர் அதுவும் லாஸ்ட் மினிட்ல… இந்தியன் டீம்காக விளையாட முடியாதுன்னு சொன்னவரை போய் போட்றிங்க…

எங்களுக்கு ஆப்ஜெக்க்ஷன் இருக்கு சார்” என்றவனை தொடர்ந்து மேலும் பத்து பேர் எதிர்ப்பு தெரிவிக்க…

தன் இருக்கையில் இருந்து எழுந்த சுந்தர்ராஜன் ” ஒஹ்ஹ் உங்களுக்கு அவன் ஏன் இந்தியன் டீம்ல விளையாட மாட்டேன்னு சொன்னதுதான் இப்போ பிரச்சனையா???

இல்ல அவனே உங்களுக்கு பிரச்சனையா??

இங்க பாருங்க அப்போ அவனோட சூழ்நிலை அப்படி.. அவங்க அப்பாக்கு ஆப்பேரஷன் அதுனால அவனுக்கு பேர்சனல். .. அதுனால அவனால இந்தியன் டீம்க்கு விளையாட முடியல்ல… அது ஒரு பெரிய விஷயமா எடுத்துட்டு பேசாதிங்க…

இது நான் மட்டும் எடுத்த முடிவில்லை போர்ட் மீட்டிங்கில் எல்லாரும் சேர்ந்து எடுத்த முடிவு ” அனைவரோட விருப்பம் ருத்ராக்க்ஷன் தான்… மேலும் கருத்து தெரிவிக்கும் அனைவரையும் நான் எந்த விதத்திலும் வற்புறுத்தவில்லை வாயில் கதவு திறந்துதான் இருக்கிறது என்ற சுந்தர்ராஜன்

தன் முடிவில் உறுதியாய் இருக்க அங்கு எதிர்ப்பு தெரிவித்த கூட்டமும் அடங்கியது…

சற்று நேரம் அமைதிக்கு பின் உரையாடிய சுந்தர்ராஜன் தற்போது அறிவித்திருக்கும் ஆசிய கைப்பந்தின் அணியின் தலைமை மேலாளர் பொறுப்பிற்க்கு ஸ்ம்ருதி என தன் மகளை அறிவிக்க அங்கு எந்த எதிர்ப்பும் இல்லை… ஒரு அதிகாரியாக தன் மகளைப்பற்றி பெருமையாக நினைத்தாலும் ஒரு தந்தையாக அவரால் பெருமை கொள்ள முடியவில்லை….

முடிவில் இன்னும் இரண்டு நாட்களில் இந்திய கைப்பந்தின் கோச்சராக ருத்ராக்க்ஷன் பதவியேற்கப்படும் என்ற அறிவிப்போடு அன்றைய கூட்டம் கலைந்தது…

இரண்டு நாள் கழித்து ஆசிய கைப்பந்து விருந்தினர் மற்றும் மீட்டிங் ஹாலில்
இந்திய கைப்பந்து அணியின் புதிய பயிற்சியாளர் “ருத்ராக்க்ஷன் ” பதவியேற்றான்… அதனை தொடர்ந்து

அதே மேடையில் ஆசிய கைபந்தின் மேல் செயலாளராக ஸ்ம்ருதியும் பதவி ஏற்க அங்கு கூட்டத்தில் கரகோஷம் ஆர்ப்பட்டமாக எழுந்தது… அந்த கரகோஷம் ஸ்ம்ருதியின் கனவு அல்லவா தன் பார்வையை சற்று திருப்பி ருத்ராக்க்ஷன் மேல் ஏளனமாக படரவிட்டவள்… பார்வையால் தன் உயரத்தை அவனுக்கு எடுத்து சொல்ல

அவளின் பார்வையை புரிந்துக்கொண்ட ருத்ராக்க்ஷன்… ஒரு தேசிய அணியின் செயலாளராக பொறுப்பேற்று இருக்கும் ப நீ…
ஒரு மனைவியாக
ஒரு மகளாய்
ஒரு தோழியாய்
ஒரு மருமகளாய்
ஒரு தாரமாய்
ஒரு அம்மாவாய்
நீ தோற்றுவிட்டாய் பெண்ணே என்பதுபோல்…..

ருத்ராக்க்ஷனின் பார்வை அவள் பக்கம் இருக்க அவன் பார்வைக்கு பொருள் உணர்ந்தவளால் அவன் பார்வையின் வீச்சை தாங்க முடியாமல் ஸ்ம்ருதி தன் பார்வையை தாழ்த்திக்கொண்டாள்….

மறுநாள் அதே விருந்தினர் மாளிகைக்கு இன்று பயிற்சி இருப்பதால் விரைவாக அரக்க பறக்க கிளம்பியவனை முதலில் போர்ட் மீட்டிங் வரவேண்டும் என்பதால் விரைவாக வந்த ருத்ராக்க்ஷனுக்கு அதிர்ச்சியே கிட்டியது
“உள்ள என்ன பண்றாங்கனு பார்த்தா சமோசா பிஸ்கட் டீ ஜுஸ்ன்னு சிறிய விருந்து நடக்குது …முக்கியமான கூட்டம் நடக்குதுனு சொன்னங்களே நாம தான் மாறி வந்துட்டோமோ” என்று தன் மனசாட்சியை கேட்டவன் இல்லையே தான் சரியாதான் இருக்கிறோம் இங்குதான் தப்பாக நடக்கிறது என்று நினைத்தவனால் முதல் நாளே இவர்களின் அலட்சியம் அவன் கோபத்தை கிளப்பியது…

உடனே அங்கு இருக்கும் தலைமை செயலகத்தில் புகார் தெரிவிக்க… ஐந்து நிமிடத்தில் ஸ்ம்ருதி குறிப்பிட்ட இடத்திற்கு வந்து விட….

அவளை கவனித்த ருத்ராக்க்ஷன் வேண்டுமென்றே “நான் மேல் அதிகாரிய பார்க்கவேண்டும்” என்றவனை தொடர்ந்து அங்கு நின்றிருந்த கூட்டத்தை அனுப்பிவைத்தவள்…

அதுவரை புன்னகையுடன் இருந்தவள் கூட்டம் ஒருவாறு களைந்து விட…. அவனை நெருங்கியவள் கோபத்தில் முகம் சிவக்க ” உனக்கு அறிவில்லை பொது வெளியில் இப்படித்தான் கத்தி கூப்பாடு போடுவியா… சரியான நாட்டுபுறத்தான் நீ…. ச்சே”

அவளை நெருங்கிய ருத்ராக்க்ஷன் ” சாரி மிஸ் நான் ராஜன் சார் கிட்ட பேசிக்குறேன் நீங்க யாரு???” வேண்டுமென்றே வம்பிழுத்தவனை பார்த்தவள்

நான் தான் இந்த ஆசிய அளவிலான கைப்பந்து குழுவிற்கு செயலாளர்… என்ன வேணுமோ சொல்லுங்க… அதாவது உங்களுக்கு புரியும் படி சொல்லட்டா” என இழுத்தவள் தன் பதவியின் உயரத்தை உணர்த்தியதை மட்டுமின்றி வருங்கால தலைவியும் கூட என்றவளின் குரல் எகத்தாளமாக மாறி ஒலித்தது

“ஏன் உனக்கு பெயர் இல்லையா…பிறக்கும்போதே செயலாளரா தான் பிறந்தியா என்று படு நக்கலாக வினவினான்!!” மகளிர் அணியின் கோச்சராக விளங்கும் ருத்ராக்க்ஷன் …

அவனை முறைத்தப்படி நின்றிருந்தவள் “ஹேய் மிஸ்டர் என்ன ரொம்ப ஓவரா பேசுற… யாருக்கிட்ட பேசிட்டு இருக்கனு தெரியுமா…

ஒழுங்கா வந்தமா உன்னோட வேலையை மட்டும் பாரு”

“ஹ்ம்ம் நானும் என்னோட வேலையைத்தான் பாக்கணும்னு நினைக்குறேன்… ஆனா அதுக்கு அவங்க ஒத்துக்கணுமே” மேலும் கீழும் அவளைப் பார்த்து “ஹ்ம்ம் பரவாயில்லை இன்னும் சும்மா நச்சுன்னுதான் இருக்க”அவளை சீண்டிப் பார்க்கும் பொருட்டு அவன் சற்று விளையாட்டாக பேச அவளுக்கோ கோபம் வந்தது…

மிஸ்டர் ருத்ராக்க்ஷன் என்றபடி அவனை அடிக்க கை ஓங்கியவளின் கையை லாவகமாக பிடித்து தடுத்தவன் பட்டென்று அவள் கையில் முத்தமிட்டு “வாவ்… சம்மு பேபி இன்னும் பட்டு மாதிரி வழ வழன்னு இருக்கே”

“சீ…. உனக்கு வெக்கமா இல்ல இப்படி பண்றதுக்கு… அதுவும் பொது இடத்துல எப்படி நடந்துக்கணும்னு தெரியலையே பொறுக்கி ராஸ்கல்” என்றபடி அவன் காதலோடு முத்தமிட்ட இடத்தை தன் கைகுட்டையால் துடைத்து எரிந்தவளை மேலும் நெருங்கியவன்

“என்ன???….

என்ன சொன்ன கொஞ்சம் சத்தமா சொல்லுடி பொம்பள ரௌடி… ஒரு காதலன இப்படித்தான் பேசுறதா கொஞ்சம் அடக்கம் வேணுமா பொண்ணுங்களுக்கு… “- ருத்ராக்க்ஷன் அவளை பார்த்து ஏதோ உரிமையுள்ளவன் போல் கேட்க

“ஏய்… நான் என்ன உன் பொண்டாட்டியா பெருசா உரிமையெடுத்துக்குற…. விடுடா கையை” மீண்டும் அவனை மரியாதையில்லாமல் பேச வெகுவாக வெகுண்டவன்…

“இங்கப் பாருடி நானும் பொம்பலைன்னு பார்த்துட்டு இருக்கேன் ரொம்ப பேசுனா பின்விளைவுகள் ரொம்ப மோசமா இருக்கும்”என்க

அவனை ஏளனமாகப் பார்த்த ஸம்ருதி “ஹலோ என்ன மிஸ்டர் எல்லாம் தெரிஞ்சிதான் பேசுறியா இந்த ஏஷியன் வாலி பால்…. யாருதுன்னு தெரியுமா

தி கிரேட் சுந்தர் ராஜன் இது அவங்களோட கனவு கோட்டைனா…. அவரு பொண்ணு டாட்டார் ஆஃ சுந்தர்ராஜனின் ஒரே மகள் ஸம்ருதி… இந்த சாம்ராஜ்ஜியத்தோட ஒரே வாரிசு எல்லாம் என்னோட கண்ட்ரோல்…

ஒழுங்கா பிஹேவ் பண்ணலைனா வேணும்னே ரெட் கார்ட் கொடுத்து வெளில அனுப்பிருவேன்” ஜாக்கிரதை அவளது அலட்சியம் அவனுக்கு கோபம் ஏற்படுத்துவதை விட ஆதங்கம் தான் அதிகமானது…

“செக்ரேட்டரி அம்மா…..!!!! இவ்ளோ பேசும் நீங்க!! டீம் செலெக்க்ஷன் போகும் முன்ன இங்க என்ன விருந்து???…

உங்க அலட்ச்சியத்தை போர்ட் ஆஃபீஸ்ல கம்ப்ளைன்ட் பண்ணவா???

நீங்க முதலில் ரூல்ஸ் அண்ட் ரெகுளேஷன்ஸ் படிச்சிட்டு வாங்க… இது ஒன்னும் பிக் பாஸ் இல்ல பொய்யான ஒட்டு போட்டு வெளியே அனுப்புறதுக்கு

சுத்தி கேமரா இருக்கு லைவ் டெலீகாஸ்ட் பேபி… என்னா பேசுறோம்னு யோசிச்சி பேசு… எனக்கு ரூல்ஸ் ரெகுலேஷன்ஸ் நீ சொல்லித்தராத

இதுல போட்டி போடறதுக்கு நீயும் நானும் எதிர் … எதிர் அணி இல்ல ஒரே அஸோசியேஷன்… கவனமா இரு… ஏதாவது பேசி என்னோட கோபத்துக்கு வீணா ஆளாகாத”

“ஹேய் யூ ” ஸ்ம்ருதி தன் ஏககாலத்து குரலில் கத்தி கூச்சலிட

“எஸ் ஐம் இந்தியன் டீம் கோச்சர் ருத்ராக்க்ஷன் மறந்துட்டீங்க போல

என்னப் பண்றது எண்ணில் அடங்காத புது முக காதலர்கள் அளவுக்கு அதிகமா இருந்தா

பாவும் நீங்களும் என்னப் பண்ணுவீங்க” இவர்கள் உரையாடலை தூரத்திலிருந்துப் பார்த்த காவலர்கள்

இவரிடம் ஓடிவந்து “எனிப் பார்ப்ளம்” என்க ஸம்ருதியோ காவலாளிகளைப் பார்த்து

“டீம் செலக்ட் பண்ணாம இன்னும் என்ன இங்க விருந்து வேண்டி கிடக்கு” காவலாளிகள் வார்த்தைகளின்றி திணற

அவள் பொறுமை காற்றில் பறந்து தனக்கு அருகில் நின்றுக்கொண்டிருந்த காவலாளி ஒருவனை கன்னத்தில் ஓங்கி அறைந்தவள்

“ஐ வான்ட் எவிரித்திங் பெர்பேக்ட்… அடுத்தவங்க குறை சொல்லும் அளவுக்கு நடந்துகிட்டிங்க… நிரந்தரமா தூக்கிடுவேன் ஜாக்கிரதை” ஆள்காட்டி விரலால் பாதுகாவளனய் எச்சரித்தவள்…

ருத்ராக்க்ஷனை முறைக்கவும் தவறவில்லை… அவள் முறைப்பை பார்த்து ஏளனமாக சிரித்த ருத்ராக்க்ஷன் அவளுக்கு எதிர் புறமாக கடந்துச் சென்றான்…

காட்டம் தொடரும்….

Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *