ஏகாந்த இரவில் வா தேவதா – 16

விஷ்ணுப்ரியாவின் - ஏகாந்த இரவில் வா தேவதா

ஏகாந்த இரவில் வா தேவதா _முன்னுரை

ஏகாந்த இரவில் வா தேவதா _முன்னுரை

ஏகாந்த இரவில் வா தேவதா! – 2 (i)

ஏகாந்த இரவில் வா தேவதா! – 2 (i)

ஏகாந்த இரவில் வா தேவதா! – 2 (ii)

ஏகாந்த இரவில் வா தேவதா! – 2 (ii)

ஏகாந்த இரவில் வா தேவதா!! – 3

ஏகாந்த இரவில் வா தேவதா!! – 3

ஏகாந்த இரவில் வா தேவதா!! – 4

ஏகாந்த இரவில் வா தேவதா!! – 4

ஏகாந்த இரவில் வா தேவதா!! – 5

ஏகாந்த இரவில் வா தேவதா!! – 5

விஷ்ணுப்ரியாவின் – ஏகாந்த இரவில் வா தேவதா – 7

விஷ்ணுப்ரியாவின் – ஏகாந்த இரவில் வா தேவதா – 7

விஷ்ணுப்ரியாவின் – ஏகாந்த இரவில் வா தேவதா – 8

விஷ்ணுப்ரியாவின் – ஏகாந்த இரவில் வா தேவதா – 8

விஷ்ணுப்ரியாவின் – ஏகாந்த இரவில் வா தேவதா – 9

விஷ்ணுப்ரியாவின் – ஏகாந்த இரவில் வா தேவதா – 9

விஷ்ணுப்ரியாவின் – ஏகாந்த இரவில் வா தேவதா – 10

விஷ்ணுப்ரியாவின் – ஏகாந்த இரவில் வா தேவதா – 10

விஷ்ணுப்ரியாவின் – ஏகாந்த இரவில் வா தேவதா – 11

விஷ்ணுப்ரியாவின் – ஏகாந்த இரவில் வா தேவதா – 11

விஷ்ணுப்ரியாவின் ஏகாந்த இரவில் வா தேவதா-12

விஷ்ணுப்ரியாவின் ஏகாந்த இரவில் வா தேவதா-12

விஷ்ணுப்ரியாவின் ஏகாந்த இரவில் வா தேவதா-13

விஷ்ணுப்ரியாவின் ஏகாந்த இரவில் வா தேவதா-13

விஷ்ணுப்ரியாவின் ஏகாந்த இரவில் வா தேவதா-14

விஷ்ணுப்ரியாவின் ஏகாந்த இரவில் வா தேவதா-14

விஷ்ணுப்ரியாவின் ஏகாந்த இரவில் வா தேவதா-15

விஷ்ணுப்ரியாவின் ஏகாந்த இரவில் வா தேவதா-15

ஏகாந்த இரவில் வா தேவதா – 16

ஏகாந்த இரவில் வா தேவதா – 16

ஏகாந்த இரவில் வா தேவதா – 16

ஏகாந்த இரவில் வா தேவதா – 16

விஷ்ணுப்ரியாவின் – ஏகாந்த இரவில் வா தேவதா – 17

விஷ்ணுப்ரியாவின் – ஏகாந்த இரவில் வா தேவதா – 17

விஷ்ணுப்ரியாவின் – ஏகாந்த இரவில் வா தேவதா – 18

விஷ்ணுப்ரியாவின் – ஏகாந்த இரவில் வா தேவதா – 18

விஷ்ணுப்ரியாவின் – ஏகாந்த இரவில் வா தேவதா – 19

விஷ்ணுப்ரியாவின் – ஏகாந்த இரவில் வா தேவதா – 19

விஷ்ணுப்ரியாவின் – ஏகாந்த இரவில் வா தேவதா – 20

விஷ்ணுப்ரியாவின் – ஏகாந்த இரவில் வா தேவதா – 20

விஷ்ணுப்ரியாவின் – ஏகாந்த இரவில் வா தேவதா – 21

விஷ்ணுப்ரியாவின் – ஏகாந்த இரவில் வா தேவதா – 21

விஷ்ணுப்ரியாவின் – ஏகாந்த இரவில் வா தேவதா – 22

விஷ்ணுப்ரியாவின் – ஏகாந்த இரவில் வா தேவதா – 22

விஷ்ணுப்ரியாவின் – ஏகாந்த இரவில் வா தேவதா – 23

விஷ்ணுப்ரியாவின் – ஏகாந்த இரவில் வா தேவதா – 23

விஷ்ணுப்ரியாவின் – ஏகாந்த இரவில் வா தேவதா – 24

விஷ்ணுப்ரியாவின் – ஏகாந்த இரவில் வா தேவதா – 24

விஷ்ணுப்ரியாவின்-ஏகாந்த இரவில் வா தேவதா – 25

விஷ்ணுப்ரியாவின்-ஏகாந்த இரவில் வா தேவதா – 25

விஷ்ணுப்ரியாவின்-ஏகாந்த இரவில் வா தேவதா – 26

விஷ்ணுப்ரியாவின்-ஏகாந்த இரவில் வா தேவதா – 26

விஷ்ணுப்ரியாவின்-ஏகாந்த இரவில் வா தேவதா – 27 (இறுதி அத்தியாயம்)

விஷ்ணுப்ரியாவின்-ஏகாந்த இரவில் வா தேவதா – 27 (இறுதி அத்தியாயம்)

ஏகாந்த இரவில்..
வா தேவதா
[16]
தலைக்கு குளித்து விட்டு வந்து.. கையில்லாத வெறும் பெனியன் மற்றும் வேஷ்டியில், மஞ்சத்தில் அமர்ந்திருந்தவனின் ஈரத்தலையைத் துவட்டிக் கொண்டிருந்தாள் யௌவனா.

இந்தியாவிலிருந்து.. திருமணமான ஒரே மாதத்தில், ‘கணவன் தனக்கு துரோகம் இழைத்து விட்டான்’ என்றழுது கொண்டு,

‘ஊடல் உற்றவளாக வந்து நின்ற மங்கையா இது சத்யாதித்தனின் தலை துவட்டுவது?’ என்ற ஆச்சரியம்.. அவள் அண்ணன் பாண்டி பார்த்திருந்தால்.. கட்டாயம் தோன்றியிருக்கும்.

சர்ப்பம் தீண்டிய பின் மனைவியின் மனமாற்றம் கண்டு.. சத்யனுக்கும் உள்ளே ஆச்சரியமாக இருக்கத் தான் செய்தது.

என்ன தான்.. கணவன் மீது ஊடல் கொண்டாலும், அதே கணவனுக்கு ஒன்று என்றானதும்..

பழையன மறந்து.. தன் பதிபக்தியைக் காட்டும் பெண்ணவளின் அன்பில் இதயம் உருகி நின்றான் சத்யன்.

அதிலும், தனக்கும், மனைவிக்கும் இத்தகைய நெருக்கத்தை உண்டுபண்ணிய..

அந்த “கட்டுவிரியன் பாம்பு”க்கு மானசீகமாக நன்றியும் கூறிக் கொண்டவனுக்குள்,

இதழ்க்கடையோரம் ஒரு கள்ளச்சிரிப்பு எட்டிப் பார்க்கலானது தலைவனுக்கு.

குளித்து முடித்து விட்டு வந்தவன், தனது கட்டிடப்பட்ட கையால்.. தலை துவட்ட சிரமப்படுவதைக் கண்டவள்,

தானாகவே முன்வந்து.. டவலை வாங்கி, அவனை மஞ்சத்தில் அமர வைத்தவாறு..

சீராக தலை துவட்டிக் கொண்டிருந்தவளின் கண்களில் தாய்மை ஒளிர்ந்து கொண்டிருந்தது.

கணவனின் சின்னச் சின்ன தேவைகளையும் பார்த்துப் பார்த்து பக்குவமாகச் செய்யும் ஒவ்வொரு பதிவிரதையின் கண்களிலும் ஒளிரும் தாய்மை..

அழகினும் அழகு!!

அவனது முகம்.. அவளது ஆலிலை வயிற்றுக்கு வெகுவெகுஅருகாமையில் இருக்க, அவளது பூவிரல்கள்..

அவனது பிடரிமயிரில் அளைந்து.. கேசம் உலர்த்தும் சுகத்தில்.. சொக்கிப்போயிருந்தது சத்யனின் விழிகள்.

அதிலும் அவள் சேலைத் தலைப்பை இழுத்து எடுத்து, மாராப்பு அணிந்திருந்த ஒரு பக்க தனங்களையும்,

அம் மெல்லிய இடுப்பும் தாராளமாகவே காட்சி தரும் வகையில்.. சேலையை இடுப்பில் சொருகியிருக்க,

அவளது அங்கலாவண்யங்கள் வேறு அவனை ஏதோ செய்யும் போல இருந்தது.

‘கொக்குக்கு ஒன்றே மதியாம்’ அது போல.. அவனது சிந்தனையும் சரி,

அந்தப் பொல்லாத சிவந்த நயனங்களும் சரி, அந்த வளைவான இடையின் மீது தான் கிறக்கத்துடன் பதிந்திருந்தது.

கொஞ்சம் தலை உயர்த்தி அவன் பார்த்தாலும் ,

அவளுடலின் இயற்கையின் பிரமிட்கள்..அவனை அசரடிக்கும் போலவே இருந்தது.

சத்யாதித்தனுக்கோ நுனிவிரல் கூட தீண்டாமல் நனவில் நடமாடும் மனைவியின் அழகு நாளுக்கு நாள் கூடுவதில் ஓர் ஆச்சரியம்.

அந்த ஆச்சரிய அழகையே இமைக்காமல் பார்த்திருந்தவனுக்கு,

கொஞ்சம் கொஞ்சமாக தாபம் தலைக்கேற, உணர்ச்சிகளின் உச்சத்தில்.. சட்டென்று அவளைப் பின்புறமாகச் சுற்றி வளைத்த கை… அவள், இடையில் பதிந்தது தாராளமாக.

கணவனின் கைவிரல்கள் இடையில் பிரயோகித்த அழுத்தத்தில், அவள் இதயம் ஒரு முறை தூக்கிவாரிப்போட்டு அடங்கலானது.

மனதுக்குள்ளோ… ஒரு நடுக்கம் ஓட..அடுத்து அவள் இதயத்துடிப்பை முற்றிலும் நிறுத்தும்முகமாக..

அவளைத் தன்னை நோக்கி இழுத்தவன்.. அவளது ஆலிலை வயிற்றில்.. தன் முகத்தை ஒரு குழந்தை போலப் புதைத்துக் கொண்டான்.

அவளுக்கென்றே உரித்தான வியர்வை மணம்.. அவனது நாசியை நிரடி, நுரையீரலை நிறைக்கவாரம்பிக்க..

எழுத்தில் வர்ணிக்க முடியாத உன்மத்த நிலைக்குத் தள்ளப்பட்டான் மன்மதன்.

இடையில் தவழும் கை. அவள் வயிற்றில் புதையும் அவனது முரட்டு முகம்.

அவள் வயிற்றில்.. தன் முகத்தை அப்புறமும், இப்புறமும் புரட்டி, தன் மீசை அதரங்களால் ஒரு குறுகுறுப்பை ஏற்படுத்தியவன்,

மனைவியின் மென்மை உடல் தந்த சுகம் தாள மாட்டாமல், “யௌ.. வ்வனாஆஆஹ்” என்று கிறங்கவும் செய்தான் கள்வன்.

அவளுக்கோ.. பெண்களுக்கு இருக்கும் இயல்பான கூச்சவுணர்வு தலைதூக்க,

அவன் மூட்டும் கூச்சத்தை தாங்க மாட்டாமல் அவனிலிருந்தும் விலக முயல, அதற்கு விடவேயாமல்,

அவளது இடையை இன்னும் கொஞ்சம் இறுக்கி வளைத்து, தன்னை நோக்கி இழுத்துக் கொண்டவன்,

தன் மீசை குத்தும் அதரங்களின் குறுகுறுப்பை.. அவளது குழிந்த தொப்புளில் மூட்டினான் அவன்.

அதில் மெல்ல அவள் கூச்ச உணர்வு விலகி.. அவளுள் காதல்த்தீ பற்றியெரிய ஆரம்பிக்க,

அவனது பிடரிமயிரை அளைந்த வண்ணம், தன் கீழுதட்டைக் கடித்து நின்று உணர்ச்சிகளின் வசம் ஆட்பட்டிருந்தவள்…

கணவனைத்தன் வயிற்றோடு இறுக்கி அணைத்தாள் யௌவனா.

மனைவியின் பஞ்சன்ன தேகத்தில் இருந்து வரும் உஷ்ணம், தற்போது தான் குளித்து விட்டு வந்ததால்.. இவன் தேகத்தின் ஜில்லிப்பு.

. இரண்டும் ஒரே நேரத்தில் சுகிக்கப்பட்டதில்.. அங்கே பஞ்சும், நெருப்பும் பற்ற வைத்தாற் போன்று ஒரு உணர்ச்சிப் பிளம்பு இருவருக்குள்ளும்.

யௌவனாவோ தன்னிலை மறந்து ஒரு சர்ப்பம் போல உஷ்ணத்தில், “உஸ்..ஸ்” என்று மூச்சு வாங்குவதைக் கண்டவன்,

அவள் தயார் நிலையில் இருப்பதை உணர்ந்தவனாக, அடுத்த நிலைக்குத் தாவ.. இது தான் சரியான சந்தர்ப்பம் என்று முடிவும் எடுத்துக் கொண்டான்.

அதனால் பட்டென்று.. அவள் கையைப் பற்றி தன் மடிகளில் ஒரு குழந்தையைப் போல அமர்த்திக் கொண்டவன்,

தன் விழிகளுக்கு மிக மிக அருகாமையில் இருக்கும் அவளது மதிவதனத்தை நொடியும் இமைக்காமல் பார்த்துக் கொண்டேயிருந்தான் சத்யன்.

கனவில் அவன் திகட்டத் திகட்டக் காதலித்த அதே முகம்!!

பாலில் விழுந்த கருந்திராட்சை போன்ற அவளது கண்களின் திரட்சி.. அவனை ஏதேதோ இன்பமான ஹோர்மோன்களைச் சுரக்கச் செய்தது.

அதனால் ஓர் சின்னப் புன்னகையும்.. அவனது முரட்டு அதரங்களில் அழகாகப் படர்ந்தது.

கண்களைப் பார்ப்பதே இத்தனை இன்பமானதெனின்.. அவள் உடலை மொத்தமாக ஆட்கொண்டால்??

அந்த நினைப்பே அவளுள் கிளுகிளுப்பை மூட்ட,

அவளது கன்னத்தை விரல்களால் வருடியவண்ணம், ஈரம் தோய்ந்த அந்த மென்மையான அதரங்களை திடுதிப்பென்று கவ்விச் சுவைக்கலானான் அவன்.

அந்த தீடிர்க் கவ்வலில் அவளுக்குள் அடித்தது ஒரு மின்சாரப்புயல்.

அதன் சுழியில் அகப்பட்டவள்.. கண்கள் மூடி ஒரு வேற்றுக்கிரகத்துக்குப் பயணப்பட தயாரானாள்.

அவனது கட்டிடாத.. அவளைச் சுற்றி வளைத்த சுயாதீனமான கை.. அவளது இடையில்..

அழகாக வீணை மீட்ட, அவனது பின்னங்கழுத்தைச் சுற்றி வளைத்திருந்தது அவளது தளிர்க்கரம்.

தன் உதட்டில் வழியும் ஒட்டு மொத்த மதனநீரையும், புயல்வேகத்தில் உறிஞ்சும் கணவனின் இதழ்களின் வன்மை..

ஒரு இனிமை மயக்கத்தைக் கொடுக்கலானது பெண்ணுக்கு.

அவனுக்கும் இத்தனை நாள் தாபம்.. உச்சிக்கு அடித்ததில்..

மெல்ல அவளது தேனூறும் அதரங்களை விட்டும் கீழே குனிந்தவன் ..

அவள் கழுத்துக்கும், பெண்மைக்கும் இடைப்பட்ட இடத்தில் தன் ஆக்கிரமிப்பைத் தொடங்கலானான்.

உணர்ச்சிகளின் உச்சத்தில்.. அந்த அணில்க்குஞ்சு..

அவ்விடத்தை இலேசாகக் கடித்துச் சுவைக்க… அவளுக்கு வலித்தாலும் சொக்கிப் போன விழிகளுடன்.. அப்போதும் விடாமல் அவனது பிடரிமயிரைக் கோதி விட்டுக் கொண்டேயிருந்தாள் யௌவனா.

அவனுக்கோ.. வேண்டும் வேண்டும் மொத்தமும் வேண்டும்.
அவளது துகில்..

ஒரு இடையூறாகப் போக, அதைக் களைந்து விடும் நோக்கில்..

அவளை அப்படியே ஏந்திக் கொண்டே திரும்பிக் கட்டிலில் இட்டவன், அவள் மீது தன் பாரத்தை அழுத்தாமல் அவள் மீது படரலானான்.

தரையில் இட்ட மீன்போல, அவனது உஷ்ண மூச்சுக்காற்றுப்பட்டு.. தத்தளித்தாள் பெண்.

அந்தத் தத்தளிப்பும்.. இலேசாக திறந்திருக்கும் கண்களின் உச்சி போதையும்..

அவனை ஈர்க்க, காதலுடன்.. அவளது அதரங்களை நோக்கிக் குனிந்து இலேசாக முத்தமிட்ட போது தான்..

இடையூறாக.. எதிர்பாராத அந்த சம்பவம் நடந்தேறியது.

வீட்டு வாசற்படியில் யாரோ நின்று ஓலமிட்டபடி அழைக்கும் ஓசை கேட்டு.. சட்டெனக் களைந்தது அவனுடைய தாப எண்ணங்கள்.

அலுப்புடன்.. தலை சிலுப்பிக் கொண்டே தன் உச்சிபோதை தெளிந்த சத்யன், “ப்ம்ச்.. இந்த நேரத்தில் யாரோ தெரியல??.. இரு… நான் போய் பார்த்துட்டு வர்றேன்” என்றவனாக எழப்போக,

அவனது வலிமையான தோள்புஜம் பற்றித் தடுத்தவள்,

இதுவரை அவன் கேட்டிராத ஹஸ்கி குரலில் சொன்னாள், “சத்யாஹ்… சீக்கிரம் வந்துருங்க.. ப்ளீஈஸ்”என்று.

அவள் கண்கள் சொட்டிக் கொண்டிருந்த காதலில், அவளது அன்பை உணர்ந்தவனுக்குள்,

யௌவனாவுக்கான ஆயிரம் காதல் பூத்தது உள்ளத்தில்.

அவள் இதழ்களில் சுருக்க முத்தம் ஒன்று பதித்தவன், கண்கள் அவளையே ஒரு பளிச்சிடலுடன் பார்த்துக் கொண்டிருந்தது.

இத்தனை நாள் அவன் அன்பு புரியாமல் ஊடல் கொண்ட மனைவி, கூடலுக்கு ஏங்கி நிற்பதை காணும் போதே ஒரு கிளுகிளுப்பு தோன்ற,

சில்மிஷப் புன்னகையுடன், “ம்.. சீக்கிரம் வந்துர்றேன்” என்றவன் அங்கிருந்து நகர்ந்தான் வாசலை நோக்கி.

வாசலில் நின்றிருந்ததோ.. வேல்பாண்டியின் வலது கை முருகேசன். வேல்பாண்டிக்கு ஒத்தாசையாக திருமண வீடு வரை சென்றிருந்தவன் எங்கே இங்கே??

அதுவும் ஒரு காது வழிப்பக்கம் வழிந்த இரத்தம்… அவனது வெள்ளைச்சட்டையில் பெரும் பெரும் துளிகளாக வரிசையாக படிந்து சென்றிருக்கும் தோரணையுடன்??

முருகேசனின் கபில நிற சருமத்தில்.. எங்கனும் முத்து முத்தாக வியர்த்திருக்க, அவன் உடலில் தெரியும் அதிகபட்ச பதற்றம்.. சத்யாதித்தனை அலைக்கழிக்க வைத்தது.

சத்யாதித்தன் வாசற்படியிறங்கி வரும் வரை பொறுமை இல்லாத முருகேசு.. தானாகவே படிகள் ஏறிக் கடந்து சத்யாதித்தனை அடைந்தவனாக, சத்யனின் கைகளை.. பதற்றத்துடன் பற்றிக் கொள்ளவும் செய்தான்.

சத்யாதித்தனுக்கோ உள்ளூற நடப்பது எதுவும் சரியில்லை என்று தோன்றினாலும், அதைக் காட்டிக்கொள்ளாமல்,

“என்னாச்சு முருகேசு?” என்று கேட்க, தன் இரத்தம் ஒழுகும் காதுகளைப் பொத்திப் பிடித்துக் கொண்டான் சத்யன்.

முருகேசுவோ திக்கித் திணறிய குரலில், “ரா..ரா..ராசா… நம்மவே.. வேல்பாண்டிண்ணாவும், அண்ணியும் வர்ற வழியில் ஆக்ஸிடென்ட்டாகி.. .. சீரியஸா ஹாஸ்பிடல்ல கெடக்காங்க ராசா..” என்று சொல்ல,

சத்யாதித்தன் ஒருகணம் எதுவுமே ஓடாமல் மூளை மரத்துப் போனவனாக நின்று விட்டான்.

முருகேசு என்றுமே.. சத்யாதித்தனை, “ராசா” என்று அழைப்பதேயில்லை. எப்போதுமே சத்யன் முருகேசனுக்கு ‘ஐயா’ தான்.

ஆனால் இன்று மட்டும் என்ன புதிதாக ராஜா?அதிலும் இவன் மட்டும் ஹாஸ்பிடலில் வைத்தியம் பார்க்காமல் ஏன் இரத்தம் ஒழுக வந்திருக்கிறானாம்? என்ற சந்தேகங்கள் அவன் சுமூகமான மனநிலையில் இருந்தால் தோன்றியிருக்கும்.

ஆனால் அவனுமே பதற்றத்தின் வசம் ஆட்பட்டிருந்ததால், அவனுக்கும் கேட்கத் தோன்றவில்லை. கேட்கும் மனநிலையிலும் அவன் இல்லை.

இவனும் பரபரப்புடன், எந்த ஹாஸ்பிடல் என்று கேட்கப் போனவேளை, முருகேசுவாகவே முந்திக் கொண்டவன், “பெரியாஸ்பத்திரி ராசா” என்றான் முருகேசு.

எப்போதுமே முருகேசு, “சொல்வதை மட்டும் செய்யும் சுப்பன்” வகையறாவில் சேர்ந்த பணியாளன். அவன் இன்று சத்யாதித்தனின் எண்ணவோட்டங்களை படிப்பது மட்டுமல்லாமல், குறிப்புணர்ந்து முன்கூட்டியே பதில் சொல்வதும் ஆச்சரியம் தான்.

பாவம் சத்யன். மச்சானுக்கு ஏதோவொன்றாகிப் போய் விட்டதே என்ற களேபரத்தில் மருத்துவமனை நோக்கி செல்ல வேண்டும்.

உள்ளே அவனுக்காக காத்திருக்கும் மனைவியைப் பதற்றத்திற்குள்ளாக்காமல் எப்படியாவது சமரச நிலையில் வைத்திருக்க வேண்டும் என்று யோசித்தானே ஒழிய…

முருகேசுவின் அதிபுத்திசாலித்தனத்தைப் பற்றியோ,
அதன் பின்னால் தனக்காக.. ஒரு சாந்தியடையாத ஆத்மா விரித்த வலையைப் பற்றியோ அறியாது போனான் சத்யன்.

முருகேசுவுடன், தன்னிலை முற்றிலும் மறந்து அப்படியே மருத்துவமனை நோக்கி விரையப்போனவனுக்கு,

தான் மேல்சட்டை எதுவும் அணியாதிருப்பது புரிய, முருகேசனை நோக்கி,

“முருகேசா… நான் போய் சட்டைய போட்டுட்டு சீக்கிரம் வந்துர்றேன்..ரெண்டு பேரும் ஹாஸ்பிடல் கெளம்பிப் போயிரலாம்” என்றபடி.. விறுவிறுவென அறைக்குள் நுழைந்தவன், தனக்காக காத்திருக்கும் மனைவியின் முகம் கூட பாராமல்,

‘ஹேங்கரில்’ கொழுவி வைத்திருந்த தன் மடிப்பு கலையாத சட்டையை நாடித் தான் போனான் அவன்.

அவனுக்காக விரகதாபத்துடன், உஷ்ணப் பெருமூச்சுடன் சிவந்த கண்களுடன்.. மஞ்சத்தில் காத்து நின்றிருந்த யௌவனாவுக்கோ,

உள்ளே வந்த தலைவன் அவளை சட்டை செய்யாதததில் ஏமாந்து தான் போனாள்.

அவனோ இருக்கும் ஒற்றைக்கையை சமாளித்தபடி சட்டையை ஒருவாறு அணிந்து கொண்டவன்,

தன் மணிப்பர்ஸை எடுத்து வேஷ்டிப் பாக்கெட்டில் இட்டவனாக, மனைவியை நோக்கித் திரும்பினான் பிரியாவிடை பெறுவதற்காக.

அவன் செய்கையின் காரணம் அறியாமல் நிலைகுலைந்து போயிருந்தவளோ,

“என்னாச்சு சத்யன்?”என்று கேட்க, எதையும் யோசிக்காமல், ஏதோ ஒரு யோசனையில்,

“உங்க அண்ணா வந்த வண்டி..”என்று சொன்னதும் தான் தாமதம்,

சட்டென இடையிட்ட யௌவனா முற்றிலும் பதறிப் போயிருந்தாள் என்பதை அவளது இருண்ட வதனமே காட்டிக் கொடுத்தது.

கணவனின் கைகளைப் பற்றிக் கொண்டு, கண்களில் நீர் சட்டென்று கோர்க்கத் தொடங்க,

திக்கித் திணறிய குரலில், “என் அண்ணா வ.. வந்த வ.. வண்டிக்கு??”என்று கேட்டாள் உள்ளம் கிடுகிடுங்க.

சத்யன், தன் மனையாளிடம் என்ன சொல்வது என்று தெரியாமல் அமைதியாக அவளது விழிகளைப் பார்த்த வண்ணம் நிற்க,

இவளோ அவன் கைகளை உலுக்கியவளாக,

“என்னாச்சு சத்யன்? அண்ணா வந்த வண்டிக்கு என்னாச்சு சத்யன்?? ப்ளீஸ் சொல்லுங்க?” என்று கேட்ட போதே… தன்னை சுதாரித்துக் கொண்டவன்,

அவள் கண்ணீர் துடைத்து, உச்சந்தலை வருடியவனாக, வழிய வரவழைக்கப்பட்ட சாந்தமான புன்னகையுடன்,

“உஷ்… ஒண்ணும் இல்லை.. அண்ணாவுக்கு .. வர்ற வழியில் வண்டி டயர் பஞ்சராயிடுச்சாம்… பாதிதூரத்தில் காட்டுவழியில் நின்னுட்டிருக்காங்கன்னு தகவல் வந்திருக்கு…” என்றவன் மறந்தும் கூட, அந்தத் தகவலைத் தந்தது முருகேசு என்று சொல்லி விடவேயில்லை.

பின்னே? பணியாள் முருகேசுவைக் காண, மனைவி முற்றத்துக்கு விரைவாளேயானால்,

முருகேசுவின் இரத்தம் ஒழுகும் தோரணை கண்டு இன்னும் அவள் அஞ்சக்கூடும் என்று தான் உண்மையை மறைத்தான் சத்யன்.

அவளது கன்னம் ஏந்தியவள், மென்மையான குரலில்,

“நான் போய் அவங்களை அழைச்சிட்டு வந்துர்றேன்.. . நீ இங்கேயே பத்திரமா இரு.. நா.. சீக்கிரமே வந்துர்றேன்” என்றவன்,

அவளுக்கு மீண்டும் ஆதுரமாக முத்தமிட்டு விட்டுச் சென்றாலும் கூட, அவள் இதயம் ஏனோ தாறுமாறாக அடிக்கவாரம்பித்தது.

சகோதரன் அல்லவா? அந்த பாசம்.. அவளை ஆட்டுவிக்கத்தான் செய்தது.

பல்லைக் கடித்துக் கொண்டு மஞ்சத்திலேயே உணர்ச்சியற்ற ஜடம் போல அமர்ந்து விட்டிருந்தாள் யௌவனா.

கணவனை வழியனுப்பி வைக்க, வாசல் வரை செல்லும் யோசனை கூட அவளில் இல்லை.

வீட்டின் ஷெட்டிலிருந்து கரடுமுரடான பாதையில் செல்ல ஏதுவான ஜீப் உறுமும் சத்தம்..

அவள் காதுகளை முழுமையாக ஆக்கிரமித்துக் கொஞ்சம் கொஞ்சமாக.. செவிகளை விட்டும் தூரமாகி.. நின்றும் போனது.

ஆனால் அவள் மட்டும் சாய்ந்திருக்கும் நிலையை மாற்றிக் கொள்ளாமல் அப்படியே நின்றிருந்தாள் அவள்.

‘வெறுமனே இருக்கும் மனம் சாத்தானின் உலைக்களம்’ என்று சொல்வதில்லையா? அது போல அவள் இதயத்தை பல பொல்லாத எண்ணங்கள் ஆக்கிரமிக்கலானது.

ஏன் அவனுடன் ஒரு கணம் மனம் விட்டு சிரித்துப் பேசவும், மறுகணம் வார்த்தைகளால் அவன் இதயத்தைக் கொன்று புதைக்கவும் தோன்றுகிறது அவனுக்கு.

சுஷ்மிதா செட்டியுடன் தொடுப்பு வைத்திருப்பவன்,

யௌவனாவை, ‘போனால் போடி’என்று விட்டிருக்கலாமே?

பின்னோடே இலங்கை வந்திருப்பதுவும், அவள் பின்னாலேயே தன் ஆண்கர்வம் மறந்து இழைவதும் கூட அவள் பால் கொண்ட அன்பினால் தானே?

அவளைக் கனவில் கண்டு காதலித்து அவளுக்காக இலங்கை வந்தான்; ஊராரை அநாயசமாக சமாளித்து, வேல்பாண்டியின் மனம் வென்று அவளைக் கரம் பிடித்தான்.

தில்லியின் அரசியல் போக்கைக் கூட மாற்றியமைக்கும் அதிகாரம் கொண்ட பெரும் பணக்கார வர்த்தகன், அந்த இறுமாப்பு சிறிதும் இன்றி… வெள்ளந்தியாக அலைவதும்,

கண்டியின் உக்கிரமான குளிர்காலநிலையை சுகித்திருப்பதும் கூட அவளுக்காகத் தானே??

அப்படியானால் ‘சுஷ்மிதா செட்டியுடன்’ தொடுப்பு என்பது கூட பிழையான விம்பமோ?

அவனது தன்னிலை விளக்கத்தை அவள் நிதானமாக கேட்டிருக்கவும் வேண்டுமோ?

என்றெல்லாம் எண்ணி கணவனுக்காக கனிந்தது மனம்.
இத்தனையும் அவளுக்காக செய்யும் கணவன் அவளிடம் எதிர்பார்ப்பது ஒரு தூய அன்பு. அந்த அன்பைக் கொடுக்காமல்..

அவனை அலைக்கழிப்பதை எண்ணும் போது வெட்கியது இருதயம்.

இன்று பாம்பு கடித்த ஒற்றைக்கையுடன்.. அவன் மஞ்சத்தில் சிந்திய தாபமுகம் அவள் மனக்கண் முன் வந்து போக, அவனது முரட்டு தாடைகளை ஏந்தி முத்தமிட வேண்டும் போல இருந்தது அவளுக்கு.

அவன் அண்ணன் அண்ணியுடன் வீடு வந்ததும் தன் மனமாற்றத்தை உணர்த்தி விட வேண்டும் என்ற ஆவலுடன் எத்தனை மணிநேரம் காத்திருந்தாளோ?

காத்திருப்பு காத்திருப்பாகவே அமைந்து விடும் என்பது போல இருந்தது அவளுக்கு.

பொழுது சாய்ந்து, இரவும் கழிந்து.. அந்த தம்பதிவனமே காரிருளும், அடர்ந்த பனியும்.. இரண்டறக் கலந்து கலவி கொள்ளும் ஒரு ஏகாந்த இரவின் வசம் ஆட்படலானது.

நேரம் ஆக ஆக தலைவனுக்கும், தன் தமையனுக்கும் என்னானது என்று அவளுள் பயம் பிடித்துக் கொள்ள,

நடுக்கூடத்தில் கைகளைப் பிசைந்தவாறு குறுக்கும் நெடுக்குமாக நடைபயின்று கொண்டேயிருந்தாள் அவஸ்தையுடன்.

விழிகளோ.. வாசலை எட்டிப் பார்ப்பதும், பின்னே கூடத்தில் இருக்கும் கடிகாரத்தை எட்டிப் பார்ப்பதுமாகவே இருக்க,

சத்யாதித்தன் மட்டும் மனைவியின் தவிப்பைக் கண்டிருப்பானேயானால்,

அவளுக்காக தன் மொத்த சொத்தையும் எழுதித் தரும் உன்மத்த நிலைக்கு ஆட்பட்டிருப்பான்.

அந்தளவு மகிழ்ச்சியைக் கொடுத்திருக்கும்.. யௌவனா அவனுக்காகத் தவிக்கும் தவிப்பைக் காணும் போது.

நேரமோ யாருக்கும் காத்திருக்காமல் ஓடிக் கொண்டேயிருக்க, வெகுநேரமாகியும் அவனைத் தான் காணவில்லை.

அவனது செல்லின் ஞாபகம் வர, ஓடிச் சென்று அவன் செல்லுக்கு அழைப்பெடுத்த போது.. ‘நாட் ரீச்சபிள்’ என்று வரலானது.

சரி தமையனுக்கு எடுத்துப் பார்ப்பது நல்லது என்ற எண்ணத்துடன், வேல்பாண்டிக்கு அழைப்பெடுத்த போது, செல் “ஸ்விச்ட் ஆப்” என்று வர, அவளுக்கோ தலைசுற்றிக் கொண்டு வருவது போல இருந்தது.

காட்டுவழிப்பாதையில் டயர் பஞ்சர் என்றவன், ஜீப்பில் தானே சென்றான்? அப்படியானால் பத்துப் பதினைந்து நிமிடத்துக்கு எல்லாம் வேல்பாண்டியையும்,

வாசுகி அண்ணியையும் அழைத்துக் கொண்டு சத்யன் வீடு வந்திருக்க வேண்டுமே?

இன்னும் ஏன் அவன் வரவில்லை??

போகும் வழியில்.. ச.. சத்யனுக்கு ஏதாவது ஆகியிருக்கக் கூடுமோ??

காட்டுவழிப்பாதையில் முன்பின் அறிமுகம் இல்லாதவன், ஆபத்தான பகுதிக்கு வழிதவறிச் சென்றிருக்கக் கூடுமோ?

இலங்கை காடுகளில், குறிப்பாக தம்பதிவனக் காட்டில் மனித உண்ணி விலங்குகளான “சிங்கம், புலி” என்று எதுவும் இல்லையானாலும், அதிவிஷம் கொண்ட பாம்புகளும், பூச்சிகளும் தாராளமாகவே உண்டு.

அப்படியேதாவது தீண்டியிருக்குமோ தலைவனை??

நொடிக்கு நொடி.. அவனைக் காணாமல் பைத்தியம் முற்றிப் போய்.. உடலில் துணுக்கம் தோன்றி.. பயம் அதிகரிக்க, கண்களை ஒரு கணம் மூடியதும் தான் தாமதம்.

தம்பதிவனக்காட்டில், கற்திடலுக்கு கீழே இருக்கும் ஒரு பாரியபள்ளத்தில், ஒரு காய்ந்த மரக்குற்றி.. அவன் முதுகைக் குத்தி.. வயிற்றைத் துளைத்துக் கொண்டு வெளியே வந்திருக்க, வாயில் இரத்தம் வழிய,இறந்து கிடக்கும், சத்யனின் ஒரு நிழல்படம் வந்து போக,

அவளுக்கு அன்றைய நாளின் இரண்டாம் முறையாக தூக்கிவாரிப்போட்டது.

அதற்கு மேலும் பொறுமை காக்க மனமற்று, ஏதோ ஒரு அசாத்தியமான தைரியத்துடன், நடுநிசியைத் தாண்டியிருக்கும் இரவு வேளையில்.. தன் வீட்டை விட்டு காரிருளில்.. நடந்தாள் யௌவனா.

அவள் வீட்டு வாசற்படியைத் தாண்டி.. மண்ணின் மீது பாதம் வைத்ததும், அங்கே நிலவறையில் இருந்து.. நடப்பது அத்தனையும் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்த மாய நந்தினிக்கோ ஒரே குதூகலம்.

பின்னே.. இந்த நடுநிசி இரவன்று.. அவளை வீட்டைத் தாண்டி வரவழைக்க.. இத்தனைத் திட்டங்களையும் கனகச்சிதமாகப் போட்டது நந்தினி தானே??

சத்யனுக்கு ஒரு வாரிசை ஏற்படுத்திக் கொடுக்கும் விதிக்குத் தள்ளப்பட்டிருந்த யௌவனாவை முதலில் எப்பாடுபட்டாவது கொன்று விட வேண்டும் என்று ஆரம்பத்தில் திட்டம் தீட்டியவள் தான் நந்தினி!!

பல நேரங்களில்.. தன் பழிவெறிக்கும், சாபத்துக்கும் ஒரு சிறிதும் சம்பந்தமில்லாத வெள்ளந்திப் பெண்ணான யௌவனாவைக் கொல்லப் பார்த்தவளும் நந்தினியே!!!

அந்த அத்தனை சமயங்களிலும் சத்யன், தன் மனைவியைக் காப்பாற்ற இடையிட்டதில், சத்யனைக் காப்பாற்ற அவளது கணவனான தேவதாவும் இடையிட்டதில்… அவளது பழிமுயற்சிகள் எல்லாம் வீணாகிப் போனதையடுத்து இந்த அகோர முடிவை எடுத்திருந்தாள் நந்தினி.

சத்யனின் உயிரைக் காவு வாங்க.. இதுவொன்றே சாலச்சிறந்த வழி என்று தோன்ற, அதற்கான முயற்சிகளை செய்தவள், யௌவனாவை வீட்டை விட்டு வரவழைத்ததில் வெற்றியும் கண்டிருந்தாள்.

உண்மையில் வேல்பாண்டி- வாசுகி தம்பதியினருக்கு விபத்து நேர்ந்ததா என்ன?

இல்லவேயில்லை.

அவர்கள் இன்னும் திருமண வீட்டில் நலமாகவே இருக்க, முருகேசுவின் உருவில் காதில் இரத்தம் சொட்டச் சொட்ட வந்தது ஒரு தீய சக்தி.

தேவதாக்களும், சாந்தியடையா ஆத்மாக்களும் எல்லை மீறும் பல விஷயங்களையும் நிகழ்த்த அனுமதிக்கப்பட்ட சந்திராகிரகணத்தில்.. தேவதாவை காதல் வலையில் வீழ்த்தி..

அவனோடு இரண்டறக் கலந்தாளே மாய நந்தினி..
அதற்குக் காரணமே இது தான்.

தேவதாவுடன் கூடிய வல்லமையில்.. பல தீய சக்திகளை அடக்கி கட்டளையிடும் உயர் அதிகாரம் அவளுக்குக் கிட்டும்.

அதில் ஒன்று… நினைத்த நேரத்தில் நினைத்த உருவத்தை அடையும் தீய சக்தி ஒன்று அவளுக்கு அடிபணிவது.

அந்த தீய சக்தி.. அவளை எஜமானியாக ஏற்று.. அவள் இட்ட கட்டளைக்கு அப்படியே கட்டுப்படும்.

அதைக் கச்சிதமாக உபயோகித்தவள், தன் கட்டளைக்காக காத்திருக்கும் தீய சக்தியை.. முருகேசு உருவில் ஏவி..

சத்யனை யௌவனாவிடம் இருந்து வெகுதூரம் பிரித்து அனுப்பி விட்டிருந்தாள் பொல்லாத நந்தினி.

முருகேசு உருவில் வந்த தீயசக்தியோ.. சத்யனின் உயிருக்கு ஆபத்து விளைவிக்க.. தன் எஜமானியான நந்தினியால் பணிக்கப்படவில்லையாதலால்,

அந்தக் காட்டுவழிப்பாதையில் சென்று கொண்டிருந்த ஜீப்பிற்கு மேலாக.. அடர்ந்த காட்டுமரங்களின் உயரத்தில்..இறக்கைகள் கொண்ட தன் மாய வெண்புரவியில் பறந்து வந்த வண்ணமே ஜீப்பைப் பின்தொடர்ந்து கொண்டிருந்தான் தேவதா.

முற்றிலும் பனிபோர்த்த பாதையில், பாதிவழியில் ஜீப்.. அடுத்த எட்டு வைக்கமாட்டேன் என்று அடம்பிடித்து நின்று விட,வானிலிருந்தும் மெல்ல கனைத்தபடி தரையிறங்கியது தேவதாவின் வெண்புரவி.

புரவி கனைத்த சத்தம் மானுடனான சத்யனின் காதுகளை அடையவில்லையாயினும் கூட, அதை செவிமடுத்த அந்த தீய சக்திக்கோ.. இடியேறு கேட்ட சர்ப்பம் போல இருதயம்..

குலைந்து நடுங்க, வண்டியை விட்டும் இறங்கிய முருகேசு… பின்னங்கால் பிடரியில் தெறிக்க, திரும்பிப் பார்க்காமல் ஓலமிட்டுக் கொண்டே ஓடலானான்.

முருகேசு அலறியடித்துக் கொண்டு ஓடும் காரணம் அறிய மாட்டாத சத்யன், வாகனத்தை விட்டும் இறங்கி, “ஏய்.. முருகேசாஆ.. முருகேசாஆஆ” என்று எத்தனைக் கத்தியும் முருகேசுவின் ஓட்டம் நிற்கவேயில்லை.

அந்தோ பரிதாபம்!! சத்யாதித்தன் தான் நடுவீதியில்.. அதுவும் உடலை உறைய வைக்கும் குளிரில், பஞ்சரான ஜீப்புடன்.. தனிமையில் நின்றிருக்கும் படியானது.
****
அங்கே யௌவனா.. கானகத்தை நோக்கி எடுத்து வைக்கும் ஒவ்வொரு எட்டுக்கும்.. நந்தினியின் முகத்தில் தோன்றிய சிரிப்பின் வீச்சு சிறுகச் சிறுக அதிகமானது.

அவளது கண்கள் அகல விரிந்திருந்தன;அவள் தனங்களோ.. அவள் விட்ட அகோரமான மூச்சில் ஏறி, இறங்கிக் கொண்டிருந்தது. அவளது கூந்தலோ.. ஓர் அக்னிச்சுடர் போல எழுந்து அந்தரத்தில் பரவிக் கொண்டிருந்தது.

தன் இருநூறு வருட கால பழிவெறித் தவம் நிறைவேற, யௌவனாவை பகடைக்காய உபயோகப்படுத்திக் கொள்ள,

சர்வ வல்லமை தந்த தன் தாயான வத்ரகாளி மீது அவளுக்கு அன்று அபரிமிதமான பக்தியும், காதலும், அன்பும் ஊற்றெடுத்துப் பொங்கியது.

அவள் அந்த நிலவறையே அதிரச் சிரித்த ஒரு உக்கிரமான அகோரச் சிரிப்பில்,

மண்ணில் ஒளிந்து கிடக்கும் காளிக்கோவிலின் உத்திரத்தில் தொங்கிக் கொண்டிருக்கும் எக்கச்சக்கமான மணிகள் எல்லாம் “டான்.. டான்” என்று தாறுமாறாக அடித்து ஒலியெழுப்பவாரம்பித்தது.

அந்த ஒலியில்.. மணிகளின் மேலே துயின்று கொண்டிருந்த சர்ப்பங்கள் எல்லாம், தொப் தொப்பென்று தரையில் விழுந்து, இருளான இடுக்கை நாடி வளைந்து நெளிந்து.. அச்சத்துடன் ஓடலாயிற்று.

அவளோ அதை அலட்சியம் செய்தவளாக, வெடிக்கும் குரலில், “த்தாஆஆய்யேஏஏ.. உன் மகிமையே.. மகிமை…!! நினைத்ததை வசப்படுத்திக் கொடுக்கும்.. என் தாயின் பாதத்தை.. விரைவில்.. இராஜசிங்கனின் இரத்தம் கொண்டு நிறைப்பேன்.. இது சத்தியம்!! இது உன் மேல் ஆணை வத்ரகாளீஈஈ!!” என்று அவள் இரைந்து முடித்த அடுத்த நொடி,

அவளது வல்லமையில் எங்கிருந்தோ வந்த குங்குமமும், மஞ்சளும் உருத்திரமான காளியின் உடலெங்கும் விசிறி அடித்தது.

கறுப்பு நிறத்தில்.. கைகளை விரித்துக் கொண்டு, ஒற்றைக்காலால் அசுரனை வதம் செய்யும் மெய்ந்நிலையில் இருந்த வத்ரகாளின் சீற்றமுகம் எங்கணும்.. ஒரு பாதி குங்குமமாகவும், மறுபாதி மஞ்சளுமாக காட்சியளித்ததில்.. தேவியின் முகம் ஒரு வித வர்ணமயமான தெய்வீகபாவத்தைக் கொடுத்தது.

அதிலும், அவளது நீட்டிய நாவில் முற்றிலும் படிந்த குங்குமம்.. அசுரரை வதைப்பதில் அவளுக்குள்ள இரத்தவெறியை பறைசாற்றுவது போல இருக்க, அந்த தரிசனத்தை கை கூப்பித் தொழுது நிமிர்ந்த நந்தினியின் முகம் மீண்டும் பழிவெறியில் மிளிர்ந்தது.

வீட்டைக் கடந்து.. காட்டுவழிப்பாதையில் நுழைந்த யௌவனாவை நோக்கியவள், இங்கிருந்த படியே விஷமச் சிரிப்பு சிரித்தபடி, “வ்வாஆ.. ய்யௌவ்வனாஆஆ.. வ்வாஆஆ.. என் உன்னதமான பணியில்.. ந்நீய்யும் இணைந்திட வ்வாஆஆ”என்று ஓயாமல் அழைக்க,

அவளது உச்சாடனங்களில் அனிச்சை செயல் போல விரைந்து நடந்தன பாதங்கள்.

காட்டின் எல்லைக்குள் அவள் நுழைந்து விட்டதிலிருந்து, அவள் கண்கள் தலைவனையும், தமையனையும் தேடித் தான் அலைபாய்ந்து கொண்டிருந்தது.

இந்தக்காட்டுப்பாதை தானே பிரதான பாதையை ஊடறுத்துச் செல்லும்?? இதைத் தானே.. சொன்னான் சத்யன்? ஆனால் ஒரு வண்டி நின்றதற்கான தடமோ?? இன்னும் ஏன் மனித சஞ்சாரமோ இல்லையே?

அந்த வனாந்திரம்.. பகற்பொழுதையும் விட இரவுப்பொழுதில் படுபயங்கரமாக இருந்தது. அங்கிருந்த பனிமூட்டம் தூரத்தில் இருக்கும் மலைகளையும், வானத்தையும் கூட மறைக்கடித்துக் கொண்டிருந்தது.

அந்தக் கடும்குளிரிலும் கூட.. ஒரு கோட்டான் மரத்தின் உச்சியில் நின்று கொண்டு அலறும் சத்தம் கேட்டது அவளுக்கு.
அந்த ஆந்தையின் வித்தியாசமான அலறலே, “இங்கிருந்து சென்று விடு பெண்ணே’ என்று கொடுத்த அபாய சமிக்ஞை என்பதை அறியாமல் போனாள் யௌவனா.

அவளுள் தற்போது சூழலைப்பற்றிய புறப்பயம் இருக்கவில்லை. மாறாக தலைவனுக்கும், அவள் உற்றாருக்கும் என்னானது என்ற அகப்பயமே இருந்தது.

கையை பிசைந்து கொண்டே, காய்ந்த சருகுகள் மிதிபட மிதிபட நடந்தவளின் கண்கள் கண்டு கொண்டது அந்த ஆள் அண்டாத காட்டில் கிடக்கும் அந்தக் கற்திடலை.

அவள் இதுவரை கண்டிராத முழுதும் கல்மலையால் ஆன திடல் அது. அந்தக் கற்திடலின் உச்சத்தில் ஒரு பெரும் பாறாங்கல் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதையும் கண்ணுற்றாள் அவள்.

அவளுக்கோ அதைக் கண்டதும் ஓர் ஆச்சரியம். உருண்ட.. வட்ட வடிவான அந்தக் கல்.. திடலில் இருந்து உருண்டு வந்து விழுந்து விடாமல் உச்சியில் எங்கணம் நிற்கின்றதாம்??

அதைப் பார்க்கப் பார்க்க.. அவள் காட்டை நோக்கி வந்த தேவை மறந்து போய்.. அந்தக் கல்லில் இருந்து வந்த ஒருவகையான காந்தசக்தி.. அவளது சிந்தையை மழுங்கடித்து அதை நோக்கி அவளை இழுக்கலானது.

இத்தனையையும் அசாத்தியமாக செய்து முடித்து விட்டு.. யௌவனாவின் வருகைக்காக காத்திருந்த சாந்தியடையா ஆத்மாவுக்கு.. மானுடப் பெண்.. கற்திடலை இன்னும் சற்று நேரத்தில் மிதிக்கப் போவதில் கொள்ளை ஆனந்தம்.

அவளில் எங்கும் சுருசுருவென்று ஒரு சந்தோஷப் பரபரப்பு தோன்ற, அதே உற்சாகம் குன்றாத குரலில்,

“வ்வாஆஆ.. ய்யௌவ். வனாஆ வ்வாஆஆ.. இராஜசிங்கனோடு இணைந்தால் உனக்கு நொடி நேர இன்பம்.. என்னோடு இணைந்தாஆல்…. உனக்கு ஆயுளுக்கும் இன்பம்.. அதனாஆஆல்.. என்னை நோக்கி வ்வாஆ ய்யௌவ்வனா” என்று அவளை அழைக்க,

ஏதோ சாவி போட்ட பொம்மை போல உலகம் மறந்து.. அந்தக் கல்லை நோக்கி நடந்தாள் யௌவனா.

அந்தக்கல்.. மகாசேனர்.. இராஜசிங்கர்களின் பொக்கிஷ அறையை மறைக்க தூக்கி வந்த அதே கல்!!

அவள்.. அந்தக் கற்திடல் எல்லையில்.. நந்தினியின் சக்திகள் அபரிமிதமான உச்சத்தை எட்டும் எல்லையில் கால் வைக்கப் போன கணம், ஒரு முரட்டுக்கரம் அவளது தோளில் பதிந்து..

அவளது மாய ஈர்ப்பைக் கலைக்க, சட்டென்று திரும்பிப் பார்த்த யௌவனாவின் முகமும் சரி,

அங்கே நிலவறையில் எதிர்பார்ப்புடன் காத்திருந்த நந்தினியின் முகமும் சரி.. ரௌத்திரத்தில் அட் அ டைமில் சிவந்து போனது.

சாராய நெடி யௌவனாவின் முகத்தைச் சுளிக்கச் செய்யும் அளவுக்கு, மூக்கு முட்ட குடித்து விட்டு.. நேராக நிற்க முடியாமல் தள்ளாடியபடி நின்றிருந்தான் பகீரதன்.

இன்று தொல்லியல் பணி இடம்பெறும் இடத்தில்… அந்த நெடியவனான பிரபாகருக்கும், பகீரதனுக்கும் ஒரு சரக்குப் பார்ட்டி.

அதனால் தங்கியிருக்கும் விடுதிக்குச் செல்லாமல், இங்கேயே கூடாரமடித்துத் தங்கி.. வயிறு முட்டக் குடித்ததில் பிரபாகர் கூடாரத்திலேயே மட்டையாகிவிட்டிருக்க,

பகீரதன் மட்டும் இயற்கைத் தேவையை நிறைவேற்ற ஒதுக்குப்புறம் தேடி வந்த போது தான்.. அவன் கண்களில் மாட்டினாள் யௌவனா.

அவளைக் கண்டதும், அவளுக்கான பொல்லாத ஆசைகள் உள்ளத்தில் கொழுந்து விட்டெரியத் தொடங்கியது பகீரதனுக்கு.
அதிலும் யாருமில்லா தனிமை.. அவனுள் ஒரு தைரியத்தையும் கொடுக்க, போதையில் உளறும் குரலில்,

“என்ன இண்டப் பக்கம் தமிலு? ”என்று கேட்க, அவனிலிருந்தும் வரும் சாராய நெடி தாள மாட்டாமல் மூக்கைப் பொத்திக் கொண்டு ஓரெட்டுப் பின்னடைந்து நின்றாள் யௌவனா.

அவள் பார்வை தன்னுடன் பயின்ற பகீரதனை மேலிருந்து கீழாக ஆராய்ந்தது.

அவன் அணிந்திருந்த சட்டையின் மேலிரண்டு பட்டன்கள் திறந்து.. அதன் வழியாக அவனது கபிலநிற மேனி வெளியே தெரிந்து கொண்டிருந்தது.

இயற்கைத் தேவையை முடித்துக் கொண்டவன் சரியாக பேன்ட்டினை மாட்டியிருக்காததால்..

பேன்ட்டினையும் தாண்டி அவனது உள்ளாடை வெளியே தெரிய.. அவன் நின்றிருக்கும் கோலத்தைக் கண்டு அருவெறுத்த பார்வை அவன் மீது வீசினாள் யௌவனா.

அவள் தன்னை அருவெறுத்துப் பார்ப்பதைக் கூட தாளமாட்டாமல்,

அவள் அருகே மிக மிக நெருங்கி வந்து நின்று.. அவளது கழுத்து வளைவுப்பக்கம்.. அவளே எதிர்பார்த்திராத சமயம் சட்டென்று குனிந்து..

அவளது பர்பியூமை கண்கள் மூடி முகர்ந்தவன், கிறக்கம் நிறைந்த விழிகளுடன், “உன் புருஷனால… உன்ன சந்தோஷப்படுத்த முடியழையா என்ன?”என்று ஏடாகூடமாக கேட்க,

வெடுக்கெனப் பின்வாங்கி.. பகீரதனை ரௌத்திரத்துடன் முறைத்துப் பார்த்தாள் யௌவனா.

அதனை கிஞ்சிற்றேனும் பொருட்படுத்தாதவன், “அதான் இந்த டைம்ல அவனோட இருக்குறத விட்டுட்டு.. ஆம்பள தேடி வந்திருக்கியோ?” என்றவன்,

ஒரு நற்பெண்டிரால் கேட்க முடியாத நாராசமான வார்த்தைகள் பலவும் உபயோகிக்கவும் செய்தான்.

இறுதியில், சட்டென்று அவள் கையைப் பற்றியிழுத்தவன், ”அவன் தழ முடியாத சண்டோஷத்த நான் கொடுக்குழேன்.. என் கூட வா..” என்று சொல்ல,

அவன் தீண்டலைப் பொறுக்க மாட்டாமல், அவனைத் இந்த தள்ளி விட்டு, கையை உதறிவிட்டவள், ஓங்கி அறைந்திருந்தாள் அவனது கன்னத்துக்கு.

பின் தன் முன்னெழில்கள் ஏறி இறங்க சீற்றப் பெருமூச்சு வாங்கியவளாக,

“ச்சீ.. இப்படி கேவலமானவனா இருக்க?? .. என் கூட படிச்ச அப்பாவி பகீரதன் நீதானான்னு தோணுது.. நான் சத்யாதித்த இராஜசிங்கனோட பொண்டாட்டி.. அவருக்கு மட்டும் தான் முந்தி விரிப்பேன்.. உன்னை மாதிரி பொம்பளைப் பொறுக்கிக்கு இல்லை.. ”என்றவள்,

அவனைப் பாராமல் வேறு திசையில் விடுவிடுவென நடக்க, நந்தினிக்கும் கூட அங்கு பற்றியெரிந்து கொண்டிருந்தது.

அந்தக் கற்திடல் வளாகம்.. அவளது பொல்லாத தீய சக்திகள் அபரிமதமாப பரிணமிக்கும் வளாகம்.

அங்கே வரவழைக்க இத்தனை திட்டம் போட்ட நந்தினிக்கு..

பகீரதனால் திட்டம் பாழாகி விடுமோ என்று ஒருகணம் அஞ்சவும் செய்தாளாயின்,மறுகணம் மாற்றான் மனைவியிடம் அத்துமீறும் அவன் செய்கையில் ஒரு எரிச்சலும் மிகுந்தது அவளுள்.

பகீரதனோ கொழும்பில் வைத்து, யௌவனா அறைந்த போது, சுற்றிலும் ஆட்கள் நடமாடுவதால் அமைதியாக இருந்தவனுக்கு, இன்றும் அவனால் அமைதியாக இருக்க முடியவில்லை.

யாரும் இல்லாத தனிமையில், யௌவனாவின் திமிருக்கு தகுந்த பாடம் புகட்ட வேண்டும் என்று தோன்ற, அவளை நோக்கி விரைந்தவன்,

அவள் சுதாரித்து நிமிரும் முன்னர்.. ஓரெட்டில் பற்றித்தூக்கி.. அவளை தோளில் போட்டுக் கொண்டவன், அவள் திணறத் திணறக் கத்த, அதைப் பொருட்படுத்தாமல்,

“நான்… நீ நினைக்குறதை விடவும் கேவலமானவன்னு இப்போ காட்டுறேன்டீஈஈ.. .. அப்படி என்கிட்ட இல்லாதது அந்த இந்தியாகாரன்ட்ட.. என்னடி இருக்கு? பத்து வருஷமா பின்னாடி நாயா சுத்தினவனை விட.. பத்து செக்கன் பார்த்த அவனோட பணம் பெருசா போயிடுச்சுல்ல? இன்னைக்கு நான் ய்யாஆருன்னு காட்டுறேன்டீஈஈஈ..” என்று கறுவியவனாக,

அவளை தூக்கிக் கொண்டு.. அந்தக் கற்திடல் வளாக எல்லையிலேயே கால் வைத்தான் பகீரதன்!!

பகீரதன் .. மனிதனாகப் பிறக்கக் கூடத் தகுதியற்றவனாகத் தான் அன்று நடந்து கொண்டான்.

அவளை ஒரு மராமரத்தண்டின் அடியில் கிடத்தியவன், தன் ஆண் பலத்தை.. தனக்கு சமமாக நடத்த வேண்டிய பலவீனமான பெண்ணிடம் காட்டுவதை வீரமாகவும், அதுவே பெருமையாகவும் கொண்டான் அவன்.

அவள் மீது மொத்த பாரத்தையும் அழுத்திப் படர்ந்து.. அவள் இதழ்களை சிறைசெய்ய நாடி.. அவன் குனிந்த போது.. தன் நகங்களால் அவன் முகத்தை பலம் கொண்ட மட்டும் கீறிவிட்டாள் யௌவனா.

அவளது நகக்கீறல் தந்த எரிவில்.. அவனது மிருகத்தனம் தலைக்கு அடிக்க,

தன் இராட்சதக் கைகளால்.. யௌவனாவின் கன்னங்களுக்கு, மாறி மாறி ஓங்கி அறைய, அந்த அறையின் வீரியம் தாங்க மாட்டாமல் காப்பாற்றுவாரின்றி மூர்ச்சையானாள் அவள்.

அவளிடமிருந்து எந்த எதிர்ப்பும் கிளம்பாதளவுக்கு.. அவன் உணர்வுகள் அற்ற ஜடமாகக் கிடந்ததில்..

அவனுக்கு வந்த காரியம் இலகுவாகிப் போக, அவள் பக்கத்திலேயே முழந்தாளிட்டு அமர்ந்தவன் தன் பேன்ட் ஜிப்பினைக் கழற்ற எத்தனித்த போது தான்… அந்த அதிசயமான சம்பவம் நடந்தேறியது.

அந்த கேவலமான செயலைச் செய்ய தயாரானவனாக, பகீரதன் யௌவனாவை நோக்கி முன்னேறப் போன கணம், ஒரு வலிய உடும்புப் பிடி அவனது தோள் மேல் பதிந்தது.

அந்த ஒற்றைப் பிடியின் ஸ்பரிசம்.. உடலை எரித்து விடுவது போல ஒரு கோரமான உஷ்ணத்தைப் பரிசளித்து என்புமச்சையில் இருந்து ஊடுருவி என்புகளைக் கூட உருக்கி விடும் போல காந்தியது அந்த மிருகத்துக்கு.

அந்தக் கை தந்த அழுத்தம் வேறு நொடிக்கு நொடிக்கு அதிகமாகிக் கொண்ட போக, ஒற்றைத் தோளில் ஒரு பெரும் பாறாங்கல்லை சுமப்பது போல வலித்தது அவனுக்கு.

அதன் பாரம் தாங்க மாட்டாமல்.. கை மண்ணை நோக்கி தாழ்ந்து கொண்டே போக, தன்னை இத்தனை நோவினை செய்வது யார் என்று திரும்பிப் பார்த்த பகீரதன்.. அது யாரென்று சுதாரிக்கும் முன்,

ஒரு அகோரக்கை.. சம்மட்டியால் தாக்கியது போன்ற வலிமையுடன் .. ஓங்கி ஓர் அடி பிடரிக்கு அடிக்க,

அந்த ஓரடியில்.. உயிர் பிரிந்து.. வெறும் ஜடம் வீழ்ந்தது நிலத்தில்.

அரை மயக்கத்தில்.. தன்னைச் சூழ என்ன நடக்கிறது என்று தெரியாமல், பாதிக்கண்களைத் திறந்த யௌவனா கண்டு கொண்டது இதுவரை இந்த ஊரிலேயே காணாத பேரழகுப் பெண்ணொருத்தியை.

இந்த இருபத்தோராம் நூற்றாண்டிலும் கூட இரவிக்கை இல்லாத சேலை அணிந்திருந்தாள் அந்த சுரூபினிப்பெண்.

அந்த அழகிய பெண்களின் கண்களும், அரைகுறை மயக்கத்தில் கிடந்த யௌவனாவையே தான் பார்த்திருந்தது.

தன்னை சர்வவல்லமை படைத்த ஒரு ஆத்மா பார்த்திருப்பது அறியாமல்.. தன் கற்பு பாதுகாக்கப்பட்ட ஆசுவாசத்துடன் முழுமையாக மூர்ச்சையாகிப் போனாள் யௌவனா.

யௌவனாவை.. அந்தப் பகீரதனிடம் இருந்து காப்பாற்றிய சுரூபினிப் பெண்!! அது மாய நந்தினியே தான்.

இனி தன் ஊசலாட்டங்களை நிகழ்த்த ஒரு உடல்.. அதுவும் சத்யாதித்தனுக்கு மிகவும் நெருங்கிய உறவின் உடல் கிடைத்ததில்.. அவள் முகத்தில் விஷமப்புன்னகை தவழ்ந்தது.

Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *