என் ரகசிய கனா நீ….

This entry is part 6 of 7 in the series என் ரகசிய கனா நீ

என் ரகசிய கனா நீ

என் ரகசிய கனா நீ….

என் ரகசிய கனா நீ….

என் ரகசிய கனா நீ….

என் ரகசிய கனா நீ….

என் ரகசிய கனா நீ….

என் ரகசிய கனா நீ….

என் ரகசிய கனா நீ….

என் ரகசிய கனா நீ….

என் ரகசிய கனா நீ….

என் ரகசிய கனா நீ….

என் ரகசிய கனா நீ….

என் ரகசிய கனா நீ….

என் ரகசிய கனா நீ….

என் ரகசிய கனா நீ….

Episode – 21


அனைவரும் அங்கு கூடியிருக்க போட்டி முடிவை அறிவிப்பவர்கள் அங்கு வருகை தந்தனர்.


முதலில் அந்தப் போட்டிக்கு நடுவர்களாக திகழ்ந்தவர்கள் யார் எனக் கூறி அவர்களுக்கு நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டவர்கள்,


அடுத்து, அந்தப் போட்டியில் முதல் இடத்தைப் பெற்றவர்களை ஒரு ஃகவுன்ட்டவுனுடன் கூற ஆரம்பித்தார்கள்.


அதன் படி பத்திலிருந்து முதலாம் ஃநம்பர் வரை எண்ணிப் பார்த்தவர்கள்  சரியாக அந்த முதலாம் ஃநம்பர் முடிவடைய அந்த வெற்றியாளரின் பெயரை அறிவித்ததுடன் அவருடைய சிலையையும் அந்தப் பெரிய திரையில் காட்சிப்படுத்தினர்.


முதலாம் இடத்தை பெற்றவர் வேறு யாரும் அல்ல நமது சிலை வடிவமைப்பின்    சாணக்கியன் ஜித் தான்.


அவனது பெயரைச் சொன்னதும் அந்த அரங்கமே கரகோஷம் எழுப்பி அவனுக்கு வாழ்த்துக்கள் தெரிவிக்க,

அபியோ, சந்தோசக் கூக்குரல் இட்டு எழுந்து நின்று கை தட்டி ஆர்ப்பரித்தாள்.


அதோடு அவனை அப்படியே கட்டி அணைத்து வாழ்த்துக்கள் சொல்ல,


இரு அன்னையர்களும் கூட பெருமையுடன் எழுந்து நின்று  கைதட்டினர்.


அத்தனை வாழ்த்துக்களையும் பெற்றுக் கொண்டு கம்பீரமாக அந்த மேடையில் ஏறியவன் அவனுக்கான பரிசுத் தொகையைப் பெற்றுக் கொண்டதுடன் அதற்கான ஃஅவார்டையும் புன்னகையுடன் வாங்கிக் கொண்டான்.


அதே புன்னகை உடன் கீழே இறங்க ஆரம்பிக்கும் போது “ஒரு நிமிடம்.” என அவனைத் தடுத்தவர்கள் அடுத்து கூறியது தான்,


அவன் மாத்திரம் அல்ல அங்கிருந்த யாருமே எதிர்பார்க்காத ஃசப்ரைஸ் ஆக அமைந்து போனது.


அது என்ன விடயம் என்றால் அந்தப் போட்டியில் அவன் மாத்திரம் முதலிடம் பெறவில்லை எனவும் அவனுக்கு சமமான புள்ளிகளை பெற்று முதலிடம் பெறும் இன்னொரு நபர் அவனது மனைவி அபி புஷ்பம் எனக் கூறி அவளையும் மேடைக்கு வருமாறு அழைத்தனர் ஒழுங்கமைப்புக் குழுவினர்.


அந்த செய்தியில் அவனுக்கு ஒலித்த கை தட்டல்களை விட அவளுக்கு இரு மடங்காக கைதட்டல்கள் ஒலிக்க ஆரம்பித்தது.


அவளுக்கோ, அந்த சத்தம் எல்லாம் காதை எட்டவே இல்லை.


சிந்தனையில், “தனக்கு இந்த போட்டியில் முதலிடமா?”  என திரும்பத் திரும்ப உதிக்க அப்படியே வாய் பிளந்தவாறு நின்று கொண்டிருந்தாள் அவள்.


நிஜத்தில் சில விடயங்கள் நடைபெறாது என்பதால் தான் அவற்றை நாம் நிழலாக கனவில் கண்டு மகிழ்கின்றோம்.


இங்கு கனவில் கூட அவள் தனக்கு இப்படி ஒரு ஃஅவார்ட் கிடைக்கும் என்று எண்ணியிருக்காத வேளையில் அவளுக்கு அந்த ஃஅவார்டோடு சேர்த்து, உலக அங்கீகாரமும் கிடைக்கின்றது என்றால் அவளின் மகிழ்ச்சி எத் தன்மையானதாக இருக்கும் என்பதை வெறும் வார்த்தைகளை மாத்திரம் வைத்து வர்ணித்து கூறி விட முடியாது.


அத்தகைய ஒரு தருணத்தை மனதார அனுபவித்துக் கொண்டிருந்த அவளின் பெயர் பலமுறை அழைக்கப்பட்டும் அவள் தனது கனவு உலகத்திலிருந்து வெளிவர முடியாது அப்படியே உறைந்து போய் நின்றிருந்தாள்.


இறுதியில் கௌசல்யா தான் அவளைத் தட்டி “மேடைக்குப் போ அபிம்மா.” என்று சொல்ல,


அவளும் இருவரிடமும் ஆசிர்வாதம் வாங்கிக் கொண்டு நிமிர்ந்த நடையுடன் கணவனை இமைக்காது பார்த்த படியே ஒவ்வொரு படியாக ஏறி மேடைக்குச் சென்றாள்.


அவளது மனதில் அனைத்திற்கும் மேலாக ஒரு குறிப்பிட்ட சந்தோஷம் இருந்தது.


அது என்னவென்றால் தனது கணவனுடன் தான் அந்தப் பரிசை பகிர்ந்து கொள்ளப் போகிறோம் என்பது தான்.


ஆனால் அதற்கு நேர் மாறான எண்ணத்தில் மனதிற்குள் ஆயிரம் எரிமலை குழம்புகள் வெடிக்கும் அளவுக்கு கோபம் கொப்பளிக்க உடம்பு முழுவதும் தீயாக எரிய அடுத்து என்ன செய்வது என்று புரியாது கொடுத்த பரிசுத் தொகை உள்ள அந்த ஃபோர்ட்டை இரு கைகளாலும் இறுகப் பற்றிப் பிடித்தவாறு முகத்தில் கட்டாய சிரிப்பை கொண்டு வந்து அப்படியே நின்று கொண்டு இருந்தான் ஜித்.


அவனுக்கு அருகே அவள் வரவும் அவளுக்கும் அதே போல ஃஅவார்டு வழங்கி அதே பரிசு உள்ள ஃபோர்ட்டை அவளது கைகளில் கொடுத்து இருவரையும் இணைந்து நின்று ஃ போட்டோக்கு ஃபோஸ் கொடுக்கச் சொல்ல,


அவனுக்கு மீதியாக இருந்த பொறுமையும் இல்லாமல் போக அவளுக்காக அதை இழுத்துப் பிடித்திருந்தான் ஜித்.


அவளோ, அவற்றை எல்லாம் கவனிக்காது சிரித்தபடி படத்திற்கு ஃபோஸ் கொடுத்து விட்டு அமைதியாக அவன் அருகில் பெருமையில் முகம் மினுமினுக்க நின்று கொண்டிருந்தாள்.


அடுத்ததாக அவர்கள் இருவரையும் பேச அழைக்க,


அவளை முதலில் பேசுமாறு முகம் இறுக அனுப்பி வைத்தான்.


அவனது முக இறுக்கத்தின் காரணம் புரியாதவள் புன்னகையுடனேயே பேச ஆரம்பித்தாள்.


அவள் வழமை போல கடவுளுக்கும் அடுத்ததாக தனது அன்பான கணவனுக்கும் நன்றியை தெரிவித்துக் கொண்டவள் அடுத்து தனது மாமியாருக்கும் அன்னைக்கும் நன்றியை கூறிக் கொண்டு,


அந்த ஃஅவார்டை தன்னைப் போல் இருக்கும் அனைத்து கலைஞர்களுக்கும் சமர்ப்பணம் செய்வதாக கூறி தனது பேச்சை முடித்துக் கொண்டாள்.


அந்த சிலை பற்றிய சில கேள்விகளை அங்கிருந்த பத்திரிகையாளர்கள் கேட்க,


புன்னகைத்தபடி அவர்களுக்கு உரிய பதில்களைக் கூறியவளைக் கண்டு அவர்களே ஒரு கணம் எழுந்து நின்று கைதட்டினார்கள்.


அவளுக்கு கை தட்டு  விழும் போதெல்லாம் எங்கே அங்கு  தொடர்ந்து நின்றால் அவளைக் கடித்து குதறி விடுவோம் என்ற அளவுக்கு அவனது ஃபிபி ஏறிக்கொண்டே போனது.


சரியாக அவன் இதற்கு மேலே இங்கிருக்க முடியாது என கிளம்பும் நேரம் அடுத்ததாக அவனைப் பேச அழைத்தார்கள்.


அதற்கு மேலும் பேசாமல் போனால்  நன்றாக இருக்குமா?


ஆகவே பல்லை கடித்துக் கொண்டு அங்கே சென்றவன் பொதுவாக நன்றியை கூறிவிட்டு அங்கிருந்து நகர ஆரம்பிக்க,


அவனையும் அந்த சிலையை பற்றிய சில கேள்விகளை கேட்க அதற்குரிய பதில்களை கொடுத்தவன் அதன் பின்னே நிற்காது ஒரு சிறு புன்னகையுடன் கீழே இறங்கி சென்று விட்டான்.


அவனுக்கு பின்னாக மெதுவாக அபி புஷ்பமும் இறங்கிச் செல்ல அடுத்தடுத்த பரிசில்களை அவர்கள் தொடர்ச்சியாக அறிவித்துக் கொண்டு இருந்தார்கள்.


சற்று நேரம் விழாவைக் கவனித்துக் கொண்டிருந்தவள் அதன் பின்பு தான் தனது கணவனின் முகத்தை பார்த்தாள்.


அவனது முகத்தில் இருக்கும் கோபம்  அவளை சிந்தனை வயப்படுத்த மெதுவாக “என்னாச்சு  ஜித் உங்களுக்கு, ஒரு மாதிரி இருக்கீங்களே?” என்று கேட்க,


அவளை கூர்ந்து பார்த்தவன், “எனக்கு கொஞ்சம் தலை வலிக்குது அபி. நான் ஃரூமுக்குப் போகிறேன்.” என்று கூறிவிட்டு,


அதனை சாக்காக வைத்துக் கொண்டு அவளது பதிலை கூட எதிர்பாராது எழுந்து கடகடவென்று தனது ஃரூமுக்குள் சென்று அடைந்து கொண்டான்.


என்ன தான் முதலிடம்  பெற்றாலும் தனக்கு சமமாக அவள் முதல் இடத்தைப் பெற்றுக் கொண்டதை அவனால் ஏற்றுக் கொள்ள முடியாது போனது.


அவன் அவளின் மீது கொண்டுள்ள அன்பு, பாசம் மற்றும் மதிப்பு, நம்பிக்கை எல்லாவற்றையும் அவனது ஃஈகோ புறம் தள்ளி நூறு சதவிகிதம் அவனது இதயத்தில் முழுவதுமாய்  பேயாய் குடி கொண்டிருக்க அதை கக்க தக்க நேரம் பார்த்துக் கொண்டிருந்தான் அவன்.


அந்த நேரத்தில் சரியாக அவனிடம் வந்து மாட்டிக் கொண்டார் அவனது அன்னை கௌசல்யா.


அவன் எழுந்து சென்றதும் அவனது முகத்தை வைத்தே அவனது மனதில் ஏதோ ஒரு குழப்பம் இருக்கின்றது என்பதை உணர்ந்து கொண்டவர் அதை தீர்க்கும் வகையிலும்,


அவனிடம் இன்றோடு இதைப் பற்றி பேசித் தீர்த்து விட வேண்டும் என்ற எண்ணத்திலும் அவனது அறைக்குள் வந்து சேர்ந்தார்.


வந்தவர் அவனது சிவந்த கண்களையும், இறுகிய கை முஷ் டிகளையும் பார்த்து விட்டு,


ஒரு ஃகிளாஸில் தண்ணீரை எடுத்து வந்து அவனிடம் எந்தப் பேச்சும் இல்லாது நீட்ட,


அதை வாங்கி முழுவதுமாக ஒரே மடக்கில் பருகி முடித்தவன் அவரிடமே அந்தக் ஃகிளாசை மீண்டும் நீட்ட வாங்கி வைத்தவர் அவனது தோளில் மெதுவாக கையை வைத்தார்.


அவரது கையையும் அவரையும் ஒரு முறை திரும்பிப் பார்த்தவன் பட்டென்று அவரது கையை உதறிவிட்டு தனது முழு உயரத்திற்குமாக எழுந்து நின்றான்.


கௌசல்யாவோ, “எதுக்குடா இப்போ உன் கோபத்தை என் மேல காட்டுறாய்?” என்று அமைதியாக கேட்க,


அவன் திரும்பி அவரைத் தீப்பார்வை பார்த்தவன், 

“உங்களுக்கெல்லாம் இப்ப ரொம்ப சந்தோஷமா இருக்குமே….” என்று கேட்டான்.


அவனது கோபத்திற்கான முழுமையான காரணம் விளங்காதவர் அதைத் தெளிவு படுத்தும் விதமாக மீண்டும் அவனிடமே,


“இப்போ என்ன ஆச்சு எண்டு, நீ இவ்வளவு தூரம் இப்படி ஃவிகரஸ்சா ஃபிஹேவ் பண்றாய்?” என்று கேட்டார்.


“யாரு நான் ஃவிகரஸ்சா ஃபிஹேவ் பண்றேனா?, எனக்கு நடந்த விஷயத்துக்கு நான் அப்படித்தான் பிஹேவ் பண்ணுவேன்.” என்று கத்தியவனை ஒரு கணம் கூர்ந்து பார்த்தவர்,


“இந்தப் போட்டியில் நீ நினைச்ச மாதிரி உனக்கு முதலிடம் கிடைச்சிருக்கு தானே, அப்புறம் எதுக்குடா இப்பிடிப் பேசுறாய்?” என்று குழப்பமாகக் கேட்க,


அவரைக் கூர்ந்து பார்த்தவன்,

“எனக்கு மட்டும் முதலிடம் கிடைக்கலயே அது தான் என்னோட பெரிய பிரச்சனை ஃமாம்.” என்று பதிலுக்கு கூறியவனை அதிர்ந்து பார்த்தார் கௌசல்யா.


“டேய் ஜித் நீ என்ன பேசுறாய் எண்டு புரிஞ்சு தான் பேசுறீயா?, உன்னோட சேர்த்து உன்னோட அருமைப் பொண்டாட்டிக்கு தான் முதலிடம் கிடைச்சிருக்கு. வேற யாருக்கோ கிடைச்ச மாதிரி இப்படி நடந்துக்கிறீயே, இது மட்டும் அவளுக்கு தெரிஞ்சா அவ எப்படி வேதனைப்படுவாடா?” என்று கலக்கமாக வினவினார்.


அவரை நோக்கி கேலிப் புன்னகை ஒன்றை வீசியவன்,


“அது தானே பார்த்தன், நீங்க உங்க மருமகளுக்கு தானே எப்போதும் ஃசப்போர்ட் பண்ணுவீங்க, எனக்கு அவ கூட அந்த பரிசை ஃ ஷேர் பண்ணும் போது எப்படி இருந்தது தெரியுமா?” என மறுபடியும் கேட்க,


அவனை அப்போதும் அழுத்தமாகப் பார்த்தவர்,


“நீ மாறிட்டாய் எண்டு நினைச்சன் ஜித். அப்போ நீ இன்னும் மாறலயாடா?” என நேரடியாகவே ஒரு வித தவிப்புடன் கேட்டு விட்டார் அவர்.


 அவருக்கு ஆதங்கம் தாங்க முடியவில்லை.


அவரின் கேள்விக்கு அவன் கூறிய பதிலில் அவனது கன்னம் பழுக்க ஒரு அறை அறைந்து விட்டார் கௌசல்யா.


அப்படி அவன் என்ன தான் சொன்னான் என்று பார்த்தால்….


“யாரு நான் போயும் போயும் அந்த ஒத்தக் கைக்காரிக்காக என்னோட குணங்களை மாற்றி விடுவேன் எண்டு நீங்க நினைச்சீங்கன்னா அது உங்களோட முட்டாள்த் தனம் அம்மா, அதுக்கு நான் ஒண்ணுமே பண்ண முடியாது.” என்று கூறியிருந்தான் ஜித்.


தனது மனைவியையே இவ்வளவு இழிவாகப் பேசுபவனை அறைந்தால் தப்பே இல்லை என எண்ணியவர் பட்டென்று யோசிக்காது அவனை அறைந்தும் விட்டார்.


அந்த அடியை வாங்கியவன் “அம்மாஆஆஆ….”என அந்த அறையே அதிரும் அளவுக்கு கர்ஜித்தான்.


அவனது கர்ஜனையை கொஞ்சம் கூட பொருட்படுத்தாதவர்,


“வாய மூடுடா. உன்னோடது வாயா? அல்லது கால்வாயா?, மன சாட்சியே இல்லாம இப்படியெல்லாம் பேசுறாய்?, அவ உன்னோட பொண்டாட்டிடா. அவ கூட நீ இவ்வளவு நாளும் வாழ்ந்த வாழ்க்கைக்கான அர்த்தம் அத்தனையும் நீ சொன்ன ஒரு வார்த்தையில அழிஞ்சு போச்சுடா. நீ பேசுறதை அவ கேட்டா எவ்வளவு மனசு கஷ்டப்படுவா எண்டு தெரியுமா?”


“அவளுக்கு ஒரு கை இல்லை  எண்டு தெரிஞ்சு தானே நீ அவளை கட்டிக்க சம்மதிச்சாய்?, அப்புறம் என்னடா?” என்று அவனுக்கு மேலாக தனது மருமகளுக்காக எகிறிக் கொண்டு வந்தார் கௌசல்யா.


அந்த நேரம் அவனது உடம்பில் எந்த சாத்தான் தான் புகுந்ததோ தெரியவில்லை.


அன்னை தன்னை அறைந்ததும், அதோடு தன்னை விட குரலை உயர்த்திப் பேசியதும் அவனுக்குள் இருந்த கோபத்தை மேலும் உசுப்பி விட என்ன பேசுகிறோம் என்று தெரியாது வார்த்தைகளை வெளியிட ஆரம்பித்தான் ஜித்.


ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு என்ற அளவில் அவன் பேச ஆரம்பித்தான்.


அவனது மனதில் இவ்வளவு நாளும் அடக்கி வைத்திருந்த கசடுகள் யாவும் வார்த்தைகளாக வெளி வர ஆரம்பித்தது.


“ஆமா நீங்க சொல்றது சரிதான். எல்லாக் குறையும் தெரிஞ்சு தான் அவள நான் கல்யாணம் பண்ணிக்கிட்டேன். ஆனா அதுக்கு ஒரு முக்கியமான காரணம் இருக்கு. அது தெரியுமா உங்களுக்கு?” என்று கேட்க,


தான் வாழ்நாளில் ஏற்க முடியாத ஒன்றையும், மிகுந்த வருத்தத்தை தரக்கூடிய ஒரு விடயத்தையும் தனது மகன் கூறப் போகிறான் என்று அறிந்தவர்,


“வேணாம் ஜித், என்ன பேசுறதா இருந்தாலும் யோசிச்சுப் பேசு. வார்த்தைகளை வெளி விட்டால் அதுக்குப் பிறகு அள்ள முடியாது.” என்று கூற,

 

அவனோ, கிஞ்சித்தும் அவர் பேசியதற்கு காது கொடுக்காது திருமணம் செய்த காரணத்தைக் கூற,


அதைக் கேட்டவர் அப்படியே அதிர்ந்து போய் நெஞ்சில் கை வைத்தபடி அமர்ந்து விட்டார் என்றால்….


வெளியில் அவன் பேசிய பேச்சுக்கள் அத்தனையும் கேட்டு,  உயிரற்ற ஒரு கூடாக சுவரோடு சாய்ந்து அமர்ந்தாள் அபி.


அவனது பேச்சுக்களுக்கு அபியின் எதிர் வினை எப்படி இருக்கும்?


அவளுக்கு உண்மைகள் தெரிந்த பின்பு ஜித் அவளை எப்படி எதிர் கொள்வான்?


இனியும் திருமண உறவு தொடருமா?


அடுத்த பதிவில் பார்க்கலாம்….


இந்த எபிக்கு லைக்ஸ் அண்ட் கமெண்ட்ஸ் போட்டு வைங்க மக்காஸ் 😍😍😍😍😍😍😍😍


இந்தக் கதைக்கு உங்கள் ஆதரவைக் கண்டு கண்ணு வேர்க்குது மக்காஸ்…. லைக்ஸ் அண்ட் கமெண்ட்ஸ் போடும் அன்பு உள்ளங்களுக்காக இந்த எபி 😍😍😍😍😍😍❤❤❤❤❤


செல்லோஸ் லைக்ஸ் போட்டு வைங்க…. அடுத்த எபி நாளை வரும் 💕💕💕💕


கதையின் போக்கு உங்களுக்கு பிடிச்சு இருக்கா மக்காஸ்? 💜💜💜💜💜💜💜💜


நேற்று எபி போடாததற்கு சாரி மக்காஸ்…

மன்னிச்சு….மக்காஸ்….


அதனால நான் என்ன சொல்ல வரேன் எண்டா…..…..


நாளைக்கு சண்டே நோ லீவு கண்டிப்பா எபி வரும்….ஓகேவா…


இந்த எபி பெரிய எபி தான் ஓகேவா கண்மணிஸ்….இதை விடவும் பெரிய எபி வேணுமா 😍😍😍😍😍

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *