என் நண்பினிக்கு!!!

 என் நண்பினிக்கு!!

கண்டதும் காதல்

வருமா என்ன?!!!

ஆம் என 

காவியமும்

கதைகளும் கூறுகிறதே!!!

ஒரு மொழி

பேசினாலே உயிர் நட்பு

பார்காமலே மலருமா

என்ன?!!!

இதோ மலர்ந்து

பரந்து விரிந்து

பூங்காடாக மாறி

வாசம் எங்கும்

வீசுகறதே என்

சக பெண்மானான

சகிப்பூவே!!!

ஆம் கடலும் கடந்து 

காதல் மட்டும் இல்லை

எம் நட்பும் செல்லும்!!!

சிறிய வயதின்

மலரும் நினைவுகள் இல்லை!

கைப்பிடித்து

பள்ளி கல்லூரிக்கு

ஒன்றாக சென்றது இல்லை!

ஹாஹாஹா

அடித்து பிடித்து

படுத்து உருண்டு

எனும் சண்டைகளும் இல்லை!

கடற்கரையில்

ஓடி ஆடி 

விளையாடியதும் இல்லை!

சரிபாதி பிரித்து

உணவை

ஊட்டி கொண்டதும் இல்லை!

ஆம் இது போல் எந்த

உவமையும் இல்லைதான்

ஆனால் பாரடி

என் வெற்றி உன் வெற்றியாகிறது

உன் வலி என் வலி ஆகிறதே!!! 

ஹாஹா

நீ என் காதலி பெண்ணோ??!!!

இனி

சேர்ந்து செய்வோம்

சேட்டையடி

அன்பால் செய்வோம்

அரட்டையடி

இனி நீயும் நானும்

இங்கே இரட்டையடி!!!

இலங்கையின் மன்னி

எழுத்தாளினி

என் நட்பினி

தங்க பெண்மனி

தாயின் கண்மனி

என் கடற்கண்ணி

வஞ்சமான வசிகரினி

ஊதாப்பூவினி

எங்களின் அன்பினி

நீ ஸ்ரீவினி!!!

பிறந்தாய் நீ 

இன்று அன்றொரு 

வருடம்…

வாழ்வாய் நீ 

இன்பமாக நூறாண்டு 

காலம்…

சிறகடித்து பறந்து

வானுயர உயர 

உன் கனவை

நோக்கிச் செல்…

வெற்றி எனும் சொல்

உன்னுடன் பிறந்தவளாய்

உன்னுடனிருக்க…

அன்புதொல்லை 

எனும் சொல்

என்னுருவாய் உன்னுடனிருக்க….

அன்பர்கள் அனைவரின்

ஆசியால் நீ

சாதனையை படைக்க…

இதயங்களுடன்

பிறந்தநாள் வாழ்த்துகளடி

எந்தன் நண்பினியே!!!

          —தைரியா—

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *