என் ஆசை அகத்திணை நீயடி

This entry is part 14 of 14 in the series என் ஆசை அகத்திணை நீயடி

என் ஆசை அகத்திணை நீயடி

என் ஆசை அகத்திணை நீயடி

என் ஆசை அகத்திணை நீயடி

என் ஆசை அகத்திணை நீயடி

என் ஆசை அகத்திணை நீயடி

என் ஆசை அகத்திணை நீயடி

என் ஆசை அகத்திணை நீயடி

என் ஆசை அகத்திணை நீயடி

என் ஆசை அகத்திணை நீயடி

என் ஆசை அகத்திணை நீயடி

என் ஆசை அகத்திணை நீயடி

என் ஆசை அகத்திணை நீயடி

என் ஆசை அகத்திணை நீயடி

என் ஆசை அகத்திணை நீயடி

என் ஆசை அகத்திணை நீயடி

என் ஆசை அகத்திணை நீயடி

என் ஆசை அகத்திணை நீயடி

என் ஆசை அகத்திணை நீயடி

என் ஆசை அகத்திணை நீயடி

என் ஆசை அகத்திணை நீயடி

என் ஆசை அகத்திணை நீயடி

என் ஆசை அகத்திணை நீயடி

என் ஆசை அகத்திணை நீயடி

என் ஆசை அகத்திணை நீயடி

என் ஆசை அகத்திணை நீயடி

என் ஆசை அகத்திணை நீயடி

என் ஆசை அகத்திணை நீயடி

என் ஆசை அகத்திணை நீயடி

என் ஆசை அகத்திணை நீயடி

அத்தியாயம் 14

“ஐம் சாரி விக்ரம்.. உங்களை விட்டுட்டு நான் போயிருக்கக்கூடாது.. நான் ரொம்ப பெரிய தப்பு பண்ணிட்டேன்.. ஐம் சோ சாரி விக்ரம்.. இனிமே உங்களை விட்டுட்டு எங்கேயும் போக மாட்டேன்..” என்று அழுதவாறே அவன் மீது லிசா சாய்ந்து கொள்ள, அவனை அதிர்ச்சியோடு பார்த்திருந்தாள் நித்யா. 
“இப்ப தான் உங்களோட லவ்வை புரிஞ்சுகிட்டேன்.. என்னைய ஏத்துக்கோங்க விக்ரம் ப்ளீஸ்..” என்ற விசாவை மெல்ல தன் மீதிருந்து விக்ரம் விலக்க, தனதருகே கலையா ஓவியமாக நின்றிருந்த நித்யாவை பார்த்த லிசா,
“விக்ரம் இந்த பொண்ணு.. இங்க.. யாரிது?” என்று கேட்க, 
“என் பொ..” என்று விக்ரம் தொடங்கும் முன்னமே,
“பொண்ணை பார்த்துக்க வந்தவ.. கேர் டேக்கர்..” என்று லிசாவிடம் கூறிய நித்யா,
“சார்.. இதோட என்னோட வேலை முடிஞ்சுது.. இனிமே உங்களுக்கு என்னோட ஹெல்ப் தேவைப்படாதுன்னு நினைக்குறேன்.. நான் கிளம்புறேன் சார்..” என்று விக்ரமிடம் கூறிவிட்டு வாசலை நோக்கி செல்ல,
“மம்மி..” என்று கண்ணை கசக்கி கொண்டே எழுந்து வந்த ஜோவானா நித்யாவை அழைக்க, 
“பட்டுக்குட்டி.. ஜோகுட்டி.. மம்மி டா..” என்றவாறே ஜோவானாவின் அருகில் லிசா செல்ல, அறிமுகமற்ற நபரை பார்ப்பது போல் பார்த்த குழந்தை, தன் கண்களை கசக்கி சுழற்றிப் பார்க்க, தன் எதிரே நின்றிருந்த நித்யாவைத் தேடி கன்றுக்குட்டியென ஓடி, அவளது கால்களை கட்டிக் கொள்ள, அதனைப் பார்த்த லிசாவிற்கு கோபம் வந்தாலும், விக்ரமின் முன்னால் அதை காட்டாது,
“ஜோக்குட்டி.. மம்மி டா.. இங்க வாங்க.. அவங்க யாரோ.. அவங்கக்கிட்ட போகக்கூடாது.. இங்க வாங்க..” என்று வழுக்கட்டாயமாக, நித்யாவின் காலைப் பிடித்து நின்றிருந்த குழந்தையை பிடித்து இழுக்க, 
“டாடி.. எனக்கு பயமாயிருக்கு.. இவங்களை இங்க இருந்து போக சொல்லுங்க..” என்ற குழந்தை விக்ரமிடம் போக முயல, அதற்கு விடாது லிசா அவளது கையைப் பிடித்து இழுக்க, விசாவை தடுத்த விக்ரம், தானே ஜோவானாவை கையில் ஏந்திக் கொண்டான். அங்கே நடப்பதை காண முடியாத நித்யா, வேகமாக அங்கிருந்து வெளியேற, அவளை பின் தொடர முயன்ற விக்ரமின் கையைப் பிடித்து கொண்டாள் லிசா. 
“விக்ரம்.. ” என்ற விசாவை அடக்கிய கோபத்துடன் பார்த்த விக்ரம்,
“கைய விட்டு லிசா.. ப்ளீஸ்..” என்று கர்ஜிக்க, அவனது கோபத்தை பார்த்த லிசா, சட்டென விலகினாள். ஜோவானாவை தூக்கிக் கொண்டு நித்யாவை விக்ரம் பின்தொடர, அதற்குள் குடியிருப்பு பிகுதியை விட்டு வெளியே சென்றிருந்தாள் நித்யா. ரோட்டில் ஆட்டோவை நிறுத்த முயன்ற நித்யாவின் கையைப் பிடித்து தரதரவென இழுத்து வந்த விக்ரம், தன்னுடைய காருக்குள் தள்ள, அழுது வீங்கிய முகத்துடன் அமர்ந்திருந்தாள் நித்யா. ஜோவானாவை பின் சீட்டில் தூங்க வைத்திருந்த விக்ரம், காரை செண்பகம் வீட்டை நோக்கி செலுத்த, மெல்ல நித்யாவின் விசும்பல் சத்தம் விக்ரமின் மௌனத்தை கலைத்தது. 
“இப்ப எதுக்கு அழுகுற?”
“நான் ஒன்னும் அழுகலையே..”
“ஓ.. அப்போ கண்ணு வேர்க்குதோ?”
“அப்படியே வைச்சுக்கோங்க..”
“இந்த வாயெல்லாம் என்கிட்ட மட்டும் தான்.. அவக்கிட்ட எதுவும் பேசிடாத..”
“இப்ப என்ன நான் பேசணும்னு சொல்றீங்க?”
“உன் புருஷனை கொடுன்னு கேட்டு ஒருத்தி வந்து நிக்குறா.. நீயும் அப்படியா.. இந்தா எடுத்துக்கோன்னு.. அங்கேயே எங்களை விட்டுட்டு கிளம்புற.. இது தான் நீ என் மேல வைச்சுருக்குற நம்பிக்கையா?”
“பின்ன என்னைய என்ன பண்ண சொல்றீங்க? அவங்க உங்க பொண்டாட்டி மட்டுமில்ல.. உங்க பொண்ணோட அம்மா..” என்றவள் கூறி முடிப்பதற்கும் நித்யாவின் அம்மா வீடு வருவதற்கும் சரியாக இருந்தது. 
“அவ ஜோக்குட்டிய பெத்தவளா இருக்கலாம்.. ஆனா, அவ உன் காலை தான்டி அம்மான்னு பிடிச்சுட்டு நின்னா.. குழந்தைய பெத்துக்குறவங்க எல்லாம் அம்மா கிடையாது.. அதை உசுருக்கு உசுரா.. கண்ணுக்குள்ள வைச்சு.. பாதுகாக்குறா.. பாரு.. அவ தான் அம்மா.. எப்ப நீ என்னைய நம்பாம என்னையும் நம்ம பொண்ணையும் விட்டுக் கொடுத்துட்டியோ.. இனிமே நானா உன்னையத் தேடி வரமாட்டேன்டி.. ஆனா, ஒன்னு மட்டும் ஞாபகம் வைச்சுக்கோ.. இந்த ஜென்மத்துல நீ தான் என் பொண்டாட்டி.. நான் தான் உன் புருஷன்.. அதை யாராலும் மாத்த முடியாது.. இறங்குடி..” என்ற விக்ரம், நித்யா காரில் இருந்து இறங்கிய அடுத்த நொடி அங்கிருந்து கிளம்பினான். தான் செய்தது தவறு என்று உணர்ந்திருந்தாலும், ஏற்கனவே ரவியின் மூலம் பட்ட மனவேதனை, அவளை அதிலிருந்து வெளி வரவிடாது தடுத்தது. என்ன ஏதென்று விவரம் கேட்ட செண்பகத்திற்கு ஏதோ சொல்லி சமாளித்தவள், தனது நிலையை எண்ணிக் கொண்டே உறங்க முடியாது தவித்தாள் நித்யா. நித்யாவை இறக்கி விட்ட விக்ரம், நேரே தனது குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்தான். லிசா தன் வீட்டில் இருக்கும் போது, இந்த ராத்திரி நேரத்தில், அங்கு செல்ல விரும்பாதவன், காரின் பின்பகுதியில் ஜோவானாவை தூங்க வைத்து, தானும் அதிலேயே அமர்ந்தபடி உறங்கிவிட்டான். இரவு முழுவதும் விக்ரமிற்காக காத்திருந்த லிசா, அவன் அங்கு வராத காரணத்தினால், அதிகாலையிலேயே ஏமாற்றத்துடன் அங்கிருந்து கிளம்பியிருந்தாள். அவள் கிளம்பிச் செல்வதை காரில் இருந்து பார்த்துக் கொண்டிருந்த விக்ரம், அவள் சென்ற பின்னரே ஜோவானாவை தூக்கிக் கொண்டு தனது வீட்டிற்கு சென்றான். வழக்கம் போல் ஜோவானாவை பள்ளிக்கு அழைத்துச் செல்ல வந்த நித்யா, மெல்ல வீட்டிற்குள் எட்டிப் பார்த்தாள். அவள் வருவதை சமையல் அறையில் இருந்து பார்த்த விக்ரம், சிறு புன்னகையுடன், அவளை பாராதது போலவே, குளியலறைக்குள் நுழைந்து கொண்டான். வீட்டிற்குள் வந்தவள், அங்கு லிசா இல்லாததை உணர்ந்ததும், ஏதோ ஒரு பாரம் மனதை விட்டு விலகுவதை போல் உணர்ந்தாள். பிறகு, எப்போதும் போல் தனது வேலைகளை செய்ய தொடங்கினாள். ஜோக்குட்டியை பள்ளிக்கு கிளப்பியவள், விக்ரமின் முன்னால் டிபன் பாக்ஸை நீட்ட, எங்கோ பார்த்தபடி அதனை வாங்கிக் கொண்டான். 
“ஜோக்குட்டி.. அம்மாவும் உங்கக்கூட வரலாமான்னு.. உன் அப்பாக்கிட்ட கேளு..” என்று விக்ரமிடம் ஜாடை பேச்சு பேசியவளை, ஓரக்கண்ணால் பார்த்தவன்,
“நேத்து என்னமோ முறுக்கிக்கிட்டு போனாங்க.. இப்போ என்ன அக்கரை?” என்றவன் கேட்க,
“என் பொண்ணு மேல எனக்கு அக்கரையில்லாம.. வேற யார் அக்கரை காட்டுவாங்கன்னு கேளு குட்டி..” என்றவள் கூற, இருவரையும் மாறி மாறி பார்த்த ஜோவானா, தனது ஸ்கூல் பேக்கை தூக்கிக் கொண்டு முன்னால் நடக்க, அவளை தன் கைகளில் ஏந்திக் கொண்ட விக்ரம்,
“அவங்களை நம்மக்கூட வரக்கூடாதுன்னு நான் எப்ப சொன்னேன்? உன் மம்மியை வர்றதுன்னா வரச்சொல்லு..” என்றவன் முன்னே செல்ல, அவனது பின்னால் நாக்கை நீட்டி அழகு காட்டிக் கொண்டே சென்றாள் நித்யா. காரின் பின் சீட்டில் ஜோவானாவுடன் அமர முயன்றவளை முறைத்துப் பார்த்தவன், 
“அம்மாக்கும் பொண்ணுக்கும் நான் என்ன டிரைவர் வேலையா பார்க்குறேன்.. ஒழுங்கா முன்னாடி வந்து உட்காருங்க..” என்று உறும, ஜோக்குட்டியுடன் முன்னே வந்து அமர்ந்தாள் நித்யா. ஜோவானாவை பள்ளியில் விட்டு விட்டு விக்ரமுடன் காரில் ஏறியவளுடன் ஒரு வார்த்தை கூட அவன் பேசவில்லை. காரில் நிலவும் அமைதியை குலைந்தது நித்யாவின் குரல். 
“என்ன தான் இருந்தாலும் அவங்க உங்களோட முதல் வொய்ஃப்.. முதல் லவ்.. அவங்களுக்கு தானே உங்க மனசுல முதலிடம் இருக்கும்..”
“அப்படி நான் சொன்னேனா? நீயா நினைச்சுக்கிட்டா அதுக்கு நான் பொறுப்பில்ல..”
“அதெப்படி அவங்களை தானே நீங்க முதல்ல லவ் பண்ணிருக்கீங்க?” என்றவளை பெருமூச்சுடன் பார்த்தவன், சட்டென காரை சாலையோரமாக யாருமில்லாத இடத்தில் நிறுத்தினான். 
“லுக் நித்யா.. முதல் வொய்ஃப்னு சொல்லு.. ஆனா, முதல் லவ்னு சொல்லாத.. யாரையாவது எப்படியும் கல்யாணம் பண்ணணும்.. அதுக்கு என்னைய புரிஞ்சுக்கிட்ட விசாவை கல்யாணம் பண்ணளாமேன்னு தான் மேரேஜ் பண்ணேன்.. அப்போ எனக்கு தெரியல.. இந்த மாதிரி.. என்கிட்ட படிக்கும் பொண்ணு மேல லவ் வரும்.. அவ மேல தலை குப்புற விழுவேன்னு தெரியல.. தெரிஞ்சுருந்தா.. நான் லிசாவை கல்யாணம் பண்ணிடுங்க மாட்டேன்.. லவ்.. அந்த ஃபீலிங் எப்படி இருக்கும்னு உன்கிட்ட தான்டி தெரிஞ்சுக்கிட்டேன்.. நீ ஏன்டி என்னைய நம்பவே மாட்டேங்குற? வலிக்குதுடி..” என்றவன் தன் நெஞ்சில் கை வைக்க, அவன் உணர்ந்த வலியை, தானும் தனது நெஞ்சில் உணர்ந்தாள் நித்யா. அவனது தலைமுடியை வருட உணர்ந்த கையை தடுத்தது, விக்ரமிற்கு வந்த அழைப்பு. 
“ஹலோ.. ம்ம்.. ஐம் கம்மிங்.. கம்மிங்..” என்றவன் நித்யாவிடம் திரும்பி,
“எனக்கு இன்னைக்கு முக்கியமான மீட்டிங் இருக்கு.. சோ, நாம இப்போ காலேஜ் போகலாம்.. ஈவினிங் ஜோக்குட்டியை கூப்பிட சீக்கிரம் போகலாம்.. சரியா?” என்றவாறே காரை எடுக்க, சரியென தலையாட்டினாள் நித்யா. அவளுடன் காலேஜில் இறங்கிவியவன், மீட்டிங் ஹாலை நோக்கி ஓடினான். அமெரிக்க பல்கலைக்கழகத்துடன் நடக்கும் முக்கிய கூட்டம். விக்ரம் சென்றதும், தனது வகுப்பை நோக்கி நடந்து கொண்டிருந்தவள் முன்னே வந்து நின்றாள் ஜோதி. 
“என்னடி பயங்கரமான யோசனைல இருக்க போல?”
“ப்ச்.. அதெல்லாம் ஒன்னுமில்ல..”
“அப்பா.. நான் கூட பயத்துட்டேன்.. எதையோ யோசிக்கிறிறோன்னு..”
“ஏன்?”
“ஏனா? யோசிக்குறதுக்கு முதல்ல மூளை வேணும்ல.. உனக்கெங்கடி மூளையிருக்கு? அது காணாம போயி தான் பல வருஷமாச்சே..”
“ப்ச்.. சும்மா விளையாடாத ஜோதி..”
“ஏன்? என்னாச்சு? இன்னைக்கு ரொம்ப டல்லா இருக்க?” என்று கேட்ட ஜோதியிடம் நடந்த அனைத்தையும் கூறினாள் நித்யா.  
“சோ.. இப்போ அவரோட ஃபர்ஸ்ட் வொய்ஃப் திரும்பி வந்துட்டாங்க.. அது தான் உனக்கு இப்போ பிரச்சினை.. கரெக்டா?”
“ம்ம்ம்..”
“இதுல குழம்புறதுக்கு என்ன இருக்கு? அவங்க அவரோட இறந்த காலம்.. நீ அவரோட நிகழ்காலம்.. எதிர்காலம்.. கண்டதை எல்லாம் யோசிச்சுக்கிட்டு, ரவி பண்ண அதே தப்பை நீயும் பண்ணாத.. நம்புனவங்களை பயந்து போய் விட்டுட்டு போறதும், துரோகம் பண்ணறதும் எவ்வளவு பெரிய தப்பு தெரியுமா? கொஞ்சமாவது முதுகெழும்போடு நிமிர்ந்து நில்லு நித்யா. நல்லவளா இரு.. ஆனா, ஏமாளியா இருக்காத.. இது உன் வாழ்க்கை.. உன் குடும்பம்.. இதுல இன்னொருத்தரை உள்ளே விடாத.. நீ தான் அவரோட லீகல் பொண்டாட்டி.. உனக்கு முழு உரிமையும் அவர் மேல இருக்கு.. புரிஞ்சுதா?” என்று கவலையுடன் கேட்ட ஜோதிக்கு சிறிய தலையசைப்பையே பதிலாக கொடுத்தாள் நித்யா. ஜோதியுடன் பேசிய பிறகு ஒரு தெளிவான முடிவிற்கு வந்தாள் நித்யா. அன்று கல்லூரி முடிந்து விக்ரமிற்காக கார் பார்க்கிங் இடத்தில் காத்திருந்த நித்யாவின் முன் வந்து நின்றாள் லிசா. 
அத்தியாயம் 15
“நீ தானே நித்யா..”
“ஆமா..”
“நான் யாருன்னு உனக்கே தெரிஞ்சுருக்கும்..”
“தெரியும்.. என் புருஷனோட எக்ஸ் வொய்ஃப்..”
“என்னது உன் புருஷனா? உனக்கு புருஷனாகுறதுக்கு முன்னாடியே, விக்ரம் என்னோட புருஷன்..”
“சரி.. அப்படியே வைச்சுக்கோங்க.. இப்ப அதுக்கென்ன?”
“என் புருஷன்.. எனக்கு திருப்பி வேணும்..”
“அவர் ஒன்னும் கடைல வாங்குன பொருள் கிடையாது.. வேணும்னா வைச்சுக்குறதுக்கும் வேணாம்னா திருப்பி கொடுக்குறதுக்கும்.. கைல கிடைச்ச வைரத்தை அதோட மதிப்பு தெரியாம, தூக்கிப் போட்டுட்டு போயிட்டீங்க.. இப்ப அவர் எனக்கு மட்டுந்தான் சொந்தம்.. நீங்க வேணா.. அவரோட முதல் மனைவியா இருக்கலாம்.. ஆனா, இப்போ நான் தான் அவரோட மனைவி.. அவர் மேல எனக்கு மட்டும் தான் முழு உரிமையும் இருக்கு..”
“ஏய் என்ன திமிரா?”
“ஆமா.. அப்படித் தான் வைச்சுக்கோங்களேன்..”
“என்னைய விட்டு உன்னைய கல்யாணம் பண்ணவரு.. திரும்ப உன்னைய விட்டுட்டு என்கிட்ட வரமாட்டாருன்னு நினைக்கிறியா? இந்த ஆம்பளைகளோட வீக் பாய்ண்ட் பத்தி உனக்கெல்லாம் தெரியாது.. நீ இன்னும் பச்சக்குழந்தையா தான் இருக்க.. ஒழுங்கா அவனை விட்டுட்டு, உன் வாழ்க்கைய பார்த்து, போயிட்டே இரு..”
“அப்படியா? உங்களுக்கு ஆம்பளைங்களைப் பத்தி ரொம்ப தெரியும் போல! ஆனா, எனக்கு என்னோட விக்ரமைப் பத்தி நல்லாத் தெரியும்.. சோ, ஜோவானாவோட அம்மாவா.. நீங்க எப்ப வேணா எங்க வீட்டுக்கு வரலாம்.. எங்க முன்னாடி அவக்கூட பேசலாம்.. பழகலாம்.. அதுவும் அவ விருப்பப்பட்டா மட்டும் தான்.. ஆனா விக்ரம்.. என்னோட புருஷன்..”
“ப்ளீஸ்.. அழகான குடும்பத்தை உடைச்சுடாத.. ஜோவானாவுக்காக விக்ரமை எனக்கு விட்டுக் கொடு..”
“அதான்.. அவ முடியாது.. நான் அவளோட புருஷன்னு சொல்லிட்டால.. அப்புறமும் எதுக்காக எங்களைப் பிரிக்க முயற்சி பண்ற?” என்றபடியே அவர்களுக்கு பின்னால் இருந்து வந்தான் விக்ரம். அவன் மீட்டிங்கில் இருப்பதை அவனது உதவியாளரிடம் கேட்டு உறுதி செய்துக் கொண்டு தான் நித்யாவைக் காண வந்திருந்தாள் லிசா. ஆனால், விக்ரம் இப்படி வந்து நிற்பார் என்று அவள் சிறிதும் எதிர்பார்க்கவில்லை. நித்யாவை காண லிசா வந்திருக்கின்றாள் என்பதை தனது உதவியாளர் மூலம் கேள்விப்பட்டவன், அடுத்த நிமிடம் அவளைக் காண வந்து நின்றிருந்தான். அப்படி வந்து நின்றவனின் காதில் தேனாக விழுந்தன நித்யாவின் வார்த்தைகள். அவளது தன்னை இம்மியளவும் விட்டுக் கொடுக்காமல் பேசியதை பார்த்தவன், கர்வத்தோடு அவளருகே வந்து நின்றான். 
“விக்ரம்? நான் சும்மா..”
“நீ எதுக்கு வந்துருப்பன்னு எனக்கு நல்லாத் தெரியும்.. நித்யா சொன்னது உனக்கு புரிஞ்சுருக்கும்னு நினைக்குறேன்?”
“எனக்கு உன்கூட.. நம்ம குடும்பமா வாழணும் விக்ரம்.. கடைசியா எனக்கு ஒரு வாய்ப்பு கொடு..”
“இதை மூணு வருஷத்துக்கு முன்னாடி.. நீயும் உன் பொண்ணும் என்னோட வாழ்க்கையை நாசம் பண்ணிட்டீங்கன்னு.. வெளிநாட்டுக்காரனை கல்யாணம் பண்ணிட்டு போனியே.. அப்போ யோசிச்சுருக்கணும்..”
“சாரி விக்ரம்.. சாரி.. ஜோவானாவோட அழுகை, அப்புறம் அடிக்கடி உடம்பு சரியில்லாம போனது, எல்லாம் சேர்ந்து, அப்போ.. ஏதோ டிப்ரஷன்ல அப்படி எல்லாம் நடந்துக்கிட்டேன்.. எனக்கு இன்னும் ஒரு சான்ஸ் கொடு விக்ரம்.. ப்ளீஸ்..”
“நாம பெத்த குழந்தையோட அழுகையை உன்னால பொறுக்க முடியல; அவளை சரியாப் பார்த்துக்க முடியாம, என்கிட்ட விட்டுட்டு உன்னோட சந்தோஷம் தான் முக்கியம்னு எவனையோ தேடிப் போன.. அப்ப நான் உன்னைய தடுக்கலையே.. ஏன்னா.. உன் மேல லவ் இல்ல லிசா.. புரிஞ்சுக்கோ..”
“இவளை நீ எப்படி நம்புற விக்ரம்? என்னதான் இருந்தாலும், இவ ஜோவானாக்கு அம்மாயில்லையே..”
“அம்மா இருந்து நீ என்ன பண்ண? அவ அழுத நேரம் பால் கொடுத்தியா? தாலாட்டு பாடி தூங்க வைச்சியா? கதை சொல்லி சோறு ஊட்டினியா? கைப்பிடிச்சு நடக்க சொல்லிக் கொடுத்தியா? எழுத படிக்க சொல்லிக் கொடுத்தியா? என்னப் பண்ண நீ? ஆனா, இவப் பண்ணா.. என் பிள்ளைக்கு தாயா வான்னு.. நான் கூப்பிடுறதுக்கு முன்னாடியே என் பிள்ளைக்கு தாயா வந்தா.. அவளுக்கு எது பிடிக்கும்? பிடிக்காதுன்னு பார்த்து பார்த்து பண்றா.. நீ சொன்னியே.. அழகான குடும்பம்னு.. அந்த அழகான குடும்பத்தை உருவாக்குனவளே இவ தான்.. நீ எப்போ.. என்கிட்ட டிவொர்ஸ் வாங்கிட்டு, இன்னொருத்தை கல்யாணம் பண்ணியோ, அப்பவே நம்ம ரிலேஷன்ஷிப் முடிஞ்சு போச்சு..சோ, இப்ப நீயா போறியா? இல்ல செக்யூரிட்டிக்கிட்ட சொல்லி, மரியாதையா அனுப்பி வைக்க வா?” என்றவன் நித்யாவின் கையை இறுக்கிப் பிடித்துக் கொண்டு நிற்க, அதனை முறைத்துப் பார்த்த லிசா, கோபமாக அங்கிருந்து சென்றாள். லிசா அங்கிருந்து சென்றதும் நித்யாவை பார்த்த விக்ரம்,
“இப்போ தான் சரியான ட்ராக்குக்கு வந்துருக்க.. நான் உன் புருஷன்னு சொன்னது.. ரொம்ப பிடிச்சுருக்கு.. அதை அப்படியே மனசுல பதிச்சுக்கோ.. என்னைய யார்க்கிட்டேயும் விட்டுக்கொடுத்துடாத.. புரியுதா?” 
“இப்ப உங்களுக்கு என் மேல கோபம் இல்லையே?”
“நான் எப்போ உன் மேல கோபப்பட்டேன்? என்னைய புரிஞ்சுக்கலையேங்குற வருத்தம் தான் உன் மேல இருந்துச்சு..”
“ஐம் சாரி.. நான் உங்களை நம்பாம அப்படி எல்லாம் நடந்துக்கிட்டேன்.. ஐம் சோ சாரி..” என்றவளை அங்கிருந்த சுவற்றின் மேல் சாய்த்து, அவளது இதழ்களின் அருகில் தன் இதழ்களை அவன் கொண்டு செல்ல, அவனது செயலை புரிந்து கொண்ட நித்யா, வெட்கம் கொண்டு தன் கண்களை மூடிக் கொண்டாள். அவளருகே இதழ்கள் இரண்டும் தொட்டுக் கொள்ளும் தூரத்தில்,
“ச்சே.. உங்கம்மாக்கு மட்டும் வாக்கு கொடுக்காம இருந்திருக்கணும்.. இப்போ, ரொம்ப அவஸ்தைபடுறேன்..” என்றவன் புலம்ப, கண்களை விரித்து, அழகாய் புன்னகைத்தவள், சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு, அவனது கன்னத்தில் முத்தமிட, அதிர்ச்சியில் கண்கள் விரிய, அவளைப் பார்த்தான் விக்ரம். 
“நீங்க தான் கொடுக்க கூடாது.. ஆனா, நான் கொடுக்கலாம் இல்லயா?” என்ற நித்யா, அவனது மறுகன்னத்திலும் முத்தமிட்ட மறுநிமிடம், அவளை மேலும் தன்னுள் இறுக்கிக் கொண்டவன்,
“அப்போ.. இங்க கொடுக்கணும்.. கன்னத்துல கொடுக்குற ஸ்டேஜை எல்லாம் நாம தாண்டிட்டோம்.. எங்க இங்க ஒன்னு கொடு..” என்று கூற,
“க்கும்.. நான் மாட்டேன்பா.. எனக்கு வெட்கமாயிருக்கு..” என்றவாறே அவனை விலக்கி விட்டு ஓடியவளை புன்னகையோடு பார்த்திருந்தான் விக்ரம். அடுத்து வந்த ஒரு வாரகாலமும் கேலியும் வெட்கப்புன்னகையுமாய் செல்ல, சட்டென இடியென்று வந்து விழுந்தது லிசாவிடம் இருந்து.. ஜோவானாவை தன்னுடன் வைத்துக் கொள்ள வேண்டி, நீதிமன்றத்தின் மூலம் சம்மன் அனுப்பி வைத்திருந்தாள். அதனை படித்த விக்ரமின் பற்கள், கோபத்தின் காரணமாக, வாயிற்குள் அரைபடுவதை பார்த்த நித்யாவிற்கு பயமாக இருந்தது. 
“யார் பொண்ணை.. யார் கேட்குறது? அவளா.. நானான்னு பார்த்துடுறேன்..” என்றவன் வழக்கறிஞரை பார்த்துவிட்டு வருவதாக கூறிச் செல்ல, அடுத்து என்ன நடக்குமோ? என்ற பயத்தில் உறைந்து போய் அமர்ந்திருந்தாள் நித்யா. வழக்கறிஞரை பார்த்துவிட்டு திரும்பி வந்த விக்ரமின் அருகே வந்த நித்யா, அவனது கலைந்த தோற்றத்தை பார்த்து உள்ளம் நொந்தாள். அவனது கைகளைப் பிடித்து அழைத்து வந்தவள், சோஃபாவில் அமர வைத்து, தானும் அவனை ஓட்டி அமர்ந்து கொண்டாள். அவனது தோளில் தலை சாய்த்து அமர்ந்தவள்,
“என்னால தானே எல்லாம்?” என்றவளை தன்னை நோக்கி திருப்பியவன்,
“லூசுத்தனமா பேசாத.. உன்னைய கல்யாணம் பண்ணலேன்னாலும், அவ இப்படித் தான் கேஸ் போட்டுருப்பா.. தேவையில்லாம எல்லாத்தையும் உன் தலைல எடுத்துப் போட்டுக்காத..” என்றவன், தனது அழைப்பேசி அழைக்கவே, அதனை எடுத்துக் கொண்டு பால்கனிக்கு சென்றவன்,
“வாட்?” என்றவாறு உள்ளே திரும்பி வந்தான். 
 “ஜோ எங்க?” 
“எ.. என்ன?”
“ப்ச்.. ஜோ எங்கன்னு கேட்டேன்?”
“இங்க தான் பக்கத்துல விளையாடிட்டு இருந்தா..” என்றவாறே ஜோவானாவின் அறைக்கு நித்யா செல்ல, அப்போது தடாலடியாக உள்ளே நுழைந்த லிசா, விக்ரமின் சட்டையைப் பிடித்து,
“என் பொண்ணு எங்க? அவளை என்னப் பண்ண? சொல்லு..” என்று கத்த, அதனைப் பார்த்த நித்யா, 
“முதல்ல கையை எடுங்க.. எடுங்கன்னு சொல்றேன்ல..” என்று விசாவை தடுக்க முயல,
“உண்மைய சொல்லுங்க.. உங்க புது பொண்டாட்டியோட நீங்க வாழணுங்குறதுக்காக என் பொண்ணை என்ன பண்ணுவீங்க?” என்று லிசா விக்ரமை பிடித்து உலுக்க, அவளை சந்தேகமாக பார்த்தான் விக்ரம். அவனது பார்வையில் சிறிது தடுமாறினாலும், 
“என் பொண்ணு.. எனக்கு இப்ப வேணும்.. அவளை எங்க கொண்டு போய் விட்டுருக்கீங்க?” என்று அவனைப் பார்த்து தைரியமாக கேட்டவளின் கழுத்தைப் பிடித்தவன்,
“இதை நான் கேட்கணும்.. உண்மைய சொல்லு.. ஜோ எங்க? எனக்கு இப்ப என் பொண்ணு வேணும்..” என்றவன் கர்ஜிக்க,
“சார் நான் சொல்லல.. நான் என் பொண்ணை பத்தி கேட்டா, கொலை கூட பண்ணுவார்னு..” என்று வாசல் புறம் திரும்பி குரல் கொடுத்த லிசா, 
“ப்ளீஸ்.. என் பொண்ணை என்கிட்ட கொடுத்துடு.. நீ வேணா உன் பொண்டாட்டிக்கூட சந்தோஷமா வாழ்ந்துக்கோ.. எனக்கு என் பொண்ணை கொடுத்துடு..” என்று விக்ரமின் புறம் திரும்பி அழுகல் தொடங்க, அதற்குள் வீட்டினுள் புகுந்தனர் போலீஸ் அதிகாரிகள். அவர்களை பார்த்ததும் இன்னும் அதிகமாக அழுகத் தொடங்கினாள் லிசா. அதனைப் பார்த்த பெண் அதிகாரி ஒருவர்,
“சார்.. இங்க பொண்ணை நீங்க தொலைச்சுட்டதா.. உங்க மேல கம்ப்ளைண்ட் கொடுத்துருங்க.. அதுக்காக நீங்களும் உங்க பொண்டாட்டியும் எங்கக்கூட போலீஸ் ஸ்டேஷன் வரைக்கும் வரணும்..” என்று கூற, 
“நாங்க வர்றோம் மேம்.. எங்களுக்கு எங்க பொண்ணு கிடைச்சா போதும்.. இங்க தான்.. வீட்டுக்குள்ளேயும் வெளியேயுமா விளையாடிட்டு இருந்தா.. நான் சமைச்சு முடிச்சுட்டு வந்து பார்த்தா.. காணோம்..” என்று நித்யா அழுதுகொண்டே கூற,
“ஆஹா.. என்னமா.. நடிக்குற பாருங்க மேடம்.. குழந்தை விளையாடிட்டு இருந்துச்சாம்.. இவ சமைச்சுட்டு இருந்தாளாம்.. என்னமா கதை சொல்றா?” என்று அப்பெண் அதிகாரியிடம் கூறியவள், நித்யாவின் புறம் திரும்பி,
“புதுசா.. கல்யாணமான.. உங்க சந்தோஷத்துக்கு என் புள்ள தடையா.. இருக்கான்னு தானே.. அவளை ஏதோ பண்ணிட்டீங்க..” என்று நித்யாவின் அருகில் லிசா செல்ல, நித்யாவை மறைத்தவாறு வந்து நின்று கொண்டான் விக்ரம்.  
“மேடம்.. வாங்க.. போலாம்.. பட், என்னோட மிஸஸ்.. போலீஸ் ஸ்டேஷன் வரமாட்டாங்க.. நீங்க எது கேட்குறதா.. இருந்தாலும்.. என்னைய கேட்கலாம்..” என்றவன் அவர்களுடன் செல்ல தயாராக, 
“டாடிஇஇஇ..” என்றவாறே உள்ளே ஓடி வந்தாள் ஜோவானா. அவளைப் பார்த்ததும் தாவிப் போய் அணைத்துக் கொண்டாள் நித்யா. “அம்மா.. ஏன் அழுகுறீங்க?” என்றவாறே நித்யாவின் கண்ணீரை துடைத்த ஜோவானாவின் முகம் முழுவதும் முத்த மழை பொழிந்த நித்யா, அவளை தனது மாரோடு சேர்த்து அணைத்துக் கொண்டாள். நித்யாவின் மனநிலையை நன்கு அறிந்து கொண்ட விக்ரம், நித்யாவிடம் இருந்து ஜோவானாவை மெல்ல விலக்கியவன்,
“அவளுக்கு பசிக்கப் போகுது.. போய் ஏதாவது சாப்பிடக் கொடு..” என்று அவர்கள் இருவரையும் உள்ளே அனுப்பியவன், காவல் அதிகாரிகளைப் பார்த்து, 
“சார்.. என் குழந்தை காணாம போகலைன்னு இப்ப நம்பறீங்களா?” என்று கேட்க, அப்பெண் அதிகாரியோ, லிசாவின் புறம் திரும்பி,
“ஏன்மா.. இவர் உன் பொண்ணை கடத்தி வைச்சுட்டு உன்னைய மிரட்டுறாருன்னு கம்ப்ளைண்ட் பண்ண.. இப்ப என்னன்னா.. அந்த பொண்ணு டாடின்னு அவரை கூப்பிடுது.. பெத்தவ நீ இருக்கும் போது அந்த பொண்ணை அம்மான்னு கூப்பிடுது.. இங்க என்ன தான் நடக்குது? நீ என்ன எங்களுக்கு வேற வேலையே இல்லைன்னு நினைச்சியா?இனிமே இந்த மாதிரி பொய் சொல்லிட்டு வந்த.. பொது மக்களை தேவையில்லாம டிஸ்டர்ப் பண்ணாதன்னு பிடிச்சு உள்ள போட்டுடுவேன்.. ஜாக்கிரதை..” என்றவர் மிரட்டி விட்டு செல்ல, வீட்டிற்குள் நுழைந்த ஆனந்தை முறைத்துப் பார்த்தாள் லிசா. 
“அக்கா.. நீ பண்ணது ரொம்ப தப்பு.. எதுக்காக ஜோக்குட்டியை என்கிட்ட வந்து கொடுத்து கொஞ்ச நேரம் பார்க்ல விளையாட கூட்டிட்டு போக சொன்ன? இதுக்கு தானா? இவங்களை பிரிக்குறதுனாலயோ.. இல்ல கஷ்டப்படுத்துறதுனாலயோ.. உன்னோட வாழ்க்கை.. உனக்கு திருப்பி கிடைக்காது.. இந்த கோபம் வேணாங்கா.. இன்னமும் உன் வாழ்க்கை.. உன் கைல தான் இருக்கு.. உன்னை தேடி நம்ம வீட்டுக்கு வெளிநாட்டுக்காரர் வந்துருக்காரு.. உன்னோட ஹஸ்பெண்டாம்.. அப்படித்தான் சொல்றாரு.. நீ உன் வாழ்க்கையை வாழுக்கா.. இவங்களையும் நிம்மதியா வாழ விடு..” என்றவன் கூற, தன் தலையை கவிழ்ந்த லிசா, எதுவும் பேசாது அங்கிருந்து செல்ல, 
“சாரி.. விக்ரம்.. அவ சார்பா நான் உங்ககிட்ட மன்னிப்பு கேட்டுக்குறேன்.. அவ அப்படித்தான்.. எதுவும் ஈசியா கிடைச்சுருச்சுனா.. அதை மதிக்கவே மாட்டா.. அதுவுமே அவ கைய விட்டு போயிடுச்சுனா.. அதை திரும்ப வேணும்னு சண்டை போடுவா.. நீங்க அவளைப் பத்தி நினைச்சு கவலைப்படாதீங்க.. அவ உங்கப்பக்கம் இனி எப்பவுமே வராம, நான் பார்த்துக்குறேன்.. அப்படி அவ தொந்தரவு கொடுத்தா.. என்கிட்ட சொல்லுங்க.. நான் பார்த்துக்குறேன்..” என்றவனை விக்ரம் கூர்மையாக பார்க்க, அதனைப் புரிந்து கொண்ட ஆனந்த்,
“இப்பக்கூட ஜோதி தான் லிசா.. திரும்ப உங்களை தொந்தரவு பண்றதா சொன்னா.. லிசா பண்ண எதுவும் எனக்கு தெரியாது.. என்னை நம்புங்க சார்.. ப்ளீஸ்.. வித்யாவும் எனக்கு சிஸ்டர் தான்.. அதுனால நீங்க என்னைய தாராளமா நம்பலாம்..” என்றவனைப் பார்த்து கீற்றாக புன்னகைத்த விக்ரம்,
“நான் உன்னைய ஒன்னுமே கேட்கலையே..” என்றவன் அவனை உள்ளே அழைக்க, 
“இல்ல சார்.. நான் கிளம்புறேன்.. எனக்காக ஜோதி கீழ வெயிட் பண்ணிட்டு இருக்கா..” என்றவாறே ஆனந்த் கிளம்பி வெளியே செல்ல, ஜோவானாவின் அறையை நோக்கி சென்றான் விக்ரம். 
அத்தியாயம் 16
“பாப்பா.. தூங்கிட்டாளா?”
“ம்ம்..”
“அழுதியா?”
“ம்ஹும்..”
“அப்புறம் ஏன் முகத்தை அந்தப் பக்கம் திருப்பி வைச்சுருக்க?”
“ஒன்னுமில்ல.. தூக்கம் வருது..”
“ப்ச்.. பொய் சொல்லாத.. இங்கப்பாரு.. என்னையப் பாருன்னு சொல்றேன்ல..”
“இல்ல வேணாம்..” என்று எழுந்து செல்ல முயன்றவளை தன் கையில் ஏந்திக் கொண்டவன், தங்களது அறைக்குள் சென்றான். நித்யாவை தன் மடியில் அமர்த்திக் கொண்டு அமர்ந்தவன்,
“இவனை எதுக்கு நாம் கல்யாணம் பண்ணிக்கிட்டோம்னு தோணுதா?” என்று கேட்க, அவனது வாயை தன் கையால் மூடினாள் நித்யா. 
“அப்படியெல்லாம் இல்ல.. நீங்களா ஏதாவது சொல்லாதீங்க..”
“அப்போ.. நீ ஏன் அழுகுற? இன்னைக்கு நைட் சர்ப்ரைஸ் கொடுத்து, உன்னோட பர்த் டேவை செலிப்ரேட் பண்ணலாம்னு இருந்தேன்.. பட், நீ தான் ஒரே அழுகாச்சி பிள்ளையா அழுதுட்டே இருக்கியே..” 
“திடீர்னு ஜோக்குட்டியை காணோம்னு தெரிஞ்சதும், எனக்கு உயிரே போயிடுச்சு.. அவளைப் பார்த்ததும் தான் உயிர் திரும்ப வந்துச்சு..”
“எனக்கும் தான்.. இனிமே அவளை ரொம்ப பத்திரமா பார்த்துக்கணும்..”
“ம்ம்..”
“நாளைக்கு கோர்ட்டுல இதையும் ஒரு காரணமா காண்பிச்சு, ஜோக்குட்டியை நம்மக்கூட வைச்சுக்கலாம்னு ஆர்டர் வாங்கப் போறேன்..”
“அவளோட பெத்த அம்மாக்கிட்ட இருந்து பிரிக்குறோமா?”
“அம்மாவா? அவளா? ஹும்.. ஜோ பிறந்ததும், அவளுக்கு பால் கொடுத்தா.. தன்னோட அழகு போயிரும்னு.. கொடுக்காம விட்டா.. அவளை பார்த்துக்க முடியாம, என்கிட்ட டிவொர்ஸ் வாங்கிட்டு போயிட்டா.. அவ ஜோக்குட்டியோட அம்மாவா? பிள்ளையை பெத்தா மட்டும் போதுமா? வளர்க்க வேணாம்?”
“கரெக்ட் தான்..”
“சரி.. அதெல்லாம் விடு.. உனக்கு இனிமே லிசாவைப் பத்தி எந்த கவலையும் வேணாம்.. அவளை நான் பார்த்துக்குறேன்.. இப்ப நீ கண்ணை மூடு..”
“எதுக்கு?”
“கண்ணை மூடுனு சொல்றேன்ல..” என்ற விக்ரம், தன் கைக்குட்டையால் நித்யாவின் கண்ணை மூடி, மெத்தையில் அமர வைத்தான்.
“விக்ரம்.. இன்னும் எவ்வளவு நேரம் இப்படியே உட்கார்ந்துருக்குறது?” என்றுக் கொண்டிருந்தவளின் கைப்பேசி அழைக்க, அதனை தன் கைகளால் துழாவிக் கொண்டிருந்தாள் நித்யா. அவளது கைக்கு எட்டாது, கைப்பேசியை தன் கையில் எடுத்த விக்ரம், அதில் ஒளிர்ந்த ஜோதியின் நம்பரை பார்த்ததும், கைப்பேசியை அணைத்து அருகில் இருந்த மேஜையின் மேல் வைத்தான். 
“இப்போ.. கட்டை அவிழ்க்கப் போறேன்..” என்றவன், அவள் கண்களை கட்டியிருந்த கைக்குட்டையை நீக்க, 
“சர்ப்ரைஸ்..” என்றபடியே அவள் முன்னால் பிறந்த நாள் கேக்கை நீட்டியிருந்தான் விக்ரம். அதனை கண்கள் விரிய பார்த்தவளின் முன்னே வைத்து, மெழுகுவர்த்தியை ஏத்தியவன்,
“ம்ம்.. கண்ணை மூடி விஷ் பண்ணிட்டு, கேக்கை கட் பண்ணு..” என்று கூற, கண்களை மூடித் திறந்தவள், 
“ஃப்ஊஊஊ..” என்று உதடுகளை குவித்து ஊதி, கேக்கை வில்லையாக எடுத்து விக்ரமின் வாயருகே கொண்டு சென்றவள், அவனது கன்னத்தில் தடவி விளையாட, 
“கேக்கை வாயில் தான ஊட்டணும் பேபி.. எதுக்கு இப்படி அபிஷேகம் பண்ண?” என்று கேட்டவன், அவளது முகத்தை தன் முகத்தருகே கொண்டு வந்து,
“நீ தானே பூசின.. அப்ப நீ தான் இதை க்ளீன் பண்ணணும்.. ம்ம்.. கமான்..” என்று சொல்ல, தன் வெண்டைப்பிஞ்சு விரல்களால் அதனை துடைக்க முயன்றவளை தடுத்த விக்ரம்,
“கையால இல்ல..” என்றவன் தன் உதடுகளால் அவளது இதழ்களை உரச, விக்ரமின் கன்னத்தில் சில்லென பதிந்தன நித்யாவின் இதழ்கள். மெல்ல விக்ரமின் முகம் முழுவதும் நகர்ந்து, அவனது முகத்தில் தடவியிருந்த கேக்கை தனது நாவால் துடைத்தவளின் பின்னந்தலை முடிக்குள் கையிட்டு, மேலும் தன் முகத்தோடு ஒட்டி வைத்தவன்,
“உன்னோட ஃபர்த் கிஃப்ட்டை நீ தான் அன்ராப் பண்ணணும..” என்று சொல்ல, தன் கண்களால் பிறந்தநாள் பரிசை அவனது பின்னால் தேடினாள் நித்யா. அவளது முகத்தாடையை தன் கைகளால் பிடித்தவன்,
“என்ன தேடுற?” என்று கேட்க,
“இல்ல.. பர்த் டே கிஃப்ட் எங்க?” என்று இழுத்தாள் நித்யா. 
“பர்த் டே கிஃப்ட்.. உன் முன்னாடி.. இதோ.. உனக்காக ரெடியா இருக்கு.. நீ தான் அதை ஓப்பன் பண்ணணும்..” என்றவன் அவளது கையை எடுத்து தன் நெஞ்சில் தைத்து அழுத்தினான். அவனது மேற்சட்டை பட்டனை தன் கைகளால் அவள் நீக்க, அவளை தன் கைகளில் அள்ளிக்கொண்டு அவள் மீது படர்ந்தான் விக்ரம். அவனது வேகத்திற்கு ஈடு கொடுக்க முடியாமல், காற்றிலாடும் கொடியாக திணறினாள் நித்யா. காதலில் கரை உடைந்து ஓடும் காட்டாற்று வெள்ளமாக மாறிய விக்ரம், தன்னோடு பின்னிப்பிணைந்து கொண்டிருக்கும் நித்யாவை மொத்தமாக சூறையாடினான். ஒரு ஆணின் தேடல் ஐந்தே நிமிடங்களில் முடிந்து விடுமாம்.. ஆனால் காதல் கொண்ட ஆண்மகனின் தேடல்? ஜென்ம ஜென்மமாய் தோடறுமோ?! எத்தனை முறை அவளை தனக்குள் நிறைத்துக் கொண்டாலும், தனது ஆன்மதாகம் தீராது, மீண்டும் மீண்டும் அவளை நாடினான் விக்ரம். காதல் என்பதென்ன? திருமணத்தில் வெற்றி பெறுவதா காதல்? மனதோடு மனம் இணைத்து, ஆன்மாவில் நிறைத்து, உடலையும் தாண்டி, உயிரோடு உயிர் கூடும் தேடலே காதல்.. தன் தேவதைப்பெண்ணை அணுவளவும் விலகாது, அவளையும் விலக விடாது, தன் உயிரை.. தன் உயிருக்குள் தேடினான் விக்ரம்.. உயிர் கூடும் தேடலுக்கு முடிவேது? தன்னால் கலைத்து, குறைந்திருக்கும் ஓவியப் பெண்ணை அள்ளி தன் மீது போட்டுக் கொண்ட விக்ரம்,
“என் அகத்திணை நீயடி.. 
முட்களாய் கடந்த வாழ்க்கையை
பூக்களாய் மாற்றிய தேவதை நீ..
காதலற்று பாலைவனமாய் கிடந்த 
என் வாழ்க்கையை
சோலைவனமாய் மாற்றிய தாரிகை நீ..
நீ எந்தன் தவத்தின் வரமடி..
உன்னைப் போல் மகவை வேண்டுமடி..
ஒன்றல்ல.. ஓராயிரம்..” என்றவாறே அவளது நெற்றியில் நிறைவாக முத்தமிட, முகில் மறைத்த பிறையாக, தன் மன்னவனின் மார்பில் முகம் புதைத்துக் கொண்டாள் நித்யா. காதலென்பது.. ஒரு மனதுடன் வாழும் இரு உடல்கள்.. இதுதான் காதல்.. காதலுக்குள் கற்புண்டு.. ஞானமுண்டு.. தாய்மையுண்டு.. காதலில் மறைந்திருக்கும் அன்பு, மிருகத்தையும் மனிதனாக்கும்.. காதலுள்ள மனிதனுக்கு வாழ்வு வரமாகும்.. வாழும் வாழ்க்கையை அழகாக அனுபவித்து வாழ வேண்டுமென்றால் ஒவ்வொரு நொடியும் காதலோடு வாழுங்கள். காதல் என்பது உடல் சார்ந்தது அல்ல மனம் சார்ந்தது. வாழ்க்கையில் காதல் இருந்தால் வாழ்வு ருசிக்கும். காதலின் சுகம் மிகவும் அலாதியானது. இரு மனம் சேர்ந்தது மட்டும் காதல் இல்லை, உணர்ச்சிகள் நிறைந்த இதயங்களின் ஓசை தான் காதல். விக்ரமின் மனதில் காதலால் இசை மீட்டும் நித்யாவை வாழ்த்தி நாமும் விடைபெறுவோமாக! 
**************** சுபம்***************************

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *