என்னைக் கொண்டாட பிறந்தவனே(ளே)
அத்தியாயம் 6
ஆதவன் செங்கதிர்களால் அறையில் ஒளி பரப்ப அதனை உணராத இருவரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தனர்.
காலிங் பெல் விடாமல் அடித்தது. மெல்ல கண் திறந்தவன் யார் இந்த நேரத்தில் வந்திருப்பது என்ற யோசனையுடன் கதவை திறக்க சங்கவி நின்றிருந்தாள்.
சங்கவியை கண்டதும் அதிர்ச்சி அடைந்தவன் அவளை உள்ளே அழைக்கக் கூட தோன்றாமல் சிலை போல் நின்றான்.
“உள்ளே கூப்பிட மாட்டீங்களா?” அவனது முகத்தை பார்க்க…
தன்னிலை அடைந்தவன் வா… வா… சங்கவி… “என்ன இவ்வளவு தூரம்? அதுவும் இத்தனை காலையில்….”
உங்க நியாபகமாகவே இருந்தது அதுதான். “நான் வந்தது பிடிக்கவில்லையா? ” முகத்தை சோகமாக வைத்து கொண்டு கேட்க….
அய்யோ… அப்படியெல்லாம் இல்லை…. உட்கார் காபி கொண்டு வரேன்… என்றபடி சமயலறையில் நுழைந்தவன் குறுக்கும் நெடுக்கும் நடக்க ஆரம்பித்தான்.
ஐயோ… இன்னைக்கு செத்தடா கதிர்… புலி வருது… புலி வருது… என்று பயந்ததற்கு இன்று வந்தே விட்டது. எது நடக்க கூடாதுன்னு பயந்தேனோ அது நடந்துவிட்டது… இவ வெளியே வந்தால் அவ்வளவுதான் அதற்கு முன்னர் நாமே சொல்லிவிட்டாள்.
சொல்லிவிடுவதே சரி என நினைத்தவன் காபி கலந்து கொண்டு வெளியே வரவும்…, ” கதிர் ஒரு காபி ப்ளீஸ்…” அனு வரவும் சரியாக இருந்தது.
அடிப்பாவி… கரெக்ட்டா வராலே… அனு தூக்க கலக்கத்தில் இருந்ததால் சங்கவியை கவனிக்கவில்லை. கதிர் முழிப்பதை கண்டவள் “இவனுக்கு என்னாச்சு… திருட்டு பூனை மாதிரி முழிக்கிறான்.”
சங்கவியோ அனுவின் தோற்றத்தில் அதிர்ந்தாள். அவளது தலை கலைந்து, உடை முழங்காலுக்கு கீழே சற்று கிழிந்து காணப்பட்டது.
அவனது பார்வை சென்ற திசையில் பார்த்தவள் சங்கவியை கண்டதும் ஓஓ… இவள்தான் சங்கநெறியா?
சங்கவி அதிர்ந்து நிற்பதை பார்த்தவள் ஹாய் நீங்க சங்கவி தானே? நைஸ் டூ மீட் யூ… கையை நீட்டினாள். ஆனால் சங்கவிதான் இதற்கு எப்படி ரியாக்ட் செய்வது என தெரியாமல் திருத்திருந்தாள்.
அனுவே அவளது கையை பிடித்தவள் “ஏன் நிக்கிறீங்க? உட்காருங்க… அவளை அமரவைத்த அனு கதிர் அவங்களுக்கு காபி கொடுங்க..” ஆரப்போகுது மிகவும் சகஜமாக பேசினாள்.
“என்னை உங்களுக்கு தெரியுமா?” ஓஓ… தெரியுமே…. கதிர் உங்களை பற்றி நிறைய சொல்லிருக்காங்க…”
கதிர், “இங்க என்னடா நடக்குது…. இவள் பெயரை கேட்டாலே இவளுக்கு கோபம் வரும் இன்று கட்டி கட்டியா ஐஸை தூக்கி வைக்கிறாளே…”
என்னை வேறு அவரு… இவரு.. சொல்றா… இவள் இத்தனை நல்லவள் எல்லாம் இல்லையே…. மனதோடு நினைத்தவன் சங்கவியிடம் காபியை நீட்டியவன் அவளது அருகில் அமர்ந்து கொண்டான்.
இருவருக்கும் தனிமை கொடுத்து சமயலறைக்கு வந்த அனு… ” பசி உயிர் போகுதே…. காபி வேறு போடதெரியாது… என்ன பண்ணலாம்? ” சமையல் மேடையை சுற்றி பார்த்தவள் காபி கப்பை பார்த்ததும் போன உயிர் திரும்ப வர அதனை எடுத்து குடித்துவிட்டாள்.
காபி குடித்தும் பசி அடங்கவில்லை அவளுக்கு…. ஓட்ஸை எடுத்து பாலில் கலந்து உண்ண ஆரம்பித்து விட்டாள்.
கதிர் என்ன பேசுவதென்று புரியாமல் அமர்ந்திருக்க சங்கவி… இவங்கதான் உங்க அத்தை பொண்ணா? ம்ம்ம்… அவங்க ட்ரெஸ் ஏன் கிழிந்து இருக்கு? சந்தேகத்துடன் கேட்க..
காதலியாக இருந்தாலும் ஏனோ அவளிடம் உண்மையை கூற பிடிக்கவில்லை… பின்னர் அதற்கும் தேவை இன்றி ஆயிரத்தெட்டு கேள்வி வரும் என நினைத்தவன் ஒரு சின்ன ஆக்ஸிடென்ட் என்று மட்டும் கூறினான்.
சங்கவியோ மனதில் அவளது தோழியை தாளித்து கொண்டிருந்தாள். நேற்று நடந்த பங்க்சனுக்கு வந்த சங்கவி தோழி, அணுவும், கதிரும் சண்டை இடுவது அவளுக்கு சற்று தொலைவில் இருந்து பார்க்கும்போது மிக நெருக்கமாக தோன்றியது. அதன் பின்னரும் கதிர் அனுவை தொடர்ந்து செல்வதை பார்த்தவள் உடனே சங்கவிக்கு தெரிவித்து விட்டாள்.
தன் தோழி கூறியது உண்மையா? என அறியவே இங்கு வந்தது. ஆனால் அதை அனைத்தையும் ஒன்றும் இல்லாமல் செய்து விட்டாள் அனு.
அனுவுக்கு தன்னை முன்னரே தெரிந்திருக்கிறது என்றதுமே அவள் மேல் இருந்த சந்தேகம் விலகி விட்டது. இருவருக்கும் தனிமை கொடுத்து விலகி சென்றது மேலும் நன்மதிப்பை அவள் மீது ஏற்படுத்தியது.
ஓகே கதிர் நான் கிளம்புறேன்… இந்த வீக் எண்ட் சந்திப்போம் என விடைபெற்று சென்றுவிட நிம்மதி பெருமூச்சுடன் அனுவை தேடி சென்றான்.
மங்கையவளோ ஓட்ஸை ஒரு வெட்டு வெட்டிக்கொண்டு இருந்தாள். அவளிடம் இருந்து அதனை பிடுங்கியவன் உண்டவாறே என்ன அனு ஏதாவது பூதம் உள்ளே புகுந்துவிட்டதா? ஷாக்கு மேலே ஷாக்கா கொடுத்து என்ன சாச்சுட்டியே…
டேய் கொஞ்சம் அடங்கு எதையும் காரணமில்லாமல் இந்த அனு செய்ய மாட்டாள். உன் ஆளுக்கு மதிப்பு கொடுத்தது, நாளைக்கு என் ஆளுக்கு நீ மதிப்பு கொடுக்கணும் என்பதற்காகத்தான்.
அப்புறம் உனக்கு மரியாதை கொடுத்தது சங்கநெறி உன்னிடம் சாமி ஆடக்கூடாது என்பதற்குத்தான். என் மேல் அவ்வளவு அக்கறையா? உன் மேல் யாருக்கு அக்கறை… அவள் வந்ததே நம்மை சந்தேக பட்டுத்தான்… அவளிடம் போய் சொல்லு இந்த தீஞ்சு போன பிரியாணி அந்த கத்தரிக்காய் கொத்சுக்குதான்.
போடி… நீயே ஆசைப்பட்டாலும் நான் உன்னை கட்ட மாட்டேண்டி…. அடப்போடா…. பத்து பதினைந்து கேர்ள் பிரென்ட் வச்சுறுகிற உன்னை நானும் கட்டமாட்டேன் …. நடக்காததை பற்றி வீணா பேசாமல் என்னை கொண்டுபோய் ஹாஸ்டலில் விடு…
இந்த தீஞ்சுபோன பிரியாணி தற்போது கோபமாக இருப்பதால் தாங்களே செல்லுமாறு கேட்டுக்கொள்ள படுகிறீர்கள்…. ஐ ஹேட் யூ… என்றவள் ஆட்டோ பிடித்து சென்றுவிட்டாள்.
ஒரு மாதம் எந்த வித மாற்றம் இன்றி சென்று கொண்டிருந்தது. அனு இடையில் ஊருக்கு சென்று விட்டு வந்தாள்.
ஊரில் இருந்து வந்ததும் முதலில் சந்திக்க சென்றது கதிரைத்தான்.
என்னை பார்க்காமல் உன்னால் இருக்க முடியலையா? குரலில் குழைவுடன் கேட்டவனை முறைத்தவள் உன்னுடைய ஜாலத்தை என்னிடம் காட்டாதே….. நான் ஒன்றும் சங்கவி இல்லை…. நான் வந்த விஷயம் வேறு.
நீ மாமாவுக்கு பணம் அனுப்புவதில்லையா? அப்பா எதுவும் சொன்னங்களா…? நான் கேட்பதற்கு முதலில் பதில் சொல்லு என்றவளிடம் கணக்கை ஒப்பித்தான்.(பின்னர் சங்கவிக்கு வாராவாரம் செலவு செய்வதையா சொல்ல முடியும்) அடப்பாவி முப்பத்தாயிரத்துக்கும் அசராமல் கணக்கு சொல்றானே? இவனை… பல்லை கடித்தவள் ஏண்டா மனுஷனடா நீ… ம்ம்ம்… மனுசனா இருக்க போய்தான் இவ்வளவு செலவு… நக்கலுடன் உறைத்தவன் இதை கேட்கத்தான் வந்தியா?
இல்லை… என தலையாட்டியவள் எனக்கு பத்தாயிரம் வேண்டும்… உனக்கு எதுக்கு இவ்வளவு பணம்… என்கிட்ட இல்லை… என்றவனை பரிதாபமாக பார்த்தாள்.
அவளது பார்வையை உணர்ந்தவன் நடிக்காதடி…. தெரியுதுள்ள பணம் கொடு… எதற்கு?… நாலு பேப்பர் அரியர்….
அரியர்… என்றதும் எங்கிருந்துதான் அத்தனை கோபம் வந்ததோ… படிக்காம என்னடி பண்ற…. ஹாஸ்டலில் படிக்காம சாப்பிட்டு சாப்பிட்டு தூங்கிரயா? உன்னை கொண்டு வந்து இங்க சேர்த்தாங்க பாரு அவங்களை சொல்லணும்… தெண்டம்…. தெண்டம்… பொரிந்து தள்ள இவனே எய்த் பெயில் இவன் எல்லாம் உன் நிலைமை ஆகிவிட்டதே அனு… தாங்குவோம்…. என அவனை பார்த்தவள் கண்ணில் அவளுக்கு பிடித்த ஹிந்தி சீரியல் ஓட கண்களை சிமிட்டாமல் அதில் லயித்து போக…. தான் இவ்வளவு திட்டு திட்ரோம்… இவ எதை பார்க்கிறாள்…. அவள் கண்கள் சென்ற திசையை பார்த்தவன் அனு…. உச்சஸ்தாயில் கத்த…. அனுவேதான்… அதற்கென்னடா இப்ப… அவளது தலையில் நறுக்கென்று கொட்டி டீவியை நிறுத்தினான்.
செம்ம… கிஸ்… ஹீரோ அழகோ அழகு… அப்பாகிட்ட சொல்லி இப்படி ஒரு மாப்பிள்ளையை பார்க்க சொல்லணும் என்று கனவுலகில் மிதந்தாள்.
கொஞ்சம் கிளம்புறீங்களா மேடம் நான் வேலைக்கு போகணும்… என்றவனின் குரலில் நனவுலக்கு வந்தவள் இவன் எப்ப கிளம்பினான்… அய்யோ… எனக்கு பணம்… அந்த ஹீரோ கொடுப்பார் வெறுப்புடன் கூறியவன் முன்னால் நடக்க அவனது கையை பிடித்தவள் ப்ளீஸ்டா அப்பாவுக்கு தெரிஞ்சா திட்டுவாறு…. அது அரியர் வைக்கிறதுக்கு முன்னாடி யோசிச்சிருக்கணும்…. இப்ப யோசித்து என்ன பண்ண…. போடி கொடுக்கமுடியாது…. கொடுக்கமாடியா? ம்ம்ம்ம்…. அப்ப சரி நான் இனிமேல் உன்கூடவே தங்கிக்கிறேன்… வீட்டு சாப்பாடாவது கிடைக்கும் என்று கூறியவளிடம் நீ ஏன் இங்கே தங்கனும் ஹான்… நீ பணம் கொடுக்கல அதனால் ஹாஸ்டல் பீஸை அரியருக்கு கட்ட வேண்டியதுதான் வேறு வழி சாவியை கொடுத்துட்டு போ… இன்னைக்கே வந்துவிடுகிறேன்…. அவள் கூறியதும் அவனுக்கோ சங்கவி நியாபகம் வர தானாக அவளது கையில் பணத்தை கொடுத்தவன் இரு கரம் கூப்பி இந்த பக்கம் மட்டும் வந்து விடாதே தாயே… தயவு செஞ்சு கிளம்பு காத்து வரட்டும்.
அவன் கதவை அடித்து சாத்துவத்திலேய அவனது கோபத்தின் அளவு அனுவுக்கு புரிந்தாலும் உடலில் ஒட்டிய அட்டையாக அவனது பைக்கில் ஏறியவள் காலேஜில் விட்டுவிடு என்று கூற ” உன்னை பள்ளத்தில் தாண்டி தள்ளனும்…” மனதில் பொரிய நீயும் தாண்டா சேர்ந்து விழுவ… அவனது காதில் கூற அவளது மேனி தன் மீது உரசியதும் அவளது இதழ்கள் காது மடலை உரசி அவனை பெரும் அவஸ்தைக்குள்ளாக்கியது….
தள்ளி உட்காருடி…. “ஏண்டா உன் ஆள் ஏதாவது சொல்வாளா?” ச்ச்… பேசாமல் வா இல்லை இறக்கிவிட்டு நான் போய்க்கொண்டே இருப்பேன் சற்று கடுமையுடன் கூற அமைதியாகிப்போனாள். அவளுக்கு எங்கே தெரியப்போகிறது அவளை தவிர அவனது பைக்கில் யாரும் பயணித்ததில்லை என்று ஏன் கதிரே இதை உணரவில்லை.
சங்கவியும் ஒரு நாளும் அவனோடு பைக்கில் செல்ல முற்பட்டதில்லை அவளுக்கு கார் பிடிக்கும் என்பதால் அவனை கார் வாங்க சொல்லி நச்சரித்தாள். தனது பொருளாதார நிலை கருதி அவன் வாங்கவில்லை என்றாலும் அவனுக்கு அதில் விருப்பமும்மில்லை.
அவனது உடை, விலை உயர்ந்த பைக் பார்த்தவள் அவன் பணக்காரன் என்று நினைத்துக்கொண்டாள். அத்துடன் சென்ட்ரல் கவர்ன்மெண்ட் வேலை வேறு குறைந்தது ஒரு லட்சம் சம்பளம் வாங்குவான் வீட்டுக்கு ஒற்றை பிள்ளை என்று நினைத்து கொண்டிருக்கிறாள். உண்மையில் அவனது பொருளாதார நிலை அறிய வரும்போது அவளது முடிவு என்னவாக இருக்கும்…..?
குமார் குழுவினர் செய்த ப்ராஜெக்ட் வெற்றி பெற்றதால் நட்சத்திர விடுதியில் விருந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
முதன் முறை வருவதால் அதனை ஒரு வித பிரம்மிப்புடன் குமார் பார்த்திருக்க அமீத் அவனை ஏளனப் பார்வையுடன் பார்த்தவன் கன்றி ப்ரூட்…. பட்டிக்காடு…. என்றவாறே மற்றவர்களுடன் அளவளத்துக்கொண்டிருந்தான்.
என்ன குமார்… அப்படியே பிரமிச்சு பார்க்கீறீங்க…. உதயாவின் தேன் குரலில் திரும்பியன் அசந்து நின்றான். முதல் முறை சேலை அணிந்து வந்திருக்கிறாள். சிவப்பு வண்ண டிசைனர் புடவையும், அதற்கு தகுந்த ஒப்பனையுடன் தன் எதிரே ஆளை மயக்கும் புன்னகையுடன் நின்றவளை கண்டவன் மனமோ இப்போதே காதல் கூறி ஆளில்லாத இடத்திற்கு தூக்கி சென்று விட மனம் பரபரத்தது.
“அழகா இருக்கேனா? ” சேரி… நல்லா இருக்கா? ஒரு சுற்று சுற்றி காட்ட முந்தானை முகத்தில் பட சுற்றும் போது தெரிந்த வெற்றடையில் பார்வை பதிய கணவுலகத்தில் மிதக்க ஆரம்பித்தான்.
அவனது நிலையை அறிந்தவளுக்கு வெட்கம் தோன்றி கன்னங்கள் செவ்வானனமாய் சிவந்துவிட அது மேலும் அவளது அழகை மெருகேற்ற அவளது வெட்கத்தை கண்டவன் ஆணாய் கர்வம் கொண்டான்.
மனம் இப்போதே காதலை கூறிவிடு இவள் உன்னவள் உனக்காகவே பிறந்தவள் என்று முரசு கொட்ட ஆரம்பிக்க…. உதயா… ஐ…. என்று கூற வந்தவனை இடையிட்டது வாவ்… யூ ஆர் லுக்கிங் வெரி கார்ஜியஸ்…. உதயா…. என்ற அமித்தின் குரல்.
அத்தனை நேரம் இருந்த இனிமையான சூழ்நிலை மாற குமார் அமித்தை முறைத்து கொண்டிருந்தான்.
இங்கே ஏன் நிக்கிறீங்க? வாங்க போகலாம் என்று உதயாவின் கரம் பற்ற வர தனது கையை இழுத்தவலோ நீங்க போங்கள் அமீத் நான் வருகிறேன் என்று நாசுக்காக மறுத்தவளை வம்படியாக அழைத்து செல்ல குமாரை திரும்பி பார்த்தவாரே சென்றவளை வலியுடன் பார்த்துக்கொண்டிருந்தான்.
அவனது பார்வையும் அதில் இருந்த பொருளும் புரிந்தாலும் எப்போதடா அவனது காதலை கூறுவான் என்றிருந்தது. அவளது மனதில் கடலளவு காதலும் ஆசையும் இருந்தாலும் பெண்களுக்கே உரிய வெட்கமும் தயக்கமும் அவளை கூற விடாமல் தடுத்தது. அத்துடன் அவளது உண்மை நிலை அறிந்தால் நிச்சயம் தன்னை திருமணம் செய்ய தயங்குவான் என்பதை அறிந்தே அமைதி காத்தாள்.
தீடிரென அங்கே சலசலப்பு ஏற்பட கம்பெனியின் எம்டி சந்திரசேகர் உள்ளே நுழைந்தார். மேனேஜர் வரவேற்க அனைவரும் எழுந்து கை தட்ட மேடையேறி அனைவருக்கும் வணக்கம் தெரிவித்தவர் ப்ராஜெக்டை வெற்றிகரமாக முடித்ததற்கு வாழ்த்து கூறினார்.
ஹாய் ஹைஸ் உங்களுக்கு இன்னொரு முக்கியமான விஷயம் கூறப்போகிறேன் நாளையில் இருந்து இந்த கம்பெனியை புது எம்டி வழி நடத்துவார்கள் என்று கூற புது எம்டியா?
கம்பெனி நல்ல லாபத்தில் தானே போகிறது… யாருக்கும் விற்று விட்டார்களா? ஒரு கூட்டம் யோசிக்க புது எம்டி நம்மை எப்படி வழி நடத்துவார்…. ரொம்ப டெரரா… இருந்தால் என்ன செய்வது…. ஓபி அடிப்பவர்கள் ஒரு புறம் யோசித்து கொண்டிருந்தனர்.
பெண்களோ எம்டி ஆணா? பெண்ணா? ஆணாக இருந்தால் கடவுளே ஹான்சம் ஆன ஆளை அனுப்பு எல்லாம் வத்தலும் சொத்தலுமா இருக்காங்க? ப்ளீஸ் காட் கடவுளிடம் அவசர விண்ணப்பம் வைத்தனர்.
லெட்ஸ் வெல்கம் அவர் நியூ எம்டி… அனைவரும் ஆர்வத்துடன் வாயிலை பார்க்க மிஸ் உதயா சந்திரசேகர் என்றதும் அவனைவர் முகமும் வியப்பும் ஆச்சர்யமும் காட்ட இருவரோ உச்ச பட்ச அதிர்ச்சியில் இருந்தனர். ஒருவன் அமீத் மற்றொருவன் குமார்.
குமாரை ஓர விழியால் பார்த்தவலோ அவனது அதிர்ச்சி கலந்த பார்வையும் இத்தனை நாட்கள் தன்னை காதலுடனும் ஆர்வத்துடன் பார்த்த கண்கள் சற்று முன்னர் கூட தனது அழகில் மயங்கி தாபமும், காதலும் போட்டிபோட்டு தன்னை பார்த்த கண்கள் தற்போது அந்நியத்தன்மையுடன் பார்த்தப்பதை கண்டு மனம் வலிக்க சிறு புன்னகையுடன் மேடை ஏறியவள் அனைவருக்கும் வணக்கம் தெரிவித்து தந்தை அருகில் நின்றாள்.
உதயாவை கண்டு அனைவருக்கும் வியப்பும் ஆச்சர்யமும் ஒருங்கே தோன்றியது. கம்பெனியின் முதலாளியாக இருந்தும் ஒருநாள் கூட தனது நிலையை வெளிப்படுத்தவில்லை தங்களை அதிகாரம் பண்ணவில்லை.
சந்திரசேகர் நாளையில் இருந்து உதயா அவர்கள் பொறுப்பை எடுத்துகொள்வார்கள் நிச்சயம் இது உங்களுக்கு அதிர்ச்சியும் சற்று ஆச்சர்யமாகவும் இருக்கும் உதயா உங்களில் ஒருவராக இருந்து இந்த கம்பெனியை நல்ல நிலைக்கு கொண்டு வருவார் என்ற நம்பிக்கை இருக்கு என்று மகளை பார்க்க உதயா மனமோ குமார் இதனை எவ்வாறு எடுத்துக்கொள்வான் என்றே மனம் உழன்றது.
உதயா…. செய்வாய்த்தானே… நிச்சயம்பா என்று தந்தையை கட்டிக்கொண்டாள்.
அனைவருக்கும் பபே முறையில் உணவு இருக்க அனைவரும் என்ஜாய் பண்ண ஆரம்பித்தனர். குமாருக்கோ மனம் ஒரு நிலையில் இல்லை தன்னுடைய காதல் முளையிலேயே கிள்ளி எரிந்ததை போல் உணர்ந்தவனுக்கு உயிரை வேரோடு பிடுங்கியது போல் வலித்தது.
உதயாவிற்கும் தன் மேல் ஆர்வம் இருப்பது தெரிந்தாலும் அவளது வசதிக்கு தான் அவள் மீது ஆசை கொள்வது தவறு என்றே தோன்ற அங்கிருந்து உடனே புறப்பட்டுவிட்டான்.
அவன் செல்வதை உதயா பார்த்தாலும் தந்தை அருகில் இருக்கும்போது அவளால் ஒன்றும் செய்யமுடியவில்லை. நாளை ஆபிசில் பேசிக்கொள்ளலாம் என்று நினைத்தாள்.
உதயா… ஆர் யூ ஓகே… தந்தை கேட்கவும் இவ்வளவு அப்படமாகவா தெரிகிறது என்று உணர்ந்தவள் சட்டென்று இயல்புக்கு திரும்பி ஐ அம் ஓகேப்பா… தீடிரென எம்டி என்று கூறவும் கொஞ்சம் அதிர்ச்சி அவ்வளவுதான்… என்று சமாளித்தாள்.
