என்னருகில் தேன் நிலா
நிலா – 06
கண்களைப் பறிக்கும் அளவிற்கு அத்தனை அழகையும் தன்னகத்தே சுமந்து கொண்டு பிரமாண்டமாக காட்சி அளித்தது அருணின் வீடு.
அருணின் ட்ரைவரோ அவளை வீட்டின் முன் இறக்கி விட, ரோஜாவோ அவன் வீட்டைப் பார்த்து ஆச்சரியத்துடன் மெது மெதுவாக நடந்து வீட்டின் வாசல் படியை அடைந்தாள்.
உள்ளுக்குள் ஒருவிதமான தயக்கம் பிறந்தது.
வீட்டினுள் யாரேனும் இருக்கிறார்களா என சற்று எட்டிப் பார்த்தாள்.. யாரையும் காணவில்லை.
‘உள்ளே போவதா இல்லையா..? யாரை அழைப்பது..? யாரேனும் வரும் வரை இங்கேயே காத்திருப்பதா..?’ என தனக்குள் சிந்தித்தவாறு உள்ளே நுழைய முயலாமல் அப்படியே வாயிலில் நின்றாள் அவள்.
திருமணத்திற்கு முன்னரே இந்த வீட்டினில் தங்குவதை எண்ணி சங்கடம் கொண்டாள் அவள்.
அதே கணம் கம்பீரமான தோற்றத்துடன் படியில் இருந்து கீழே இறங்கி வந்து கொண்டிருந்த அருணோ வீட்டு வாயிலில் ரோஜா நின்றவாறு சுற்றி முற்றிப் பார்த்துக் கொண்டிருந்ததைப் பார்த்து கடும் கோபம் அடைந்தான்.
‘இந்தப் பட்டிக்காடு இங்க எதுக்கு வந்திச்சு…? நம்ம அக்ரிமென்ட் பத்தி பிரச்சனை பண்ண வந்திருப்பாளோ…? இத தாய்க்கிழவன் பார்த்தான்னா சங்குதான்.. இவ பட்டிக்காடேதான்… இருடி உனக்கு வர்றேன்.’ என மனதில் எண்ணிக்கொண்டு வேகமாக வாசல் கதவை நோக்கி வந்தவன் அவளைப் பார்த்து பொரியத் தொடங்கினான்.
“டாமிட்…” என்ற குரலில் ரோஜாவுக்கோ தூக்கிவாரிப் போட்டது.
“ஏய் பட்டிக்காட்டுக் கழுத.. இங்க ஏன்டி வந்த..? உன்ன யாரு இங்க வர சொன்னா..? உனக்கு அறிவே இல்லையா…? வெளியே போடி… யாரும் பாக்குறதுக்கு முன்னாடியே போயிரு…” என கோவமாக கத்தினான் அருண்.
“என்னங்க… கொ.. கொ… கொஞ்சம் நான்…” என பேச முற்பட்டாள் ரோஜா.
ஆனால் அவனோ அவளைப் பேச விடவே இல்லை.
“வெளிய போன்னு சொன்னேன்… என் கண் முன்னாடி நிற்காத.. இல்ல பல்ல கழட்டி கைல கொடுத்துருவேன். போடி வெளியே..” என ஆக்ரோஷத்துடன் கூறினான் அவன்.
இவனுடைய அதட்டலில் அவளின் உடலே ஆட்டம் கண்டது. அவளோ ஒரு அடி கூட எடுத்து வைக்க முடியாமல் தவித்தாள். அவனுடைய வார்த்தைகள் அவள் மனதை கிழிக்க, அதற்கு மேல் தாங்க முடியாது மெல்ல குனிந்து பைகளை கையில் எடுத்து நிமிர்ந்தாள் ரோஜா.
அந்நேரம் அவ்விடத்திற்கு வந்த ஆதர்சனாவோ ரோஜா அங்கே இருப்பதைப் பார்த்ததும்
“அம்மா…..அம்மா….” என சத்தமாக அழைத்தாள்.
அருண் சட்டென ஆதர்ஷனா அருகில் சென்று அவளுடைய வாயை மூடினான்.
“ஏய் கத்தாதடி….”
“ம்ம்…. ம்ம்… ம்ம்…..” என ஏதோ சொல்ல முயன்றாள் ஆதர்ஷனா. ஆனால் ஆதர்ஷனா வாயிலிருந்து அருண் கையை விலக்கவே இல்லை. அவனோ தன் கண்களினால் ரோஜாவை போ என அச்சுறுத்தினான்.
அதே கணம் ஆதர்ஷனாவோ வேகமாக அருணின் கையைப் பிடித்து தள்ளினாள்.
“என்னாச்சுண்ணா உங்களுக்கு..? ஏன் என் வாய மூடுறீங்க..? நான் நம்ம வீட்டுக்கு வரப்போற அண்ணியைப் பாத்துட்டு அம்மா கிட்ட சொல்லத்தான் அம்மாவை கூப்பிட்டேன் அதுக்கு ஏன் என்ன தடுக்கிறீங்க…” எனக் கேட்டாள் ஆதர்ஷனா
“அவ என்ன பார்க்கத்தான் இங்கே வந்துருக்கா.. நான் அவகிட்ட பேசிட்டேன். இத அம்மாகிட்ட எல்லாம் சொல்லிகிட்டு இருக்காத.” எனக் கூறி சமாளிக்க முயன்றான் அருண்.
“அவங்க ஒன்னும் உன்னைப் பாக்க வரல அண்ணா… இன்னைக்கு மார்னிங் ஹாஸ்பிடல் போனப்ப நம்ம அப்பாதான் அவங்கள இன்னைக்கு நம்ம வீட்டுக்கு வர சொன்னாரு… இனி அவங்க இங்க தான் ஸ்டே பண்ணுவாங்க…”
“என்ன….? என்ன சொல்ற நீ?? நீங்க எல்லாரும் என்ன மெண்டல் பேமிலியா? வெடிங் இன்னுமே முடியல… அதுக்குள்ள இங்க வர சொல்லி இருக்கீங்க…” என அருண் கேட்டான்.
“அதெல்லாம் எனக்குத் தெரியாது.. அப்பாதான் இங்க வர சொன்னாரு… நீ சைடாகு….. வாங்க அண்ணி உள்ள வாங்க.” என ஆதர்ஷனா கூறியவாறே அவள் கையைப் பிடித்து உள்ளே அழைத்துச் சென்றாள்.
ரோஜா அருணை பார்த்தவாறே உள்ளே சென்றாள். அருண் ரோஜாவை எரிச்சலுடன் பார்த்தான்.
‘இவங்க எல்லாம் ஏன் இப்படி இன்டீசென்ட்டா நடந்துக்குறாங்களோ தெரியல.. அதோட எவ்வளவு பணக்கார வசதியான பொண்ணு இருக்கு அதெல்லாம் விட்டுட்டு இப்படி ஒரு பட்டிக்காடாதான் கல்யாணம் கட்டி வைக்கனுமா நினைச்சாலே வெறுப்பா இருக்கு… ஏதாவது செஞ்சு தொலையட்டும்… இந்தத் தாய்க்கிழவன் கிட்ட இருந்து வந்து சொத்தை எப்படியாவது வாங்கிட்டோம்னா நமக்கு அது போதும்.’ என மனதில் நினைத்துக் கொண்டான்.
ரோஜாவுக்கு தனியாக ஒரு அறையைக் கொடுத்தவர்கள் அவளை ஆதர்ஷனாவைப் போலவே அன்புடன் பார்த்துக் கொண்டிருந்தனர்.
இயல்பாக அனைவருடனும் பொருந்திப் போகும் குணம் கொண்ட ரோஜாவும் சட்டென அவர்களோடு ஒட்டிக் கொண்டாள்.
பழகிய சில மணி நேரங்களிலேயே அருணைப் போல அவனுடைய குடும்பம் இல்லை என்பதை உணர்ந்து கொண்டாள் அந்த மாது.
அவள் தன் குடும்பத்தோடு இழைவதைக் கண்ட அருணுக்கோ பொறுமை மறைந்து போனது. இரவு நேரம் வரும் வரை காத்திருந்தவன் இரவு பத்து மணி அளவில் ரோஜாவின் அறைக்குள் யாரும் அறியாது நுழைந்தான்.
அதே நேரம் ரோஜாவோ தான் அணிந்திருந்த சுடிதாரை கழற்றிவிட்டு மெல்லிய நைட்டி ஒன்றை எடுத்து அணிந்து கொண்டிருந்த தருணம் அருண் கதவைக் கூடத் தட்டாது உள்ளே நுழைந்து விட, பதறிப் போனாள் அவள்.
சட்டென தன் கையில் இருந்த நைட்டியை வைத்து தன் மார்பை மூடியவாறு திரும்பி நின்றவளுக்கோ உள்ளம் பதறியது.
“வெ… வெளியே போங்க….” சீறினாள் அவள்.
அருணும் திகைத்துப் போனான். கதவைத் தட்டிவிட்டு வந்திருக்கலாமோ என எண்ணியவனுக்கு உள்ளாடையுடன் தென்பட்ட அவளுடைய பளிங்கு முதுகு அவன் புருவங்களை உயரச் செய்தது.
அவளுடைய இடையின் வளைவின் நளினத்தைப் பார்த்து லயித்துப் போனவன் அவளை மெல்ல நெருங்கி முன்னேற ரோஜாவின் நிலையோ மோசமாகிப் போனது.
சட்டென தலை வழியாக தன் கையில் இருந்த நைட்டியை அணிந்து கொண்டாள் அவள்.
கரங்கள் நடுங்கின. அருண் மீது வார்த்தைகளால் வடிக்க இயலாத அளவிற்கு சீற்றம் பெருகியது.
அருணோ அவளை நெருங்கி அவளுடைய தோளை அழுத்தமாகப் பற்றியவன் அவள் அணிந்திருந்த நைட்டியின் சிப்பினை இழுத்து மூடிவிட அவளுக்கோ முகம் வெளிறிப் போனது.
வேகமாக திரும்பி அவனுடைய கன்னத்தில் அறைந்துவிட வேண்டும் போல கரங்கள் பரபரத்தன.
சட்டென அவனைத் தள்ளி விட்டாள் ரோஜா. அதில் சுயநினைவை அடைந்தவன் அவளை முறைத்தான்.
“ஏய் பட்டிக்காட்டுக் கழுத.. இவங்க கூப்பிட்டதும் பல்ல இழிச்சுக்கிட்டு வந்துருவியா? உனக்கு மூளை இல்லையா? அறிவு கொஞ்சம் கூட இல்லையா? எதையுமே யோசிக்க மாட்டியா…? அவங்க கூப்பிட்டா நீ வர முடியாதுன்னு சொல்ல வேண்டியதானே இடியட்… பணக்கார வாழ்க்கை கிடைச்சா என்ன வேணும்னாலும் பண்ற உனக்கு எங்க அறிவு இருக்கப்போது…? நீ தான் பட்டிக்காடாச்சே.” என்ற அருணின் வார்த்தைகள் ரோஜாவை வெகுவாகத் தாக்கின.
“கதவைத் தட்டிட்டு வரணும்னு உங்களுக்குத் தெரியாதாங்க…?” என பட்டென முகத்தின் முன்னரே ரோஜா கேட்டு விட, அருணுக்கோ முகம் நொடியில் மாறிப் போனது.
“இது எங்க வீடுடி… நான் எதுக்கு கதவைத் தட்டி உன்கிட்ட பர்மிஷன் கேட்கணும்..?”
அவளுக்கோ பெருமூச்சே வெளிப்பட்டது.
“நா.. நான் வர்றேன்னு சொல்லலைங்க.. மாமாதான் என்ன கட்டாயப்படுத்தி வரச் சொன்னாரு… அதோட தாத்தாவும் வந்தே ஆகணும்னு உத்தரவு போட்டாரு.. அவங்க பேச்சை மீற முடியலை.. அதனாலதான் வந்தேன்…” என உணர்வுகள் துடைத்த குரலில் கூறினாள் அவள்.
“சரி விடு…. இனி நான் சொல்றதை மட்டும்தான் நீ பண்ணணும்… அவங்களுக்கு மரியாதை எல்லாம் நீ கொடுக்கக் கூடாது. அவங்க சொல்றத கேட்கக் கூடாது… எப்பவுமே அவங்க சொல்றதுக்கு எதிர்மறையாதான் நீ நடந்துக்கணும்.. அவங்க எவ்ளோ அன்பை உன்மேல கொட்டினாலும் கூட நீ அவங்ககிட்ட பாசமா நடந்துக்கக் கூடாது… இனி நீ பண்ற ஒவ்வொன்னையும் எனக்கிட்ட கேட்டுதான் பண்ணனும்.. நான் சொன்னதைப் பண்ணலைன்னா உங்க அம்மாக்கு ட்ரீட்மென்ட் நடக்காது..” எனக் கூறினான் அருண்.
“ஐயோ கடவுளே…!!! அப்படியெல்லாம் சொல்லாதீங்க…. எனக்கு எங்க அம்மாதான் முக்கியம்… நான் நீங்க சொல்ற மாதிரியே நடந்துக்கிறேன்.” என கலங்கிய குரலில் கூறினாள் அவள்.
“வெரி குட்…. வெல்கம் டூ மை ஹோம்…” என்றவன் அவளுடைய கன்னத்தில் வழிந்த கண்ணீரை தன் பெருவிரலால் அழுத்தி துடைத்தான்.
“அழகாதான் இருக்க…” என முணுமுணுத்தன அவனுடைய உதடுகள்.
அவளுடைய இதயமோ தொண்டை குழிக்குள் வந்து துடிக்கத் தொடங்க, அவளைப் பார்த்து இமை சிமிட்டியவன் அடுத்த கணமே அந்த அறையை விட்டு வெளியேறிச் சென்றிருந்தான்.
*******
திருமணநாள் அன்று..!!
அவன் யாரென்று நான் அனைத்தும் அறிவேன்.
என் குணம் எதுவென்று அவனும் அறிவான்..
இருவருக்கும் இரு வேறு தேவை.
சொத்துக்காக அவனும் என் சொத்தான தாய்க்காக நானும்.
திருமணம் எனும் புனித பந்தத்தில் இணையப் போகும் இந்தப் புள்ளி முற்றுப் புள்ளிதானோ..?’ என தனக்குள் எண்ணியவாறு அழகே உருவாக அமர்ந்திருந்தாள் ரோஜா.
அவர்களுடைய குல தெய்வ ஆலயத்தில் இறைவன் சன்னதிக்கு முன் அருண் மாலையும் கழுத்துமாக ரோஜாவின் அருகே அமர்ந்திருந்தான்.
‘என்னோட ப்ரண்ட்ஸ் யாரும் நான் இந்த பட்டிக்காட்டை கல்யாணம் பண்றத பார்த்துடக் கூடாது.’ என மனதில் நினைத்துக் கொண்டான் அவன்.
ரோஜாவோ இளஞ்சிவப்பு நிறத்தில் தேவதை போல அழகில் மிளிர்ந்தாள். அந்த அழகை எண்ணி பெருமிதம் கொள்ளும் நிலையில் அவளும் இல்லை. அவளுடைய அழகை ஆராதிக்கும் நிலையில் அவனும் இல்லை.
புரோகிதரோ இறைவனுக்கு பூஜை செய்து முடித்து விட்டு அருணின் கையிலும் ரோஜாவின் கையிலும் மாலையை கொடுத்து மாற்றிக்கொள்ளச் சொன்னார்.
அருண் மாலையை வாங்கியவன் சட்டென ரோஜாவின் கழுத்தில் வீசுவது போல போட்டான்.
“டேய் என்னடா பண்ற.” அதட்டினார் பத்மநாதன்.
‘கிழவன் ஆரம்பிச்சுட்டான். சே…’ என மனதில் எண்ணிக் கொண்டவன் அவரிடம் இருந்து பார்வையைத் திருப்பிக் கொள்ள, ரோஜாவோ மாலையை கையில் வைத்துக் கொண்டு அவளின் நிலையை எண்ணி சிந்தித்துக் கொண்டிருந்தாள்.
ஆதர்ஷனாவோ “என்ன அண்ணி யோசிக்கிறீங்க..? மாலையை அண்ணா கழுத்தில் போடுங்க… உங்க அம்மாவுக்கு நான் இப்போ வீடியோ கால் எடுத்து காட்டுறேன். நீங்க எதையும் யோசிக்காம மாலையை போடுங்க…. நாங்க எல்லாரும் இனி உங்க கூட தானே இருப்போம்.” என ஆறுதலாக சில வார்த்தை துளிகளை உதிர்த்தாள்.
ஆதர்ஷனாவைப் பார்த்து புன்னகை பூத்தவள் மெதுவாக மாலையை அருணின் கழுத்தில் போட்டாள்.
அடுத்தடுத்த சடங்குகள் வேகமாக நடந்து முடிய தனக்குள் மருகிக் கொண்டிருந்தாள் ரோஜா.
இத்தனை காலம் என் உயிர் காத்த என் தாய் உயிர் காக்க நான் தெரிந்தே செய்யும் பிழை இது… சொத்தாசை பிடித்த மாபாதகன் எனத் தெரிந்தும் நான் இந்த மாங்கல்யத்தை ஏந்துவது என்னுடைய தாயின் உயிருக்காக மாத்திரமே என எண்ணிக் கொண்டவள் தன் தலையை குனிந்தாள்.
அருண் அந்த மாங்கல்யத்தை கையில் வாங்கியதும் ரோஜாவின் முகத்தை சில நொடிகள் உற்றுப் பார்த்தான் ஏனோ அந்த தாலி கணப்பதைப் போல தோன்றியது அவனுக்கு.
தன்னுடைய ஆசைகளை எல்லாம் குழி தோண்டி புதைத்து விட்டு அவளுடைய கழுத்தில் தாலியை அணிவித்தான் அவன்.
இறுதியாக இருவரும் பெரியவர்கள் காலில் விழுந்து ஆசீர்வாதம் கோயிலில் வைத்து சடங்கு சம்பிரதங்களை முடித்துக் கொண்டு வீட்டுக்குச் சென்றார்கள்.
சடங்குகளை எல்லாம் வெறுப்போடு செய்து முடித்தவன் அனைத்தும் முடிந்து அவள் முதலிரவு அறைக்குள் நுழைந்ததும் அவனோ தாத்தாவின் அறையை நோக்கி வேகமாக சென்றான்.
“தாத்தா தாத்தா” என அழைத்தவாறு தன்னரைக்குள் வந்து நின்ற அருணை பார்த்து எழுந்து கொண்டார் பத்மநாதன்.
“சொல்லுடா பேராண்டி… புது மாப்பிள்ளை என்ன இந்த நேரத்துல என்னைத் தேடி வந்திருக்க….?”
“நீங்கதானே சொன்னீங்க… நீங்க பார்க்கிற பொண்ண நான் கல்யாணம் பண்ணா சொத்த என் பேருல எழுதி வைக்கிறேன்னு அதுதான் அத பத்தி பேசிட்டு போகலாம்னு வந்தேன்.” எனக் கூறினான் அருண்.
பத்மநாதனின் முகமோ சட்டென இருண்டு போனது.
“ஆமா அருண் நான்தான் சொன்னேன்… அதுக்கு என்ன இப்போ….?”
“எனக்கு நீங்க சொத்தை எழுதி கொடுத்துட்டா நல்லா இருக்கும் தாத்தா... இனி நான் எங்க லைஃபையும் பாக்கணும்… அதோட புதுசா பிஸ்னஸ் பண்ணலாம்னு இருக்கேன். சோ சொத்தை என் பேர்ல எழுதி எப்போ தருவீங்கன்னு கேட்க வந்தேன்.” எனக் கூறினான் அருண்.
அவரோ “நீ அப்பாவானதும் எழுதி வைக்கிறேன்..” என்றார் சிறு கேலி நகைப்புடன்..!!
💜💙💙💜
