எனக்கெனவே நீ பிறந்தாய்
காலையில் விழித்த வன்ஷி தன் மார்பின் மேல் உறங்கும் தன் ஆசை மகனை ரசித்தவள் அவன் நெற்றியில் முத்தமிட அவன் தூக்கத்திலேயே சிரித்தான். அவனை மெத்தையில்
உறக்கம் களையாதவாறு கிடத்தியவள்
எழுந்து குளித்து தன்னை சுத்தப்படுத்தி கொண்டு தயார் ஆகியவள் இன்னும் விழிக்காமல் உறங்கி கொண்டிருக்கும்
தன் மகன் அருகில் அமர்ந்தா
உறங்கும் போது குட்டி கண்ணனை போல துயில் கொண்டிருக்கும் தன் ஆசை செல்வதை அனு அணுவாய்
ரசித்துக்கொண்டிருந்தாள் மடந்தை. நேரத்தை கவனித்தவள் அவனை மெதுவாக எழுப்பினாள்.
வன்ஷி: செல்லகுட்டி எழுந்திரிங்க.
டைம் ஆகிடுச்சு. பட்டு பையன் இப்போ எழுந்து சமத்த அம்மா கிட்ட குளிச்சிட்டு
குட் பாய்யா சாப்பிட்டா அம்மா ஈவினிங்
செல்லக்குட்டிய வெளியகூட்டிட்டு போவேன்.
அவள் பேச ஆரம்பிக்கும் போது சிணுங்கி கொண்டே எழுந்து அவள் தோளில் முகம் புதைத்தவன் அவள் பார்க்கிற்கு அழைத்துச் செல்வேன் என்று கூறியவுடன் விழிவிரித்துப் பார்த்தான்.
பின் தன் அரிசிப்பல் தெரிய கன்னகுழியுடன் அழகாய் சிரித்தவனை முத்த மழை பொழிந்து பாத்ரூம் தூக்கி சென்றவள் அவனை
குளிக்க வைக்க ஆரம்பித்தாள்.
வெந்நீர் மேலே பட்டவுடன் துள்ளி குதித்தவன் குளித்து முடிப்பதற்குள் தன் தாயை ஒரு வழி செய்துவிட்டான்.
அவள் சோப்பை எடுத்து தேய்ப்பதற்குள் அவள் மேல் முழு நீரையும் ஊற்றிவிட்டான். அவள் அவனுக்கு ஆயில் மசாஜ் செய்ய சென்றால் அவளிற்கு முன்பு அவள் மேல் ஷாம்புவை ஊற்றிவிட்டான்.
இது தினமும் நடக்கும் ஒன்று தான்.
என்னதான் அவள் வெளியே இறுகிய முகத்துடன் வலம் வந்தாலும் வீட்டீற்குள் தன் தந்தையிடமும், மகனிடமும் அவ்வாறு இருக்க முடியவில்லை. தன் இறுகிய குணம் தன் மகனை எவ்விதத்திலும் பாதிக்காதவாறு பார்த்துக்கொண்டாள்.
ஒரு பெரிய அக்கப்போரு செய்து
அவன் தாயிடம் குளித்து முடித்தவனை டவலில் சுற்றி தூக்கி கொண்டு வந்தவள் அவன் தலையைதுவட்ட அவன் தலையில் உள்ள நீர்துளிகளை அவள் மேல் இறைதான். அவனுக்கு கீச்சுகீச்சு மூட்டி அவனுடன் விளையாடி அவனை தயார் செய்து அவனுடன் கீழே இறங்கினாள்.
அவள் கீழே வர வேலையாட்கள் அவளுக்கு வணக்கம் தெரிவிக்க தலையை மட்டும் அசைத்து அதை ஏற்றுக்கொண்டாள். அங்கு சூர்யாவிற்காக காத்துக்கொண்டிருந்த ராகவன் தன் பேரனை அள்ளிக்கொண்டார்.
சூர்யா: தாதா (தாத்தா)நான் எப்பியும் போத (போல)அம்மாவ மதுபதியும் (மறுபடியும்)குதிக்க(குளிக்க) வச்சிட்டேன் என்று துள்ளி குதித்து சூர்யாவை அப்படியா செல்லம். உங்க அம்மாவ டெய்லியும் ரெண்டு தடவ என் செல்லக்குட்டி குளிக்க வைக்குறிங்களா?என்று கேட்டு
அவன் கன்னத்தில் முத்தமிட்டார்.
பதிலுக்கு தன் தாத்தா கன்னத்தில் முத்தமிட்டவன் ஆமா ஆமா என்ன துள்ளினான். இதனை சிறு சிரிப்புடன்
பார்த்துக் கொண்டிருந்த வன்ஷி அவனை தன் மடியில் அமர்த்தி பாட்டிலில் உள்ள பாலை அவனுக்கு புகட்டினாள்.
சூர்யா: ம்மா மில்க் வேணா. நா குதிக்க (குடிக்க) மாட்டேன்.
ஏக்கு ( எனக்கு )பிதிக்கல(பிடிக்கல).
வன்ஷி: செல்லம் மில்க் குடிச்சா தான நீங்க சூப்பர் மேன் மாதிரி ஆகுவீங்க.
எல்லாரையும் டிஸ்யூம் டிஸ்யூம் பன்ன முடியும்.
அவளை கண்கள் விரிய பார்த்தவன்
அப்பிதியா என்று கேட்க ஆமாடா செல்லம். அதனால இப்போ நல்ல பையனா மில்க் குடிங்க பாக்கலாம் என்று அவனை தாஜா செய்து அவனுக்கு பாலை புகட்டினாள்.
பின்பு அவனிற்கு உணவு ஊட்டியவள்
தன் தந்தையுடன் சேர்ந்து உணவை
உண்டுவிட்டு தன் மகனை தன் தந்தையின் பாதுகாப்பில் விட்டுவிட்டு
தன் கம்பெனிக்கு காரில் பறந்துவிட்டாள்.
***********************
ஆராத்யாவுடன் கம்பெனிக்குள் மாறன் நுழைய அனைவரும் மரியாதை நிமித்தமாக அவனுக்கு வணக்கம் கூறினர். புன் சிரிப்புடன் அதை ஏற்றுக்கொண்டவன் தன் அறையினுள் நுழைந்தான்.
ஆராத்யா: சார் டுடே D.V இண்டஸ்ட்ரீஸ் சி.இ.ஓ மிஸ் தேவான்ஷி கூட பத்து மணிக்கு மீட்டிங் இருக்கு.
தேவான்ஷி என்ற பெயரை கேட்டவுடன் அவன் முகத்தில் ஒரு தேஜஸ் தெரிய முகம் முழுக்க பல்லாய் ஓகே ஆருமா.
நீ ஏன் பத்து மணிக்கு மீட்டிங் ஃபிக்ஸ் பன்ன?.இப்போவே பன்னிருக்கலாமே
என்று அவசர குடுகையாக வாயை கொடுக்க மிஸ்டர் அண்ணா அவர்களே
என் வருங்கால அண்ணிய பாக்குறதுக்கு நீங்க இவ்ளோ அவசரபட
கூடாது என்று காலைவாரினாள் ஆராத்யா.
மாறன்: ஆருகுட்டி ஆயிரம் இருந்தாலும் நா உன்னோட அண்ணன்டா. இப்டி நீ என்னோட மானத்தை வாங்க கூடாது.
ஆராத்யா: சரி சரி. ரொம்ப கெஞ்சாத. மீட்டிங்கு ரெடி ஆகு. அவங்களே இங்க வந்து உன்ன மீட் பன்றங்களாம். அவங்க பி.ஏ இன்பார்ம் பன்னாரு.
எது பன்னாரா? அப்போ ஜானுவோட
பி.ஏ ஒரு பையனா? முன்னாடி ஒரு பொண்ணு தான இருந்துச்சு.ஓய்
இதை ஏன் நீ என் கிட்ட முன்னாடியே சொல்லல. அவன் யாருன்னு சொல்லு. அவன் கைய கால ஓடச்சி போடறேன். என்று எகிறினான் மாறன்
அய்யோ அண்ணா. அவங்க பி.ஏ வேற யாரும் இல்லை. அவங்களோட பெஸ்ட் பிரெண்ட் தியாஷ் தான். ஏற்கனவே இருந்த பொண்ண அண்ணி வேலையவிட்டு தூக்கிட்டங்கலாம்.
இப்போ அவங்க பிரெண்ட் தான் அந்த வேலையில இருக்காரு. போதுமா?
ஈஈஈஈஈ போதும் செல்லக்குட்டி. என் தங்கச்சினா தங்கச்சி தான். என் பட்டுக்குட்டி என்று அவளை செல்லம் கொஞ்ச போதும் போதும் சீக்கிரம் ரெடி ஆகு. நா போய் பைல்ஸ் செக் பன்னி எடுத்துட்டு வரேன் என்று கூறி விட்டு அறையை விட்டு வெளியேறினாள் ஆராத்யா.
மாறனிற்கு தேவான்ஷியின் மீது காதல்.அவனின் காதலுக்கு வயது மூன்று ஆண்டு. அவள் கல்லூரியில் பயிலும் போதே அவள் மீது காதல் வயப்பட்டவன் அவள் படிப்பு கெடக்கூடாது என்று அவன் காதலை மனதிற்குள் மறைத்து வைத்தான்.
இப்பொழுது அவள் ஒரு குழந்தைக்கு தாய் என்பதை அறிந்த பின்னும் அவள் மீது பைதியமாய் சுற்றி கொண்டிருக்கிறான். தன் அண்ணன் அவள் மீதி உயிராய் இருப்பதை தெரிந்து கொண்ட ஆராத்யா அவன் காதலுக்கு பச்சை கொடி காட்ட அன்று முதல் தன் காதல் தேவதையை பற்றி ஆராத்தியாவிடம் பகிர்ந்து கொள்வான்.
இங்கு இவன் இவ்வாறு இருக்க அவள் அவன் காதலை ஏற்று கொள்வாளா?
********************
தீரன்: டேய் மச்சா நீ அந்த D.V இண்டஸ்ட்ரீஸ் எம்.டியோட பொண்ணு தேவான்ஷி பத்தி என்ன நினைக்குற?
ரித்தேஷ்: ஏன்டா திடீர்னு இப்படி கேக்குற?
என்றவனின் கேள்விக்கு தீரன் ஒரு மார்க்கமாய் சிரித்தான்.
விக்னேஷ்: என்னடா முடிவு பன்னிட்டியா? நெக்ஸ்ட் டார்கெட் அவ தானா?
அதற்கும் அவன் சிரிப்பையே பதிலாக தர மதன், டேய் இப்போ எதுக்கு இந்த கேள்விய கேட்ட? இப்போ எதுக்கு சிரிக்கிற?என்னடா பன்ன போற?
எனக்கு தலையே வெடிச்சிரும் போல இருக்கு என்றான்.
தீரம்: இல்லடா ரொம்ப நாளாவே எனக்கு அவ மேல ஒரு கண்ணு இருந்துட்டே இருக்கு.
நம்ம கிட்ட இப்போ டெய்லி வாராளுங்களே அவளுங்கள விட இவ சூப்பர் ஃபிகர்டா. இவள மட்டும் மயக்கி என்னோட வலைல விழவச்சிட்டேன்னு வை. அப்ரோ தினமும் எனக்கு மஜா தான்
விஷ்வா: டேய். ஆனா அவ ஒரு செகண்ட் ஹாண்ட் யூஸ்டு பீஸ்டா. அவளுக்கு ஏற்கனவே கல்யாணம் ஆகி ஒரு குழந்தை இருக்கு. போயும் போயும் அவளையா செலக்ட் பன்ன நீ?
தீரன்: டேய் அவள பார்த்த கல்யாணம் ஆகி குழந்தை பெத்தவ மாதிரியா இருக்கா? அவ செம்ம ஸ்டர்க்ச்சர் டா.
அவ மட்டும் எனக்கு கிடைச்சிட்டா
எனக்கு தினமும் நைட் ஹ்ம்ம் ஹ்ம்ஹ்ம் தான் என்று கேவலமாக யோசித்தது
அந்த மிருகம்.
விக்னேஷ்: டேய் மச்சா அதெல்லாம் ஓகே தான். ஆனா அவ ரொம்ப திமிரு புடிச்சவ, பிடிவாதம் அதிகம், கோவம் அதிகமா வரும் மொத்ததுல அவ ஒரு லேடி ரோபோர்ட் டா
தீரன்:டேய் அதுவாடா முக்கியம். நம்மளுக்கு கரரெக்டா ஒத்துழைக்குறாளா? அது தான் முக்கியம்.
ரித்தேஷ்: அப்போ நீ அவ தான்னுக்கு ஃபிக்ஸ் பண்ணிட்ட. இனிமே உன் முடிவ யாராலும் மாத்த முடியாது.
அப்போ மச்சா நீ மட்டும் யூஸ் பன்னிக்க போறியா? இல்ல எங்களுக்கு ஷேர் பன்னினுவியா
என்று கேவலமாக கேள்வி எழுப்பினான் மதன்.
அதெப்படி மச்சா நா மட்டும் பன்னுவேன்.நீங்க என்னோட தோஸ்துடா. உங்கள விட்டுட்டு இதுவரைக்கும் எவளையாவது நா
தொட்டுருக்கேனா? அப்படி இருக்கும் போது இவள மட்டும் நா தனியா யூஸ் பன்னிக்குவேனா? நீ கவலை படாத மச்சி. ஹீக்குவளா ஷேர்
பன்னிக்கலாம் என்றது அந்த ஓநாய்.
அவனின் பேச்சை கேட்டு ஆர்ப்பரித்து சிரித்தது மற்ற நரி கூட்டம்.
இவர்களை பார்த்து விதியும் சிரித்தது.
************************
D.V industries,
தியாஷ்: மேம், மீட்டிங்கு எப்போ கிளம்பலாம்னு நீங்க சொன்னா நா அரேஞ்சுமெண்ட்லா கரரெக்டா இருக்கானு கேட்டுக்குவேன் மேம்.
தேவான்ஷி: யெஸ் தியாஷ். இப்போவே கிளம்பலாம். சில விஷயங்கல தள்ளி போடக்கூடாது. சீக்கிறமாவே முடிச்சிறனும் என்று அவள் இரட்டை அர்த்தத்தில் கூற தியாஷிற்கு ஒன்றுமே விளங்கவில்லை.
ஓகே தியாஷ். கிளம்பலாம் என்று கூறி எழுந்தவள் கூலரை மாட்டிக்கொண்டு தன் வழக்கமான இறுகிய முகத்துடன்
வேக வேகமாக அறையை விட்டு வெளியேறினாள்.
காரில் சென்று கொண்டிருந்தவள் மனதில் “வரேன்டா. உன்ன அழிக்குறதுகாக வந்துகிட்டே இருக்கேன். உன்னோட சாவு ரொம்ப தூரத்துல இல்ல தேவமாறுதன்”
என்று வெறி கொண்ட பெண் சிங்கமாய் உரும்பிக்கொண்டாள்.
இங்கே தன்னவளுக்காக காதல் கொண்ட இதயத்துடன் காத்துகொண்டிருக்கிறான் ஆண்மகன்.
அவளோ பழிவெறியுடன் அவனைநெருக்குகிறாள்.
பழிவெறி வெற்றி பெறுமா? காதல் கொண்ட இதயம் வெற்றி காணுமா?
விடை……………………?
பழி வெறி படலம் தொடரும்……….
