எச்சி ஊற வைக்கும் எலுமிச்சை சாதம்..ம்ம்ம்..

Simple lunch????
Lemon rice with potato fry ????

???? எலுமிச்சை சாதம்????
தேவையான பொருட்கள்

சாதம். : 2 கப் (உதிரியாக சமைத்தது)
எலுமிச்சை. : 1
பச்சைமிளகாய். : 1(பொடியாக நறுக்கவும்)
இஞ்சி. : சிறுதுண்டு(பொடியாக நறுக்கவும்)
மஞ்சள்தூள். : 1/2 டீஸ்பூன்
கடுகு. : 1 டீஸ்பூன்
உளுந்து. : 1 டீஸ்பூன்
மிளகு. : 1/2 டீஸ்பூன்
கடலைப்பருப்பு. : 2 டீஸ்பூன்
கறிவேப்பிலை. : சிறிது

செய்முறை

1. எலுமிச்சை பழத்தை பிழிந்து சாறு எடுத்து அதனுடன் மஞ்சள்தூள் மற்றும் சிறிது உப்பு சேர்த்து ஐந்து நிமிடம் வைக்கவும்.

2. கடாயில் இரண்டு டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் கடுகு உளுத்தம்பருப்பு கடலைப்பருப்பு மிளகு சேர்த்து தாளித்து அதில் நறுக்கிய பச்சைமிளகாய் இஞ்சி மற்றும் கறிவேப்பிலை சேர்த்து நன்றாக வதக்கவும்.

3. இதனுடன் உதிரியாக சமைத்த சாதத்தை சேர்த்து நன்றாக கலந்து அதனுடன் எலுமிச்சைச் சாறு கலந்து நன்றாகக் கிளறி விடவும்.

4. இறுதியில் ஒரு டீஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி நன்றாக கலந்து பரிமாறவும்.

5. தேவைப்பட்டால் வறுத்த முந்திரி மற்றும் நிலக்கடலை சேர்த்துக் கொள்ளலாம்.

????????????????????????????????????????????????????????????

Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *