நான் எழுதப் போகும் விஷயம் 99 விழுக்காட்டுப் பெண்களின் வாழ்வில் நடந்திருக்கும். பெண்களும் நாம் இப்படித்தான் என்று மனதில் பதித்துக் கொண்டிருப்பர்.
இது அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த விஷயம் இல்லை என யாரும் பெரிதாக எடுத்துக்கொள்ள மாட்டோம். அது என்னவெனில் பெண்களின் உடலைப்பற்றி விமர்சனங்கள். உடனே இதை ஆண்கள் செயவர் என்று அவர்கள் பக்கம் பாய வேண்டாம்.
ஒரு பெண்ணின் உடல் பற்றிய விஷயங்களில் முதலில் கருத்துக் கூறுவது நம் வீட்டில் உள்ள பெண்கள் தான். ” பாடி சேமிங்” என்ற விஷயம் அங்கிருந்துதான் ஆரம்பிக்கிறது. உதாரணத்திற்கு வீட்டில் அம்மாவே சொல்வார்கள் ” உன் மார்பகம் பெரிதாக உள்ளது . சாலை நன்றாக போடு. ” ” நீ இவ்வளவு குண்டா இருந்தா உன் புருஷன் உன்னை விட்டுட்டு வேற ஒரு பெண்ணைத் தேடி போயிடுவான்.” இப்படி நிறைய நடந்திருக்கும்.
மேற்சொன்னவை எல்லாம் உண்மையில் நடந்தவை , நடந்து கொண்டிருப்பவை தான்.
ஆனால் இந்த மாதிரி விமர்சனங்களைக் கேட்ட பிறகு கேட்பவர்களின் மனநிலை எப்படி இருக்கும். எங்கு சென்றாலும் ஒருவித அசகவுரியத்தை உணர்வர். தன் உடல் அப்படி உள்ளதோ ? இப்படி உள்ளதோ ? நம்மை யாரவது தவறாகப் பாரக்கிறார்களா ? ஒரு வித பாதுகாப்பற்ற தன்மை , தன்னம்பிக்கை குறைவை உணர்வார்கள்.
தங்களுடைய சுயத்தில் வலுவை இழக்கத் தொடங்குவார்கள். குண்டாக , ஒல்லியாக , அதிக உயரமாக , உயரம் குறைவாக இருப்பதில் தவறொன்றும் இல்லை.
உங்களுடைய உடலமைப்பில் எந்த வித குறையுமில்லை. அதற்காக உடல் பருமனாக இருந்தால் எந்த பிரச்சகனையும் இல்லையா எனக் கேட்கலாம். ஆம் பிரச்சினைகள் ஏற்படும். ஆனால் ஒரு சிலரின் உடல்வாகே பருமனாகத்தான் இருக்கும். அதை மாற்றுவது சிறிது கடினம்.
ஒல்லியாக உள்ளவர்களுக்கு எந்த வியாதியும் வராது என்ற நிச்சயமும் இல்லை.
இவ்வாறு உடல் பற்றிய கருத்துகள் மனநலத்தை சிறிது சிறிதாக பாதிப்பவை. பிறர் சொல்லும் விமர்சனங்களை கண்டு கொள்ளாமல் உங்களுக்கு எது நல்லதோ அதைச் சிந்தித்து செயல்படுத்தி தன்னம்பிக்கையை வளருங்கள்.
உங்களைக் காதலியுங்கள்.
உலகம் உன்னோடுதான்
இப்படிக்கு
மீ.ரா
