உயிரோவியம் எனக்காகத் தான்

உயிரோவியம் எனக்காகத் தான்

உயிரோவியம் எனக்காகத் தான்

உயிரோவியம் எனக்காகத் தான்

உயிரோவியம் எனக்காகத் தான்

உயிரோவியம் எனக்காகத் தான்

உயிரோவியம் எனக்காகத் தான்

உயிரோவியம் எனக்காகத் தான்

உயிரோவியம் எனக்காகத் தான்

உயிரோவியம் எனக்காகத் தான்

உயிரோவியம் எனக்காகத் தான்

உயிரோவியம் எனக்காகத் தான்

உயிரோவியம் எனக்காகத் தான்

உயிரோவியம் எனக்காகத் தான்

உயிரோவியம் எனக்காகத் தான்

உயிரோவியம் எனக்காகத் தான்

உயிரோவியம்- 26

அது.. அமர்நாத் தேசிகனுக்கென்று மாத்திரம் சொந்தமான குட்டித்தீவு!!

அந்தமான் தீவுகளுக்கு அருகாமையில்.. பத்தாயிரம் ஏக்கர் பரப்பளவு கொண்டு… நாலாபக்கமும்… சமுத்திரம் சூழ்ந்த நிலையில் அமைந்திருந்தது அத்தீவு!! 

அத்தீவின் சிறப்பம்சமாக… நடுவிலே பெரும் பெரும் மலைகளையும், உச்சபட்ச குளிரினையும் கொண்டு… மலையும், மலை சார்ந்த குறிஞ்சி இடமுமாக அமைந்திருக்க… கடல்நீரின் காற்றும், வெம்மையும் ஒருங்கே இருந்தது!! 

அத்தகைய ஓர் இடத்தினை… சொந்தமாக வாங்கியிருந்தவன்… அங்கே தன் நிறைமாதக் கர்ப்பிணிப் பெண்ணையும் அழைத்து வந்திருந்தான் உல்லாசமாக… நாட்களைக் கழிக்க!!! 

நிறைமாத நாட்களில் கூடல் கூடாது என்று அவனுக்கு நன்கே தெரியுமாக இருந்த போதிலும் கூட.. அவளோடு இணைவது மட்டுந்தான் காதலோ?? 

இரு கைகள் கோர்த்திருப்பதுவும் காதலே… என்று பெரும் சுகமெனக் கொண்டான் தலைவன்!! 

தீவின் நட்ட நடுமையத்தில் அமைந்திருந்த.. மாளிகை போன்ற வீட்டின் உச்சி மாடியில்.. ஹெலிகாப்டர்கள் தரிப்பதற்கு ஏதுவாக… ஆங்கில “ஹெச்” வடிவ எழுத்து வரையப்பட்டிருக்கும் ஹெலி பேட்களும் காணப்பட்டிருந்தது. 

அதற்கு பக்கத்திலே.. காணப்பட்ட இன்னொரு மொட்டை மாடித் தரையில்.. இளநீல நிற வண்ணத்தில் பளபளக்கும்… நீச்சல் தடாகமொன்று… இளைப்பாறும் சாய்வுநாற்காலிகளும், குடைகளும் கொண்டு.. அமைந்திருந்ததும் கூட இரம்மியமே!! 

அம்மாளிகையின் நாற்புறச் சுவர்களுமோ கண்ணாடியினால் அமைக்கப்பட்டிருக்க… ஆங்காங்கே வெள்ளைச் சீறுடையில்.. “போ” கழுத்தில் அணிந்து சுற்றிக் கொண்டிருந்தனர் பணியாளர்கள்!!! 

அழகான பூந்தோட்டம்..கண்ணையும்,கருத்தையும் கொய்யும் விதத்தில் அமைக்கப்பட்டிருக்க.. இரவில் மலரும்.. ஸ்பெஷல் பூக்களை.. பளிச்சென்று வெட்டிக்காட்டும் வகையில் ஒளி உமிழ்ந்து கொண்டிருந்தது மின்விளக்குகள்!! 

கூடவே.. பதினாறடி உயரத்தில்… நீரினை வானை நோக்கிப் பீய்ச்சியடித்துக் கொண்டிருக்க…செயற்கை நீருற்றின் அடியிலிருந்து.. வண்ணவண்ண வர்ணங்களில் பாய்ந்து வந்த ஒளி… நீரூற்றை.. ஏதோ சொர்க்காபுரியாக அடித்திருந்தது. 

அழகிய நடைபாதைகளின் இருமருங்கிலும்.. பேரழகாய்… மரங்களின் பூக்கள் பூத்துக் குலுங்க.. தன் தலைவியோடு.. இல்லம் விட்டு… கடற்கரையை நோக்கி.. நடந்து கொண்டிருந்தான் அவன். 

இளநீல நிறத்தில் சொக்கா அணிந்திருந்தவன்… கடைசி இரண்டு பட்டன்களை மட்டுமே போட்டிருக்க… அதன் வழியாகத் தெரிந்தது அவனது திண்ணென்ற திடகாத்திரமான மார்புகள்!! 

அவனது பேன்ட்டின் கரண்டைக்கால் பகுதி மடித்து மேலேற்றப்பட்டிருக்க.. அவனது கைகளும் இணைந்திருந்தது தன் இணையோடு!! 

அமர்நாத்தின் கைக்குள் அடைக்கலமாகியிருந்ததோ மலரினும் மெல்லிய… இதழ் போன்ற அழகு உள்ளங்கைகள்!!

அவ்வுள்ளங்கைகளின் மிருது… அமர்நாத்தின் விழிகளையும் மிருதுவாக்க… அக்கைகளை எடுத்து தன் மீசை தோய்ந்த அதரங்களில் வைத்து அடிக்கடி குட்டி குட்டி முத்தங்கள் வைத்துக் கொண்டே வந்தான் அவன். 

முத்தம் போடும் போது.. அமரின் விழிகள்… நாயகியின் விழிகளை இமைக்காமல் ஏறிடும்!! 

அக்கணம், தன் இணையோடு காதல் பெருவிழிகளைக் கலக்கவிட்ட பானுமதியின் விழிகளும் பேரழகாய் நாணம் கொள்ளும்!! 

முத்துமூரல்கள் பளிச்சிட்டுத் தெரிய.. அவன் இதயத்தை கௌவும் ஒரு புன்சிரிப்பையும் உதிர்க்கும்!! 

அவளோடு கூடாமலேயே.. கூடியது போல… எழுத்தில் வரிக்க முடியாத ஒரு சுகத்தையும் கூட.. அச்சிரிப்பு… நாயகனுக்கு பரிசளிக்கும்!! 

இத்தனை காதற்கூத்துக்களுக்கிடையே… கடற்கரை மணலில்.. தன் பாதங்கள் இழைந்தோட… அவர்கள் வைத்த ஒவ்வொரு எட்டுக்கும் கடல்மண்.. பாதங்களால் சற்றே தூரத் தூர தூக்கி வீசப்பட… இதமாய் நடந்து கொண்டேயிருந்தனர் அவர்கள். 

எவ்வளவு நேரம் இப்படியே நடந்து கொண்டேயிருந்தாளோ பானுமதி?? 

வயிற்றிலே.. அவள் எடைக்கும் அதிகமாக… பன்னிரண்டரை கிலோகிராம் எடை…அவள் கர்ப்பத்தின் காரணமாக ஏறிப் போயிருக்க.. அதனை சுமந்து கொண்டு நடப்பது கடும் கஷ்டமாகத் தானிருந்தது அவளுக்கு. 

அதனால் தலைவனின் கரங்களோடு தன் கரங்களைப் பிணைத்திருந்தவளின் கைகள்.. அவனை விட்டும் தன்னதை சட்டென்று இழுத்துப் பிரித்துக் கொண்டது. 

கூடவே அவளது நடையும் தடைப்பட்டு நின்று போக.. அவளுக்கு என்னமோ ஏதோ என்று பதறிப் போன நாயகனின் நடையும் தடைப்பட்டுத் தான் நின்றது. 

“என்னாச்சு கண்மணி… எனி பெய்ன்?” என்று  ஏகத்துக்கும் பதறிப் போனவனாக… அவளை படபடப்போடு பார்த்து… 

அவளுக்கு வலிகள் ஏதேனுமோ என்றஞ்சிய விழிகளோடு கேட்டவனின் கைகள்.. அனிச்சையாய் மனையாளின் மேடிட்ட வயிற்றினையும் தொட வந்தது. 

தன் முட்டை வயிற்றைத் தொட வந்த  அவனின் கைகளைப் பட்டென்று.. தட்டி விட்டு..இடுப்பில் இரு கைகள் வைத்து நின்றவளோ… சிணுங்கும் தொனியில், 

“அமர்… இன்னும் எவ்வளவு தூரம் நடக்கணும். என் காலு ரெண்டும் வலிக்குது… குதிக்கால்.. இன்னும் இன்னும் வலிக்குது.. என்னால ஓரெட்டு இதுக்கு மேலே நடக்க முடியாதுடா சாமீ..” என்று அந்த ஏகாந்த இரவு வேளையில்… அழாத குறையாகச் சொன்னவளின் முகம் பார்த்தான் அமர். 

அதோ தெரிகிறதே வானம்!! அவ்வானத்திலே ஒளிரும் முழுமதி நிலவுக்கும்… இதோ அவன் பக்கத்தில் நிற்கின்றாளே பானுமதி என்னும் தரை நிலவுக்கும் வித்தியாசங்களும் உண்டோ?? 

இரவிலும் விகசித்துப் பளிச்சிடும் மதி வதனத்தை… ஓரிரு கணங்கள்… நேரம் மறந்து.. இடம் மறந்து.. இதுவே இகமென.. இதுவே இன்பமென.. ஓயாது பார்த்திருக்கலானான் அமர். 

அதிலும்.. அவள் பாதங்கள் வலிக்கிறது என்றதும்.. அது அவனுக்கான வலி என்பது போல இதயத்தில் ஓர் வலி ஊற்றெடுக்க.. வலியோடே சொன்னான் அவன் கீழ்வருமாறு. 

“இன்னும் கொஞ்சம் தான் கண்மணி.. இ.. இதோ… ஸ்பாட் வந்துருச்சு… இன்னும் கொஞ்ச தூரம் தான..” என்று ..தன் மனையாளைப் பார்த்து அவனும் சொல்ல… 

அவளோ…. தன் கொங்கைகள் இரண்டும் தாறுமாறாக ஏறியிறங்க … மூசுமூசு என்று மூச்சு வாங்கிக் கொண்டே.. முகம் சுளித்தாள். 

“என்னால முடியாது அமர்… மூச்சு வேறு வாங்குது… நாம வேணா இங்கயே உட்கார்ந்துக்கலாமா..??” என்று கேட்டவளும்.. தன் தலைவனை மதி மயக்கச் செய்யும் வகைகளையும் தான் நன்கே அறிந்தும் வைத்திருந்தாள். 

சட்டென்று தன் கைகளை நீட்டித் தாவி…தன் இரு கைகளாலும் அவளது கன்னம் பிடித்தாட்டியவளோ,

” ப்ளீஸ் ப்ளீஸ் அமர்… என் செல்லம்ல?? என் பட்டுல்ல?? என் கண்ணால்ல??”என்று செல்லங் கொஞ்சியவளாகக் கேட்க.. வலிய கம்பீரமான ஆண்மகனின் பார்வையும் மெல்ல இடுங்கலாயிற்று. 

இன்னும் கொஞ்ச நேரம்.. தன் இல்லாளின் பிடியில் நின்றிருந்தாலும் கூட.. 

அவளின் கோரிக்கைக்கு இணங்க.. தானாய் தலை ஆட்டி விடுவோமோ என்ற பயமும் கூட அவனுள் கிளர்ந்தெழவாரம்பித்தது.

போதாக்குறைக்கு… கேள்வனிடமிருந்து எந்தவிதமான பதிலும் வராமல் போகவே….  

அவ்விடத்திலேயே அமர முனைந்தவளின் செய்கை… அமருக்கோ… “முதலுக்கே மோசமாகி விடுமோ?” என்ற நிலையைத் தான் தோற்றுவித்தது. 

அவனது கண்களில் மிடுக்காய் ஒரு காதல் துளிர்விட… இளகிய கண்களோடு தலைவன்… தன் மனையாளின் செவ்வரத்தை மலர் போன்ற சிவந்த இதழ்களில் தன் இதழினை ஒற்றியெடுத்தவன், 

“உன்ன… சுமக்கறது… என்னைக்குமே எனக்கு சுமையா தெரியாது பானு” என்று… 

சொல்லிக் கொண்டே.. ஓரெட்டில் மனையாளை அடைந்து.. இடையூடு ஒரு கை… தொடையூடு ஒரு கை என்று செல்ல..மலர் மாதுவைக் கைகளில் மலர்மாலை போல ஏந்தியிருந்தான் அமர். 

நிமிடத்தில்… தன் தலை அவனது இதயப்பக்கத்தில் வந்திருப்பதை உணர்ந்து… அவளோ அச்சத்தில் படபடக்கும் விழிகளோடு..

 “ஹ.. ஹமர்” என்றவாறே…. அவனது சட்டைக்காலரை இறுக்கிப் பிடித்துக் கொள்ள… அவனும் தான் நகைத்தான் மந்தகாசமாய். 

அமரின் கண்களில் ஒரு காதல் அவளுக்காய் ஊற்றெடுக்க, அவள் தன்னை இறுக்கிப் பிடித்திருப்பதைப் பார்த்து, முத்துமூரல்கள் பளிச்சிட புன்சிரிப்பு சிந்தியவனோ, 

“நான் உன்னை கை விட்ருவேன்னு நினைக்குறீயா??” என்று அழகாய் ஒற்றைக் கண்ணடித்துக் கேட்க…  அடுத்த கணம்.. அவள் கன்னங்களில்  தோன்றியது இளஞ்சிவப்பு நிறத்தின் சாயை.

அவனும் எக் “கை விடுதல்” பற்றி கேட்கின்றான்?? 

“கைவிடுதல்” என்னும் சொல்லுக்கு நட்டாற்றில் கைவிடுதல்; வாழ்க்கையில் நின்றும் கைவிடுதல் ;உதவாது பாராமுகம் காட்டல்.. என்று பற்பல பொருள்களும் கூட உண்டு!! 

எவ்வர்த்தமாக இருப்பினும்.. தன் கொண்டான் தன்னை ஒரு போதும் கைவிடப் போவதில்லை என்று ஆணித்தரமாக அறிந்து வைத்திருந்தவளின்.. அவனது சட்டைக்காலரின் மீதான அழுத்தமும் தான் சிறுகச் சிறுகக் குறைந்தும் போனது. 

தன் கேள்வனின் கழுத்தோடு மாலை போல கைகளை இட்டுக் கொண்டவளோ.. ஹஸ்கி குரலில், 

“எனக்கு தெரியும்… எப்போவும் என் அமர்…என்னை கைவிடப் போவதில்லைன்னு தெரியும்” என்று சொன்னவள்… 

அவன் கைகளில் நின்றும் சற்றே எம்பி.. அவள் மூக்கோடு தன் மூக்கை உரசி… காதல் கவிதைகள் சொன்னாள் விழிகளாலேயே!! 

நிலவொளியில்… அவளொரு தேவதையாகத் தோன்ற…. அவளின் ஒளி சிந்தும் வதனத்தை இமையாமல்…

 பார்த்திருந்தவனுக்கு.. பேசும் உயிரோவியத்தைப் பார்த்த வண்ணமேயே… தன் இறுதி மூச்சினை முடித்துக் கொள்ளவும் ஆவல் தான். 

இதுகாறும் அவளைப் பிரிந்திருந்த வலி.. இதயத்தோடு எழுந்து தாக்க… அவனின் அணைப்பின் வீரியமும் தான் அதிகமானது மறுகணம்!! 

அவளை ஏந்திக் கொண்டு… மணலில் பாதங்கள் தோயத் தோய நடந்து கொண்டேயிருந்தவனின் பார்வை… அவளது பாலில் விழுந்த கருந்திராட்சை போன்ற நயனங்களையே பார்த்த வண்ணமே… நடந்தான். 


மனம் கொய்யும் ஓர் அந்தகார இரவு!! 
தூரத்திலே மேகத்தின் உலவு!! 
மேகத்தோடு நிலவு!!
அதில் ஒளிந்து பார்க்கிறது உளவு!! 



ஆம், தலைவனும், தலைவியும் தனக்கொளித்து என்ன செயல்கள் செய்ய நாடுகின்றனரோ என்றறிய நாடிய முழு நிலவும்.. 

மேகங்களினிடையே வெளிப்போந்து… அவற்றையெல்லாம் வெறித்து வெறித்துத் தான் பார்க்கலானது. 

இது ஏதுமே அறியாமல்… தலைவியை ஏந்திய வண்ணம் தலைவனும் நடக்கவாரம்பிக்க… 

அருகே கடல் என்பதைக் காட்டும் வண்ணம் கேட்டுக் கொண்டிருந்தது ஓய்வற்றே இரையும் அலைகடல் ஓசை!! 

கூடவே உப்புக்காற்றும்.. சூழ்ந்து இருவரையும் தழுவிச் செல்ல..அவர்களைச் சூழ அடித்துக் கொண்டிருந்தது மோகனவாசம்!!

அவளை ஏந்திக் கொண்டே நடந்தவனின் நடையும்.. ஓரிடத்தில் தடைப்பட்டு நின்றதும்…அமர்நாத்தோ… 

 திரும்பி.. பானுமதியைத் தான் காதலாட…விழிகளில் மையல் ஓடப் பார்த்திருந்தான். 

கேள்வனின் பார்வை அதீத கூச்சத்தை அவளுள் பரிசளிக்கவே, அவள் அவனைத் தான்… 

மனதுக்குள் பற்பல கேள்விகள் இழையோட…இமைகள் படபடக்க.. இதழ்கள் துடிதுடிக்க ஓர் பார்வைப் பார்த்திருக்கலானாள். 

அவளை மென்மையாக.. தரையில் அவன் இறக்கி விட்டதும்… அவளது அனிச்சம் பூப் பாதங்களை ஓடி வந்து தழுவிப் போனது வெண்ணுரை பொங்கும் சமுத்திரம்!! 

இரவு நேரத்தின் கடலலையின் ஜில்லிப்பில்.. “ஸ்ஸ்” என்று அவள்…தட்டுத்தடுமாறி நின்றவளுக்கு.. 

உவர்நீரின் அதீத குளிரையும் கூட தாங்க முடியாமல் தான் போயிற்று. 

அங்கே கடல் வந்து தழுவும் கரையில் இருக்கப் பிரியங்கொள்ளாமல்… அவள் தன் மேடிட்ட வயிற்றை அணைத்துக் கொண்டு… 

விறுவிறுவென கரையேற முற்பட்டதும்.. அடிவயிற்றில் முணுக் என்று தோன்றி மறைந்தது ஒரு வலி!! 

உண்மை தானா?? 

அவள் அனுபவித்த மின்னல் மின்னி மறையும் நேரத்திற்கு ஒப்பான நேரத்தில்… அவள் சுகித்த வலியும் உண்மை தானா?? 

இல்லை மனப்பிரம்மைகளா?? 

அவள் யோசித்து நிற்கும் வேளையில்.. அதற்குள்ளாக… அவளின் கையை யாரோப் பட்டென்று பற்றி,

 “ஹேய் நில்லு பானு” என்று சொல்வது புரிந்தது. 

அதுவும் வேறு யார் தான்?? 

கரை புரண்டு ஓடும் காட்டாற்று வெள்ளம் போல காதல் செய்யும் அவளது கேள்வனே தான்!! 

அவளின் மிருதுவான கரம்பற்றியிருந்தவனோ.. தழுவிச் செல்லும் கடல் அலைகளில் நின்றும் ஓரெட்டு எடுத்து வைத்து அவனை அணுகியிருப்பான் அவன்!! 

அவளுக்கோ கணவன் தன்னை கையோடு அணைத்து.. அவளின் கரத்தோடு.. அவன் கரத்தினைப் பிடித்து.. வயிற்றில் வைத்து… 


பின்னாடியிருந்து.. அழுந்த அணைத்துக் கொள்ள… இதயமெல்லாம் ஆயிரம் பட்டாம்பூச்சி பறந்தது போல… ஓர் குளுகுளு உணர்வு!!! 

அவளின் பின்னழகுகளோடு தன் தேகத்தினை அழுத்தி.. அணைத்து.. நிலவினொளியில் பிரதிபலிக்கும்..

 அவளது வெண்ணிறமான கழுத்துவளைவில் மென்மையாய் முத்தம் பதித்தான் பேராண்மையாளன். 

அவளது கழுத்து வளைவின் ஒவ்வொரு அங்குலத்திலும்… அணுஅணுவாக எச்சில் தோயத் தோய.. சின்னச் சின்ன முத்தங்களைப் பரிசளித்த வண்ணமே… 

அவன் பவனி வர… அவளும் தான்.. வாகாய் அவனுக்கு தன் அங்கங்களை காட்டிய வண்ணம்… கண்மூடி சுகத்தில் திளைக்கலானாள். 

“ம்ம்… ம்ம்ம்” என்று அவள் போட்ட முனகல் ஒலியில்.. அமர்நாத்துக்கும் தான் இன்னும் இன்னும் ஏறிப்போனது கிறுக்கு!! 

மெல்ல அவளின் இடையைப் பற்றித் தன்னை நோக்கி திருப்பியவனோ, அவளின் அடர்ந்த இமை போர்த்திய நயனங்களைத் தான்…. 

காதல் யாசிக்கும் விழிகளோடு… இமையாமல் பார்த்திருந்தான். 

அவளின் கன்னங்களை.. தன் ஒற்றைக்கையால் நிமிர்த்தி…, மென்மையான கிசுகிசுக்கும் குரலில், 

“பானு… என்னைப் பாரு.. என்னை நிமிர்ந்து பாரு பானு” என்று அவன் சொன்னதும் கூட பட்டாம்பூச்சிகளைப் பறக்கச் செய்தது அவளுக்கு. 

எப்போதும்.. மிடுக்காய்… கர்வமாய்.. வளையவரும் ஆணழகனின் ஹஸ்கி குரல் வேறு தாபத்தீ மூட்டியது அவளுக்குள். 

மெல்ல உயர்ந்த பெண்ணவளின் நேத்திரங்கள்.. தன் கொண்டானை நிமிர்ந்து பார்க்க…

” அ.. அதோ… அங்கே பாரு பானு..” என்று கடலின் மேற்புறம் கைக்காட்டிப் பார்க்கச சொன்னான் அவன். 

அவளும்… சாதாரணமாக பார்வையை தலைவன் காட்டிய இடத்தில் பார்வையைச் செலுத்தியவன்… அடுத்து அங்கே பார்த்ததும் திகைத்த விழிகள் விரிய.. 

அக்கணமே விதிர் விதிர்த்தாற் போல நின்றும் போனாள் பானுமதி. 

அப்படி நிற்கும் வண்ணம்.. அவள் எண்ண கண்டாள்?? 

இந்து சமுத்திரத்திற்கென்றே சொந்தமான ஒருவகையான ஜெல்லி மீன்கள்… மின்விளக்கு போட்டாற் போல…

 வெண்ணிறமாக.. நிலவின் ஒளியில்… கடலின் மேற்பரப்பில் ஆயிரக்கணக்கில் காட்சி தந்து கொண்டிருந்தது. 

“இட்ஸ் எ சர்ப்ரைஸ்” என்று அவள் கையை வலுவாக பிடித்தவாறே அவன் சொன்ன போது…

 ஜெல்லி மீன்கள் காட்டும் ஜாஜ்வல்லியங்களைக் கண்டு.. அவள் முகத்திலும் தான் ஒரு புன்னகை வந்தது. 

அமர்நாத்தோ… அவளைச் சுற்றி வந்து.. அவனது  கன்னத்தை அவள் தோளில் வைத்து… 

பின்னாலிருந்து அவள் இடுப்புக்கு குறுக்கே என் கைகளை செலுத்தி… அவளை இறுக்கி அணைத்தவாறு.. கன்னம் இழைந்த வண்ணமே சொன்னான், 

“இந்த ஜெல்லி ஃபிஷ்லாம்… இயற்கையோட ஓர் அற்புதம்.. ஆழ்கடல் இருட்டில் வாழ்றதுங்க.. வருஷத்துல ஒரு தடவை… முழுநிலவு ஒளிக்கும் நேரத்தில் தான்.. வெளியே வரும்… உனக்கு காட்டணும்னு தோணுச்சி.. பிடிச்சிருக்கா??” என்று. 

ஜெல்லி மீன்களின் ஒளிப் பிரதிபலிப்பு.. இவளது கருமணிகளில் பிரதிபலிக்க… அவற்றையே வெறித்துப் பார்த்திருந்தவளுக்கு..


தன்னை அணைத்துப் பிடித்திருக்கும்…அவனின் அண்மையினால்… அவளின் சுவாசம் அதிகமாகுவதை..அவளால் உணர முடிந்தது. 

“உனக்கு பிடிச்சிருக்கா பானு… அங்கே மேலே?” என்று அவன்.. ஒற்றைக்கை நீட்டி.. வானத்தை கைக்காட்ட…

 வானத்திலும் ஏதும் பேரதிசயங்களோ… என்று அலைப்புறுதலோடு… ஆகாயத்தைப் பார்க்கலானாள் அவள். 

அங்கே அவள் பார்த்த மறுகணம்… அழகழகாய்.. வண்ண வண்ண நிறங்களில் வான வேடிக்கைகளும் தான்.. அவன் ஏற்கனவே திட்டமிட்டது போல வெடிக்க…. ஹப்பப்பா.. அன்றைய இரவு?? 

இருவருக்கும் அழகாய் மாறிப் போன பேரிரவு!! 

அந்த காட்சியை பிரமிப்புடன் பார்த்தபடி..

 “ரொ.. ரொம்ப அழகா இருக்கு.. அமர்” என்றவளுக்கும் அன்று காதல்ப் பெருக்கு அதிகமாகி.. தன்னைப் பின்னிருந்து அனைத்தவனின் கன்னத்தில் ஓர் முத்தம் வைத்தாள் அவள். 

நிலவொளி எங்கும் பரவியிருக்க.. அவள் தந்த ஒற்றை முத்தம்.. அம்முத்தத்தில்.. விழிகள் திகைக்க.. நின்றிருந்த அமர்நாத்தின் முகம் கண்டு… அவள் வாய் மூடி கிளுக்கி நகைக்கவும் செய்தாள். 

அவளின் சிரிப்பையே மந்தகாசம் சிந்தும் வதனத்தோடு பார்த்திருந்தவனின் முகமும்… 

அன்றை பிரிவின் நாளில் இதே போல வானவேடிக்கைகள் தயாராக வைத்து.. அவளுக்காக காத்திருந்தது எல்லாம் நினைவில் வந்து போனது அவனுக்கு.

மறுகணம்..அவனது முகம் வாடிப் போகவே, அவனின் சிறு வாட்டத்தைக் கூட… காணப் பிடிக்காதவளோ… முற்றாக தன் தலைவன் பால் திரும்பி… இமைகள் சுளிக்க அவனைத் தான் ஏறிடலானாள். 

என்னவென்றே புரியாத களேபரம் தலைவியினுள் முகிழ்க்க… 

மெல்ல தன் நுனிக்கால் விரல்களில் எம்பி.. அவனது இதழ்களில் பச்சக்கென்று முத்தம் வைத்து… பழையபடி கால்களில் நின்று கொண்டாள் அவள். 

பின்பு.. அவனது மயிரடர்ந்த முரட்டு தாடியினை இரு கரங்களில் ஏந்தி, 

“என்னாச்சு?? ஏ.. ஏன் என் ராஜாவுக்கு முகம் வாடிப்போச்சு?” என்று மென்மையாகத் தான் கேட்கலானாள் அவள். 

வலியோடு ஓர் கசப்புப் புன்னகை வந்து போக அமர்நாத்தோ, 

“அன்னைக்கும் இதே போலத் தான்.. ஹோட்டல் மேரீலான்ட்ல வெயிட் பண்ணிட்டிருந்தேன்..நீ வருவேன்னு… அன்னைக்கு நீ வந்திருந்தா.. இதே போல வானத்தில் ஃபயர் ஒர்க்ஸ் வெடிச்சிருக்கும்… உன்னோட இந்த சந்தோஷத்தை… அப்போவே… பார்த்திருப்பேன்.. மிஸ் பண்ணிட்டேன்” என்று அப்போதும் கூட பழியை அவள் மீது தூக்கிப் போடாமல்…

” உன் சந்தோஷ முகத்தைக் காண தவறிட்டேன்”என்றவன்.. உள்ளத்தில் அழகிய தமிழ் மகன் தான்!! 

அவனின் அன்பின் உக்கிரம் புரிய… விழிகளென்னும் பாத்திரத்தில் குபுக்கென்று தேங்கி நின்றது உவர்நீர்!! 

நா தழுதழுக்க,

 “எ.. எப்படி அமர்?? காரணமேயில்லாம.. விலகிப் போய்.. உங்கள நோகடிச்ச என்னை… எப்டி உங்களால திரும்பி ஏத்துக்க முடிஞ்சது… கா.. காதல் செய்ய முடிஞ்சது?” என்று கேட்டவளின் விழிகளில் நின்றும் சரேலென வழிந்தது ஒருதுளிக் கண்ணீர்! 

கண்ணீரை தன் பெருவிரல்களால் துடைத்தவனோ,

” நோ கண்மணி அழக்கூடாது.. நடந்தது நடந்திருச்சு… ஏதோ மிஸ் அன்டர்ஸ்டான்டிங்… அதுக்காக.. என் அன்பை புரிஞ்சு வந்தவளை… உதாசீனம் செய்ய சொல்றீயா?? இல்லை பழிவாங்கணும்னு சொல்றீயா??இருக்கறது ஒரு வாழ்க்கை… எனக்கு உன் கூட வாழணும்… சந்தோஷமா வாழணும்.. உன்னை நோவினைப்படுத்தி.. தண்டிச்சு.. பழிவாங்கி… அரைகிழவனாகிருவேன்… அதான் என்னைத் தேடி வந்த கண்மணியை ஏத்துக்கிட்டேன்…உன்னை ஏத்துக்கலைன்னா.. இப்படி ஒட்டி நின்னிருக்க முடியுமா? உன் அன்பில் குளிர்காயத் தான் முடியுமா?”என்று சொன்னவனின் அன்பும்.. அன்பு வாசகங்களும்.. பானுமதியின் அகத்தினை அப்படியே நிறைத்துத் தான் போயிற்று. 


ஜெல்லிமீன்களின் ஒளி…  அவள் முகத்தில் பிரதிபலித்திருக்க.. 

அவனது கைகளைப் பிடித்த வண்ணம் நின்றிருந்தவளுக்கும்.. அவனது தூய காதல் கண்டு… இதயமும் நெகிழ்ந்திருக்க வேண்டும். 

“ஐ லவ் யூ அமர்” என்று உணர்ச்சி வசப்பட்டுச் சொன்ன கர்ப்பிணியும் கூட இம்முறை அதிரடியாய்.. 

ஆவேசமாய்.. அவனது சட்டைக்காலரைப் பற்றி தன்னை நோக்கி இழுத்து, 

“பழிவாங்க கூட முடியலன்னு சொல்ற நீ… எ.. என்மேல… அந்தளவு அன்பு வ.. வைச்சிருக்கீயாடா…??” என்று கண்ணீருடன் கேட்டவள்.. 

அவனின் பதிலைக் கூட எதிர்பார்க்கப் பொறுமையற்று.. அவனின் இதழ்களை.. அப்படியே கௌவி.. சுவைக்கலானாள் அவள். 

அவளாகவே வேட்கையடைந்து.. முதல் முத்த யுத்தம் துவங்கியதில்.. உடலெல்லாம் விர்ரென்று.. ஒரு மின்னணு பாய்ந்தது போல விறைத்துப் போனது ஆடவனின் தேகம்!! 

மறுவிநாடி.. அவளின் பின்னந்தலைக் கூந்தலோடு… கரங்களிட்டுப் பிடித்துக் கொண்டவன்.. 


யுத்தத்தை தன் ஆளுகைக்குக் கீழ் கொண்டு வரும் நோக்குடன்.. அவற்றை இறுக்கிப் பிடித்துச் சுவைக்கலானான் தன் பங்குக்கு!! 

நீண்ட மணித்துளிகளாக முத்தம் தொடர்ந்து கொண்டேயிருக்க..

 அவளது இதழ்களை இனிமேலும் உமிழ்நீர் வரத்தே கிடையாது என்பது போல வரட்சியாக மாற்றிய பின்னர் தான்.. அவள் இதழில் நின்றும் பிரிந்து கொண்டான் அவன். 

அவளோ சின்னஞ்சிறு சுவாசம் வாங்கிய வண்ணம்.. இன்முகமாய் இருக்க.. இவனோ.. அவள் முகத்தை.. அன்பொழுகப் பார்த்த வண்ணம், 


“உன் முகத்தை.. என்னைக்கும்.. இப்படி சிரிச்ச முகமா பார்க்கணும் பானு” என்று சொன்னவனின் வதனத்திலும் ஊசலாடிக் கொண்டிருந்தது திருப்தி. 

அவள் கண்கள் அவ்விரவிலும் மின்னுவதை இவன் லயித்துப் பார்த்திருக்க…

 இவளோ அதிமென்மையான குரலில், “அமர்” என்றழைத்தாள் கேள்வனை. 

“ஹ்ம்ம்” என்று அவளது தேகத்திலோடும்.. அவளுக்கே அவளுக்கென்று மாத்திரம் சொந்தமான நறுமணத்தை.. தனக்குள் உள்ளிழுத்தபடியே பதிலளித்தான் அமர். 

அவள் கண்கள் ஈரமாக, “தேங்க்ஸ்” என்றவளின் கண்ணீரைப் பார்த்து  பின்வாங்கி நின்றவனோ, அவளது கண்ணீரைத் துடைத்து விட்ட வண்ணமே பதில் சொல்லலானான். 

அவளின் கையைப் பற்றி தன் இதயத்தில் பொத்தி வைத்துக் கொண்டவனோ,

 “ம்ஹூஹூம்.. நான் தான் தேங்க்ஸ் சொல்லணும்.. என் வாழ்வில் வசந்தமா வந்து.. என் சோகத்தையும் வலியையும் நீக்கியதற்காக…” என்றவன்… காதல் அதீதமாகி.. இம்முறை அவள் இதழ்களை அதிரடியாக சிறை செய்திருந்தான் அவன்!!

அதற்கும் மேலாக.. அவ் இன்பமயமான பொழுதுகளை இரசிக்க முடியாமல்… அவளின் அடிவயிற்றில் எழுந்த ஓர் வலி… 

இடுப்பின் கீழான பகுதி எங்கனும்… பரவி… அவளுக்கு பெரும் வேதனையைக் கொடுக்கலானது. 

கீழ்ப்பற்களைக் கடித்துக் கொண்டு.. நின்றிருந்தவளுக்கோ.. ஒரு கட்டத்தில் வலி பொறுக்கமாட்டாது போக..

 அடிவயிற்றைப் பிடித்துக் கொண்டே… அவன் மீது சாய்ந்தவள், 

“ஆ.. ஆ.. மு.. முடியல அமர்.. உ.. உங்க பையனுக்கு… இ.. இப்பவே அப்பா.. அப்பாவைப் பார்க்கணும்.. போ. ல” என்று சொல்லிக் கொண்டே வலியில் முனகத் தொடங்கினாள் அவள். 

தன் மனையாளுக்கு எடுத்திருப்பது பிரசவ வலியே என்பதை அறிந்து கொண்டவனுக்கும்.. அவளின் வலியைக் கண்டு.. அவனது நேத்திரத்திலும் கூட விழிநீர் ததும்பி நிற்கலானது. 

அவனின் மார்பில் சாய்ந்து,

” ஆ.. ஆ… மு.. முடியல அமர்” என்று கதறுபவளின் கன்னத்தைத் தாங்கி, “ஒ.. ஒண்ணும் ஆகாதுடா.. எவ்ரிதிங் இஸ் ஃபைன். நா.. நாம ஒ.. ஒண்ணா சேர்ந்து.. நம்ம குழந்தைய உலகத்துக்கு வரவேற்போம்” என்று சொன்னவனோ… மறுகணம் யாருக்காகவும், எதற்காகவும் காத்திருக்கவில்லை. 

அவளுக்கும் சரி.. குழந்தைக்கும் சரி. எதுவும் ஆகிவிடவே கூடாது என்ற பிராத்தனையோடு… அவளை மீண்டும் தன் கைகளில் ஏந்திக் கொண்டவன் கடற்கரையில் நின்றும்… வீட்டை நோக்கித் தான்.. விரையவாரம்பித்தான். 

அவளோ இடுப்பில் கையை வைத்துக் கொண்டு… கணவனால் தூக்கிச் செல்லப்பட்ட போதிலும்.. வழி நெடுகிலும்,

 “அமர். அஅ.. மர்… முடியல.. வ.. வலிக்குது” என்று கத்திக் கொண்டே வர, 

“ஒ.. ஒண்ணும் ஆகாதுடா.. கொஞ்சம்.. கொஞ்சம் பொறுத்துக்கோ கண்மணி…. இ.. இதோ.. வீடு வந்தாச்சு” என்று அவளுக்கு மன உறுதி தரும் வகையில்..

 ஆயிரத்தெட்டு தேறுதல் வார்த்தைகளையும் தான் சொல்லிக் கொண்டே வீட்டை நெருங்கிப் போனான் அவன். 

வீட்டினுள் நுழைந்ததும்… அங்கிருந்த பணியாளர்கள் அனைவரையும்.. விழிகளாலேயே துலாவித் துலாவி… வைத்தியர்களைத் தேடிய வண்ணம்,


” டாக்டர்ர்ரர்… நர்ஸ்…!! எமெர்ஜென்சி.. இம்மீடியட்டா… பாத்டப் ரெடி பண்ணுங்க… பானுவுக்கு லேபர் பெயின் வந்திருச்சு” என்று கத்திக் கொண்டே… வைத்தியர்களைத் தேடினானா?? 

ஆம், நிறைமாத கர்ப்பிணியை அழைத்துக் கொண்டு தனித்தீவு வந்திருப்பவன்… மனைவியின் பேறுகாலம் நெருங்கி விட்டதையும் அவதானிக்கலாமா போவான்?? 

முன்னேற்பாடாக… அதிசிரேஷ்ட வைத்தியர்களையும், தாதிமார்களையும்.. கையோடு அழைத்து வந்திருக்கவும் செய்தான் அவன்!! 

அவர்களும் விரைந்து வந்து.. இயற்கையாக நீரில் அமிழ்த்தி உட்கார வைத்து.. குழந்தையைப் பிரசவிக்க வைக்கும்,

 “பாத்டப் லேபர்” முறைக்குத் தான்.. க்ஷண நேரத்தில் தயாராகவும் செய்தனர். 

மறுகணம்.. அவளை அழைத்துக் கொண்டு உரிய அறைக்கு விரைந்தவன்.. அவளை தண்ணீர் நிரம்பிய பாத்டப்புக்குள் அமர வைத்து… 


தானும் அவள் பின்னாடியே பானுமதி முதுகு சாய்க்கும் போது.. தாங்கிக் கொள்ளும் தூணாகத் தான் அமர்ந்து கொண்டான். 

பாத்டப் நீருக்குள் குழந்தை பிரசவிக்கும் முறை… குழந்தை பிரசவ வலியை பெரும்பாலும் குறைக்கும் என்பதனால் மேலைத்தேய நாடுகளிலெல்லாம்… தத்தம் வீடுகளிலேயே பரவலாக உபயோகப்படுத்தப்படும் ஓர் வழி முறை!! 

இச்சந்தர்ப்பங்களில்… கரணம் தப்பி சிறு பிசகு நேர்ந்தாலும்… மரணம் சம்பவித்த சம்பவங்களும் உள்ளனவாகையால்…


 மகப்பேற்று சிகிச்சையின் நிபுணர்களையும் கூட.. தன் செல்வ வளமையை உபயோகித்து.. அங்கே வரவழைத்திருந்தான் அமர்!! 

ஆக மொத்தத்தில் அவன் எண்ணமெல்லாம்… தன் மனையாட்டிக்கு அதீத பிரசவ வலியும் நேரக்கூடாது..

 அசம்பாவிதமும் நேரக்கூடாது என்ற எண்ணம் உள்ளூற இருக்கவே… இரண்டுக்கும் வழிவகை செய்திருந்தான் அவன். 

ஆகையால் பாத்படப்புக்கு அருகில்.. இதயத்தின் துடிப்பை அளக்கும் மானிட்டர் திரை கொண்ட ஈசிஜி கருவி முதற்கொண்டு.. 


டிரிப்ஸ் ஏற்றப்படும் குழாய்களெல்லாம் கொண்ட குட்டி சத்திரசிகிச்சை அறை கூட.. அவ்விடத்தில்.. அனைத்துக்கும் தயாரான நிலையில் இருந்தது. 

பாத்டப்புக்குள்… தன்னிரு கால்களையும் நீட்டி… கீழுதட்டினைப் பற்களால் கடித்த வண்ணம்… தன் குழந்தையை வெளியேற்ற முக்கிக் கொண்டிருந்தவள்,


 “உஃப்.. உஃப்.. ரொ… ரொம்ப வலிக்குது அமர்” என்று கண்ணீரோடு சொன்னவளின்..  கண் ஓரத்தில் வழிந்த கண்ணீரை கீழே நழுவ விடாமல் துடைத்துக் கொண்டே ஆறுதல் சொல்லலானான் அமர். 

அவளோ.. தன் பின்னே தண்ணீரில் அமர்ந்திருக்கும் கேள்வனின் தோளில் தலை சாய்த்த வண்ணம்….குழந்தையை பிரசவிக்க வைக்க படாதபாடு பட்டுக் கொண்டிருந்தாள். 

“ஒண்ணும் இல்லை.. நேச்சுரல் வாட்டர் பர்த் இஸ் ஆல் சேஃப் பானு.. இன்னும் கொஞ்சம் புஷ் பண்ணா போதும்..”என்று சொல்லிக் கொண்டிருந்தவனின் முகமெல்லாம்.. மனையாள் படும் வலியில்…. இரத்தப் பசையேயற்று வெளிறிப் போயிருந்தது. 

நீரில்.. பாரங்கள் சுமைகளின் அடர்த்தி குறைவாகவே இருக்குமென்ற விஞ்ஞான நியதியின் நிமித்தம்…

 குழந்தையின் அழுத்தமும், வலியும் இம்முறையில் குறைக்கப்படும் என்பது நிபுணர்களின் ஏகோபித்த கருத்து. 

அதிலும் ஒரு டாக்டர்.. தண்ணீருக்குள் கண்ணாடியை இறக்கி… அவளது குழந்தையின் தலை தெரியும் வாசலை.. விம்பமாய்… அவளுக்குக் காட்டி,

 “இன்னும் கொஞ்சம் தான் பானு… கொஞ்சம் புஷ் பண்ணி.. குழந்தையின் தலை மட்டும் வெளியே வர வைச்சீங்கன்னா போதும்… குழந்தைய வெளியே எடுத்திரலாம்” என்று சொல்லிக் கொண்டிருக்க… அவளுக்கும் தான் எங்கிருந்து அத்துணைத் தைரியம் வந்ததுவோ?? 

அவன் தோள்வளைவின் மீது தன் தலையைச் சாய்த்து,


” ஆஆஆஆ” என்று கத்தி முக்கியதும்.. குழந்தையின் தலையும் தான் வெளியேவர..கிளவுஸ் அணிந்த கைகளால் குழந்தையை எடுத்து.. பானுமதியின் மார் மேல் கிடத்தினாள் பெண்டாக்டர்!! 

குழந்தையும், “கீச்” என்ற அழுகை நின்று..தாயை அடைந்ததும்.. தாயின் இதயத்துடிப்போசை கேட்டதும்.. இது கருவறையிலிருந்தே பழக்கப்பட்ட ஒலி தானென்று.. அமைதியாக. விழிகளை இறுக மூடிக் கொண்டது. 

ஆனால் தன் குழந்தையையும், மனையாளையும்.. தன் நெஞ்சு மீது சுமந்து கொண்டிருந்த அமரோ… 

தன் மனையாள் ஒரு குழந்தையை பிரசவிக்க வைக்க…அவள் பட்டபாட்டையெல்லாம் கண்டு… பெண்களின் உன்னதம் உணர்ந்து நின்றிருக்கலானான். 

பெண்ணினத்தை கீழ்மையாக நினைக்க வைத்ததும் ஓர் பெண்ணே!! 

தற்போது அதே பெண்ணினத்தை…ஆண்களை விடவும் மேன்மையாக… தெய்வத்துக்கு நிகராக நினைக்க வைத்ததுவும் ஓர் பெண்ணே!! 

அவளை இறுக்கி அணைத்து.. தன்னை நோக்கித் திருப்பி… நெற்றியில் முத்தம் வைத்தவனின் விழிகளெல்லாம் சிவந்து கலங்கிப் போயிருக்க,

 “பா.. பானு… செத்துப் பிழைச்சேன்டீ.. நீ… நம்ம கொழந்த.. ரெண்டு பேரும் சேஃப்னு காதால் கேக்கற வரை.. நா.. நான் நானா இல்ல… நித்யா என் வாழ்க்கையில் வந்து போனதும் … பெண்கள்னா வெறுப்பா இருந்த எனக்கு… ஒரு உயிரை ஜனிக்க வைக்க.. தான் உயிர பணயம் வைக்கறவ தான் பெண்ன்னு… புரிஞ்சிக்கிட்டேன் பானு…. பானு…”என்று கண்ணீர் மல்க… தன் மனையாளைத் தாவி அணைத்துக் கொண்டான் அவன்.

வலியில் உடல் இரணத்துப் போயிருந்த பச்சையுடம்புக்காரிக்கும்…அவனின் அணைப்பு தேவையாக இருக்கவே, 


அவனோடு ஒன்றிக் கொண்டவளின் கண்களில் நிறைந்திருந்தது தாய்மை!! 

தன் குழந்தைக்கு மட்டுமல்ல.. கணவனுக்காகவும் கூட சுரந்திருந்தது அத்தாய்மை!! 

உயிரோவியம்-27

இரண்டு வருடங்களுக்கு பிறகு, 

அவள்.. சமையலறையில்.. மதிய உணவு தயாரித்துக் கொண்டிருந்தபோது, ​​நடுக்கூடத்தில்… 


அவளது இரண்டு வயதேயான குட்டிப்பையன் “ராம்நாத் தேசிகன்” என்னும் “ராம்”.. தனக்குள் கிளுக்கிச் சிரித்துக்கொண்டே…

 நடுக்கூடத்தைச் சுற்றி ஓடும்…. நகைப்புச் சத்தம் கேட்க… அதனைக் கேட்டுக் கொண்டே.. வேலையை தொடர்ந்தாள் பானுமதி. 

சில நிமிடங்களுக்குப் பிறகு, தயாரித்த உணவுகளை எல்லாம் ஹாட் ப்ளேட்டில் போட்டு எடுத்துக் கொண்டு.. அருகிருந்த சாப்பாட்டாடு மேஜையில் வைக்க… நடக்க முயன்றபோது… 

யாரோ அவளது கால்களைப் பற்றிக் கொண்டதை உணர்ந்தாள் பானுமதி. 

அவளின் சேலையையும் இரு பிஞ்சுக்கரங்கள் அழுத்தமாகப் பிடித்துக் கொள்ள… அது, “யார்” என்று அறிந்திருந்தவளின் வதனமும் தான்..  ஒரு பரந்த புன்னகையுடன் விரிந்தது. 

அவளோ..தன்னைப் பற்றிக் கொண்ட.. சிறுகரங்களின் உரிமையாளனைப் பார்க்கும் வண்ணம்..

 முகத்தை நன்றாகத் திருப்பி.. கீழே குனிந்து பார்த்த போது… அங்கே அவளின் குட்டி தேவன்.. 

அவளைப்  பற்றிக்கொண்டு, தன்  பொக்கைப்பல் முரசுகளைக் காட்டி…  புன்னகையுடன் நின்றிருப்பதுவும் புரிந்தது. 

தன் குட்டி அமர்நாத்தை.. அங்கு பார்த்ததும்… மெல்ல புருவங்களை உயர்த்தி,

  “ம்ம்?? என்னாச்சு என் ராமு செல்லத்துக்கு.. என் கண்ணுக்குட்டி?” என்று கேட்டுக் கொண்டே..

 இதயமெல்லாம் தாய்மை ஊடுறுவ.. அப்படியேத் தூக்கி தன் நெஞ்சோடு அணைத்து முத்தம் வைத்தாள் அவள்!! 

தாயின் உயரத்தின் கால்வாசி கூட இல்லாத குழந்தையோ.. தன் தாயின் நெஞ்சாங்கூட்டுக்குள்.. 

ஒளிந்து.. இளைப்பாறி… இதமாக தாயின் கழுத்தைக் கட்டி நின்று.. அவளின் கன்னத்தில் செப்பிதழ்களால் அழுத்தி முத்தம் வைத்தும் நின்றது மழலை!! 

அதில் பனிமலையாய் உருகி நின்றவளோ, இவளும் கொஞ்சும் கிள்ளை மொழியில்,

 “என்ன வேணும்.. என் பேபிக்கண்ணாவுக்கு.. பசிக்குதா?” என்று.. அழகாய் தன் கொழுகொழு கன்னங்கள் ஆட, “ம்ஹூஹூம்மா” என்று தலையாட்டி நின்றது குழந்தை. 

அவனும், அவளும் வாழ்ந்த இன்பமான வாழ்வுக்கு சான்றாதாரம். இதோ இக்குழந்தை!! 

அவள் மெதுவான தொனியில், 

“அப்போ என்ன வேணும் என் கண்ணனுக்கு?”என்று கேட்க… குழந்தையோ… தாயை விடவும் மெல்லிய கிசுகிசுப்பான தொனியில், 

“ப்பாவும், நானும் ஹைத் அன்ட் சீத் வ்ளாண்திட்டு இதுக்கோம்மா… எங்க ஒளியுறதுன்னு தெரீல??” என்று மழலைக் குரலில் சொன்னது கேட்டு கசிந்து போனது இதயம்!! 

சிரித்த வண்ணமே..அவள் போல இவளும்.. மழலைக்குரலில்.. 

 “ஓ.. டாடியும், நீங்களும் கண்ணாமூச்சி விளையாடுறீங்களா???” என்று   கேட்க.. தன் தலை மேலும், கீழுமாட…

” ஆமா” என்றது குழந்தை. 

சிரித்துக்கொண்டே.. முத்தம் வைத்து…கீழே இறக்கி விட்ட பானுமதியோ..  குளிர்சாதனப்பெட்டிக்கு அருகில் கைக்காட்டி,

 “அதோ..அங்கே ஒளிஞ்சிக்க கண்ணா.. அப்பாவால கண்டே பிடிக்க முடியாது”என்று ஒளிந்து கொள்ளுமாறு சைகை செய்ய.. அவனும் தன் குட்டிப் பிருட்டங்கள் இரண்டும் தகதகவென ஆட ,  வேகமாக அங்கு ஓடினான்.

பானுமதி.. தன் பிள்ளைச் செல்வத்தைப் பார்க்க கொஞ்சம்.. குளிர்சாதனப் பெட்டியின் புறமாக எட்டிப்பார்த்த போது… யாரும் அறியாமல்.. அரவமே எழுப்பாமல்… சின்ன அமரும் ஒளிந்திருப்பது புரிந்தது. 

அக்கணம்.. ஆளை மயக்க வைக்கும்… ஒரு கம்பீர ஆண்குரல், 


“எங்கே என்னோட செல்லம்??” என்று கேட்க.. ஹால் முழுவதும் தன் மழலையைத் தேடித் தேடி உலா வரும்… அமர்நாத்தின் குரல் தான் கேட்டுக் கொண்டிருந்தது. 

ஹாலைத் தொடர்ந்து… சமையலறையில் நுழைந்தவனோ,

 “எங்கே என் ராம் செல்லம்” என்று கேட்டுக் கொண்டே அவளை நாடி வர.. 

அவளோ தன் குழந்தையைக் காட்டிக் கொடுக்க பிரியப்படாது.. தோள்களைக் குலுக்கி, “எனக்கு தெரியாது” என்றாள் அவள். 

ஆனால் குழந்தையைத் தேடி அங்கே வந்திருந்த ஆண் அரிமாவிற்கும் கூட…. தன் பெண்மானைக்கண்டதும்.. அதிலும்.. சேலையின் மாராப்பு முழுதும் விலகி.. 

ஜாக்கெட்டுக்குள் இருக்கும் அவளது பப்பாளிக் கனிகள் பிதுங்கித் தெரிய… இடுப்பின் பளீரென்ற உன்மத்தம் ஏற்றும் தரிசனத்துடன் நின்றிருப்பது கண்டதும்.. அவனுக்குள் ஏகத்துக்கும் ஏறிப்போனது காதல் போதை. 

அவளின் பின்னால் வந்து நின்று கொண்டவனுக்கு.. அவளின் பின்னழகு பஞ்சு மூட்டையைக் கண்டதும்.. சேலையை இடைவரை மேலேற்றி… அங்கேயே ஒரு கலவியாட்டம் போட்டிடவும் கூடிப் போனது தாபம்!! 

அவளின் இடையைப் பற்றியிழுத்து.. அவளின் பின்னழகில்.. தன் இடுப்புக்கு கீழான பகுதியை வைத்து உரசி.. இடித்து நின்றவனோ, 


“எங்கே என்னோட செல்ல.. ம்!!” என்று… தன் மனையாளைக் கிறக்கமான குரலில் கொஞ்சி.. அவளின் காய்களை முன்னாடி கைவிட்டு கசக்கவும் ஆரம்பித்தான் அவன்.

அவளோ…குழந்தை நின்றிருக்கும் இடம் அருகாமையில் என்று அறிந்திருப்பவள் அல்லவா?? 

பட்டென்று அவன் கைகளை தன்னில் நின்றும் இழுத்து விடுவித்தவளோ,

” ம்ப்ச்சு… என்ன இது… யாராவது பார்த்துடப் போறாங்க.. முக்கியமா நம்ம கொழந்த.. அவன் அந்த ப்ரிட்ஜ் பின்னாடி நின்னுட்டிருக்கான்…?” என்று சொன்னதும் தான் தாமதம், 

“ஐயோ.. இதையேன்டீ…முன்னாடி சொல்லல.. ” என்று மனையாளை விட்டும் இரண்டடி பின்னகர்ந்து நின்று கொண்டான் அவன். 

குழந்தை முன்னிலையில் கண்ணியமான தந்தையாக எப்போதும் நடந்து கொள்ளும்  அமரனோ… இன்றும் அப்படி நடந்து கொள்ள நாடி… தன் மனையாளை விட்டும்… ஜென்டில்மேனாய் ஒதுங்கிச் செல்லவும் தான் முடிவெடுத்தான். 

அவளைக் கடந்து.. குழந்தையை நாடி விரையும் போது, அவளின் காதுக்குள்,

 “இன்னைக்கு ராத்திரி இந்த வெடக்கோழிய அடிச்சு கொழம்பு வைச்சிர வேண்டியது தான்” என்று நாவைச் சுழற்றி இதழ்களை  ஈரப்படுத்திச் சொல்லிக் கொண்டே… குளிர்சாதனப்பெட்டி நாடிப் போனான் அவன். 

அவன் அவளைப் பார்த்ததும் சிந்திய மோகனப்புன்னகையில் இவளுக்கு நாணம் வந்து பிடுங்கித் தின்ன.. இரவின் இனிமையை எண்ணி சிவந்து போனது வதனம்!! 

அக்கணம்.. குளிர்சாதனப் பெட்டி அருகில் ஒளிந்திருக்கும் சின்னவனை நாடிப் போய், 

“கண்ணா… அப்பா கண்டுபிடிச்சிட்டேஏஏன்ன்” என்று சொன்னதும்.. இதுகாறும் தந்தையின்.. தாய் மீதான சில்மிஷம் அறியாமல்… 


இருந்த மழலையும்.. திடுக்கிட்டு சத்தமாக கத்த,… அதனைத் தொடர்ந்து வெடித்துக் கேட்டது சிரிப்பொலி!!! 

அவர்களின் சிரிப்பில்… அங்கே சாப்பாட்டு மேசைக்கு கைத்தடியின் உதவியோடு வந்த தாத்தாவோ… 

அமர்.. தன் குழந்தையைத் தூக்கி முத்தம் வைத்துக் கொண்டே… கொஞ்சுவதைக் கண்டு மனமெல்லாம் நெகிழ்ந்து நின்றிருந்தார். 

“யம்மா பானூ… !” என்று நாற்காலியில் அமர்ந்து.. அவர் சாப்பாட்டுக்காக குரல் கொடுத்ததும் தான் தாமதம்…


உரிய உணவுப் பாத்திரங்களோடு ஓடோடி அவரின் அருகில் போனவளோ, 

“இதோ வந்துட்டேன் தாத்தா… உங்களுக்கு ஈஸியா டைஜஸ்ட் ஆகுற மாரி… நல்லா வேகவைச்சு வெஜிடபிள்ஸ் வச்சிருக்கேன்”என்று அவரின் உடல் நிலையைக் கருத்தில் கொண்டு… அவருக்காக பிரத்தியேகமாக சமைத்த உணவுகளைப் பரிமாறலானாள் அவள். 

தந்தை – மகனின் சிரிப்பு சத்தம் கேட்டு… அப்போது தான் அங்கே வந்திருந்த வெற்றியும்… உள்ளே வந்து  இருவரையும் பார்த்து புன்னகைக்க… சிறியவனும், 

” வெத்ரீ மாமா.. மாமா… டூக்கு டூக்கு” என்று அவனைத் தூக்கச் சொல்லி கைக்காட்டி… வெற்றியிடம் தாவிக் கொண்டான் அவன். 


ஒரு கரத்தில் குழந்தையை ஏந்திக் கொண்டே, பானு சமைத்திருக்கும் உணவுகளைப் பார்த்து நாவில் நீர் ஊற நின்றவனோ, 


“பலே பலே… இன்னாமா கமகமக்குதுய்யா சமையல் வாசம்… அதுக்குத்தான் அரேஞ்ட் மேரேஜ் பண்ணிக்கணும்ன்றது… என் ஆபீஸ் ஸ்டெனோவ காதலிச்சு கட்டிக்கிட்டேன்… பிஞ்ச சப்பாத்தியெல்லாம் சாப்பிட்றேன்மா… அங்கே இருந்தா உசுர் வாழ முடியாதுன்னு தான்.. சட்டுப்புட்டுன்னு ஸ்பாட்ட காலி பண்ணிட்டு இங்கே வந்தேன் தாயி.. நீ ஏழு ஜென்மத்துக்கு நல்லாருக்கணும் தாயி… அன்ன மாதாவே இதா வந்துட்டேன்.. “என்று சொல்லியவாறே தட்டில் சாதம் போட்டு சாப்பிட… 

அதனைக் கண்டு.. பானு, தாத்தா, அமர்.. மற்றும் குழந்தை உட்பட அனைவரும் நகைக்கலாயினர். 

ஆம், இந்த இரண்டு வருடத்தில் வெற்றிக்கு.. அவன் அலுவலகத்தில் வேலை பார்க்கும் ஸ்டென்னோ பெண்ணோடு காதல் முளைக்க.. அவளையே கரம்பற்றி சம்சார சாகரத்தில் குதித்து… அல்லல் படுகிறான் பாவம்!! 

மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் தானல்லவா?? 

அன்று மதியம் சாய்ந்த பொழுதில்… குழந்தை ராம்நாத்தும் கூட…உண்டு உறங்கியிருக்க… கிடைத்த தனிமையில்… 


தன் வெடக்கோழியை அடித்து குழம்பு வைத்து விடும் எண்ணத்தோடு… தன்னறைக்கு அரவமேயெழுப்பாமல்.. விரைந்து கொண்டிருந்தான் அவன். 

கதவை இறுக்கி மூடி தாழ்ப்பாள் இட்டு விட்டு… கலவியைப் பற்றி நினைக்கும் போது எண்ணங்கள்.. ஒரு கிளுகிளுப்பை மூட்ட… கைகளை… தேய்த்து விட்டுக் கொண்டே, 

“பேபிக்கண்ணா தூங்கும் போது தான்… எப்போதாவது… இப்படி சான்ஸ் கிடைக்குது… இன்னைக்கு என் கோழிய அடிச்சு.. கொழம்பு வைச்சு ருசிச்சிற வேண்டியது தான்… எங்கே என் கோழி… எங்கே என் கோழி?? ” என்று இதழ்கள் முணுமுணுக்க… 

அறையெல்லாம் தன் கோழியை நாடித்தான் போனாள் அவள். 

யாரையும் காணவில்லையே என்றெண்ணியவாறே சுற்றிப் பார்த்தபோது.. குளியலறைக் கதவு திறக்க.. அதில் நின்றும்.. கீழே, மேலே மாத்திரமென பிகினி அணிந்து.. 

கதவு நிலையில்.. தன் அக்குள் தெரியும் வண்ணம்.. கையை தலைக்கு மேலே வைத்து… சாய்ந்து நின்றிருந்தாள் அவள். 

குழந்தை பிறந்த பின்னும் சிக்கென்று பேணிய உடலோடு… தாமரை மலர்கள்.. பூத்துக் குலுங்க..

 நாபியின் கீழே சிறுதுண்டு மூலம்… மறைத்தும் மறைக்காமலும் இருந்த அல்குல்… இன்னும் இன்னும் தாப மயக்கத்தினை ஏற்ற நின்றிருந்தாள் அவள். 


அவனோ..உயிரோவியத்தின் அழகில் பேசக்கூட நாவெழாது வாய்மூடி நிற்க.. 


ஈரெட்டு அவனை நாடி நடந்தவளின் ஆடிய பின்னழகுப் பூசணிகளும் கூட… அவனின் மோகமுள்ளை ஆடைக்கும் மேலாக வளரச் செய்தது. 

அவனின் மார்போடு.. தன் மார்புக்கச்சையின் வாரினை அவிழ்த்து… வெற்று தனங்களை அழுத்தி… காம்புகளால் துளைத்து நின்றவள் தந்த உடலின் சூட்டில் எரிமலையாக ஆனான் அவனும்.

அவனது முரட்டு வதனத்தில் ஒற்றைக் கோடிழுத்து நின்றவளோ… தாபக்குரலில், 

“உங்க பக்கத்துல நிற்கறேன்… என்னை பாஞ்சி பருக வேணாமாஹ்.. அமர்??” என்று உசுப்பேற்றும் வண்ணம் கேட்க.. 

மறுவிநாடி.. அவளை மேற்கொண்டு பேசவிடாமல்… அவளது அதரங்களை கௌவி சர்ரென்று உறிஞ்சலானான் அவன். 

அவனது கைகளிலொன்று.. அவளது பின்மேட்டினைக் கொத்தாகப் பற்றி.. அவனது இடுப்புக்கீழான பகுதியோடு அழுத்தி.. 

தன் தாபங்களைச் சொல்ல.. இங்கே மறுகையோ… அவளது மேற்கொங்கைகளை அழுத்தி… அவளை மோகனமாக முனக வைத்துக் கொண்டிருந்தது. 

அவனில் நின்றும் இதழ் பிரித்து, “ஹாஹ்… அமர்” என்று இவள் பினாத்த..மறுவிநாடி..அவளைத் தூக்கி மஞ்சத்தில் இட்டவன்.. 

அவளது பப்பாளிகளுள் ஒன்றை… வாயில் கௌவிக் கொண்டு பழரசமும் அருந்தலானான்.

இவளோ…”ம்ம்…ஹாஹ்.அமர்…என்னென்னமோ பண்ணுது அமர்” என்று இராகமிழுக்க… 

அடுத்த பப்பாளிக்காய் நாடிப்போய்.. தன் வாய்க்குள் திணித்தவன்.. காட்டில் அன்று பெய்தது அடைமழை!! 

அவளது கைகளோ.. அவனது கூராயுதத்தை.. கைகளாலேயே பட்டைத்தீட்டிக் கொண்டிருக்க… இவன் கையும்..அவள் உள்ளே நுழைந்து.. 

நீள ஆழத்தினை அறியும் முயற்சியில் ஈடுபடலானது. 

மறுகணம்… அவன் கைகளால் உழுததில் பண்பட்டுப் போன பூமி… மழைக்காக வானம் பார்த்து நின்றது. 

கருமேகங்களும் சூழ்ந்து.. கருக்கட்டத் தொடங்க.. அவளுள்ளே புகுந்து இடித்தலைத் தொடங்க.. இதோ மழைவருவதற்கான சாத்தியக்கூறுகளும் தென்படலாயிற்று.

அவன் இடித்த ஒவ்வொரு இடித்தலுக்கும்.. இவள் கண்களிலெல்லாம் மின்னல் தெறிக்க.. அவனுக்கு பாயாய் மாறி.. சர்வமும் கொடுத்து.. விரித்துக் கிடந்தாள் அவள். 

“ஹாஹ்… ம்ம்..”என்று அவன் ஆடிய ஆட்டத்தில் இவள் புது மெட்டுக்கள் கட்டி நிற்க… அவளோ ஒவ்வொரு உரசலுக்கும்.. வானத்துக்கும், பூமிக்குமாகப் பயணப்பட்டு வந்தவள்.. அவன் முதுகில் நகக்கணுக்கள் பதியும் வண்ணம் தாபத்தின் வீரியம் காட்டியும் நின்றாள். 

ஒரு கட்டத்தில்… சீரான படகுச்சவாரியில் தடம்புரளும் ஓர் நிலையும் வரவே.. 


இருவரும் தம் முன்னே தோன்றிய சுழியில் தூக்கி வீசியெறியப்பட்டுப் போய்… கரையொதுங்கிய போது… இதயமும், உடலும் ஆசுவாசம் கண்டிருந்தது. 

கூடலின் பின்னர் தலைவனின் மார்பில் முகம் புதைத்திருக்க.. இவனும் அவளின் தலைமுடியை வருடியவாறே.. அவளை இம்மியும் விடாது அணைத்து…நின்றிருந்தான் அதீதக் காதலினால். 

மெல்ல இதமான குரலில் வாய் திறந்தவனோ, 


“ஒரு பெண்ணாக பிறப்பது தான்…உலகிலேயே அதியுன்னத பதவி பானு…முதல்ல மகள்.. அப்றம் மனைவின்ற பதவியுர்வு.. அப்றம் தாயா பதவியுர்வு… ஒரு பெண்ணுக்குத் தான் எத்தனை பரிமாணம்… அந்தப் பதவியில்… ஒவ்வொரு பெண்ணும் அனுபவிக்கும்… வலியும் தியாகமும் அதிகம் பானு.   அதை சகிச்சுட்டு வாழ்றதுக்கான முதல் காரணம்.. ஒரு பெண் தன்னை சார்ந்த கணவன், மகன்.. குடும்பம் மேலே வைக்கும் தூய்மையான அன்பு தான்” என்று சொல்ல… 


கணவனின் கூற்றுக்கள் கேட்டு பானுமதியின் முகத்தில் அழகாய் விரிந்தது புன்னகை!!  

அவள் மெதுவாக எம்பி கணவனின் நெற்றியில் முத்தமிட, அவனும் கண்களை மூடி நின்று… அன்றைய காதல் ஏகாந்த மனநிலையை இரசித்த வண்ணம் நின்றிருந்தான் அவன். 

அந்த ஒற்றை முத்தம்… அவன் மீதான அவளின் அன்பையும், அவள் மீதான அவனின் அன்பையும் எடுத்துக்காட்ட.. 


இவனோ அவளை இடையூடு கையிட்டு இறுக்கி அணைத்து, “பிரம்மன் படைச்ச உயிரோவியம் எனக்காகத் தான் பானூ.. எப்போவுமே எனக்காகத் தான் ” என்று மீண்டும் அடுத்த ஆட்டத்துக்கு தயாராகி… அவளது இதழ்களைக் கௌவிக் கொண்டான் பானு. 

அவன் தன்னை,” பேசும் உயிரோவியம்”என்று சிலாகித்ததில்.. லாவண்யமாய் நாணம் தனும் வந்து.. அவளின் வதனத்தைக் கன்றிச் சிவக்க செய்து.. அவளைத் திணறடித்தது. 

பெண்ணின் மகத்துவத்தை.. ஓர் பெண்ணால் ஏற்பட்ட வலியினால் துச்சமாக அவமதித்து நின்றவன்.. 

அதே பெண்ணின் மகத்துவத்தினை.. அரிய பொக்கிஷம் போல.. அவன் வாழ்வில் வந்த பெண்ணால் உணர்கின்றான்.

ஆவதும் பெண்ணாலே!!
அழிவதும் பெண்ணாலே!!
சர்வமும் பெண்ணாலே!! 

என்று உணர்ந்தவன்.. தன் வாழ்வில் வந்த பெண்மையை ஆராதிக்கவும், ஆகர்ஷிக்கவும் கற்றுக் கொண்டான்!!

இன்று போல் என்றும்.. இனிமையாய்.. இன்பமாய்… மாறாத காதலுடன் இவர்கள் வாழ வாழ்த்தி விடைபெறுவோமாக!!

நன்றி!!வணக்கம்!! 

****சுபம்***

Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *