உன் சுவாச காற்றில் வாழ்வேன் நான்

உன் சுவாச காற்றில் வாழ்வேன் நான்

உன் சுவாச காற்றில் வாழ்வேன் நான்

உன் சுவாச காற்றில் வாழ்வேன் நான்

உன் சுவாச காற்றில் வாழ்வேன் நான்

உன் சுவாச காற்றில் வாழ்வேன் நான்

அத்தியாயம் – 19 :
தன் கைகளை தேவ்வின் பிடியிலிருந்து விலக்கிய மிருதுளா அவனிடம் எதுவும் சொல்லாமல் காரை விட்டு இறங்கி சென்று விட்டாள். 
சிறு புன்னகையுடன் அவளையே பார்த்துக் கொண்டிருந்த தேவ் ‘மிது உன் மனசுல நான் எப்பவோ நுழைஞ்சிட்டன்… அது தெரியாம நீ இன்னும் என் மேல காதல் வரலன்னு சொல்லிக்கிட்டு திரியற… கூடிய சீக்கிரமே உனக்கு என் மேல இருக்க காதல ஒத்துக்க வைக்கிறனா இல்லையான்னு பாரு…’ என்று முணுமுணுத்தவன் விசில் அடித்தபடி காரைக் கிளப்பினான். 
மிருதுளாவின் மனதில் தான் நுழைந்ததை அறிந்த தேவ்விற்கு அவன் மனதில் மிருதுளா சத்தமின்றி நுழைந்துவிட்டது தெரியாமல் போனதுதான் விதி… 
தன் அப்பார்ட்மெண்ட்க்கு வந்த  மிருதுளாவிற்கு  எதைப் பற்றியும் யோசிக்கவே பிடிக்கவில்லை… தான் யோசிக்கத் தொடங்கினால் தன் மனம் தேவ்வின் புறம் சாய்ந்து விட வாய்ப்பு அதிகம் என்று அவளுக்குத் தெரியும். அதனாலேயே அவள் யோசிக்க பயந்தாள். 
நேராக தன் அறைக்குச் சென்று உடையை மாற்றியவள் எதுவும் சாப்பிட பிடிக்காததால் பாலை மட்டும் காய்ச்சிக் குடித்துவிட்டு வந்து படுத்தாள். 
அப்போது அவளின் போன் ஒலித்தது. 
‘இந்த நேரத்துல யாருடா நமக்கு போன் பண்றது’ என்று யோசித்தபடி  அவள் போனின் திரையை பார்த்த போது அழைப்பது அவளின் ஆடிட்டர் மகேஷ் என்பதை தெரிந்து கொண்டவள் அடுத்த நொடி போனை ஆன் செய்து “ஹலோ சார்” என்றாள். 
“சாரிமா மிருதுளா… இந்த நேரத்துல உன்ன டிஸ்டர்ப் பண்ணிட்டன்…” என்று சொன்னவர் மேலும் தொடர்ந்து “திரும்பவும் ஒரு பிரச்சனை மிருதுளா… அமிர்தா நாளைக்கு காலையில உன்னோட வந்து ஜாயின் பண்றதா இருந்தது இல்லையா? இப்போ அவள வர முடியாத சூழ்நிலை…” என்று சங்கடத்துடன் சொன்னார். 
“என்ன விஷயம் சார்? ஏன் அமிர்தாவால நாளைக்கு வர முடியாது?” 
“அவளோட பாட்டி திடீர்னு இன்னைக்கு ஈவ்னிங் இறந்துட்டாங்களாம்… அவங்க இறுதி காரியம் முடிச்சு அவ வரதுக்கு இன்னும் மூணு நாள் ஆகும்… அது மட்டும் இல்லாம அவங்க சைட்ல எல்லாம் ஏழாம் நாளே காரியம் பண்ணிடுவாங்களாம்…  அதுக்கும் அவ போகணுமாம்… அதுதான் வந்து வந்து போறது கஷ்டம் சார்ன்னு ஒரு வாரம் லீவ் கொடுங்கன்னு கேட்கறா… இந்த மாதிரி விஷயன்றதனால முடியாதுன்னும் சொல்ல முடியல… நீ என்னம்மா சொல்ற…” 
“ஒன்னும் பிரச்சனை இல்ல சார்… என்னால  தனியா மேனேஜ் பண்ணிக்க முடியும்… டீடைல்ஸ் எல்லாம் பக்காவா இருக்கு… அது மட்டும் இல்லாம இது இயர் எண்டு ஆடிட் இல்லயே… குவார்ட்டலி ஆடிட் தான…  அமிர்தா வரலன்னா ஒன்னும் பிரச்சனை இல்ல… கூட ரெண்டு மணி நேரம் இருந்தா நானே இந்த வாரத்துக்குள்ள எல்லா வேலையையும் முடிச்சிடுவன்… ஆனா தேவ் சார் என்ன சொல்லுவார்ன்னு தெரியல… ஏற்கனவே  அமிர்தாவுக்காக ஒருமுறை எக்ஸ்கியூஸ் கேட்டுட்டோம்… திரும்பவும் அவர்கிட்ட எப்படி  சார் எக்ஸ்கியூஸ் கேட்கறது?” என்று மிருதுளா தயக்கத்துடன் சொன்னாள். 
“அதைப் பத்தி நீ கவலைப் படாத… தேவ் கிட்ட நான் பேசிக்கிறன்… எடுத்து சொன்னா புரிஞ்சிப்பார்… அதுமட்டுமில்லாம அவருக்கு வேலை முடியறது மட்டும் தான் முக்கியம்…  உன்னால இந்த வாரத்துக்குள்ள எல்லா வேலையையும் முடிக்க முடியுமா? அப்படி இல்லேன்னா சொல்லு… நான் பெங்களூர்ல இல்ல டெல்லியில இருந்து யாரையாவது வரவழைக்கிறான்…” என்று அவர் சொன்னார். 
“இல்ல சார்… இங்க அப்படி ஒன்றும் பெருசா வேலை இல்ல… நான் சொன்ன மாதிரி என்னால தனியா மேனேஜ் பண்ணிக்க முடியும்… என்ன  ஒரு ரெண்டு மூனு மணி நேரம் எக்ஸ்ட்ரா ஒர்க் பண்ற மாதிரி இருக்கும்… பட் ஐ கேன் மேனேஜ் சார்… நீங்க அமிர்தாவுக்கு லீவ் கொடுத்துடுங்க… அதே சமயம் தேவ் சாருக்கும் விசயத்த இன்பார்ம் பண்ணிடுங்க…” என்று சொல்லிவிட்டு அழைப்பைத் துண்டித்தாள். 
அடுத்த ஐந்தாம் நிமிடம்  அவளுக்கு போன் செய்த தேவ் எடுத்த எடுப்பில் “மகேஷ் போன் பண்ணார்… உன்னோட கொலீக் அமிர்தாவுக்கு வர முடியாத சூழ்நிலையாம்… ஆனா நீயே இந்த வாரத்துக்குள்ளயே எல்லா கணக்கையும் முடிச்சிடுவேன்னு சொன்னார் உண்மையா?” என்று கேட்டான். 
“ஆமா சார்… அமிர்தாவோட பாட்டி இறந்துட்டாங்களாம்…  அதனாலதான் அவளால வர முடியல சார்… தப்பா எடுத்துக்காதீங்க…” 
“இதுல நான் தப்பா எடுத்துக்க என்ன இருக்கு… எனக்கு என் வேலை முடிஞ்சா போதும்… நீங்க எத்தனை பேர் வந்து வேலை பாக்கறீங்கன்றது எனக்கு முக்கியம் கிடையாது… ஆனா நீ டெய்லி கூட கொஞ்ச நேரம் இருந்து எக்ஸ்ட்ரா ஒர்க் பண்ண வேண்டி இருக்கும்னு சொன்னாரே…” 
 “ஆமா சார்… டெய்லி  ஆபீஸ் முடிஞ்ச பிறகு ஒரு மூணு மணி நேரம் இருந்து வேலை பாத்து இந்த வாரத்துக்குள்ள எல்லா கணக்கையும் முடிச்சிடறன்…” என்று அவள் சொன்னதும் 
“என்னால அதுக்கு அலோ பண்ண முடியாது  மிது… ஆறு மணிக்கு வேலை முடிஞ்சதுக்கப்புறம் ஒன்பது மணி வரைக்கும் வொர்க் பண்ணிட்டு நீ எப்போ வீட்டுக்கு போவ… நைட் ஒன்பது மணிக்கு மேல நீ தனியா போறது உனக்கு சேப் கிடையாது… அதனால நீ என்ன பண்ற மார்னிங் டூ ஹவர்ஸ் முன்னாடியே வந்து ஒர்க்க ஸ்டார்ட் பண்ணிடு… அப்புறம் ஈவினிங் எக்ஸ்ட்ரா ஒன் ஹவர் பண்ணு…” என்று அழுத்தமான குரலில் சொன்னான். 
“மார்னிங் டூ ஹவர்ஸ்ன்னா நான் ஏழு மணிக்கெல்லாம் ஆபீஸ் வர மாதிரி இருக்குமே சார்… அது கொஞ்சம் கஷ்டம்…” என்று அவள் தயக்கத்துடன் சொன்னாள். 
“எனக்கு அத பத்தி எல்லாம் கவலையில்ல… உன்னோட சேப்டி மட்டும் தான் எனக்கு முக்கியம்… ஒன் வீக்  தானே… அட்ஜஸ்ட் பண்ணி வா… நான் எப்பவும் ஆபிஸிலேயே இருக்க மாட்டன்… நான் அங்க இருக்கறதா இருந்தா நீ எவ்வளவு நேரம் வேலை பார்த்தாலும் உன்னை கொண்டு போய் வீட்ல விட்டுட்டு அப்புறம் நான் போவன்… அதுக்கு வாய்ப்பே இல்லாத போது என்னால ரிஸ்க் எடுக்க முடியாது… டூ வாட் ஐ சே மிது” என்றவன் அவள் பதில் சொல்ல அவகாசம் கொடுக்காமல் அழைப்பை துண்டித்து விட்டான். 
தன் கையில் இருந்த போனையே வெறித்துப் பார்த்த மிருதுளா ‘அடேய் நான் ஏழு மணிக்கு ஆபீஸ்ல இருக்கணும்னா அஞ்சு மணிக்கு எழுந்து குளிச்சி  கிளம்பணும்டா… அது எனக்கு எவ்வளவு கஷ்டம்னு உனக்கு தெரியுமா?’ என்று புலம்பினாலும் தேவ்  சொன்னதை செய்தாக வேண்டிய நிலையில் அவள் இருந்ததால் அடுத்த நாள் காலை ஐந்து மணிக்கு எழுந்து தேவ்வை திட்டிக்கொண்டே தயாரானவள் தன் வீட்டை விட்டு கிளம்ப விருந்த தருணம் காலிங் பெல் அடித்தது. 
‘யாருடா அது… இவ்வளவு காலையில வந்திருக்கறது…’ என்று யோசித்தபடி கதவைத் திறந்தவள் அங்கே கையில் பொக்கேயுடன் ஒருவன் நின்றிருப்பதை பார்த்தாள். 
ஆனால் நேற்று போல் இன்று அவளுக்கு திகைப்பெல்லாம் ஏற்படவில்லை. இந்த ஒரு நாளிலேயே தேவ்வின் அதிரடிக்கு அவள் பழகி இருந்தாள். 
பொக்கேயை வாங்கி கொண்டு கதவை சாத்தியவள் தன் கையில் இருந்த ஆர்கிட் பூக்களை வருடினாள். 
‘நேத்து ரோஜா… இன்னைக்கு ஆர்கிட்டா கலக்கறடா…’ என்று முணுமுணுத்தவள் வாடியிருந்த ரோஜாவை எடுத்து குப்பைத் தொட்டியில் போட்டுவிட்டு அந்த ஆர்கிட் மலர்களை பிளவர் வாஷில்  வைத்து விட்டு வீட்டைப் பூட்டிக் கொண்டு கிளம்பினாள். 
அவள் ஆபீஸ் வந்த போது செக்யூரிட்டியை தவிர  யாரும் இல்லை… 
‘அடேய் படுபாவி இப்படி ஈ … காக்கா கூட வராத நேரத்திற்கு என்ன ஆபீஸ் வர வச்சிட்டியே… உன்ன எல்லாம் என்ன பண்றது… எல்லாம் என் நேரம்… நீ சொல்றத கேட்க வேண்டிய இடத்துல நான் இருக்கன்…’ என்று புலம்பியபடி தன்னுடைய இருக்கைக்கு சென்றவள் மேஜை டிராயரில் இருந்த பைல்களை எல்லாம் எடுத்து தன் மேஜையின் மீது அடுக்க தொடங்கினாள். 
அப்போது “ஹாய் மிது குட்டி… குட் மார்னிங்…” என்ற குரல்  திடீரென்று கேட்டதும் தன் கையில் வைத்திருந்த பைல்களை பயத்தில் கீழே போட்டவள் தன் நெஞ்சை பிடித்தபடி நிமிர்ந்து பார்த்தாள். 
“நீங்க தானா சார்… நான் யாரோன்னு நெனச்சி பயந்துட்டன்…” என்று சொன்னவள் கீழே போட்ட பைல்களை எடுத்து மேஜை மீது வைத்தாள். 
“என்னைத் தவிர வேற யார் உன்னை இப்படி செல்லமா கூப்பிடுவாங்க…” அவளை முறைத்தபடி கேட்டவன் “என்ன மேடம் என்ன திட்டிக்கிட்டே வந்தீங்க போல…” என்று கேட்டுவிட்டு அவளைப் பார்த்து கண்ணடித்தான்.

Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *