உன் சுவாச காற்றில் வாழ்வேன் நான்… பாகம் இரண்டு

உன் சுவாச காற்றில் வாழ்வேன் நான்... பாகம் இரண்டு

உன் சுவாச காற்றில் வாழ்வேன் நான்… பாகம் இரண்டு

உன் சுவாச காற்றில் வாழ்வேன் நான்… பாகம் இரண்டு

உன் சுவாச காற்றில் வாழ்வேன் நான்… பாகம் இரண்டு

உன் சுவாச காற்றில் வாழ்வேன் நான்… பாகம் இரண்டு

உன் சுவாச காற்றில் வாழ்வேன் நான்… பாகம் இரண்டு

உன் சுவாச காற்றில் வாழ்வேன் நான்… பாகம் இரண்டு

அத்தியாயம் – 12 :
தேவ் சொன்னதைக் கேட்டதும் ஒரு நொடி விக்கித்து நின்ற மிருதுளா வேறுவழியில்லாமல் அங்கிருந்து கிளம்பினாள். 
மறுநாள் காலை எழுந்ததும் எப்படியாவது இன்று தேவ்விடம் பேசி கன்வின்ஸ் செய்து அமரைப் பார்த்து விடவேண்டும் என்று நினைத்தவள் வேக வேகமாக தயாரானாள். 
நாய்க்குட்டியை எட்டி உதைப்பது போல தன்னை  கேவலமாக நடத்துபவன் முன்பு திரும்பத் திரும்ப சென்று நிற்பது அவளுக்கு அசிங்கமாக தான் இருந்தது. ஆனால் இப்போது அவளிடம் வேறு வழி இல்லை. 
அமர் தன்னை நினைத்து ஏங்காமல் நன்றாக இருக்கிறான் என்று அவளுக்குத் தெரிந்தால் கூட போதும். அவள் நிம்மதியாக இருப்பாள். அதற்காக தான் தன் மகனை ஒரு முறையாவது பார்த்துவிட அவள் துடித்தாள். 
மிருதுளா தேவ்வின் வீட்டிற்கு சென்ற போது அங்கு அவளுக்காக ஒரு அதிர்ச்சி காத்திருந்தது.  
மிருதுளாவைப் பார்த்ததும் தேவ்வின் வீட்டு வாசலில் நின்றிருந்த செக்யூரிட்டியின் முகத்தில் வருத்தம் தெரிந்தது. 
செக்யூரிட்டி எதற்காக தன்னை பாவமாக பார்க்கிறார் என்று அவளுக்கு குழப்பமாக இருந்தது. 
நேராக அவரிடம் சென்றவள், “தேவ் உள்ள இருக்காரா?” என்று கேட்டாள். 
“இல்லம்மா… வீட்ல யாரும் இல்ல… உன் பையனுக்கு நைட்டு ரொம்ப உடம்புக்கு முடியாமப் போயிடுச்சு… அதனால தேவ் சார் உன் பையன ஹாஸ்பிடல்ல கொண்டு போய் சேத்துருக்கார்… ஆயாம்மாவும் கூட போய் இருக்காங்க” என்று செக்யூரிட்டி வருத்தத்துடன் சொன்னார். 
அவர் சொன்னதைக் கேட்டதும் மிருதுளா தன் தலையில் இடி விழுந்ததைப் போல சமைந்து நின்றாள். 
“என்ன அண்ணா சொல்றீங்க? அமருக்கு உடம்பு சரி இல்லையா? என்ன ஆச்சு?” என்று அவள் பதறியபடி கேட்டாள். 
“என்னன்னு எனக்குத் தெரியலம்மா… ஒருவேளை உன்னை பாக்காத ஏக்கத்துல காய்ச்சல் வந்துடுச்சோ என்னவோ?” என்று அந்த செக்யூரிட்டி சொன்னார். 
“எந்த ஹாஸ்பிடலுக்கு அமரை கூட்டிட்டு போனாங்கன்னு உங்களுக்கு தெரியுமா அண்ணா?” 
“எனக்கு உறுதியாக தெரியலம்மா… ஆனா தேவ் சார் ராயல் ஹாஸ்பிடலுக்கு போங்கன்னு டிரைவர் கிட்ட சொன்னது என் காதில் விழுந்தது…” என்று செக்யூரிட்டி சொன்ன அடுத்த நொடி மிருதுளா ஒரு ஆட்டோ பிடித்து ராயல் ஹாஸ்பிடலை நோக்கி சென்றாள். 
ஹாஸ்பிடலுக்குள் நுழைந்ததும் நேராக ரிசப்ஷனுக்கு சென்ற மிருதுளா “பேஷண்ட் நேம் அமர்… எந்த ரூம்ல இருக்கான்னு சொல்ல முடியுமா?” என்றாள். 
அதுவரை கம்ப்யூட்டரில் வேலை பார்த்துக் கொண்டிருந்த பெண் மிருதுளாவை நிமிர்ந்து பார்த்தவள், “ஒரு நிமிஷம் இருங்க” என்று சொல்லிவிட்டு தன் மெல்லிய விரல்களால் கம்ப்யூட்டரின் கீபோர்டை தட்டினாள். 
“எமர்ஜென்ஸி வார்ட்ல அட்மிட் பண்ணியிருக்காங்க மேடம்…” என்று அந்தப் பெண் சொன்னதும் 
“அது எங்க இருக்கு” என்று மிருதுளா கேட்டாள். 
“ரெண்டாவது மாடியில…” என்று அந்தப் பெண் சொன்னதும் 
“ரொம்ப தேங்க்ஸ்” என்ற மிருதுளா நேராக இரண்டாவது மாடியை நோக்கி ஓடினாள். 
எமர்ஜென்ஸி வார்டுக்கு அவள் சென்ற போது அமரை பார்த்துக் கொள்ளும் ஆயா மட்டும்தான் அங்கு இருந்தார். 
நேராக அவரிடம் சென்றவள், “என் பையனுக்கு என்ன ஆச்சு?” என்று கேட்டாள். 
“எனக்கு தெரியலம்மா… நேத்து காலையில எழுந்திருக்கும் போதே அம்மா வேணும்னு கேட்டான்… சார் அம்மா வேலைக்கு போய் இருக்காங்கன்னு சொன்னதும் சமாதானமாகி விளையாடத் தொடங்கிட்டான்… ஆனா சாயந்தரம் ஆனதும் அவன் உன்னை தேடத் தொடங்கிட்டான்… என்ன சொல்லியும் அவனை சமாதானப்படுத்த முடியல… அம்மா வேணும்… அம்மா வேணும்னு சொல்லி அழ தொடங்கிட்டான்… என்னென்னவோ சொல்லி அவனை சமாதானம் பண்ணி நானும் சாரும் தூங்க வச்சோம்… ஆனா ராத்திரி ஒரு நேரத்துல அவனுக்கு காய்ச்சல் வந்துடுச்சு… சார் உடனடியா ஹாஸ்பிடலுக்கு கொண்டு வந்து   சேர்த்துட்டார்…” என்று அந்த ஆயா சொன்னார். 
“என்ன பாக்காத ஏக்கத்துல தான் காய்ச்சல் வந்திருச்சா…” என்று சொன்ன மிருதுளாவிற்கு அப்போதுதான் அமர் எமர்ஜென்சி வார்டில் இருப்பது நினைவுக்கு வந்தது. 
“ஆமா சாதாரண ஜுரத்துக்கு எதுக்காக எமர்ஜென்சி வார்ட்ல அட்மிட் பண்ணி இருக்காங்க… உண்மையை சொல்லுங்க… என் பையனுக்கு வெறும் காய்ச்சல் தானா… இல்ல வேற ஏதும் பிரச்சனையா?” 
“எனக்கு தெரியலம்மா… நாங்களும் சாதாரண காய்ச்சல்னு நினைச்சி தான் சேர்த்தோம்… ஆனா இப்போ வரைக்கும் காய்ச்சல் குறையலம்மா… டாக்டருங்க வேற நிறைய டெஸ்ட் எடுக்கறாங்க… அவங்க எதுக்காக இத்தனை டெஸ்ட் எடுக்கறாங்கன்னு எனக்கு புரியலம்மா… இதையெல்லாம் பாக்கும் பொது புள்ளைக்கு ஏதோ பெருசா வந்திருக்குமோன்னு தோணுது…” 
ஆயா சொன்னதைக் கேட்டதும் மிருதுளாவின் அடிவயிறு கலங்கியது. 
‘என்ன இவங்க என்னென்னவோ சொல்றாங்க… என் பையன் நல்லா தான இருந்தான்? திடீர்னு அவனுக்கு என்னவாயிருக்கும்?’ என்று அவள் கலங்கி கொண்டிருந்த போது 
அங்கு வந்த தேவ், “நீ எதுக்காக இங்க வந்த? என் பையன் இருக்க திசை பக்கம் கூட வராதுன்னு சொன்னனா இல்லையா?” என்று கேட்டான். 
தேவ்வை பார்த்ததும் மிருதுளா எரிமலையாய் வெடித்தாள். 
“இனி ஒரு வார்த்தை ஒரு வார்த்தை கூட நீ பேசக்கூடாது… உனக்கு அதுக்கு தகுதி இல்ல… என் பையன் என் பையன்னு சொன்னா போதுமா… ஒருநாள் ஒரே ஒருநாள் உன்னால அவனை நல்லபடியா பார்த்துக்க முடியல… அவனை இங்க கொண்டு வந்து படுக்க வச்சிட்ட… என் வாழ்க்கையை கெடுத்தது பத்தாதுன்னு இன்னிக்கி என் புள்ளையோட உயிரையும் வாங்க பாக்கற… அதுசரி அவன் வயித்துல இருக்கும் போதே அழிக்கணும்னு நெனச்சவன் தான நீ… அதான் அப்போ பண்ண முடியாததை இப்போ பண்ணிட்ட… நீ எல்லாம் மனுசனாடா…” என்று மிருதுளா அவன் சட்டையை உலுக்கியபடி கேட்டாள். 
அப்போது அங்கு வந்த டாக்டர், “என்ன நடக்குது இங்க? எதுக்காக இப்படி எமர்ஜென்சி வார்ட் முன்னாடி நின்னு கத்திகிட்டு இருக்கீங்க?” என்று மிருதுளாவை பார்த்து சத்தம் போட்டவர் தேவ்வை பார்த்து, “என்ன சார் இது?” என்று கேட்டார். 
“நத்திங் டாக்டர்… இவங்கதான் அமரோட அம்மா அவனுக்கு உடம்பு சரியில்லைன்னு கேள்விப்பட்டதும் கொஞ்சம் எமோஷனல் ஆயிட்டாங்க” என்று தேவ் உணர்ச்சியற்ற குரலில் சொன்னான்.
“ஓ அப்படியா… ஆனா அதுக்காக எமர்ஜன்சி வார்ட் முன்னாடி கத்தறது சரி கிடையாது… அவங்களை கன்ட்ரோலா இருக்க சொல்லுங்க…” என்றவர் தொடர்ந்து, “சரி… நீங்க ரெண்டு பேரும் ஒரு நிமிஷம் என்னோட ரூமுக்கு வாங்க” என்று சொல்லிவிட்டு அங்கிருந்து சென்று விட்டார். 
தன் சட்டையின் மீது இருந்த மிருதுளாவின் கையை எடுத்து விட்ட தேவ் அவளை திரும்பிக்கூட பார்க்காமல் டாக்டரின் அறையை நோக்கி சென்றான். 
மிருதுளாவும் அவன் தன்னை அழைக்க வேண்டும் என்று நினைக்கவில்லை. அவளுக்கு இப்போது நினைவில் இருந்ததால்தான் அமர் மட்டுமே. அதனால் அவளும் அவனைப் பின் தொடர்ந்து டாக்டரின் அறையை நோக்கி சென்றாள். 
அவர்கள் இருவரும் அறைக்குள் நுழைந்ததும் அவர்களை தனக்கு எதிரில் இருந்த நாற்காலியில் அமரச் சொன்ன டாக்டர் சிறிது நேரம் எதையும் பேசவில்லை. அமைதியாக இருந்தார்.
பின்னர் லேசாக தன் தொண்டையை கனைத்தவர், “சார் அமரோட இனிசியல் டெஸ்ட் ரிப்போர்ட் எல்லாம் வந்துடுச்சு…” என்று சொன்னார். 
“டெஸ்ட் ரிசல்ட் என்ன சொல்லுது டாக்டர்… எதுவும் சீரியஸ் இல்லையே…” என்று தேவ் கேட்டான். 
“இல்ல சார்… இது பெரிய பிரச்சனை தான்… அமருக்கு லுக்கேமியா இருக்கறதா இந்த டெஸ்ட் ரிப்போர்ட்ல வந்துருக்கு… அது என்ன டைப்னு தெரிஞ்சுக்கணும்னா இன்னும் சில டெஸ்ட் எடுத்து பாக்கணும்” என்று டாக்டர் வருத்தத்துடன் சொன்னார். 
“என்ன டாக்டர் சொல்றீங்க? என் பையனுக்கு லுகேமியாவா? ஆனா அவன் நல்லா தான இருந்தான்… திடீர்னு எப்படி அவனுக்கு இந்த நோய் வந்துருக்க முடியும்?  இல்ல டாக்டர் இந்த டெஸ்ட் ரிப்போர்ட்ல தான் ஏதோ தப்பு நடந்திருக்கு… நீங்க வேணும்னா திரும்பவும் டெஸ்ட் எடுத்துப் பாருங்க… நிச்சயம் என் பையனுக்கு இப்படி ஒரு நோய் வந்திருக்க சாத்தியமே இல்ல…” என்று மிருதுளா பதற்றத்துடன்  சொன்னாள். 
“இல்லம்மா எங்க ஹாஸ்பிட்டல்ல அந்த மாதிரி எல்லாம் தப்பான ரிப்போர்ட்டர் கொடுக்கமாட்டோம்… ஒன்னுக்கு ரெண்டு மூணு டெஸ்ட் எடுத்துப் பாத்துவிட்டு தான் நாங்க அமருக்கு லுக்கேமியானு கன்ஃபார்ம் பண்ணோம்” என்று டாக்டர் பொறுமையாக எடுத்து சொன்னார்.
மிருதுளா சொன்னதை அவர் தவறாக எடுத்துக் கொள்ளவில்லை.  அவள் இடத்தில் யார் இருந்தாலும் இப்படிதான் சொல்வர் என்று அனுபவம் வாய்ந்த அந்த டாக்டருக்கு நன்றாகவே தெரியும். 
“டாக்டர் இதை சரி பண்ணிடலாம் இல்லையா?” என்று மிருதுளா நடுங்கிய குரலில் கேட்டாள். 
“இப்போதைக்கு என்னால உறுதியா எதுவும் சொல்ல முடியாதும்மா… எல்லா டெஸ்ட் ரிசல்ட்டும் வந்த பிறகு தான் என்னால எதையும் சொல்ல முடியும்…” என்று டாக்டர் சொன்னார்.
டாக்டர் சொன்னதை கேட்டதும் மின்சாரம் தாக்கியதை போல மிருதுளா அதிர்ந்தாள்.  

Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *