அத்தியாயம் – 1
“ஆன்ட்டி, உமா காலேஜுக்கு கிளம்பி போயிட்டாளா?எல்லாமே நல்லா தானே போய்க்கிட்டிருக்கு “என்று ஸ்ரீகாந்த் ரவிச்சந்திரன் தன்னுடைய நவீன ரக கைப்பேசிகைப்பேசியினூடாக ,கனடாவில் படித்துக் கொண்டிருக்கும் தன் உடன் பிறந்த தங்கையைப் பற்றி விசாரித்தான்.
மறுமுனையில் இருந்த பெண்மணியும், “ம்….கிளம்பி போயிட்டா …இந்த தடவை அவளுக்கு ஃபைனல் எக்ஸாம் இருக்கு…முடிச்சதும் ஸ்ரீலங்கா வந்துடுவா “என்று உமா பற்றிய தகவல் கூற, தங்கை வெகுவிரைவில் தன்னருகே வரப் போவதால் ஒருகணம் இதயம் சிலிர்க்க, அந்த சந்தோஷத்தை வெளிக்காட்டாது, “சரி…வரட்டும்…ஏதாவது பணம் தேவைன்னா சொல்லுங்க…. ஓல்ரெடி உங்க அக்கௌன்ட்க்கு பணம் ட்ரான்ஸ்பர் பண்ணிட்டேன் “என்று விட்டு அழைப்பைத் துண்டித்தான்.
ஸ்ரீகாந்த் ரவிச்சந்திரன்,யாருமில்லாத அநாதை தான். அவனுக்கிருப்பது ஒரேயொரு தங்கை தான்… உமா ரவிச்சந்திரன். அவள் படிப்பது கனடாவில்.
சற்று நேரத்திற்கு முன்,அவன் “ஆன்ட்டி “என்று அழைத்தது, அவனது உறவுமுறைப் பெண்மணி அல்ல. மாறாக அவன் நண்பன் கிஷோரின் அம்மா. ஆன்ட்டியிடம் இவ்வளவு தங்கையைப் பற்றி விசாரித்தவன், முகத்துக்கு முகம் பார்த்து தங்கையுடன் நேரடியாக பேசியிருக்கலாம்? ஆனால் அவன் பேசவில்லை. அது தான் அவன்.
உமா பிறந்த போது அவனுக்கு ஐந்து வயது. தன் தாயை இழந்ததும் அப்போது தான்.அவனுக்கும்,உமாவுக்கும் எல்லாமுமாய் இருந்தவர் தந்தை ரவிச்சந்திரன். பரம்பரை பரம்பரையாக பணக்காரர்கள் என்பதால்,அவர்களுக்கு ஒரு நாளும் சோற்றுப் பஞ்சம் வந்ததில்லை. ஆயினும் சிறியவனான ஸ்ரீகாந்தின் மனம் தாய்ப்பாசத்திற்கு ஏங்குவதை அவனது தந்தை கூட அறிந்திருக்கவில்லை. அவனது பதினெட்டு வயதில் தந்தையும் சென்று விட நிறுவனம் அவன் பொறுப்பில் வந்தது.
தற்பொழுது இலங்கையில் முதற்தர செல் கம்பெனி யாருடையது என்றால் அது அவனுடையது தான். “செல்வொய்ஸ்” சிம் பாவிக்காதவர்கள் என்று இலங்கையில் யாருமில்லை என்று சொல்லுமளவுக்கு ,அவனது செல்வொய்ஸ் கம்பெனி வளர்ந்திருந்தது.
பத்து இலட்சத்திற்கும் மேற்பட்ட இலங்கையர்கள் அவனுக்குக் கீழ் பணிபுரிகின்றனர்.வெளிநாட்டில் இருந்து அறிமுகமாகும் எந்த ஒரு நவீன ரக தொலை தொடர்பு சாதனமும்,அவனது கம்பெனியைத் தாண்டி உள்ளே நுழைந்து விட முடியாது எனுமளவு வளர்ச்சியில் உச்சத்தில் இருந்தான் அவன் .அவனுக்கு உலகளாவிய ரீதியில் வாடிக்கையாளர்கள் உண்டு என்பதும் ஈண்டுக் குறிப்பிடத்தக்கது .
எல்லோரும் தன் பலத்தைக் கொண்டு முன்னேறினர் என்றால்.. அவன் முன்னேறியது.. அவனுக்கிருக்கும் அதே பலவீனங்களை வைத்துத் தான்.தந்தை விட்டுச் சென்றதை பலமடங்கு அவன் பெருக்கச் செய்த காரணம் அவனுக்கிருந்த பலவீனங்களே .
சிறு வயதில் இருந்தே தனக்கொரு பொருள் கிடைக்க வேண்டும் என்றால், பிடிவாதமாக நின்று அப்பொருளை அடைவது, அப்பொருளை அடைய யாரையும் முந்த விடாதது என அவனுக்கு இருந்த எதிர்மறை எண்ணங்களை கொண்டு தான் அவன் வளர்ச்சி பெற்றான். இதுவே அவன் வாழ்க்கையை சூனியமாக்கும் என்று அவன் அப்பொழுதே அறிந்திருக்கவில்லை.
அவன் அழகிலும் குறைந்தவன் அல்லன். பேதை, பெதும்பை தொடக்கம் பேரிளம்பெண்கள் வரை கண்டு காதல் கொள்ளும் பாண்டி மன்னனை போன்றான்.இருபத்தொன்பது வருடங்கள் அவன் இந்த அவனியில் கழித்தாலும் பெண்சுகம் தேடாதவன். யாருடனும் எளிதில் பேசாதவன்,பெண்களிடம் கேட்கவா வேண்டும்?
அவனிடம் அழகு, இளமை, பணம், அந்தஸ்து என அனைத்தும் கொட்டிக்கிடந்தும், அவன் வாழ்வில் மகிழ்ச்சி மட்டும் இருக்கவில்லை.
அனைத்துமிருந்தும் இல்லாதது போல் ஒரு வெறுமை மனதளவில் இருந்து கொண்டே தான் இருக்கும். தங்கையைப் பற்றி விசாரித்தவன், தன்னறைக்கு வந்து கணனியில் எதையோ நோண்டவாரம்பித்தான்.
அநேகமாக அது “ஆப்பிள் ” நிறுவனத்தைப் பற்றிய தேடலாக இருக்கும். ஆப்பிள் நிறுவனம், இலங்கையின் சிம்வொய்ஸ் கம்பனியூடாக தன் புதிய செல்பேசியை இலங்கை சந்தைக்கு அறிமுகப்படுத்த இணங்கியுள்ளது.
ஆனால் அவனுக்கோ மனதினுள் ஒரு நெருடல். செய்யலாமா? வேண்டாமா என்று. இணங்கினால் பல பில்லியன் டாலர்கள் லாபம் கிடைக்கும்.இணங்காவிட்டால் வாய்ப்பு இன்னொரு கம்பெனிக்கு கிடைக்கும்.
ஆனால் அவனுக்கு அதில் எவ்வித நஷ்டமும் இல்லை.இருப்பினும் அவன் மனதில் ஒரு நெருடலுடனேயே கணனி முன் அமர்ந்திருந்தான்.
மறுநாள் காலை எப்பொழுதும் போல் புலர்ந்தது.வழமைப் போலவே அவன் எழும்போது அதிகாலை ஐந்து மணி.
வழமை போலவே காலைக்கடன்களை முடித்துவிட்டு, தன் மாளிகை போன்ற வீட்டில் அமைக்கப்பட்டிருந்த ஜிம்முக்கு சென்று வியர்வை சிந்த உடற்பயிற்சி செய்தான். பிறகு தன்னறைக்குச் சென்று வெதுவெதுப்பான நீரில் குளித்துவிட்டு, தன்னுடைய பிரம்மாண்டமான அலுமாரியைத் திறந்தான் அவன்.
இவையெல்லாம் அவன் கண்ணசைவில் செய்ய பல பணியாளர்கள் இருந்தாலும் அவன் மனம் அதற்கு உடன்படவில்லை. சாம்பல் நிறத்தில் ஷேர்ட்டும், அதைவிட அடர் சாம்பல் நிறத்தில் கோட்டும் ,டையும், காற்சட்டையுமாய் அணிந்து தன் அலுவலகம் செல்ல தயாராகினான் அவன் .
கையில் வெள்ளி நிறத்தில் “ரோலெக்ஸ்” கைக்கடிகாரம் பளபளத்துக் கொண்டிருந்தது. காலில் அரை லட்சம் ரூபாய் பெறுமதியுடைய லெதர் ஷூக்கள் மினுமினுத்துக் கொண்டிருந்தன.
கோட்டின் மணிக்கட்டு பட்டனை போட்டு ,நேர்த்தியாக நடந்து வந்தவனை, சாப்பாட்டறை மேசை வரவேற்றுக் கொண்டிருந்தது.
எளிமையாக காலை உணவை முடித்துக் கொண்டவன், தனது காரில் அலுவலகம் புறப்பட்டான். ஒரு சாதாரண மனிதனுக்கு இருக்க வேண்டிய அனைத்தும் கூடுதலாக இருந்தும்,அவனுக்கு மகிழ்ச்சி மட்டும் இருக்கவில்லை.
ஒரு மனிதனுக்கு தோல்வி என்ற ஒன்று இருந்தால் தான், வெற்றியின் சுவையை அறிய முடியும். ஆனால் வெற்றியே வாழ்வானால்?….அவனுக்கு வெற்றிகள் கசந்து விட்டிருந்தன.
ஏதோவொரு வெறுமை….கூடவே பத்து பேர் இருந்தும் ஒரு தனிமை.ஏன் என்று தான் அவனுக்குப் புரியவில்லை.
செல்வொய்ஸின் தலைமையகத்தில் அவனது கார் வந்து நின்றதும் தான் தாமதம், ஒரு நிமிடம் கூட காத்திராமல் ஓடி வந்து கார் கதவை திறந்தான் காவலாளி. உள்ளிருந்து இடது காலை மட்டும் தரையில் பதித்து, இடது கையாலேயே உயர் ரக கறுப்பு நிற கண்ணாடியை ஸ்டைலாக அணிந்த வண்ணம், காரிலிருந்து வெளி வந்து, வலது காலையும் தரையில் பதித்து,ஒரு கணம் கம்பீரமாக நின்று தன் அலுவலகத்தை நிமிர்ந்து பார்த்தான் ஸ்ரீ காந்த்.
ஏழுமாடிகளையும்,ஒளி ஊடுருவா கண்ணாடி ஜன்னல்களையும் கொண்டு அவனைப் போலவே திடகாத்திரமாக நின்று கொண்டிருந்தது கட்டிடம்.
இருந்தும் என்ன பயன்? மகிழ்ச்சியை காசு கொடுத்து வாங்கும் நிலை இருப்பின், தன் முழுச் சொத்தையும் விற்றாவது மகிழ்ச்சியை வாங்கியிருக்க மாட்டானா?
வழமை போலவே போலியான புன்முறுவலுடன் காவலாளியை அணுகி, ஆயிரம் ரூபாயை எடுத்து தன் சுட்டு விரலுக்கும், நடு விரலுக்கும் இடையில் ஸ்டைலாக பிடித்த படி நீட்ட, வாயெல்லாம் பல்லாக பெற்றுக் கொண்ட காவலாளியை பார்த்ததும், அவன் முகம் விகசித்தது.
காவலாளிக்கு ஏற்பட்ட மகிழ்ச்சியைப் பார்த்து, தானாய் தன் முகத்திலும் உண்மை முறுவல் விரிய, அலுவலகத்தினுள் நுழைந்தான் அவன்.
வெல்வெட் தரையில் அவன் பாதங்கள், கம்பீரமாக கால் பதித்து நடந்தன. இடையில் கேட்ட பல “குட்மார்னிங்”களை சிறு தலையசைப்பில் பெற்றுக் கொண்டபோது ,அவனுக்கு குட்மார்னிங் சொல்லி, அவனுடன் சேர்ந்து கொண்டு அவன் பின்னால் இரண்டு எட்டு இடைவெளியில் நடந்து வந்தார் மேனேஜர் கணேஷமூர்த்தி.
பின் நாற்பதுகளில் தலை முடிகளில் சில நரைத்தும், சற்றே தொப்பை போட்டும் இருந்தார் மூர்த்தி.அவன் பின்னாலேயே சென்று அவனறைக்குள் நுழைந்தார். சுமார் பத்து வருடங்களாக இந்த அலுவலகத்தில் வேலை பார்ப்பவர் அவர். சரியான நேரத்தில் சரியான ஆலோசனைகளை வழங்கி அவனை வழிநடாத்துபவரும் அவரே.
தன்னுடைய கதிரையில் முள்ளந்தண்டு கூனாமல் அமர்ந்து, அவன் காலுக்கு மேல் கால் போட்டபடி, மேசையில் இருந்த தன் நவீன ரக கணனியை செயல்படுத்திய போது, கணேஷமூர்த்தியே ஒரு கணம் வியந்தார்.
மிஸ்டர். ஸ்ரீலங்கா என்று ஏதாவது ஆணழகன் போட்டி நடந்தால், அதில் இவன் பங்குபற்றினால் அந்தப் பட்டம் இவனுக்கே கிடைக்கும். ஆனால் இவன் ஒத்துக் கொள்ள வேண்டுமே.
மூர்த்தி தான் வந்த காரணத்தை கூறவாரம்பித்தார். “சார்…ஆப்பிள் கம்பனியோட “சவுத் ஏசியன் சேர்மன்” கான்டாக்ட் பண்ணியிருந்தாரு…நம்ம கம்பனியோட சம்மதத்தை இன்னைக்கு ஈவ்னிங் ஃபைவ் தேர்ட்டிக்கு முதல் சொன்னால்…அவங்களுக்கு ஈஸியா இருக்கும்னு சொல்ல சொன்னாங்க சார்”என்று மூர்த்தி, அவன் எதிரே நின்ற வண்ணம் கூற, கணனித் திரையிலிருந்து தன் கண்களை எடுத்து மேனஜரில் பதித்தான்.
“சம்மதம் சொல்றது இருக்கட்டும் மிஸ்டர். மூர்த்தி. முதல்ல நீங்க போய் சாப்பிட்டுட்டு வாங்க” என்று மூர்த்தியின் கண்கள் பார்த்து ஸ்திரமாக, அவன் கூற, ஒரு கணம் திடுக்கிட்டு விழித்தார் மூர்த்தி. இன்று அவசரமாக அலுவலகம் வந்ததால் சாப்பிட்டிருக்கவில்லை தான்.
அதை நொடியில், வந்ததும் முகத்தைப் பார்த்துப் புரிந்து கொண்டு விட்டானே என்றும், அவனது புத்தி கூர்மையை சற்று வியந்தும் எண்ணிப் பார்த்தவர், தன் முதலாளியை எதிர்த்துப்பேசாமல் நடந்தார்.
அவனைப் பொறுத்த வரை வேலையும் முக்கியம். வேலையாட்களும் முக்கியம். வேலையாட்களின் குடும்ப நிலை முதற் கொண்டு கவனிக்க பல ஒற்றர்களை நியமித்திருக்கிறான் அவன்.
அவர்களுக்கு தேவையுணர்ந்து உதவவும், நிறுவனத்தின் சில புல்லுருவிகளை கண்டு பிடிக்கவும் இந்த உளவுப்பிரிவு பெரிதும் உதவியது.
அப்படி கண்டு பிடிக்கப்பட்ட ஒரு புல்லுருவி தான் தினேஷ்.
கிழக்கு மாகாணத்திற்கான உப பொறுப்பாளராக இருந்தவன் ,இரு கிழமைகளாக ஆளே காணவில்லை. கூடவே அவன் அலுவலகத்திற்கு சேர வேண்டிய பணம் இருபத்தொன்பது லட்சம் ரூபாயையும் காணவில்லை. அது அவனுக்கு சில்லறைத் தொகை.
அவனுடைய பணத்தை கட்டி கூட சரி செய்யலாம் . இருப்பினும் இதை அப்படியே விட்டு விட அவன் நாடவில்லை. தவறு செய்ய எண்ணும் பிற ஊழியர்களுக்கு நல்ல பாடமாக அமையட்டும் என்ற நோக்கிலேயே , தினேஷை தேடும் பணியில் இறங்கினான் அவன்.
அவன் கிடைக்கவில்லை. அவன் வீட்டுத் தொலை பேசி எண் தான் கிடைத்தது. ஊழியர்கள் யார் துணையும் இல்லாமல், தானாய் களத்தில் இறங்குவதாய் முடிவு செய்து தன்னுடைய மேசை மீது இருந்த தொலைபேசிகளில் ஒன்றை எடுத்து இலக்கங்களை அழுத்தினான் அவன்.
அத்தியாயம் – 2
“ப்ளீஸ்ங்க. ..என்னை விடுங்க …இப்போ தான் குளிச்சிட்டு வந்தேன்…நீங்க பண்றது கொஞ்சம் கூட நல்லா இல்லை…நீங்க பண்ற வேலையால் நான் திரும்பவும் குளிக்கணும்…ப்ளீஸ் லீவ் மீ”என்று ராதா வலையில் சிக்கிய மானாக ,கணவன் கைப்பிடியில் தவித்துக் கொண்டிருந்தாள்.
ராதாவின் கணவன் கோபாலும் இலேசுபட்டவனல்ல. இத்தனைக்கும் மஞ்சத்தை விட்டு எழுந்திரிக்காமல், ராதா காபி கொண்டு வரும் வரை காத்திருந்து, காபியை சிறியளவிலான மேசையில் வைக்கச் சொல்லி விட்டு, நிமிர்ந்தவளை அவள் கைப்பற்ற இழுத்து தன் மார் மீது சாய்த்துக் கொண்டவன், இப்பொழுது விடுவதாயில்லை.
மனைவியை அணைத்துக் கொண்டே, “எனக்காக இன்னொரு தடவ குளிச்சா கரைஞ்சா போயிடுவ?” என்ற வண்ணம் அவள் கன்னத்தில் மென்மையாக முத்தமிட்டான் கோபால்.
ராதா -கோபால் தம்பதியினருக்கு “ஹரீஷ்” என்றொரு நான்கு வயது மகனுண்டு.ஆனால் அவன் தொல்லை தான் இவர்களுக்கு இல்லையே. அவனைப் பார்த்துக் கொள்ளத் தான் ராதாவின் தங்கை “நித்யகாருண்யா” இருக்கிறாளே.
கணவன் கன்னத்தில் இதழ் பதிக்க, ஒரு கணம் கண்களில் காதல் இழையோட நின்றவள்,இம்முறை அவளும், அவன் நெற்றியில் இதழ்பதித்து விட்டு ,கனிவாக கெஞ்சினாள். “ப்ளீஸ்டா…ஆபிஸ்கு நேரமாச்சுல….ஃபஸ்ட் ஆபிஸ்..அப்புறம் இது….ஓ.கே யா?” என்று கேட்க, மனைவியின் கெஞ்சலுடனான கொஞ்சலில்,மனமிளகியவன் வேண்டாவெறுப்பாய் எழுந்து குளிக்கச் சென்றான்.
கணவன் முதுகை நோக்கி முறுவலை உதிர்த்துவிட்டு ,மாடிப்படியிறங்கி ஹாலை வந்தடைந்தாள் ராதா. ராதாவுக்கு எல்லாமே அவள் குடும்பம் தான் .
நடுத்தர வர்க்கம் என்றாலும், அங்கே மகிழ்ச்சிக்கு குறைவில்லை. கோபால் கொழும்பு மாநகர சபையில் வேலை செய்யும் அரசாங்க அதிகாரி. ராதா சாதாரண இல்லை த்தரசி தான். இருப்பினும் அவளும், கணவனிடமிருந்து, அன்பைத் தவிர வேறு எதுவும் எதிர்ப்பார்ப்பதாய் இல்லை.
அவள் தங்கை நித்யகாருண்யாவுக்கு ஹரீஷ் என்றால் ரொம்ப பிடிக்கும். ஹரீஷ்க்கும் அவ்வாறே.தாய், தந்தையை விட தன் சித்தி என்றால் ரொம்ப பிடிக்கும். ஹரீஷை எழ வைத்து, குளிக்க வைத்து, நர்ஸரி செல்வதற்காக சீறுடையை அணிவித்துக் கொண்டிருந்தாள் அவள் .
ஹாலில் இருந்த வட்ட வடிவ மேசையில் ஏறி நின்று கொண்டிருந்தவனுக்கு ,சீறுடை பட்டன்களை போட்டு விட்டுக் கொண்டிருந்த போது, மாடிப்படியிறங்கி வந்த ராதா, நேரே சமையலறைக்குச் சென்று இரு கப்புகளுடன் வந்தாள்.
இரண்டையும், தன் மகன் ஏறி நின்ற கொண்டிருந்த மேசையிலேயே வைத்து விட்டு, தங்கையை நோக்கி, “இன்னைக்கு வேலைக்கு போகலையா நித்தி?” என்று கனிவுடன் கேட்க, ஹரீஷின் சட்டையை “டக் இன்” பண்ணிக்கொண்டே அவளும், “இல்லைக்கா. ..இன்னைக்கு மோர்னிங் எந்த டப்பிங் வர்க்கும் இல்லை….ஈவ்னிங் தான் இருக்கு” என்று முகம் மலர கூறினாள் அவள் .
நித்யகாருண்யா ஒரு டப்பிங் ஆர்டிஸ்ட். சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கிலம் என எது வந்தாலும், அவளால் தயங்காமல் டப்பிங் செய்ய முடியுமாக இருந்தது.
அவள் வேலை பார்க்கும் “தாமரை ஸ்டுடியோ”வில் இன்று அவளுக்கு காலை வேலையில்லை. மாலை வேலை தான் உண்டு. அதுவும் கொரியநாடகமொன்றை டப்பிங் செய்யும் வேலை.
உதட்டசைவுக்கும், நேரத்துக்கும் பொருத்தமானதாய் அவளின் குரல் ஒலிக்கும் விதம் பல இரசிகர்களையும் கவர்ந்துள்ளது என்பது தான் உண்மை.
ஆனால் அதைப்பற்றிய பெருமிதமோ,இறுமாப்போ இன்றி சாதாரணமாக நடந்து கொள்ளும் போது சில சமயம் கோபால் கூட வியப்பதுண்டு.
ஹரீஷின் காலரை மடித்து சரி செய்து விட்டு, அவன் பால் முகத்துக்கு பவுடர் கொஞ்சம் பூசிவிட்டு,அவனைத் தூக்கி மேசையை சுற்றி போடப்பட்டிருந்த கதிரைகளில் ஒன்றில் அமரவைத்த அவள் , அக்கா கொண்டு வந்திருந்த கப்களில் , பால் கப்பை எடுத்து, ஹரீஷின் கைகளில் கொடுத்து பருகச்சொல்லும் போது, ஹாலில் இருந்த வீட்டுத் தொலைபேசி ஒலித்தது.
ஹரீஷை விட்டு எழுந்து செல்ல முற்பட்ட தங்கையை தடுத்து, “நீ இரு நித்தி. ..நான் போய் பார்க்குறேன்..”என்ற வண்ணம் தொலை பேசியை நாடிச் சென்றாள் ராதா. தொலை பேசியில் இந்நேரம் அழைத்துக் கொண்டிருந்தது அவன் ரவிச்சந்திரனே தான்.
திரு. தினேஷ் அவர்களின் வீடு என்று எண்ணிக்கொண்டு திரு. கோபால் வீட்டிற்கு அழைப்பெடுத்துக் கொண்டிருந்தான்.
ரிசீவரைத் தூக்கியதும் ராதா “ஹலோ” என்று குரல் கொடுக்க ஒருகணம் தயங்கினான் அவன்.
வயது முதிர்ந்த சற்றே கரகரப்பான குரல். குரல் எப்படியிருந்தால் நமக்கென்ன என்று எண்ணியவன் , நேராக விடயத்திற்கு வந்தான். அவன் குரலில் மனம்,ஆசைகள்க்கேயுரிய காந்தத்தன்மை இருந்ததை ராதாவும் ஒரு கணம் கேட்டாள். அந்தக் குரல் ஆங்கிலத்தில் வேறு உரையாடவும் மரியாதையும் சற்றே கூடிற்று.
“ஹலோ. ..மே ஐ ஸ்பீக் டு மிஸ்டர். தினேஷ் ப்ளீஸ் ?”என்று அந்தக் குரல் கேட்க, ராதாவும் , “ஸாரி சார்.. ராங் நம்பர்..” என்று விட்டு அழைப்பைத் துண்டித்தாள்.
என்ன அந்தப்பெண் எடுத்ததும் “ராங் நம்பர்”என்கிறாள் ?
ஒரு வேளை நாம் தான் தப்பாக அழுத்தி விட்டோமோ?என்ற எண்ணம் மேலிட, தான் அழுத்திய இலக்கங்களை காட்டிய தொலை பேசியின் குட்டித்திரையையும், தனக்கு கிடைத்திருந்த இலக்கங்களையும் சரி பார்த்தான் அவன் .
சரியான இலக்கங்களை தானே டயல் செய்துள்ளான்.அப்பொழுது எப்படி அப்பெண் ராங் நம்பர் என்று கூற முடியும்? இது தினேஷின் வேலையாய் இருக்கும்.
பேசுவது அவனின் தாய், தங்கை, அக்கா, அண்ணி , மனைவி இப்படி யார் வேண்டுமானாலும் இருக்கலாம். அடுத்த முறை என்ன சொன்னாலும் விடக் கூடாது. தினேஷ் எங்கே என்பதை விடாப்பிடியாக நின்று கேட்க வேண்டும் என்று எண்ணிக் கொண்டு மீண்டும் டயல் செய்தான். ரிசீவரை வைத்து விட்டு திரும்பிய தமக்கையிடம், பால் அருந்திக் கொண்டிருந்த ஹரீஷின் கால்களுக்கு காலுறை மாட்டிய வண்ணம், “யாருக்கா ஃபோன்ல?”என்று கேட்டாள் நித்யகாருண்யா.
“யாரோ ராங் நம்பர் போல?” என்று கூறிய படி தொலை பேசியை விட்டு இரண்டடி நகர்ந்த போது, மீண்டும் தொலை பேசி மணி அடித்தது. ஒரே ‘ஆட்’டில் திரும்பி ரிசீவரை எடுத்தாள் ராதா. இம்முறை கேட்டதும் அதே குரல் தான்.
“ஹலோ ….இது தினேஷ் வீடுனு தெரியும். ….மரியாதையா தினேஷ் எங்கே போயிருக்கான்னு சொல்லிட்டீங்கனா. ..போலீஸ்,கேஸுனு அலைய வேண்டிய அவசியம் இருக்காது”என்று இம்முறை பணிவுடன் அன்றி, கறார்க் குரலில், மறுமுனையாளன் பேச, ராதாவுக்கு மூக்கு சிவந்தது.
எவனோ ஒருவனை அழைத்து, போலீஸ் அது, இது என்று சம்பந்தா சம்பந்தமில்லாமல் பேச, அதைக் கேட்டு, ராதாவுக்கு கோபம் வந்தாலும் , கடினப்பட்டு அதை அடக்கிக் கொண்டு, “ஹலோ. …அப்படி யாரும் இங்க இல்லை…அது தான் ராங் நம்பர் னு சொல்லிட்டேனே….ப்ளீஸ். …திரும்பவும் கால் பண்ணாதீங்க” என்று கறார்க் குரலில் கூறி விட்டு அழைப்பைத் துண்டித்தாள்.
அவளுக்கு, ராதாவின் மீண்டும் அதே ராங் நம்பர் தான் தற்போது பேசியது என்று புரிபடவே, ஏதும் பேசாமல் , தமக்கையிடம் ஏதும் கேட்காமல் குட்டிப் பையன் ஹரீஷை, முழுதாக தயாராக்கி விட்ட போது மீண்டும் தொலைபேசி மணி அடித்தது. அழைத்தது அவனே தான்.
இம்முறை எடுத்ததும் ராதாவே தான். ரிசீவரைத் தூக்கி காதில் வைக்காமல் , மேசை மீது ரிசீவரை மட்டும் தனியாய் பெயர்த்து வைத்து விட்டு, அங்கிருந்து நகர்ந்தாள்.
ராதாவுக்கு நூற்றுக்கு நூறு வீதம் உறுதியாக தெரிந்திருந்தது இம்முறை எடுப்பதும் அதே குரல் காரன் என்று. எத்தனை முறை ராங் நம்பர் என்று சொல்வது,சொன்னால் கேட்க வேண்டும். இம்முறை அந்தக் குரல் காரன் தனியே கத்தட்டும் என்று எண்ணிக்கொண்டாள் போலும்.
இது அறியாத அவன், ஒற்றையாய் நின்று பேசிக்கொண்டிருந்தான். “ஹலோ இங்க பாருங்க மேடம். ..ஐ ஏம் .மிஸ்டர். ஸ்ரீகாந்த் ரவிச்சந்திரன்…செல்வொய்ஸ் கம்பனியோட ஓவ்னர்.. . பேசுறேன். ..மரியாதையா தினேஷ் எங்கே போயிருக்கான்னு சொல்லிட்டீங்கனா நல்லது..” என்று அவன் கட்டளையிடும் பாணியில் கூறிக் கொண்டிருக்க ,மறுமுனையில் தான் கேட்பார் யாருமில்லை.
அது அறிந்ததும் , முகம் கோபத்தில் சிவக்க, ரிசீவரை வைக்க முற்பட்ட போது தான் ,அவன் வாழ்வில் அதிசயம் நிகழ்ந்தது.
அந்தக் குரல் கூறிய அனைத்தும் தனக்காகவே கூறியது போல், அந்தக் குரலில் இருந்த சொற்கள் ஐந்து வயதில் இருந்தே தொலைத்த தாயின் பாசம், நேசம், அரவணைப்பு எல்லாம் மீட்டித்தருவது போல உணர்ந்தவனுக்கு , முதன் முதலாய் வயிற்றில் பட்டாம்பூச்சி பறப்பது போன்ற உணர்வு ஏற்பட்டது.
அவனது செல்கள் எல்லாம் புத்துணர்ச்சி பெற, புதிதாக பிறந்த குழந்தையின் மென்மையை தன்னைச் சூழ உணர்ந்தான் அவன். ஆனால் அந்தக் குரலில் மோகம் கொள்ளவில்லை அவன். மாறாக அவன் இதயம் வேகவேகமாக துடித்ததை மட்டும் அறிந்தான் அவன்.
இத்தனைக்கும் அவன் கேட்ட குரல் டப்பிங் ஆர்டிஸ்ட் நித்யகாருண்யாவினுடையதே தான். அவள் பேசிக்கொண்டிருந்தது ஹரீஷிடம்.
ஹரீஷ் இன்று நர்ஸரியில் ,ஆசிரியை ஆப்பிள் பழத்திற்கு நிறம் தீட்ட தரப் போவதாக மகிழ்ச்சியுடன் மழலை மொழியில் கூறிக்கொண்டிருந்தான்.
அதைக் கேட்ட அவள் கூறிய பதிலை தான் அவன் கேட்டுக் கொண்டிருந்தான். அது அவனுக்காகவே கூறப்பட்டது போல் இருக்க ஸ்தம்பித்து நின்றவனாய் கேட்கவாரம்பித்தான் அவன். அவனது காதில் குழைந்த குரல், மலரை உரசிடும் தென்றலின் கிசுகிசுப்பாய் தோன்றலாயிற்று.
“என்னோட செல்லக்கண்ணால்ல?…இந்த ஆப்பிள் ப்ராஜெக்ட்ட மட்டும் ஒழுங்கா முடிச்சேன்னா….நான் உனக்கு ஹன்ட்ரட் கிஸ் தருவேன். …நீ சொல்ற இடத்துக்கு ரெண்டு பேரும் ஔடிங் போலாம்… சரியா குட்டிப் பையா…”என்ற வண்ணம் அவள் , அவன் கன்னத்தில் இதழ் பதிக்க, அவன் அது தனக்கே தரப்பட்டது போல எண்ணினான்.
ரிசீவரிலிருந்து, சற்றே தன் கன்னத்தை நகர்த்தி, அவள் தந்த முத்தத்தை, தனக்கே தனக்கென தரப்பட்டது போல, உள்வாங்கி, கண்கள் மூடி இரசித்தான் ஸ்ரீ காந்த்.
அவனுக்கு ஒரு கணம் காலும் ஓடவில்லை. கையும் ஓடவில்லை. அந்தக் குரலின் உரிமையாளினி கறுப்பா?சிவப்பா? கட்டையா?நெட்டையா?இன்னும் ஏன் செல்வியா? திருமதியா?என்பதைக் கூட சிந்திக்க மனமற்று,தன் இதயத்தின் நெருடலை ஒரு முடிவுக்கு கொண்டு வந்தான் அவன்.
அது தான் அவன் ஆப்பிள் நிறுவனத்தினுடனான வியாபார ஒப்பந்தத்தில் ஈடுபடுவது என்று. அந்தக் குரல் கூறிய நூறு முத்தம் கிடைக்க வேண்டும் என்ற ஆவலில், தொலை பேசியை வைத்த போது உள்நுழைந்தார் அவனது மேனேஜர் கணேஷமூர்த்தி.
முதன்முதலாக அவன் முப்பத்திரண்டு வெள்ளை பற்களை பார்த்ததில் வியப்புற்று நின்றார் மேனேஜர். இந்தப் பத்து வருடங்களில் அவனை இவ்வாறு ஒரு நாளும் பார்த்ததில்லை.
அவனது இந்த முகம் புதிதாக தோன்றியது. ஆனால் அவனோ ,அவர் வந்தது கூட தெரியாமல் சிரித்துக் கொண்டிருந்தான்.
“சார்” என்ற குரல் கேட்டு சுயநினைவு அடைந்தவன், எதிரே மூர்த்தி நின்று கொண்டிருப்பதைக்கண்டு, மேனேஜரை நேரே பார்த்து, “மிஸ்டர். மூர்த்தி. ..ஆப்பிள் கம்பெனி ப்ராஜெக்டுக்கு “யெஸ்” சொல்லிடுங்க…”என்று சிரித்த முகம் மாறாமல் கூற, மூர்த்தியும் அவனின் மனமாற்றத்தைக் கண்டு ஆச்சார்யப்பட்டாலும் அதை வெளிக்காட்டாது, “ஒகே சார்”என்று கூறியவனைப் பார்த்து மேலும் தொடர்ந்தான் அவன்.
“நெக்ஸ்ட்…தினேஷோட வீட்டு நம்பர். …”என்று அவன் காந்தக் குரலில் ஏதோ கூற வர, இடையிட்ட மூர்த்தி, “ஸாரி சார். …நமக்கு கிடைச்சிருக்க நம்பர் ஃபேக் நம்பர் . …இன்னைக்கு ஈவ்னிங்குள்ள ரியல் நம்பர் கிடைச்சிடும்”என்று கூற, அவனது புருவங்களுக்கு மத்தியில் முடிச்சு விழுந்தது.
அப்படியா? அதனால் தான் அந்தப் பெண் “ராங் நம்பர் ,ராங் நம்பர்”என்று கூறினாளா?எது எப்படியோ இந்த பிழையான அழைப்பால் தானே அவளது குரலை கேட்க முடிந்தது? இல்லை அவள் குரலைக் கேட்கத் தான் பிழையான இலக்கத்தை கடவுள் அனுப்பி வைத்திருப்பாரோ என்று தோன்ற அவ்வெண்ணத்தை மனதினுள்ளே புதைத்துக் கொண்டு, “ ஓ ஐ சீ” என்றான்.
பிறகு மேனேஜரை நோக்கி, “இன்னைக்கு ஈவ்னிங் டிஸ்ட்ரிபியூட்டர்ஸ் மீட்டிங்க்கு அரேஞ்ச் பண்ணுங்க. ..நம்ம ஆபிஸ் ப்ரசன்டேஷன் ஹால்லேயே ” என்று கூற, மூர்த்தியும் “ஒகே சார் ” என்று விட்டு அங்கிருந்து நகர்ந்தார்.
அவர் சென்ற மறுகணம் அவன், தன்னுடைய தொலைபேசியை எடுத்து யாருக்கோ அழைப்பெடுத்தான். “ ஹலோ. ..நான் ஸ்ரீ காந்த் ரவிச்சந்திரன் பேசுறேன்”என்றதும், மறுமுனையில் பணிவான குரல், “சொல்லுங்க சார். …எனி ஹெல்ப் ?”என்றது.
“ஆமா. …நான் சொல்லும் டெலிபோன் நம்பர்ல இருக்கிற வீட்டுல இருக்கிறவங்களை பத்தி எனக்கு ஃபுல் டீடெயில்ஸ் வேணும்” என்றவன், அவள் வீட்டு இலக்கத்தை கொடுத்து விட்டு அழைப்பைத் துண்டித்தான்.
அவள் எப்படியிருந்தாலும் எனக்கு கவலையில்லை.கறுப்பாய், கட்டையாய் , உடலில் ஊனமாக, தீராத நோயுடையவளாய் என எப்படியிருந்தாலும் எனக்கு கவலையில்லை. ஆனால் அவள் யாருடைய திருமதியாகவும் இருக்கக் கூடாது கடவுளே! அவள் எனக்கே எனக்காக. …எனக்கு மட்டும் தான் என்று எண்ணிக் கொண்டவனாக கண்கள் மூடி கடவுளை பிரார்த்தித்தான் அவன்.
அதே கணம், மூடிய கண்களுக்குள், கற்பனையாய் குவிந்த செவ்வதரங்கள், “ப்ச்” என்ற முத்த சப்தத்துடன், தன் கன்னத்தில் பதிவது போல பிரம்மை தோன்றலாயிற்று அவனுக்கு.
அத்தியாயம் – 3
இன்று அவளுக்கு மாலைவேளை “டப்பிங்”என்பதனால், பகலானதும் மதியம் சாப்பிட்டு விட்டு, தொலைக்காட்சி பார்க்கலானாள்.
அவள் மாமா கோபால் வேலைக்கு சென்று இருக்க,ஹரீஷ் நர்ஸரி விட்டு வரும் நேரமாய் இருந்தது. தமக்கை ராதாவோ சமையல் கட்டில் எதையோ கிண்டிக் கொண்டிருந்தாள்.
நித்யகாருண்யா தனது இருபதாவது வயதில் தன் தந்தையை இழந்தாள்.கூடவே அடுத்த ஆண்டே தாயும், தந்தையின் மறைவை தாங்க முடியாமல், இறையடி சேர, அவள் தமக்கையின் வீட்டை தஞ்சம் அடைந்தாள்.
கௌரவம் தெரிந்த மரியாதையான மாமா, அன்பான அக்கா, குட்டிப் பையன் ஹரீஷ் என தாய், தந்தையரின் நினைவுகள் மறந்து சகஜ நிலைக்குத் திரும்பியிருந்தாள் அவள்.
அவள் தனக்கு டப்பிங் கலை வரும் என்று அறியக் காரணமே அவளது முறை மாப்பிள்ளை ரகுரவி தான். தந்தையின் கூடப்பிறந்த தங்கை மகன் தான் ரகுரவி.
அவளுக்கு இயல்பாகவே படிப்பு வராது. அறவே படிக்கத் தெரியாதவள் என்று கூறிவிட முடியாது. சுமாரான படிப்பு தான் அவள் மரமண்டைக்கு வந்தது.க.பொ.த உயர்தரத்திலும் அவள் கலைப்பிரிவை எடுத்ததே ரவியின் வற்புறுத்தலின் பேரில் தான். சாதாரணமாக தான் சித்தியடைந்திருந்தாள் அவளும்.
அடுத்த அடுத்த ஆண்டுகளே தாயும், தந்தையும் மறைய, அவளைத் தேற்றி வழிகாட்டியதே ரகுரவியே தான். “எத்தனை நாளைக்குத்தான் இப்படியே இருக்கப் போற நித்யா? உனக்கான வழியை நீ தான் தேர்ந்தெடுக்கணும்”என்று கூறி அவளை முடங்கவிடாமல் , பறக்க சிறகு கொடுத்தது அவனே தான்.
இருவர் தூரத்தில் பேசிக்கொண்டிருக்கும் போது, வாயசைவுக்கு ஏற்றவாறு, ரகுவிடம், “அந்த பிங்க் சுடிதார் லேடி என்ன பேசிகிட்டு இருக்காங்க தெரியுமா?” என்ற வண்ணம், ஏதாவது காமெடியாக பேசி காட்டுவாள் நித்தி.
அவன் வயிறு வலிக்க வலிக்க சிரித்தாலும், அவளது திறமையையும் கணக்கிட்டிருக்கிறான் என்பது,இது பற்றி அவன் பேசும் வரையிலும் தெரியாது. அதற்கான பாடநெறியை அவனது அரை பவுன் தங்க மோதிரத்தை விற்று படிக்கச் செய்த போது நெகிழ்ந்து போனாள் அவள் .
தமக்கை கூட இந்தளவு சிந்திக்காத நேரத்தில் ரகுரவி தன்னை தூக்கி நிமிர வைத்தது, ஒவ்வொரு நாளும் அவனை மனதார நினைக்கச் செய்யும். மலர்ந்த நினைவுகளுடன் தொலைக்காட்சியை பார்த்த போது, வசந்தம் டிவியில்”ஹலோ வசந்தம்” போய்க் கொண்டிருந்தது.
சட்டென ஏதோ நினைவு வந்தவளாக , தொலைபேசியை நாடிச் சென்றாள் அவள் . அங்கே ரிசீவர் மேசை மீது வைக்கப்பட்டிருப்பதைக் கண்டு திகைத்து, ராதா வேலை என்று உணர்ந்து, ரிசீவரை உரிய இடத்தில் வைத்துவிட்டு மீண்டும் தூக்கி, திரையில் தெரிந்த இலக்கங்களை அழுத்தினாள்.
“லைன் கிடைக்கணும், லைன் கிடைக்கணும்”என்று வாயினுள் முணுமுணுத்துக் கொண்டே காத்திருந்த போது தெய்வாதீனமாய், அவள் நினைத்தது நடந்தது. பெருத்த மகிழ்ச்சியுடன் “ஹலோ ” என்றாள் அவள்.
திரையில் தெரிந்த பெண்மணி அவளுடன் பேசவாரம்பித்தாள். பெயர், ஊர்,தொழில் எல்லாம் கேட்க, அவளும் ஒவ்வொன்றாய் பதில் சொல்ல ஆரம்பித்தாள். அவள் சொல்லி முடித்ததும் அந்தப் பெண் , “ஓ மை கோட் ….நீங்க டப்பிங் ஆர்டிஸ்ட் நித்யகாருண்யா தானே”என்றாள் மகிழ்ச்சிப் பிரவாகத்துடன்.
அவளும், “ஆமா” என்று கூற, அந்தப் பெண்ணும் “உங்களுடைய ஃபேன் மேடம் நான். ரீசன்டா மிரின்டா கூல் ட்ரிங்க்ஸ் ‘ஆட்’கு அசினுக்கு டப்பிங் கொடுத்தீங்கள்ல. …சூப்பர்ப் மேடம்”என்று கூற, எந்தவித ஆரவாரமும் இன்றி, ஒரு புன்னகையை மாத்திரம் சத்தமில்லாமல் உதிர்த்துக் கொண்டே “ தேங்க்ஸ்….நீங்களும் ப்ரோக்ராம் சூப்பரா பண்றீங்க”என்று நிகழ்ச்சி செய்யும் பெண்ணையும் அவள் வாழ்த்திக் கூறினாள்.
ஹாலில் தங்கை யாருடனோ தொலைபேசியில், உரையாடும் சத்தங் கேட்டு சமையலறையில் இருந்து வந்தாள் தமக்கை ராதா. மீண்டும் அந்த ராங் நம்பர் தானோ என்று எண்ணியவளாய் ஹாலுக்கு வந்த ராதா, தங்கை டிவிப் பெண்ணுடன் கதைப்பது புரிந்தது.
அவள் பக்கத்தில் நின்று கொண்டு ராதாவும், இரகசிய குரலில், “ஹேய் நித்தி. …எனக்கும் கொடு…நானும் கொஞ்சம் பேசிக்கிறேன்”என்று கூறினாள்.
அவளும், தமக்கையின் ஆர்வம் உணரந்து, அந்த டிவிப் பெண்ணிடம் “என் அக்காவும் கொஞ்சம் பேசணுமாம்…..கொடுக்கட்டா?”என்று கேட்க, டிவிப் பெண்ணும், “ யா..டெஃபினிட்ளி” என்றுகூற, ரிசீவர் ராதாவின் கைக்கு மாறியது.
“எப்படியிருக்கீங்க?”என்று அந்தப்பெண் கேட்க, வாயெல்லாம் பல்லாக ராதாவும் , “ நான் நல்லாருக்கேன்மா …உங்களோட ப்ரோக்ராம் சூப்பர். ..எனக்கு சூப்பர் ஹிட் பாடலொன்னு போடுங்க….நான் அவள் கிட்ட கொடுக்கிறேன்”என்று விட்டு ,தான் தொலைக்காட்சியில் பேசியதை எண்ணி மகிழ்ந்தவளாய் மீண்டும் சமையலறைக்குள் நுழைந்தாள்.
“நீங்க சொல்லுங்க மேம்…யார் யாருக்கெல்லாம் பாடல் டெடிகேட் பண்ண போறீங்க”என்று பெண் கேட்க, அவளும், “ அக்கா ராதாவுக்காகவும், என்னோட மாமா கோபாலுக்காகவும்,குட்டிப் பையன் ஹரீஷ்க்காகவும், என் அத்தைக்காகவும், ஸ்பெஷலா. ..என்னோட ஃபியன்சி “ரகுரவி”க்காகவும் டெடிகேட் பண்றேன்”என்றுகூற,
அந்தப்பெண், “ஒகே. ..”ஸ்பெஷலா உங்க ஃபியன்சி ரகுரவிக்கு” என்று கூறுங்கால், அழுத்தி, நளினமாக கூறி விட்டு “ப்ளே, பண்ணுறோம்….தேங்ஸ் ஃபோர் கோலிங்.. பை.. பை”என்று புன்னைகையுடன் கூறி விட்டு துண்டிக்க இவளும் துண்டித்தாள்.
தான் கூறியதை ரகுரவி கேட்டால் எப்படியிருக்கும் என்று நினைத்தவளுக்கு தன்னையும் மீறி சிரிப்பு வந்தது.
அதனை நேரிலேயே தெரிந்து கொள்ளலாம் என்ற எண்ணம் மேலிட, ஸ்கர்ட் அன்ட் ப்ளவுஸில் இருந்து, சுடிதாருக்கு மாறியவள் தன்னுடைய கைப்பையை எடுத்துக் கொண்டு ராதாவிடம் சென்றாள்.
“அக்கா…நான் அத்தை வீட்டுக்குப் போய்ட்டு வரேன்….அங்கே இருந்து அப்படியே நான் ஸ்டுடியோவுக்கு போய்க்கிறேன்”என்று கூறி விட்டு, வெளியே வந்து ‘ஆட்டோ’ பிடித்தாள் அத்தை வீட்டுக்கு செல்வதற்காக.
அவளது அத்தை, அது தான் ரகுரவியின் தாயார். அவர் ஒரு ஓய்வு பெற்ற அரசாங்க பள்ளிக்கூட ஆசிரியை. ரகுவுக்கு தந்தை கிடையாது. பிறந்தது முதல் அவனுக்கு தாய் முகம் தான்.
அவளது அத்தைக்கு ரகுரவியும்,நித்யகாருண்யாவும் பேசிப்பழகுவதில் எந்தவித ஆட்சேபனையும் இல்லை.
கூடிய சீக்கிரமே நித்யகாருண்யாவை தன் மருமகளாக்கி கொள்ள வேண்டும் என்பதில் அவருக்கு அலாதிப் பிரியம் உண்டு.
வாசல் படியேறிய அவளின் கண்களில் முதலில் படிந்தது, பக்கவாட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரவியின் மோட்டார் சைக்கிள்.
ஆஹா அவள் நினைத்தது போல உள்ளே தான் இருக்கிறான். சிறு மகிழ்ச்சி ஊற்றெடுக்க, உள்ளே நுழைந்தவளை வரவேற்றது இறால் வடையின் வாசனை. அத்தையின் கைப்பக்குவத்தை மெச்சிக்கொண்டே அவள் , சமையலறைப் பக்கம் நேரே சென்றாள்.
“அத்தை…இறால் வடையா? வாசனை இப்படி தூக்குது!!”என்று கூறியபடி சமையலறையில் நுழைந்து, தட்டில் சுட்டு வைக்கப்பட்டிருந்த இறால் வடையை இரு கைகளாலும் மாற்றி மாற்றி சூடு தாங்க முடியாமல் பிடித்து, வாயால் ஊதிய வண்ணம் கடித்து, மென்ற படியே அவள் சாப்பிட, அத்தையின் முகத்தில் புன்முறுவல் பூத்தது.
அவளும் சாப்பிட்டுக்கொண்டே,“அத்தை…ரகு எங்கே?”என்று விசாரித்தாள்.அத்தையும், பொரித்த இறால் வடைகளில் சிலதை சிறிய தட்டில் வைத்து அவளிடம் நீட்டி விட்டு, “அவன் ரூம்ல இருப்பான்…ஏம்மா…நீயாவது சொல்லலாம்ல?….கம்ப்யூட்டரை நோண்டுறதை விட்டுட்டு …உருப்படியா ஒரு வேலைக்கு போகச் சொல்லலாம்ல?….”என்று ரகுவுக்கு புத்திமதி கூறும் படி கூற, முதலில் தட்டை வாங்கிக் கொண்டாள் அவள்.
மகன் வேலைவெட்டி இல்லாமல் இருப்பதை எண்ணி,அந்தத் தாயுள்ளம் கவலைப்படுவதை எண்ணி அவளுக்குமே ஒரு பக்கம் கவலை தான். ஆனால் அவன் ஆர்வம் கணனியில் இருந்தால் அவள் என்ன செய்வாள்? எனவே, “விடுங்க….அத்தை அவனுக்கு ஐடி ஃபீல்ட்ல இன்ட்ரஸ்ட் இருந்தால்..நான் என்ன பண்ண? ” என்றவளாய் ,அத்தையின் மனதை தேற்றினாள்.
“நீங்க வேணும்னா பாருங்க ஒரு நாள் கண்டிப்பா அவன் பெரிய ஆளாத்தான் வருவான்”என்று ரகுவுக்கு சார்பாய் பேசியவள்,
அதற்கு மேலும் அங்கு நின்றால், அத்தை லெக்சார் அடித்தே கொன்று விடுவார்கள் என்ற பயத்தில் தட்டுடன் ,அவள் சமையலறையை விட்டு வெளியே ஹாலுக்கு வர, அவளுக்காகவே தான் காத்திருந்தவன் போல் ரகு, அவளை நோக்கி வந்து அவள் காதைப் பற்றி திருகிய வண்ணம் வெளியே அவளை இழுத்து வந்தான் ரகு.
“டேய் வலிக்குதுடா விடுடா….ப்ளீஸ்டா”என்று வலி தாங்க முடியாமல் அவள் அலற, அவனோ, “நீ பண்ண காரியத்துக்கு….உனக்கு இது ஒகே”என்றபடி அவளை அழைத்து வந்து வாசலில் விட்டவன்,
அவளை நோக்கி முறைத்தபடி, “ எதுக்கு வசந்தம் டிவிக்கு கால் பண்ணி என்னை ஃபியன்சின்ன?…சரண்யா வேற கால் பண்ணி என் உயிரை வாங்குறா?பத்தாதுன்னு எஃப். பில வேற. …நாம ரெண்டு பேரும் பிடிச்ச செல்ஃபிய போட்டு.. வித் மை ஃபியன்சின்னு போட்டு வச்சிருக்க”என்று அவன் கத்த, அவள் வயிற்றைப் பிடித்துக் கொண்டு சிரிக்கவாரம்பித்தாள்.
“ ஹஹஹா ஹஹா. ..”என்று வயிற்றைப் பிடித்துக் கொண்டு சிரித்தவள் ,“ச…சரண்யா. ..எஎன்ன சொல்லி திட்டினா?”என்று கேட்க சிரிப்பை கடினப்பட்டு அடக்கிக் கொண்டு, பேசிவிட்டு, முடியாமல் மீண்டும் சிரிக்கவாரம்பித்தாள்.
சரண்யா ரகுரவியின் ஆருயிர்க் காதலி. ரகுரவிக்கோ,அவள் வுக்கோ மனதளவில் கூட வேறுமாதிரியான எண்ணம் இல்லை. இருவரும் கிட்டத்தட்ட அண்ணன் -தங்கை போல்.
கூடவே நண்பர்கள். சரண்யாவை வேண்டுமென்று உசுப்பேற்றி விடத்தான் அவள் , வருங்கால கணவன் என்று நிகழ்ச்சியில் குறிப்பிட்டதும், முகநூலில் குறிப்பிட்டதும். அவள் நினைத்தது போலவே ரகுவிற்கு மண்டகப்படி கிடைத்திருக்கிறது என்பதை நினைக்கையில் அவளுக்கு அடக்கமாட்டாமல் சிரிப்பு வந்தது.
அவள் சிரிப்பதைக் கண்டு, ஒருகணம் மகிழ்ச்சி கூட அவன் மனதில் தோன்ற, கூடவே சரண்யாவும், “உனக்கு நான் வேணுமா?அவ வேணுமா?”என்று திட்டிச் சென்றது நினைவு வர, மகிழ்ச்சி மறைந்து முகம் இறுகியது.
“ஹலோ சார்….நேத்து என்ன பண்ணீங்க நினைவிருக்கா? ஆமஸ்ட்ரீட் ஜங்ஷன் ல நா நின்னுட்டு இருந்தப்ப…கூப்பிட, கூப்பிட கேட்காம போனீங்கள்ல..அதுக்குத்தான் இந்தத் தண்டனை”என்று அவள் மூண்ட சிரிப்பை அடக்கிக்கொண்டு கூற, அவன் டென்ஷனாக தன்னிரு கைகளையும் இடுப்பில் வைத்து முறைத்தான்.
“சரி நான் பண்ணது தப்பு தான்…ஐம் ஸாரி…அதுக்கு பரிகாரமா ….நானே உன்னை கூட்டிப்போய் கூட்டி வரேன்..ப்ளீஸ் என்னையும், சரண்யாவையும் சேர்த்து வக்கிறது உன்னோட பொறுப்பு”என்று கூற,அவனெதிரே கைகட்டி நின்று,
அவனை மேலும், கீழும் ஏற இறங்கப் பார்த்து இரங்குவதைப் போல பாவனை செய்து விட்டு, “போனா போகட்டும்னு சேர்த்து வக்கிறேன்.”என்று கூற, “எல்லாம் என் நேரம்”என்றபடி தலையில் அடித்துக் கொண்டவனைப் பார்த்து சிரித்தாள் அவள் .
அவளை ஸ்டுடியோவில் விட்டு வர என்று, அழைத்துச் சென்ற ரகுரவியின் பின்னால் அமர்ந்து, மோட்டார் சைக்கிளில் வந்த அவள் , வண்டியின் கண்ணாடியில் தெரிந்த ரகுவின் முகம் பார்த்து, “ஏன் ரகு?…நீயேன் இந்த கம்ப்யூட்டர விட்டுட்டு…வேற வேல உருப்படியா பார்க்கக்கூடாது? ” என்று அத்தை கேட்ட, அவனிடமும் கேட்கச் சொன்ன கேள்வியை கேட்டாள்.
கண்ணாடியில் அவன் முகம் இறுகுவதைக் கண்டவள்,மேற்கண்ட எதுவும் பேசாமல் இருக்க, ரகுவே தொடர்ந்தான்.
“நீயே இப்படி பேசினா எப்படி நித்தி? ” என்று அவன் இரங்கலாக கேட்க, “அது இல்லை டா?….உனக்கிருக்க டேலன்டுக்கு யு.கே , யு.எஸ் னா ஒகே….பட் இது ஸ்ரீலங்காவாச்சே…கொஞ்சம் யோசிச்சு தான் பாரேன் ரவி…. நாளைக்கே சரண்யாவோட அப்பா …பையன் என்ன வேலை பார்க்குறாருன்னா….உங்கம்மா என்ன பதில் சொல்வாங்க சொல்லு?”என்று அவள் நிலைமையை தெளிவுபடுத்திக் கூற, அதற்குள் அவளின் ஸ்டுடியோவும் வந்து விட்டிருந்தது.
பைக்கை விட்டு இறங்கியவளை நோக்கி, “ அதை பத்தி எல்லாம் நீ யோசிக்கத் தேவையில்லை . …எப்படி என்னையும், சரண்யாவையும் சேர்த்து வைக்கிறதுனு மட்டும் யோசி”என்று விட்டு பைக்கில் பறந்தவனையே பார்த்தபடி நின்றாள் அவள்.
அத்தியாயம் -4
அதேகணம்,ஸ்ரீ காந்த் விநியோகஸ்தர்களுடனான கூட்டத்தில் இருந்தான். நீண்ட செவ்வக வடிவ மேசையில் அகல முனைப்பரப்பில் அவன் அமர்ந்திருக்க, மேசையின் இருமருங்கிலும் பிராந்தியங்களுக்கான தலைமை விநியோகஸ்த்தர்கள் அமர்ந்திருந்தனர்.
ஒவ்வொருவரின் முன்னேயும் ஒரு தண்ணீர் பாட்டிலும், மேசையுடன் பொருத்தப்பட்ட ஒலிவாங்கியும் இருக்க, திரையில் கணனி மற்றும், ப்ரொஜெக்டர் உதவியுடன் நிறுவனத்தின் எதிர்காலத் திட்டங்கள் காட்சிப்படுத்தப்பட்டு,அவனது மேனஜரினால் ஆங்கிலத்தில் அவை பற்றி விளக்கம் கொடுக்கப்பட்டுக் கொண்டு இருந்தது.
அவன் கண்கள், திரையை வெறுமனே கருத்தின்றி நோக்கிக் கொண்டிருக்க, அவன் மனம் எங்கிலும், அந்தக் குரலே பதிந்து இருந்தது.
“என்னோட செல்லக்கண்ணால்ல….இந்த ஆப்பிள் ப்ராஜெக்ட்ட மட்டும் ஒழுங்கா முடிச்சேன்னா …. நான் உனக்கு ஹன்ட்ரட் கிஸ்ஸஸ் தருவேன். நாம ரெண்டு பேரும் நீ சொல்ற இடத்துக்கு ஔடிங் போலாம்”என்று அவள் குழைந்த படி கூறிய குரலே, அவன் சிந்தனை எங்கிலும் பரந்திருந்தது.
இன்னும் சொற்ப நேரத்தில் அவளைப் பற்றிய அனைத்து விடயங்களும் கிடைத்து விடும் என்று அவன் எண்ணிக் கொண்டு இருந்த வேளை, அவனது அலுவலக ஊழியர்களுள் ஒருவன், “ எக்ஸ்கியூஸ்மி”என்ற வண்ணம் உள்ளே வந்து தன்னுடைய முதலாளியின் முன் குனிந்து காதருகில் ஏதோ கிசுகிசுக்க , அவனும் ஏதோ சொன்னான்.
பிறகு , நிமிர்ந்த அவ்வூழியன்,தன்னிரு கைகளையும் பின்னியபடி,“ டியர் ஜென்டில்மென்…..தயவு செய்து கொஞ்ச நேரம் வெளிய இருங்க”என்று கூற, அவனது மேனேஜர் உட்பட வெளியே சத்தமின்றி வெளியேற, உள்நுழைந்த ஊழியனும் ஏதும் பேசாமல் வெளியே சென்று, அங்கிருந்த, டீ ஷேர்ட்டும், டெனிமும் அணிந்திருந்த ஒரு ஆடவனை உள்ளே அனுப்பினான்.
அந்த ஆடவன் வேறு யாருமல்ல.அவனது உளவாளியே தான். “எக்ஸ்கியூஸ்மி”என்ற வண்ணம் உள் நுழைந்தவனை ஆவலுடன், வரவேற்றான் ஸ்ரீ. “வெல்கம் மிஸ்டர். அஷோக். .. அவளைப் பற்றிய எல்லா டீடெயில்ஸையும் கொண்டு வந்தீங்களா?” என்று பரபரப்புடன் கேட்க, அஷோக்கும் புன்னகைத்தான்.
“ ஆமா சார்.. அவங்க பேரு.…”என்று அவன் ஏதோ கூற வர, கையுயர்த்தி வேண்டாம் என்று தடுத்தான் இவன். “ஐ டோன்ட் நீட் தெட்..இஸ் ஷி மேரீட்? ” என்று அவளுக்கு கல்யாணமாகி விட்டதா என்றே முதலில் கேட்டான்.
அந்த ஹால் எங்கிலும் இருட்டு. அந்த ஹாலை ப்ரொஜெக்டரிலிருந்து திரையில் பட்டுத் தெரித்த ஒளிச்சிதறல் தான் நிரப்பிக் கொண்டிருந்தது.
இத்தனைக்கும் அவன், அஷோக்கை திரும்பிக் கூடப் பார்க்கவில்லை. அவன் கண்கள் திரையிலே நிலைக்குத்தி நின்று இருந்தன.
ஆனால் காதுகள் மட்டும் எலியை விட கூர்மையாக அவளது விபரங்களை கேட்க தயாராகவிருந்தன.அஷோக்கின் பதிலில் தான் அவனது உயிரே பிழைக்கும் என்ற நிலையில் தான் அவனது மனம் இருந்தது.
“நோ..நாட் எட் சார்…அவங்களைப் பற்றிய எல்லா டீடெயில்ஸும் இந்த பென்ட்ரைவுல இருக்கு ” என்று அஷோக் கூற, ஸ்ரீ கணனியை நோக்கி கைகள் காட்டினான். அவனது முகத்தில் அவள் திருமணமானவள் அல்ல என்று தெரிந்ததும், ஆயிரம் வாட் பல்பு எரிந்தது போல பிரகாசம் தென்பட்டது.
ஸ்ரீ, கணனியை நோக்கி கை காட்ட,அதைப் புரிந்து கொண்ட அஷோக்கும், கணனியில் பென்ட்ரைவ்வை பொருத்தி,ப்ரொஜெக்டர் மூலம் தெரிந்த அவள் உருவப்படத்தை நோக்கி விளக்கம் கொடுக்கலானான்.
அந்தக் குரலுடையாளைப் பார்த்ததும் ஒருகணம் ஸ்தம்பித்துப் போய் நின்றான் அவன். அவன் ஸ்தம்பித்து நின்று, புகைப்படத்தை இரசிப்பதையும்,அந்தப் புகைப்படத்தில் தெரிந்த பெண்ணையும் மாறிமாறி பார்த்தான் அஷோக்.
உளவாளி அஷோக்கின் கண்களுக்கு, நித்யகாருண்யா அழகியாக தெரிந்தாலும் பேரழகியாக தெரியவில்லை. ஆனால் பேரழகனான ஸ்ரீகாந்துடன் அவளை ஒப்பிடும்போது அவள் சற்று நிறம் குறைவுதான்.
இருப்பினும் அஷோக் கண்களை போலல்லாது அவனது கண்கள் சற்று வித்தியாசமாகவே அவளை அளவெடுத்துக் கொண்டிருந்தன.
திரையில் தெரிந்த புகைப்படம் இன்று அவள் வீட்டை விட்டு சென்ற போது அணிந்து சென்ற சுடிதார். கறுப்பு நிற டாப்பும், நீல நிற பாட்டம் மற்றும் துப்பட்டாவுடன், கபில(பிரவுன்) நிற கைப்பை தொங்க, இடது கையில் நவீன ரக கைப்பேசியுடன் இருந்தாள் அவள் .
முடிவில் மட்டும் சுருளாக்கப்பட்டிருந்த அவள் கூந்தல், மார்பளவு மட்டும் தான் வளர்ந்திருந்தது. அவளது கூந்தல் அனைத்தையும் வாரிச் சுருட்டி வலது மார் மேல் போட்டிருந்தாள் அவள் .
அளவான நெற்றியில் சற்றே தடிமனான புருவங்களின் கீழ் கூர்வேலோ? என்று அஞ்சத்தக்கதாய் பளிச்சிட்டுக் கொண்டிருந்த கண்களின் அடர்ந்த இமை முடியை ஒரு கணம் கூர்ந்து நோக்கி இரசித்துக் கொண்டிருந்தான்.
புருவங்களுக்கு மத்தியில் முற்றுப்புள்ளி அளவான சிவப்பு நிற பொட்டு அவளுக்கு இன்னும் அழகு சேர்த்தது. சற்றே நீளமான நாசியின் கீழும் மேலும், சமஅளவிலான செவ்விதழ்களுக்கிடையில் முத்துப் பற்கள் பளீரிட , அவனை நோக்கி சிரிப்பது போலவே நின்று கொண்டிருந்தாள்.
சற்றே ஒல்லியான தேகம். இருப்பினும் இமைக்க மறந்து பார்த்தான் அவன்.
அவளை இரசித்து முடித்தவன் , கையால் தொடங்குமாறு சைகை காட்ட அஷோக்கும் தொடர்ந்தான்.
“சார் … இவங்க பேரு நித்யகாருண்யா…. வயசு இருபத்தி மூணு… அம்மா, அப்பா இல்லை …” என்று அவளைப் பற்றி கூறியவன், “படிச்சது சென். ஏன்ஸ் காலேஜ்ல…. ஆர்ட்ஸ் படிச்சிருக்காங்க… படிப்புல அவ்ளோ இல்லை ” என்று கூற , ஸ்ரீ மெல்ல சிரித்தான்.
படிக்காவிட்டால் என்ன? அவள் என்னவள்? என்று தோன்ற, சிரிப்பு மாறாமல் “நெக்ஸ்ட்” என்றான்.
அடுத்து அஷோக் அவளது பிறந்த நாளை பற்றி கூற, அவன் முகம் இன்னும் விகசித்தது.
அடுத்ததாக தெரிந்தது ராதா, கோபால் மற்றும் குட்டிப் பையன் ஹரீஷ். “சார் இது…. அவங்க அக்கா… மாமா… என்ட் இது அவங்க சன்”என்று கூறி அவளது குடும்பத்தை அவனுக்கு அறிமுகம் செய்தான் அஷோக்.
இன்று தன்னுடன் பேசியது அவள் அக்கா ராதா என்று ஊகித்தான் ஸ்ரீ. அவள் நூறு முத்தம் தருவதாக கூறியிருப்பது ஹரீஷிற்காக இருக்க வேண்டும் என்று எண்ணினான் ஸ்ரீ.
“நெக்ஸ்ட்” என்று அவன் பெருவிரலால் தாடையை தடவிய வண்ணம் கூற, அடுத்து திரையில் தெரிந்தனர் அவளது அத்தையும், ரகுரவியும்.
“சார் இது அவங்க அத்தை… அதோட இது அவங்க முறைமாப்பிள்ளை என்ட் ஃபியன்ஸி ரகுரவி ” என்று கூற , இது வரை சாந்தமாக இருந்த அவனது முகம் கறுத்து, இறுகி வாடியது.
“சரியா… செக் பண்ணீங்களா? உங்களுக்கு எப்படி தெரியும்?” என்று கதிரையில் இருந்து சற்று முன்னே சாய்ந்து, முழங்கையை மேசையில் பதித்த வண்ணம் கேட்டான் ஸ்ரீ காந்த்.
அடுத்த நிழற்படத்தை போட்டுக் காட்டிய அஷோக், அவளது முக நூலில், “வித் மை ஃபியன்ஸி” என்ற வாசகத்துடன் அவள் போட்ட போஸ்ட்டின் “ஸ்க்ரீன் ஷாட்டின்” நிழற்படம் தெரிய கொந்தளித்துப் போனான் ஸ்ரீ காந்த்.
நடக்காது… நடக்கக் கூடாது… அவள் அவனுக்கு மாத்திரமே. அவள் அவனுடையவள். அவளது மூச்சுக் காற்றிலிருந்து கால் தூசுக்கு வரை சொந்தக்காரன் அவனே.
பொங்கியெழுந்த கோபத்தைக் கட்டுப்படுத்திக் கொண்டு, நேராக நிமிர்ந்து அஷோக்கைப் பார்த்து, “வேற ஏதாவது அவளப் பத்தி…. ?”என்று குரலில் உறுதியுடன் கேட்டான்.
“ஆமா சார்…. அவங்க ஒரு டப்பிங் ஆர்டிஸ்ட்… தாமரை ஸ்டுடியோவில் வர்க் பண்றாங்க”என்றான் அஷோக்.
ஸ்ரீ காந்தின் புருவ மத்தியில் முடிச்சு விழுந்தது. அப்படியானால் அவன் எதையோ பற்றி யோசிக்கிறான். அதன் காரணகர்த்தா அவளே தான்.
சிறிது நேரத்திற்கு பின்னர் தெளிந்த முகத்துடன் நிமிர்ந்தவன் “ஒகே எனி வே.. தேங்க் யூ.. இந்த விஷயம் நமக்குள்ளேயே இருக்கட்டும்… உங்க அக்கவுண்ட்கு சரியா பணம் வந்துடும்.. நீங்க இப்போ போலாம்” என்று கூறியதும், “யோர் வெல்கம் சார்” என்ற படி பென்ட்ரைவ்வினை அவனிடம் ஒப்படைத்து விட்டு சென்றான் அஷோக்.
அஷோக் சென்ற சிறிது நேரத்திற்குப் பின் உள்ளே வந்த மேனேஜரிடம் ஏதேதோ கூறினான் ஸ்ரீ காந்த்.
“ஒகே சார்…. அப்படியே செய்திடலாம் சார்”என்று முதலாளி சொன்னதுக்கெல்லாம் தலையசைத்துக் கொண்டிருந்தார் கணேஷ்.
அத்தியாயம் – 5
ஸ்டுடியோவிற்குள் நுழைந்தவள் அவளுடன் டப்பிங் பேசவிருக்கும் கலைஞர்களைக் கண்டு “குட் ஈவ்னிங் ஃப்ரண்ட்ஸ் ”என்று மாலை வந்தனங்களைக் கூறிக் கொண்டு வந்தவளை, அவளைப் போலவே மனமார வாழ்த்தினர் அவர்களும்.
மொத்த ஸெட்டும் அவளுக்காக காத்திருந்தது போல , அவள் வந்தவுடன் டப்பிங் வேலை ஆயத்தமானது.
இன்று உணர்ச்சிகரமான ஸீன். தன் காதலன் தன் பின்னால் தான் இருக்கிறான் என்று நினைத்துக் கொண்டு , காதலி தன் காதலை மனம் திறந்து பேசிக் கொண்டிருக்கிறாள்.
காதலியின் குரல் அவளுடையது. தந்த வசனங்களின் தொகுப்பை ஒருகணம் மனதால் படித்துப் பார்த்தவள், அவளது தவணை வரவும் தன் திறமையை வெளிப்படுத்த முனைந்தாள்.
“ராப்” என்றாள் அவள் திரையில் தெரிந்த பெண்ணும் அவள் காதலான “ராபட்டின்” சுருக்கமான “ராப்”என்று கூறி வாயசைத்த வேளை.
வாயசைவு மட்டும் தான் அந்த நடிகையுடையதாக இருக்க குரல் அவளினுடயதாய் இருந்தது.
“காதல்ன்றது… இது நாள் வரைக்கும்… பொய்னு நினைச்சுகிட்டு இருந்தேன்… பட் … உன்னை எப்போ பார்த்தேனோ… அப்போல இருந்தே… நான் என்னையுமறியாமலேயே லவ் பண்ண ஆரம்பிச்சிட்டேன்… எப்போ உன்னை அந்த எமாவோட சேர்த்து வச்சி பார்த்தேனோ… அப்போ எனக்குள்ள ஒண்ணு தோனிச்சி… அது கோபமா? பொறாமையா? எதுனு எனக்கு அப்போ தெரியல…பட் இப்போ புரியுது … அது தான் காதல்.. என்னுள் இருக்கும் ஆழமான காதல்…” என்று கதாநாயகி கூறுவது போலவே கூறிக் கொண்டிருந்தாள் அவள் .
அவள் தன்னையும் மறந்து, அந்தக் கதாபாத்திரமாகவே மாறி பேசிக் கொண்டிருந்த வேளை, அவளது நிறுவனத்தின் முதலாளி வந்தமர்ந்து கண்ணாடி பெட்டிக்கு வெளியே வந்து நின்று பார்வையிடத் தொடங்க, அவளின் உள்மனம் ஒரு கணம் திண்டாடியது.
பிறகு சமாளித்துக் கொண்டு மறுபடியும் பேசவாரம்பித்தாள்.
“எனக்கு இப்போ வேண்டியதெல்லாம் நீ தான்… ஐ லவ் யூ ராப்….. நமக்குனு ஒரு வாழ்க்க.. நமக்குனு பசங்கனு உங்கூட லைஃப் லோங் வாழணும் ன்னு ஆசையா இருக்கு” என்று அவள் உணர்ச்சி பொங்கிய குரலில் , தன் பகுதியை பேசி விட்டு வெளியே வர, அவளுடைய எம். டி எதுவும் பேசாது சென்று விடவே உள்ளுக்குள் மனம் நெருடியது.
அங்கு சூழ்ந்திருந்த பிற கலைஞர்கள், தயாரிப்பாளர்கள் “வெல்டன் அவள் …. சூப்பரா பண்ணீங்க” என்று கூறி வாழ்த்தவும் தான் மீண்டும் அவள் முகத்தில் பழைய படி புன்னகை அரும்பியது.
மனதுக்குள் எம். டியை பொறுமித் தள்ளினாள்.
“அவங்க அவங்களுக்கு.. அவங்க அவங்கட… எம். டி வாயால பேர் வாங்குறது பெரிய கனவா இருக்கும்… ஆனா இந்த கிழவன் … வாயைத் திறந்து ஒரு நாளாவது பாராட்டினதுண்டா?” என்று மனதினுள்ளேயே திட்டிக் கொண்டிருந்த போது, தயாரிப்பாளர் அவளிடம் வந்து “ஆ… மறந்துட்டேன் “நித்யா.. எம். டி உன்னை வந்து பார்க்க சொன்னாரு” என்று கூற, ஒரு கணம் கைகள் உதறின அவளுக்கு.
எதற்கு வரச் சொல்லியிருப்பார்? என்னைப் பற்றி ஏதேனும் முறைப்பாடுகள் வந்திருக்குமோ? என்று எண்ணி சற்றே பயந்தவளாய் உள்ளே சென்ற போது , அவர் கூறியது வேறொரு விடயம்.
எல்லாம் ஸ்ரீ காந்த் ரவிச்சந்திரனுடைய வேலை. அந்த பில்லியனர் தன் மேல் கொண்ட காதலின் விளைவால் ஏற்பட்ட வேலை என்பதனை பற்றி கொஞ்சம் கூட அறியாமல் , மகிழ்ச்சியில் திளைத்துக் கொண்டிருந்தாள் அவள் .
“செல்வொய்ஸ் கம்பெனியால… உங்களை… அவங்க ‘ஆட்’கு வாய்ஸ் டப்பிங் பண்ண கூப்பிட்டிருக்காங்க நித்யா ” என்று அவர் கூறியதும் தான் தாமதம் தலை எது? கால் எது? என்று அவளுக்கு புரியவில்லை.
“செல்வொய்ஸ் கம்பனியா?… ஸ்ரீலங்காவோட ரொம்ப ஃபேமஸான சிம் கம்பனி…. என்னோட சிம் கூட செல்வொய்ஸ் தான்” என்று எம். டிக்கு கூற வேண்டும் என்று எழுந்த எண்ணத்தை மாற்றிக் கொண்டு மேலதிக தகவலை நாடி, எம். டியின் முகம் பார்த்தாள் நித்யகாருண்யா.
“நீங்க டுமோரோ மார்னிங்… செல்வொய்ஸ் கம்பனி சி. இ. ஓவ போய் பாருங்க… ஓல் த பெஸ்ட் ” என்று வாழ்த்த , தன்னாவல்களை அடக்கிக் கொண்டு வெளியே வந்தாள் அவள் .
என்ன? நாளை அவள் செல்வொய்ஸ் நிறுவனத்தின் உரிமையாளனை பார்க்க போகிறாளாமா? அதை நினைக்கும் போதெல்லாம் அவள் மயிர்க் கூச்செறிந்தது.
இலங்கையில் வளர்முக நிறுவனங்களில் ஒன்று தன்னுடைய விளம்பரங்களின் டப்பிங்கிற்காக அவளை அழைத்துள்ளது என்பதை நினைக்க நினைக்கையில் பெருமையாக உணர்ந்தாள் அவள் .
மறுபடியும் அவளை அழைத்துச் செல்ல வந்த, ரகுரவியிடம் இது பற்றிக் கூறினாள் அவள் .
“டேய் ரகு…. இன்னைக்கு என்ன நடந்திச்சுனு தெரியுமா?” என்று பீடிகையுடன் தன் விடயத்தைக் கூறவாரம்பிக்க, ரகுரவியும் கிண்டலாகவே பதில் கூறவாரம்பித்தான்.
“என்ன நடந்திச்சு?… உன் டப்பிங்கை கேட்டுட்டு உங்க எம். டி ஹார்ட் அட்டாக் ல போய்ட்டாரா?” என்று கேட்ட படியே வண்டியை ஓட்டியவன், பைக் சிக்னலில் நிற்க, அதேவேளை அவள் கையால் சரமாரியாக அடி வாங்கினான்.
“ஹேய் .. ஃபூல் …. என்னை பார்த்தா உனக்கு அப்படியா விளங்குது?? … என் டப்பிங்கை கேட்க அந்தாளு கொடுத்து வச்சிருக்கணும்””என்று கூறினாள் அவள் தன்னைத் தானே விட்டுக் கொடுக்காமல்.
அந்த சிக்னலில் ரகுவின் பைக் மட்டும் நிற்கவில்லை.இதர பல வாகனங்களும் நின்றிருந்தன. கூடவே இரு மோட்டார் பைக்குகளைத் தள்ளி அவன் “லம்போகினி” கூட நின்று கொண்டிருந்தது.
காரினுள் இருந்தவன் பொறாமைக் கண்களுடன் ரகுவைச் சுட்டெரிக்கும் பார்வை பார்த்துக் கொண்டிருந்ததை அவளும் அறிந்திருக்கவில்லை. ரகுவும் அறிந்திருக்கவில்லை.
இது அறியாமல் அவள் , தான் அலுவலகத்தில் இருந்து எடுத்து வந்த மகிழ்ச்சியான செய்தியைக் கூறிக் கொண்டிருந்தாள்.
“நாளைக்கு செல்வொய்ஸ் கம்பனி சி. இ. ஓ வை மீட் பண்ண போறேன்டா”என்று கூறிய கணம் வாகன நெரிசல் அகல, ரகுவும் வண்டியை எடுக்க, அவனது கார் வேறு வழியில் சென்றது.
அதைக் கேட்ட ரகு “வாவ் கங்கிராட்ஸ்…. நான் கூட செல்வொய்ஸ் ஓவ்னர பார்க்கணும்னு இருக்கேன்…. பட் நீ தான் முதல்ல மீட் பண்ண போற..பெஸ்ட் ஒப் லக்!” என்று வாழ்த்திய வண்ணம் , அவளை வீட்டில் விட்டு விட்டு சென்றான் ரகு.
தன்னை சூழ ஒரு பெரும் மோசடியே நடக்கப் போவது தெரியாமல் வீட்டினுள் நுழைந்தாள் அவள் .
அவள் வீட்டுக்கு வந்த போது இரவு எட்டைத் தாண்டியிருந்தது. அவளைக் கண்டதும் “சித்தீ” என்ற வண்ணம் ஓடி வந்து அவள் முழங்கால்களை கட்டிக் கொண்டான் ஹரீஷ். மகிழ்ச்சியில் அவன் கண்களும் சேர்ந்து சிரிக்க, ஒரு கணம் இமை கொட்டாமல் அதையே பார்த்தாள் நித்தி.
அவன் கண்களில் இறந்து போன தாயின் கண்களைக் கண்டாள் அவள். தாயின் சிரிப்பும் அப்படித்தான்.
சிரிக்கும் போது கண்களும் சேர்ந்து சிரிக்கும். அவனைக் குனிந்து தூக்கிய படியே ஹாலினுள் நுழைந்தாள் அவள் .
கோபால் இரவு நேர செய்தி பார்த்துக் கொண்டிருப்பது புரிந்தது அவளுக்கு.அவளைக் கண்டதும் , இலேசான முறுவலுடன் “வா நித்யா …சாப்பிட்டியாம்மா? ”என்று கனிவாய் விசாரித்தான் கோபால்.
அவளும் பணிவுடன் “இன்னும் இல்லை மாமா”என்று கூற , “போம்மா… முதல்ல போய் சாப்பிடு”என்று கூற , ஹரீஷுடன் தலையாட்டிக் கொண்டே தன்னறைக்கு வந்தாள்.
அறையின் வாசலிலேயே அவனை இறக்கி விடாமல் , அவளது மஞ்சம் வரை அழைத்துச் சென்று , மஞ்சத்தின் மேல் அவனை நிறுத்தினாள் அவள் .
மஞ்சத்தின் மேல் நின்று கொண்டே ஹரீஷ் “சித்தி… இன்னைக்கு நான் ஆப்பிளுக்கு கலர் பண்ணேன் சித்தி… இவ்ளோ பெரிய ஆப்பிள்!!! ” என்று கைகளையும், கண்களையும் அகல விரித்துக் காட்டினான்.
அவன் கன்னங்களைத் தன்னிரு கைகளாலும் ஏந்தி, இரு கன்னங்களிலும் முத்தமிட்டு விட்டு “அப்படியா கண்ணா… வெரி குட் … சித்தி போய் குளிச்சிட்டு வந்துட்றேன்…. நீ எங்கே வெளிய போலாம்னு யோசிச்சு வை…. ஒகேயா கண்ணா” என்று கூறியவள் , டவலையும் மாற்றுத் துணியையும் எடுத்துக் கொண்டு குளிக்கச் சென்றாள்.
இந்தச் சின்னக் கண்ணனுக்கு, அவள் வாக்களித்த நூறு முத்தங்கள் மறந்து விட்டிருந்தன. ஆனால் அந்த மாயக் கண்ணன் மட்டும் மறக்கவேயில்லை.
அத்தியாயம்- 6
அங்கே அவன் தன் ஏசி அறையில் தூக்கம் வராமல் தவித்துக் கொண்டிருந்தான்.
இருபத்தொன்பதாண்டுகளில் அவன் எத்தனையோ பெண் குரல்கள் கேட்டிருக்கிறான். இருப்பினும் நித்யகாருண்யாவின் குரலைப் போல யார் குரலையும் அவன் கேட்டதில்லை.
வேறு எந்தக் குரலுக்காகவும் இப்படி அவன் மனம் சஞ்சலப்பட்டதுமில்லை. அவளின் குரலின் இனிமையில் அவன் தன்னை தொலைக்கவில்லை. மாறாக அந்தக் குரல் கூறிய வார்த்தைகளே அவனை அவளுக்காக ஏங்க வைக்கிறது.
ஆப்பிள் நிறுவனத்துடன் ஒப்பந்தம் வைத்துக் கொள்ளலாமா வேண்டாமா? என்று இத்தனை நாளாய் நெருடலில் இருந்தவன், அவள் கூறியதும் சரி என்றானே.
அவள் திருமணமானவளாய் இருக்க மாட்டாள் என்று அவன் மனம் உறுதியாக நம்பியது உறுதியுமானது.
நாளை அவளைக் காணப் போகிறோம் என்ற படபடப்பே அவனை தூங்க விடாமல் செய்தது. அவனது அறையிலிருந்த நவீன ரக தொலைக்காட்சியில் , அவளது கறுப்பு சுடிதார் அணிந்த புகைப்படம் ஒளிபரப்பாகி கொண்டிருக்க, அவன் கண்கள் அதை விழுங்கி விடுவது போல பார்த்துக் கொண்டிருந்தன.
எந்தப் பெண்ணைப் பார்க்கும் போதும் விழித்துக் கொள்ளாத மனம்,ஆசைகள், அவனுக்கு அன்றிரவு விழித்துக் கொண்டது.
அவள் என்னவள், யாரையும் அவளிடம் அணுகக் கூட விடமாட்டேன். இன்று வாகன நெரிசலில் அவனையும் , அவளையும் பார்த்த போது, கோபம் தாளாமல் இறங்கி வந்து இருவரையும் அறைய வேண்டும் போல் தோன்றியது. அவனுக்கு அறைய துடித்த ஸ்ரீ யின் உள்ளம், அவளை அறையும் நினைப்பையும் நினைக்க சிரமப்பட்டது.
அவன் முறைமாப்பிள்ளையாக இருக்கலாம். அவள் மனதில் ரகுரவியை பற்றிய காதல் கூட இருக்கலாம். ஆனால் அவளது கண்ணாளனாக ஆகப்போவது ஸ்ரீ காந்த் தான். அவளும் ஸ்ரீயை உயிர்க்காதலனாக, கணவனாக ஏற்பது திண்ணம் என்று எண்ணிக் கொண்டான் ஸ்ரீ.
அவள் குளித்து முடித்து விட்டு வந்த போது ஹரீஷ் , அவளது மஞ்சத்தில் படுத்தவாறே ஒரு கால் மீது இன்னொரு கால் போட்டு, பெரிய மனிதர்களைப் போல, அவள் கைப்பேசியில் ஹெட்ஸெட்டினூடாக பாட்டுக் கேட்டுக் கொண்டே கண்கள் மூடியிருந்தான்.
பக்கத்தில் சென்று பார்த்தவளுக்கு அவன் உண்மையாகவே தூங்கியிருப்பது புரிந்தது.
உதடுகளில் மென்னகை ஓட , அவன் தூக்கம் கலையா வண்ணம் , கைப்பேசியையும், ஹேன்ஸ்ட்ஃப்ரீயையும் எடுத்து வைத்தவள், மின்விசிறியை சுழல விட்டாள்.
மின் விசிறியின் காற்றுக்கு அசைந்தாடிய, அவனது கூந்தலை இரசித்துக் கொண்டே, சிறிது நேரம் ஹரீஷின் பக்கத்தில் அமர்ந்து இருந்தவள், உணவையும் மறந்து தூங்கவாரம்பித்தாள். ஹரீஷும், அயர்ந்த தூக்கத்தில் சித்தியுடன் ஒன்றவாரம்பித்தான்.
அத்தியாயம் – 7
வழமைக்கு மாறாக அலாரம் அடிக்க முதல் எழுந்தான் ஸ்ரீ காந்த். அவன் நேற்றிரவு தூங்கியது சொற்ப நேரம் தான். இன்று அவளை நேரில் காணப் போகிறோம் என்ற சந்தோஷத்தில் முகமெல்லாம் சிவந்திருந்தது அவனுக்கு.
வழமைக்கு மாறாக, ஜிம்மில் கூடிய நேரம் செலவிட்டான் அவன். ஆரோக்கியத்திற்காக கட்டழகனானது, இன்று அவளுக்காகவும் தான் என்றது இதயம்.
வியர்க்க விறுவிறுக்க “ஆர்ம்லெஸ் டீஷேர்ட்டுடன்”ஜிம்மில் பயிற்சியை முடித்து விட்டு வந்தவன், தன்னறையிலிருந்த ஆறடி நீள கண்ணாடியில்,தன் கைகளை மடக்கி, கைச்சந்தில் முறுக்கேறிய தசைகளை அழகு பார்த்தான்.
என்றும் இல்லாமல் அவன் முகத்தில் ஆணவம் குடி கொண்டது. முறுக்கேறிய தேகத்துடன் இருக்கும் அவனை, அவள் நேசிப்பாளா? இல்லை ஓமக்குச்சியாய் இருக்கும் ரகுவை நேசிப்பாளா? நிச்சயம் அவனைத் தான் என்றது மனது.
அவன் நீராடி விட்டு வந்த போது மகிழ்ச்சியுடன் உற்சாகமும் சேர்ந்து கொண்டது. எப்பொழுதும் சொற்ப நேரத்தில் உடைகளை தேர்ந்தெடுத்து அணிபவனுக்கு, இன்று நீண்ட நேரம் பிடித்தது.
எடுக்கும் ஒவ்வொரு கோட்டையும், அவன் மனம் ஒவ்வொரு நொட்டைச் சாக்கு சொல்லி தவிர்த்தது. பிறகு எதை அணிவது? முதன் முதலில் அவள் பார்வைக்கு படும் போது ஆணழகனாக தோன்ற வேண்டும் என்பதே அவனது ஒரே அபிலாஷையாக இருந்தது.
அதே அவஸ்தையை, அதே நேரம் நித்யகாருண்யாவும் அனுபவித்துக் கொண்டிருந்தாள். பல பெரிய நிறுவனங்களின் விளம்பர பட டப்பிங்குகளை அவள் பணிபுரியும் “தாமரை” நிறுவனத்தின் ஊடாக கேட்டுள்ளனர். ஆனால் எந்த நிறுவன உரிமையாளனும், அவளை நேரே சந்திக்க அழைத்ததும் இல்லை. பேசியதும் இல்லை.
ஆனால் இந்த செல்வொய்ஸின் ஸ்ரீகாந்த் ரவிச்சந்திரன் தன்னை சந்தித்து பேச நினைக்கிறான் என தெரிய வந்ததும், அவளொரு பெரிய பிரபலம் போல உணர்ந்தாள்.
அவனை சென்று பார்க்கும் போது, அவனுக்கு தன் மேல் மதிப்பு ஏற்படும் படியான ஆடையே தான் அணிந்து செல்ல வேண்டும் என்று எண்ணி, தன்னுடைய ஆடைகளை எல்லாம் அலசி ஆராய்ந்து கொண்டிருந்தாள் அவள் . சுடிதார் அணிந்து செல்வதில்லை என்று முடிவெடுத்தவளுக்கு, சேலை அணிவது தான் உசிதம் எனத் தோன்றியது.
அவளிடம் விதவிதமான நிறத்தில், விதவிதமான அலங்காரங்களில் சேலைகள் நிறைய இருந்தன. இருப்பினும் எதை அணிவது என்று தான் குழம்பிப் போனாள். அந்த கணம் நர்சரி சீருடையுடன் உள் நுழைந்த ஹரீஷ், அலுமாரியின் கதவுகளை திறந்து வைத்த படி, உள்ளே உள்ள ஆடைகளையே பார்த்துக் கொண்டு இருக்கும், நித்தியிடம் சென்று, அவள் சுடியின் பக்கவாட்டை இழுத்தான்.
எதையணிவது என்று தெரியாமல் நின்றவள், சுடிதார் இழுக்கப்படுவது உணர்ந்து, கீழே குனிந்து நோக்க அங்கே ஹரீஷ் அவளை அண்ணாந்து பார்த்துக் கொண்டு இருப்பதைக் கண்டு, மகிழ்ச்சியுடன் அவனை தூக்கிக் கொண்டாள்.
பிறகு அவனிடம் திரும்பி, “ஹரீஷ் கண்ணா…. இந்த ஸேரீஸ்ல எல்லாம் எந்த ஸேரி சூப்பரா இருக்கு?”என்று கேட்க, அவன் சிறிதும் யோசியாமல் ஒரு சேலையை காட்டினான்.
மனமகிழ்ந்தவளாய் அவனை இறக்கி விட்டு, அவன் காட்டிய சேலையை எடுத்தாள் நித்தி. இளஞ்சிவப்பு நிற பார்டரில் வெள்ளை நிற சேலை. அவன் தேர்வு என்றும் நன்றாக இருக்கும் என்ற மனநிறைவுடன் கட்டிக் கொண்டாள் அவள் .
அவள் சேலை முந்தானையை இலேசாக காற்றில் பறக்க விட்டாள். கூந்தலை வாரி விட்டவள், கண்களுக்கு “மஸ்காரா”இட்டாள்.
உதடுகளுக்கு உதட்டுச் சாயம். கன்னங்களுக்கு இலேசாக “டச் – அப்”என்று அவள் ஒப்பனை முடிந்து வெளியே வந்த போது, தேவதை மாதிரி இருந்தாள். அக்கா கூட அவளைக் கண்டு, வாயால் சொல்லி பொறாமைப்பட கிளுக்கிச் சிரித்த படியே, சாப்பிடச் சென்றாள் அவள்.
எந்த விதத்திலும் ஸ்ரீ காந்தின் மனம் கோணாத படியே நடந்து கொள்ள வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தாள் நித்தி. தனக்கு பெரிய இடத்தில் இருந்து ஒரு அழைப்பு என்றதும்,
அவள் வீட்டுக்கு வந்ததும் செய்த முதல் வேலை, ரவிச்சந்திரனை பற்றி தேடியது தான். அவளொன்றும், “கூகுள், யாஹூ, விக்கி “தேடலில் பிரபலமானவள் இல்லை. ஆனால் அவன் தான் பிரபலமானவனாயிற்றே.
எப்படியிருப்பான் என்ற மனநிலையில் ஹரீஷை அணைத்துக் கொண்டே தூங்கியிருந்தவளுக்கு, கூகுள் செய்யலாம் என்று தோன்ற நடு இரவில், ஹரீஷை விட்டு மெல்ல எழுந்தாள்.
தன்னுடைய நவீன ரக கைப்பசியை எடுத்து, “செல்வொய்ஸ் ஸ்ரீ காந்த்”என்று அடிக்கவுமே கீழே “ரவிச்சந்திரன்”என்று காட்ட, அதை க்ளிக் செய்தாள்.
முதலிலேயே ஸ்ரீ காந்தின் முழு நீள படம் ஒன்று இருக்க, ஸ்ரீ காந்தை கண்டதும் அதிர்ந்து நின்றாள் அவள் .
ஸ்ரீ காந்த், நாற்பது வயதைத் தாண்டிய கிழவனாக இருக்கக் கூடும் என்று எண்ணியவள், ஓர் வாலிபன் வந்து நிற்கவும் அதிர்ந்தாள். அவனைப் பற்றிய சகலதையும் தன் தொழில் நன்மை கருதி, மூளையில் பதிவிறக்கம் செய்து கொண்டாள் அவள் .
வீட்டில் இருந்த அனைவரிடமும், விடை பெற்றுக் கொண்டு ‘ஆட்டோ’ பிடித்து, அவன் அலுவலகம் பயணமானாள். இடையில், அவள் செல் சிணுங்கியது.
அழைப்பெடுத்திருந்தது அவள் முறை மாப்பிள்ளை ரகுரவியே தான். முகத்தில் புன்னகையுடன், “சொல்லு ரவி “என்றாள் அவள் .
அவனோ வாழ்த்துக்கள் கூறியதோடு நில்லாமல், சரண்யாவின் இலக்கங்களை கூறி அழைப்பெடுத்து, தன்னையும், அவளையும் சேர்த்து வைக்குமாறு மன்றாடவும், சரி என்ற வண்ணம் அழைப்பை துண்டித்தாள் அவள் .
ரகு பாவம் என்று தோன்ற, சரண்யாவுக்கு அழைப்பெடுத்து தான் நடத்திய குறும்பை சொல்லி, சேர்த்து வைத்தால் என்ன? என்று தோன்ற , அவள் , சரண்யாவின் இலக்கத்திற்கு தொடர்பு கொண்டாள்.
இரண்டு, மூன்று ரிங்குகளுக்கு பிறகு மறுமுனையில் ஒரு பெண் குரல் கேட்டது. “ஹலோ”. அந்தக் குரலில் காற்றை விட மென்மை கலந்திருப்பதாக தோன்றியது. இந்த மென்மைக்குத் தான் ரகு விழுந்தானோ என்றும் தோன்ற, அவள் சிந்தனையை “ஹலோ”என்ற சரண்யாவின் குரல் மறுபடியும் ஒலித்து களைத்தது.
“ஹலோ…. சரண்யா…… நான்… நான்… நித்யகாருண்யா பேசுறேன்”என்றாள் அவள் குரலில் ஒரு தடுமாற்றத்துடன். எங்கே அவள், அவளின், குரலைக் கேட்டவுடன் வைத்து விடுவாளோ என்ற பயத்தில் அவளுக்கு பெருமூச்சொன்று புலப்பட்டது.
“ம்…… சொல்லுங்க…. “என்று கறார்க் குரலில் கேட்டாள் சரண்யா .
அவளுக்கு சரண்யாவின் கோபத்தை விட, ரகுரவியின் மேல் சரண்யா வைத்திருக்கும் காதல் புரிபட, அவளுக்கு கோபம் வரவில்லை.
மாறாக இளகிய குரலிலேயே, “ஸாரி….ஸாரிமா… ப்ளீஸ் ஸாரி சரண்யா… நான் ரகுவ என்னோட ஃபியன்ஸினு சொல்லியிருக்கக் கூடாது…… சும்மா சூடாக்க பண்ணது… எஃப். பீ போஸ்ட்டும் அப்படித்தான்…. நீ நெனக்கிற மாதிரி எனக்கும், அவனுக்கும் இடையில ஒண்ணும் இல்லை … நான் அவனை என் அண்ணா மாதிரி தான் பார்க்குறேன் மா…”என்று அவள் கூறிக் கொண்டே செல்ல மறுமுனையில் இருந்த, சரண்யா வாய் விட்டு சிரித்தாள்.
இதன் அர்த்தம் அவளுக்கு புரியவில்லை.அவள் இங்கு காலில் விழா குறையாக மன்னிப்பு கேட்டுக் கொண்டிருக்கும் போது, சரண்யா சிரிக்க, புரியாமல் விழித்த அவளுக்கு, எரிச்சலாகவும் இருந்தது.
சிரித்து முடியும் வரை பொறுமையாக இருக்க அவள் முடிவு செய்த வேளையில், அவன் அலுவலகமும் வந்து விட்டிருந்தது.
காசு கொடுத்து ஆட்டோவிலிருந்து இறங்கியவள், பேச்சு சுவாரஸ்யத்தில், அவனது அலுவலக கட்டிடத்தை கூட இரசிக்காமல் படியேறி உள்ளே நுழைந்தாள்.
சரண்யா பேச வாய் திறந்த நேரம் அவள் , “வன் மினிட் “என்று சரண்யாவுக்கு கூறி விட்டு, ரிஷப்ஸனில் இருந்த பெண்ணிடம் , “எக்ஸ்கியூஸ் மீ மேம்… சார் என்னை… “என்று அவள் பாதி கூறியதும் தான் தாமதம்,
ரிஷப்ஸன் பெண்ணும், “யெஸ் மேம்.. மேலே போங்க.. “என்று மலர்ந்த முகமாகவே லிப்ட்டினை கை காட்ட, அவளும் முகத்தில் ஒரு புன்னகையுடன் மேல் தளம் செல்வதற்காக, லிஃப்ட்டில் ஏறினாள்.
அந்த அலுவலகம் என்றுமேயில்லாதவாறு பலவித மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்ததை, அவள் அறிய முடியாத வண்ணம், சரண்யா கூறப்போகும் சிரிப்பிற்கான காரணத்தை கேட்கவிருந்த ஆவல், அவள் கண்களை மறைத்து விட்டிருந்தது.
“சொல்லுங்க சரண்யா.. இப்ப எதுக்கு சிரிச்சீங்க?…. “என்று அவள் கேட்க, “பின்னே என்ன நித்யா? உங்களுக்கு மட்டும் தான் கடுப்பேத்த தெரியுமா என்ன? நீங்க விட்ட அம்பை உங்களுக்கே மாத்தி விட்டுட்டேன்பா…. அது தான் நான் முக்கியமா? அவ முக்கியமா ன்னு கேட்டு குழப்பிட்டேன்…. எனக்கு தெரியாதா அவரப் பத்தி…”என்று கூற, அடப்பாவி… இவள் நம்மை விட பெரிய தில்லாலங்கடியாக இருப்பாள் போலும் என்று எண்ணினாள் அவள் .
“ஓ அப்படினா… அவன் மேல எந்த கோபமும் இல்லையே/”என்று கூற, “இல்லை”என்று மறுப்பாய்த் தெரிவிக்க, “அப்போ … சரண்யா… ரகுவோட இப்பயாச்சும் கால்பண்ணி பேசுங்கப்பா”என்று கெஞ்சும் குரலில் கூற, “ஓ… அப்படீன்னா… கான்பரன்ஸ் கால் போட்றேன்… கேட்குறீங்களா?”என்றாள் சரண்யா.
இது அவள் வேலை நேரமானதால், “ஒகே”என்று கூறாமல், பிறகு அழைப்பெடுப்பதாக கூறிவிட்டு அழைப்பை துண்டித்தாள் அவள் .
லிஃப்ட்டில் இருந்து வெளியே வந்த அவள் அப்போது தான் அந்த தளத்தை பார்வையிட்டாள் .
சுவரில் அடிக்கப்பட்டிருந்த இளநீல நிற வண்ணத்துக்கு தோதாக, ஊதாப்பூக்களும், வெள்ளை ஆக்கிட்களும் கலந்து மலர் அலங்காரம் செய்யப்பட்டிருப்பதைக் காணவும் தன்னிலை மறந்து ஒரு கணம் இரசித்தாள் அவள்.
இன்று யாராவது முக்கிய வி. ஐ. பி வருகிறார்களோ என்று எண்ணியவளுக்கு, அது அவள் தான் என்று புரியவில்லை. அவள் தன் கண்களை சுழல விட்டாள். குஷன் கவருடனான சோபா , சுவரில் பதித்த நவீன ரக தொலைக்காட்சி, ஏசி காற்று என அமர்க்களமாய் தான் இருந்தது அவன் அலுவலகம்.
அதற்கும் அப்பால் ஒரு கண்ணாடி தடுப்பினால் அடைக்கப்பட்ட அறை. அநேகமாய் இது தான் அவனது அறையாக இருக்க வேண்டும் என்று எண்ணிக் கொண்டிருந்த போது, அதை ஊர்ஜிதப்படுத்தும் வகையில், அவ்வறைக் கதவை தள்ளிக் கொண்டு திறந்து வந்தார் மேனேஜர் மூர்த்தி.
“மேம்…சார் கொஞ்சம் பிஸி… அதுவரைக்கும் நீங்க வெய்ட் பண்ணுங்க!”என்று உரைத்து விட்டு சென்று விட்டார்.
அவளும் ஏதும் பேசாமல் சோபாவில் அமர்ந்து டீபோய் மீது கிடந்த மேகசின்களை பொழுது போக புரட்டத் தொடங்கினாள்.நேற்று அவனைப் பற்றி தேடியதில், அவளுக்கு மனதில்படும் படியாக இரண்டு விடயங்கள் தான் பதிந்திருந்தன.
ஒன்று அவள் நினைத்தது போல அவன் கிழவனல்ல. வாலிபன். இரண்டு அவன் எந்தவொரு கிசுகிசுப்பிலும் சிக்காதிருந்தது.
பல பணக்காரர்களுக்கு குறைந்தது இரண்டு, மூன்று மாடல் அழகிகள், பிரபல நடிகைகளுடன் கிசுகிசுக்கள் இருக்கும். இருப்பினும் அவன் அப்படி எதிலும் இல்லாமல் இருப்பது அவளுக்கு அவன் மீது ஒரு மதிப்பை ஏற்படுத்தியிருந்தது.
அவனறையில் அவனொன்றும் பிஸியாகவே இல்லை. தன் நவீன ரக.. சொகுசான சுற்றும் நாற்காலியில் அமர்ந்து, காலுக்கு மேல் கால் போட்டபடி, அயர்வாய் அமர்ந்து, தன் மேசையில் இருந்த கணனித் திரையில், சிசிடிவி கேமராக்களின் மூலம் வந்ததிலிருந்து அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்.
அவள் அலங்காரத்தை இரசிப்பாள் என்று எதிர் பார்த்து ஏமாந்தவன், அவள் யாருடனோ பேசிக் கொண்டு செல்வதை காண நேர்கையில், அவள் கைப்பசியை பறித்து தரையில் தூக்கியடிக்க வேண்டும் போல் இருந்தது.
இருப்பினும் அவள் கட்டி வந்த சேலை, அவனது வெள்ளை கோட்டிற்கும், பேன்ட்டிற்கும் தோதாய் இருப்பதைக் கண்டதும், கோபம் அடங்கி புன்முறுவல் பூத்தான் அவன். இறுதியில் தன் தளம் வந்ததும் தான் பேச்சடங்கி , அலங்காரத்தை இரசிக்கவும் தான் அவனுக்கு சந்தோஷமாய் இருந்தது. அவனுக்கு உண்டான செலவை கணக்கெடுக்காமல், அவளின் முகத்தில் தெரிந்த இரசனைக் கோலமே அவனை பெரிதும் ஆட்கொண்டது.
இப்பொழுது அவளைக் கூப்பிட்டு பேசலாம் தான். ஆனால் தொட்டுச் செல்லும் தென்றலை போல அகன்று விடுவாளே! மாறாக அலுவலகம் முடிவதற்கு கொஞ்சம் நேரம் முன்பு வரை அவளை இரசித்து விட்டு, அதன் பிறகு அவளை அழைத்துப் பேசி, முடித்தால் அவளை அவள் வீட்டில் தன் காரில் இறக்கிவிட்டால்… என்று தோன்றுகையிலேயே புல்லரித்தது அவனுக்கு.
அவன் நினைத்தது போலவே நடந்தது.
மேனேஜர் மூர்த்தி வந்து “சார் கொஞ்சம் வேலையில பிஸியா இருக்காரு… முடிச்சதும் நீங்க உள்ள போலாம்…அது வரைக்கும் நீங்க வெய்ட் பண்ணுங்க மேம்” என்று கூற, அவளும் காத்திருக்கத் தயாரானாள்.
எவ்வளவு பெரிய பிஸினஸ்மேன். அவனுக்கும் வேலைகள் இருக்கக்கூடும் என்று எண்ணியபடி சோபாவில் அமர்ந்திருந்தாள் அவள் .
ஆனால் நேரமோ இருவருக்கும் காத்திருக்கமால் சென்று கொண்டேயிருந்தது. அவளுக்கு வேளாவேளைக்கு கூல்ட்ரிங்ஸ், மதிய உணவு, தேநீர் உட்பட எல்லாமே அவளருகேயே வந்தாலும், அவளினால் ஒரு கட்டத்தின் மேல் பொறுத்துக் கொண்டிருக்க முடியவில்லை. எழுந்து செல்லப் பார்த்த போது, மேனேஜர் மூர்த்தி அவளை வந்து அழைத்தார்.
“மேம்…. உங்களை சார் கூப்பிட்றாரு”என்று அவர் கூற, அவருக்கு புறமுதுகு காட்டி நின்றவள், திரும்பி அவனறையை நோக்கி நடந்தாள்.
அவளும் தன்னுடைய கோபத்தை பொறுத்துக் கொண்டு, பெருமூச்சொன்றை விட்டபடி, அவள் நடந்து வந்த விதம் அவளை பெரிதும் கவர்ந்தது. அவள் உள்ளே வருவது புரிய, கணணியை செயலிழக்கச் செய்து விட்டு, தன்னிலையை மாற்றி அமர்ந்திருந்தான் ஸ்ரீ காந்த்.
“மே ஐ கம் இன்? “என்ற படி அவள் உள்நுழைந்தாள். அவள் வந்த போது, மெல்லிய மல்லிகை மணம் அவன் நாசியைத் துளைக்க, தன் கவனம் முழுதும் ஃபைலில் இருப்பதாக காட்டிக் கொண்டவனின் பார்வை தன்னையும் அறியாமல் நிமிர, நொடியில் குனித்துக் கொண்டான்.
புகைப்படத்தில் பார்த்ததை விட அழகாகவே இருந்தான் ஸ்ரீ காந்த். நேர்த்தியிலும் சரி கம்பீரத்திலும் சரி ஒரு குறை சொல்ல முடியாத படி இருந்தான் ஸ்ரீ காந்த். தோள்களில் ஒரு நிமிர்வு,கைகளில் ஒரு உறுதி என இருந்தவனை பார்த்துக் கொண்டிருக்கையிலேயே, அவன் குரல் அவள் சிந்தனையை கலைத்தது.
“உட்காருங்க.. மிஸ். நித்யகாருண்யா”என்று அவன் கூற, அந்தக் காந்தக் குரலில் மெய்கலங்கி தான் நின்றாள் அவள் . அவன் தன்னை இன்னும் பார்க்கவில்லையே என்று மனதினுள் சிறு நெருடல் பூத்து மறைந்தது. ஏதும் பேசாமல் அமர்ந்தாள் அவள்.
அவனது க்ளீன் ஷேவ் கன்னங்கள் பளபளக்க, விளம்பரமொன்றில் வந்த ஆணழகன் நினைவு வர, இருவரையும் ஒப்பிட்டது மனது. ஸ்ரீ காந்தே உயர்ந்து நின்றான்.
“ஸோ.. மிஸ். நித்யா” என்ற படி அவன், தன் கண்களை ஃபைலில் இருந்து எடுத்து அவள் முகத்தில் பதிக்க, அவள் ஒரு கணம் நிலை குலைந்து நின்று பின் சமாளித்த படி உரையாட தொடங்கினாள் அவள் .
“யெஸ் சார்”என்ற படி, அவள் மெல்ல வந்து எதிரே இருந்த ஆசனத்தில் அமர, அவன் அவளைப் பார்த்து அறிமுகப் புன்னகையொன்று உதிர, அந்த வசீகர சிரிப்பில் சிந்தையிழந்தாள் அவள் .
அவள் தன்னை விடாக் கண்ணுடன் பார்ப்பது மனதினுள் தென்றலை பரப்ப, அவளை நோக்கி , “மிஸ், கிஸ்”என்ற எந்தவொரு அடைமொழி பட்டங்களும் இன்றி, “நித்யா”என்றழைத்தான்.
சிந்தனை களைந்து அவள் நனவுலகத்துக்கு வர, அவன் கருமமே கண்ணானவன் போல பேசத் தொடங்கினான் “லுக்.. நித்யா.. “நம்ம கம்பெனில”என்று ஆரம்பித்த போது ,
அவன் “நம்ம கம்பெனி” என்று கூறியது அவளுக்கு அவன் மேல் ஓர் நல்லெண்ணத்தை ஏற்படுத்தியது.
“நம்ம கம்பெனில… இன்டர்நெட் பேக்கேஜை .. நாம உயர்த்தி இருக்கோம்… அதை மக்கள் மத்தியில் ரீச் பண்ன.. நடிகை ஹன்சிகாவ வச்சி ஒரு ‘ஆட்’ ஷுட் பண்ணோம்… அவங்க வாய்ஸூக்கு இதுக்கு முதல்ல கமலானு ஒரு லேடி டப்பிங் பண்ணாங்க.. பட்… எனக்கு அது பிடிக்கல.. கொஞ்சம் ரூட் வொய்ஸ் மாதிரி இருக்கு… ஸோ.. ஒருநாள் உங்க டப்பிங் கேட்டேன்… ரொம்ப பிடிச்சிருந்தது…. அதனால தான் உங்களை கான்டாக்ட் பண்ணேன்… இதப் பத்தி நீங்க என்ன சொல்றீங்க? உங்களுக்கு ஒகேயா? ”என்று கேட்டான்.
ஹன்சிகாவை வைத்து விளம்பரப்படம் எடுத்தது உண்மை. அதற்கு கமலா என்ற பெண் டப்பிங் செய்ததும் உண்மை. ஆனால் அவள் டப்பிங்கை கேட்டான் என்றானே அது அப்பட்டமான பொய். பொய் கூறிவிட்டு, சாதாரணமாக அவள் முகத்தைப் பார்த்து கொண்டிருந்தான் அவன்.
“ஆமா சார்…எனக்கு ஒகே “என்று அவள் செவ்விதழ் வாய் திறந்து கூற, அவன் மனமோ, “எனக்கு ஒகே.. “உங்களை கல்யாணம் பண்ணிக்க” ன்னு சேர்த்து சொல்லேன்.. காரு”என்று மருகியது.
“ஓ அப்படியா? குட்”என்று இதழ் மலர்ந்தவன் , அந்த கணமே சம்பளத்தை பற்றி பேச, ஒரு மாதிரியுணர்ந்தாள் அவள்.
அவள் வழமையாக வாங்குவதை விட இரு மடங்கு அதிகமாக இருக்க, “சார்… இது.. ரொம்ப அதிகம்..”என்று கூற, அவன் மெல்ல வாய் விட்டு நகைத்தான்.
“இட்ஸ் ஒகே… எனக்கு வேண்டியதெல்லாம் உங்க மகிழ்ச்சியும், திருப்தியும் தான்.. “என்று அவன் உள்ளத்திலிருந்து கூறிய வார்த்தைகள் அவள் மனதை ஏதோ செய்தது.
அந்த கணம் அவள் எதிர் பாராத ஒன்று நடந்தது. தன்னுடைய செக் புத்தகத்தை எடுத்து, சொன்ன தொகையை எழுதியும் கொடுக்க, அவள் விழிகள் விரிந்தன. கூடவே இதழும் விரிய, “தேங்ஸ்…”என்றாள் அவள் . “நீ “ம்”என்று சொல் கண்ணே.. என் மொத்த சொத்து எழுதி தாரேன்.. மூச்சு உட்பட..”என்றது அவன் மனம்.
எழுதிய பேனையின் தங்க நிற முடியை மூடி, தன் கோட் பையில் செருகியபடி நிமிர்ந்தவன், “யோர் வெல்கம் அவள் …” என்றவனிடமிருந்து விடை பெற்ற போது, அவனும் அவள் பின்னால் வந்தான். ஏன் என்று அவள் புரியாமல் விழிக்க, “வீட்டுக்கு கெளம்பனும் காருண்யா…”என்றான் அவன்.
லிஃப்ட்டில் அவளுடனே வந்தான் ஸ்ரீ காந்த். அவளை கட்டியணைத்து முரட்டுத்தனமாக அவளிதழில் இதழ் பதித்து, “அன்று சொன்ன நூறு முத்தம் இன்று வேண்டும்”என்று கட்டுப்படுத்த முடியாமல் கூற எழுந்த ஆசையை கட்டுப்படுத்திக் கொண்டான்.
அவன் வெள்ளை நிற கோட்சூட் மற்றும் அவள் வெள்ளை சேலை, இரண்டின் பொருத்தத்தை எண்ணி வியந்தவன், தன் கைப்பேசியில் யாருக்கோ ஏதோ சொன்னான்.
அதற்குள் கீழ்த்தளம் வந்து விட, அவள் அவனைத் தாண்டி முன்னே செல்ல, ஒரு நிமிட இடைவெளியின் பின்னர் அவளுடன் இணைந்து நடந்தான் ஸ்ரீ காந்த். அந்த கணம் மின்னல் மின்னியதைப் போல உணர்ந்தாள் அவள்.
எதையும் சரியாக ஊகிக்க முடியாமல் அவள், அந்த பாரிய கண்ணாடிக்கதவினை திறந்து கொண்டு வெளியே வந்தாள்.
அவளுடனே இணைந்து வெளியே வந்தவன்,”வாங்களே.. காருண்யா உங்களை ட்ராப்… ”என்று அவன் கூற வாய் திறக்க முற்பட்ட போது, அவள் பார்வை வேறெங்கோ இருந்ததை கவனித்து, திரும்பியவன், அங்கே ரகு தன்னுடைய மோட்டார் வண்டியில் நின்று கொண்டு இருப்பதைக் கண்டு, அவனுள்ளே எரிமலை வெடித்தது.
வர தாமதமாகலாம் என்று, அவனுக்கு கூறியிருந்தபடியால், ரகு அவளை அழைத்துச் செல்ல நேரத்துக்கு வந்திருந்தான். அவளும் அவன் பின்னே ஏறி சொகுசாய் சென்ற விதம், ஸ்ரீ காந்த்திற்குள் ஆத்திரத்தை கிளப்பியது.
அந்த சமயம் லிப்ட் திறந்ததும் அவளுக்கு மின்னல் மின்னியதைப் போல இருந்தது பிரம்மை அல்ல. அவனையும், அவளையும் இணைத்து புகைப்படம் எடுத்ததன் விளைவு.
அவன் மீண்டும் தன் கைப்பேசியை எடுத்தான். “ஹலோ நான் சொல்ற பைக்க தூக்கணும்”என்றான் கொடூரக் குரலில். அந்த வேலைவெட்டி இல்லாதவன், இந்த வண்டி இருப்பதால் தானே துள்ளுகிறான். முதலில் இந்த வண்டியை தூக்க வேண்டும்.
“நோ.. நோ.. அவனுக்கு ஏதும் ஆகக் கூடாது… பைக்குக்கு மட்டும் ஏதாவது பண்ணா போதும்… ஏக்ஸிடன்ட் மாதிரியே இருக்கணும்.. ஒகே யா?”என்று அவன் கூறியதை யாராவது கேட்டிருந்தால், நிச்சயமாக அவன் வில்லனாகத்தான் இருந்திருப்பான்.
அத்தியாயம் – 8
அவன் கொடுத்த செக்கை காசுக்கு மாற்றியவள் செய்த முதல் வேலை, வாக்களித்தது போல ஹரீஷை வெளியே அழைத்துச் சென்றது தான். அவன் தன்னை மிருகக் காட்சி சாலைக்கு அழைத்துச் செல்லும் படி கூற அவளும் “சரி”என்று தலையாட்டினாள்.
அங்கே அவனுக்கு , அவளைப் பற்றிய நினைப்பைத் தவிர வேறு நினைவே இருக்கவில்லை.
பிரம்மாண்டமான அறையில், அவனது மஞ்சத்திற்கு எதிராக இருந்த சுவரில், அவனும், அவளுமாய் நேற்று எடுத்து கொண்ட புகைப்படம் தொங்கிக் கொண்டிருக்க, அவன் முகம் முழுவதும் மகிழ்ச்சியில் நிறைந்திருந்தது. கூடவே அவன் கையில் குழந்தையும் இருந்திருந்தால் அவன் வாழ்க்கையே பூரணத்துவம் கண்டுவிட்டது போல உணர்ந்திருப்பான் அவன்.
அங்கே ஹரீஷும், அவளும் உலகத்தை மறந்து மகிழ்ச்சியில் திளைத்துக் கொண்டிருந்தனர். ஹரீஷிற்கு அதுவொரு புது அனுபவமாக இருந்தது. பறவைகள், மிருகங்கள், ஊர்வன என்று அனைத்து உயிரினங்களும் இருப்பதைக் கண்டு, ஹரீஷ் துள்ளிக் குதித்துக் கொண்டு இருந்தான்.
“சித்தி.. சித்தி.. லயன்.. சித்தி.. ஸ்நேக்… சித்தி க்ரொகடையில்”என்று அவன் கூண்டுக்குள் அடைக்கப்பட்ட மிருகங்களை சுட்டிக் காட்டி கூறிய படியே வர அவளும், ஒவ்வொன்றாய் படம் பிடித்தாள். அனைத்தையும் பார்வையிட்டு விட்டு வெளியே வந்த போது அவனுக்கு பசியெடுத்திருக்கும் போலும்.
“சித்தி.. பசிக்குது”என்றான் மழலை குரலில். “சரி வாடா கண்ணா ஏதாவது சாப்பிடலாம்”என்று கூறி, அவன் கையை பிடித்த படி, அவள் பாதையை மாறிக் கடந்து, அருகே இருந்த “கே. எஃப். ஸி”யில் நுழைந்தாள் அவள் .
இருவருக்கும் சாப்பிட்டு விட்டு வீட்டுக்கு போக ஐடியாவே இல்லை. மாறாக ஹரீஷின் அன்புத் தொல்லையால் அவனை, விக்டோரியா பூங்காவிற்கு அழைத்துச் செல்லும் படியாயிற்று.
அங்கு சென்றதும் ஹரீஷ், சித்தியின் நினைப்பு கூட இன்றி, தன்னையும் மறந்து விளையாட ஆரம்பித்தான்.
அவனை கண்காணித்துக் கொண்டே அருகிலிருந்த பெஞ்ச்சில் அமர்ந்திருந்தாள் அவள் . செயற்கையாய் அமைக்கப் பட்டிருந்த நீரூற்றுக்களில், பிற குழந்தைகளுடன் சேர்ந்து நனைந்து கொண்டிருந்தான் ஹரீஷ். வேறு மாற்றுத் துணியில்லாவிடினும் அவனைத் தடுக்க மனமற்று இருந்த போது, அவள் நாசி சந்தன வாசனையை தானாகவே நுகர்ந்தது.
இது.. இது அவன்… ஸ்ரீ காந்தின் பர்ஃபியூம் வாசனை தானே என்று உள்ளம் சொல்ல, மெல்ல தலையைத் திருப்பினாள் அவள்.
அவள் ஊகம் சரியே என்பது போல் அவளை நோக்கி மெல்லிய புன்னகையை உதிர்த்த படி, டெனிம் மற்றும் நீலநிற டீஷேர்ட்டுடன் அவளை நோக்கி வந்து கொண்டிருந்தான். சாதாரணமாக இருந்த அவனழகு அவளுள் வியப்பை ஏற்படுத்தியது. கூடவே அவனெப்படி இங்கே என்ற கேள்வியும் பிறந்தது.
அவளை கண்காணிப்பதை விட அவனுக்கும் வேறு என்ன தான் வேலை?அவள் இங்கு தான் இருக்கிறாள் என்று தகவல் கிடைத்ததும் ஓடி வந்து விட்டான் ஸ்ரீ காந்த். அவன் அழைக்காமலேயே தன்னை அவள் திரும்பிப் பார்த்ததும், தன்னை கண்டதும் அவள் முகம் விகசித்ததும் அவனுள் ஓர் இதத்தைப் பரப்பியது.
கூடவே அவள் கண்ணில் தெரிந்த குழப்பம், அவன் மனதை நெருட, “என்ன… இப்படி ஷாக்காகி நிற்கிற காருண்யா? நான் இங்க வரக் கூடாதா?”என்று தன்னிரு கைகளையும் பேன்ட் பாக்கட்டினுள் விட்டபடி கேட்டான் அவன் .
சட்டென அவன் அப்படி சொல்ல, கூடவே “காருண்யா”என்ற அழைப்பும் அவளை ஏதோ செய்ய, “உட்காருங்க சார்”என்ற படி சற்று நகர்ந்து அவன் அமர இடமளித்தாள்.
பேன்ட் பாக்கட்டினுள் இருந்து கைகளை எடுக்காமலேயே அமர்ந்தவன், காலுக்கு மேல் கால் போட்டபடி, இடது கையை மட்டும் எடுத்து பெஞ்ச்சில் வைத்து, அவன் கம்பீரமாய் அமர்ந்த நிலை, அவளை சற்று பிரம்மிக்க வைத்தது.
“சார் எப்படி இந்த பக்கம்?”என்று அவள் தன் சந்தேகத்தை கேட்க, அவனிமைகள் இடுங்கின. காரணம் புரியாமல் விழித்தவளை நோக்கி, “நான் ஒண்ணு சொன்னா தப்பா எடுத்துப்பியா?”என்று அவன் அதே காந்தக் குரலில் கேட்க, “ஏன் சார்…… அப்படி சொல்றீங்க?”என்று சிறு பிள்ளை. போல கேட்டாள்.
“நீ… என்னை சார் ன்னு கூப்பிட்றது…. எனக்கு கொஞ்சம் கூட பிடிக்கல…. என்னை இல்லேன்னா ஸ்ரீன்னு கூப்பிடு ”என்று அவன் கூற, ஒரு கணம் தயங்கினாள் அவள் .
தான் எப்படி அவனை..? இருப்பினும் அவனுக்கே சார் என்று அழைப்பது பிடிக்காவிடின், தன்னால் எப்படி அவனை சார் என்று அழைக்க முடியும்? என்று தோன்ற, “ஒகே ஸ்ரீ காந்த்… நீங்க எப்படி இந்த பக்கம்?”என்று அதே கேள்வியை திருத்திக் கேட்டாள்.
அவளது என்ற அழைப்பில் மதிமயங்கி நின்றவன் “என் உயிர் பார்க்க நா வரக்கூடாதா?”என்று கூறத் துடித்த நாவை கட்டுப் படுத்திக் கொண்டு, வேறு சொன்னான்.
“ஆர்ட் கேலரில ஒரு எக்ஸிபிஷன் … பார்த்துட்டு… அப்படியே ரோட்க்ரொஸ் பண்ணி… இங்க சும்மா தான் வந்தேன்.. . பட் என்னவொரு இனிய அதிர்ச்சி … நீ இருந்த காருண்யா…. சும்மா ரெண்டு வார்த்த பேசிட்டு போலாமேன்னு இங்க வந்தேன் ”என்று அவன் உதட்டோரம் சிறு புன்னகையுடன் கூற, அவனுதட்டையே வெட்கங்கெட்டு ஒரு சில கணங்கள் பார்த்த படியிருந்தாள் காருண்யா.
(ஆர்ட் கேலரி ) கலாபவனம், விக்டோரியா பூங்காவிற்கு எதிரில் தான் உள்ளது. அதனால், வந்திருக்கக் கூடும் என்று எண்ணியவள், தான் வெட்கமின்றி அவனுதடுகளை பார்ப்பதை உணர்ந்து, சட்டென தன் முகத்தை திருப்பிக் கொண்டாள், ஹரீஷை பார்ப்பது போல.
ஹரீஷ், அவளை நோக்கி, ஈர ஆடையுடன் நடந்து வருவதைக் காணவும், அவளுக்கு சிரிப்பு வந்தது. சித்தியை நோக்கி நடந்து வந்தவன், சித்தியின் அருகில், மாற்றான் ஒருவன் அமர்ந்திருப்பதைக் கண்டு, சங்கோஜப்பட்டு அவன்,
ஸ்ரீ காந்தினை பார்த்துக் கொண்டிருப்பதைக் காணவும் அவளுக்கு மறுபடியும் நகைப்பு வந்தது.
“என்ன.. செல்ல கண்ணா பார்க்குற? இது.. மிஸ்டர்.ஸ்ரீ காந்த் ரவிச்சந்திரன்… சித்தியோட…”என்று அவள் ஏதோ கூற வருகையில்,
இடையில் புகுந்த ஸ்ரீ காந்த், ஃப்ரண்ட் ஃ.. சித்தியோட ஃப்ரண்ட் …”என்று அவள் வசனத்தை முடித்துக் கொடுத்தான்.
அவன் தன்னை தோழி என்றது மனதினுள் இதம் பரப்ப, ஹரீஷை நோக்கி ஸ்ரீ , “இது யாருனு சொல்லவே இல்லையே காருண்யா?”என்றான், அனைத்தும் அறிந்தும் அறியாதவன் போல.
“இது என்னோட அக்கா பையன்… ஹரீஷ்”என்று அவனுக்கு அறிமுகப்படுத்தவும், அவனை நோக்கி, தன்னுடைய கையை நீட்டி “ஹலோ.. நைஸ் டு மீட் யூ சார்”என்றான் உதட்டோரம் சிறு புன்னகையுடன்.
தான் உதடுகள் விரிய சிரித்ததை, அவளைத்த கண் வாங்காமல் பார்க்கவும், அவன் இந்த உலகத்திலேயே இல்லை. திரும்ப சிரித்தால், திரும்ப பார்ப்பாள் என்று எதிர்பார்த்தால் அவனுக்கு ஏமாற்றம் தான் மிஞ்சியது.
அவள் இம்முறை ஹரீஷை தான் பார்த்துக் கொண்டிருந்தாள். ஹரீஷின் பஞ்சுப் பொதி போன்ற உள்ளங்கை தன்னுள் பதிய, புது மாதிரியான சுகத்தை உணர்ந்தான் அவன் .
ஒரு நான்கு வயது குழந்தையுடன் பேசுவது இது தான் முதல் தடவை. அது அவனுள் புது மாதிரியான அனுபவத்தை கொடுத்தது. தனக்கும் ஒரு குழந்தை வேண்டும் என்ற கனவு அவனுள் அப்பொழுது தான் வேர் விடத் தொடங்கியது.
“மீ டூ மிஸ்டர். ஸ்ரீ காந்த்”என்று அவன் பெரிய மனிதர்கள் போல கூற, அவளுக்கும், ஸ்ரீயிற்கும் சிரிப்பு வர, புதிதாக உருவான ராகம் போல இருவரும் இணைந்தே நகைத்தனர்.
மொத்தமாய் நனைந்திருந்தவனை மடியில் கிடத்தி, தன் சுடிதாரின் துப்பட்டாவால், ஹரீஷின் தலையைத் துவட்ட, அதனை ஏக்கத்துடன் பார்த்துக் கொண்டிருந்தது ஒரு பெரிய குழந்தை.
சித்தி தன் தலையை துவட்டி விட்டதும், சித்தியை நோக்கிய ஹரீஷ், “சித்தி…. போட்டிங் போலாமா?… ப்ளீஸ்… சித்தி போட்டிங் போலாமா?”என்று மழலை குரலில் கெஞ்சவாரம்பித்தான். “இல்லை கண்ணா…. இன்னொரு நாள் போலாம்….”என்று அவள் அதற்கு மறுப்பு தெரிவிக்க, அங்கு அவள் எதிர் பாராத ஒன்று நடந்தேறியது.
சட்டென இருக்கையை விட்டு கம்பீரமாய் எழுந்து, ஈரத் துணியுடன் இருக்கும் ஹரீஷை தூக்கிக் கொண்டவன் அவளையும், கைப்பற்றி இழுத்தான்.
“வா…. காருண்யா.. குழந்த ஆசைப்படறான்ல வா……ஒரு ரௌன்ட் போலாம்…”என்ற படி அவள் கைப்பற்றி இழுக்க, அவன் கைப் பட்டதும் அவள் மேனியில் இரசாயன மாற்றங்கள் நிகழ்வதை நன்றாகவே உணர்ந்தாள் அவள் .
நேற்று மட்டுமே பழக்கமான ஒரு ஆடவன், இன்று தன் கைப்பற்றியதும் ஏன் தனக்கு கோபம் வரவில்லை என்று அவள் தனக்குத் தானே கேட்டுப் பார்த்தும் பதிலில்லை.
அதே கணம் அவள் இன்னொன்றையும் கவனிக்கத் தவறவில்லை. பலர் ஆடை நழுங்கக் கூடும் என குழந்தைகளை தூக்க சங்கோஜப்படும் நேரத்தில், கொஞ்சம் கூட யோசியாமல் ஹரீஷை அநாயசமாக தூக்கிக் கொண்ட விதம் அவனைப் பற்றி இன்னும் கொஞ்சம் உயர்வாக எண்ண வைத்தது.
அவள், அவன் கூடவே நடந்து வந்தும், அவன், அவள் கையை விடவில்லை. ஒருவேளை அவன் மறந்து விட்டிருக்கலாம் என்று நினைத்த அவள் கூட, “கைய எடுங்க”என்று சொல்ல மனமற்று, அவன் கையிலேயே தன் கையை அடைக்கலமாக்கி, அவனுடன் இணைந்து நடந்தாள் அவள் .
அவனாவது மறந்து விட்டிருப்பதாவது, வேண்டுமென்றே அவள் கையை பிடித்த படி நடந்தான் ஸ்ரீ.
அவன் விட்டால், அவள் தோள் மேலேயே கையை போட்டிருப்பான். அந்த அதிரடியை அவள் தாங்குவாளோ என்று பயந்து தான் அவன் கொஞ்சம் அடக்கி வாசித்தான்.
அன்ன உடலமைப்பைக் கொண்ட படகினுள், முதலில் குனிந்து ஹரீஷை உள்ளே வைத்தவன், படகு அங்குமிங்கும் ஆடியதால், அவளின் வலக்கையையும், கூடவே இடையையும் பற்றி, அவளை உள்ளே இறக்கி விட்டவனாய், அவனும் அநாயசமாக ஏறி உள்ளே உட்கார்ந்தான்.
அவள் எதுவுமே பேச, சிந்திக்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டாள். அவன் கை பட்ட இடங்கள் அவள் உணர்ச்சியை தூண்டிவிட, ஹரீஷை மடியில் வைத்த வண்ணம் தண்ணீரையே பார்த்த படி வந்தாள்.
ஹரீஷோ பெரியவர்கள் இருவரின் மனக்குழப்பங்களை அறியாமல், அவன் போக்கில் அவன் கைதட்டி சிரித்த படி வர… ஸ்ரீ காந்தின் மனமோ உல்லாசமாக சில்லிட்டு பறந்து கொண்டிருந்தது.
“காருண்யா.. போட்டிங் பிடிச்சிருக்கு?”என்று அவன் கேட்க, அவளும் வெட்கப் புன்னகையை உதிர்த்த படி, “ம்”என்று கூறுவாள் என்று எதிர்பார்த்தால், அவள் எதுவும் சொல்லாமல் இருந்தது அவனை வாட்டியது.
ஒருவேளை அந்த பொறுக்கி ரகுரவி தன்னிடத்தில் இருந்தால் நன்றாயிருக்குமோ என சிந்திக்கிறாள் என்று தோன்ற, அதற்கு மேல் அவனால் போட்டிங் செல்ல முடியவில்லை.
ஆனால் காருண்யாவின் காதுகளுக்கு அவன் கூறியது விழவில்லை என்பது தான் உண்மை. அதை விட்டு இல்லாததையெல்லாம் கற்பனை செய்தான் அந்தக் காதல் மன்னன்.
ஏறுவதற்கு உதவி செய்தவன், இறங்கிவதற்கும் உதவி செய்வான் என்று எதிர்பார்த்தாள் அவள் .
ஸ்ரீயோ ஹரீஷை மட்டும் தூக்கிக் கொண்டு நடக்க, அவள் தட்டுத் தடுமாறி தான் இறங்க வேண்டியிருந்தது. ஏன் ஸ்ரீ தனக்கு இறங்க கை தரவில்லை? ஒருவேளை முதலில் ஏறும் போது சங்கோஜப்பட்டதால் விட்டு விட்டானோ என்று தோன்ற அவள் முகத்தில் ஏமாற்றம் ரேகைகள் படர்ந்தன.
அவனிடமிருந்து விடை பெற்றுச் செல்லும் நேரம் ஹரீஷ், ஸ்ரீயின் கன்னங்களில் இதழ்பதித்து, “தேங்க்ஸ் அங்கிள் ”என்று கூற, அவன் முகம் பூவாய் மலர்ந்தது. மனதிலிருந்த கவலை அகன்று முகம் மென்மையானது.
அவன் அவளை நோக்கி, அதே மகிழ்ச்சியுடன் திரும்பி, “தேங்ஸ் ன்னு மட்டும் சொல்லிடாதே.. காருண்யா… நான் இவ்ளோ சந்தோஷமா இருந்தததே.. இன்னிக்கு தான்… அதனால நான் தான் உனக்கு தேங்ஸ் சொல்லணும்… தேங்க்ஸ்… நாளைக்கு பார்க்கலாம்” என்று சிரித்த படியே கூறிவிட்டு அகல, அவளின் சோகமும் மெல்ல மறைந்தது.
அன்றிரவு ஸ்ரீயிற்கும் உறக்கமே வரவில்லை. திரும்பும் இடமெல்லாம் அவள் நின்று கொண்டிருப்பது போலவே தோன்றியது அவனுக்கு.
அருகாமையில் அவளிலிருந்தும் வீசிய மல்லிகை மலரின் நறுமணத்தில் தன்னையே தொலைத்தான் அவன். அவள் குரல் மட்டும் தனக்கு போதும் என்று நினைத்திருந்தவனுக்கு, அவளை சந்தித்த பிறகு, பழகி பார்த்த பிறகு, அவளுடைய எல்லாமும் தனக்கு வேண்டும் என்ற வெறி அவனுள் பிறந்திருந்தது.
எப்பொழுதும் ஹரீஷின் ஈரத் தலையை, அவள் துடைக்கக் கண்டானோ, அப்பொழுதே அவளை தன் குழந்தைகளின் தாயாக எண்ணவாரம்பித்தான் அவன்.
அவள் கைப்பற்றிய அவன் கை இன்னும் குறுகுறுத்துக் கொண்டு தான் இருந்தது. அவள் மனதிலிருக்கும் ரகுரவியை அழித்து, அவளிதயக் கூட்டில் தான் மட்டும் வாழ வேண்டும் என்று உறுதி பூண்டான் ஸ்ரீ, உண்மையறியாமல்.
ரகுவின் நினைவுகள் வந்துவிட்டதோ என்று எண்ணியவன், சொல்லாமல் சென்று விடத் தான் முடிவெடுத்தான். இருப்பினும் ஹரீஷின் முத்தத்தில், கோபம் பனித்துளி போல கரைந்திட, அப்பொழுது தான் அவனால், அவளுடன் நிம்மதியாக பேசக் கூட முடிந்தது.
ஆனால் அங்கே அவளுக்கும் சரியான உறக்கம் வரவில்லை. மொட்டு மொட்டு என்று விழித்த படி , ஹரீஷை கட்டிப் பிடித்த படி அமர்ந்திருந்தாள் அவள் .
ஹரீஷோ விளையாடிய களைப்பில் நன்றாக உறங்கிக் கொண்டிருந்தான்.
அவன் கை பட்ட இடங்கள் தீயாய் எரிந்தது அவளுக்கு. அவன் கை பற்றிய படி நடந்த போது, அந்தப் பிடியில் மனம் லயித்தது ஏன்? அந்தப் பிடியில் அன்பு, பாசம், பாதுகாப்பு என அனைத்தும் இருப்பதாக ஏன் உணர்கிறோம்? என்று புரியாமல் விழித்தாள் அவள்.
மொத்தத்தில் அவள் இதுவரை சந்தித்த ஆடவர்களிலேயே வித்தியாசமாய் தெரிந்தான்.
அத்தியாயம் – 9
மறுநாள் காலை நித்யகாருண்யா, டப்பிங் செய்வதற்காக அவனது ஸ்டுடியோவில் இருந்தாள். அவள் இன்று வீட்டிலிருந்து கிளம்பும் போது அதிக நேரத்தை ஒப்பனைக்காக செலவிட்டாள்.
கறுப்பு நிற ஆர்ம்லெஸ் டாப்பில், வெள்ளை நிறத்திலான சிறுசிறு புள்ளிகள் வந்திருக்க, கழுத்தின் கீழ் பகுதி, விளங்காத வண்ணம் முழுவதும் மறைக்கப்பட்டிருக்க, கீழே லெகிங் அணிந்திருந்தாள் அவள் . துப்பட்டா இல்லாமல் அழகாகவே இருந்தாள் காருண்யா.
அவனுக்கு முதலிலேயே வந்து விட்டிருந்தவள், அவன் வருகைக்காக பெரிதும் ஏங்கினாள்.
அவனை காண அவள் மனம் துடியாய்த் துடித்துக் கொண்டிருந்தது. தன்னுடைய குரலை ஏதோவொரு விளம்பரத்தில் பார்த்து பிடித்தது என்றவனுக்கு, இன்று நேரிலேயே பேசிக் காட்டப் போகிறோம் என்ற சந்தோஷத்தில் அமர்ந்திருந்தாள் அவள் . டப்பிங் தயாரிப்பாளர் வந்து, அவளை அழைத்துச் சென்று, விளம்பரத்தை போட்டுக் காட்டினார்.
உண்மையிலேயே அருமையான விளம்பரமாகத்தான் தோன்றியது அவளுக்கு. ஹன்சிகா திரையில் தோன்றி, கமலாவின் குரலுடன் பேச ஆரம்பித்தாள்.
“ஹாய் ஐ ஏம் ஹன்சிகா…இது தான் என்னோட லைஃப்”என்று பின்புறம் கைகாட்ட, நடிகை ஹன்சிகாவின், வாழ்க்கை முறையை ஒட்டிய ஓர் காணொளி. ஹன்சிகா படுக்கையிலிருந்து எழுந்தது முதல், ஜிம்முக்கு செல்வது முதற்கொண்டு, அவரின் அன்றாட வாழ்க்கையில், “செல்வொய்ஸ்”எப்படி பயன்படுகிறது என்று அவர் கூறுவது போல இருந்தது அந்தக் காணொளி.
செல்வொய்ஸ் நிறுவனம் உலகளாவிய ரீதியில் வாடிக்கையாளர்களை கொண்டுள்ளதால் இந்தியாவில் எடுக்கப்பட்ட ஷுட், இலங்கைக்கும் பொருந்தும்.
“நீங்களே பார்த்தீங்கள்ள?…. லோக்கலை நம்பி ஏமாறாதீங்க.. செல்வொய்ஸ்கு சேன்ஜ் ஆகுங்க”என்று சுட்டு விரல் காட்டி அறிவுரை கூறுவது போல இருந்தது அந்தக் காணொளி.
அதனை ஏற்ற இறக்கங்களுடன் கூறுவது ஒன்றும் பெரிய விடயமாக படவில்லை அவளுக்கு. செய்து விடலாம் என்ற நம்பிக்கை துளிர்த்த வேலை, அவன் வந்தான்.
இம்முறை சாதாரணமான உடையை அணிந்து வந்திருந்தான் ரவிச்சந்திரன்.
இளநீல நிற வண்ணத்தில் முழுநீளக்கை சட்டை அணிந்து கறுப்பு நிறத்தில் காற்சட்டையும் ஷுவும், கையில் “ரோலெக்ஸ்” கைக்கடிகாரத்துடன் கூடவே கண்களில் “கூலிங் கிளாஸ்”அணிந்து, டை ஏதுமின்றி, அவன் நடந்து வந்த நடையை கண்கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தாள் அவள் .
பேசாமல் இவன் மொடலிங் செய்திருக்கலாமே என்று தோன்றுமளவு கனகச்சிதமாக இருந்தது அவனுக்கு.
கறுப்புக் கண்ணாடிக்குப் பின் மறைந்திருந்த அவன் எக்ஸ்ரே கண்கள், அவளை ஆதியிலிருந்து அந்தம் வரை படமெடுத்தன.
நேரே அவளிடம் வந்தவள், “ஹாய் காருண்யா”என்றான் அவளுள்ளம் கரைந்துருகும் படி.
அவள் “ஹாய் ஸ்ரீ”என்ற போது, இருவரது கைப்பேசிகளும் ஒரே நேரத்தில் ஒலிக்க , இருவரும் சிரித்துக் கொண்டே எதிர் எதிர் திசையில், புறமுதுகு காட்டி பேச ஆயத்தமானபோது, அவர்களிருவருக்கும் கிடைத்தது ஒரே செய்தி தான்.
அவன் உள்ளம் மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்த அதே வேளை, அவள் கண்கள் கண்ணீரைச் சொறிந்து கொண்டிருந்தன.
“பாஸ்..வேலைய முடிச்சிட்டேன்.. பட்.. ஆளுக்கு தான் இலேசா கால்ல அடி”என்று மறுமுனையில் இருந்த அவனது இரகசிய அடியாள் கூறிக் கொண்டிருந்தான் . அப்படியானால் கூறியது போல பைக்கை தூக்கி விட்டானா?
ஆம் அவ்வாறு தான் நடந்தது. அதைக் கேட்டதும் அவன், “ஹேய்.. முட்டாள்.. உனக்கு பைக்க மட்டும் தானே தூக்க சொன்னேன்”என்று கத்தினான்.
“ஆமா.. பாஸ்.. பட்… சின்ன மிஸ்டேக் நடந்து போச்சு… இடது கால்ல மட்டும் தான் இலேசான அடி பாஸ்.. மத்தபடி பெரிசா ஒண்ணுமில்ல”என்று தான் செய்த தவற்றை பூசி மெழுக, அவன் சிந்தித்தான்.
பரவாயில்லை. ரகுவிற்கு வேண்டும். இன்னுமொரு முறை அவளை பைக்கில் ஏற்றிக் கொண்டு செல்லும் போது, இந்த விபத்து அவனுக்கு கண்டிப்பாய் நினைவுக்கு வரும். அது போதும் என்று எண்ணி மகிழ்ந்தவனாய், அழைப்பை துண்டித்து விட்டு, அவளை நாடிச் சென்றான் ஸ்ரீ.
அங்கே…. எந்த முகத்தில் சந்தோஷத்தை மட்டும் பார்க்க வேண்டும் என்று எண்ணியிருந்தானோ, அந்த முகத்தில் நதி போல கண்ணீர் பெருக்கெடுத்து ஓடவும் துடித்துப் போனான் அவன் .
எல்லாமே தன்னால் அல்லவா வந்தது என்று நினைத்தவனுக்கு உள்மனதில் குற்ற உணர்வு அவனை பிடுங்கித் தின்றது. அவளது இந்நிலைமைக்கு தான்தான் காரணம் என்றது மனது.
அவள் கைகள் நடுங்க, முகத்தில் பதற்றத்துடன், அவனை நோக்கி ஓடி வர, அனைத்தும் அறிந்தும் “என்ன”என்று கேட்க அவனால் முடியவில்லை. அவள் அழுது கொண்டு கூறும் பதிலை அவனால் கேட்கவும் முடியாது.
“ஸ்ரீ…. ஸ்ரீ… நா .. நான் … ஹாஸ்பிடல் போ.. கணும்”என்று கூறி அவள் அழ, அவள் கூறிய “ஸ்ரீ”என்ற அழைப்பில் மனம் நெகிழ்ந்து, அவள் கவலையில் உள்ளம் உடைந்து, அவளை கட்டியணைத்து ஆறுதல் படுத்த வேண்டும் என்ற ஆவலை கட்டுப்படுத்திக் கொண்டு , “வா ஹாஸ்பிடல் போலாம்… உன் கூட நானும் வரேன்”என்ற படி அவள் முன்னே விறுவிறுவென நடந்தான் தன் காரினை நோக்கி.
அவன் ஆசைப்பட்டு வாங்கிய காரில், அவளை சிரித்த முகமாய் ஏற்ற நினைத்திருந்தான், ஆயினும் இப்படி அவளை ஏற்றுவான் என்று அவன் கனவிலும் நினைத்திருக்கவில்லை.
அவள் முகத்தினை பார்க்கும் சக்தி அவனுக்கு இல்லை. அவள் நிலைமைக்கு தான் தான் காரணம் என்று தோன்ற, அவள் பக்கம் திரும்பாமல் முகத்தை திரும்பி, முக இறுக்கத்துடனேயே வண்டியை ஓட்டினான் .
மருத்துவமனையில் ரகுவுக்கு பயப்படும் படியாக எதுவுமே நடந்திருக்கவில்லை. அவனது அடியாள் கூறியது போல, இடது கணுக்காலின் கீழ் சின்னக் காயம். அதனால் அதைச் சுற்றி, சிறு கட்டு. ரகுரவி விழித்தே தான் இருந்தான். பக்கத்தில் அவள் அத்தையும், அவள் போலவே கலக்கத்துடன் நின்று கொண்டிருக்க, ரகுரவியை பார்த்ததும் தான் அவளுக்கும், அவனுக்கும் ஆறுதலாக இருந்தது. ஆனால் ரகுவின் வண்டியோ எடுக்க முடியாத நிலைமையில் இருந்தது.
ரகுவைப் பார்த்துக் கண்ணைத் துடைத்துக் கொண்டே திட்டவாரம்பித்தாள் அவள் . “டேய் தடிமாடு … உனக்கு கொஞ்சமாவது அறிவிருக்காடா?..பார்த்து வண்டிய ஓட்டி வரமாட்டியா? இப்போ பாரு காலுக்கு என்னாச்சுனு?? .. “என்று அவள் திட்ட, உள்ளுக்குள் புகைந்தான் ஸ்ரீ.
ரகு மேல் அவள் காட்டும் கரிசனத்தினால் விளைந்தது தானே இந்தக் கோபம் என்று தோன்ற, அவன் யாருக்கும் தெரியாமல் பற்களை கடித்துக் கொண்டான்.
அதுவரை பேசாமல் இருந்த ரகுவின் கண்கள், ஸ்ரீ காந்தை கண்டதும் வியப்பில் விரிந்தன.
இது நாள் வரை அவன் யாரிடமும் சொல்லாத கதை. ரகுவின் ரோல்மாடல் , மானசீக குரு என எல்லாமுமே ரவிச்சந்திரன் தான்.
தன்னுடைய வேலை விடயமாக பேச வந்த வழியில் தான் ரகுவிற்கு இப்படியொரு அசம்பாவிதம் நடந்தது. ஆனால் அவனது மானசீக குருவே அவனை பார்க்க வந்திருக்கிறான் என்றறிந்ததும், அவனுதடுகள் அந்த வலியிலும் ஸ்ரீயின் முகம் பார்த்து விரிந்தன.
மனதினுள் வஞ்சகத்துடன், ஸ்ரீ யும் மெல்ல நகைத்தான் போலியாக.
என் சொத்துக்கு ஆசைப்பட்டாலும் தந்திருப்பேனடா? நீ ஆசைப்படுவது என் உயிர் சுவாசத்துக்காயிற்றே என்ற எண்ணம் மேலிட அவனால் வெகு நேரம் சிரிக்க முடியவில்லை.
ரகு – சரண்யா காதல் விவகாரம் யாருக்குந் தெரியாமல் இரகசியமான விவகாரம் என்பதால் மூன்றாம் நபராக நித்யகாருண்யாவுக்கு மட்டும் தான் அவர்கள் விவகாரம் தெரிந்திருந்தது. அதனாலேயோ என்னவோ ஸ்ரீயின் உளவாளிக்கு ரகுவின் காதல் கதை பற்றிய விவரம் அறியமுடியாமல் போனது.
“ஸ்ட்ரெய்ன் பண்ணிக்காம ரெஸ்ட் எடுங்க ரவி… இப்போதைக்கு ரெஸ்ட் தான் முக்கியம்”என்று அவன் கூற, ரகு அதனை காதிலேயே போட்டுக் கொள்ளாமல், “சார் எப்படி இங்க?.. ஓ மை காட்.. என் விஷயம் கேள்வி பட்டு பயந்து போய் வந்துட்டீங்களா..?”என்று கேட்க, அவன் எதுவும் பேசவில்லை.
பேன்ட் பாக்கட்டினுள் இருந்து கைகளை இட்டுக் கொண்டு, திமிருடன் விறைப்பாய் நின்றவன், “அதெல்லாம் ஒண்ணுமில்ல…. காருண்யாவுக்கு ஆறுதலா இருக்கட்டும் ன்னு தான் வந்தேன்”என்றான்.
அந்நிமிடம் மூன்று ஜீவன்கள் அவனை வெடுக்கென நிமிர்ந்து பார்த்ததை அறிந்தும் அறியாதவன் போல நின்றான்அவன்.
ரகுவுக்கும், அத்தைக்கும் மனதினுள் ஏதோவொன்று உறைக்க, காருண்யாவுக்கு மட்டும் தான் முகத்தில் ஆயிரம் வால்ட் பல்பு எரிந்தது. அவன் தனக்காக வந்திருக்கிறான் என்ற எண்ணமே அவ்வேளையிலும் புதுவித உற்சாகத்தை தந்தது அவளுக்கு .
எவ்வளவு பெரிய “பிஸினஸ்மேன்”, தன்னுடைய வேலையை ஒதுக்கி அவளுக்காக வந்தான் என்றால்? அதற்கு பெயர் என்னவாக இருக்கும்?? ரகுவினுள் சிந்தனை ஓடியது. கூடவே “காருண்யா”என்ற அழைப்பும் அவனை இன்னும் கொஞ்சம் சிந்திக்க வைத்தது.
ஸ்ரீயும், ரகுவின் மூளைக்கு உறைக்கவே, அப்படியொரு வசனத்தை பேசினான் . அவன் பார்வை ரகுவின் முகத்தில் இருந்தாலும், அவனது கூர்மை மிகுந்த கண்கள் பக்கத்தில் நின்ற அவனுயிர் மூச்சின் வதனம் மலர்ந்ததையும் கவனிக்கத் தவறவில்லை.
அவளின் பார்வை அவனிலேயே நிலைகுத்தி நின்றது. டப்பிங்கை பற்றி கூட கவலைப்படாமல், அதற்காக ஏற்பட்ட நஷ்டத்தை கூட அவன் கவலைப்படாமல், தனக்கு ஆறுதலாக இருக்க வேண்டும் என்ற ஒரு காரணத்திற்காக அவன் வந்திருக்கிறான் என்பதை நினைக்கையில் , அவளுக்கு உடம்பெல்லாம் சில்லிட்டது. தன்னையறியாமலேயே அவன் மீது மையல் பார்வை வீசுவதை அவளால் தடுக்க முடியவில்லை.
ஆனால் ரகுவிற்கு மட்டும் உள்ளே ஒரு நெருடல். இதுவரை பெண்கள் முகத்தையே பார்க்காதவன், மாடல் அழகிகளுடன் கிசுகிசுக்களில் சிக்காதவன், தன் மாமன் மகளை தேடி தேடி கவனிப்பதன் அர்த்தம் என்ன? காதலா? காமமா? என்று அவன் புருவங்கள் சுருங்க யோசிக்க, ஸ்ரீயிற்கு அது , ரகுரவி பொறாமையில் முகம் வாடுவதாய் தோன்றலாயிற்று.
ஆனால் ரகுவின் தாயிற்கோ, அனைத்தும் கைமீறிப் போவது போல தோன்ற, அமைதியாய் நடப்பதை கவனித்துக் கொண்டிருந்தார்.
ஏதோ நினைவு வந்தவனாய், தன்னுடைய பேன்ட் பாக்கட்டினுள் இருந்து வலது கையை எடுத்தவன், மணிக்கட்டிலிருந்து தன்னுடைய ரோலெக்ஸ் கடிகாரத்தில் இருந்து, மணி பார்த்தவன், “ஓ….. ரொம்ப லேட்டாகிரிச்சு.. நான் இப்போ போயே ஆகணும் ”என்றவன், மணி பார்த்த அதே கையை எடுத்து, கட்டிலில் படுத்திருந்த ரகுவின் தோளில் வைத்த வண்ணம் சற்று குனிந்து, “சீக்கிரமே குணமாகி வாங்க”என்று ஸ்நேகமாக கூறினான்.
இந்த நிலையில் ரகுவைப் பார்க்க ஸ்ரீ காந்த்திற்கு கூட ஒருமாதிரி தான் இருந்தது.குற்ற உணர்வு மேலிட, அவளின் அத்தையிடம் திரும்பி, “ஏதாவது ஹெல்ப் வேணும்னா தயங்காம கேளுங்க ஆன்ட்டி”என்றான்.
பிறகு அவளிடம் திரும்பி, “பை காருண்யா”என்று சிறு புன்னகையுடன் கூறிவிட்டு வெளியே வந்தான் அவன்.
இன்று, அவனுக்கு ஆப்பிள் நிறுவனத்துடன் ஒப்பந்தம் கைச்சாத்திடும் நாள்.
தன்னவள் அன்று தொலைபேசியில் கூறியது போல, ஆப்பிள் ப்ராஜெக்ட்டை முடித்து விட்டால், முடிந்தால் நூறு முத்தமும், வெளியே கூட்டிச் செல்லவும் வேண்டும் என்று எண்ணியபடியே, தலையை சிலுப்பிக் கொண்டு அவளுடனான முத்தக் கனவில், உதட்டைக் கடித்துக் கொண்டே, சிரித்த படி அவன் வெளியேறிய போது , எதிரே ஓடி வந்த பெண்ணுடன் இடித்துக் கொண்டான்.
நிமிர்ந்து, “ஸாரி… சிஸ்டர்”என்று சொல்வதற்குள் அந்தப் பெண், சமாளித்துக் கொண்டு, அவனைத் தாண்டி சென்று விட்டாள்.
திரும்பி அவள் சென்ற திசையை பார்த்தவன், அவள் வந்து சென்ற தடயமே இல்லாதது போல தோன்ற, தலையை சிலுப்பிக் கொண்டு, மறுபடியும் திரும்பி நடக்கவாரம்பித்தான்.
அவ்விள வயது பெண், தன்னில் மோதிய போது, அந்தப் பெண் முகத்தில் தெரிந்த கவலை, பதற்றம், அச்சம் எல்லாவற்றிற்கும் தான் தான் காரணம் என்பது போல் குற்றவுணர்ச்சி தோன்றுவதை அவனால் தடுக்கவே முடியவில்லை.
அவனைத் தாண்டிச் சென்ற பெண், நேரே நுழைந்தது, ரகுரவியின் அறைக்குத் தான். நல்ல வேளை அங்கு அத்தை இருக்கவில்லை.
பணம் செலுத்தவென்று டாக்டரை பார்க்கச் சென்றிருந்தார். ரகுவின் பக்கத்தில் அமர்ந்திருந்தது, அவள் மட்டுமே. திடுதிப்பென நுழைந்த பெண்ணை, இருவருமே அதிர்ச்சியுடனே நோக்கினர்.
அப்பெண்ணோ, ரகுரவியிலேயே பதற்றத்துடன் பார்வையை பதிய விட்டு, உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை அவனை அலசினாள். பிறகு அவன் காலில் கட்டை கண்டதுமே, கண்களில் தன்னையுமறியாமல் கண்ணீர் குபுக்கென எட்டிப்பார்த்தது அப்பெண்ணுக்கு.
வந்தது யாருமில்லை. ரகுவின் உயிர்க்காதலி, சரண்யாவே தான். அவளதும், இவனும் நண்பர்கள் வட்டாரம் மூலம் நடந்ததை அறிந்து கொண்டவள், ஓடி வந்திருந்தாள். ரகுவிற்கு பெரிதாய் ஒன்றுமில்லை என்றவுடன் தான் அவளால் நிம்மதியாக மூச்சு கூட விட முடிந்தது.
“நான் எப்படி துடிச்சி போயிட்டேன் தெரியுமா?… வசுந்தரா… கால் பண்ணி பைக்க எடுக்கவே முடியலைனு சொன்னதும்.. எனக்கு மயக்கம் வந்திருச்சி..”என்று பயந்து போய் கூறியவள், அவள் போலவே திட்டவாரம்பித்தாள்.
அருகிலிருந்த நித்யா, தன் இருக்கையை விட்டு சட்டென எழுந்து, “நான் வெளிய வெய்ட் பண்றேன்”என்று விட்டு வெளியே வந்தாள்.
அவளின் முகத்தில் இளநகை தள்ளாடிக் கொண்டிருந்தது.
அங்கே சரண்யா, “அறிவிருக்காடா முட்டாள் … பைக்க ஓட்டும் போது பாத்து ஓட்ட மாட்டியா? நீ இல்லேன்னா என் நெலமைய கொஞ்சம் யோசிச்சு பார்த்தியா? நீ போனா… நானும் உன் கூட வந்துடுவேன் டா”என்று கண்ணீருடன் கூற, காதலன் ரகுவின் முகத்தில் சொல்லொணா சோகம் குடியேறியது.
“அப்படிலாம் சொல்லாதடி… எனக்கொண்ணும் ஆகாது… நான் ரெண்டு மூணு நாள்ல குணமாகி வந்துடுவேன் டி”என்று சரண்யாவுக்கு ஆறுதல் கூறியவன், திடீரென அவளை நிமிர்ந்து நோக்கி, அவள் கன்னங்களில் வரும் கண்ணீரை வாஞ்சையுடன் துடைக்க, சரண்யா குனிந்து, அவன் நெற்றியில் முத்தமிட்டாள்.
முத்தத்தை கண் மூடி அனுபவித்தவன் ,“ஆமா.. நீ எப்படி இங்க வந்த?… அந்த சொட்டத் தல.. அதுதான் என் மாமா…. உன்னை அப்படிலாம் விட்ற ஆளில்லையே”என்று இமை இடுங்க கேட்க, அவள் மெல்ல நகைத்தான்.
“உனக்கு ஆக்ஸிடன்ட் ன்னு கேள்வி பட்ட உடனே… எனக்கு என்ன பண்றதுனு புரில… திடீர் வயிற்று வலினு பொய் சொல்லி…. இங்க வந்துட்டேன்… அப்பாவ.. ஒ. பி. டில நிக்க வச்சிட்டு, உள்ள செக் பண்ண போற மாதிரி போய்ட்டு நேரா இங்க ஓடி வந்துட்டேன்”என்றாள் மெல்லிய புன்னகையை உதட்டோரம் தவள விட்ட படி .
அதைக் கேட்டவுடன் ரகுவுக்கும் மெல்ல முகத்தில் புன்னகை பரவியது. தன் காதலி தனக்காக ஓடி வந்த விதம், தன்னைப் பார்த்து கண்ணீர் சிந்தியது, தான் போனால் அவளும் வருவேன் என்று கூறியது என எல்லாமுமே, அவனது கண்களில் இலேசாக கண்ணீர் எட்டிப் பார்க்க செய்தது.
பணம் செலுத்தவென்று சென்ற அத்தை, பணம் ஏற்கனவே கட்டியாயிற்று என்று ரிசப்ஷனில் சொன்னதும், வியப்பில் நின்றாள். யார் கட்டியது என்று கேட்ட போது, அப்பெண் “ஸ்ரீ காந்த் ரவிச்சந்திரன்”என்றதும், அத்தை வாய் பேசாது நின்றாள்.
எவ்வளவு தான் வில்லத்தனமாய் யோசித்தாலும், ஸ்ரீயினால், ஓர் உயிரை எடுக்குமளவுக்கு வஞ்சக எண்ணமோ, குரூர மனதோ கிடையாது. எனவே தான் தன்னுள் ஏற்பட்டிருந்த குற்ற உணர்வினை தடுப்பதற்காக, அவன் , ரகுவின் ஹாஸ்பிடல் செலவை மனமார ஏற்றான்.
அத்தியாயம் -10
இன்று ஸ்ரீ காந்தின் ஸ்டுடியோவிற்கு செல்ல ரகுரவியின், பைக்கும் தான் தற்போது இல்லையே?
ஆட்டோவில் சென்றால், அதிக நேரம் பிடிக்கும். நேரத்தை விட்டாலும் அந்தளவு பணம் அவள் கைவசம் இல்லை. அதனால் வங்கிக்கு சென்று பணம் எடுத்து, பின்னர் அங்கிருந்து திரும்ப ஒரு ‘ஆட்’டோ பிடித்து செல்லலாம் என்ற நினைப்பில், அவள் வீட்டை விட்டு வெளியேறிய போது, அலுவலகத்தில் இருந்து அவன் கார் அனுப்பியிருந்தான்.
ஏதும் பேசாமல், மகிழ்ச்சியுடன் ஏறினாள் அவள் . அவனது காரின் சொகுசு இருக்கை, மென்மையாய் இருந்தது. காரின் உட்புறத் தோற்றத்தை இரசித்த வண்ணம், இருந்த போது அவளது செல் சிணுங்கியது. திரையில் விழுந்த எண்ணை பார்த்ததும் அவளது கை கால்கள் எல்லாம் நடுங்கத் தொடங்கின.
“இந்த செல்ஃபோன் காரன் மட்டும் என் கையில கிடைச்சா… அவன் காலி…..”என்று அந்த இலக்கத்திற்கு சொந்தக் காரனான, முகம் தெரியாத நபரை மனதினுள் திட்டினாள் அவள். ஏன் அவனுடன் என்ன கோபம்?
நேற்றிரவு படுக்கைக்கு செல்லும் போது பதினொரு மணியாவது இருக்கும். கண்கள் சொக்கிய நேரத்தில் அவள் கைப்பேசி சிணுங்கியது. யாரென்று பார்த்தால் திரையில் தெரிந்தது, இதே இலக்கம் தான்.
சரி யாரோ? எவரோ? என்னவோ? ஏதோ? என்று எண்ணியபடி, பதிலளித்தாள் அவள் .
அவள் மென்மையாய், தென்றலை போன்ற குரலில், “ஹலோ”என்றதும், மறுமுனையிலிருந்தவன், “ஹாய்டா குட்டி”என்றான் செல்லங் கொஞ்சும் குரலில்.
முதலிலேயே அந்தக் குரல் இப்படி பேசவும், மெய் தள்ளாடிய அவள், தூக்கம் இழந்து, “யார் நீங்க? உங்களுக்கு என்ன வேணும்”என்று பரபரப்பாக கேட்டாள்.
அவன் குரல் கறாராகவும் இல்லை. கரகரப்பாகவும் இல்லை. ஏதோ மென்மையான ஆண்குரல் போன்று, இதுவரை கேட்டிராதது போல இருந்தது.
“எனக்கு நீ தான் வேணும்…பேபி”என்றான் மறுமுனையில் இருந்தவன்.அவன் கூறியதை கேட்டு கடுப்பாகியவள், “யார் நீ?” என கத்தினாள்.
அவளது எதிர்பாராத கத்தலில், திடுக்கிட்டு விழித்த பக்கத்தில் படுத்திருந்த ஹரீஷ், கண்களை அகலத் திறந்து, சித்தியைக் கண்டு விட்ட மகிழ்ச்சியில், ஒரு மெல்லிய புன்னகையுடன் மீண்டும் கண்ணயர்ந்தான்.
இங்கு நின்று பேசினால், ஹரீஷ் எழுந்திருக்கக் கூடும் என்று எண்ணியவள், மெல்ல எழுந்து, கும்மிருட்டிலிருந்த ஹாலுக்கு வந்தவள், “டேய்.. நீ மட்டும் என் கையில கிடைச்ச….”என்று கோபத்தில் கத்த முற்பட்டவள், கத்தாது சாந்தமாகவே கேட்டாள்.
“உங்களுக்கு யார் வேணும் சார்?”என்று கோபத்தை தணித்து , அமைதியாய் கேட்க, மறுமுனையில் இருந்தவனின் நெஞ்சம் வேகவேகமாக துடித்தது.
“சார்….??”அப்படியானால் தான் யாரென்று கண்டு பிடித்து விட்டாளோ? என்று ஒரு கணம் பதறினான் அவன். “சார்….. இது ராங் நம்பர் னு நினைக்கிறேன்” என்று அவள் கூறிவிட்டு வைக்க முற்பட்ட பொழுது, “ஹேய் வெய்ட் … நீ நித்யகாருண்யா தானே”என்று அவன் கூற, யாரோ தெரிந்தவர்களோ என்று எண்ணிக் கொண்டவள் “ஆமா.. நீங்க?”என்றாள்.
மறுமுனையில் இருந்தவன் மீண்டும் தன் விளையாட்டை ஆரம்பித்தான். “நானா.. என்ன தெரியலையா நித்தி… அன்புக் காதலனை இப்படி மறக்கலாமா?”என்று கூற, மீண்டும் கடுப்பானாள் அவள்.
“டேய்.. நீ.. யாருடா.. உனக்கு என்ன தான் வேணும்? ஏன்டா என்னை தூங்க விடாம இப்படியெல்லாம் பண்ற?”என்று முடிவில் அழுவது போல் கூற, அவன் மனம் பரபரத்தது போலும்.
“ஒகே ஒகே.. கூல்.. எனக்கு வேண்டியத கொடுத்தா நான் வச்சிட்றேன்”என்றான் அவ்வாடவன். அவனிடமிருந்து விடை பெற்றால் போதும் என்று எண்ணியவளாய், “என்ன்ன வேணும்?”என்று குரலை அழுத்திக் கேட்டாள் அவள் .
“நீ என் செல்லக் கண்ணால்ல.. நீ மட்டும் இந்த ஆப்பிள் ப்ராஜெக்ட்டை முடிச்சா… நூறு முத்தமும் , ஔட்டிங்கும் போலாம்னியே நித்தி… நினைவிருக்கா?”என்றான் மறுமுனையில் இருந்த அவள் .
ஒரு பெண்ணுடன் இப்படி இளகி, இளகி பேசுவது அவனுக்கு இது தான் முதல் தடவை. இரவின் தனிமையில் தூக்கம் வராமல் தவித்தவன், தன்னவளுக்கு அழைப்பெடுத்திருந்தான்.
அங்கே அவள், இதை எப்படி இவன் அறிந்தான்? அது தான் ஹரீஷ்க்கு கூறியதாயிற்றே… குழப்பத்தில் அவள் தவித்த போது அவனே தொடர்ந்தான்.
“நீ.. சொன்ன மாதிரி நான் ப்ராஜெக்ட்டை முடிச்சிட்டேன் காருண்யா.. இப்போ எனக்கு நூறு முத்தம் வேணும்.. அப்புறம் எங்கே ஔடிங் போலாம்னு யோசிக்கலாம்”என்றான் அவன்.
“ஹேய்… யார் நீ..? உனக்கு அறிவில்ல? முன்ன பின்ன தெரியாத ஒரு பொண்ணுகிட்ட எப்படி பேசணும்னு தெரியாதா?.. இன்னொரு தடவ கால்பண்ண நடக்கிறதே வேற?”என்று பல்லைக் கடித்துக் கொண்டு, எச்சரித்து விட்டு அழைப்பை துண்டித்தவளுக்கு அதன் பிறகு தூக்கமே வரவில்லை.
தற்பொழுது அவனிலக்கம் மீண்டும் திரையில் விழ, அவள் ஒரு கணம் சிந்தித்தாள்.
தான் ஏன் அவனுக்கு பயப்பட வேண்டும்? இன்னுமொரு முறை தன்னிடம் வாலாட்டினால், நடப்பதை அவன் தெரிந்து கொள்வான் என்று எண்ணியபடி, அழைப்புக்கு பதிலளித்தாள் அவள்.
அவள் இம்முறை ஹலோ சொல்லுமுன்பே… அவள் காதுக்குள் முத்தமழை இடைவிடாமல் பொழிந்தது.
ஒரு கணம் தள்ளாடித் தடுமாறியவள், அதிர்ச்சியில் செல்லை அணைத்தாள்.
அவளுக்கு தன் மேனி நடுங்குவதை நிறுத்த முடியவில்லை. காதுக்குள் இன்னும் அவன் முத்தங்களின் சத்தம் ஒலித்துக் கொண்டேயிருந்தது.
அவை ஏதோவொன்று அவளுக்குணர்த்த, ஏதும் பேசாமல், ஸ்டுடியோவினுள் நுழைந்தாள்.
அவள், கைப்பேசி காரனின் நினைவிலேயே இருந்ததால், எதிரே அவன் நின்றதைக் கூட அவள் கவனிக்கவில்லை. ஏதோ இயந்திரம் போல சென்று, டப்பிங் பேச நின்றாள்.
உள்ளுக்குளேயே சிரித்துக் கொண்டான் அவன். அவள் பேயறைந்தது போல நிற்கக் காரணம், அவனளித்த முத்த மழையல்லவா? என்று தோன்ற, நடப்பதை மட்டும் கவனிக்கலானான்.
அவள் இரண்டு முறை டப்பிங்கை தவற விட்டாள். மூன்றாவது முறையும் அதே இடத்தில் விடப் போனவளை, எல்லாவற்றையும் அறிந்தும் அறியாதவன் போல,
அவளை ஓர் ஓரமாக அழைத்துச் சென்றவன், “என்னாச்சு காருண்யா? ஏன் ஒரு மாதிரி இருக்க.. ஆர் யு ஓல்ரைட் ? ஏதாவது ஒடம்புக்கு முடியலையா? “என்ற வண்ணம் அதை சாக்கிட்டு, நெற்றியையும், கழுத்தையும் தொட்டான்.
அவளுடல் சிலிர்த்தது .
அவன் கழுத்தில் வைத்த கையை பற்றி தன் மேனியிலிருந்து விலக்கியவள், “ஒண்ணுமில்ல.. ஸ்ரீ காந்த்.. என்னால இதை பண்ண முடியும்?” என்று விட்டு, மீண்டும் டப்பிங் பேச சென்றாள்.
இம்முறை சரியாக வரவே, தயாரிப்பாளர்கள் வேலை முடிந்தது என்ற மகிழ்ச்சியில் கட்டை விரல் உயர்த்தி காட்டினார்.
மறுபடியும் அவளிடம் வந்தான் அவன் . அவளது குழம்பிய முகத்தை தாங்க முடியாமல், தான் தான் அது என்ற உண்மையை கூறி விடலாமா என்று சிந்தித்தான் அவன்.
ஒரு புறம் மனம், “சொல்லாதே” என்று சொல்ல , மறுபுறம் மனம், “சொல்”என்று கூற, வெளியே எதுவுமில்லை என்பது போல விறைப்பாய் நின்றான் ஸ்ரீ.
திடீரென்று, அவனுடைய பேன்ட் பாக்கட்டினுள் இருந்த, அவனது செல், வைப்ரேட்டில் அலற, எடுத்துப் பார்த்தால், அவளின் இலக்கம்.
பேசினால் மாட்டிக் கொள்ள நேரிடும் என்று தோன்ற, ப்ளூடூத்தை எடுத்து, தன் காதில் மாட்டினான் அவன் .
அவள் தூரத்தில் பேசும் அழகை கண்கூடாய் இரசித்துக் கொண்டே, அண்மையில் அவள் குரலை கேட்டுக் கொண்டிருந்தான்.
“என்னடா சொன்ன? உனக்கு நூறு முத்தம் கேட்குதா…. இப்போ பாரு… நான் யார் கிட்ட கொடுக்குறேன்னு…… செல்வொய்ஸ் கம்பனி ஓவ்னர்.. மிஸ்டர். ஸ்ரீ காந்த் ரவிச்சந்திரன்கிட்ட..”என்று அவள் தன் பெயரைக் கூறியதும், ஒரு கணம் அதிர்ந்து, முயன்று வந்த சிரிப்பை அடக்கிக் கொண்டான்.
“டேய்.. நீ தில்லான ஆம்ப்ளயா இருந்தா அப்படியே லைன்லயே இரு… உன்னோட சிம்மும் செல்வொய்ஸ் தானே? உன்னை எப்படி கண்டு பிடிக்குறேன்னு பாரு”என்று பேசிக் கொண்டே அவனருகில் வந்தான்.
அவனோ, எதுவும் தெரியாதது போல, “என்ன?”என்று சிரிப்பை அடக்க முடியாமல் இளநகையொன்றை உதிர்தத படியே கேட்டான்.
அவளோ, அவள் கைப்பசியை பொத்திக் கொண்டு, “ஸ்ரீ காந்த்… இந்தப் பொறுக்கி யாருனே தெரியல? தப்பு தப்பா பேசுறான்.. கொஞ்சம் என்னான்னு கேளுங்க…”என்றாள் அவள்.
இதுவே வேறுயாரையேனும் பற்றி அவள் கூறியிருந்தால், அவனை உண்டு இல்லை என்று பண்ணியிருப்பான். ஆனால் அழைப்பெடுத்த “ஆசாமி”இவனாயிற்றே.
ஏதும் பேசாமல் பேசியை வாங்கியவன், தனக்குத் தானே திட்ட வேண்டுமாமா? என்று எண்ணியபடி, “ஹலோ”என்றான்.
அவன் ஏதும் வாய் திறக்கவில்லை. ஆனால் முகம் மட்டும் விறைப்பாய் நின்றது.
மறுமுனை நபர் இவனுக்கு என்ன சொல்கிறானோ என்று பயந்து போனவள், “என்னாச்சு ஸ்ரீ? ”என்றாள். அவளது “ஸ்ரீ”என்ற அழைப்பில் சர்வமும் கரைந்து விடுமோ என்றெண்ணியவனாய், அவளைப் பார்த்து “வச்சுட்டான் காருண்யா”என்றான்.
“அந்த பயமிருக்கணும்.. ரொம்ப டார்ச்சர் பண்றான் ஸ்ரீ.. ஒரு பொண்ணுகிட்ட எப்படி பேசனும்னே தெரியல…”என்று அவனைப் பற்றி அவனிடமே கரித்துக் கொட்டினாள் அவள்.
அவன் எதுவுமே பேசாமல், அவள் முன் நெற்றிக் கூந்தலையே இரசித்த படியிருந்தான்.
என் தேவதை எவ்வளவு அழகு… அவள் அழகு, இளமை, துடிப்பு என எல்லாமுமே எனக்குத் தான் சொந்தம் என்று எண்ணியவள், அவளை நோக்கி, “காருண்யா”என்றான் மென்மையான குரலில்.
தன் பேச்சை நிறுத்தியவள், “ஏன் ஸ்ரீ?”என்று கேட்டாள். ஸ்ரீ என்ற அவள் அழகிய இதழ்களை, தன்னுள் சிறை செய்ய வேண்டும் என்ற ஆவலை கட்டுப்படுத்திக் கொண்டு, அவளையே ஒரு கணம் பார்த்தான். அவள் கண்களுக்குள் எதையோ தேடினான்.
“என் விழிகளைப் பார் பெண்ணே
என் காதல் அதில் புரியவில்லையா?”
என்று கூறத் துடித்த அவனுதடுகள் மௌன விரதத்தை காத்தன. என்னவாயிற்று என்பது போல் பார்த்துக் கொண்டிருந்தாள் அவள் . சொல்ல வந்த காதலை தன்னுள்ளேயே புதைத்து விட்டு, “நான் இப்போ போகணும்”என்றான் அவன்.
ஏதும் சொல்லாமல், அவனை வழியனுப்பி விட்டு, அவனது மற்ற காரிலேயே வீடு சென்றாள் அவள்.
ஏன் அவன் தன்னை “காருண்யா”என்று அழைத்தான்? ஏதோ முக்கியமான விடயம் கூற வருவது போல ஏன் தன்னை ஆழ ஊடுருவி நோக்கினான்? ஏதும் புரியாமல் நின்றாள் அவள் .
கண் மூடும் நேரமெல்லாம் அவன் பார்வை மட்டும் வந்து போனது. உயிரையே குடித்து விடும் என்பது போன்ற ஒரு பார்வையை அவன் ஏன் தன் மேல் பதித்தான்?குழம்பிப் போனாள் அவள்.
அத்தியாயம்- 11
அவன், நித்யாவின் டப்பிங் வேலையை முடித்து விட்டு, அலுவலகம் சென்ற போது, ரகுரவி தன்னை பார்க்க வந்திருப்பதாக செய்தி கிடைத்தது.
ரகுவின் விபத்து நடந்து, இன்றுடன் ஒரு கிழமைக்கு மேலாகி விட்டது.
ரகுவால் பழையபடி நன்றாக ஓடி, ஆடி நடக்க முடிந்திருந்தது. தன்னறைக்குச் சென்றவன், அவனது சிசிடிவி கேமரா மூலம், ரகுவைக் கவனிக்கலானாள்.
முழுச் சவரம் செய்து, இளம்பச்சை நிற, நீண்டகை சட்டையும், கறுப்பு நிறத்திலான பேன்ட்டும் அணிந்து, கையில் ஒரு ஃ பைலுடன் அமர்ந்திருந்தான் ரகு. இவனெதற்கு இங்கு வந்தான்?
இவன் வேலைவெட்டியில்லாதவனாயிற்றே… கையில் ஃபைலை நோக்கினால் ஒருவேளை வேலை தேடி வந்திருப்பானோ?
இல்லையேல் தன் முறைப் பெண் நித்யகாருண்யாவுடன் பழகாதே எனச் சொல்ல வந்திருப்பானோ? அப்படி மட்டும் கூறட்டும், பல்லை உடைத்து கையில் கொடுத்து விட வேண்டியது தான்.. . என்று எண்ணியபடி, இன்டர்காமில் அழைத்து, “உள்ளே அனுப்பு ”என்றான்.
ரகு மலர்ந்த முகமாவே அவனறைக்குள் நுழைந்தான். அங்கே அவன் காந்த், தன்னுடைய சொகுசு நாற்காலியில் கம்பீரமாகவே அமர்ந்திருந்தான்.
ரகுவைக் கண்டதும், அவனுள் எரிமலையே வெடித்துக் கொண்டிருந்தது.
தன்னவள் பக்கத்தில் மணாளனாக நிற்க இவனுக்கு எந்த தகுதியும் கிடையாது என்று தோன்ற, எரிச்சலை மறைத்துக் கொண்டு, “உட்காருங்க மிஸ்டர். ரகுரவி”என்றான் காந்தக் குரலில்.
“தேங்க் யூ சார் ”என்றவனாய், இருக்கையில் அமர்ந்தான் ரகு.
சிறிது நேரம் ரகுவின் கண்களையே அவனையறியாமல் வெறித்துப் பார்த்தவன் “சொல்லுங்க ரகு.. என்ன விஷயம்?”என்று குரலை சாந்தமாக்க முயன்று, தோற்றவனாய் கூறினான். ரகு அதற்கும் பதிலாய், புன்னகையையே தந்தான்.
பிறகு, தொண்டையை செருகிக் கொண்டு, “சார்.. இது என்னோட ஃபைல் என்ட் சார்டிபிகேட்ஸ் ”என்ற வண்ணம், ஃபைலை, ஸ்ரீயிற்கு நீட்டினான் ரகு.
இதை எதற்கு தற்பொழுது தன்னிடம் நீட்டுகிறான். இதே வேறு யாருமாய் இருந்தால், அவனை “அப்பாய்ன்ட்மன்ட் ”வாங்காமல் சந்தித்திருக்கவே முடியாது. இன்னொரு நாள் பார்த்துக் கொள்ளலாம் என்று திருப்பி அனுப்பியிருப்பான்.
தன்னவளுக்கு தெரிந்தவன் என்ற ஒரே ஒரு காரணத்திற்காகத் தான், ரகுவை அமர வைத்து பேசிக் கொண்டிருக்கிறான். ரகு என்னடாவென்றால், தான் வந்த காரணத்தையே கூறாமல், ஃபைலை நீட்டுகிறான்.
சரியான “மரியாதை தெரியாத முட்டாள் ”என்று எண்ணியபடி, எதுவும் பேசாது, ஃபைலை வாங்கிப் பார்த்தான் அவன் .
ரகுவின் தகைமைகளைக் கண்டு உள்ளுக்குள் வியந்து தான் போனான் அவன் .
இந்த லோ கிளாஸ் பையனிடம் இப்படியொரு தகைமையா? இவனுக்கிருக்கும் தகைமைக்கு, யு. எஸ், யு. கே என்று செல்ல வேண்டியவன், ஏன் தன் முன் நின்று கொண்டிருக்கிறான்? என்று பலவித கேள்விகள் கண்முன் நிழலாட, எதற்கு இந்த தேவையில்லாத வேலை? ரகு வேலை தேடி வந்திருக்கிறான் மேலும் என்றெண்ணியவனாய், “மிஸ்டர் . ரகு.. நீங்க என் கம்பனியில என்ன வேலை எதிர்பார்க்குறீங்க?”என்று ரகுவின் கண்களை பார்த்துக் கேட்டான்.
“ஹோ… நோ சார்.. நான் வேல தேடி வரல? “என்று ரகு பதற்றத்துடன், கூற, அவனோ , புருவங்களை நெறித்தபடி அவனைப் பார்த்து, “அப்புறம் என்னை தேடி வர வேண்டிய அவசியம் என்ன? ?”எனக் கேட்டான்.
ரகுவோ கதை சொல்ல ஆயத்தமானவன் போல, இருக்கையிலிருந்த படி முன்னே சாய்ந்து, முன்னே இருந்த மேசை மீது, தன் கைகளை முழங்கை வரை வைத்தான்.
ரகு, முன்னே சாய்ந்து முழங்கையை மேசையில் பதித்தது பிடிக்காவிடினும் அதை வெளியே காட்டிக் கொள்ளாமல், ரகுவைக் கவனியாது மேசை மீதிருந்த “பேப்பர் வெய்ட்டினை”எடுத்து உருட்டத் தொடங்கினான் மற்றவன்.
“சார்… நா ஒரு சோஸியல் நெட்வர்க் ஆப் ஒண்ணு..கண்டு பிடிச்சிருக்கேன் சார்…”என்று அவன் கூற, ரகு கூறியதை கேட்டு ஆச்சார்யமடைந்தவனாய், “பேப்பர் வெய்ட்டினை”உருட்டுவதை நிறுத்தினான் அவன்.
என்ன இவன் ஒரு “அப்ளிக்கேஷன்”ஒன்றை உருவாக்கியிருக்கிறானாமா? பொய் சொல்கிறானோ? என்று எண்ணியவன், ரகுவையே மௌனமாய் பார்க்கத் தொடங்கினான். ரகுவோ, எதிரே இருப்பவனின் மனப் போராட்டங்களை கவனியாமல், தொடர்ந்து சொன்னான்.
“பட் எஃப். பி, வாட்ஸ்ஆப் ட்விட்டர் ல இல்லாத ஸ்பெஷல் இதுல இருக்கு சார்.. எஃப். பில ஃபேக் ஐடி.. உருவாக்க முடியும்… வாட்ஸ்ஆப்ல போஸ்ட்ஸ் போட முடியாது… பட் என்னோட இந்த அப்ளிக்கேஷன் ல…பொய் பித்தலாட்டம் பண்ண முடியாது….வீடியோ கால் பண்ண முடியும்..”என்று தொடங்கியவன், எதையெதையோ கூறிக் கொண்டே சென்றான். அவனோ, ரகுவின் பேச்சினை கேட்டு மலைத்து நின்றான்.
இதுவரை தன்னுடைய கண்டுபிடிப்பை பற்றி கூறியவன், தற்பொழுது தான், தான் ஸ்ரீயினை தேடி வந்ததற்கான காரணம் கூறவாரம்பித்தான்.
“சார்… என்னன்னா… நான் அத உங்க கம்பனி மூலமா… அறிமுகம் பண்ணலாம்னு இருக்கேன்.. அதுவும் டேட்டா ப்ளேன்ஸ்ஸோட … அப்படி பண்ணோம்னா… இது மக்கள் மத்தியில் நல்லா ரீச் ஆகும் சார்..”என்று தன் முழுத் திட்டத்தையும் விவரிக்க, ஸ்ரீ என்ன பேசுவது என்று தெரியாமல் நின்றான். எதற்கும் நிதானமாக யோசித்து பதில் சொல்ல வேண்டும் என்று மனதினுள் எண்ணினாள்.
“நான் இதப் பத்தி கொஞ்சம் கன்ஸிடர் பண்ணனும்… ரகுரவி நீங்க ஒண்ணு பண்ணுங்க.. .. நாளைக்கு ஈவ்னிங் ஒரு ஃபைவ்க்கு ஆபிஸ் வர முடியுமா?”என்று ஸ்ரீ கேட்க, அவனும், “யெஸ்.. ஷூவர் சார் ”என்றான் பல்லைக் காட்டி இளித்த வண்ணம்.
அவன் சிரிப்பது காணப் பிடிக்காமல், வெடுக்கென எழுந்தவன், கோட்டை சரி செய்த வண்ணம், கோட் பட்டனை போட்ட வண்ணம் நிமிர்ந்து அவனைப் பார்த்தான்.
ஸ்ரீ எழுந்ததும், ரகுவும் மரியாதை நிமித்தமாக எழுந்தான். “அப்படியே…. வரும் போது உங்க திட்டங்களை எல்லாம்…ப்ரசன்டேஷன் மோட்ல கொண்டு வாங்க”என்று கூறிய வண்ணமே எழுந்து வெளியேற முற்பட, ரகுவும், ஸ்ரீயின் பின்னாலேயே வந்து அவன் வெளியேறுவதற்கு வசதியாக கதவைத் திறந்து விட்டான்.
ரகு தன் பணியாள் போல கதவைத் திறந்து விட்டது மனதினுள் இதம் பரப்ப, “தேங்க்ஸ் ”என்ற வண்ணம், வெளியேறினான் ஸ்ரீ.
அவன் தன்னைப் பற்றி கேவலமாக எண்ணுவது தெரியாமல், கதவை திறந்து விட்டான் ரகு.
அன்றிரவு ஸ்ரீ தன் மொட்டை மாடியில், சாய்நாற்காலியில் அமர்ந்திருந்தான். முன்னே டீபோய், அதன் மேலே அவனது மடிகணினியும், அதன் பக்கத்தில் அவனது கைப்பேசியும் இருந்தன.
வீட்டில், மொட்டை மாடியில், இரவில், வானில் உலா வந்து கொண்டிருந்த நிலாவை இரசித்துக் கொண்டே அவள் நினைவில் இலயித்திருந்தான். அவளுடனான வாழ்கை, அவனும், அவளுமான வாழ்க்கையை மட்டுமே எண்ணிக் கொண்டிருந்தான்.
கூடவே, ரகுவின் நினைவும் வர, அவன் முகம் இறுகலாயிற்று. ரகுவின் ப்ராஜெக்ட், ரொம்ப நல்ல ப்ராஜெக்ட் தான். முடித்தால் நல்ல இலாபம் தரும் ப்ராஜெக்ட்.
இருப்பினும் அவன் மனம் ஏதோ முரண்டு பிடித்தது. அவன் ஆழ்மனம் தீவிரமாக யோசிக்கத் தொடங்கியது. அவன் மனம் ஏனோ ரகுவை வளர்ந்த வர்த்தகப் பிரமுகனாய் கற்பனை செய்ய மறுத்தது.
அவன் இறுதியில் ஓர் ஸ்தீரமான முடிவிற்கு வந்தான். ரகுவுடன் அந்த ப்ராஜெக்ட்டில் ஈடுபட அவன் மனம் இறுதி வரை ஒப்பவில்லை.
முதலிலேயே வேண்டாம் என்று மறுத்தால், ரகு வேறு கம்பெனியை நாடி செல்லக் கூடும். இல்லை அவ்வாறு செய்ய விடக் கூடாது.
தன்னவளை மனதினுள் நினைத்துக் கொண்டிருக்கும் இதயத்தை குத்திக் கிழிக்க வேண்டும் போல் தோன்றிற்று ஸ்ரீயிற்கு. தான் அவனுடன் இந்த ப்ராஜெக்ட்டை மேற்கொண்டால், அவன் நிச்சயம் முன்னுக்கு வருவான் என்பது ஸ்ரீயிற்கு தெரியும். பிறகு ரகு ரவி, அவளை திருமணம் செய்து கொண்டு, ஸெட்டிலாகி விடுவான்.
அதற்கு இந்த ஸ்ரீ விட்டு விடுவானா என்ன? அவள் தனக்கு மட்டும் தான். அவள் கண்ணில் ஒரு சொட்டு நீர் வரவிடாமல் பார்த்துக் கொள்ளும் பொறுப்பு அவனுடையது.
இடையில் ரகு வந்தால் அவளை விட்டுக் கொடுக்க அவன் முட்டாளா? இருக்கும் ஒரே வழி நம்ப வைத்து கழுத்தறுப்பது. ரவியிடம் இருக்கும் அந்த “அப்ளிக்கேஷன்”இன் உரிமையை அவனுக்கே தெரியாமல் எடுத்து தன் பெயரில் மாற்றிக் கொள்ள வேண்டும். இறுதியில் அவனது அப்ளிக்கேஷனையே பெயர் மாற்றம் செய்து, மக்கள் மத்தியில் அறிமுகப் படுத்த வேண்டும்.
ரவியிடம் உன் ப்ராஜெக்ட் தோல்வி என்று கூறி, நம்ப வைத்து, இந்த விடயம் எதுவும் தெரியாதவாறு காருண்யாவை திருமணம் செய்து கொண்டு யு. கே யில் ஸெட்டிலாகி விட வேண்டும் என்று அன்றிரவு ஸ்தீரமாக யோசித்தான் அவன்.
அத்தியாயம் – 12
“ஹலோ காருண்யா… நான் ஸ்ரீகாந்த் ரவிச்சந்திரன் பேசுறேன்”என்று மறுமுனையில் அவன் காந்தக் குரல் கேட்க, தன் மனம் சில்லிடுவதை உணர்ந்தாள் அவள் .
ஒரு கணம் அவளுக்கு பேச்சே வரவில்லை. மீண்டும் அவன் குரல், “காருண்யா லைன்ல இருக்கியா?” கேட்கத் தான் அவளுக்கு சுயநினைவே வந்தது.
“சொல்லுங்க… ஸ்ரீ.. ஸ்ரீ காந்த்”என்றாள் அவள் தட்டுத் தடுமாறிய குரலில்.
அவளுடைய டப்பிங் வேலை முடிந்ததும், அவனுடனான தொடர்பு நின்று போய் விட்டது என்று எண்ணியிருந்தவளுக்கு, எதிர்பாராத விதமாக அவன் அழைப்பெடுத்ததனால் ஏற்பட்ட ஆனந்த அதிர்ச்சியினால் அவளுக்கு பேச்சு வரக் கூட மறுத்தது.
ஒரு கணம் அவன் குரலை கேட்டதும் ஒட்டு மொத்த செல்லும் உயிர்ப்படங்கித்தான் நின்றது.
அவன், அவள் குரல் திக்கிய விதத்தைக் கேட்டு தனக்குத் தானே சிரித்துக் கொண்டான். “நீ இன்னிக்கு ஈவ்னிங் ஃப்ரீயா?”என்று ஒரு கேள்வியை கேட்க, அவளும், “ஆமா ஸ்ரீ…ஏன் கேட்குறீங்க?”என்று கேட்டாள்.
அவளது ஸ்ரீ என்ற அழைப்பில் கரைந்துருகியவன், குரலில் இளக்கத்தை வெளிக்காட்டாது “அப்போ இன்னைக்கு ஈவ்னிங் வீட்டுக்கு வர முடியுமா? ஒரு சின்ன பார்ட்டி… உனக்காக”என்று அவளை விருந்துக்கு வருமாறு அழைத்தான் ஸ்ரீ.
ஸ்ரீயின் அழைப்பு, அவளை மிரளச் செய்தது. கைகள் நடுங்குவதை தவிர்க்க, பக்கத்திலிருந்த புத்தகத்தை எடுத்து அணைத்துக் கொண்டாள் அவள் .
அவள் மனம் போலாமா? வேண்டாமா என்று மனப்போராட்டம் நடத்திக் கொண்டிருந்தது. மறுமுனையில் இருந்து பதிலே வராது போகவும், இழுத்துப் பிடித்தப் பொறுமையுடன் “என்ன சொல்ற காருண்யா? வர்றியா?”என்று அவன் கறார்க் குரலில் கேட்க, அவளுக்கு என்ன பேசுவது என்றே தெரியவில்லை.
என்ன இவன் வருகிறாயா என சிறிதே அடாவடித்தனமாய் கேட்கிறான். ஒருவேளை வரமாட்டேன் என்று சொன்னால் , வீட்டுக்கே வந்து தூக்கிச் சொல்வானோ என்று எண்ணிக் கொண்டாள் அவள் .
அவனுக்கே அவன் கறாராக பேசியது போல தோன்ற இம்முறை கொஞ்சம் குரலில் இளக்கத்தைக் கூட்டி , “ப்ளீஸ் நித்தி…. எனக்காக வர முடியுமா?”என அவன் கேட்க, அவள் அதிர்ச்சியில் உறைந்து போய் நின்றாள். அவன் குரல். அதன் மென்மை, அதன் இளகல் எல்லாம் ஏதோவொன்று உணர்த்தின அவளுக்கு.
அதிர்ச்சியில் பேயறைந்தது போல நின்றவளுக்கு ஒரு சில கணங்கள் பேச நாவே எழவில்லை. பிறகு தன்னைத் தானே சமாளித்துக் கொண்டு பேசவாரம்பித்தாள்.
அவள் வாய், “எ… என்…. என்ன….. சொன்னீங்க?”என்று தட்டுத் தடுமாறி, திக்கித் திணறி கேட்டது.
அவள் அப்படி கேட்டதின் அர்த்தம் புரியாதவனாய் அவனும், வாய் விட்டு, அதே மென்மையுடன் “ப்ளீஸ் “நித்தி… எனக்காக”வர முடியுமா? “என்று, “நித்தி…. எனக்காக”என்பதில் அவன் அழுத்தம் கொடுத்து கூற, மறுமுனையில் அமைதியே நிலவியது.
இன்று தன்னவளுக்கு என்னவாயிற்று. ஓர் விடயத்தைக் கூறி, பதில் வர பத்துத் திங்கள் காத்திருக்க வேண்டும் போல இருக்கிறதே?? இவளை மணந்து தான் என்ன பாடு படப்போகிறேனோ என உதட்டில் ஓர் மென்னகையுடனேயே அவன் காத்திருந்தான்.
அவன் காத்திருப்பு காற்றில் கரைந்து , மறுமுனையில் பதில் வராது போகவே, அவளைத்து விட்டாளோ என்று எண்ணியபடி அவன் பேசவாரம்பித்தான்.
“ஹலோ ஹலோ… காருண்யா…. ஆர் யு தேர்? ”என்று மறுபடியும், அவன், அவளை அழைக்கத் தான், அவளிடமிருந்து குரல் கேட்டது.
“கண்டிப்பா வரேன்….”என்றவள், அவன் மறுபதில் பேச முன்னரே வைத்திருந்தாள். அவள் நினைப்பெல்லாம் அந்த செல்லில் தொடர்பு கொண்ட மர்ம ஆசாமியிலேயே நிலைத்திருந்தது.
அந்தக்குரல், அந்த மென்மையான ஆண் குரல் ஸ்ரீ தற்போது பேசியதை வைத்துப் பார்க்கும் போது, ஏன் ஸ்ரீ யாக இருக்கக் கூடாது என்று தோன்றிற்று.
அப்படியது ஸ்ரீ யாகவே இருந்தாலும் “ஆப்பிள் ப்ராஜெக்ட்… நூறு முத்தம்… ஔட்டிங்”. அது வந்து ஹரீஷ் க்கு சொன்னது, அவனுக்கு எப்படி தெரியும் ? ஒருவேளை அன்று பூங்காவில் வைத்து ஹரீஷ் கூறியிருப்பானா? இல்லை… அவன் கூறவே இல்லை.. பிறகெப்படி..??
அட… அன்று வந்த “ராங் நம்பர்”!!! அந்த ராங் நம்பர் வந்த நேரம் தான், தான் ஹரீஷ்க்கு “ஆப்பிள் ப்ராஜெக்ட், நூறு முத்தம், ஔட்டிங்”என்று எல்லாம் கூறியது நினைவு வந்தது அவளுக்கு.
அப்படியானால் அன்று அழைப்பெடுத்தது இவனா?? ஊர்ஜிதம் செய்து கொள்ள, தமக்கையை நாடி ஓடினாள் தங்கை.
தமக்கையோ மொட்டை மாடியில், கொடியில் துணிகளை காயப் போட்டுக் கொண்டிருந்தாள். மொட்டை மாடி படிகளில், அவசர அவசரமாக ஓடி வந்து கொண்டே அவள், “அக்கா!!”என்று குரல் எழுப்ப, அவள் அக்காவும் “என்னடி… என்னாச்சுனு… இப்படி ஓடி வர?”என்று கேட்க, அவளுக்கு பேச முடியாமல் மூச்சு வாங்கியது.
ஆனால் அவளுக்கு மூச்சிறைத்து முடியும் வரை பொறுமையிருக்கவில்லை. இடையிடையே மூச்சிறைத்துக் கொண்டே அவள், “அ.. அன்… னைக்கு… அன்னைக்கு… ந.. நம்ம வீட்டுக்கு ஒரு ராங் கால்வந்ததுல..”என்று கேட்க, ராதாவோ விழித்தாள்.
“எப்போ சொல்ற?”என்று தமக்கை, தன் கையிலிருந்த சட்டையைப் பிழிந்து, உதறி காய போட்ட படி கேட்க, அவளுக்கு, அதை அறியும் வரை பொறுமையே இல்லை. அவசர அவசரமாக, “அது தான்கா… யாரோ தினேஷ் வீடானு கேட்டு கால் பண்ணாங்களே?”என்று கேட்க, ராதா சற்று சிந்திக்க தொடங்கினாள்.
“ஸ்ரீ… ஸ்ரீ”என்று தமக்கை பெயரை ஞாபகப்படுத்திக் கூற பார்க்க, இடையில் அவளும் பாய, தமக்கையும் இணைய, இருவரும் ஒரே நேரத்தில், “ ஸ்ரீகாந்த் ரவிச்சந்திரன்”என்று கூறினர்.
ராதாவும், அதே பெயரை கூறக் கேட்டதும், அவளின் நெஞ்சில் மின்சாரம் பாய்ந்தது போல ஒரு உணர்வு தொற்றிக் கொண்டது.
அப்படியானால் அவனா இவன்? ஊருக்கும், உலகுக்கும் சாமியார் போல காட்டிக் கொள்பவன், எதற்கு உள்ளுக்குள் கீழ்த் தரமாக நடந்து கொள்கிறான்? அதில் வேறு அவன் தான் என்று தெரியாமல் அவனை அவனையே திட்டச் சொன்னதும், மறுமுனையில் இருந்தவன் வைத்து விட்டான் என்று கூறியதும் ஒவ்வொன்றாய் நினைவு வர, அவளுக்கு ஒரு வித கோபம் வந்தது.
அடுத்த முறை எடுத்ததும் வெட்கங்கெட்டு அவன் முத்தமழை பொழிந்ததும் நினைவு வர அவள் மயிர் கூச்செறிந்தது.
அங்கே ரகுரவி, சொன்ன நேரத்தில், அவன் கூறியது போலவே “ ப்ரஸன்டேஷன்”வடிவில் எல்லாம் தயாராக்கி வந்திருந்தான். அன்று டையில்லாமல் வந்திருந்தவன், இன்று முழு நீளக்கை சட்டைக்கு தோதாக டையில் வந்திருந்தான். அவனுக்கு, தன் படைப்பு பெரிய வெற்றியைத் தரும் என்பதில் முதன் முதலாக நம்பிக்கை வந்தது.
ஆனால் ஸ்ரீயோ இவனை வரச் சொன்ன நினைவேயற்றவன் போல, ரகு வந்திருந்த அதே நேரத்தில், அவன் அவளுடன் தன் வீட்டில் இருந்தான். ரகுவை ஏமாற்றுவது தானே அவனது திட்டமே. வேண்டுமென்றே அவனை வரச் சொல்லி விட்டு, அவன், ரகுவின் முறைப் பெண்ணுடன் இருந்தான்.
அவனது மேனேஜரிடம் தற்பொழுது வந்துவிடுவதாக அடிக்கடி அவனுடன் கூறுமாறும் கூறியிருந்தான்.
இன்னொரு புறத்தில் அவன் வீடு அலங்கரிக்கப்பட்டுக் கொண்டிருந்தது. அவன் வீட்டு வேலையாட்கள் அங்குமிங்கும் பம்பரமாய் சுழன்று சுழன்று வேலை செய்து கொண்டிருந்தார்கள். ஐந்தாறு பேர் அவன் வீட்டு சுவர்களை, சிவப்பு மற்றும் வெள்ளை ரோஜாப் பூக்களைக் கொண்டு அலங்கரித்துக் கொண்டிருக்க, இன்னும் சிலர், அவனது சாப்பாட்டறையை அலங்கரித்தனர்.
அவனோ கோட்டும், சூட்டும் அணிந்து தயாராகிக் கொண்டிருந்தான்.
ஆனால் அவளோ பரபரப்பின்றி, சாதாரண சுடியிலேயே தயாராகினாள். இன்று அவனை கையும் களவுமாக பிடிக்க வேண்டும் என்று நினைத்தபடியே அவனில்லம் வந்தவளுக்கு, வீட்டின் முகப்புத் தோற்றமே பிரம்மிக்க வைத்தது.
அவள் வந்ததும் வாசல் வரை வந்து வரவேற்றவன், அவளைக் கண்டதும், அப்படியே நின்று விட்டான். அவளது சாதாரண சுடியே அவளை அவன் கண்களுக்கு அழகியாக காட்டியது.
அவளிடம் இருந்து கண்ணை எடுக்க முடியாமல் தவிக்க, அவள் சங்கடத்தில் நெளிந்தாள். அவள் சங்கடப்படுவதை உணர்ந்து தன்னை சுதாரித்துக் கொண்டவன், “வெல்கம் காருண்யா”என்றான் மலர்ந்த முகத்துடன். அவளும் சிறுமுறுவலை வெளிப்படுத்தியபடி உள் நுழைய, அவனோ தன் கை நீட்டி அவள் கை பற்றிக் கொண்டான்.
அவள் மனம் ஏனோ, அவன் தன் அனுமதியில்லாமல் கைப்பற்றியதை எண்ணி முரண்பட்டாலும், அவள் உடல் எந்த வித எதிர்ப்பையும் காட்டாமல் இருந்ததை நினைத்து அவள் முகம் இறுகியது.
அவன் வீட்டின் பிரம்மாண்டம் அவளை மலைக்க செய்தது. அவனுடைய வீட்டு ஹாலே வித்தியாசமாய் இருந்தது. அலங்காரம் கண்ணை கட்ட சொக்கி நின்றவள், இரசனையுடனேயே, “ரொம்ப அழகா இருக்கு”என்றாள்.
அவனோ அவள் காதோரம் கிசுகிசுத்த குரலில், “தேங்ஸ்”என்று கூற, அவள் சற்றே பதறி இரண்டெட்டு பின்னடைய, அவன் கண்கள், அவளது அசட்டுத் தனமான அச்சத்தை எண்ணி விரிந்தன.
“ஆமா.. வீட்ல யாரும் பெரியவங்க இல்லை யா?”என்று அவள் கேட்டாள். வந்ததிலிருந்து பார்க்கிறாள், அவனது தாய், தந்தை என யாரையுமே காணவில்லை. ஒருவேளை யாருமில்லாத நேரம் அழைத்திருப்பானோ? என்று எண்ணிய வேளை, அவளுக்கு அவனளித்த பதில் வித்தியாசமாய் இருந்தது.
“ஏன் என்ன பார்த்தா பெரியவன் மாதிரி இல்லையா?”என்று அவன் புருவமுயர்த்தி கேட்டது இரசிக்கத்தக்கதாய் தான் இருந்தது. இருப்பினும் அவள் அதை வெளிக்காட்டாது, புரியாதவளாய் விழித்தாள். அவளது கோணத்தை விழிகளாலேயே படமெடுத்தவன், அவளுக்கு விளக்கம் சொல்லும் முகமாய், “எனக்கு அம்மா, அப்பா இல்லை நித்தி… நானும், என் சிஸ்டரும் மட்டுந்தான்.. அவள் கனடால இருக்கா?”என்று கூற, அவளுள் யோசனை ஓடியது.
அவனைப் பற்றி கூகுள் செய்த நேரம், அவன் தாய், தந்தையரின் பெயர் இருந்ததே ஒழிய, இந்த விடயம் இருக்கவில்லை.
அவர்கள் எப்பொழுது இறந்தனர் என்று கேட்பது அநாகரிகம் என்றெண்ணியவளுக்கு, அவர்களின் கவனிப்பு இல்லாததால் தான் இப்படி தரங்கெட்டுப் போனானோ என்றும் தோன்றலாயிற்று.
எண்ணியவற்றை மறைத்து, “ஓ.. என்னை மன்னிச்சுக்குங்க ”என்று அவள் உண்மையாகவே வருத்தப்பட, அவன் முகம் மலர்ந்தது. தனக்காக அவள் முதன் முறையாக வருத்தப் படுவதை எண்ணி. “விடு காருண்யா ஆமா டப்பிங் வர்க் எல்லாம் எப்படி போய்ட்டு இருக்கு?”என்று அவன் கதையை மாற்றினான்.
“ம்.. பரவாயில்லை.. இட்ஸ் குட்” கூற, அவன் அவளை சாப்பாட்டறைக்கு வழி நடாத்தி சென்றான்.
சாப்பாட்டு மேசையில் இருந்த உணவுப் பொருட்களைக் கண்டதும் அவள் மயங்கி விழாத குறை தான். சைவம், அசைவம் எல்லாம் இருக்க, அவள் அவனை நோக்கி, “நம்ம ரெண்டு பேருக்கு மட்டும் எதுக்கு இவ்ளோ சாப்பாடு? வீணா அனாவசிய செலவு ஸ்ரீ”என்று கூற அவன் எதுவும் கூறவில்லை.
அவள் சந்தோஷப்படுவாள் என்று நினைத்தவனுக்கு, அவள் வீண் செலவு என்று கூறியது உறுத்த, “இந்த தடவ மட்டும் அட்ஜஸ்ட் பண்ணிக்குங்க மேம் “என்று கூற, அவனது “மேம்”என்ற அழைப்பில், பொற்காசுகளை தரையில் சிதற விட்டது போல நகைத்தாள் அவள்.
அந்த சிரிப்பு மாறுவதற்கு முன், துரித கதியில் செயற்பட்டு, அவள் அமர, கதிரையை இழுத்துப் போட்டு, அவளை அமர்த்தியவன், அவளுக்கு எதிரே சென்று அமர்ந்து, அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்.
அவள் விளங்கியும், விளங்காதவள் போல சாப்பிட்டுக் கொண்டே, “ஆமா நீங்க தண்ணியடிப்பீங்களா ஸ்ரீ?”என்று கேட்டாள்.
அவனோ “ச்சேச்சே.. ஐ ஏம் அ டீடோட்லர்”என்று கூற, அவள் முகம் சற்றே மலர்ந்ததை எண்ணி, தானும் மலர்ந்தான்.
சாப்பிட்டுக் கொண்டே இடையில், “உங்க ஆப்பிள் ப்ராஜெக்ட் முடிஞ்சிதா ஸ்ரீ?”என்று எதேர்ச்சையாக கேட்க, அவளிடம் அது பற்றி கூறாத நினைவே இன்றி, கரண்டியால் சாப்பிட்டுக் கொண்டே உணவிலே தீவிரம் காட்டியவனாய், “ஆமா காருண்யா.. சக்ஸஸ் தான்.. இதுல நல்ல லாபம் கிடைக்கலாம்”என்று கூற, அவள் எதுவும் சொல்லாமல், சாப்பிட்டு முடித்தாள்.
அவனோ, அவளை வீட்டை சுற்றிக் காட்ட வேண்டும் என்ற அவாவில், அவள் அனுமதியின்றியே, அவள் கரத்தை மீண்டும் பற்றி அழைத்து செல்ல முற்பட்ட போது, தன் கைகளை சிறு பிள்ளை போல பின்புறம் ஒழித்தாள் அவள் . அவன் முகம் சட்டென நிமிடத்தில் இறுகி வாட, “ஸாரி ”என்று மன்னிப்பு கேட்க, அவள் எதுவும் பேசாது அவனுடன் இணைந்து நடந்தாள்.
சிறிது தூரம் நடந்து, அவனறையை அடையும் நேரம் அவள் நின்றாள். காரணம் புரியாமல் அவனும் நின்றான். அவளோ தன்னுடைய செல்லை எடுத்து, “கொஞ்சம் இருங்க ஸ்ரீ… ரொம்ப முக்கியமான பர்சன்க்கு ஒரு கால் எடுக்கணும்.. மறந்துட்டேன்”என்று கூறிய படியே அவள் அழைத்தது, அந்த மர்ம ஆசாமிக்குத் தான்.
அவன் செல் அலற, வேறு யாரோ என்று எடுக்க, திரையில் அவள் இலக்கம் பார்த்ததும் தவித்து நின்றான் அவன் .
அதற்குள் அவள் அவன் கையில் இருந்த பேசியை, சட்டென பறித்துப் பார்க்க, அவன் திகைப்பான் என எதிர் பார்த்தவளுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.
அவன் முகம் திகைக்கவில்லை. வாடவில்லை. இறுக வில்லை. மலர்ந்தே தான் இருந்தது.
“என்ன இதெல்லாம் ஸ்ரீ காந்த்?”என்று அவள் கோபத்தில் கத்த, அவன் புன்னகையுடன் நின்ற விதம், அவளுக்கு எரிச்சலூட்டியது.
அவனுக்கோ தன்னவள் புத்திசாலி, வெகுசீக்கிரத்தில் கண்டு பிடித்து விட்டாளே? கொஞ்ச நாள் கழித்து சொல்லலாம் என்று பார்த்தால் இன்றே சொல்லலாம் என்று எண்ணியபடி அவள் முகம் பார்த்தான்.
“நீங்க தானா அது? ஊர், உலகத்துக்கு நல்லவன் மாதிரி இருந்துட்டு, ஏன் இந்த அயோக்கியத்தனம் ஸ்ரீ காந்த்?”என்று அவள் கேட்க, அவன் கண்கள் திடீரென சினத்தில் சிவந்தன. அவன் காதல் அயோக்கியத்தனமாய் விளங்குகிறதாமா அவளுக்கு.
“உங்களை ஒரு நல்ல ஃபரண்டா தானே நினைச்சேன்… பட் நீங்க இப்படி கீழ்த்தரமான வேலையெல்லாம் செய்வீங்கனு நா கனவுலயும் நினைக்கவேயில்ல.. உங்களால எப்படி நூறு முத்தம், அது இதுன்னு பேச முடிது? படிச்சவர் தானே நீங்க? ஒரு பொண்ணுகிட்ட எப்படி பேசனும்னே தெரியாதா?”என்று அவள் கோபத்தில் கத்திக் கொண்டே சென்றாள்.
நடப்பில் ஸ்ரீயீனை பார்த்து ஒரு நல்ல மனிதனாய் எண்ணியவள், அனைத்தும் தெரிய வந்ததும், கோபம் தாளாமல் கத்த, ஸ்ரீயோ கழுத்து நரம்பு புடைக்க, கை முஷ்டி இறுக, பற்களை நறு நறுவென கடித்தபடியிருந்தான்.
“நீங்க நினைக்கிற மாதிரி பொண்ணு நா இல்லை .. நா இங்க வந்தது.. நல்லவரான ஸ்ரீ காந்துக்காகத் தான்.. இனி மேலாவது தப்பான எண்ணத்த மறந்துடுங்க… அதுக்கு வேறாள பாருங்க.. குட் பாய்”என்று கத்திவிட்டு செல்ல அவள் முற்பட, ஸ்ரீ காந்தின் கோபம் உச்சத்தை ‘ஆட்’டியிருந்தது.
அவளிடத்தில் வேறு யாருமாய் இருந்திருந்தால், பளார் பளார் என்று இரு அறை விழுந்திருக்கும். அவனது உண்மை நேசத்தை எப்படியெல்லாம் கூறி விட்டாள். அவளிடம் தப்பான எண்ணமா? வேறாளை பார்க்க வேண்டுமா? அந்த வார்த்தையில் அவனிதயம் வலிக்க, அவளை செல்ல விடாமல் கைப்பற்றி தடுத்தான் அவன் .
அவள் மேனி அச்சத்தில் திடுக்கிட்டு நடுங்கியது. தைரியத்தை வரவழைத்துக் கொண்டு அவனை முறைத்து, திட்டிவிட எண்ணி திரும்பியவள், அவன் கண்கள், அவளதை ஆழ நோக்க, அவள் தைரியம் எல்லாம் எங்கோ காணாமல் போய்விட்டிருந்தன.
“என்ன விடுங்க ஸ்ரீ காந்த்!!”என்று ஈனஸ்ரத்தில் தான் அவளால் கூற முடிந்தது. அவனோ, அவள் கைகளை விடாமல், தரதரவென இழுத்த வண்ணம், அவனறைக்கு அழைத்துச் சென்றான். அறை வாசலில் விட்டவன், அவனும் உள்ளே நுழைந்து, கதவைத் தன் கால்களாலேயே சாத்தி, திரும்பமாலேயே தாழ்ப்பாள் போட, நித்தியின் கண்கள் கலங்கவாரம்பித்தன.
இன்றுடன் தன் வாழ்வு அஸ்த்தமனமாகப் போவதாகத் தோன்ற, அவள் கண்கள் கலங்கவாரம்பித்தன. இவ்வளவு நேரம் கடுப்பில் இருந்தவன், அவளது கண்ணீரை காணவும் சட்டென உள்ளம் இரங்கினான்.
விட்டால் அவளை படுக்கையில் தள்ளி என்னென்னமோ செய்ய நாடியிருப்பான். அவளது முகத்தில் ஒரு சொட்டு கண்ணீரைக் காணவும், அவனுக்கு உலகமே தலை கீழாகப் புரண்டது. ஒரு ஆண்மகனாய் முதன் முதலாக மனம் நாணினான்.
“ஸாரி நித்தி.. நான் வேணும்னே இதெல்லாம் பண்ணல.. நீ என் காதலை… கொச்சைப்படுத்தி பேசினதும் என்னால தாங்க முடியல.. அது தான்..”என்று அவன், முதன் முறையாக ஒரு பெண்ணிடம் தான் தான் செய்த தவறுக்காக மன்னிப்புக் கேட்டான். “காதல்”என்ற சொல்லை கேட்டதும், திடுக்கிட்டு தலை நிமிர்த்தி பார்த்தாள் நித்தி.
கண்கள் இலேசாக கலங்க, “ஆமா நித்தி.. நா உன்னை காதலிக்கிறேன்.. இங்க இருந்து காதலிக்கிறேன்”என்ற வண்ணம் இதயத்தை தொட்டுக் காட்டினான். அவளின் கண்கள் கண்ணீர் சிந்துவதை நிறுத்தின.
“உன் அழகப் பார்த்தோ, வேற எதை பார்த்தோ நா உன்னை காதலிக்கல.. உன் குரல் கேட்டுத் தான் நா உன்னை காதலிச்சேன் நித்தி.. அப்போ தான் நா உங்க வீட்டுக்கு கால்பண்ணேன்.. உன் குரல கேட்டேன்.. எனக்கு பிடிச்சிருந்தது.. உன் குரலில்ல.. அதுல இருந்த ஏதோ ஒண்ணு.. அந்த நேரம் ஆப்பிள் கம்பனி நம்ம கம்பெனியோட டை அப் பண்ண ஒரு ப்ராஜெக்ட் வந்தது. செய்யலாமா? வேணாமானு ஆஸிலேஷன்ல இருந்தப்போ தான் போன்ல உன் குரலை கேட்டேன்.. ஒத்துகிட்டேன்.. பட் அந்த நிமிஷத்துல இருந்து உன்னை காதலிக்கவாரம்பிச்சுட்டேன் நித்திமா”என்று கண்களில் காதலுடன் விளக்க, அவள் உணர்ச்சி துடைத்த முகத்துடன் பார்த்தாள்.
“உன்னை பத்தி அடுத்த விநாடியே தேடவாரம்பிச்சேன்.. நீ கறுப்பா? சிவப்பா? கட்டையா? நெட்டையா? எந்த ஜாதி? ஊனமானவளானு எதையுமே பார்க்கல? நான் பார்த்து எல்லாமே நீ மிஸ்ஸா? மிஸஸ்ஸான்னு தான்.. நான் எதிர் பார்த்த மாதிரி மிஸ்ஸாகவே கிடைச்ச… அப்போ இருந்தே உன்னை மிஸஸ்.ஸ்ரீகாந்த் ரவிச்சந்திரனா நினைக்க ஆரம்பிச்சிட்டேன்.. அப்போ தான் நீ ஒரு டப்பிங் ஆர்டிஸ்னு தெரிய வந்தது.. ஏற்கனவே டப்பிங் பண்ண அட்வர்டைஸ்மென்ட்ட நீ என்ன பார்க்கணும், மீட் பண்ணனும்றதுக்காக.. உன்னை வச்சி.. திரும்ப டப் பண்ணேன்”என்று முழு விபரங்களை அடுக்கடுக்காக கூறியவன், மறந்தும் ரகுரவி உன் முறை மாப்பிள்ளை என்பதை அறிந்து பட்ட வேதனையை கூற விருப்பப் படவில்லை.
“மறுநாள் உன்னை பார்க்கணும்னு விக்டோரியா பார்க் வந்தேன்.. உன் கைய பிடிச்சிட்டு போட்டிங் போனேன்.. அதை என் வாழ்க்கயில மறக்கவே மாட்டேன் காருண்யா.. என் காதலை வெளிப்படுத்த நான் தேர்ந்தெடுத்த முறை தான் ஃபோன் கோல்.. . ஆனா அந்த அணுகுமுறை உனக்கு பிடிக்காம போகும்னு நினைக்கல காருண்யா.. இது நாள் வரையில என் வாழ்க்கையில எந்த பொண்ணும் வந்ததில்ல … அப்படி வந்த கடைசியும், முதலுமான பொண்ணு நீ தான் காரு .. நீ மட்டும் தான்.. தயவு செய்து இதுக்கு எல்லாம் வேறாளப் பாருங்கனு மட்டும் சொல்லாத .. என்னால தாங்க முடியல”என்று கூற, அவள் வெளவெளத்துப்போய் நின்றாள்.
அவன் தன்னை காதலிக்கிறானாமா? எப்பொழுதும் விறைப்பாய் நின்ற படி, சிரிக்கவே மறந்திருக்கும் ஸ்ரீ காந்த், இந்த “மனிதக் கணினி”தன்னை காதலிக்கிறானாமா? அதுவும் அவள் குரல் கேட்டு காதலிக்கிறானாமா? அவனையே வைத்த கண் வாங்காமல் பார்த்த படி நின்றாள் அவள் .
அவனோ, அவ்வறை சுவர்களை சுட்டிக் காட்டி, “இதோ பார் நித்தி… என் நாள் ஆரம்பிக்கிறதும், முடிறதும் உன் முகம் பார்த்து தான் நித்தி…”என்று கூற, அப்போது தான் அவள், அவனது பிரம்மாண்டமான அறையைப் பார்த்தாள்.
அவளது புகைப்படங்கள் அறையை அலங்கரித்திருக்க, அதைப் பார்த்து, ஆயிரம் மின்னல் தாக்கியது போல நின்றாள் அவள் .
அதற்கு மேலும் அங்கு நிற்பது நல்லதல்ல என்று தோன்ற, அவன் விழிகள் நோக்கி, “நா கெளம்புறேன்”என்று கூற, அவன் முகம் இறுகலாயிற்று.
அவள் எதுவுமே பேசாது அவ்வறையை விட்டு வெளியேறப் போக, மீண்டும் பழைய படி கரம் பற்றி தடுத்தவன், ப்ளீஸ் என்ன விட்டு போயிடாதேமா”என்று அவன் கரைந்துருகும் குரலில் கூற, அவள் மூச்சு விடக்கூட சிரமப்பட்டு நின்று, அவனிடமிருந்து தன் கையினை எடுத்து கொண்டு சென்றாள்.
அவனோ அவள் விட்டு சென்ற இடத்திலேயே சிலையென நின்று கொண்டிருந்தான். அவளால் எப்படி அவனை ஏற்க முடியும்? அவளுள்ளத்தில் தான் ரகுரவி அமர்ந்திருக்கிறானே? “ரகுரவி.. ரகுரவி”இவன் மட்டும் தன் வாழ்வில் வராதிருந்தால்…..ரகு மீது கொலை வெறியே தாண்டவமாடியது அவனுக்கு.
அங்கே ரகுரவி, அவன் வருவான் வருவான் என்று கடைசி வரை பார்த்திருந்து விட்டு, கிளம்ப ஆயத்தமானான். அவன் மனமும், உடலும் சோர்ந்து போய் இருந்தது.
இருப்பினும் அவன் மேல் துளியளவு கூட மதிப்பு குறையவில்லை அவனுக்கு . எவ்வளவு பெரிய பிஸினஸ்மேன்? ஏதாவது அவசர வேலையாக இருக்க வேண்டும் என்று எண்ணிக் கொண்டு, வீட்டை நோக்கி, பைக்கும் இல்லாததால் பஸ்ஸில் பயணமானான்.
அத்தியாயம் – 13
வீட்டுக்கு வந்த அவள் , அவளாகவே இல்லை. ஏதோ நடைப்பிணம் போலவே இருந்தாள்.
தன் தமக்கையின் மழலைச் செல்வமான ஹரீஷை கையோடு தூக்கி கொஞ்சுபவள், அவனை கிச்சு கிச்சு மூட்டி சிரிக்க வைப்பவள், இன்று எதுவுமே பேசாது ரோபோ போல தன்னறைக்குச் செல்ல, மாமா, குட்டிப் பையன் ஹரீஷ்க்கும் தாங்க மாட்டாத அதிர்ச்சி.
அவள் அப்படிப்பட்ட பெண்ணே அல்ல. அவளது வழமையான கலகலப்பு அவளை விட்டும் எங்கோ சென்றிருந்தது.
நடப்பது சரியில்லை என கோபால், தன் மனைவிக்கு கண்களால் சைகை காட்ட, புரிந்து கொண்டவள் போல் ராதாவும், தங்கையின் அறையை நோக்கி விரைய, குட்டிப் பையன் ஹரீஷூம் தாயின் பின்னால் செல்ல முற்பட, அவனைத் தடுத்து வைத்துக் கொண்டான் கோபால்.
“ஹரீஷ்… வா அப்பாகிட்ட.. உனக்கு கார்ட்டூன் போட்டுத் தரேன்..”என்று கூற, மகிழ்ச்சியுடன் தந்தையுடனே நின்று விட்டான்.
அறையினுள் நுழைந்த நித்யகாருண்யாவோ, மின்சாரம் தாக்கியவள் போல வந்து, அவளது கட்டிலில் தன் முழங்காலை கட்டிய வண்ணம் விட்டத்தை வெறித்த படி அமர்ந்து கொண்டாள்.
அவள் வாழ்வில் தன் மேல் பைத்தியக்காரத்தனமாய் காதல் வைத்திருக்கும் ஒருவனை இன்று தான் அறிந்து கொண்டாள்.
அவளுக்கு அவன் கம்பீரமான தோற்றமும் நினைவு வர, அது அவளால் தானே என்பதுவும் தோன்ற, அவள் மனம் ஏனோ வலித்தது.
இடையில் ராதா வந்ததும், அவள் பக்கத்தில் அமர்ந்ததும் அறியாதவளாகவே இருந்தாள் அவள் .
ராதா, “என்ன நித்தி.. என்னாச்சு? ஏதாச்சும் பிரச்சினையா? உள்ளே உடம்புக்கு முடியலையா?”என்று கரிசனையாக கேட்க, “ஒண்ணுமில்லேக்கா.. இலேசா தலவலி.. படுத்தா சரியாப் போயிடும்”என்று இயலாதவளாய்க் கூற, ராதாவும் அப்பொய்யை நம்பியவளாக, “அப்படியா.. சரி அப்போ படுத்து தூங்கு காலையில பேசிக்கலாம்”என்று பரிவாக கூறிவிட்டு அகல, மீண்டும் அவன் சிந்தனை அவளை ஆட்கொண்டது.
அவளது டப்பிங்கை கேட்டு, அவளை டப் செய்ய அழைத்திருப்பான் என்று நினைத்தால், அவன் அவளை சந்திக்க பழகவென்று அழைத்திருக்கிறான்.
அன்று கூட அவன் அந்த பூங்காவிற்கு வந்ததும் இவளுக்காகவே. அப்பொழுதே இவள் மனதில் காதல் இருக்க போய் தானே அவனது தொடுகையை உள்ளூற இரசிக்க முடிந்தது.
எல்லாவற்றிற்கும் மேலாக அவன் காதலை வெளிப்படுத்திய தருணம், ஆதியிலிருந்து அந்தம் வரை கூறிய தருணம், ஏனோ அவனை அணைக்க வேண்டும் போல் தோன்றிற்று அவளுக்கு .
அதற்கு மேலும் அங்கிருப்பது சரியில்லை என்று தோன்றி, அவள் வெளியேற , “ப்ளீஸ்.. என்ன விட்டு போயிடாதேமா”என்று அவன் கூற அவளால் அவ்வுணர்வு எழுவதை தாங்க முடியாமல் போகத் தான் அவள் உடனே வெளியேறினாள்.
அவன், அவளை கைப்பற்றி அழைத்துச் செல்ல, இன்றுடன் அவள் வாழ்வே சூனியம் தான் என்று நினைத்தவளுக்கு, அங்கே அவனறையில் ஏதேதோ நடக்க, அவளை அவளாலேயே நம்ப முடியவில்லை. அவனறையில் இருந்த, அவனும், அவளும் வெள்ளை நிறத்திற்கு தோதாக, கோர்ட்டும், சேலையும் அணிந்த புகைப்படம் பார்க்கையில், அவளுக்கே ஜோடிப் பொருத்தத்தைக் கண்டு மனம் சிலிர்த்தது.
அன்றிரவு அவள் தூக்கம் வராது வெகு நேரம் சிரமப்பட்டாள். இப்பொழுதே அவனிடம் ஓடிச் சென்று, கட்டியணைத்து, “ஐ லவ் யூ”என்று கூற வேண்டும் என்ற வெறியைக் கட்டுப்படுத்திக் கொண்டு வாளாவிருந்தாள் அவள் .
அவன் காதலை, அவள் உணர்ந்த நேரம், அவளால் அந்த இரவினை கழிக்க முடியாது போயிற்று. “அடி… அசடே.. அவன் தான் என்ன விட்டு போயிடாதேமா ன்னு எவ்வளவு உருக்கமா சொன்னான்… அப்ப சொல்லியிருக்கலாம்ல உன் காதல”என்று அவள் மனம் அவளை நொந்து கொண்டது.
அதிகாலையிலேயே விழித்தவள், செய்த முதல் வேலை தலைக்கு குளித்து விட்டு வந்து, தன்னிடமிருந்த ஆடைகளில் நல்லதை தேர்ந்தெடுத்தது தான். முதன் முதல் காதலை சொல்லும் போது, அவன் விழிகளுக்கு அழகாக இருக்க வேண்டும் என்பதே அவள் திட்டம்.
வழமைக்கு மாறாக மிக நீண்ட நேரம் கடவுளை வணங்கினாள் அவள் .
“கடவுளே… அவருக்கு என்னை பிடிக்கணும்… அவருக்கு என்னை பிடிக்கணும்”என்று வெகு நேரமாய் அதையே முணுமுணுத்துக் கொண்டே சாமி கும்பிட்டவள், விபூதியை எடுத்து அவளது பிறை போன்ற நெற்றியில் சிறியதாக ஒரு கோடு தீட்ட, அவள் திவ்யமாய் காட்சி தரலானாள்.
நேற்று தலைவலி என்ற தங்கை, இன்று மகிழ்ச்சியாய் முகத்தை வைத்துக் கொண்டு இருப்பது, ராதாவுக்கு சந்தோஷத்தை அளித்தது. “என்னை ஆசிர்வாதம் பண்ணுங்க அக்கா”என்று சிரித்த வண்ணமே தமக்கை காலில் விழுந்தவன், மாமாவும் வர, மாமா காலிலும் விழுந்து ஆசி வாங்கியவள், குட்டிப் பையன் ஹரீஷ்க்கும் முத்தமிட்டு விட்டு சென்றாள்.
பலவித கற்பனைகள், பலவித ஆசைகள் மனதில் விரிய, எங்கோ சிறகடித்துப் பறப்பது போல இருந்தது.
“என்னை விட்டு போயிடாதேமா ன்னு சொன்னீங்கள்ள ஸ்ரீ… இனிமேல் உங்களை விட்டு ஒரு இன்ச் நகர்றதா இல்லை ”என்ற படி அவன் தோளில் சாய்ந்து கொள்ள வேண்டும் போல் தோன்றியது.
அந்த நினைவில் முகம் மலர்ந்தவள், நேரே அவனது அலுவலகத்திற்கு ‘ஆட்’டோ பிடித்தாள்.
அவனது அலுவலக கட்டிடத்தை, முதன் முதலாக தன்னவன் கட்டிடம் என்ற பெருமிதத்துடன் நோக்கினாள் அவள் . அந்தப் பெருமிதத்துடனேயே உள்நுழைந்தவளுக்கு, அவனுடைய மேனேஜர் மூர்த்தியிடமிருந்து அமோக வரவேற்பு கிடைத்தது.
பத்து வருடமாய், அவனுடன் வேலை பார்த்தவராயிற்றே. அவன் இத்தனை வருடங்களில் சிரித்துப் பேசிய ஒரே பெண் நித்யகாருண்யா தான். அதை வைத்தே அவருக்கு அதை சரியாக ஊகிக்க முடிந்தது.
எனவே அவர் ரிசப்ஷனில் இருக்கும் போதே வந்து கதைத்தவர், “வாங்க மேம்… என்ன இந்தப் பக்கம்?”என்று வயதில் சிறியவளான அவளை, அவனுத்தரவுப்படி “மேம்”என்று மரியாதையாய் அழைக்க, அவளோ அதை வெளிக்காட்டாது, இனிமையான குரலில், “ஸ்ரீ இருக்காரா?”என்று எதிர்பார்த்தவளாய் கேட்டாள்.
“இல்லை மேம்.. சார் இன்னும் வரல.. கால் பண்ணியும் பார்த்துட்டேன்… ஃபோன் ஸ்விச்ட் ஓப் ன்னு வருது”என்று கூற அவள் மனம் ஏனோ பதறியது. ஏதும் பேசாமல், அங்கிருந்து வேகமாக அகன்றாள் அவள் .
ஏன் இவன் இப்படியெல்லாம் செய்கிறான்? அவன் நேரத்துக்கு வேலை செய்பவனாயிற்றே என்று எண்ணியவளுக்கு இந்த நொடியே அவனைப் பார்க்க வேண்டுமென்று தோன்ற, நேரே அவன் வீட்டுக்கு சென்றாள் அவள் .
அவளைக் கண்டதும் அங்கேயும் அவளுக்கு அமோக வரவேற்பு தான். ஸ்ரீ தான் அவளது புகைப்படத்தை அறை எங்கிலும் ஒட்டி வைத்திருக்கிறானே! அவர்களுக்கு தெரியாதா? இது தான் அவர்களது “வருங்கால எஜமானியம்மா”என்று. எனவே அவளிடம் மரியாதையாகவே நடந்து கொண்டனர்.
“ஸ்ரீ.. ஸ்ரீ.. இருக்காரா?”என்று அவள் கேட்க, கதவைத் திறந்த வேலைக்காரம்மாளே அவளது கேள்விக்கு பதில் சொன்னாள். “மேல ரூம்ல இருக்காங்கம்மா.. நேத்து ராத்திரியில இருந்து சார வெளியவே வரலைமா?”என்று கூற, நித்யகாருண்யாவின் கைகள் வெளிப்படையாக நடுங்கின.
ஒருவேளை அவன்.. தான் கிடைக்கவில்லையென்று ஆனதும், ஏதாவது தற்கொலைக்கு முயன்றிருப்பானோ? எத்தனை சினிமா டப்பிங் செய்திருப்பாள்? அவளுக்கு நினைக்க நினைக்க கண்களில் கண்ணீர் முட்டிக் கொண்டு வந்தது.
ஒரு கணம் கூட யோசியாமல், நேற்று அவன், அவளது கைப்பற்றி அழைத்துச் சென்ற அதே அறைக்கு மின்னலென விரைந்தாள் அவள் .
குழுமி நின்ற வேலைக்காரர்களுக்கோ நடப்பது எதுவும் புரியாவிட்டாலும், தடுக்கவும் மனமற்று அவர்கள் நிற்க, நித்யகாருண்யா எதைப் பற்றியும் கவலைப்படாமல் தன்னவனின் அறையை நோக்கி விரைந்து கொண்டிருந்தாள்.
“ஸ்ரீக்கு.. எதுவும் ஆகியிருக்கக் கூடாது.. கடவுளே.. அவனை காப்பாத்து.. அவனுக்கு ஏதும் ஆகக் கூடாது..”என்று அவள் வாயால் முணுமுணுத்துக் கொண்டே இருந்தாள். அவனறைக்கதவைத் திறந்து உள் நுழைந்தவளுக்குள் ஓர் கிலி, இதயத் துடிப்பை அவளாலேயே உணர முடிந்தது..
அவளையறியாமலேயே அவள் கண்கள் கண்ணீரை உகுத்துக் கொண்டிருக்க, அவள் கைகள் நடுக்கத்துடன் அவனறைக் கதவின், கைப்பிடியைப் பற்றித் திருகியதும், கதவு திறந்து கொண்டது. அது அவளுள் மரணபயத்தை ஏற்படுத்தியது.
மெல்ல கதவைத் திறந்தவளுக்கு, அவ்வறையின் ஏசி செயலிழக்கப்பட்டிருப்பதே ஒரு மனக் குறையை ஏற்படுத்த, அவள் கண்கள் அவசர அவசரமாக அவனைத் தேடவாரம்பித்தன. அவனோ அமைதியாய் எந்தவித சலனமுமின்றி அவனது மஞ்சத்தில் உறங்கிக் கொண்டிருந்தான். அதைக் காணவும் தான் அவளால் சீராக மூச்சு கூட விட முடிந்தது.
திறந்திருந்த கதவினை பற்றிய படியே மௌனமாய் புன்னகைத்தபடியே, கண்ணீர் விட்ட படி அவன் தூங்கும் எழிலைப் பார்த்தாள்.
களைந்த கேசம், வாடிய சோர்ந்த முகம். தூரத்திலிருந்து பார்த்துக் கொண்டிருந்த அவளுக்கு, இது எல்லாமே அவளால் தானே என அவள் தன் மீதே பழி ஏற்றுக் கொண்டாள்.
கூடவே அவள் கண்கள் அருகில் இருந்த குட்டி மேசைக்கு பாய, அங்கு அவள் கண்ட பொருள் அவளை மிரளச் வைத்தது.
சற்று முன் தோன்றிய சந்தோஷமெல்லாம் நிமிடத்தில் வடிந்தது. அந்த மேசை மீதிருந்தது தூக்க மாத்திரை பாட்டில்.
நிமிடத்தில் பல கற்பனைகள் விரிய,, இல்லை அப்படி எதுவும் நடந்திருக்க கூடாது என்று எண்ணியபடி அவனது மஞ்சத்திற்கு அருகில் வந்தவன், அதற்கு அருகில் இருக்கும் மேசை மீதிருந்த மாத்திரை போத்தலை திறந்து, தன் இடது உள்ளங்கையில் கொட்டிப் பார்த்தாள்.
ஒரு மாத்திரை கூட அதனுள் இல்லை. அதை இருந்த இடத்திலேயே வைத்து விட்டு ஸ்ரீ காந்த்தை பார்த்தவளுக்கு தலை சுற்றியது.
மாத்திரை அத்தைனையையும் அருந்தி விட்டு கமுக்கமாக அவன் படுத்திருப்பதை பார்க்கையில், அவள் உடலில் ஜீவன் அற்றுப் போயிற்று. தன் வாயில் கை வைத்து அழுகையை அடக்கியவள், மெல்ல அவன் மஞ்சத்திற்கு அருகில் வந்தாள்.
“ஸ்ரீ… ஸ்ரீ.. எழுந்திரு ஸ்ரீ..”என்று அவன் இரு கன்னங்களிலும் தட்டி தட்டி, அவனை எழுப்ப முயன்றாள் நித்தி. அவள் கண்களில் மீண்டும் கண்ணீர் ஆறு பெருக்கெடுத்து ஓடியது. அவன் கண் திறக்க வேண்டும் என்ற நப்பாசையில், அவள் நிர்ச்சலனமற்ற அவன் உடலில், முகத்தில் கன்னங்களை தட்டி தட்டி எழ முயற்சி செய்து கொண்டு இருந்தாள்.
“ஸ்ரீ.. ஸ்ரீ.. உன் காருண்யா.. வந்திருக்கேன்.. ஸ்ரீ உங்க காதல புரிஞ்சி வந்திருக்கேன்.. ஸ்ரீ.. ப்ளீஸ் என்ன விட்டு போயிடாதீங்க.. ஸ்ரீ.. கண்ணத் திறங்க ஸ்ரீ….”என்று அவள் தன்னிலை மறந்து, அவனை எழுப்பிக் கொண்டிருந்தாள்.
அவள் உடல் சிலிர்த்தது. ஏதோவொன்று நினைவு வந்தவளாய், அவள், அவனது மாரில் காது வைத்து தலை சாய்த்து கொண்டாள். அவனிதயம் “லப்டப்”என்ற சத்தத்துடன் அடித்துக் கொண்டு தான் இருந்தது. அவள் கண்ணீர் அவன் அணிந்திருந்த டீஷேர்ட்டை நனைத்தது.
இதயத் துடிப்பு சத்தங் கேட்ட சிறு மகிழ்ச்சியில், தன்னாலான முதலுதவியை செய்யலாம் என்று தோன்ற, அவள் அவனில் நின்றும் எழ முற்பட்ட போது, அவளை எழ விடாமல் ஏதோவொன்று தடுத்தது. திடுக்கிட்டு போனாள் அவள் .
அவனது கைகள், அவளை, அவன் மார்போடு சுற்றி வளைத்து இருந்தன. கண்களில் ஆனந்தக் கண்ணீர் பொங்க,, அவள் தன் தலையை உயர்த்தி அவனைப் பார்த்தாள். சிவந்து போயிருந்த கண்களுடன், அவன் உதடுகள் மெல்ல சிரித்துக் கொண்டிருந்தன.
அவன் விழித்திருப்பதைக் கண்டதும் அவள் உடனே விலகப் பார்த்தாள். ஆனால் அவனது பிடியோ இன்னும் இறுகியது. “ப்ளீஸ் மா.. கொஞ்ச நேரம் அப்படியே இரேன்…. எத்தனை நாள் கனவு கண்டிருப்பேன் தெரியுமா?”என்று அவன், அவனுக்கே உரித்தான காந்தக் குரலில் கூற, இதயத்தில் படுத்திருந்தவளுக்கு அது எதிரொலி போல கேட்க, அவன் காதல் மொழியில் மனம் இலயித்து, அவன் மாருடனேயே ஒன்றினாள்.
“நான் அந்த ஸ்லீபிங் ஃபில்ஸ் பாட்டில பார்த்தவுடனேயே எனக்கு கண்ணெல்லாம் இருட்டிரிச்சு ஸ்ரீ… சூ.. சூஸை.. சூஸையிட் பண்ணிட்டீங்களோனு நினைச்சிட்டேன்” என்று அவள் நடு நடுங்கிய குரலில் கூற, அவன் அவள் முதுகை ஆதரவாய் தடவிவிட்டான்.
மாறாக அவனோ சிரித்த குரலில், “ஹேய்.. லூசு.. இப்படியெல்லாமா யோசிப்ப? நைட் பூரா உன்னை நினைச்சிட்டே இருந்ததால தூக்கம் வரலைனு.. கடைசியா இருந்த ரெண்டு மாத்திரையையும் விழுங்கிட்டு தூங்கிட்டேன்.. பட் அதுவும் நல்லதா போச்சு..”என்று அவள் உச்சந்தலையில் முத்தமிட்டபடியே கூறியவன், “உங்க காதல புரிஞ்சி வந்திருக்கேன்.. ஸ்ரீ ன்னு சொன்னியே எனக்கு கேட்டுச்சி அவள் .. இப்போ நான் எப்படி ஃபீல் பண்றேன்னு தெரியுமா?” என்று கேட்க, அவள், அவன் பிடியிலிருந்து தன்னை பிடிவாதமாக விடுவித்துக் கொண்டு எழுந்தாள்.
“ஆனா.. நான் உங்க லவ்வ ஏத்துக்கலைன்னா … நீங்க நிஜமாலும் சூஸையிட் அட்டெம்ப்ட் பண்ணியிருப்பீங்களா.. ஸ்ரீ?” என்று அவள் கேட்க, அவன் மஞ்சத்தில் இருந்து எழுந்து, யோகா செய்வது போல அமர்ந்து, அவள் கேட்ட கேள்விக்கு மறுப்பாய்த் தலையசைத்து “ஒரு நாளும் மாட்டேன் காருண்யா.. உன் கூடத் தான் என் வாழ்க்கைனு எனக்கு எப்போவோ தெரியும்… ஏன்னா என் காதல் அவ்வளவு ஸ்ட்ராங் ஆனது”என்று அவன் காந்தக் குரலில், ரொமான்ஸ் வசனம் பேச மலைத்து நின்றாள் அவள் .
அவளுக்கு ஒரு கணம் எதுவும் பேசத் தோன்றவில்லை. இமைக்க மறந்து அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள்.
தன் மேல் இவ்வளவு அன்பு வைத்திருக்கும் இவனை இழந்திருந்தால், தன் வாழ்க்கையின் அர்த்தத்தை இழந்திருப்போம் என்று தோன்ற, தன் ஹோர்மான்களின் நர்த்தனத்தினால் தன்னையும் அறியாமல் அவள் , அவனைத் தாவிக் கட்டிக் கொண்டாள்.
ஆனால் அவன் கூறியதின் உண்மை அர்த்தம் தெரிந்திருந்தால், நித்யகாருண்யா அவனை இப்படி கட்டியணைத்து இருக்கவே மாட்டாள். அவள் அவனை மறுத்திருந்தாலும் அவள் வாழ்க்கை அவனோடு தான். வலுக்கட்டாயமாகவாவது அவளுடன் குடும்பம் நடத்தி இருப்பான் அவன்.
அவளது அணைப்பில் முதன் முதலாக ரகுரவி மீதிருக்கும் பொறாமையை மறந்தான் அவன்.
அவளை அப்படியே கட்டிக் கொண்டே ஒரு யுகம் முடிக்க வேண்டும் போல் இருந்தது. அவன் அவளை விடவேயில்லை.
தன் வாழ்வில் இரண்டாவது முறை மீண்டும், “என்ன விட்டு போயிடாதேமா”என்று அவன் அதே வசனத்தைக் கூற, அவன் மார்போடு மீண்டும் ஒன்றினாள் அவள் .
அவனிடமிருந்து விலகிக் கொண்டவள், அவனுடைய கன்னத் தாடைகளை பற்றி அப்புறமும், இப்புறமும் திருப்பினாள். அவனுடைய தாடி மயிர்கள் ஆங்காங்கே முளைத்திருப்பதைக் கண்டாள்.
“ஏன்டா இப்படி டல்லா இருக்க ? முதல்ல ஷேவ் பண்ணிட்டு வா”என்று ஏகவசனத்தில் அவள் பேச, அவன் புன்னகையுடன், “என்னது டா வா? நீ செல்வாய்ஸ் ஸ்ரீகாந்த் கிட்ட பேசுறனு ஞாபகம் வச்சுக்கிட்டு பேசு நித்யா ”என்று அவன் தன் பெயரையும், அது கொண்ட அடை மொழியையும் பெருமிதத்துடன் கூறிய வண்ணம், அவள் நெற்றியில் மென்மையாக முட்ட, அவளோ,அவனை விட பந்தாவாக ,
“நீ யாருகிட்ட பேசுறனு தெரியுமா?.. மிஸஸ். ஸ்ரீகாந்த் ரவிச்சந்திரன் கிட்டன்றத ஞாபகம் வச்சுக்கிட்டு பேசு ஸ்ரீ….”அவன் போலவே பேச, பெயரை பெருமையுடன் பறைசாற்ற அகமிழ்ந்து போனான் அவன்.
தன் காதலை அவள் ஏற்க வாய்ப்பில்லை என்று நினைத்தவனுக்கு ஒரே நாளில் தன் வாழ்வு இப்படி அழகாக மாறும் என்று அவன் கனவிலும் நினைத்திருக்கவில்லை.
வியாபாரத்தில் எத்தனை எத்தனை சாதனைகளை செய்தவனுக்கு உண்மையான வெற்றி அவன் காதல் கை கூடியது தான் என்று நினைத்தான்.
“ஹேய் காருண்யா…. நீ எனக்கு ஒழுங்கா ப்ரபோஸ் பண்ணவேயில்லயே”என்று கட்டிலில் அமர்ந்த படி கை கட்டிய வண்ணம் கூறியவனை நோக்கி, முதலில் குளித்து விட்டு வரும் படி அனுப்பி வைத்தாள் அவள்.
ஏதும் பேசாமல் சிரித்த முகமாகவே சென்றாள் ஸ்ரீ. அப்படியானால் இவள் ரகுரவியை காதலிக்கவில்லையா? முக நூலில், “வித் மை ஃபியன்சி” என்று போட்டிருந்ததை கண்களாலேயே கண்டானே? அவளிடமே கேட்கலாம் என்று முடிவெடுத்தவனுக்கு அது முடியவில்லை.
ஒருவேளை ரகுவிற்கும், அவளுக்கும் இடையில் பழைய காதல் கதை இருக்குமென்று அவள் வாயாலேயே தெரிய வந்தால், அவனால் நிச்சயமாக தாங்க முடியாது.
எனவே எதையும் தெரிந்து கொள்ள மனமற்று, அவள் மட்டும் கிடைத்தால் போதும் என்ற அவாவில்,, அதைப் பற்றி இறுதி வரை கேட்காமலேயே இருக்க முடிவு செய்து விட்டான் அவன்.
எப்பொழுதும் பிறருடன் விறைப்பாய் நிற்பவன், இன்று கரைந்துருகுபவன் போல, அவள் முகத்தைப் பார்த்து நின்றிருந்த விதத்தை யாராவது பார்த்திருந்தால்….. இது ரவிச்சந்திரன் தானா? என்று கேட்டிருப்பர். அந்தளவுக்கு அவனை கைப்பொம்மையாக ‘ஆட்’டுவித்தாள் அவள் .
“ஸ்ரீ… ஸ்ரீ உங்க காருண்யா வந்திருக்கேன்.. ஸ்ரீ.. உங்க காதல புரிஞ்சி வந்திருக்கேன்.. ஸ்ரீ.. ப்ளீஸ் என்ன விட்டு போயிடாதீங்க.. ஸ்ரீ”என்று அவள் கூறிய வார்த்தைகள் இன்னும் அவன் காதில் ஒலித்துக் கொண்டேயிருந்தது.
அவனது ஆசைக்கேற்ப, க்ளீன் ஷேவ் செய்து, தன்னுடைய அலுப்பு தீர குளித்தான் ஸ்ரீ. அவன் மனதில் குடி கொண்ட தென்பு, அவன் உடலிலும் குடி கொண்டது. டவலை இடுப்புக்கு கீழே சுற்றிக் கொண்டு, ஷாம்பு மனம் குப்பென்று வர, மஞ்சத்தில் அமர்ந்திருந்தவளை நோக்கி வந்தவன், “ஒகே.. நீ சொன்ன மாதிரியே நா fresh ஆகி வந்திருக்கேன்… இப்போ ப்ரபோஸ் பண்ணு என் செல்லம்”என்று, அவளின் மூச்சு காற்று வெப்பத்தை அனுமானிக்கும் அளவுக்கு நெருங்கி வந்து கூறியவனை தள்ளி விட்டாள் அவள் .
“சரி.. ஒகே.. ப்ரபோஸ் பண்ண தேவையில்லை .. எப்போ நம்ம கல்யாணத்த வச்சிக்கலாம்னு சரி சொல்லுமா.. மாமானால எவ்வளவு நாள் தான் வெய்ட் பண்ண முடியும்?”என்ற படி அவன் உணர்ச்சி மிகுந்த முகத்துடன், அவளிதழ்களை நெருங்கி வர, அவளுக்கு உதறல் எடுத்தது. அவள் பெண்மையை அச்சம் வந்து தடுக்க, அவனிடமிருந்து பின்வாங்கினாள் அவள் .
“ஏன் என்னாச்சுமா? உனக்கு என்ன பிடிக்கலயா?”என்று அவள் நடத்தை மாற்றத்தை கண்டு, அவன் கேட்க, நித்யகாருண்யா அவனை முழுவதுமாக ஆராய்ந்தாள்.
அலை அலையான கேசம், பரந்த நெற்றி, மலை முகடுகள் போன்ற திண்மை பொருந்திய புருவங்கள், அதற்கு கீழ் தீட்சண்யமான இரு கண்கள், நேரான நாசி, வலிமையான கன்னத் தாடைகள், அகலமான கழுத்து, திண்மையான மார்புகள்,சிக்ஸ் பேக் உடன் கூடிய வயிற்றுப் பகுதி என அணு பிசகின்றி அவன் அழகனாகவே இருந்தான்.
அவனை அவன் முன்னாலேயே இரசிக்கிறோம் என்ற சுய உணர்வு கூட இன்றி, அயோத்தி ராமனின் தரிசனம் போல, அவன் திருவுருவங் கண்டு ஆட்பட்டுத் தான் நின்றாள் அவள் .
கூடவே அவள் ஹோர்மான்களும் தூண்டிவிடப்பட, ஆதுரத்தோடு, “ம்.. பிடிச்சிருக்கு ஸ்ரீ..”என்று அவள் கூற, இதுவரை அவன், அவள் பார்வை பதிந்த இடங்களை வைத்து தப்புக் கணக்கு போட்டவன், அவளுடைய “பிடிச்சிருக்கு”என்ற சொல்லையே முழு மனதாக கொண்டு நெருங்கினான்.
மெல்ல அவனை நோக்கி சென்றவன், இதழ்களின் உரிமையை தனதாக்கி கொண்டான். அந்த முத்தத்தில் காமம் இருந்ததா? காதல் இருந்ததா? என்று ஆராய்ச்சி செய்யும் நிலையில் அவள் இல்லை. அவள் அவனிடம் தன்னை கொஞ்சங் கொஞ்சமாக இழந்து கொண்டிருந்தாள். அங்கு நிலவிய ஏசி இல்லாத வெப்ப காலநிலை கூட அவர்களுக்கு சாதகமாகவே இருந்தது.
மெல்ல அவனிதழ்கள், அவள் சங்குக் கழுத்துக்கு இடம் பெயர்ந்தன. அவள் உணர்ச்சிப் பெருக்கில் கண்களை மூடிக் கொண்டாள். அவள் கை விரல்கள் அவனுடைய தோள்பட்டையை இறுக்கி அணைத்துக் கொண்டன. மெல்ல அவளுடைய சேலையை ஒதுக்கி கழுத்துக்கு கீழே அவன் இதழ்கள் பதிய முற்பட, சட்டென விழித்துக் கொண்டாள் அவள் .
அவனை தன்னிலிருந்தும் விலக்கியவன், “வேணா ஸ்ரீ.. எனக்கு பயமா இருக்கு”என்ற படி அவனது சொகுசு மஞ்சத்தில் இருந்து எழுந்து, அவனை தாண்டி செல்ல முற்பட்ட போது அவளை தடுத்தி நிறுத்தி, “என் கிட்ட என்ன பயம்?”என்ற படி அவள் கன்னத்தை மீண்டும் வருடத் தொடங்கினான். ஒரு கணம் அதில் மனம் லயித்தது நின்றவள், அவனுடைய கைகளை தன்னிடமிருந்து விலக்கி, கடினமான குரலில், “கல்யாணத்துக்கு முதல் இதெல்லாம் தப்பு”என்றாள் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்திக் கொண்டு.
அவனோ, “கல்யாணத்துக்கு முதல் ஒரு ரிஹர்சல் பார்க்குறதுல என்ன தப்பு?”என்று அவன் கண்ணாலேயே அழைப்பு விடுக்க, அவள் கண்களோ கண்ணீரைச் சுரந்தது.
“ஹேய் காருண்யா… இப்போ என்ன ஆச்சுனு இப்படி அழுவுற? ப்ளீஸ் அழாதேமா..?”என்று அவளை ஒரு எட்டில் அணுகி, அவள் தோள்களை ஆதரவாக பற்றி கூறினான்.
அவளோ, “எனக்கு ரகு சொன்னது உண்மையாகிடுமோனு பயமா இருக்கு”என்று தேம்பிய படி கூற, சிலிர்த்தெழுந்தான்.
“ரகு”என்ற, அவனின் பெயர் கேட்டதும் தானாக அவன் கைகள் அவளை விடுவித்தன. கை முஷ்டி இறுக, கழுத்து நரம்பு புடைக்க, நாசித் துவாரம் விடைக்க, அவளை ஆழ நோக்கிய படி, “என்ன சொன்னான் அந்த ரகுரவி?”என்று அழுத்திக் கேட்டான்.
அவனது வன்மம் புரியாமல் அவளும், தலையை குனித்துக் கொண்டு, விழித்திரை கலங்க, “சார்.. உன்னை பார்க்குற பார்வையே சரியில்ல… கொஞ்சம் கவனமாயிருன்னு சொன்னான்”என்று கூற, ஸ்ரீ தன் கோபத்தை கட்டுப்படுத்திக் கொண்டு நின்றான்.
என் மனைவியை நான் பார்த்தால், அவனுக்கென்னவாம்? என்று தோன்ற, மறு கணமே ஸ்ரீ அவன் செய்ததும் தவறு என்று உணர்ந்து, “இனிமேல் உன் சம்மதம் இல்லாம உன்னை நா தொட மாட்டே.. சரி நீ இப்போ கிளம்பு”என்றான் அதே விறைப்புக் குரலில்.
அவளுக்கு அதற்கு மேலும் அங்கு நிற்பது நல்லதல்ல என்று தோன்ற, ஏதும் பேசாமல் வெளியேறினாள். தான் அவளை நெருங்கியது காதலுடன்.
ஆனால் அந்த ரகுரவி அவனது தூய காதலுக்கும் அவளது மனதில் வேறு சாயம் பூசி விட்டானே. அவளை தீண்டிய இதழ்கள் குறுகுறுத்துக் கொண்டே இருந்தன.
ஒரு கணம் கண்களை மூடித் திறந்தான் ஸ்ரீ. அவள் ரகுவைப் பற்றி கூறுவதைக் கவனித்தால், அவளுக்கு ரகு மீது எந்த அபிப்பிராயமும் இல்லை என்று தோன்ற, அவனுக்கு அந்த கோபத்திலும் சிறு அமைதி நிலவியது.
அவள் மேல் தான் பதிக்கும் பார்வையைக் கூட ரகு கவனித்திருக்கிறான் என்றால்…? “சம்திங் ராங்” என்றது மனது. ரகு.. காருண்யாவை ஒரு தலையாய் காதலிக்கிறானா?
அவள் காதல் சொன்ன நொடி ரகு மேலிருந்த வன்மம் அவனுக்கு குறைந்தது உண்மை.
ஆனால் அதேயளவு வன்மம் அவள் கண்களை கசக்கிய படி ரகு கூறியதை கூற, கூடியதும் உண்மை. ரகுவின் உரிமையை பறித்து, நடுத்தெருவில் நிற்க வைக்க வேண்டும் என்று சபதம் எடுத்துக் கொண்டான் ஸ்ரீ.
அத்தியாயம்-14
அவனுடைய அலுவலகத்தின் “கான்பரன்ஸ்” அறையில், ஸ்ரீகாந்த் ரவிச்சந்திரன் கணினித் திரையினுடனான விளக்கங்களை, நீண்ட நீளமுனை மேற்பரப்புள்ள மேசையின் அகல முனையில் அமர்ந்து,தன்னுடைய சொகுசு நாற்காலியில், நேர்ப் பார்வையுடன் அமர்ந்து, கம்பீரத்துடன் கேட்டுக் கொண்டிருந்தான் .
அவனுடைய உதடுகள் தான் புன்னைகைத்துக் கொண்டே இருந்தாலும்,அவனுடைய கண்களோ கோபத்தில் சிவக்க, தன்னைத் தானே சமரசப் படுத்திக் கொள்ளும் நோக்கில் , அடிக்கடி தன்னுடைய மேசைமீதிருந்த தண்ணீர்க் குவளையை எடுத்துக் குடித்துக் கொண்டிருந்தான்.
இவனது உடல்,உள மாற்றங்களையும்,அது கொண்டுள்ள வன்மங்களையும் அறியாத ரகுரவி தன்னுடைய “அப்ளிக்கேஷன்” பற்றிய விளக்கங்களை கூறிக் கொண்டிருந்தான்.
ஆனால் ஸ்ரீயின் உள்மனமோ புகைந்து கொண்டேயிருந்தது .
தன் காருண்யா குடி கொண்டிருக்கும் அவன் இதயத்தைக் குத்திக் கிழிக்க வேண்டும் போல் தோன்றிற்று ஸ்ரீயிற்கு . இருப்பினும் எதையும் வெளிக்காட்டாது இருக்க முயன்று கொண்டிருந்தான்.
“இது தான் உங்க ப்ரோஜெக்டா? குட்”என்று ஸ்ரீ,ரகுவின் விளக்கங்களை வேண்ட. வெறுப்பாக கேட்டுக் கொண்டிருந்து விட்டு, வலிய உதடுகளை விரித்துக் கொண்டு கூற,ரகு ரவியும், “ரொம்ப நன்றி சார்” என்று மலர்ந்த முகத்துடன் கூறினான்.
காருண்யாவை “சார்”என்று அழைக்க வேண்டாம் என்ற. கூறியவன்,இதுநாள் வரை அப்படி ரகுவிற்கு கூறவுமில்லை.
அன்று, வருவதாக கூறிவிட்டு,காருண்யாவுடன் இருந்து,ரகுவை தவிக்க விட்டதற்கு மன்னிப்புக் கேட்கவுமில்லை.
ஏதோ ரகுவுடன் பேச வாய் திறக்க முதல்,அவனுடைய கைப்பேசி பாடியது.முன்பெல்லாம் சாதாரண ரிங்டோன் கொண்டு பாடும் இவன் கைப்பேசி,இன்று அழகான சினிமா பாடலொன்றை பாடியது.
“ஏதோவொன்று ஏதோவொன்று உன்னை கேட்பேன்
இல்லை இல்லை என்றால் உயிர் துறப்பேன்”
எனப் பாட, அவன் முகம் மகிழ்ச்சியில் விகசித்தது.
திரையில் தெரிந்தது அவளது இலக்கங்கள்.கூடவே இரண்டு நாட்களுக்கு முன்பு,அவள் காதல் சொல்ல வந்த நேரம்… .இந்த ரகு செய்த குழறுபடியால்,மனமுடைந்தவன்,இது நாள் வரை அவளுக்கு அழைப்பெடுக்கவுமில்லை,பேசவுமில்லை,சந்திக்கவுமில்லை.
தன் உண்மைக் காதலை,அந்தக் காதலின் விளைவாக தோன்றிய காமப்பூக்களை,அவள்,தவறாக எடுத்துக் கொண்டமை,அவனை இரண்டு நாட்களாக அலைக் கழிக்க செய்துகொண்டு இருந்தது. அதனால் அவன் அவளுடன் எந்தத் தொடர்பும் வைத்துக் கொள்ளவில்லை.
ரகுரவியை நிமிர்ந்து நோக்கியவன்,”மிஸ்டர்.ரகு…வெளிய வெய்ட் பண்றீங்களா ?”என்று அவன் கேட்க ரகுவும், “ஒகே சார்” என்று கூறிவிட்டு அந்த அறையை விட்டு வெளியே வந்தான். ரகு முன்னே இல்லாததால் இறுக்கம் தளர்ந்து, கைப்பேசியை எடுத்தான்.
“சொல்லு”என்று கூறி முடிக்க முன்னரே மறுமுனையில் இருந்த அவனது இதயத்துக்கு சொந்தக் காரி, கைபேசி வழியாகவே அவன் மீது முத்த மழை பொழிய, அவன் உடலில் ஏற்பட்ட இரசாயன மாற்றங்களை தடுப்பதற்காக, அவசரமாக நாற்காலியில் இருந்து எழுந்து,இடது கையை பேன்ட் பாக்கட்டினுள் போட்டு நின்று கொண்டான்.
மறுமுனையில் இருந்த அவனது இராட்சசி “என் செல்லக் கண்ணால்ல ஏன்டா என்ன இப்படி படுத்துற?ரெண்டு நாளா எப்படி துடிச்சி போயிட்டேன் தெரியுமா?…”என்று அவனிடம்,இரண்டு நாட்களாக தான் பேசாததால் துடித்துப் போனதாகக் கூறவும், அவள் தனக்காக தவித்திருக்கிறாள் என்ற சந்தோஷம் மேலிட,தனக்குத்தானே சிரித்துக் கொண்டான்.
“ஸாரி காருண்யா…நானும் அப்படி நடந்திருக்க கூடாது…ஸாரி ”என்று அவன் மன்னிப்புக் கேட்க,அவள் அவனுக்காக பரிந்து பேச ஆரம்பித்தாள்.
”சரி விடுங்க ஸ்ரீ…. பட் என்னோட பேசாம மட்டும் இருக்க ட்ரை பண்ணாதீங்க… என்னால தாங்க முடியல”என்று அவள் உள்ளத்தில் இருந்து கூற,அவனுக்கு இப்போதே அவளை பார்க்க வேண்டும் போல் தோன்றிற்று.
அதனை செயற்படுத்த எண்ணி,ஸ்ரீ அவளுடன் கைபேசியில் பேசிக் கொண்டே,இங்கே அவன் புறப்பட தயாரானான்.அவன் புறப்பட்டு வரும் விடயம் தெரியாமல் அவளும் பேசிக் கொண்டே இருந்தாள்.
ரகுரவியினுடனான கூட்டத்தை மறந்து, அவன் அவ்வறையை விட்டு வெளியே வந்தான்.
அவனை நோக்கி ஓடி வந்த ரகுவை உள்ளுக்குள் எரிச்சலுடன் பார்த்தவன், ரகுவின் குரல் தன்னவளுக்கு கேட்க கூடாது என்று எண்ணியபடி,ரகு பேச முதல்,இடையில் குறுக்கிட்டு,”நீங்க மேனேஜர கான்டாக்ட் பண்ணுங்க… நாம அப்றோம் சந்திக்கலாம் ”என்று வன்மையான குரலில் கூறி விட்டு,அங்கிருந்து கைபேசியுடனே நகர்ந்தான்.
“நீ சொல்லு செல்லம்…நீ இப்போ வீட்லயா இருக்க?”என்று அவன் கீ
