உன்னில் அலையாகிறேன் கண்ணா !!

உன்னில் அலையாகிறேன் கண்ணா

உன்னில் அலையாகிறேன் கண்ணா..

உன்னில் அலையாகிறேன் கண்ணா..

உன்னில் அலையாகிறேன் கண்ணா !!

உன்னில் அலையாகிறேன் கண்ணா !!

உன்னில் அலையாகிறேன் கண்ணா !!

உன்னில் அலையாகிறேன் கண்ணா !!

உன்னில் அலையாகிறேன் கண்ணா !!

உன்னில் அலையாகிறேன் கண்ணா !!

அலை – 3



“ஹே….. அங்க
பாருடி கோகி கூட ஒரு அர்ஜுன் ரெட்டி!!”.
 

செம்மயா இருக்கான்
பாரேன் என ப்ரியா சொல்ல
,  அதற்குள் அந்த அர்ஜுன் ரெட்டி திரும்பி விட அவனைப் பின்புறத்திலிருந்து
பார்த்த நிலா
,
“
ஆமா! ஆமா! அர்ஜுன்
ரெட்டி மாதிரியே புகைய ஊதிட்டு இருக்கான்”.
 



அருகில் சஞ்சீவ்
இருப்பதை மறந்து
,
“
ஏன்டி  ப்ரியா எனக்கு ஒரு
டவுட்டு!
இவன் பொண்டாட்டிக்கு இவன் கிஸ் குடுக்கும்போது எப்பிடி டி இந்த ஸ்மெல்ல
சகிச்சுக்குவா
?”.



அதிர்ச்சியாகித்
திரும்பிய சஞ்சீவ்
, “தித்லி நீ காலைலர்ந்து ஒரு மார்க்கமா இருக்க, இதெல்லாம் சரியே இல்லை சொல்லிட்டேன்”. 



“ஏ போடா….
சாமியார்.”



“எனிவே… நீ
கேள்வி கேட்டுட்ட நான் பதில் சொல்லிடுறேன்.

அவன் மௌத்வாஷ்
யூஸ் பண்ணிக்குவானா இருக்கும். ஏன்டி இப்படில்லாம் டவுட் வருது உனக்கு
?. அது அவன் பாடு அவன் பொண்டாட்டி பாடு. நீ ஏன்மா
கவலப்படுற
?”என்றான் சஞ்சீவ்.



காரில் கோகி ஏற, “யாரு டா அந்த
அர்ஜுன் ரெட்டி
?” 
என ப்ரியாவும்
சுபியும் விசாரிக்க
, இந்தப்பக்கம் நிலா ஆதிராவிடம் மொபைலில்,  சீக்கிரம் வரச்சொல்லி பேசிக்கொண்டு இருந்தாள். ஒருவழியாக
ஆதிராவையும் அழைத்துக் கொண்டு குளத்திற்கு போய் சேர மணி ஆறரை.
 



ஆளாளுக்கு
பைனாகுலர் உடன் காத்திருக்க அந்த டெரெக் சான்ட் பைப்பர் அவர்களின் கேமரா
கண்களுக்கு சிக்காமல் தண்ணி காட்டிக் கொண்டிருந்தது.
கோகி அங்கே மைனா, மயில் என்று கண்ணில் பார்த்ததை எல்லாம் படம் பிடித்துக் கொண்டிருந்தான்.



திடீரென சான்ட்
பைப்பர் தரிசனம் கொடுக்க
,  க்ளிக்! க்ளிக்! க்ளிக்! என்று கேமராவின்
சத்தம் மட்டுமே அங்கு கேட்டது.
 



 “ஐ காட் இட். வைட்
ஷாட் தான் கிடைச்சது. உனக்கு சஞ்சு
?”



“எனக்கு மீடியம்
ஷாட்.”



“இன்னும் கொஞ்ச
நேரம் வெயிட்
 

பண்ணலாமா?”



“இல்ல போதும் டைம்
ஆச்சு. பசிக்குது நிலா இட்லி குடுடி” என சஞ்சு கேட்க
, அனைவரும் உண்டு முடித்தனர். 



“எங்க எல்லாரையும்
கல்வீரம்பாளையம் ஜங்ஷன்ல இறக்கி விட்டுடு சஞ்சு. கேமரா நான் எடுத்துக்கறேன்.
ட்ரைபாட் மத்ததெல்லாம் டிக்கில இருக்கட்டும். அப்புறமா வாங்கிக்கறேன்.”



அனைவரும்
இறங்கிக்கொள்ள
,
“
தித்லி

எப்படி போவே உன்
ஸ்டூடியோவுக்கு
?”

 என சஞ்சீவ் கேட்க, “இந்த ஜங்ஷன்ல
இருந்து
92
(
பஸ்)
ஏறிடுவேன்.”



 

 

 

 

 

“நீ எதுக்கும்
கிளம்பும் முன்னாடி கால் பண்ணு. முடிஞ்சா நான் ட்ராப் பண்றேன். சுபி
, ப்ரியா நீங்க ரெண்டு பேரும் நிலாவோட கோ –
ஆர்டிநேட் பண்ணிக்கங்க. முடிஞ்சா மூணு பேரும் சேர்ந்து போகப் பாருங்க”.
 



சரிங்க பெரியண்ணா
என பழிப்பு காட்டி விட்டு
, டேய் கோகி பை டா… என்று ஆதிரா உட்பட நால்வரும் விடை பெற்றனர். 



சுபி, ப்ரியா இருவரும் அங்கிருந்தே பஸ் ஏறிவிட
தோழிகள் இருவரும் ஆதிராவின் பாட்டி வீட்டுக்கு வந்தனர்.
 



 
            *********************


ஆதிராவின் அம்மா
அவளுக்கு நான்கு வயதிருக்கும் போதே ஒரு விபத்தில் இறந்து விட்டார்.
 குழந்தை ஆதிராவைத் தன் மாமியார் பார்வதி
வளர்த்துக் கொள்வதாகக் கேட்க
, வசதியாகப் போய் விட்டது மாதவனுக்கு. அவர் யூ.எஸ்சில்  இன்னொரு பெண்ணைக் கல்யாணம் பண்ணி செட்டிலாகி விட்டார். இப்போது 15 வயதில் ஒரு மகன். லீவுக்கு மூன்று வருடத்துக்கு ஒரு முறை இந்தியா வரும்போது
மகளைப் பார்ப்பதோடு சரி
, மற்றதெல்லாம் ஃபோனில் தான். தேவைக்கு பணம் அனுப்பினால் மட்டும் போதும் தன் பெண்ணிற்கு, என்று நினைத்து விட்டார் போலும்.



வீட்டிற்கு வந்த
இருவருக்கும் ஃபில்டர் காப்பி கொடுத்த பாட்டியிடம்
, “பாட்டி நாங்க ரெண்டு பேரும் தூங்கப் போறோம்.
லன்ச் வேண்டாம்” என்று விட்டு ரூமுக்குள் போய் ஷின் சான் பார்த்துக் கொண்டே
தூங்கியாச்சு தோழிகள் இருவரும்.



நிலாவின் மொபைல்
அவள் ஷோல்டர் பாகின் அடி ஆழத்தில் ரொம்ப நேரமாக கதறிக் கொண்டிருந்தது.
 

 
                

 
                  ****************



 

“நீ ஏன் வந்ததுல
இருந்து ஏதோ யோசனையாவே இருக்கே கோகி
?  என்ன பிரச்சனை?” என்றான் சஞ்சீவ்.



“ஒண்ணும் பெர்சனலா
இல்ல. பேமிலி மேட்டர் தான். என் பெரியப்பா பையனுக்கு எங்க அத்தைப் பொண்ணை கல்யாணம்
பேசறாங்க.
 
பார்த்தா அவன் வேற
ஒரு பொண்ண லவ் பன்றானாம்
. நேத்து காலைல தான்
அவன் ஜெர்மனியில இருந்து வந்தான். பெரிய பெரியப்பா வீட்ல வச்சு மத்தியானமே
பஞ்சாயத்தை ஆரம்பிச்சாச்சு”.
 

என்ன சண்டைனு
தெரில. அவன் நேத்து கோவமா எங்க வீட்டுக்கு லன்ச்சுக்கு வந்தவன் அப்டியே சாப்பிட்டு
தூங்குனவன் தான்
, இப்போ காலைல தான்
என்கூட எந்திரிச்சு வந்தான். பாவம் அவனுக்கும் ஜெட் லேக் இருக்கும் தானே
?. அவன் வந்து ரெஸ்ட் எடுக்கக் கூட டைம் குடுக்காம
என்ன அவசரமோ எல்லாருக்கும்
?”  என கோகி புலம்பினான். 



“ஹே… ஒரு நிமிஷம்
இரு.. காலைல அந்த பேக்கரி வாசல்ல மலமாடு மாதிரி ஒருத்தன் தம் அடிச்சிட்டு உன்கூட
பேசிட்டு இருந்தானே அவனா
?”



“ஆமா சஞ்சு
அவன்தான். மலமாடெல்லம் இல்ல அவன் ஃபிட்னஸ் பிரீக். டெய்லி டூ ஹவர்ஸ் எக்ஸர்சைஸ்
பண்ணுவான். ஏன் கேக்கறே
?”

 

“ஹா ஹா ஹா… நீ
கார்ல ஏற முன்னாடி ப்ரியாவும் சுபியும் உன் அண்ணனை சைட் அடிச்சிட்டு ஏதோ கமென்ட்
பண்ணிட்டுருந்தாங்க.

அப்போ நம்ம தித்லி
கேட்டுது பாரு ஒரு கேள்வி!” என பலத்த சிரிப்புக்கிடையே நடந்ததைச் சொல்லி
முடித்தான் சஞ்சீவ்.

இத்துனூண்டு
எல்.கே.ஜில அவ பாட்டி கைய பிடிச்சிட்டு வந்தவ இப்போ என்ன பேச்சு பேசறா. அம்மாடி!
இவ கிட்ட மாட்டுறவன் பாடு திண்டாட்டம் தான்.
 முதல்ல இதை நம்ம பிரஷாந்த், கேசவ், ராஜீவ் கிட்ட
கான்-கால் போட்டு சொல்லணும். செம்ம காமெடியா இருக்கும்”.



“ஏண்டா ஒருத்தன்
கஷ்டம்
 
உங்களுக்கு
காமெடியா டா
? இந்த தித்லி
வரட்டும் அவள என்னனு கேக்கறேன்” என்றான் கோகி.



“மச்சி….. இந்த
லவ்வே இப்டி தான் ஒரே போராட்டம்”. பேசாம வீட்ல பார்த்து வைக்கற பொண்ணக்
கல்யாணம் பண்ணி லைஃப்ல செட்டில் ஆறது தான் உத்தமம்”.
 



“இல்லன்னா உன்
அண்ணா மாதிரி தாடி உட்டு தம் அடிச்சிட்டு திரிய வேண்டி தான்
. நீ கேமரா
எடுத்துட்டு இங்க இறங்கிக்கோ. வீட்டுக்கு தான போற கோகி
?”.

ஆமா. பை சஞ்சு. 



 
                 *****************

 

சுகமாக தூங்கிக்
கொண்டிருந்த ஆதி
, பாட்டியின் கை
ஸ்பரிசத்தில் விழித்தாள்.
“நிலாவ எழுப்பி கூட்டிண்டு வாம்மா…  டிஃபன் சாப்பிடலாம்” என்று பாட்டி கீழிறங்கிச் சென்றார்.



“ஏ தித்லி
எந்திரிடி.. மணி நாலாச்சு.
 ஆறு மணிக்கு க்ளாஸ் இருக்கு எந்திரிடி” என ஆதி எழுப்ப, கண்ணைக் கசக்கிக் கொண்டு எழுந்தாள் நிலா. 



“என் பேக் எங்கடி? கீழ இருக்கா?”. 



“நான் போய்
பாக்கறேன்.
 
நீ  ஃபேஸ் வாஷ்
பண்ணிண்டு வா” என்று சென்றாள் ஆதிரா.
 



“ஐ.. சாம்பார் வடை, ரசவடை, தயிர் வடை…சூப்பர் பாட்டி” என ஒன்று ஒன்றாக நிலா உள்ளே தள்ள, “ஆமாண்டி மா நீங்க
ரெண்டு பேரும் மத்தியானம் சாப்பிடுவேள்னு எல்லாம் பண்ணினேன். ஆனா சாப்பிடலை. அதான்
உங்களுக்கு பண்ணி வெச்ச சாம்பார்
, ரசத்துல வடையப் பண்ணி போட்டாச்சு. சாயங்காலம்
சாப்பிட டிஃபனும் ஆச்சு. சாம்பார் ரசமும் தீர்ந்து போச்சு. எப்படி நம்ம ஐடியா என
சிரித்தார் பார்வதி”.

 

“செம்ம ஐடியா தான்
பாட்டி உங்க ஐடியா. எதுவுமே வேஸ்ட் ஆகலை. என் பாட்டி கூட இப்படி தான். மத்தியானம்
மிஞ்சினதை நைட்டு எல்லாருக்கும் போட்டு காலி பண்ணி முடிச்சிருவா
. அடுத்த நாள்
வரைக்கும் வச்சு நாமளும் சாப்பிடக் கூடாது
, மாட்டுக்கும் போடக் கூடாது. நீ சாப்பிட மாட்டேன்னு முடிவு பண்ணிட்டா அப்போவே
மாட்டுக்கோ
, நாய்க்கோ போட்டுடு
அப்படிம்பா”.
 



ரொம்ப தேடறயா நீ
ரங்கநாயகிய
? 

“ஆமா பாட்டி. எந்த
மேகத்துல இருந்து என்னைப் பார்த்துண்டு இருப்பான்னு வானத்துல தேடிண்டே
இருக்கேன்”.
 



அதற்குள் அங்கு
வந்த ஆதிரா
,
“
இந்தாடி உன் பேக்.
உங்கம்மா எனக்கே
25 கால்
பண்ணிருக்காங்க. உன் மொபைலை செக் பண்ணு”.
 



“எனக்கு 40 மிஸ்ட் கால் ஆதி. அம்மா 10 அப்பா 30 கால். இரு சாப்பிட்டு சாவகாசமா கூப்பிடலாம்” என்று வகைக்கு ஒன்றாக மூன்று
வடைகளை உள்ளே தள்ளி இன்னும் ஒரு பிளைன் மெதுவடை ஒன்றைக் கேட்டு வாங்கி சாப்பிட்டு
அப்பாக்கு போன் செய்தாள்.
 



“என்னமா நிலா போன்
பண்ணா எடுக்க மாட்டயா
? எங்க இருக்கே?”
என்று எகிற
ஆரம்பிக்க
,
“
தூங்கிட்டேன்
பா” என்று பொறுப்பே இல்லாமல் பதில் சொன்னாள்.
 



“இப்போ என்ன தலை
போற காரியம்னு இத்தனை கால்
?. இதோ இப்போ பஸ் ஏறி ஸ்டுடியோ போகப் போறேன். க்ளாஸ் இருக்கு”. 



“இரு… இரு…
இரு… நீ ஒரு அஞ்சு மணி போல ஆதிரா கூட மருதமலை வந்துரு”.
 



“எனக்கு க்ளாஸ்
இருக்குப்பா. நீங்க திடீர்னு இங்க வா அங்க வான்னா எப்டி வர்றது
?” என இவள் பதிலுக்கு
கத்த
,

 சஞ்சு ஆதிராவின்
வீட்டிற்குள் நுழைந்து கொண்டிருந்தான்.
 



“எதுக்குப்பா இப்போ
மருதமலைக்கு வரணும்
?”



காரணம் தெரிஞ்சா
இந்த மேடம் போவாங்களா என்ன
?.



 
                ***************



“இதோ பாரு
நிலாஞ்சனா என் ப்ரண்ட் பேமிலி காலைல ஆத்துக்கு வந்துருந்தாங்க”.
 



“அவங்க உன்னைப்
பாக்கணும்னு கேட்டாங்க. நான் பத்து மணிலருந்து உன்னை காண்டாக்ட் பண்ண ட்ரை
பண்ணிண்டு இருக்கேன்”.



“சரி இப்போ
அதுக்கென்ன
? நேரா ஆறு மணிக்கு
ஹோப்ஸ் வந்துருங்கோப்பா அங்க பார்த்துக்கலாம்”.
 



“அவங்கெல்லாம்
அப்போவே போயாச்சு”.



 

 

 

 

 

 

“போயாச்சா அப்போ
நல்லதா போச்சு.. பேசாம வேலயப் பாருங்கோ விஜயராகவன்” என நக்கல் பண்ண
, அவர், “நீ மருதமலை கிட்ட தான் இருக்கே. அதனால ஈவ்னிங்
பாக்கலாம்னு புரோகிராம் பிக்ஸ் பண்ணியாச்சு நிலாமா!
  அப்பா சொல்றேன்ல,  அந்த முக்கா பேண்ட்டை எல்லாம் மாத்திட்டு எதாவது சுடிதார் போட்டு சமத்தா
வாடிமா” என கொஞ்சி
, கெஞ்சினார்.



“இதோ பாருங்கோப்பா, நான் என் ப்ரெண்ட் யாரையாவது எனக்கு பதிலா
க்ளாஸ் கவர் பண்ண கேக்கறேன். அப்படி யாராவது வந்தா தான் நான் வருவேன். இல்லன்னா வர
மாட்டேன்”.



“சரி அரேஞ்ச்
பண்ணிட்டு கூப்பிடுமா” என்று போனை வைத்தார்.



“என்னடி நடக்குது? எதுக்கு போகணும்  மருதமலைக்கு?”
என சஞ்சீவ், ஆதி இருவரும் ஒருசேர வினவ, தெரியல “யாரோ பேமிலி பிரெண்டாம்.
பாக்கணுமாம்”.
 


இரு நான் ப்ரியாவ
கேக்கறேன்”.
  

“டி ப்ரியா எங்கடி
இருக்க
?”
இன்னும்
வீட்டுக்கு போகலையா
?”



“இல்லடி. இங்க தான், வடவள்ளி நீல்கிரிஸ்ல மதுக்கு கொஞ்சம் திங்ஸ்
வாங்கிட்டு இருக்கேன்”.
 

“நீ எப்போ ஃப்ரீ
ஆவே
?  

 

“எப்படியும்
பர்ச்சேஸ் முடிச்சு அவளை கொண்டு யுனிவர்சிட்டியில ட்ராப் பண்ண ஒரு ஒன் ஹவர்
ஆகிரும் தித்லி. எதுக்கு கேக்கறே
?”. 

இல்ல.. அப்பா
திடீர்னு மருதமலை வர சொல்றார். எனக்கு க்ளாஸ் கவர் பண்ண யாராவது வேணும். சரி நான்
மேனேஜ் பண்ணிக்கறேன். பை ப்ரியா”.
 

“நீ நம்ம ஜூனியர்
வாணிய கேளு தித்லி
, அவ தஞ்சாவூர்ல டான்ஸ் கத்துண்டு அரங்கேற்றம் பண்ணினவ. கல்ச்சுரல்ஸ்ல பார்த்திருக்கேன். வெளிய எங்கேயோ பி. ஜி ல தான் ஸ்டே பண்ணிருக்கா.
நம்பர் தரேன் ட்ரை பண்ணிப்பாரு” என்றாள் ஆதி.
 

ஒரு வழியாக அந்த
வாணியைப் பிடித்து க்ளாஸ் எடுக்க அரேஞ்ச் பண்ணி முடிக்க மணி ஐந்து.
 அப்பாக்கு போன் பண்ணி தான் வருவதாகச் சொல்லி
விட்டு
,
“
ஆதி இப்போ நான்
சுடிதார்க்கு என்னடி பண்ணுவேன்” என புலம்ப ஆரம்பித்தாள்.



அதற்கு சஞ்சீவ், “வா தித்லி நம்ம
ரிலையன்ஸ் ட்ரெண்ட்ஸ் போவோம்” என ஆதியையும் அழைத்துக் கொண்டு சென்றான்.



“உனக்கு என்ன
நடக்குதுன்னு தெரியுதா
? எதுக்கு உங்கப்பா திடீர்னு மருதமலை வர சொல்றார்னு ஏதாவது புரியுதா?” என சஞ்சீவ் கேட்க, இவள்,  “ஏன்டா உனக்கு காது கேட்டுதா இல்லையா? இப்போ தான சொன்னேன்”. 



“நானே செம கடுப்புல
இருக்கேன். நீ
 வந்தோமா வண்டி
ஓட்டினோமான்னு இரு.
அவர்
பிரெண்டுகிட்ட அவருக்கு மானம் போயிடக் கூடாதுன்னு தான் நானே இப்போ அங்க போறதுக்கு
ஒத்துக்கிட்டேன். இதுல நீ வேற தெரியுதா
? புரியுதான்னு 
கேள்வி கேட்காத
பிளீஸ்” என கடிக்க அவன் அப்படியே ஷட் -அப் பண்ணிட்டான்.



அவளுக்கு லைட்டா
பல்ப் எரிஞ்சிருந்தா நடக்கப்போவதை கெஸ் பண்ணி
,எஸ்கேப் ஆகிருப்பா டான்ஸ் கிளாஸ்க்கு.ஆனா சஞ்சீவ் கேட்டும் அவளுக்கு பல்ப்
எரியலயே.
விதி அவள்
வாழ்வில் கங்க்னம் டான்ஸ் ஆடப்போகிறதா இல்லை கதகளி ஆடப் போகிறதா என்று
பொறுத்திருந்து பார்ப்போம்.
 

 
    

 
                  *************

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *