இராஜ மோகினி – 2

This entry is part 4 of 22 in the series இராஜ மோகினி

இராஜ மோகினி

இராஜ மோகினி _ 6

இராஜ மோகினி _ 6

இராஜ மோகினி

இராஜ மோகினி

இராஜ மோகினி – 1

இராஜ மோகினி – 1

இராஜ மோகினி – 2

இராஜ மோகினி – 2

இராஜ மோகினி – 3

இராஜ மோகினி – 3

இராஜ மோகினி – 4

இராஜ மோகினி – 4

இராஜ மோகினி – 5

இராஜ மோகினி – 5

இராஜ மோகினி – 6

இராஜ மோகினி – 6

இராஜ மோகினி – 7

இராஜ மோகினி – 7

இராஜ மோகினி – 8

இராஜ மோகினி – 8

இராஜ மோகினி – 10

இராஜ மோகினி – 10

இராஜ மோகினி – 9

இராஜ மோகினி – 9

இராஜ மோகினி – 11

இராஜ மோகினி – 11

இராஜ மோகினி – 12

இராஜ மோகினி – 12

இராஜ மோகினி – 13

இராஜ மோகினி – 13

இராஜ மோகினி – 14

இராஜ மோகினி – 14

இராஜ மோகினி – 15

இராஜ மோகினி – 15

இராஜ மோகினி – 16

இராஜ மோகினி – 16

18  இராஜ மோகினி

18 இராஜ மோகினி

இராஜ மோகினி 19

இராஜ மோகினி 19

18  இராஜ மோகினி

18 இராஜ மோகினி

இராஜ மோகினி

இராஜ மோகினி

2 – இராஜ மோகினி ….(Vijayasri Padamanaban)
இரவெல்லாம் தூங்க முடியவில்லை என்னால்
என் படுக்கையில்
நிலவொளி கிடந்ததால்
நான் கேட்டுக் கொண்டேயிருந்தேன்
ஒரு அழைக்கும் குரலை
எங்கிருந்தோ
ஆம் என பதில் தரவேயில்லை எதுவும்.
_ஜென் நாடோடி பாடல்
நிரல்யா….
அன்று மனப்பூர்வமாய் சம்மதம் சொல்லி
தபோவனத்திலிருந்து வந்தவள் தான்….
அடுத்து எப்ப திருமண ஓலை வரும்..என்று நகம் கடித்துக் காத்துக்கொண்டிருந்தாள்…
இங்கு நகரத்தில் தன் வாழ்விடத்தில்…
ஆசை முள் இப்ப மோகத்தில் நின்றது…பிடாரன் மீது….
நாட்கள் கூட கூட….வேகம் எடுத்தது…முடில..அவளால் காத்திருக்க…
ஏன்? என்ன? எப்ப? என்று கேள்வி கணையினால்..இளம் உடம்பு நைந்தது….
அறிவியல் சாதனங்கள் எத்தனை வந்து எல்லாம் நானே சாதித்தேன் மார்தட்டி கொள்வது வீணே….!!!
மனம் உற்பத்தி செய்யும் ஒரே நேரத்தில் பல திசை பரவும் மாய அலைகளை எந்த கருவி செய்ய முடியும்?
எந்த சென்சார் …அதை அறிந்து தெரிந்து புரிந்து…செயல்படுத்தும்…
பொத்தான் அமுக்கினால் போதும்….
துளி பிசகாது நடக்கும்…கை ரேகை ஒன்று போதும்….இயக்க…
அதி ரகசியமா? …விழிப்பாவை போதும்…
ஆயிரம் இருந்தும்…
ஏன் அந்த பேச்சு அப்படியே நிற்கிறது?….இதை எப்படி நொடியில் நடத்திக்கொள்வது?..
இயந்திரங்களுக்கு மனிதன் அடிமையாகிக்கொண்டிருக்கிறான்….ஒரு நாள் இயந்திரமே உலகை ஆளும்…என்று…அதே இயந்திரங்களால்…ஊடகங்களில் அப்பப்ப…பீதியை கிளப்புவதை…நிரல் படித்தும் பார்த்தும் இருக்கிறாள்…
அப்படியும் கூட ஆகுமோ?மருளக்கூட செய்திருக்கிறாள்….குழம்பி….
ஆனால் இன்று…இக்கணம் அது எந்நாளும் முடியாது…அறுதியிட்டு சொல்லும் உறுதியான நிலை பாட்டிற்கு வந்துவிட்டாள்..
காரணம்….ராஜ யோகி..மயங்கினான்…
மனம் என்ற சாப்ட்வர் மனிதனிடம் இருக்கும் வரை இயந்திரங்கள் ஜடங்களே …தெளிவு வந்துவிட்டது…
தான் பயன் படுத்தும் அத்துணை காட்ஜெட்ஸ் மீதும் இருந்த மோகம் இப்ப அவளுக்கு அழிந்தது…
தாடிக்கு வீசைக்கு நடுவில்….தெரிந்த ஆழ்ந்த கண்கள்…இப்ப இவளின் கண்களுக்குள்…
நான்கு கண்கள் சேர்ந்து இரண்டாய்..கலந்து கூடி !!!
கவிதை சுகம்..!!! காதல் சுகம்..!!!!
அனல் மூச்சு மேவ…தன் படுத்திருந்த வாகு மாற்றி..வேறு பக்கம் படுத்து…
ஆசீ….மலரின் மென்மையில்…அவளுக்கே கேட்காத ஒலியில்.. அவன் பேரை கூப்பிட்டு பார்த்தாள்…உள் நாக்குவரை தித்தித்தது…!!
இதோர் புத்தம் புது மயக்கம்…இதுவரை யாரிடமும் தோன்றாத உணர்வு….
உடல் கவர்ந்ததா? பருவம் கவர்ந்ததா?
குரல் கவர்ந்ததா? கண்கள் காரணமா?
இருக்காது ..இருக்காது…
தினமும் ஆயிரம் பேரை சந்திக்கிறேன்…யாரும் இப்படி உள் வரை பாதித்ததில்லை…
ஜென்ம பந்தமாய் இருக்கலாம்….
எந்த ஜென்மத்திலேயோ.. விட்ட குறை தொட்ட குறை…இப்பவும் தொடருதோ?
மோகினி ன்னு எதுக்கு பேர் வைத்தார்கள் தெரியாது …நிரல்க்கு….
இங்கு நிரல்யா மட்டும் தான்..
மோகினி ..தபோவனம் தவிர யாருக்கும் தெரியாது…பெற்றோர் அழைப்பார்கள்…ம்ம்ம்
மோகினி …ஆசீ விளிப்பில்….
அப்பெயர் கவர்ச்சியாய் தெரிந்தது…
ரொம்ப நாள் பழகியவன் போல அழைக்கிறான்?…
எப்படி அது சாத்தியம்?…
இரவின் நடு நிசியில்…அவ்வறையில் அதிகம் எகிறிவிட்ட ac குளிர் கூட இவளுக்கு உரைக்காமல்..புரண்டு புரண்டு….யோசனைகள்…
முதுகு வலித்தது… நாய் பூனை மாறி கண்டபடி நெளிக்க ஆசை வந்தது …அந்த தூங்கா தேவதைக்கு……
பக்கத்தில் நிம்மதியாக தூங்கி கொண்டிருந்த…ஷரா வை பார்க்க பார்க்க பொறாமை பிடுங்கியது…
10 பாய் பிரண்ட்ஸ்…மூன்று பேரிடம்..கல்யாணம் ன்னு ஒன்னு பண்ணா உன் கூடத்தான் ன்னு ப்ராமிஸ் பண்ணிட்டு….எவ்ளோ நிர்மலமான முகத்தோடு தூங்குரா….
ஏன் என்னால் முடில…
முதன் முறை என்பதால்…தடுமாறுறோமோ?
இதில் …. ஷரா அனுபவசாலி..eee
தலையாட்டிக்கொண்டாள்…நிரல்..
அவள் தனி ரகம்….
ஆண் நண்பர்களிடம் அன்பா இருக்கிற வரை இருப்பாள் எல்லையோடு ….கொஞ்சம் சில்லா வல்லி செய்தார்கள் என்றால்…..
உனக்கும் எனக்கும் ஒத்து வராது…உறவு தொடர்ந்தால் கசக்கும்….தோழா….
அப்படி இப்படி ட்விஸ்ட் பண்ணி… கவிதை சொல்லி நழுவி எடுத்து ஓடி வந்து விடுவாள் …இதும் கூட ஒரு வகை சமர்த்து தான்…
நிரலுக்கு அவளின் திருவிளையாடல்கள் ..சலிப்பு கொடுக்கும்…
ஏன் இப்படி பழகனும்? ஏன் புளிக்குது சொல்லணும் ன்னு ..
ஷராவிடம் கருத்து சொன்னபோது….
எனக்கான ஆணை இந்த கூட்டத்தில் தான் தேடனும்…ஒரே ஒரு சாய்ஸ் கூட அடஜஸ்ட் பண்ணிட்டு என்னால் வாழவே முடியாது நியா…அப்படி எனக்கு பிடித்தவன் அமைந்து விட்டால்…வாழ்க்கை என்ன
உயிரை கூட தர சம்மதம் டி….
அவள் பதில் சொல்ல….
அதிலும் ஓர் நேர்மை இருக்க… ஒப்புக்கொண்ட நிரல்…
சிக்கல் பண்ணிக்காம இருந்தால் போதும் ஷரா ..உன் சேப் எனக்கு முக்கியம் …உன் நலனில் எனக்கும் சகோதரியாய் அக்கறை உண்டு …..சொல்லி ..
ஷரா வையே நெகிழ வைத்து விட்டாள் நிரல்…
நீ ரொம்ப நல்ல பெண் நியா…உன் பெற்றோர் அப்படி…சோ எனக்கு இது அதிசயமில்லை…
தோள் குலுக்கி…ஸ்டைலாய் …பாசத்தில் துளிர்த்த கண்ணீரை இமை சிமிட்டி…கலைத்து ..அழகாய் சிரித்தாள் ஷரா…
அது ஓர் முன்னைய நிலா காலம்…பொழுது…
இப்ப தோழியை எழுப்பி நிறைய சந்தேகங்கள் கேட்க தோணியது…அவளுக்கு…
எத்தனை நூற்றாண்டுகள் போனாலும்..காதலின் ஒரே மொழி புலம்பல் தான்….போலும்…
அவள் கொஞ்சம் குண்டு உடம்புக்காரி…சோம்பேறி
தூக்க விரும்பி…எழுப்ப முடியாது… மீறி எழுப்பினால்…கொலை முயற்சி கூட நடக்கலாம்…..eee
நிரல் உடம்பை உலப்பாமல்….படுக்கையை விட்டு எழுத்துவிட்டாள்…
மாடிக்கு போக ஆசை வந்தது…..தனிமை கேட்டது
செயற்கை குளிர் புழுக்கமாய் தெரிந்தது…
நட்சத்திர விடுதி போன்று இருக்கும் இவர்களின் லேடீஸ் ஹாஸ்டல் கதவை ரேகை பதிந்து திறந்து….நெடிய காரிடார் கடந்து…மூலையில் இருந்த லிப்ட் இல் கடைசி மாடிக்கான பட்டனை அமுக்கினாள்…யாருமே இல்லை…அனைவரும் தூக்கத்தில்….பகலில் கடைத்தெரு போன்று சலசலத்து கிடக்கும் ஹாஸ்டல்….
வித்தியாசமான அனுபவம்..பேய் படங்கள் பார்க்க கூட பயப்படும் நிரல்…இப்ப ஏகாந்த இரவில்…தன்னந் தனியே….தளர் இரவு உடைக்கு மேலே சல்லா துணி போர்த்திக்கொண்டு…
நிலாபெண்ணுக்கு …துணைக்கு போனாள்….
கீழே கட்டிடத்தின் மொத்த பரப்பையும் கொண்ட மாடி…க்ளே டைல்ஸ் பதிக்கப்பட்டு…கால் உறுத்தாமல்….
தன் பிள்ளை பாதங்களை அதில் பதித்து…நான்காயிரம் கோடி ஆண்டுகள் தனிமையில் சுற்றி திரியும் நிலவை…இன்று தான் பார்ப்பவள் போல பார்த்து வைத்தாள்…
சென்னையில் ஒளி வெள்ளம் ..பட்ட பகலை போல மின்னி வைத்தாலும்..இன்று அதன் மேல் மலைப்பு தட்டல…
கைப்பிடி சுவர் மீது சாய்ந்து கொண்டு….வானத்தை அண்ணார்ந்து பார்த்து…அங்கங்கு …என்னைப்பாரேன் ..ன்னு கண்ணு சிமிட்டிய கூடுதல் ஒளி சிந்திய நட்சத்திரங்களை…எண்ணிக்கொண்டிருந்தாள்….
தலைக்கு மேலே ஹெலிகாப்டர் சப்தம்….அது பின்னால் குட்டி விமானங்கள் அணிவகுத்து….போக…
சாலைகள் போல வானமும் பிசி இப்ப…
இந்த மல்டி மில்லியனர்ஸ…தொல்லை தாங்க முடிலேயேப்பா…
ஓடோ ..மீம்ஸ் மாறி அலுத்துக்கொண்டாள்…
நாம ஆளுக்கு ஒரு கார் வச்சுருப்பதையே..
சாதனை ன்னு நினைச்சா….இப்ப ஹெலி வாங்கி நம்மை வெறுப்பேத்துறாங்க….ம்ம்ம்…
முடிலடா உங்க அலப்பறைகள்…எங்களை தற்கொலைக்கு தூண்டுது…ன்னு கேலியாக சொல்லி…தானாய் கல கல ன்னு சிரித்துக்கொண்டாள்…
இல்லாத.. கிடைக்காத கொடுமை தான்…ஆசை பிறக்குது…. அது இயலாமவ் போகும் போது பொறாமையாக மாறுது….மொத்த வறுமை கூட்டங்கள் சேர்க்கும் போது…புரட்சிகள் வெடிக்குது…
ஒருத்தன் பட்டினியா கிடக்கும் போது…அவன் எதிரிலேயே மற்றொருவன் விருந்து உண்ணும் போது…
சகிப்புதன்மை வராது…அவனை கொன்றாவது பிடுங்கி உண்ணும் கலகம் தோணும்!!
அப்பா சொல்லும் ஞானம் …பொறுமை அமைதி…மேன்மையான வாழ்வு உபதேசங்கள்….
எப்படி வயிறு பசிக்கும் போது வேலை செய்யும்?….
அப்பா க்கு ஒன்னுமே தெரில…
எல்லாருக்கும் எல்லாமும் சமமாய் கிடைத்தால் மட்டுமே …அமைதிகளுக்கு சாத்தியம்…
வரலாற்று பிரிவை விரும்பி எடுத்து படிக்கும் நிரலின் மனதில்…பகட்டை பார்த்ததும்…இப்படி என்றும் சாத்திய படாத சிந்தனைகள்ஓடின…
இவள் முகம் இருந்த திசையில்….வான வேடிக்கைகள் ஒளி வெள்ளங்களை வாரி இறைத்து….
ஆதிரா _ வர்த்தமான் …மகிழ்வான நிச்சயதார்த்துக்கு வாழ்த்துக்கள்….. அதனோடே
எழுத்துக்கள்…
ஒரு பெரிய ஒளிரும் விர்ச்சுவல் திரை…தரையிலிருந்து வானத்துக்கு….மண மக்கள் அங்கு மகிழ்வாய் மோதிரம் மாற்றிக்கொள்வது….தெரிய…
கனவுகளில் குடியிருக்கும் ..இளம் நெஞ்சான நிரல்யாவிற்கு ..கண்கள் பெரிய சூரிய காந்தி மலராய் விரிந்து…வாய் லேசாய் திறந்து…வாவ்…வாவ்…ஆசம்…..ஒலிகள் வந்தது..
நன்றிகள்….வர்த்தமான் & சக்கரவர்த்தி குடும்பங்கிலிருந்து….
அடுத்து வார்த்தைகள் ஓடி….
குடும்ப உறுப்பினர்கள் உருவங்கள் திரையில்….தோன்ற ஆரம்பிக்க…
இப்ப சுற்றி முற்றி பார்த்தாள் மியா…ஆங்காங்கு… மாடிகளில் தலைகள் தென்பட்டன….ஒவ் அவங்களுக்கு தெரியும் போல…அதான் பார்க்கிறார்கள் ..
எனக்கெதுக்கு இந்த தரிசனம்?….
ஆனாலும் என்ன ஆடம்பர திருமணத்தை லைவ் ல பார்க்கிறது…நல்லா தான் இருக்கு….
மகிழ்ச்சியான மனோ பாவத்திலேயே…பார்த்தவளுக்கு….
நிறைய முஸ்தீப்பு வார்த்தைகள்…
நல்லவன்..வல்லவன்…பேராண்மை உள்ளவன்…சிங்கம் புலி ன்னு .விடாம…
அறிமுகம் பண்ணும் முன்…
யாரையோ புகழோ புகழ் ன்னு புகழ…
இதோடா…. இவங்க குடும்பத்தில் பொறந்தா… பள்ளே பாடலாமே?…
உதட்டை ..கேலியாய் வளைத்து…
வாடி..வா…உன் அந்த மகா ராஜா .. பேரரசன்.. முகத்தை பார்க்கிறேன்…..
காதல் மன்மதன்….இளம் பெண்களின் கனவுகளை திருடுபவன்….
ஓ…ஒ ஒ…. நிரல்……இன்னும் சிரிப்பு அதிகமாகியது…
இதோ பார்ரா….ரா..ன்னு…!
ஆஷீ சக்கரவர்த்தி…..
பேர் பார்த்த பின்..இத்தனை நேரம் வேடிக்கையில் மழுங்கி கிடந்த அறிவு….கூர்ப்பாக..!
அடுத்த நொடி திரையில் தோன்றவிருக்கும் உருவத்தை காண ஆவல் மிக….
உத்துபார்க்க…..மங்கள உடையில் … அலங்கார தலைப்பாகையோடு ..தேஜஸ் மிக்க முகத்தோடு….
கொஞ்சம் கூட சிரிக்காத உதட்டொடு….இவளின் தூக்கத்தை திருடிய ராஜயோகியே தான்…
பார்த்த மாத்திரம்….மகிழ்வு வரவில்லை…
ஏமாற்றம் தான் வந்தது…தகவல் ஏன் வரவில்லை….அவன் ஏதோ ஒரு நன்றி காட்டும் நோக்கில் அப்பாவிடம்..கேட்டிருக்கிறான்…
இப்ப அப்பா சரி என்றதும்…இது மாறி ஒரு குடும்பத்தில்…எப்படி சம்மதிப்பார்கள்…
கல்யாணம் செய்து கொள்ள வாய்ப்பே இல்லை.!!
கதம்..கதம்….இனி எங்கு அதை பார்க்க…தன் அறைக்கு போய்… கட்டிலில் விழுந்துவிட்டாள்….
கனவுகள் கனவுகளே.!!!
திரும்ப திரும்ப சொல்லி …முன் பதிந்த எண்ணங்களை அழிக்க முனைந்தாள்…
பெண்கள் அழுது புலம்பி அனத்திய காலங்கள் இப்ப கிடையாது….சோ கிட்டதாயின் மறக்க முயற்சித்துக்கொண்டிருந்தாள் நிரல்யா..
காலையில் ஷராவிடம் கூட சரியா பேசல…காலை உணவை இருவருக்கும் தயார் செய்து வைத்துவிட்டு….இவள் உண்டு…
வேலைக்கான நேர்காணலுக்கு…
பொறுமையாய் கிளம்பிக்கொண்டிருந்ததோழிக்கு…நிரல்
சொல்லிக்கொண்டு கல்லூரிக்கு கிளம்ப…
ஒரே ஒரு ஹெல்ப் செய்யேன் நிரா..ப்ளீஸ்..இதுவரை நான் கேட்டதே இல்லை உன் கிட்ட…தப்பா நினைச்சிக்க மாட்டே ல…
நெவர் …சொல்லு….மெழுகு பாவையாய் ..புருவம் உயர்த்தி கேட்க…
இப்ப போற நிறுவனம்..செம்ம சம்பளம்…சலுகை ..வேலை பார்த்தாலே பெருமை…எனக்கு வேலை கிடைக்கணும்…
சொல்லி தயங்கி நிறுத்த…
ம்ம் சொல்லு ஷிரா…
ஒரு மந்திரம் சொல்லேன்…சின்னதா..நினைச்சது சட்டுன்னு அடைய….ப்ளீஸ்..ப்ளீஸ்….என் குட்டி தங்கச்சி ல…ன்னு கொஞ்ச….
நீயும் அந்த மாய வலையில் விழுந்துட்டியா பக்கி… ன்னு ..தன் இயல்பில் மாறி….கல கல ன்னு சிரிச்சா…மோகினி…!
ரெண்டு பேரும் சேர்ந்தால்…அடிக்கடி மந்திரத்தால் மாங்காய் பழுக்குமா?…என்றெல்லாம் கழுவி கழுவி ஊற்றி சிரித்துக்கொள்வார்கள்…
இப்ப இவளே…கேட்டால்…

Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *