இது போதும் எனக்கு 6

This entry is part 7 of 7 in the series இது போதும் எனக்கு

இது போதும் எனக்கு

இது போதும் எனக்கு!

இது போதும் எனக்கு!

இது போதும் எனக்கு 2

இது போதும் எனக்கு 2

இது போதும் எனக்கு 2a

இது போதும் எனக்கு 2a

இது போதும் எனக்கு 3

இது போதும் எனக்கு 3

இது போதும் எனக்கு 4

இது போதும் எனக்கு 4

இது போதும் எனக்கு 5

இது போதும் எனக்கு 5

இது போதும் எனக்கு 6

இது போதும் எனக்கு 6

{25}

“பேபி இஸ் ஸ்டேபிள் இனாஃப் டூ ப்ளோவ் அப் யோர் ப்ரெஸ்ட்ஃபீட்.. “என்று டாக்டர் கூறிய வண்ணம், குழந்தையை இன்குபேட்டரில் இருந்து வெளியே எடுக்க தன் குழந்தையையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள் ஐஷூ.
அச்சரம் பிசகாமல், தன் கணவனின் சாயலையே கொண்டு பிறந்திருந்த தன் குழந்தையைக் காணும் போது.. அவளையும் அறியாமல் உள்ளம் உற்சாகப் பூரிப்படைந்தது உண்மை.
மெது மெதுவென்று பஞ்சுக் குவியல் போல, மென்மை மணம் கூட மாறாமல், வெண்ணையில் குழைத்து குழைத்து செய்தாற் போன்றிருந்தது குழந்தை.
குழந்தையை கைகளில் ஏந்திக் கொண்டவளுக்கு, இயல்பாக மேலூறும் தாய்மை நாடி, நரம்பெங்கும் பரவ, கலங்கிய கண்களுடன் நெற்றியில் மென்மையாக முத்தமிட்டாள் ஐஷூ.
தாயின் சூட்டைக் குழந்தையும், கதகதப்பாக உணர்ந்திருக்க வேண்டும்.
தாயின் வெற்று நெஞ்சில் தலை அங்கும் இங்கும் புரட்டி, முகம் புதைத்து இதம் காண,
அந்நொடியும் சட்டென அவள் நினைவுகளில் வந்து போனாள் அவளது கணவன்.
எத்தனையோ இரவுகளில் அவனும், இவள் நெஞ்சாங்கூட்டில் முகம் புதைத்து, அவன் மீசையின் குறுகுறுப்பை உணர்த்திக் கொண்டே தானே உறங்கிப் போவான்??
தன் தலைவனின் முகம் ஞாபகம் வந்தது அவளுக்கு.
மெல்ல ஆதுரத்தோடு தன் குழந்தையை அணைத்துக் கட்டிக் கொண்டாள் ஐஷூ.
குழந்தையோ, தாயின் அருகாமையில் மேலும், கீழும் நாக்கை அசைத்து… தாய் மார்பை தேட,
அந்தப் பெண் டாக்டரும், “இங்க பாருங்க மிஸஸ். ஸ்ரீதர்.. குழந்தை நாக்கை மேலும், கீழும் அசைக்கும் போது.. உங்க ப்ரெஸ்ட்டை தேடும் போது புரிஞ்சிக்கலாம்.. குழந்தை பால் குடிக்க ஆயத்தமாகிருச்சுன்னு.. நீங்க இப்போ மெதுவா குழந்தைக்கு பால் கொடுக்க ஆயத்தமாகலாம்.. எனக்கு சில சிவியர் கேஸஸ் பார்க்க வேண்டியிருக்கு.. ஏதாச்சும் ஹெல்ப் வேணும்னா.. நர்ஸை கேட்டுக்கலாம்..” என்று உரைத்து விட்டு வெளியே செல்ல,
அங்கிருந்து நர்ஸ் அவளுக்கு மேலதிக வழிகாட்டலை வழங்க, குழந்தைக்கு பால் கொடுக்க ஆயத்தமானாள் அவள்.
முதலில் தன் செப்பிதழ்களை ‘ஆ’வெனத் திறந்து..தாய் மார்பைத் தேடிய குழந்தையின் முகத்தைக் காணக் காணத் தெவிட்டவில்லை அவளுக்கு.
அதன் பிறகு தாய் மார்பை.. தன்னிரு பிஞ்சு விரல்களாலும் பற்றிக் கொண்டு குழந்தை பால் அருந்த ஐஷூவுக்கோ, கண்களில் மளமளவென கண்ணீர் பெருக்கெடுத்து வழிந்து கொண்டிருந்தாலும் கூட அவளுடைய இதழ்களோ மலர்ந்து தான் இருந்தது.
அவள் விழிகளில் அந்நேரம் வழிந்து கொண்டிருந்தது ஆனந்தக்கண்ணீர்!! முதன்முறையாக குழந்தைக்கு பாலூட்டும் தாய்மார்கள் அனுபவிக்கும் ஒருவிதமான பரவச நிலை அது!!
குறை மாதத்தில் பிறந்த பல இன்குபேட்டர் குழந்தைகள் பால் அருந்தும் நிலையில் தாமதம் செய்ய,
ஐஷூவின் குழந்தையானது சீராக பால் அருந்தியமையானது அதன் ஆரோக்கியத்தைக் காட்ட, அதைப் பார்த்து கொஞ்சம் வியந்து தான் போனாள் நர்ஸ்.
“அட.. ரொம்ப ஆச்சரியமா இருக்கே..!!அநேகமான ப்ரீமேட்ச்சர் பேபீஸ்.. ப்ரெஸ்ட்பீடிங்க் ஸ்டேஜில்.. கொஞ்சம் மெதுவா தான் இயங்கும்..ஆனால் உங்க குழந்தை நார்மல் குழந்தைங்க மாதிரி… பால் குடிக்கிறது ஆச்சரியம் தான்..!!” என்றவாறே.. தன் கையிலிருந்த குழந்தையின் வளர்ச்சிப் பதிவேட்டில் தான் அவதானித்தவற்றையெல்லாம் எழுதவாரம்பித்தாள் நர்ஸ்.
ஒரு சில நிமிடங்களில் பாலருந்திய பின்னர்..குழந்தை தன்னிரு கைகளையும் மடக்கிக் கொண்டு உறங்க,
குழந்தை அருந்திய பால் ஜெரிப்பதற்காக மடியில் வைத்து, அதன் முதுகை மென்மையாக தடவிக் கொடுத்துக் கொண்டிருந்தாள் ஐஷூ.
அந்நேரம் பார்த்து ஐசிஎன் அறைக்குள் வந்தனர் அவளது அத்தையும், மாமாவும். நர்ஸூம் அவர்களுக்கு தனிமை தரக்கருதி அங்கிருந்து சென்று விட,
வந்தவர்களை இன்முகத்துடனேயே வரவேற்றாள் அவள்.
மருமகளின் முகத்தில் இதுநாள் வரை இருந்த கலக்கம், இறுக்கம் முற்றிலும் தளர்ந்து, அவள் முகம் புதுமணப்பெண்ணைப் போல பூத்திருப்பது புரிந்தது.
பின்னே.. இதுவரை அவள் நெஞ்சை செல் அரிப்பது போல அரித்துக் கொண்டிருந்தது குழந்தையின் நிலை தான்!!
நர்ஸ் ஆரோக்கியமாக இருப்பதாக மொழியவும் தான்.. இது நாள் வரை குழந்தையைப் பற்றியே யோசித்துக் கொண்டிருந்த கவலை அவளை விட்டும் அகலலாயிற்று.
அவள் பார்வை அப்போதும் கூட மென்மையாக குழந்தையையே தான் தழுவிக் கொண்டிருந்தது.
மென்மையான குரலில், “வாங்க அத்தை.. வாங்க மாமா.. இப்போ தான் குழந்தை பால் குடிச்சான்.. ரொம்ப தேறிட்டே வரான்.. நர்ஸ் கூட ரொம்ப ஆரோக்கியமா இருக்கான்னு சொன்னாங்க..” என்று மருமகள் சொல்ல,
அவர் கண்ணிலும் ஓர் மிருதுத்தன்மை பரவ, மெல்ல அவள் தலையைத் தடவி புன்னகைத்தார் அவர்.
இருப்பினும், மகனை ஐஷூ ஏற்றுக் கொள்ள மறுத்தது தான் பெரியவர்கள் இருவரின் மனதையும் நெருஞ்சி முள்ளாக குத்திக் கொண்டேயிருக்கிறது.
எத்தனையோ முறை ஐஷூவை சந்தித்து.. மன்றாடிப் பார்த்தும் தான் பலனில்லையே??
‘யேம்மா.. என் மகன் பண்ணது தப்பு தான்மா.. இருந்தாலும் குழந்தையுடைய எதிர்காலத்துக்காகவாவது.. அவனை மன்னிச்சு ஏத்துக்க கூடாதாமா?’ என்று தன் மகனுக்காக மன்றாட வேண்டும் என்று தாய்மனம் துடியாய் துடிக்கிறது.
அந்த வசனம் அவரது நுனி நாவு வரை வருகிறது.
இருந்தாலும் ஸ்ரீதர் கட் என்ட் ஸ்ட்ரெய்ட்டாக, ஐஷூவுக்கு தன்னுடன் வாழ பிரியம் இல்லாத போது.. எந்தவிதமான சமாதானப் பேச்சு வார்த்தையும் நடத்தக்கூடாது என்று சொல்லி அனுப்பியதால்..
கொட்டி விடத் துடித்த வார்த்தைகளை.. வாய் மூடி அடக்கிக் கொண்டாள் ராஜேஷ்வரியம்மாள்.
குழந்தையை.. தன் கைகளில் மென்மையாக தூக்கிக் கொண்டார் அவளது மாமா.
ஐஷூ வீட்டுக்கும் சரி.. ஸ்ரீதர் வீட்டுக்கும் சரி.. இந்தக் குழந்தை தான் மூத்த பேரக்குழந்தை. அதனால் சிசு மேல் அதிகபட்ச பாசம் இரு தாத்தா, பாட்டிக்கும் இருக்கத் தான் செய்தது.
தன் பேரக்குழந்தையை கையில் ஏந்தியதும் தானாகவே கண்களெல்லாம் கலங்கிப் போயிற்று ஸ்ரீதரின் தந்தைக்கு.
சற்றே தழுதழுத்த குரலில்,
“என் ராசா.. தாத்தாவைப் பாருடா..என் செல்லம்” என ஆசையோடு செல்லங்கொஞ்சியவர், மனைவியை நோக்கி
“ராஜி.. இவன் அப்படியே நம்ம ஸ்ரீதர் மாதிரி இல்லை? கலர் மட்டும் தான் அப்படியே அவங்க அம்மா மாதிரி இருக்கான்.. ஜாடையில் நம்ம ஸ்ரீதரே தான்..!!” என்று கூற
அத்தையும், “ஆமாங்க.. என் பேரன் அப்படியே என் மகனை மாதிரி.. இனி யாராவது இந்த குழந்தைக்கு அப்பா என் மகனில்லைன்னு சொல்ல முடியுமா?” என்று விட்டு, குதர்க்கமாக அவளை மேலிருந்து கீழ் வரை ஒரு பார்வை பார்த்து வைக்க,
அத்தை கூறுவது அவளைத் தான் என்று புரியாமலில்லை அவளுக்கு. மெல்ல அமைதியாக தலை குனித்துக் கொண்டாள் அவள்.
என்ன தான் வீண்கோபத்தில், ‘குழந்தைக்கு ஸ்ரீதர் தந்தையில்லை’ என்று சொல்லியிருந்தாலும்.. அவளது பேபிக்கண்ணா தானே குழந்தையின் தந்தை??
அதேசமயம், ‘எங்கே ஸ்ரீதர் வரவில்லை?’ என்று அவள் மனம் இரகசியமாக தன் தலைவனைத் தேடியது.
அதை வெளிப்படையாக கேட்க முடியாமல் , தன் தலைவனுடன் எப்போதும் இணைந்து சுற்றிக் கொண்டிருக்கும், ‘விக்னேஷ்’ஷைக் கேட்கும் சாக்கில், தன் கணவனைப் பற்றி அறிய விரும்பினாள் அவள்.
“ஆமா அத்தை.. விக்கி வரலையா?” என்று கேட்ட கணம், அறைக்குள் கேட்டது வெளியே நின்றிருந்த இந்துவின் குரல்.
அந்த அறை இரட்டைக் கதவுகள் கொண்ட அறை. பாதிக்கதவு திறந்திருக்க, மீதிக்கதவு மூடப்பட்டிருந்தது.
திறந்திருந்த பாதிக்கதவு வழியே இந்து நின்று கொண்டிருப்பது புரிந்தாலும்.
மூடப்பட்டிருந்த மறுபாதிக் கதவில் யார் நின்றிருப்பது என்று இந்துவாகவே சொல்லும் வரை புரியவில்லை பெரியவளுக்கு.
“இங்கே ஏன் மாமா நின்னுட்டிருக்கீங்க.. உள்ளே வாங்க..!!” என்று இந்து யாரையோ கைப்பிடித்து இழுக்க.. விழிகள் சுருங்க கதவுப்பக்கமே பார்த்திருந்த ஐஷூ..
அங்கே தன் தலைவன் வரவும்.. இனிதாக அதிர்ந்தாள்.
இவ்வளவு நேரமும் ஸ்ரீதர் இங்கேயே இருந்திருக்கிறான் என்று தோன்றியது அவளுக்கு.
பாதி வெளியே வந்திருந்த ஸ்ரீதரும், மறந்தும் கூட தலை திருப்பி.. ஐஷூவின் முகத்தைப் பார்த்தானில்லை.
ஆனால் ஐஷூவின் கண்களோ அவனையே தான் இமைக்காமல் ஏறிட்டது.
அவளுடைய பேபிக்கண்ணா.. வர வர இளைத்துக் கொண்டே போவது போலவும் தோன்றியது ஐஷூவுக்கு.
தன் கையைப் பற்றியிருக்கும் ஐஷூ கையை அகற்ற முயன்றபடி,
“அதில்லை இந்து.. உங்க அக்காவுக்கு நான் வந்தால் பிடிக்காது.. நான்.. அவள் போனப்புறம்.. அவனைப் பார்த்துக்குறேன் இந்து” என்றான் அவன்.

அந்த சொற்கள்… கொஞ்சம் காலம் கடந்து தான் ஐஷூவின் மனதைத் தாக்கியது.
அன்று, ‘உனக்கு வெட்கமேயில்லையா? குழந்தையைப் பார்க்க வராதே’ என்று ஆத்திரத்தில் மொழிந்திருக்கக் கூடாதோ என்று காலம் கடந்து வருந்தினாள் ஐஷூ.
ஆனால் இந்துவோ தன் ஸ்ரீதர் மாமாவை விடுவதாயில்லை.
“அதுக்காக.. உங்க உரிமைய விட்டுக் கொடுக்கப் போறீங்களா? அது உங்க குழந்தை மாமா.. யார் தடுக்க முடியும்? நீங்க உள்ளே வாங்க மாமா” என்ற படி
தன் கணவனின் கையை, உரிமையாகப் பிடித்திருந்த இந்து கையைப் பார்க்கும் போது.. உள்ளே ஜிவுஜிவு என்று எரிந்தது ஸ்ரீதரின் பொண்டாட்டிக்கு.
கோபத்தில் பெரும் பெரும் மூச்சுக்களை எடுத்து விட்ட வண்ணம்.. இருவரையும் வெறிக்க வெறிக்க பார்த்திருந்தாள் அவள்.
நேரே ஸ்ரீதர் தந்தையிடம் வந்த இந்து, “மாமா கொஞ்சம் குழந்தையை கொடுங்க..” என்று குழந்தைக்காக கை நீட்ட,
அவரும் யோசியாமல் கொடுத்து விட, சட்டென இடையிட்டாள் ஐஷூ.
“இப்போ எதுக்கு குழந்தையை அவர்ட்டயிருந்து எடுத்த?” என்று தங்கையைப் பார்த்து காட்டமாகவே கேட்டாள் ஐஷூ.
சின்னவள், தமக்கையின் கத்தலுக்கு ஐயுற்று நடுங்குபவளா என்ன?? தமக்கையின் கத்தலை கிஞ்சித்தும் பொருட்படுத்தவேயில்லை அவள்.
“ஸ்ரீதர் மாமா குழந்தையை பார்க்கணும்ல? அதான்??”-அஸால்ட்டாகவே சொன்னாள் இந்து.
இப்போது தான் குழந்தை பால் குடித்திருக்கிறது. இன்னும் பால் ஜெரித்து விட்டதற்கு அடையாளமாக குழந்தை ஏப்பமும் விடவில்லை. இந்த நிலையில் குழந்தை கைமாறுவது சரியில்லை என்றெண்ணித் தான்.. தடுக்க முயன்றாள் ஐஷூ.
“இல்லை வேணாம்..” என்று அவசரமாக முன்வந்து மொழிந்தவள்,
‘குழந்தைக்கு இப்போ தான் பால் கொடுத்தேன்.. இன்னும் ஜெரிக்கவில்லை’ என்று கூறுவதற்குள், அதைத் தவறாகப் புரிந்து கொண்டாள் இந்து.
மாமா குழந்தையைத் தூக்குவது தமக்கைக்கு பிடிக்கவில்லை என்று தோன்ற,
“நீ வேணாம்னு சொல்ல முடியாது அக்கா.. அவர் குழந்தையை பார்க்குறதை.. தடுக்குற உரிமை உனக்குன்னு இல்லை.. யாருக்குமே கிடையாது..!! என்ட் மோர்ஓவர் மாமாவுக்கு உன்மேல எந்த அபிப்பிராயமும் இப்போ கிடையாது.. அதான் நீ சொன்ன மாதிரி டைவர்ஸூக்கு ஓகே சொல்லிட்டாருல்ல? அப்புறம் ஏன் பிகு பண்ற? அவர் குழந்தையை பார்க்க அவருக்கு புல் ரைட்ஸ் இருக்கு..” என்றவள்,
குழந்தையை அலேக்காக தூக்கி ஸ்ரீதரிடம் கொடுத்தாள்.
‘மாமாவுக்கு.. உன் மேல எந்த அபிப்பிராயமும் இல்லை’ என்றதுவே ஐஷூ காதுகளில் திரும்பத் திரும்ப ஒலிக்கலாயிற்று.
அந்த வார்த்தைகளில் அவள் முகம் கல்லாய் சமைந்து விட்டதை யார் கவனிக்கத் தவறினாலும், ராஜேஷ்வரியம்மாள் அதை அவதானிக்கத் தவறவில்லை.

அவனது முரட்டுக் கரங்கள், முதலில் குழந்தையை ஏந்தியது.
அவளைப் போலவே ஆனந்தக்கண்ணீருடன், மென்மையாக நெற்றியில் முத்தமிட்டான் ஸ்ரீ.
தந்தையின் மீசை தந்த மென்மையான குறுகுறுப்பில் துயின்றிருந்த குழந்தை புன்னகைத்த வண்ணமே.. கண் திறந்து பார்த்தது.
அந்த நொடிகள்.. குழந்தை கண் திறந்து ஸ்ரீதரைப் பார்த்த அந்நொடிகள்… ஸ்ரீதர் வாழ்நாளில் என்றென்றும் மறக்க முடியாதவை!!
விழித்த குழந்தையை நோக்கி.. அந்த திடகாத்திரமான ஆண்மகன் ஓர் குழந்தையாக மாறி..
தன் குழந்தையைக் கொஞ்சுவதை திருட்டுத் தனமாக இரசித்துக் கொண்டிருந்தது வீண் பிடிவாதம் பிடிக்கும் இன்னோர் குழந்தை.
“என் செல்ல குட்டி.. என் பட்டுக்குட்டி.. அப்பாடா.. அப்பா..” என்று அவன் கொஞ்சுவதைப் பார்த்து.. அங்கிருந்த அனைவருமே நெக்குருகிப் போயினர்.
அழும் தன் கணவனையே, மையல் ததும்பும் விழிகளுடன் பார்த்திருந்தாள் ஐஷூ.
அதன் பின் வந்த ஏழு நாட்கள்.
குழந்தை பால் அருந்தும் நிலவரம், சரியாக அவதானிக்கப்படும் வரை.. ஐஷூ அங்கேயே குழந்தையுடன் தங்க நேரிட்டது.
குழந்தை பிரசவம், மருத்துவமனைக்கும், வீட்டுக்குமென அடிக்கடி அலைய நேர்ந்தது என ஐஷூ தன் அலுவலகத்துக்கு ‘நோ பே’ விடுப்பு எடுத்திருக்க..
ஐஷூ செய்து கொண்டிருந்த வேலைக்கு தற்காலிகமாக இன்னோர் பணியாள் அமர்த்தப்பட்டார்.
அதனால் வேலை பற்றிய சிந்தனை சிறிதும் அற்று.. ஐஷூவால் தன் குழந்தையுடனேயே பொழுதுகளை கழிக்க முடிந்தது.
அவள் ஹாஸ்பிட்டலில் இருந்த ஏழு நாளும், குழந்தையை பார்க்க தவறாமல் வந்து விடுவான் அவளது பேபிக்கண்ணா.
வருபவன் ஒரு நாளும் வெறுங்கையோடு வந்ததில்லை. ஆப்பிள், ஆரஞ்சு, பாலூட்டும் தாய்மார்கள் அருந்தும் பால்மா என எதனையாவது அவன் எடுத்து வருவது வழக்கம்.
ஆனால், எப்போதும் வார்தையாலும், பார்வையாலும் குத்தும் மனைவி..
இப்போது அமைதியாக இருப்பதுவும், அவன் வருகையை நிசப்தமாக ஆமோதிப்பதுவும்,
குழந்தையுடன் அவன் கழிக்கும் நேரத்தை மௌனமாக ரசிப்பதுவும்.. ஸ்ரீதருக்கு உள்ளே இலேசான பனிமழைச் சாரல் சுகத்தைக் கொடுத்தது.
அதேசமயம்… அவளது பேபிக்கண்ணா எப்போதெல்லாம் குழந்தையைப் பார்க்க வருவான் என்று அவளுக்கு கடிகாரத்தைப் பார்க்க வேண்டிய தேவையே அற்று தெரிந்திருந்தது.
அன்றொரு நாள்.. மதிய வேளை பிந்தியும் ஸ்ரீதரின் வருகை தாமதமாகவே.. உள்ளுக்குள் அவனைக் காணாத ஏக்கம் மிகுந்து கொண்டேயிருந்தது.
கொஞ்சம் நேரம் பிந்தி அவன் வந்த போது.. குழந்தைக்கு பால் கொடுத்துக் கொண்டிருந்தாள் ஐஷூ.
சட்டென அறைக்குள் நுழைந்தவன், மனைவி இருக்கும் நிலை கண்டு திக்குமுக்காடிப் போய், தலை சொறிந்து கொண்டே,
தரை பார்த்த வண்ணம், “ஓஹ் ஸாரி.. நான் அப்புறம் வரேன்..”என்றவனாக வெளியே செல்ல ஆயத்தமானவனை இழுத்துப் பிடித்து நிறுத்தியது அவள் குரல்.
அவளுக்கோ கணவன் கரெக்ட் டைமில் வராத ஆத்திரம் மேலோங்க,
“ஏன் இன்னைக்கு வர லேட்டு?..” என்று பழைய ஐஷூவாக உரிமையுடன் சண்டை போட, ஸ்ரீதரின் விழிகள் பளபளக்கலானது.
“இல்லை ஐஷூ.. இன்னைக்கு ஆபிஸில் கொஞ்சம் வர்க்.. அதான் இல்லைன்னா கரெக்ட் டைமுக்கு வந்திருப்பேன்மா..” என்று இவனும் சொல்ல, அவளையும் அறியாமலேயே சட்டென தன் ஆதங்கத்தைக் கொட்டினாள் ஐஷூ.
“உனக்கு உன் கண்ணாவையும், பொண்டாட்டியையும் விட வர்க் முக்கியமா போயிருச்சுல்..?” என்று கூறிக் கொண்டிருந்தவளுக்கு,
தான் அவசரப்பட்டது ஞாபகம் வர, சட்டென நாக்கைக் கடித்து, பேச்சை பாதியிலேயே நிறுத்திவிட்டாள் அவள்.
‘இப்போ நீ என்ன சொன்ன? கம் அகேய்ன்’ என்று ஸ்ரீதர் வற்புறுத்தி தன் மனைவியைக் கேட்கவில்லையாயினும் கூட..
அவன் பார்வையோ ஓயாமல்.. தடுமாறும் மனைவியின் அடர்ந்த நயனங்களேயே, புன்னகையுடன் பார்த்துக் கொண்டேயிருந்தது.
மனைவி தன்னை தேடியிருக்கிறாள் என்பதே பெரும்சுகம் தந்தது அவனுக்கு.
முன்பெல்லாம்.. ஐஷூவால் ஒழுங்கான முடிவை எடுக்க முடியாமல், அவளைக் குழப்பும் முட்டுக்கட்டையாக இருந்தது குழந்தையின் ஆரோக்கியம்!!
தன் குழந்தை நிலைக்கு காரணம் ஸ்ரீதர் என்னும் கோபமே.. அவள் கண்ணை மறைத்திருக்க.. அவனைப் பழிவாங்கத்தான் விவாகரத்து முடிவு எடுத்தாள் ஐஷூ.
அதைத்த தாண்டி அவளால் யோசிக்க முடியாமல் போனது.
குழந்தையின் நிலை படிப்படியாக தேறி வரவும்.. ஐஷூவுக்குள்ளே.. தான் விவாகரத்து முடிவு எடுத்திருக்கவே கூடாதோ என்ற ஓர் எண்ணம் அடிக்கடி தோன்றவாரம்பித்துக் கொண்டேயிருந்தது.
குழந்தை வளரும் நேரம்.. அப்பா என்ற திண்ணமான உறவு..அருகில் இருப்பது குழந்தைக்கு ரொம்பவும் அவசியம் என்றும் எண்ணம் பிறக்கலாயிற்று.
வளர்ச்சிப் பதிவேட்டில் குழந்தையின் நிறையும், ஆரோக்கிய நிலையும் சீரான வளர்ச்சிப் பாதையைக் காட்டவே , வெகு சீக்கிரம் குழந்தையுடன் வீட்டுக்கு செல்லும் படியாயிற்று அவளுக்கு.
அப்போதும் கூட அலுவலகம் விட்டு வரும் போது.. தன் குழந்தையைப் பார்க்க ஐஷூ வீட்டுக்கு வருவதை வழமையாக கொள்ளலானான் அவன்.
மனைவியுடன் சேர முடியாத உடல் தாபம், ஒரு சராசரி மனிதனுக்குள் எழுவது போல.. இவனுக்குள்ளும் எழுந்தாலும் கூட..
குழந்தை முகம் பார்க்கும் சாக்கில் தன் அழகு மனையாளின் முகம் பார்ப்பதே அவனை ஜென்மசாபல்யம் அடையச் செய்ய போதுமானதாகவே இருந்தது.
இப்போதெல்லாம் அவன், அவளைத் தேடி வரும் போது, குழந்தைக்கு தேவையான டயபர்ஸ், ஆடைகள், விளையாட்டுப் பொருட்களுடன், ஐஷூவுக்கு தேவையான பொருட்களையும் கொடுப்பதுண்டு.
அவள் இளைத்துப் போயிருப்பது அவனைக் கவலைக்குள்ளாக்கவே, அன்றொரு நாள், அவன் தந்த பார்ஸலில்,
‘பால்சுறா’ என்னும் ஒருவகை மீன் இருப்பதைக் கண்டாள் ஐஷூ.
“என்ன இது புதுசா.. மீனெல்லாம்?” என்று ஐஷூ சுருங்கிய விழிகளுடன் கேட்க,
இவனோ, “பால்சுறா.. தாய்ப்பால் சுரக்க உதவுமாம்னு அம்மா சொன்னாங்க.. அதான் உனக்காக வாங்கி வந்தேன்.. அப்போ நான் போகணும்.. நாளை வரேன்” என்றவன், அவள் மறுத்து விடுவாளோ என்ற பயத்தில்..
அங்கிருந்து அவசரமாக கிளம்பும் சாக்கில் வந்ததும் உண்டு.
அன்றிருந்து பப்பாளி, பூண்டுக்குழம்பு, நிலப்பூசணி ஜூஸ் என அத்தை செய்தனுப்பியதாக.. பல உணவுகள் அவள் வீட்டைத் தேடி வரலாயிற்று.
முதலில் அவள் மறுப்பதுவும், ‘அத்தை அனுப்பியது’ என்று சொல்லவும் ஏற்பதுவும் வாடிக்கையாயிற்று.
ஆனால் அத்தையை.. இவற்றையெல்லாம் செய்யச் சொல்லி வற்புறுத்துவதே.. அவளது பேபிக்கண்ணா தான் என்பதை அவளறிய வாய்ப்பில்லை தான்.
இது போதாதென்று.. குழந்தை ஆடை, அணிமணிகள் கழுவ, ஐஷூவுக்கு பணி ஒத்தாசை புரியவென்றே.. ஓர் பணியாளையும், மனைவி மறுக்க மறுக்க வேலைக்கு வைத்து விட்டே தான் ஓய்ந்தான் ஸ்ரீதர்.
ஆக மொத்தத்தில் ஸ்ரீதர், தன் மனைவி, மகன் அருகில் தான் இருக்கவில்லை. இருப்பினும் நல்ல கணவனாகவும், தந்தையாகவுமே நடந்து கொண்டான்.
அப்போதாவது.. அவள் மனமிறங்கி வர மாட்டாளா? என்ற நப்பாசை அவனுள் எழாமலில்லை.
அதேசமயம்.. பகலில் இத்தனை சேவகம் புரியும்.. கணவன் இரவில் தங்கையுடன் கடலை போடுவது தான் அவள் மண்டையை குடைந்து கொண்டே இருந்தது.
அந்த குடைச்சலும் ஒரு நாள் பூதாகரமாக வெடித்து ஒரு முடிவுக்கு வரத்தான் செய்தது.
*******
அன்றொரு நாள்..
காலேஜ் விட்டு வெகு நேரம் பிந்தியும், இன்னும் வீடு வந்து சேராத தங்கைக்காக காத்திருக்கலானாள் ஐஷூ.
தந்தை வேறு.. வேலை விஷயமாக.. வடக்கே யாழ்ப்பாணம் வரை சென்றிருக்க, கொஞ்சம் மனநிலை பிறழ்வான சித்தியையும், இளம் பெண்ணான தங்கையையும், கூடவே தன் குழந்தையையும் கவனித்துக் கொள்ளும் பொறுப்பு ஐஷூவுடையதானது.
ஆனால் அவளது மகன் வந்த பின்பு.. சித்தியின் நிலையில் அநேகமான மாற்றங்கள் தென்படுவதை.. அவளும் கண்கூடாகவே பார்த்திருந்தாள்.
தன் பேரக்குழந்தைக்கு.. தலை சீவுவது முதற்கொண்டு.. நகம் வெட்டி விடுவது வரை ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து செய்யும் அவள் சித்திக்கு..
குழந்தை செல்வம்.. பிற செல்வம் அவள் கையை விட்டுப் போன அதிர்ச்சியைக் கொஞ்சம் கொஞ்சமாக மறக்கடிக்கச் செய்து கொண்டிருந்தது.
குழந்தையைப் பற்றியே யோசிப்பவருக்கு.. அலாதியாக கவலைப்பட வேறு விஷயங்கள் இல்லாது போக.. கொஞ்சம் கொஞ்சமாக பழைய கலகல சித்தியாக உருமாறிக் கொண்டிருந்தார் அவரும்.
சித்தி குழந்தையுடன் உள் அறையில் இருக்கவே.. குழந்தை பற்றிய கவலையின்றி.. தங்கை பற்றிய கவலையுடன் ஹாலில் நடைபயின்று கொண்டிருந்தாள் ஐஷூ.
சரி.. இறுதியில் விக்னேஷூக்கு தொடர்பு கொண்டு, இந்துவைப் பற்றி கொஞ்சம் விசாரிக்க சொல்வோம் என்ற எண்ணம் தோன்ற.. விக்னேஷூக்கு அழைப்பெடுக்க போனவளைத் தடுத்து நிறுத்தியது,
வீட்டு முற்றத்தில் கேட்ட கார் சத்தம்.
மெல்ல எட்டிப் பார்த்தவள் அங்கே கணவனே இந்துவை அழைத்து வந்திருப்பதைக் கண்டு.. ஆசுவாசப் பெருமூச்சு விட்டாலும் கூட.. அடுத்து அவள் கண்ட காட்சியில் சர்வமும் உறைந்து போனது அவளுக்கு.
கணவனை, தங்கை சற்றும் எதிர்பாராத விதமாக பாய்ந்து அணைத்துக் கொண்டதைக் கண்டு விதிர் விதிர்த்துப் போனாள் ஐஷூ.
அங்கே இந்துவோ, அவனை நோக்கி, “ அக்கா நம்மளை தான் பார்த்துட்டிருக்கா.. என்னை மன்னிச்சிருங்க மாமா.. உங்களையும், அக்காவையும் சேர்த்து வைக்க எனக்கு வேற வழி தெரியலை..”
என்ற வண்ணம், ஸ்ரீதரே.. எதிர்பார்த்திராத நேரம் கட்டியணைப்பது போல கைகளைக் கொண்டு செல்வதைத் தான் பார்த்தாள் அவள்.
ஆனால் ஸ்ரீதரோ, அந்த அணைப்பை ஏற்க நாடாமல், சின்னவள் கைகளைத் தட்டி விட்டு,
சற்றே கோபத்துடன்,
“.. விடு இந்து.. உன் அக்கா என்னை ஏத்துக்கலைன்னாலும் பரவாயில்லை.. இந்த விபரீத விளையாட்டு வேணாம்.. என்னால ஐஷூ கஷ்டப்பட்டதெல்லாம் போதும்.. என் ஐஷூ கஷ்டப்பட்ற மாதிரி எதுவும் நான் பண்ண மாட்டேன்..” என்றுரைக்க,
இந்துவோ.. அந்த கலியுக ராமனை நேரில் கண்டாற் போன்று.. பரவசமான விழிகளுடன் ஸ்ரீதரைப் பார்க்கலானாள்.
அவர்கள் என்ன பேசிக் கொள்கிறார்கள் என்று புரியா விட்டாலும் கூட,
கணவன் தங்கை அணைப்பை ஏற்காது.. அவள் கையைத் தட்டிவிடுவது புரிய.. தன் கணவன் பற்றிய பெருமிதம் மீதூற.. மெல்ல புன்னகைத்தாள் ஐஷூ.
அவன் வீட்டுக்குள் வராமல் சென்று விட.. தனியே இந்து மட்டும் வீட்டுக்குள் இளித்துக் கொண்டே வந்தவள், தமக்கையைக் கண்டும் காணாதவள் போல அங்கிருந்து நகர,
அவளை மேற்கொண்டு ஓரடி எடுத்து வைக்க விடாமல் தடுத்தது ஐஷூவின் குரல்.
“நில்லு இந்து!!..”- என்ற தமக்கை குரல் கேட்டு தங்கை நின்றாளே ஒழிய திரும்பித் தான் பார்க்கவில்லை.
ஆவேசத்துடன் இந்துவை நோக்கி நகர்ந்து, அவள் கைச்சந்து பற்றி தன்னை நோக்கித் திருப்பி,
“நானும் உன்னைப் பார்த்துட்டு தான் வரேன்.. வர வர உன் நடத்தையே சரியில்லை.. உன் உள்நோக்கம் எனக்கு புரியாமலில்லை.. ஸ்ரீதர்ட்ட இருந்து நீ ஒதுங்கியிருக்குறது தான் உனக்கு நல்லது.. உன் பாட்ச்சா ஸ்ரீதர் கிட்ட பலிக்காது..” என்று எகிற,
இந்துவின் மன வானுக்குள் ஆயிரம் மத்தாப்பு வெடித்த சந்தோஷம்!!
‘வாடி வா.. என்னோட சின்ன மருமகளே.. இதுக்குத் தானே ஆசைப்பட்டேன் நானும்.. நீயும் என்கிட்ட வம்பிழுக்கணும்னு தான்டியம்மா.. இதைப் பண்ணேன்’ என்று உள்ளுக்குள் கேலிப் புன்னகை புரிந்தவள் முகம்,
வெளியே கோபத்தில் சிவந்திருந்தது.
“நான் எதுக்கு அவர்கிட்டயிருந்து ஒதுங்கி நிற்கணும்? நீ தான் அவரை வேணாம்னு சொல்லிட்டேல்ல? அப்புறம் ஏன்.. நீ என்னை கன்ட்ரோல் பண்ற? அவர் கூட உனக்கு வாழ கொடுத்து வைக்கலை.. அதான் நானாவது ட்ரை பண்ணலாமேன்னு பார்க்குறேன்.. கண்டிப்பா அவரை என் பின்னால..” என்று சின்னவளும் ஏதேதோ சொல்லி, பெரியவளை வெறியேற்ற,
ஆத்திரத்தில் விட்டாள் பார் ஐஷூ ஓர் அறை.
அடேங்கப்பா.. இந்துவின் கன்னம் ஜிவ்வுன்னு சிவந்து வீங்கிப் போனது மறு நொடி.
“இந்தூஊஊ!! … படிச்ச பொண்ணு மாதிரியா பேசுற..??” என்று கேட்டவளின் தனங்கள் ஆத்திரத்தில் மேலே கீழே என ஏறி இறங்கிக் கொண்டிருக்க.. ருத்ர காளி போஸில் நின்றிருந்தாள் ஐஷூ.
பெண்களின் குரல் கேட்டு, வெளியே வந்த சித்தி, இந்து அடிவாங்கிய அதிர்ச்சியில், “ஐஷூ..” என்று கத்த, இடையிட்டாள் இந்து.
மாற்றான் தாய் மகளாக இருந்தாலும் கூட.. அவள் அக்கா மேல் வைத்திருந்த அன்பு, பாசத்துக்கு இந்து சொன்ன ஒற்றை வசனம் போதுமானது.
“நீங்க இதில் வராதீங்கமா.. நானும், அக்காவும் பார்த்துக்குறோம்.” என்றாள் இளையவள்.
ஆனால் ஐஷூ கோபம் அப்போதும் மட்டுப்படவேயில்லை.
“இந்தூஊஊ…. திஸ் இஸ் டூ மச்.. அவர் என் புருஷன்!.. நீ தலைகீழ நின்னு தண்ணி குடிச்சாலும் கூட.. என் பேபிக்கண்ணா ஒருநாளும்… உன் வலையில் விழவும் மாட்டாரு.. உன்னை ஏறெடுத்தும் பார்க்கவும் மாட்டாரு.. ஏன்னா அவர் ராமன்டீ!!.. என்னை மட்டும் நினைச்சுக்கிட்டே.. கடைசி வரை காலம் கடத்துவாரே ஒழிய.. உன்னை திரும்பியும் பார்க்க மாட்டாரு..!!” என்று ஐஷூ உரைத்த அனைத்தும் சத்திய வசனங்கள்.
காலம் முழுக்க தனிமையில் உழன்றாலும்.. இன்னோர் பெண்ணை ஸ்ரீதர் நாடப் போவதுமில்லை. நாடவும் மாட்டான் தான்.
உள்ளே குளிர்ந்தாலும் கூட.. இம்மியளவும் வெளியே காட்டாத இந்துவோ,
“மாமா மேல.. இவ்வளவு காதல் இருக்குறவ.. எதுக்கு டைவர்ஸ் அப்ளை பண்ணனும்?.. போய் அவர் கூடவே குடும்பம் நடத்த வேண்டியது தானே?
இவங்களும் போய் சேர மாட்டாங்களாம்.. அவராகவே வந்தாலும் சேர்த்துக்க மாட்டாங்களாம்.. நான் ட்ரை பண்ணாலும் விட மாட்டாங்களாம்.. நான் ஒண்ணும் நீயும், மாமாவும் சேர்ந்திருக்கும் போது இப்படி நடந்துக்கலையே?.. அவருக்கும் உன் மேல இப்போ எந்த லவ் பீலிங்க்ஸூம் இல்லை.. தன் குழந்தைக்கு நீ ஒரு தாயா அவசியம்ன்றதால தான் இத்தனையும் பண்றாரு.. குழந்தைக்காவே தவிர உனக்காக இல்லை.. இல்லைன்னா டைவர்ஸ் தர மாட்டேன் சொன்னவரு.. இப்போ ஓகே சொன்னதுக்கு என்ன அர்த்தம்?” என்று கேட்டாள் இந்து.
அடுத்த நொடி சற்றும் எதிர்பாராத விதமாக சீறிப்பாய்ந்து வந்தது ஐஷூவின் உச்சகட்ட கோபமான குரல்!!
“ நான் எடுத்த கேனத்தனமான முடிவுக்கு.. என் உணர்வுக்கு மதிப்புக் கொடுக்குறார்னு அர்த்தம்!!! .. அவருக்கு என் மேல எந்த லவ் ஃபீலிங்கும் இல்லையா? இந்த ஜென்மத்தில் நான் அவர் கூட வாழ்றேனோ இல்லையோ? அவர் மனசுல என் ஒருத்திக்கு மட்டும் தான் இடம்!!. அதை நினைப்புல வைச்சுக்கோ இந்து!!.. இப்போ நான் போனால் கூட.. ஒரு வார்த்தை, ‘ஏன் வந்த?’ ன்னு கேட்காமல் என்னை ஏத்துக்கவும் அவர் தயார் தான்.. ஆனால் எனக்கு தான்..” என்று ஆவேசமாக பேசிக் கொண்டே வந்தவள், இறுதியில் தேய்ந்து போன குரலில் நிறுத்தி இழுக்க,
அந்த இடைவெளியைக் கப்பெனப் பிடித்துக் கொண்டாள் இளையவள் இந்து.
“ஆனால் உனக்கு தான்.. சொல்லு??? .. உனக்கு தான் அப்புறம் என்ன? நான் சொல்லட்டா??
ஈகோ, திமிர்!! இவன் என் பின்னாடி தானே வரான்… யாரையும் தேடி போக மாட்டான்னு ஆணவம்!!
இவ்வளவு நடந்தும் அதைப் பத்தி கொஞ்சம் கூட அலட்டிக்காமல்… உன் குழந்தைக்கு பண்றேன்ற பேரில் உன்னைப் பார்த்துக்குறார்ல.. அதனால ஒரு கர்வம்!!..
தன் விபரீத முடிவால் தன்னையே அழிச்சிக்குற வீண் பிடிவாதம்!!..
நானாகவே அவர் கிட்ட போறதான்னு வரட்டு கௌரவம்!!.. உனக்கே நல்லா தெரியும்.. மாமா மிஸ்அன்டர்ஸ்டேன்டிங்னால தான்.. உன்னை சந்தேகப்பட்டாரு..
இப்போ நீ இன்னொருத்தன் கூட ஓரே பெட்ல இருந்தாலும் கூட ஸ்ரீதர் சந்தேகப்படவே மாட்டாருன்ற அளவுக்கு.. உன்னை அவர் நேசிக்குறாருன்னும் உனக்கே தெரியும்.. அவர் தப்பை உணர்ந்துட்டாரும்னு உனக்கே தெரியும்..
ஆனால் டைவர்ஸூக்கு அப்ளை பண்ணிட்டு.. இப்போ கேன்சல் பண்ணா.. சுத்தியிருக்குறவங்க இந்த சமூகம் என்னை என்ன நினைப்பாங்கன்னு பயம்!! நீ ஸோசைட்டி க்ரிட்டிசைஸ் பண்ணுமேன்னு பயப்பட்ற?.. ஆனால் நீ அவரை விட்டு பிரிஞ்சா மட்டும் இந்த சமூகம் ஒண்ணும் சொல்லாதோ? பூன்னா.. செடியில் இருக்குறது தான் அழகு.. அதே மாதிரி பொண்ணு.. புருஷனோட இருக்குறது தான் அழகு.. அதுக்கு பயந்துட்டு உன் வாழ்க்கையை நீயே அழிச்சுக்காதே..!!” என்று இந்து, தமக்கையின் பொட்டில் அறைந்தது போல..
அனைத்தையும் ஒன்று விடாமல் எடுத்துக் கூற.. கோபம் எல்லாம் இருந்த இடம் தெரியாமல் போக.. அப்படியே ஆஃப் ஆகிப் போனாள் ஐஷூ.
என்ன தான் வெளியே விறைப்பாக திரிந்தாலும்.. இந்து முன்வைத்த குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் ஒருவகையில் உண்மையே!!
இந்துவின் ஒவ்வொரு சொற்களும்.. பெரியவளுக்கு நிதர்சனத்தைப் புரிய வைக்க, அமைதியாகத் தலை குனித்து கொண்டாள் ஐஷூ.
தமக்கை கண் கலங்கியவளாக, தலை குனித்தது பொறுக்க மாட்டாது, இந்துவும்.. தன் இரகசியம் அனைத்தையும் ஒப்பேற்ற நாடினாள் போலும்.
தமக்கை கையைப் பிடித்துக் கொண்டு, சற்றே இளகிய குரலில்,
“மாமாவுக்கு என் மேல எந்த இன்டென்ஷனும் கிடயாது.. அதே மாதிரி தான் எனக்கும்.. நான் நைய்ட் புல்லா விடிய விடிய பேசியது.. சேட் பண்ணது எல்லாம் ஸ்ரீதர் மாமா கூட இல்லை.. விக்கி மாமா கூட..”என்று உண்மையை போட்டு உடைத்தாள் இந்து.
“என்ன சொல்ற இந்து..?”- பட்டென்று தன் தலையை உயர்த்திக் கேட்டாள் மற்றவள்
“ஆமா நானும், விக்கியும் ஒருத்தரையொருத்தர் காதலிக்குறோம்.. மாமா மேல நீ வைச்சிருக்குற ஆழமான காதலை உணர்த்த நாங்க போட்ட ட்ராமா தான் இது.. இது உன் புருஷனுக்கு கூட தெரியாது..இப்போ கூட.. ‘என்னை மன்னிச்சிருங்க மாமா.. உங்களையும், அக்காவையும் சேர்த்து வைக்க எனக்கு வேற வழி தெரியலை..’ ன்னு ஹக் பண்ண ட்ரை பண்ணப்போ.. என்ன சொன்னாரு தெரியுமா அந்த மனுஷன்..??
‘விடு இந்து.. உன் அக்கா என்னை ஏத்துக்கலைன்னாலும் பரவாயில்லை.. இந்த விபரீத விளையாட்டு வேணாம்.. என்னால ஐஷூ கஷ்டப்பட்டதெல்லாம் போதும்.. என் ஐஷூ கஷ்டப்பட்ற மாதிரி எதுவும் நான் பண்ண மாட்டேன்’..னு சொன்னாரு..
இப்படியாப்பட்டவரையா நீ ஒதுக்குற? விபரீத முடிவு எடுக்காதேக்கா.. குழந்தையை எதிர்காலத்தைப் பத்தி யோசிச்சாவது நல்ல முடிவா எடு.. உன் நொடி நேர வைராக்கியத்தால் உன் மேல உயிரையே வைச்சிருக்குற புருஷனையும், நல்ல அழகான வாழ்க்கையும் இழந்துடாத.. என்னடா நமக்கு சின்னவள்லாம் நமக்கு அட்வைஸ் பண்றதா நினைச்சுடாதேக்கா.. உன் நல்லதுக்கு தான் சொல்றேன்..
ஒருவேளை மாமாவை விட்டு பிரிந்து உன்னால இருக்க முடியுமா சொல்லு??… மாமா சாயல்ல இருக்குற உன் குழந்தையே.. அவரை ஞாபகப்படுத்தும்.. தப்பான முடிவு எடுத்துட்டோமேன்னு… வாழ்க்கை பூரா நீ தான் கண்ணீர் வடிச்சுட்டு நிற்கப் போற..? இனி எல்லாமே உன் கையில் தான் இருக்கு” என்று விட்டு,
இந்து அங்கிருந்து நகர்ந்து விட, பெரியவளின் காதுக்குள் வந்து ஒலித்தது ஸ்ரீதரின் வசனங்கள்!!
மனைவி கஷ்டப்படும் வண்ணம் எதையும் செய்யமாட்டேன் என்று சொல்லும் கணவன் யாருக்குத் தான் கிடைக்கக் கூடும்??
இதோ இவளுக்கு கிடைத்திருக்கிறதே?? ‘சரியான அதிர்ஷ்டக்கட்ட’ என்று திட்டும் வார்த்தை.. ஐஷூவுக்கு சாலப்பொருந்தும்.
அந்த “நொடி நேர வைராக்கியம்”!!..
அந்த நொடி நேர வைராக்கியத்தை, பல மனங்கள் சற்றே தளர்த்தியிருந்தால்.. இன்றும் எத்தனையோ உறவுகள் நிலைத்திருக்கும்!!
அந்த உறவுகள், அவ்வுறவின் அடி முதல் ஆழம் வரை சென்று, அத்தனையும் சுகித்திருக்கும்!!
இன்பமோ, துன்பமோ வாழ்வின் அத்தனை பக்கங்களையும்,அவை இணைந்தே கடந்திருக்கும்!!
பல அழகான இன்ப தருணங்களை அவ்வுறவுகள் அனுபவித்திருக்கும்!!
காலம் கடந்த பின், வாலிபம் மாறி முதுமை தட்டியதும், அந்த இன்ப தருணங்களை… இனிய நினைவுகளாக எத்தனையோ இதயங்களும் அசை மீட்டியிருக்கும்!!
இத்தனையும் வேண்டுமானால்.. உங்களில் எழும் நொடி நேர வைராக்கியத்தைத் தளர்த்தித் தான் பாருங்களேன்!!
ஐஷூ.. தன்னுள் எழும் நொடி நேர வைராக்கியத்தை தளர்த்துவாளா?

அலை ஒதுக்கும்,
கிளிஞ்சலாய் நானும்,
கரை ஒதுங்கிக்
கிடக்கிறேன்..

கிளிஞ்சல் பொறுக்கும்
குழந்தையாய் நீயும்,
எனை அள்ளி
நெஞ்சோடு
அணைத்துக் கொண்டால்..

சத்தியமாய்..
இது போதும் எனக்கு!!

{26}
அன்றைய உச்சி வெயில் தகித்துக் கொண்டிருந்த நண்பகல் நேரம்!!
“ஐஷ்ஷூஊஊ!!! ” என்று கத்திக் கொண்டே , தன் மஞ்சத்திலிருந்து எழுந்தமர்ந்தான் ஸ்ரீதர்.
அவன் அணிந்திருந்த டீஷேர்ட்டில் ஆங்காங்கே திட்டுத் திட்டாக ஈரம் கட்டியிருந்தது வியர்வை முத்துக்கள்!!
அவன் அதரங்களோ.. அகலத் திறந்து “ஆஹ்!!.. ஆஹ்!!..”என்று உருண்டு திரண்ட பல மூச்சுக்களை எடுத்து விட்டுக் கொண்டிருந்தது.
ஏற்கனவே, நல்ல காய்ச்சல் வேறு. லீவு எடுத்து விட்டு, படுக்கையில் புரண்டவனுக்கு கோரக்கனவு.
உடலின் உஷ்ணத் தகிப்புடன், மனதின் உஷ்ணத் தகிப்பும் சேர்ந்து அவனை வாட்டவே, உடலெல்லாம் நடுங்குகிறது அவனுக்கு.
கனவில் கண்ட ஐஷூவின் இரத்தத்தில் தோய்ந்த முகம் கண்டதும் இன்னும் இன்னும் பதற்றமும், பயமும் எழுகிறது.
அதற்குப் பின்னும் மஞ்சத்தில் ஒருக்களித்துப் படுக்க மனமற்று.. தன் அழகு மனையாளின் முகத்தை இப்போதே பார்த்து விட வேண்டும் என்று ஓர் வெறி நாடி, நரம்பெங்கும் பரவி ஓடலாயிற்று ஸ்ரீதருக்கு.
உடை மாற்றக் கூட சிந்தனையற்றவன்.. அப்படியே ஐஷூவைப் பார்க்க கிளம்பலானான் அவன்.
தடதடவென மாடிப்படியிறங்கி திறந்து கொண்டு வெளியேறியவனை வித்தியாசமாகப் பார்த்தனர் ராஜேஷ்வரியம்மாளும், அங்கே மதிய உணவுக்காக வந்திருந்த விக்கியும்.
மகன் அசுர வேகத்தில் கிளம்புவதைக் கண்டு குழம்பிப் போன ராஜேஷ்வரியம்மாளோ, சட்டென ஹாலுக்கு வந்து மகனைத் தடுத்தி நிறுத்தி,
“டேய் ஸ்ரீதரா.. எங்கேடா போற? உடம்புக்கு வேற முடியலை சொன்ன? இப்போ கிளம்பி போயிட்டிருக்க..?” என்று கேட்டார்.
ஏனெனில்.. மகனின் முகத்திலிருந்த உச்சபட்ச பதற்றம்.. நல்லதற்கல்ல என்று ஏனோ சொல்லியது தாய் மனம்.
ஸ்ரீதர் தூக்கத்திலிருந்து விழித்த சிவந்த கண்களுடன் தாயைப் பார்த்தான்.
அவன் குரலில் ஜூரம் காரணமாக, ஓர் நடுக்கம் இழையோடிக் கொண்டிருப்பதை அவதானித்தார் அவர்.
சட்டென தாயின் கைகளை ஆதரவாகப் பற்றிக் கொண்டவனின் உள்ளங்கை சூடு.. ராஜியம்மாளையும் தாக்கியது.
இந்தளவு காய்ச்சலுடனா மகன் கிளம்ப எத்தனிக்கிறான் என்றிருந்தது அவருக்கு.
சற்றே தழுதழுத்த குரலில், “ இ.. இ.. இனிமேலும் என்னால முடியலைமா.. என் ஐஷூ எனக்கு வேணும்!!.. எனக்கு அவளை இழந்துடுவேனோன்னு பயமா இருக்கு!!.. இ.. இ.. இப்போவே போய் அவளைக் கூட்டி வந்துரலாம்னு இருக்கேன்..”என்று பேசியயவன், தாய் பதிலுக்கு எதிர்பார்த்து நிற்காமல் கிளம்ப ஆயத்தமாக,
அவனைத் தனியே கிளம்ப விடாமல்.. இம்முறை தடுத்து நிறுத்தியது விக்கி!!
கிச்சனில் சாப்பிட்டுக் கொண்டிருந்தவன், ஸ்ரீதரின் அவசரம், பதற்றம் எல்லாவற்றையும் அவதானித்துக் கொண்டு தானிருந்தான்.

சாப்பிட்டு, கை கழுவி விட்டு.. பெரிய ஏப்பம் ஒன்றை விட்டுக் கொண்டே… தன் மச்சியை நாடி வந்தவன்,
“டேய் மச்சி.. அதுக்காக.. இந்த நிலைமையிலேவா? இப்போ நீ பேசும் போதே உன் குரல் வேற.. எவ்வளவு நடுங்குது..?? பொறுத்தது தான் பொறுத்த.. இன்னும் இரண்டு நாளைக்குப் பொறு.. உன் உடம்பு சரியானதும் போய் மேள, தாளத்துடனேயே ஐஷூவை அழைச்சிட்டு வந்துரலாம்..” என்று இயம்ப அதை எல்லாம் கேட்கும் மனநிலையில் இவன் இருக்க வேண்டுமே??
சட்டென தன் சித்தப்பனின் ஷோல்டரை அவஸ்தையுடன் பற்றிக் கொண்டான் ஸ்ரீதர்.
“டேய் புரியாம பேசாதேடா.. என் ஐஷூ என்கிட்ட இருந்தால் தான். சேஃப்பா.. இருப்பா!! .. எனக்கென்னமோ அவளை இப்போவே பார்த்தே ஆகணும்னு தோணுதுடா..”என்று கலங்கிப் போன ஹஸ்கி குரலில் உரைத்தவனின் கண்களில் கொட்டிக் கிடந்தது ஐஷூவை இழந்து விடுவோமோ என்னும் ஒருவிதமான தவிப்பு!!
தன் மனையாளின் மதி முகம்..அவள் முகமொன்று மாத்திரமே இந்த வலிய ஆண்மகனை கொல்ல.. யார் விடைகொடுத்தலுக்கும் காத்திருக்காமல் விரைந்தான்.
செல்லும் தன் மச்சியின் புறமுதுகைப் பார்த்த வண்ணமே, சற்றே இரைந்த குரலில்,
“மச்சீஈஈ…. இப்போ அவள், அப்பா வீட்டில் இருக்க மாட்டாள். குழந்தையோட க்ளினிக் போயிருப்பா மச்சி.. அதாவது தெரியுமாஆ..?” என்று கேட்க,
ஸ்ரீதரின் வேக நடை ஒரு நிமிஷம் தடைப்பட்டு நின்றது.
“ஓ..இன்னைக்கு பேபியுடைய க்ளினிக் நாள்ல?.. இதை எப்படி மறந்தேன்”என்று தனக்கு மட்டுமே கேட்கக் கூடிய மென்குரலில் புலம்பியவன், மீண்டும் தன் வேகநடையைத் தொடர்ந்தான்.

அப்படியே செல்பவனைப் பார்க்கும் போதே மனதுக்குள் கழிவிரக்கம் பிறந்தது சித்தப்பனுக்கு.
பின்னே அவன் காய்ச்சலின் உஷ்ணம்.. பேசிக் கொண்டிருக்கும் போது தான்.. விக்கியையும் தாக்குகிறதே?
எனவே ஸ்ரீதரை தனியே அனுப்ப மனமற்று.. அவன் பின்னாலேயே ஓடிய விக்கி,
ஒருவாறாக ஸ்ரீதரை அடைந்ததும் ஓட்டத்தை நிறுத்தி.. ஸ்ரீதரின் வேகநடைக்கு ஏற்றவாறு, தானும் வேகவேகமாக எட்டுக்கள் வைத்து நடந்த வண்ணம்,
“இந்த நிலைமையில் வண்டி ஓட்டமுடியுமா மச்சி?..” என்று கேட்டான்.
தன் காரை அடைந்ததும் தான் ஸ்ரீதரின் நடை நின்றது. கார்க்கதவில் கைவைத்த வண்ணமே திரும்பி, சித்தப்பனைப் பார்த்தவனின் கண்களில் தீவிரம் மிளிர்ந்து கொண்டிருந்தது.
“என்னால முடியும்..”- உறுதியாகவே சொன்னான் ஸ்ரீதர்.
ஸ்ரீதரின் கையை கதவில் இருந்து தட்டி விட்டு.. தன் கையை வைத்தவன், “ம்.. கிழிப்ப!!.. ஐஷூ சேப்டியை விட உன் சேப்டியும் முக்கியம் மிஸ்டர். பேபிக்கண்ணா..! இந்த நிலைமையில் நீ வண்டியோட்டினேன்னா.. அம்புட்டு தான்..! தள்ளு.. நான் டிரைவ் பண்றேன்..” என்று வலுக்கட்டாயமாக ஏறிக் கொண்டான் சித்தப்பா.
********
அங்கே மருத்துவமனையில்…
தன் கணவன்.. அவன் உள்ளத்தைப் பாதிக்கும் அளவுக்கு கோரக்கனவு கண்டு, பயந்து அலறிக் கொண்டு தன்னைத் தேடி வருவது அறிய மாட்டாமல்,
இன்று க்ளினிக்கிற்கு தன்னை நாடி வரும் கணவனுடன்.. வீடு செல்வது குறித்த கனவுகளில் மிதந்திருந்தாள் இந்தப் பிரபஞ்சம் இனம் காணாப் பேரழகி!!
குழந்தையின் நிறை, வளர்ச்சி எல்லாம் பர்பெக்ட் என டாக்டர் வேறு சொல்லி விடவே, ஐஷூவுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி.
கொழுக், மொழுக் என்று.. இன்குபேட்டரில் இருந்த குழந்தையா இது? என்று பிறர் ஆச்சரியத்துடன் கேள்வி எழுப்பும் அளவுக்கு.. ஆரோக்கியமாக அழகாகவே இருந்தது ஐஷூவின் லிட்டில் பேபிக்கண்ணா.
வாஷ்ரூமில் இருக்கும் வாஷ்பேஸினில் கைகளைக் கழுவிக் கொண்டிருந்தவளின் கண்கள்,
தன் முன்னே.. தன் அழகிய விம்பத்தைக் காட்டிய கண்ணாடியில்..
மந்தகாசப் புன்னகை சிந்தும் அவளது வதனத்தையே தான் பார்த்துக் கொண்டிருந்தது.
தன் முத்து மூரல்களின் அழகு வரிசைச் சிரிப்பையே உலகம் மறந்து பார்த்துக் கொண்டிருந்தவளுக்கு,
கற்பனையாக பிறந்தது தன் துவாரகா மன்னனான பேபிக்கண்ணாவுடன்.. இந்த ருக்மணியும் வீடு செல்லும் நிகழ்ச்சி.
குழந்தையைத் தூக்கிக் கொண்டே நடந்து வரும் மனைவியைப் பார்த்து அவன் கேட்கிறான்.. இலேசான ஏமாற்றம் மீதூறிய கண்களுடன்,
“எப்படியும் நீ என் வண்டியில் வரப்போறதில்லை.. ஆட்டோ பிடிக்கட்டா ஐஷூ..?” என்று.
தன் தலைவனையே காதல் ஊடுருவ பார்க்கும் தலைவி இவள் சொல்கிறாள்,
“ம்ஹூஹூம் தேவையில்லை.. நான் இன்னிக்கு அப்பா வீட்டுக்கு போகலை..” என்று.
அதைக் கேட்டதும், இதயத்தில் குழப்பம் சூழ்ந்து கொள்ள, இடுங்கிய விழிகளுடன் அவன் கேட்கிறான்,
“ஏன்?.. யாராவது ஃப்ரண்ட் வீட்டுக்குப் போறியா? வாட்ஸ் ஹர் நேம்?.. காவ்.. காவ்யா!! .. காவ்யா வீட்டுக்கு ஏதாவது போகணுமா..?” என்று.
ஐஸ்வர்யாவின் முகத்தில்… மென்மையான நாணப்புன்னகை படர்கிறது. இந்தப் புன்னகையின் அர்த்தம் புரியாமல்.. அவன் ஒற்றைப் புருவம் மாத்திரம் உயர்த்தி நிற்க,
அவன் காதுகளை அவனே நம்ப முடியாமல் கேட்கிறது.. மனையாளின் குரல்!!
அது தாங்கி வந்த வார்த்தைகள்!!
“ம்ஹூஹூம்… நம்ம வீட்டுக்குப் போகணும்!!..”-முதலில் மறுப்பாகத் தலையாட்டி.. இறுதியில் நாசூக்காக விஷயத்தை சொன்னாள் ஐஷூ.
அதைக்கேட்டதும்.. ஸ்ரீதரின் விழிகள் அகல விரிந்தது. கைகளோ.. பரவசத்துடன்.. அவனது அடங்காத மயிக்காட்டுக்குள் புகுந்து.. கோதிக் கொண்டன.
முத்து மூரல்கள் அதிமித சந்தோஷத்தில் பளீரிட்டு மிளிர்ந்தது.
“வாட் டிட் யூ சே??..ந.. நம்.. நம்ம.. நம்ம வீடு..?”- அவள் வார்த்தைகள் சரியாகத் தான் விழுந்ததா என்று மறுபடியும் கேட்கிறான் அவன்.
“ம்.. ஆமா நம்ம வீட்டுக்குப் போகணும்!!..” என்று இம்முறை நிஜமாகவே.. மருத்துவமனை வாஷ்ரூமில் இருந்த வண்ணம், மென்மையாக முணுமுணுத்தவாறு புன்னகைத்தவளை வித்தியாசமாகப் பார்க்கலானாள் வாஷ்ரூமிற்குள் நுழைந்த மற்றுமொரு பெண்ணொருத்தி.
தனியே சிரிப்பவளை.. அவள் உள்மனம் அறியாத பிறர் பார்த்தால் என்ன தான் நினைக்கவும் கூடும்??
காதலின் உச்சத்தில்.. புத்தி பேதலித்துப் போன பெண்ணவளின் முகத்தில் இலேசாக அசடுவழிதல் புன்னகை பூக்க,
அந்த தானியங்கிக் கதவுக்கு கொஞ்சம் அழுத்தம் கொடுத்து திறந்து கொண்டே தான் வெளியே வந்தாள் அவள்.
வெளியே வந்தவளின் பார்வை.. ஸ்நேகபாவத்துடன் ஓரிடத்தில் நிலைத்து நின்றது.
அவள் பார்வை நிலைத்த இடத்தில், அவள் எதிர்பார்த்திருந்த நபர் இல்லாதிருக்கவும் கண்களும், மனமும் ஒருங்கே அதிரவும் செய்தது.
நெஞ்சிலே ஓர் பூகம்பம் வந்து குடி கொள்ள.. அரண்ட விழிகள், அவ்விடத்தை சுற்றி வரவும் தேடின.
ம்ஹூஹூம், அவள் பார்வை வட்டாரத்துக்குள் அவள் தேடிய ஆள் இல்லவே இல்லை!!
உடலில் ஓர் பதற்றம் குடிகொள்ள.. கண்களில் சட்டென நீர் கோர்க்கத் தொடங்க,
மங்கையவளின் இதழ்கள், “எ.. என் குழந்.. த…?”என்று மெல்ல முணுமுணுக்கலாயிற்று.
வாஷ்ரூமிலிருந்து வெளிவந்தவள் காட்டி பதற்றத்தையும், பரிதவிப்பையும் அங்கிருந்தவர்களின் வெகுசிலர் கண்கள் தவிர, வேறு யாருமே அவதானிப்பதாயில்லை.
மருத்துவமனை என்றாலே பதற்றமும், பரிதவிப்பும், அவஸ்த்தையும் நிறைந்த இடம் தானே?
அதனாலேயே என்னவோ ஐஷூவின் துடிப்பை எந்த மனிதஜந்துவும் புதிதாக அடையாளங்கண்டு கொள்ளவேயில்லையோ?
அவளுக்கோ தலை எது? வால் எது? என்று புரியாத ஓர் குழப்பம் நாடி, நரம்பெங்கும் பரவ, தன் மழலைச் செல்வத்தைத் தேடி.. ஹாஸ்பிடல் காரிடோர், அறைகள் என எல்லாவிடமும் வலம் வர ஆயத்தமானாள்.
அங்கே ஹாஸ்பிடல் தூணின் ஓரம் நின்றிருந்த ஓர் நடுத்தர வயது பெண்மணியிடம் விரைந்தவள்,
இருந்த பதற்றகரமான சூழ்நிலையில் அந்த பெண்மணி அனுமதியின்றியே.. அவள் கையைப் பிடித்துக் கொண்டாள் ஐஷூ.
தன் குழந்தையையும், குழந்தையை ஏந்தியிருந்த நபரையும் காணவில்லை என்றதும் சரம் சரமாக கொங்கை வரை கோர்க்கத் தொடங்கியது கண்ணீர்!!!
பேசும் போது குரலும் நடுங்குகிறது ;கூடவே அம்மாதுவின் உடலும் நடுங்குகிறது.
“இங்.. இங்கே தான் பச்சை சுடி போட்டுட்டு.. கொஞ்சம் ஃபேட் லேடி.. க்.. க்குக்.. கு.. குழந்தையுடன் நின்னுட்டிருந்தாங்க.. ஒரு.. ஒரு லேடி.. லேடியைப் பாப்.. பா… ப்பார்த்தீங்களா? இ.. இங்கே தான் நின்னுட்டிருந்தாங்க..!!” என்று கேட்கிறாள் அவள்.
“இல்லையேம்மா..?”- சட்டென கையை விரித்தார் அந்தப் பெண்மணி.
‘தனக்கு தனக்கு என்றால் தான்.. படக்கு படக்குன்னுமாம்’என்பது போல அந்த பெண்மணிக்கு இவள் அவஸ்தையும், கவலையும் புரிந்திருக்க வாய்ப்பேயில்லை தான்!!
அப்போதும் விட்டாளா அவள்??
அவள் கண்பார்வையை விட்டும் அகன்றது அவள் ஈன்றெடுத்த குழந்தையாயிற்றே??
அவளாலும் தான் எப்படி விட முடியும்??
“நல்.. நல்லா யோசிச்சுப் பாருங்க சிஸ்டர்.. இ.. இங்கே தான்.. நின்னுட்டிருந்தாங்!!! .. அவங்க கிட்ட தான் குழந்தையை கொடுத்துட்டு… வாஷ்ரூம் போலாம்னு போனேன்.. போய்ட்டு வந்தால் குழந்தையையும், அவங்களையும் காணோம்.. நீ.. நீங்க அவங்களைப் பார்த்தீங்களா?” என்று கேட்க,
அவள் அழுகையும், கண்ணீரும், தழுதழுத்த குரலும் ஏதோ செய்திருக்க வேண்டும் அந்தப் பெண்மணியையும்!!
உதவ முன்வராவிட்டாலும் கூட.. தன் பங்குக்கு நன்றாகவே அறிவுரை பகர மட்டும் முன்வந்தார் அவர்.
“என்னம்மா நீ?? .. பச்சைக்குழந்தையை முன்னே பின்னே யாருன்னே தெரியாத ஒருத்திக்கிட்ட கொடுத்துட்டு.. இவ்வளவு கேர்லெஸ்ஸா இருந்திருக்க? காலம் கெட்டுப்போய் கிடக்கு.. ஒருவேளை அந்த லேடி பிள்ளை கடத்துறவங்களா இருந்தால்..??” என்ற வசனம் கேட்டு,
திடும்மென கலங்கியது பெற்றவள் உள்ளம்!!
“இ.. இல்லை.. பார்க்க நல்லவங்களா தான் இருந்தாங்க..” என்று உரைத்தவளுக்கு,
அப்போது தான் அந்தப் பெண்மணி நிஜமாகவே, ‘பிள்ளைக் கடத்துபவளாக இருப்பாளோ?’ என்ற சந்தேகமே பிறந்தது ஐஷூவுக்கு.
‘கடவுளே.. என் குழந்தைக்கு ஏதும் ஆகியிருக்கக்கூடாது..’என்று மனதுக்குள் மானசீகமாக பிரார்த்தித்தவளின் துணுக்கம் மட்டும் இறுதி வரை ஓயவேயில்லை.
அவள் தன் குழந்தையையும், அந்த லேடியையும் பற்றி அங்க அடையாளங்கள் எல்லாம் சொல்லி விசாரித்த வரையில்,
அவளது தவறை, முன்னே பின்னே தெரியாத பெண்மணியிடம் சிசுவைக் கொடுத்த தவறைத் திட்டவே விளைந்தார்களே.. ஒழிய யாரும் உதவிக்குத் தான் வரவில்லை.
அவள் யாருடையை துணையையும் எதிர்பாராமல் அவளுடைய இயற்கை அவஸ்த்தையுடன் நின்றிருந்த போது…
அவள் அவஸ்தையை உணர்ந்து, பக்கத்தில் நின்றிருந்த அந்த பெண்மணியாகவே தானே உதவ முன் வந்தாள்?
“குழந்தையை என்கிட்ட கொடுமா? நீ ரொம்ப நேரமா கஷ்டப்படுறது புரியுது..நீ வாஷ்ரூம் போயிட்டு வா.. அதுவரை குழந்தையை நான் வைச்சுக்குறேன்..” என்று இன்முகத்துடன் அந்தப் பெண்மணியாகவே நேசபாவத்துடன் உணர்ந்து சொல்ல,
இவளுக்கும் தான்.. அந்த பெண்மணி அப்படிப்பட்டவள் என்று எப்படி தோன்றும்??.
கண்ணில் கோர்த்த நீர், அவள் மார்புக்கச்சை வரை நனைந்து செல்கிறது.
சரியாக விம்பம் வேறு தெரியாத நிலையில் உலகமே இருண்டு போனது போல குழந்தையை இழந்த மன வேதனை வேறு அவளை வாட்டுகிறது.
ஹாஸ்பிடல் முகாமையாளர்களிடம் சொல்லி, சிசிடிவி கேமராவிலாவது குழந்தை பற்றிய ஏதாவது சுவடு கிடைக்கிறதா?? என்று பார்க்கச் சொல்லி எண்ணம் தோன்ற,
ஹாஸ்பிட்டலின் கட்டுப்பாட்டறையை நோக்கி, கால்கள் துவளத் துவள நடந்து கொண்டே நடந்த போது..
அவள் மனம் ஓர் மூலையில் தன்னை இந்த இக்கட்டிலிருந்து காக்கும் ஆபத்பாந்தவனாக, அவள் துக்கத்தை, பரிதவிப்பை எல்லாம் அப்படியே அறிந்து அவளைத் தேற்றும் ஆதிமூலனாக..
தன் கணவனின் ஞாபகம் வந்தது அவளுக்கு.
அழுகையில் இதழ்கள் கோணலாக வளைகிறது அவளுக்கு.
அந்தக் காரிடோரில் செல்லும் மாந்தர்கள் ஒரு முறைத் திரும்பி அவளைப் பார்த்து ‘இந்தப் பெண்ணுக்கு என்ன உடல்நிலையோ?’ என்று ஓர் இரங்கல் பார்வை அவள் மேல் வீசி விட்டே நகர்கின்றனர்.
ஆனால் கைகள் மட்டும், மீண்டும், மீண்டும்.. மீண்டும் மீண்டும் கணவனின் இலக்கத்தை அழுத்திக் கொண்டே இருந்தது.
‘பேபிக்கண்ணா.. ப்ளீஸ் பிக்அப்.. பிக்அப்.. பிக்அப்… ப்ளீஸ்ஸ்ஸ்…!!’ என்று அவளது அழுகுரல் தானும் கூப்பாடு போடுகிறது.
ஆனால், ஸ்ரீதர் தான் தூக்கவேயில்லை!!
தன் கொண்டவனுக்கு அழைப்பெடுத்து, அழைப்பெடுத்து, பதிலில்லாது சோர்ந்து போய்,
ஹாஸ்பிட்டலின் டைல்ஸ் தரை என்றும் பாராமல், மொத்த ஜீவனும் வடிந்து போய்.. இரண்டாக மடிந்தமர்ந்து ‘ஓ’ வெனக் கண்ணீர் விட்டழுதாள் குழந்தை.
தன்னைப் பார்த்து பால்மணம் மருகும் மிருதுவான இதழ்கள் திறந்து, வெள்ளந்தியாக சிரித்த குழந்தையின் பிஞ்சு முகமே ஞாபகம் வந்து வந்து செல்கிறது அவள் மனக்கண் முன்னாடி.
அவளுடைய செல்லக்கண்ணனின் முகம் பார்த்தால்.. அசுரருக்கும் தான் இரக்கம் மேவுமே?
அந்தப் பெண்ணுக்கும் தான் இரக்கமேயில்லையா?
இல்லை இரக்கத்தை சுரக்கும் ஹோர்மோனைத் தான் கடவுள் இந்த மாதிரி பெண்களுக்கெல்லாம் படைக்கவேயில்லையா??
அந்த நேரம் அவளது செல்லை எதிர்பாராத வகையில் ஆக்கிரமித்தது அன்நோவ்ன் நம்பர்கள்.
திரையையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள் ஐஷூ!!!
அந்த ஒற்றை அழைப்பு.. அவள் வாழ்க்கையையும், உயிரையும் திருப்பிப் போட்டது.
*******
அதே நேரம்.. அதே மருத்துவமனை வளாகத்தின் அருகே.. மேற்கொண்டு முன்னே நகர முடியாமல்.. ரெட் சிக்னல் விழுந்து விட.. ‘தேமே’ என்று நின்றிருந்தது விக்கி ஓட்டி வந்திருந்த ஸ்ரீதரின் கார்.
ஆனால் உள்ளிருந்த ஸ்ரீதருக்கோ.. ஹாஸ்பிட்டல் வளாகத்தை நெருங்க நெருங்க.. உள்ளுக்குள் தன் மனையாளுக்கு ஏதோ என்ற உறுத்தல் அதிகமாகிக் கொண்டேயிருக்க,
வண்டிக்குள் அமர்ந்திருந்தவன் நிலைகொள்ளாமல் தவிக்கலானான்.
“டேய்… சீக்கிரம் போடா..” என்று அவஸ்தையுடன் ஸ்ரீதர் தன் சித்தப்பனைப் பார்த்து ஏவ, சித்தப்பனோ.. எப்படி ரெட் சிக்னல் விழுந்திருக்கும் போது.. செல்வான்??
அதிலும் ட்ராபிக் போலிஸ் வேறு அங்கே நின்றிருக்க.. அவனால் சட்டத்துக்கு புறம்பாக போகத் தான் முடியுமோ?
“இருடா.. இந்த ரெட் சிக்னலையும் தாண்டி.. நான் போனேன்னா.. இதோ முன்னாடி நிற்குறான்ல.. சொட்ட மண்டை போலீஸ்கார்.. அவன் ஃபைன் போட்ருவான்.. சிக்னல் விழுந்ததும் போயிடலாம் மச்சி..” என்று அவசரப்படும் ஸ்ரீதரை, விக்கி தேற்ற, அதை கேட்கும் அளவுக்கு பொறுமை ஸ்ரீதருக்கோ இல்லை.
“இவ்வ்… வன் வ்வேற என் அவசரம் தெர்ர்ரியாமல்..” என்றவனாக.. நெற்றியில் அடித்துக் கொண்டவனுக்கு, மனமெல்லாம் ஏதோ அசம்பாவிதம் நேர்வது போல உள்ளே மணியடித்துக் கொண்டே இருந்தது.
அதற்கு மேலும் ‘க்ரீன் சிக்னல்’ வரும் வரை காத்திருக்க மனமற்று..
பாதியிலேயே.. அந்த ட்ராஃபிக் ஜாமிற்குள்.. இறங்கிக் கொண்டவன்,
எதிரே இருந்த நாற்சந்தியைக் கடந்து.. ஹாஸ்பிட்டல் நுழைவாயிலை நோக்கி ஓடலானான்.
அந்த நேரம் பார்த்து.. ஸ்ரீதர் விட்டுச் சென்ற டேஷ்போர்டில் இருந்த செல் சிணுங்கவே, எடுத்துப் பார்த்த விக்கி,
கார்க்கதவைத் திறந்து இறங்கி, சத்தமான குரலில்,
“டேய் மச்சான்!! உன் ஃபோனை விட்டுட்டுப் போற!!.. டேய்.!! . ரிங்க் ஆகுதுடா..உன் ஃவைப் தான்டாஆஆ!..”என்றதெல்லாம் ஸ்ரீதர் காதில் விழவேயில்லை.
அவனிடம் கால்கள் ஊன்றி நடக்கவும் திராணியில்லை தான். ஆனால் காதல் தந்த வலுவில் கிட்டத்தட்ட அதி வேகமாக விரைந்து வந்து கொண்டிருந்தான் அவன்.
களைப்பைக் கூட பொருட்படுத்தாது, ஓடி வந்தவனது கண்களில் விழுந்தாள் அவள்!!
அவனுக்கு புறமுதுகிட்டு நின்றிருந்த அவனது மனைவி.
அவளை கண்கூடாக கண்டதும் தான் அவனது அதிர்ச்சி, பதற்றம் எல்லாம் மெல்ல மெல்ல ஓய்வுக்கு வந்தது.
இடுப்பில் கை வைத்து பெருமூச்சு எடுத்து விட்டுக் கொண்டே, ‘அவள் நன்றாக இருக்கிறாள்’ என்ற நிம்மதியுடன் அவன் நின்றதெல்லாம் சொற்ப நிமிடங்களுக்குத் தான்
அதற்குள் அவனுள் பயப்பந்துகளை உருளச் செய்தது அவனின் மனையாளின் செய்கை.
தன் பின்னாடி ஒரு கார் வந்து கொண்டிருப்பது கூட தெரியாமல்,
அந்தளவுக்கு யாருடனோ செல்லில் தீவிரமாகப் பேசிக் கொண்டு செல்லும் அவன் மனைவியைக் கண்டதும் பகீர் என்றானது அவனுக்கு.
ஆனால் ஐஷூவுக்கோ செல்லில் உரையாடிக் கொண்டிருந்த அந்த நரகாசுரன் விதித்த கட்டளைகள் ஒவ்வொன்றும் கேட்டு,
ஜீவன் மரத்துப் போயிற்று.
அவளுக்கு குழந்தையை எப்படியாவது மீட்டெடுத்து விட வேண்டும் என்ற சிந்தையே உள்ளுக்குள் ஓடிக் கொண்டிருந்ததே தவிர சுற்றம் மறந்து போனது.
தான் நின்றிருந்த வலது பக்க பாதை வழியாக சென்று கொண்டிருக்கும் வாகனங்களை கூட மறந்து மெல்ல மெல்ல முன்னேறிக் கொண்டிருந்தாள் அவள்.
அவள் பின்னாடி கார் வருவதையும் கவனித்தாளில்லை. கொண்டவன் அவள் பின்னாடி தான் நிற்கிறாள் என்பதையும் அவதானித்தாள் இல்லை.
ஆனால் அதைப் பார்த்துக் கொண்டிருந்த ஸ்ரீதருக்கு, ஏற்கனவே மனைவி விபத்தில் சிக்கியதைப் போன்ற கனவு கண்ட தாக்கம் வேறு.. கூடவே காய்ச்சல் வேறு..
ஒரு நிமிஷம் நின்று துடித்தது ஸ்ரீதரின் மூச்சு!!
எல்லாமும் சேர்ந்து உச்சபட்ச பதற்றத்தைக் கொடுக்கவே மனைவியை நோக்கி விரைந்தான் அவன்.
அங்கிருந்து செல்வதற்கு ஏதாவது ஆட்டோ பிடிக்கவென, செல்லும் ஆட்டோக்களையெல்லாம் அவதானித்துக் கொண்டே, வந்தவளின் இடுப்பை..
எதிர்பாராத விதமாக இரு முரட்டுக் கரங்கள் அவள் வயிற்றோடு அழுந்தப் பற்றி, அலேக்காகத் தழுவி.. அநாயசமாகத் தூக்கி இழுப்பதைக் கண்டாள் அவள்.
பின்னாடி இருந்தவன் இழுத்த இழுப்பில், கையில் இருந்த அவள் செல் நழுவித் தரையில் விழ..அந்தோ பரிதாபம்.. பாவம் அதை கவனிப்பார் தான் யாரும் இருக்கவில்லை.
அந்நேரம் உலகமே நழுவுவதைப் போல ஓர் உணர்வு தோன்றியது அவளுக்கு.
அவளது ப்ளவுஸோடு இலேசாக உரசிச் சென்ற காரும் செல்ல.. தலை சுற்றிப் போய் தான் நிமிர்ந்து தன்னைக் காப்பாற்றிய ஆபத்பாந்தவனைப் பார்த்தாள் ஐஷூ.
அங்கே நின்றிருந்தது அவள் கணவன்!
காணாது கண்ட வான்மழையைக் கண்டு.. தோகை விரிக்கும் ஆண்மயிலாக உள்ளே உள்ளம் பூரிக்க.. கண்கள் கலங்க.. உணர்ச்சிகள் மீதூற..
இதுவரை பற்றிப்படர கொழுகொம்பின்றி தவித்த முல்லைக்கொடி, தன் கணவனைக் கண்டதும் உள்ளுக்குள் ஆசுவாசம் பிறக்க, கட்டியணைக்க பாய்ந்த வேளை தான் அது நடந்தேறியது.
“லூஸ்ஸாஆ…ட்டீஈஈ.. ந்நீ..!! க்கார் வர்றது க்கூட ப்புரியாம.. எவ்வ… ன் கூட.. உனக்கு பேச்சு?? உன்ன்ன்.. ன!!..” என்றவனாக கணவன் அடிப்பதற்காக கைகைளை ஓங்க..
தன் பேபிக்கண்ணாவை அடிக்கத் துடித்த கைகள் அப்படியே ஸ்தம்பித்து நின்றன.
கணவனின் எகிறலில்.. இதயம் தூக்கிவாரிப்போட.. கணவனையே மலங்க மலங்கப் பார்த்தாள் அவள்.
அவள் நினைவுகளில் திடும்மென வந்து போனான்.. அன்று பிள்ளைத்தாச்சியாக இருந்தவளை ஈவிரக்கமின்றி வெளியே தள்ளிய ஸ்ரீதர்!!!
அதே போல.. அவனுக்கும்.. மனைவியின் பார்வையில் திடும்மென வந்து போனது.. அன்று அவன் குரூரமாக நடந்து கொண்ட போது.. தன்னையே அப்பாவியாகப் பார்த்திருந்த ஐஷூ!!!
அந்த பார்வை அவனை கட்டிப் போட.. கைகளை இறக்கியவன், கை முஷ்டியை இறுக்கி நின்று, தன் கோபத்தைக் கட்டுப்படுத்த முயன்று தோற்றான்.
அவளது ஷோல்டரை உரிமையாகப் பற்றி, இலேசாக உலுக்கியவன்,
“இன்னும் கொஞ்சம் நேரத்தில் நான் வந்திருக்கலைன்னா என்ன ஆகியிருக்கும்??.. என்னால நினைச்சுக்கூட பார்க்க முடியலைடீ..!!” என்று தன் ஆதங்கம் அனைத்தையும் வார்த்தைகளால் கொட்டித் தீர்த்துக் கொண்டிருந்தான் அவன்.
அவளுக்கோ… அவன் மீது துளியளவும் கோபம் எழவில்லை. மாறாக, உணர்ச்சி துடைக்கப்பட்ட முகத்துடன் அவனையே பார்த்திருந்தாள் அவள்.
அச்சமயம் பார்த்து.. ஸ்ரீதரின் காரை ஓட்டி வந்திருந்த விக்கியும், அவர்கள் அருகிலேயே காரை நிறுத்தி விட்டு, இறங்கி ஓடி வர,
எதிர்பாராத நேரத்தில், எதிர்பாராத விதமாக ஐஷூ கையைப் பற்றிக் கொண்டான் ஸ்ரீதர்.
“ உனக்கென்னானதோ.. ஏதானதோன்னு நான் தினமும் பதறுறது போதும்.. வ்வா என் கூட..” என்று உறுதியான ஹஸ்கி குரலில் சொன்னவன்,
அவளை இழுத்துக் கொண்டு அங்கிருந்து செல்ல, குழந்தையைப் பற்றி நினைவுகள் ஆக்கிரமிக்க, தன் நிலையை வாய் விட்டு கதறி அழுது சொல்ல முடியாமல் பயந்து போனாள் அவள்.
கொண்டவனோடு வீடு செல்ல துடித்தவளின், கணவன் கண் முன்னே!!
ஆனால் கு.. குழந்தையோ எங்கே??
“ஸ்ரீ.. ஸ்ரீதர்.. நம்ம குழந்தையை விட்டுட்டு நான் வர முடியாது..” என்று.. கணவனின் கையைத் தன்னிலிருந்தும் விடுவிக்க முயன்று கொண்டே அவள் கூற,
அவள் கூறியதை….
‘அவள் தன்னுடன் வர பிரியப்படுகிறாள் இல்லை போலும்’ என்று தவறாக எண்ணிக் கொண்டான் ஸ்ரீதர்.
அப்போதும் கூட அவள் கையை விடாமல், திரும்பி நின்று தன் மனையாளை வெறித்துப் பார்த்தவன்,
கோபம் கனலும் விழிகளுடன், “இனிமேலும் நான் உன்னை விட்டு பிரியுறதா இல்லை..!!!. வா என் கூட”என்று மொழிந்தவன் அவள் கையை விடாது பற்றிக் கொண்டே இழுக்க,
“ஸ்ரீ.. நம்ம குழந்தை..!!” என்று ஈனஸ்வரத்தில் பிதற்றியவளுக்கு, சுட்டது அவன் கை.
தலைவனோ வெளியே உஷ்ணத் தகிப்புடன் நின்றிருந்தான்; தலைவியோ உள்ளே உஷ்ணத்தகிப்புடன் நின்றிருந்தாள்.
இருவர் பார்வையும் ஒன்றையொன்று கட்டித்தழுவி மோதிக் கொண்டன.
‘நான் சொல்லாமலேயே என் நிலையைப் புரிந்து கொள்ளேன்!’ என்ற மன்றாட்டம் அவளது கண்களில் சொட்டிக்கிடந்தது.
அவளது தலைவன் இருந்த சீற்றத்தில் கண்ணை இழந்தான்; சொல்லை இழந்தான்; கூடவே மனைவி கையிலிருக்கும் குழந்தையும் தான் எங்கே? என்று யோசிக்கும் பகுத்தறிவையும் இழந்தான்.
பற்களைக் கடித்துக் கொண்டு, சீற்றம் துளிர்க்கும் குரலில்,
“வ்வ்வண்டியில் ஏறுன்னு சொன்னேன்!!”.. என்றவன்,
அவன் கண்ணிலே பறந்து கொண்டிருந்த தீப்பொறி வேறு.. அவளை நிலைகுலையச் செய்ய..
கணவனை நோக்கி படபடப்புடன், “ஸ்ரீதர் குழந்தை… ?” என்றவளின் இதழ்கள் பாதியிலேயே பணி நிறுத்தம் புரிந்தது.
மேற்கொண்டு சொன்னால் நடக்கும் விபரீதங்கள்??? அந்த நரகாசுரனால் குழந்தைக்கும் தான் ஏதேனும் இடர்களும் நேரிட்டால்??
கணவனை அங்கேயே கழற்றி விட்டு, நரகாசுரனின் கட்டளைகளை மட்டும் செய்ய நாடினாள் அவள்!!
கணவனுடன் விரையாமல், நடையில் தம் கட்டி நின்றவள், அடித் தொண்டையிலிருந்து சீற ஆரம்பித்தாள்!!
“என்னை வ்விடு!! .. என்னைத் த்தொடா… தே!!…” என்றவளின் குரல், ஸ்ரீதரின் காதுகளை நாரசாமாகவே வந்தடைய,
அவளை நோக்கி சட்டென கோபம் கனலும் விழிகளுடன் திரும்பினான் அவன்.
ஆனால் அவன் கோபத்தை மட்டுப்படுத்தும் படி செய்தது.. அவள் கண்களில் அமைதியாக வழிந்து கொண்டிருந்த கண்ணீர்!!
மனைவியின் கண்கள் கலங்கியது கண்டு.. உள்ளே இளகிப் போனான் அவன்.
குரல் தான் எகிறியது. இருப்பினும் அவள் முகமோ.. எந்தவொரு சீற்றத்தையும் காட்டாமல், உணர்ச்சி முற்றிலும் துடைக்கப்பட்டு இருந்தது.
“நான் இருந்தாலும், இறந்தாலும் உனக்கென்ன? அதான் எல்லாமே என் கையை மீறிப் போயிருச்சுல்ல?”என்றவளுக்கு,
கணவனின் கண்களையே ஒருசில கணங்கள் பார்த்துக் கொண்டிருந்ததும் மீண்டும் துளிர்த்தது அழுகை.
எந்த அன்புக் கணவன் தான் பொஞ்சாதி அழுகையைத் தாங்குவான்?
அவனும் தாங்கிலன்;அவன் விரல்கள்.. ஐஷூவின் அழுது அழுது அதைத்துப் போன கன்னத்தைப் பற்றிக் கொண்டன.
எதுவோ ஒன்று சரியில்லை என்று நினைத்துக் கொண்டவன், அவளை நோக்கி,
“இங்கே பாரு.. என்னைப் பாரு.. அழுறதை நிறுத்து.. என்னாச்சு?..என்ன பிரச்சினைன்னு நிதானமா சொல்லு ஐஷூ..” என்று ஆராயும் விழிகளுடன் கேட்க,
தன்னிலிருக்கும் அவன் கையைத் தள்ளி விட்டு மீண்டும் சினந்தாள் அவள்.
“என்ன சொல்லணும்?? என்னைத் தொடாதேன்னு சொன்னேன்ல? என்னை வ்விடு.. வ்விடு..!!.. என் பிரச்சினையே நீ தான்..!! வ்வேணாம் வ்வேணாம்னு வ்விலகிப் போனாலும்.. திரும்பத் திரும்ப வெட்கமேயில்லாமல் பின்னாடி வர்றியே.. அது தான் என் பிரச்சினை!! ப்.. போபோ… யிடு.. இங்கேயிருந்து போயிடு ஸ்ரீதர்!!” என்றவள்,
நடுவீதியென்றும் பாராமல்.. அவன் மார்பில் கைவைத்து தன்னாலியன்ற மட்டும் அவனைத் தள்ள முயன்றாள்.
தேக்கு மரத்தின் உறுதியுடன் நின்றிருந்த அவள் கணவன் இம்மியளவும் நகர்ந்தானா?
இடித்த புளி போல அதே இடத்தில்.. இடுங்கிய பார்வையினுடனே நின்றிருந்தான் அவன்.
அவன் குரல் உறுதியாக வெளியே வந்தது.
“ம்முடியாது!!.. நீ ஏதோ குழப்பத்துல இருக்க.. இப்படியே என்னால உன்னை விட்டுட்டுப் போக முடியாது ஐஷூ..!!”என்று அவன் சொல்ல,
அவளுக்கோ உள்ளே ஹைய்யோடா என்றிருந்தது.
‘நான் சொன்ன டைமுக்கு… நீ மட்டும் தனியா வரலைன்னா.. உன் குழந்தையை என்ன செய்வேன்னு எனக்குத் தெரியாது ஐஷூ!’- காதோரம் ஒலித்தது அந்த ஈனப்பிறவியின் மிரட்டும் குரல்!!
எப்படியோ கணவனைக் கழற்றியும் விட வேண்டும். அவன் சொன்ன டைமுக்கு அங்கே போய் சேரவும் வேண்டும்.
என்ன செய்வது என்று புரியாமல் தத்தளித்தவளுக்கு.. கணவனை சொல்லம்புகள் கொண்டு தாக்கி.. அவ்விடத்தை விட்டும் அப்புறப்படுத்துவதை விட்டு வேறு வழிகள் தெரியவில்லை.
அவன் மனம் நோகவென்றே அருவெறுக்கும் பார்வை பார்த்தவள்,
“உனக்கொரு தடவை சொன்னால் புரியாதா?? நான் என்ன மாதிரியான நிலைமையில் தவிச்சிட்டிருக்கேன்னு புரியலையா?” என்றவளாக ஆழமாக பெருமூச்சு எடுத்து விட்டவள்,
கணவன் மாரில் கைவைத்து கைவைத்து.. திரும்பத் திரும்ப தள்ளிக் கொண்டே போனான்.
“ப்போயிர்ரு!!! இ.. இ.. இங்கேயிருந்து ப்போயிரு பேபிக்கண்ணா!! எனக்கு.. உன்னைப் பார்க்கவே பிடிக்கலை.. எனக்கு நீ வேணாம்..!! நீயில்லாத வாழ்க்கை வேணும்.. ப்ளீஸ் போயிடு..” என்று இறுதியில் கை கூப்பி அழுதவளையே,
கோபமும், கவலையும், விரக்தியும், நோயின் சோர்வும் எதிர்கொள்ள உணர்ச்சிக்கலவையுடன் பார்த்திருந்தான் அவன்.
அவளோ, அவனுக்காக காத்திருக்காமல், வழியில் செல்லும் ஆட்டோவைப் பிடித்து ஏறிக் கொண்டாள்.
செல்லும் மனைவியையே.. தாடையைத் தடவிய வண்ணம், இடுங்கிய விழிகளுடன் பார்த்துக் கொண்டிருந்த ஸ்ரீதரை நோக்கி,
கணவன், மனைவி ஊடலுக்குள் மூக்கு நுழைக்காமல், வேடிக்கை மட்டும் பார்த்துக் கொண்டிருந்த சித்தப்பா அவர்களை நாடி வந்தான்.
ஸ்ரீதரின் இடுங்கிய பார்வையை, வேதனை தோய்ந்த பார்வையாக எடுத்துக் கொண்ட சித்தப்பா,
மற்றவனின் தோளோடு கையிட்டு ஆதரவாக, “சரி விட்றா மச்சி..”என்று சொல்ல,
சித்தப்பனைப் பார்த்தவன், தீர ஆலோசிக்கும் யோசனை பாவம் மீதூற சொன்னான்.
“இல்லை சித்தப்பா.. ஏதோ பிரச்சினை இருக்கு .. என்னைப் பார்த்தா எப்போவும் அவள் கண்கள்ல கோபம் தான் வரும்.. பட்.. இன்னைய்க்கு அவள் கண்ணுல பயம், பரிதவிப்பு எல்லாத்தையும் ஒட்டு மொத்தமா பார்த்தேன்!
சம்திங் இஸ் வென்ட் ராங்..!! எதையோ என்கிட்ட இருந்து மறைக்குறா.. ஆனால் நான் அதை.. அவள் வாய் விட்டு சொல்லாமலேயே புரிஞ்சிக்கணும்னு நினைக்குறா” என்றபடி நிலத்தை ஆராய்ந்தவனுக்கு மீண்டும் காதோரம் கேட்டது அவள் குரல்.
‘உனக்கொரு தடவை சொன்னால் புரியாதா?? நான் என்ன மாதிரியான நிலைமையில் தவிச்சிட்டிருக்கேன்னு புரியலையா?’ என்று வலியுடன் இயம்பிய அவள் குரல்!!
ஸ்ரீதர் மனைவி என்னானதோ, ஏதானதோ என்று ஓடி வந்ததால் விளைந்த பதற்றத்தில், அவதானிக்காத ஒன்றை நன்றாகவே அவதானித்திருந்தான் விக்கி சித்தப்பா.
சட்டெனத் திடுக்கிடும் விழிகளுடன் நிமிர்ந்த சித்தப்பா கேட்டான்,
“மச்சி.. நீ ஐஷூ கையில் குழந்தையைப் பார்த்த??” என்று.
“என்ன சொன்ன சித்தப்பா..?”- சித்தப்பனின் ஷோல்டரை அழுத்தம் கொடுத்து பற்றியவனாகக் கேட்டான் ஸ்ரீதர்.
அவன் விழிகளோ.. எதையோ ஒன்றை கண்டுபிடித்து விட்டாற் போன்று பரமதிருப்தியில் பளபளத்துக் கொண்டிருந்தது.
ஆமாம், குழந்தையுடன் க்ளினிக் வந்தவளின் கைகளில் குழந்தை இருந்தேயாக வேண்டுமே?
தற்போது கூட குழந்தை இல்லாமல் தானே ஆட்டோ ஏறிப் போனாள்?? அப்படியானால் குழந்தை??
“ஆமா மச்சி.. ஐஷூ வந்தது குழந்தையுடைய க்ளினிக்குக்கு.. ஸோ அவ குழந்த இல்லாம வந்திருக்கவே முடியாது .. குழந்தையோட தான் வந்திருக்கணும்.. கூடவே அவ சித்தியோ, இந்துவோ வந்திருந்தா.. இந்நேரம் அவங்களும் ஆட்டோவில் ஏறியிருப்பாங்க.. ஐஷூ தனியா தானே ஆட்டோல ஏறிச்சு.. அப்போ அவங்க யாரும் இல்லாமல் தனியா தான் வந்திருக்கா.. ரொம்ப பதற்றமா வேற இருக்கா.. அப்படின்னா குழந்தைக்கு தான்… ஏதாவது..” என்று சித்தப்பா மொழிய,
குழந்தையின் தந்தையாயிற்றே அவன், அவனுக்கும் நெஞ்சம் கலங்கியது.
சித்தப்பா சொல்வதை ஒரு காதால் கேட்டுக் கொண்டு.. கண்களால் தரையைத் துலாவிய படி தீவிர யோசனை செய்து கொண்டிருந்தவனின் கண்களில் சிக்கியது..
ஐஷூவைக் காப்பாற்றிய கணம்.. ஐஷூ கையில் இருந்து நழுவி விழுந்த அவள் செல்!!
அப்படி பதற்றம் மீதூறி.. சாலையில் வரும், போகும் வாகனங்களை எல்லாம் அவதானிக்க மறக்குமளவுக்கு யாருடன் பேசியிருக்கக் கூடும்?
செல்லை எடுத்துப் பார்த்தவனைப் பார்த்து முரட்டுத்தனமாக சிரித்தது தெரியாத இலக்கங்கள்!!
அவனுடைய செல்லை டேஷ்போர்டிலேயே விட்டு வந்ததினால்.. சித்தப்பா ஃபோனை எடுத்து, ட்ரூ காலர் ஐடி மூலம் அந்த இலக்கத்துக்கு சொந்தக்காரன் யாரென்று பார்க்க,
அடையாள அட்டை மற்றும் போட்டோ சகிதம் திரையில் விழுந்தான் அவன்.
இரு ஆடவர்களுக்கும் ஏதோ பொறி தட்ட, அட் அ டைமில் இருவரும் கண்களில் தீப்பொறி பறக்க சொன்ன ஒரே பெயர்,
“அர்ஜூன்..!!”.

{27}
“அர்ஜ்ஜூஊஊன்!! … அர்ஜ்ஜூஊன்!!” என்று கண்களில் கனல் தெறிக்க, அந்த வீட்டின் விஸ்தாரமான ஹால் எங்கிலும் எதிரொலிக்கக் கேட்டது ஸ்ரீதரின் கோபக்குரல்.
அவனிருந்த வெறியில், அர்ஜூன் மட்டும் அவன் கண்களில் யதேச்சையாக மாட்டினால் கூட.. தோலுரித்து உப்புக்கண்டம் போட்டு விடும் அளவுக்கு கொலைவெறியில் இருந்தான் அவன்.
ஹாலில் கேட்ட அரவம் கேட்டு… வெளியே வந்தாள் படாடோபமான மூக்குக் கண்ணாடி போட்டு, உயர்ரக பட்டு கட்டிய ஓர் பெண்மணி!!
வந்தவள் வேறு யாருமில்லை. ஐஷூவின் அத்தை!! அர்ஜூன் என்னும் கொடிய அரக்கனை ஈன்றெடுத்த மகராசி!!
இடுங்கிய விழிகளுடன் வந்து பார்த்தவளுக்கு, வந்திருப்பது தன் தவப்புதல்வனை இரத்தம் கொடுத்துக் காப்பாற்றிய ஸ்ரீதர் என்று புரிந்ததும்.. முகம் கண்ணியத்தில் தானாகவே மலர்ந்தது.
“உள்ளே வாங்க தம்பி..! உட்காருங்க.. என்ன சாப்பிட்றீங்க?ஜூஸா? காபியா? ” என்று கனிவாக வரவேற்றார் அவர்.
அவனுக்கோ.. ஆணித்தரமாக தெறிந்திருந்தது.. தன் குழந்தை காணாமல் போனதுக்கு மூல காரணமே அர்ஜூன் தான் என்று.
குழந்தையை எப்படியாவது மீட்டெடுக்கும் பணி ஒருபுறத்தில் இருக்க, அவனால் எப்படி சாவதானமாக உட்கார்ந்து பேச முடியும்??
யாருக்கும் அடங்காத இளங்காளையான அவன் முகத்திலும், உடையிலும் ஆங்காங்கே திட்டுத் திட்டாக படிந்திருந்தது வியர்வை!!
அர்ஜூனிடம் காட்ட வேண்டிய கோபம், அவன் தாய் மீது பாய,
“உங்க கூட உட்கார்ந்து பேச நான் இங்கே வரலை?? எங்கே உங்க மகன் அர்ஜூன்..?? வ்வெளியே க்கூப்பிடுங்க அந்த ர்ராஸ்கலை..!!” என்று இவன் மொழிய,
தன் மகனை ‘ராஸ்கல்’ என்றதும் கொஞ்சம் கோபம் மூண்டது ஐஷூ அத்தைக்கு.
“கொஞ்சம் மரியாதையா பேசுங்க.” – காட்டமான குரலிலேயே சொன்னார் அவர்.
தன் மச்சியைப் பேச விடாமல், அவனுக்காக அங்கே பேசியது ஸ்ரீதருடனேயே வந்திருந்த விக்கி சித்தப்பா தான்.
குழந்தையைக் கடத்தியவன் என்ற கோபம் விக்கிக்குள்ளும் மலையளவு பொங்க,
“அந்த நாய்க்கெல்லாம் என்ன மரியாதை வேண்டிக்கிடக்கு?.. தன்னைக் கொல்ல துணிஞ்சவன்னு தெரிஞ்சும்.. உங்க மகனுக்கு ரத்தம் கொடுத்துட்டு.. இப்போ இந்த நொடி வரை.. அதை சொல்லிக்காட்டாமல் நின்னுட்டிருக்கானே என் மச்சி… இவனுக்கு நன்றிக்கடனா அவன் என்ன பண்ணியிருக்கான் தெரியுமா??”என்று கத்திக் கேட்க,
மகன் செய்து வைத்திருக்கும் திருகுத் தாளங்கள் அறியாத ஐஷூ அத்தையின் விழிகள் அகல விரிந்தன; குரலோ கம்மிப் போய் ஒலித்தது.
“என்ன சொல்றீங்க..?”
அவன் தன்னை விட்டு இப்போதோ அப்போதோ பறந்து விடும் என்ற தினுசில் இருந்த பொறுமையை இழுத்துப் பிடிக்க,
கை முஷ்டி மடக்கிக் கொண்டான்;கால்களைத் தரையில் அழுந்த ஊன்றிக் கொண்டான்.
அந்த கணம்.. அவனது வலிய தொண்டையின் நரம்பு முடிச்சுக்கள் மேலெழுந்து தெரிய, சினத்தில் சிவந்தது அவன் கண்கள்.
“அர்ர்ஜூனுக்கு பிரச்சினை என் க்கூடத்தான்.. அவ்.. வன்… என் கூட ம்மோதியிருக்கணும்.. அதை விட்டுட்டு..என் க்குழந்தையைக் கடத்திய்யிர்ருக்கான்ன்.. .. ம்மரியாதையா எங்கே உங்க பையன்னு சொல்லுங்க.!!” என்று ஸ்ரீதரைப் பார்த்து அவருக்கும் உள்ளே கலக்கம் மூண்டது.
எந்தத் தாய்க்குத் தான் என் புதல்வன் கெட்டவன்??
“என் பையன் நிச்சயமா அப்படி பண்ணியிருக்க மாட்டான்!!..” ஆணித்தரமாக சொன்னாரா? இல்லை தன் மனதைத் தானே தேற்றிக் கொள்ள சொன்னாரா??
அது அவர் மனதுக்குத் தான் வெளிச்சம்.
அவர் மகனுக்கு பரிந்து பேசிய விதத்தில் கோபம் போனது விக்கிக்கும் கூடவே.
“ஆமா.. அவன் ஒண்ணும் தெரியாத பாப்பா.. வாயிலை விரலை வைச்சாலும்.. கடிக்கத் தெரியாத பையன் அவன்!” என்று ஏளனமாக உரைத்தவனின் சொற்களைக் கேட்டு,
கீழ்த்தளத்தில் இருந்த ஓர் அறையிலிருந்து.. தன் வீல் சேரை.. தன்னுடைய வளமான கையால் உருட்டிக் கொண்டே.. வாயில் எச்சில் ஒழுக ஒழுக.. அங்கு வந்து சேர்ந்த அர்ஜூன் தம்பி அரவிந்த்.. நடப்பது அத்தனையும் வேடிக்கைப் பார்க்கலானான்.
இருந்த களேபரத்தில் யாருமே.. அந்தச் சின்னப் பையனை அவதானிக்க மறந்து போயினர்.
ஆனால், அவனோ உள்ளறையிலிருந்து அனைத்தையும் கேட்டுக் கொண்டு தானிருந்திருக்கிறான்.
தன் மகன் அப்படி செய்திருக்க மாட்டான் என்பதற்கு ஆதாரம் சொல்ல விளைந்த ஐஷூ அத்தை, “அவன் இப்போ கலம்போவில் இல்லை.. டுவென்டி டுவென்டி கிரிக்கெட் மேட்ச் பார்க்க பங்களாதேஷ் போயிருக்கான்..!!” என்று சொல்ல,
குறுக்கிட்ட விக்கி, ஸ்ரீதரைப் பார்த்து, “உன் குடும்பத்துல டுவென்டி டுவென்டி மேட்ச் விளையாடிட்டு… அங்கே டுவென்டி டுவென்டி பார்க்க போயிருக்கானா அவன்??..” என்றவன்,
அத்தையைப் பார்த்து காட்டமாக “யார் காதில் பூ சுத்துறீங்க..??”என்று கத்தினான்.
“ஐய்யோ.. நிஜமாவே அர்ஜூன் இங்கே இல்லை!!” என்று கண்களை மூடிக் கொண்டு அடிக்குரலில், கத்த,
ஸ்ரீதர் தன் பதற்றத்தைக் கட்டுப்படுத்திக் கொண்டு அத்தை விழிகளை நிதானமாகப் பார்த்தான்.
ஸ்ரீதர் அர்ஜூன் போல அல்ல. பெண்களிடம் வீரம் காட்டுவது ஆண்மைக்கு இழுக்கு என்று கருதுபவன் அவன்!!
அதனாலேயே.. இன்றுவரை தன்னை விட்டுப் பிரிந்த மனைவி, தானாகவே மனம் மாறும் வரை பொறுமையுடன் அமைதி காக்கவும் செய்கிறான்!!
விழிகள் உறுக்கி அவரைப் பார்த்தவன், “என் க்குழந்தைக்கு ம்மட்டும் ஏதாவ்.. வது ஆச்சு.. அப்புறம் அர்ஜூன் உயிருக்கு.. நான் உத்தரவாதம் தரமுடியாது!!” என்று மொழிந்தவன்,
விக்கியுடன் அவன் சீற்றத்துடன் வெளியேற, அத்தனையும் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்த அரவிந்துக்குள் ஓர் ஆவேசம் பிறந்தது.
தன் வீல் சேரை பலம் கொண்ட மட்டும் வேகவேகமாக உருட்டிக் கொண்டு போய், வாசற்படியை நோக்கி விரைந்து கொண்டிருந்த ஸ்ரீதரின் காலில் இடிக்க,
மெல்ல திரும்பிப் பார்த்தவன், அர்ஜூனைக் கண்டு அதிர்ந்தான்.
ஐஷூ.. அந்த பிரச்சினையின் போது அரவிந்தைப் பற்றி சொன்னது உண்டு. ஆனால் இன்று தான் முதன் முறையாக ஆட்டிசத்தில் பாதிக்கப்பட்ட அரவிந்த்தை நேரில் பார்க்கிறான்.
அர்ஜூன் மீதும், இன்னும் ஏன் அவன் தாய் மீதும் சினம் கொள்ளத் தெரிந்தவனுக்கு, அரவிந்த் இருக்கும் நிலை கண்டு இயல்பாகவே சினம் துளிர்க்கவில்லை.
மாறாக கழிவிரக்கம் தான் மிகுந்தது.
இளையவன் அரவிந்த்துக்கோ வந்திருப்பது தன் கஸினின் கணவன் என்பது தெளிவாகத் தெரிந்திருந்தது.
அன்று ஐஷூ.. அரவிந்தைப் பார்த்துக் கொள்ள வந்த இரவில்.. ஐஷூ தான்.. ‘இது என் பேபிக்கண்ணா’என்று ஸ்ரீதர் புகைப்படம் காட்டியிருக்கிறாளே??
ஸ்ரீதரின் டீசேர்ட்டைப் பிடித்து இழுத்து, தெளிவற்ற தடித்த குரலில்,
“ பேதி.. பேதி..!”என்று அரவிந்த் ஏதோ சொல்ல வர, அதை கணக்கிலெடுக்காமல் விரையப் போனான் விக்கி.
“இரு சித்தப்பா..” என்று விக்கியைத் தடுத்தவன், அரவிந்தின் உயரத்துக்கு சமனாக, தரையில் மண்டியிட்டமர்ந்தவன்,
தன் டீஷேர்ட்டின் நுனியால், வழியும் அரவிந்தின் எச்சிலைத் துடைத்து விட்டுக் கொண்டே,
“என்.. என்ன சொன்ன?? .. பேதி??.. பேபி!!..”என்று அவனது சீரற்ற சொற்கள் ஏதோ புரிபடுவது போல இருந்தது ஸ்ரீதருக்கு.
“அந்தா.. அந்தா.. கெளனி.. கெளனி.. பே.. தி.. பேதி!!..” என்று தன் இயலாத வழிந்த கையை ஆட்டி ஆட்டி ஏதோ சொன்னான் அரவிந்த்.
ஸ்ரீதருக்கு ஏதோ புரிபடுவது போல இருந்தது. இவன் அண்ணாவை ‘அந்தா’ என்றும், பேபியை ‘பேதி’ என்றும், களனி என்னும் இடத்தை ‘கெளனி’ என்றும் தெளிவற்று மொழிவது புரிந்தது.
ஆனால் அரவிந்த் என்ன சொல்கிறான் என்று புரியாத விக்கியோ, எரிச்சலுடன்,
“டேய் அவன் ஏதோ முடியாத பையன்… உளர்றான்!! அதை கேட்டிட்டுருக்க..?”என்று கேட்க, எதிர்பாராத நேரம் அரவிந்தின் கன்னத்துக்கு அழுத்தமாக முத்தம் வைத்தான் ஸ்ரீதர்.
ஆட்டிசத்தில் பாதிக்கப்பட்ட, சர்வநேரமும் எச்சில் ஒழுகும் பையனான அரவிந்த் போன்றோரை… அணைக்கவும், முத்தமிடவும் ஓர் தனிமனம் வேண்டும்!!
அந்த உயர்ந்த மனம் ஸ்ரீதருக்கு இருந்தது.
கண்களில் ஆனந்தக் கண்ணீர் துளிர்க்க, “தேங்க்ஸ் அரவிந்த்..” என்ற வண்ணம் அவசரமாக தன் காரை நோக்கி விரைந்தவனுக்குள் இருந்த காய்ச்சல், சோர்வு கொஞ்சம் பின்னுக்குத் தான் போயிருந்தது.
தனக்கு புரியா விட்டாலும், தன் மச்சிக்கு ஏதோ துப்புக் கிடைத்து விட்டது என்று மட்டும் புரிய, சத்தமில்லாமல் வண்டியை எடுத்தான் விக்கி!!
டிரைவர் சீட்டின் பக்கத்திருக்கையில் இருந்த ஸ்ரீதர், தன் டேஷ்போர்ட்டில் இருந்த செல்லை எடுத்து இந்து இலக்கங்களுக்கு அழைப்பெடுத்த வண்ணம்,
சித்தப்பனை நோக்கி,
“அர்ஜூன் எங்கே இருக்கான்னு தெரிஞ்சு போச்சு சித்தப்பா.. களனியில் தான் இருக்கான்… அதைத் தான் அரவிந்த் எங்கிட்டே சொன்னான்.. மே பி.. பங்களாதேஷ் போறதா ஊர ஏமாத்திட்டு.. அவன் களனி போயிருக்கணும்.. அர்ஜூன் பேசுறதை எப்படியோ அரவிந்த் கேட்டிருக்கணும்.. இல்லைன்னா.. இவனுக்கு ஒண்ணும் புரியாதுன்னு அர்ஜூன்.. அரவிந்தை வைச்சிக்கிட்டே… தன் திட்டத்தை போட்டிருக்கணும்!!” என்று பேசிக் கொண்டே இருந்த போது,
அந்தப்பக்கம் அழைப்பை ஏற்றாள் இந்து. சித்தப்பனுடன் பேசுவதை நிறுத்தி விட்டு,
“இந்து” என்று அவன் பேச,
மறுமுனையில் அவனைப் போல எந்த பரபரப்பும் இல்லாமல் அமைதியாக வந்தது அவளிடமிருந்து பதில்.
“சொல்லுங்க மாமா..”
அவள் அமைதியாகவே பேச இன்னும் ஐஷூ வீட்டிற்கு விஷயம் தெரிய வரவில்லை என்று புரிந்தது ஸ்ரீதருக்கு.
சின்னவளை பதற்றத்துக்கு உட்படுத்த மனமற்று, ஏதோ விசாரிப்பவன் போல, “ஒண்ணுமில்லைமா.. அர்ஜூனுக்கு களனியில் ஏதாவது கெஸ்ட் ஹவுஸ், ரிஸோர்ட், வில்லான்னு ஏதாவது இருக்காமா..?” என்று கேட்டான் இவன்.
நடப்பதையெல்லாம் அமைதியாகக் கேட்டுக் கொண்டு அதிவேகமாக வண்டியோட்டிக் கொண்டிருந்தான் விக்கி.
“ஆமா மாமா.. களனியில் அர்ஜூனுக்கு சொந்தமா வில்லா இருக்கு..” என்று கூறியதும்,
அவன் நினைத்தது போலவே நடந்திருப்பதில் ஸ்ரீதர் கண்கள் மினுமினுத்தது.
“ஓ.. எனக்கு இம்மீடியட்டா அந்த அட்ரஸை மெஸேஜ் பண்ணி விடு.. அப்படியே உன் அக்காவுக்கு பதட்டப்படாமல் இருக்க சொல்லு..” என்று அவசரம் கலந்த குரலில் தன்னம்பிக்கையுடனேயே மொழிந்தான் இவன்.
‘அக்கா’ என்ற சொல்லைக் கேட்டதும் தடுமாறிப் போனாள் தங்கை.
“அக்.. காஆ..” என்று இழுத்தவள், யோசித்துக் கொண்டே, “அக்கா இன்னும் க்ளினிக் விட்டு வீட்டுக்கு வந்து சேரலையே?? நானும், அம்மாவும் தான்… அவங்க க்ளினிக் விட்டு.. இப்போ தான்.. வீட்டுக்கு வந்து சேர்ந்தோம்..” என்று கூற,
அப்போது தான் ஐஷூ ஏன் தனியாக க்ளினிக் வந்தாள் என்ற காரணம் புரிந்தது.
அதேசமயம்.. ஐஷூ தான் ஆட்டோவில் ஏறியதை அவனும் கவனித்தானே? அப்படியானால் அவள், வீடு செல்லாமல் எங்கே சென்றாள்??
“என்ன சொல்ற?? ஐஷூ இன்னும் வரலையா??”-பதற்றமாகக் கேட்டது ஸ்ரீதரின் குரல்.
“ஆ.. ஆமா.. மாமா.. இன்னும் வரலை.. வந்ததும் சொல்லிடறேன்..” என்றவளாக இந்து அழைப்பைத் துண்டிக்க, அன்றைய நாளின் இரண்டாம் முறையாக,
அந்தக் கோர கனவின் தாக்கம் வந்து போனது அவன் சிந்தைக்கு.
மனதின் உள்ளில் மீண்டும் ஓர் உறுத்தல்.. அவளுக்கும், குழந்தைக்கும் ஏதோ ஆபத்து என்ற உறுத்தல்!!
ஒருவேளை கம்ப்ளைன்ட் ஏதேனும் கொடுக்க போலீஸ் ஸ்டேஷன் சென்றாளோ? என்று ஏதேதோ உணர்வுகள் தோன்றி அவனை அழுத்திக் கொண்டே இருந்தது.
கூடவே.. அவன் குழந்தை.. தந்தையான அவன் தூக்கியதும் தன் பொக்கை வாயைத் திறந்து.. மழலைச் சிரிப்பு சிந்தும் தன் வாரிசின் ஞாபகம் வர,
அந்த வலிமையான ஆண்மகனின் நெஞ்சம் எங்கும் ஓர் கொடூர வேதனை எழுந்தடங்க.. கண்கள் இலேசாக கலங்கியது அவனுக்கு.
விக்கிக்கும் நண்பனின் வேதனை புரிந்தது. இறுகிப் போன முகத்துடன் பார்த்த விக்கி, “மச்சி.. நீ வேணா.. குழந்த கிடைச்சதும்.. அர்ஜூனை ஒண்ணும் பண்ணாமல் மன்னிச்சு விட்ரலாம்!.. ஆனால்.. நான் அவனை.. .. மவ்வ.. னே.. அடிச்சு.. அவன் முகரக்கட்டையப் பேத்து.. ந்நாஸ்த்தியாக்காமல் விட மாட்டேன்!!”என்று கோபத்தில் காலரைத் தூக்கி விட்டுக் கொண்டே சொல்ல,
ஏதும் சொல்லாமல்.. பரிதவிப்புடன், கோபமும் அர்ஜூன் மேல் இணைந்து கொள்ள,
“அவன் கை வைச்சது என் கண்ணா மேல.. விட்ருவேனா..?? நீ சீக்கிரம் போ சித்தப்பா..!!”என்று மட்டும் சொன்னான் அவன்.
***
அர்ஜூனின் களனி வில்லா.
கொழும்பிலிருந்து அரை மணித்தியாலப் பயணம்.. பௌத்தர்கள் செறிந்து வாழும் “களனி” என்னும் இடத்திற்கு!!
கொழும்புக்கோ.. அதிநவீன கட்டிடங்களும், உயர்மாடக் குடியிருப்புகளும் என ஒரு முகம்.
ஆனால் களனிக்கு, அதிநவீன கட்டிடங்களும், உயர்மாடக் குடியிருப்புகளும் என ஒரு முகம்… பச்சைப்பசேலென வயல்வெளிகளும், தென்னந் தோப்புகளும், அவற்றைத் தழுவிக் கொண்டே ஓடும் களனி கங்கை என இன்னொரு முகம்!!
அந்த இன்னொரு முகத்தின் விளிம்பில் தான் அர்ஜூனின் வில்லா அமைந்திருந்தது.
இயற்கையான மரங்களே தடுப்பாகக் கொண்டு… வில்லாவின் முன்னாடியே.. பத்தடி ஆழமுள்ள நீச்சல் தடாகம்!
நீச்சல் தடாகம் பக்கத்தில்.. நவீனத்துவத்துடன் நயமாக கட்டப்பட்டிருந்த போர்ட்டிகோ!!
அந்த இடம் முழுவதும் குளிர்ச்சி ரசம் சொட்டும். விலாவுக்கு சற்றுத் தள்ளி..பள்ளத்தை ஊடறுத்துச் செல்லும் மண்பாதை!!
மண்பாதையின் இருமருங்கிலும் வேலியாக மூங்கில் மரங்கள்!!
மூங்கில் மரங்கள் தாண்டி.. வானுயரத்துக்கு வளர்ந்திருக்கும் குட்டிக்காடு!!
தன் நிழலின் கீழ் வளர்ந்திருக்கும் காட்டுச் செடி, கொடிகளுக்கு குடை பிடித்திருந்தன அவை.
கிளைகளின் விரிசல் வழியே.. மெல்ல எட்டிப்பார்த்துக் கொண்டிருக்கும் சூரிய ஒளி!!
காட்டின் முடிவிடத்தில் கூழாங்கற்கள் கொண்ட மண்தரை.
மண்தரையை அணைத்துக் கொண்டு சலனமேயற்று அமைதியாக ஓடிக் கொண்டிருந்தது களனி கங்கை!!
அங்கே அந்த வில்லாவின் கதவுகளைப் படாரெனத் திறந்த ஐஷூ,
சோபாவில் ஒய்யாரமாக கால் மேல் கால் போட்டு அமர்ந்திருந்த அர்ஜூனைப் பார்த்து,
மேல்மூச்சு, கீழ்மூச்சு வாங்கக் கேட்டாள் ஐஷூ,
“அர்ஜூன்!!!! எங்கே என் குழந்தை..??” என்று.
அர்ஜூனின் பார்வை, தன் முறைப்பெண்ணை.. உச்சாதி பாதம் வரை ஆராய்ந்தது.
அதில், அவள் பிறன் மனையாள் என்னும் லஜ்ஜை கிஞ்சித்தும் இருக்கவில்லை.
பதற்றத்தில் ஓடி வந்தவள் அல்லவா??
வெள்ளை வெளேரென்றிருந்த அவள் கழுத்து வளைவில் ஊற்றெடுத்த ஓர் வியர்வை, சரேலென உருண்டோடி..நெஞ்சுப் பள்ளத்தாக்கில் விழுந்து மோட்சம் பெற்றதை கல்மிஷம் சிந்தும் விழிகளுடன் பார்த்தான் அவன்.
சோபாவிலிருந்து எழுந்து வந்து, அவள் தோளைத் தொட்டு.. ஹாலை நோக்கி இழுத்துப் போனவன்,
அவளைத் தேற்றும் வண்ணம்,
“கூல்!! கூல் வந்ததுமே என்ன அவசரம்?.. ரொம்ப சூடா இருக்க.. ஸோ கூலா ஏதாவது சாப்பிட்றியா..?”என்று கேட்க,
தன் தோளைப் பற்றியிருந்த அவன் கைகளை உதறித் தள்ளிக் கொண்டு வெளியே வந்தாள் அவள்.
அவனை முறைத்துப் பார்த்து, அடிக்குரலில் இருந்து குரல் எழுப்பிய ஐஷூ, “நான் ஒண்ணும் உட்கார்ந்து சாப்பிட இங்கே வரலை??.. என் குழந்தை எங்கே..??” என்றவளுக்கு.. இத்தனை மணித்தியாலமாக குழந்தையை பிரிந்திருந்தது..
அதற்கு பசிக்கும் என்ற உணர்வு மேலோங்க… அவளுக்கு கண்ணீர் துளிர்க்கவாரம்பித்தது.
ஐஷூவின் தாய்மையுணர்வுகளை விடவும், அவன் மனதில் இருந்த தாப உணர்வுகள் பெரிதாகப் போனது அந்த மனித மிருகத்திற்கு.

“இரு!! உனக்கு உன் குழந்தை வேணும்.. ஆனால் எனக்கு?? என் ஐஷூ வேணும்..!!”
அவனை வெறுத்த பார்வை பார்த்தவளுக்கு.. வெறுப்பில் இதழ்கள் வளைந்தன.
“அர்ஜூன்.. நான் அன்னைய்க்கே தெளிவா சொல்லிட்டேன்.. நான் ஸ்ரீதருடைய பொண்டாட்டி!!.. நீ நினைக்குறது எதுவும் நடக்காது.. என் குழந்தையை என்கிட்டேயே கொடுத்துரு ப்ளீஸ்..” என்று கெஞ்சிப் பார்த்தாள் அவள்.
ஆனால் அந்த மா பாதகனோ, அவள் திணறித் திமிறி.. அவன் கையை ஒதுக்க.. அவள் தோளோடு கையிட்டு அணைத்துக் கொண்டே,
“ஃபர்ஸ்ட் லிஸின் டூ மி பேபி.. அப்புறம் வி கேன் கம் டூ யோர் பேபி..”என்றான்.
கண்ணீரின் உச்சத்தில் அழுகையின் முடிவில் தேம்பல் பிறந்தது.
நாசி நுனி வேறு செர்ரிப்பழம் போல சிவந்திருக்க,
“எ.. எ.. என்ன கேட்கணும்?.. ஒரு தாயு… ள்ளம் பட்ற வேதனை உனக்குப் புரிய… லையா..??. என் குழந்தையைப் பார்க்காமல், அவன் எப்படி இருக்கா… ன்னு தெரியாமல்.. நீ சொல்ற எதுவுமே என் மரமண்டைக்கு ஏறாது அர்ஜூன்!! .. ப்ளீஸ்.. உன்னைக் கெஞ்சிக் கேட்கறேன்… குழந்தையை என்கிட்ட ஒப்படைச்சுடு அர்ஜூன்..”என்று தன் இரு கைகூப்பிக் கேட்டாள் அவள்.
கை கூப்பும் அவளை.. ஏளனமாகப் பார்த்தவனின் விழிகள் வன்மத்தில் மிளிர்ந்தது.
மெய்யாகவே அவளைக் காதலிப்பவன் விழிகள் அப்படி வன்மத்தைக் கக்கவும் கூடுமோ??
இல்லை.. சர்வ நிச்சயமாக அவன் மனதுக்குள் இருப்பது காதல் இல்லை.
அதையே தான் அர்ஜூனின் இதழ்களும் வழிமொழிந்தன.
“இதே மாதிரி வலி தானே.. எனக்குள்ளேயும் நீ கைவிட்டுப் போயிட்டேன்னதும் இருந்திருக்கும்!! .. ஒரு தாய் தன் குழந்தையை சுமக்குறது பத்து மாசம் தான்.. ஆனால் நான்..?? நான்.. உன்னை நினைவு தெரிஞ்ச நாள்ல இருந்து நெஞ்சில சுமந்துட்டிருக்கேன்.. ‘என் பொண்டாட்டி நீ தான்’னு மனசுக்குள்ள சுமந்த என் காதல்.. அது இல்லாமல் நான் எவ்வளவு தவிச்சுப் போயிருப்பேன்னு உனக்குப் புரியவேயில்லையே ஐஷூ..??”என்று அவளுடைய கைச்சந்து பற்றி அவளை உலுக்கிக் கேட்டான் அவன்.
“அய்யோ அர்ஜூன்.. இவ்வளவு பேசுறவன் என் வீடேறி வந்து.. என்னை.. பொண்ணு கேட்டிருக்கணும்.. நீ அதை செய்யாமல் அம்மாவுக்கு பயந்துட்டு தானே இருந்த..” என்று இவளும் தன் பக்க ஞாயங்களை சொல்ல வர,
சட்டெனக் கேட்டது அர்ஜூனின் இடையிட்ட குரல்!!
“ஆனால் எனக்கு.. அம்மாவும் வேணாம்.. எதுவும் வேணாம்.. நான் வந்து நின்னப்போ.. என் காதலை நீ ஏத்துக்கலையே ஐஷூ..?” என்றவனின் விழிகள் இருந்த பழிவாங்கும் வெறி,
வயிற்றில் புளியைக் கரைத்தது போன்ற சிலீரிட்ட உணர்வைக் கொடுத்தது அவளுக்கு.
அவன் கைகளை விடுவித்துக் கொண்டே இவளும் எகிறினாள்.
“அப்போ…. காலம்… கடந்துருச்சு!!.. நீ கேட்டு வந்தப்போ நான் வெறும் ஐஸ்வர்யா கிடையாது… திருமதி. ஸ்ரீதர்!! உன் காதலை நான் ஏத்திருந்தால்.. அதுக்கு பேரு காதல் கிடையாது.. அதுக்குப் ப்பேர்ரு வ்வேற?” என்று சொல்ல,
அவன் விழிகள் மெல்ல தாழ்ந்தன. அவன் மூளை எதையோ யோசித்தது.
அந்த இடைவெளியைப் பயன்படுத்தி, நைஸாக பேச நாடியவள்,
அழுது அழுது கம்மிப் போன குரலில், “அர்ஜூன்… நடந்தது நடந்திருச்சு.. ப்ளீஸ் என் குழந்தையை கொடுத்துரு… அர்ஜூன் உன் கால்ல வேணாம் விழுறேன்..” என்று அந்த கொடியவனின் காலில் விழப் போக,
அதை அனுபவித்தான் அந்தக் குரூரன்.
“விழு.. என் காலில் விழ உனக்கு.. முழு உரிமையிருக்கு.. புருஷன் காலில் பொண்டாட்டி விழுறது ஐதீகம் தானே..?” என்று இறுமாப்புடன் அவன் கேட்க,
அவன் பாதத்தை தொட முனைந்த கைகள் அப்படியே நின்றன. மெல்ல எழுந்தவளின் விழிகள் ருத்ராவதாரம் கொண்டிருக்க ,
அழுந்த மூடிய இதழ்களைப் பிரித்துக் கேட்டாள் இவள்,
“யாருக்கு யார் புருஷன்??.. என் புருஷன் ஸ்ரீதர் மட்டும் தான்!!” என்று.
அர்ஜூனின் எல்லை கடந்த பேச்சுக்கள் ஒவ்வொன்றும் இவன் மனம் பிறழ்வானவன் தானோ என்று எண்ண வைத்தது இவளை.
இல்லை அர்ஜூன் மனம் பிறழ்வானவன் அல்லன். அவன் நெறி பிறழ்வானவன்.
தமிழ் இனம் தனக்கென்று வடித்துக் கொண்ட, ‘ஒருத்திக்கு ஒருத்தன்’ என்னும் கலாச்சார நெறி பிறழ்வானவன் அர்ஜூன்!!
“ஆனால்.. இப்போ தான் நீ டைவர்ஸூக்கு அப்ளை பண்ணிட்டியே..?.”என்று கேட்டான் அவன்.
“ஆனாலும் ஸ்ரீதர் கட்டிய தாலி என் கழுத்தில் இன்னும் இருந்துட்டுத் தான் இருக்கு..!!” – சீறினாள் இவள்.
நடுவகிட்டில் வைத்திருந்த நெற்றிக்குங்குமம் வியர்வையில் இலேசாக களைந்திருக்க.. அவள் விழிகள் மட்டும் சீற்றம் கக்கிக் கொண்டிருந்தது.
அந்த ராட்சசன் பலமாக சிரித்தான். அந்த ஹாலே இடிந்து நொறுங்குவது போல வெடிச்சிரிப்பு கிளம்பியது அவனிடம் இருந்து.
“ஹஹஹா பேபி.. யூ கேம் டூ தி பாயிண்ட்.. தாலி!! தாலி.!!. இஸ் டி மேட்டர்.” என்றவன் தன் பேன்ட் பாக்கெட்டினுள் இருந்து, தங்கத்திலான ஓர் தாலிச் செயினை வெளியே எடுத்தவன்,
அவளைப் பாராமலேயே ,
“அந்த பரதேசிப் பையன் கட்டிய.. தாலியை வைச்சுட்டு இப்போ என் தாலியை ஏத்து..” என்று சொல்ல வர..
“என்ன உளர்ற? அர்ஜூன்.. இன்னொருத்தன் பொண்டாட்டிக்கு தாலி கட்டணும்னு ஆசைப்பட்றீயே?? உனக்கு வெட்கமாயில்லை??உன் உடம்பிலேயும்.. ஒருத்திக்கு ஒருத்தன்னு வாழ்ற..நம்ம பரம்பரை இரத்தம் தானே ஓடுது??” என்று.. அங்கு நடைப்பெறப் போகும் அசம்பாவிதங்களைக் கேட்டு நெஞ்சு பொறுக்க முடியாமல் கேட்டாள் இவள்.
“எப்படியும் உனக்கு டைவர்ஸ் வரப்போறது உறுதி.. அதன் பிறகு நடக்கும் கல்யாணம்.. இப்போ.. இங்கேயே நடக்கட்டுமே?? . நான் எதுக்கு இதுக்குப்போய் வெட்கப்படணும்..?” என்று கூச்சநாச்சமேயற்று கேட்டவனை என்ன செய்தால் தான் தகும்??
விட்டால் அருகிலிருந்த மூன்றடி உயர பித்தளை வாஸால், அவன் நடுமண்டைக்கே ஒன்று போட வேண்டும் போல கோபம் எழுந்தது அவளுக்கு.
அப்புறம் குழந்தைக்கு என்னானது என்று யார் அறிவார்? ஆகவே பொறுமை காத்தாள் அவள்.
நெறி பிறழ்ந்த.. வன்மமும், வக்கிரமும் கொண்ட ஆண்மகனோ தொடர்ந்தான்.
“ஐஷூ.. நீ என் காதலைப் புரிஞ்சுக்க .. நான் நினைத்தால்.. உன்னை நிமிஷத்தில் அடைய முடியும்.. ஆனால் நான் கேட்குறது உன்…” என்று ஏதோ சொல்ல வர.. அந்த நாராசமான சொற்களைக் கேட்கப் பிடிக்காமல்,
காதுகளை இறுக மூடிக் கொண்டாள் அவள்.
“ஐய்யோ புரியாமல் பேசாத அர்ஜூன்..!!” என்று கத்திக் கொண்டே நிமிர்ந்தவளின் முன்னே ஊசலாடியது அவன் நீட்டிப் பிடித்த தாலி!!
***
அந்த நேரம் தான்.. மயான அமைதி நிலவிக் கொண்டிருக்கும் அந்தக் காட்டுப்பகுதிக்குள் நுழைந்தது ஸ்ரீதரின் கார்.
மேடு பள்ளம் நிறைந்த, சற்றே கரடுமுரடான செம்மண் ரோடு தான் அது.
சரியாக அந்தப் பெரிய வீட்டின் முற்றத்துக்கு நுழைவதற்கு முன்.. வண்டியை நிறுத்தச் சொல்லி சைகை காட்டினான் ஸ்ரீதர்.
முதலில் ஏதும் கேட்காமல் வண்டியை நிறுத்திய விக்கியும், “என்னாச்.. மச்..” என்று கேட்க விளைய சட்டென அதையும் நிறுத்தச் சொன்னான் ஸ்ரீதர்.
அந்தக் கானகம் போன்ற பிரதேசத்தில்… தென்றலோடு மரக்கிளைகள் சரசரம் புரிந்து சலசலக்கும் ஓசை மட்டுமே கேட்க, எங்கிலும் நிசப்தமாகவே இருந்தது.
ஆனால் குழந்தையை தேடி வந்தவனின் விழிகளும், காதுகளும் ஒருநிலையில் நில்லாமல் நிலை கொண்டே தவித்தது.
அவசரமாக காரிலிருந்து இறங்கியவன், விக்கியிடம், “சித்தப்பா.. எனக்கு குழந்தை அழுற சத்தம் கேட்குது.. சித்தப்பா.. நீ வீட்டுக்குள்ளே போய் பாரு.. நான் அங்கே போய் பார்க்குறேன்..” என்றவன் நிமிடமும் தாமதியாமல் விரைந்திருந்தான்.
அவன் காதுகளில்.. குழந்தை வீறிட்டு அழும் குரலில்.. மிக மிக மெல்லியதாக கானகம் இருந்த திசை நோக்கிக் கேட்பது போல இருக்க,
அவன் கால்கள்.. அந்த பள்ளத்தை நோக்கி சரசரவென இறங்கியது.
உடலெல்லாம் ஓர் நடுக்கம்.. குழந்தைக்கு ஏதும் ஆகியிருக்கக்கூடாது என்ற கவலை.. கானகத்தில் இருந்து வரும் குரலின் தாக்கம்.. எல்லாம் சேர்ந்து படாதபாடு படுத்த,
அந்தக் கானகத்தில் கால்கள் பதித்து ஓடினான் ஸ்ரீதர்.
******
அங்கே குழந்தையைத் தேடி உள்ளே வந்த விக்கியோ.. ஹாலில் கண்ணீர் சிந்தும் விழிகளுடன் அவளும்,
அவளுக்கு முன் நின்று.. கழுத்தில் இருந்த தாலியை இழுக்க முயன்றபடி இருந்த அர்ஜூனையும் கண்டு அதிர்ந்து போனான் விக்கி!!
“டேய் என்னடா பண்ணிட்டிருக்க..??”- அர்ஜூனை அப்படியொரு நிலையில் எதிர்பார்க்காதவன், அதிர்ச்சியுடன் தான் கேட்டான்.
அங்கே எதிர்பாராமல் ஒலித்த பரிச்சயமான குரலில்.. தன் குட்டு வெளிப்பட்டு விட்டதை அறிந்து.. திடும்மெனத் திரும்பிப் பார்த்தவனின் முகம் இறுகிக் கறுகியது.
ஐஷூவுக்கோ விக்கியைக் கண்டதும்.. திருவிழாவில் தொலைந்த குழந்தை.. தந்தை முகம் கண்டது போல ஆறுதல் பிறந்தது.
“விக்கி மாமா” என்று ஈனஸ்வரத்தில் மொழிந்த வண்ணம் நகர முனைய, அதற்கு விடாமல் இறுக்கமாகப் பிடித்துக் கொண்டது அர்ஜூனின் கை.
உள்ளே தன் அழுத்தமான காலடிகளை எடுத்து வைத்து வந்தவனுக்கு.. அர்ஜூனின் கையிலிருந்த தாலி வேறு… சுழித்த பார்வையைக் கொடுத்தது.
தன் மனதில் இருப்பவற்றையெல்லாம் அர்ஜூன் முகத்துக்கு நேரே சொல்ல நாடியவன்,
கையில் தாடை தாங்கி நின்று, “உன் கேரக்டரையே என்னால புரிஞ்சுக்க முடியலையேடா?? ஏன்டா என் மச்சியையும், ஐஷூவையும் நிம்மதியா வாழவே விடமாட்டியா?? அவனை ஆள் வைச்சு அடிச்ச… பொறுத்துக்கிட்டான்… அவனைப் பத்தி இல்லாததும், பொல்லாததும் சொல்லி பிரிக்கப் பார்த்த… கண்டுக்காமல் விட்டான்… அப்புறம்.. வீடியோ கோல்ல என்னென்னமோ கண் கட்டு வித்தை காட்டி… சந்தேகத்தீயைப் பரப்பி விட்டு.. பிரிச்சு விட்ட… இப்போ தான் ரெண்டு பேரும் மனசு மாறி சேரலாம்னு வந்திருக்காங்க.. அது உனக்குப் பிடிக்கலையாடா??
இப்போ குழந்தையை கடத்தியிருக்க?? போதாக்குறைக்கு ஏற்கனவே கல்யாணமான பொண்ணுக்குத் தாலி கட்ட வேற ட்ரை பண்ற..??” என்று கேட்டவன்,
நாக்கு மடித்து கோபத்துடன் எச்சரிக்கை சமிக்ஞை காட்டி, “தப்புக்கு மேல தப்பு பண்ற அர்ஜூன்!!” என்று சொல்லவும் செய்தான்.
பின்பு, சிறு நமட்டுச் சிரிப்பு உதிர்த்த வண்ணம்,
“விட்டால் ‘சின்னத்தம்பி’ படத்துல வர்ற பைத்தியம் மாதிரி, ‘எனக்கு கல்யாணம்.. எனக்கு கல்யாணம்’ன்னு கத்திக்கிட்டே.. ஊர்ல இருக்கிற பொம்பளைங்க கழுத்தில் எல்லாம் கட்டிருவ போலேயே..??” என்றுரைத்த வண்ணமே முன்னோக்கி வந்தான் விக்கி.
அவன் விழிகளில் இதுவரை இல்லாத தீவிரம் படர்ந்தது. ஓரெட்டில் தாவி வந்து.. தாலி பற்றியிருந்த அர்ஜூன் கையைத் தன் ஸ்பேன்னர் ஏந்தும் இரும்புக் கரங்களால் பற்றி, கை மணிக்கட்டைத் திரும்ப,
நொடியில் ‘சடக்’ கென எலும்புகள் நொறுங்கும் சத்தம் கேட்க,
“ஆ..”வென்று வலியில் கத்திக் கொண்டே ஐஷூவை விடுதலை செய்தவனின் கையில் இருந்த தாலியும் நிலத்தில் விழுந்தது.
விக்கியிடமிருந்து இப்படியான தாக்குதல் வரும் என்று எதிர்பாராத அர்ஜூன் நிலைகுலைந்து போனான்.
“இனிமேல்.. தாலி கட்ட இந்த கை உயரும்??” என்று வலியில் துடிக்கும் அர்ஜூனிடமே கேள்வியெழுப்பியவன்,
பளார் பளாரென விழுந்தது அர்ஜூனின் கன்னத்துக்கே விக்கியின் அடிகள்!!
“இந்த மாதிரி.. இப்படி பண்ணுவியா? கேனத்தனமா ஏதாச்சும் பண்ணுவியா?? ஸ்ரீதர் பொண்டாட்டிய திரும்பிப் பார்ப்பியா?” என்று கேட்ட ஒவ்வொரு அடிக்கும்,
விண்விண்ணென்று தெறித்து.. சிவந்து வீங்கி வீங்கிக் கொண்டே போனது அவன் கன்னம்!!!
இன்னும் அர்ஜூனின் மணிக்கட்டைத் திருகிக் கொண்டே செல்ல வலியில் உயிர் போனது அவனுக்கு.
“பண்ண மாட்டேன்.. பண்ண மாட்டேன்.. க்கய்.. க்கய்.. க்கைய்ய வ்வி.. விட்..” என்று அர்ஜூன் கத்த அப்போதும் விட்டானா மெக்கானிக்??
குழந்தையின் ஞாபகத்தில் தத்தளித்துக் கொண்டிருந்தவள், “கு.. குழந்தை… என்.. கு.. ழந்த… எங்.. கேன்னு கேளுங்க விக்கி??”என்று தடுமாற்றத்துடன் கேட்கச் சொல்ல,
விக்கியும், “அதான்…எங்கேன்னு கேட்குறாள்ல? வாயில என்ன புட்டா?? சொல்லுடா”என்ற வண்ணம் வாய்க்கு விட்டானே ஓர் குத்து.
பல்லும், மூக்கும் ஒரு சேர உடைந்து.. பொளபொளவெனக் கொட்டவாரம்பித்தது இரத்தம்!!
இரத்தம் பீறிட்ட வீரியத்தில் தாள மாட்டாமல், கொஞ்சம் தலை சுற்றவும் செய்தது அர்ஜூனுக்கு.
முடியாமல் விக்கி எதிரேயே முழந்தாளிட்டு அமர்ந்தவன், “கு.. குழந்.. த ஆத்தோ.. ரத்துல…” என்று பிதற்றியவன்,
மேற்கொண்டு சொல்ல முடியாமல் மூர்ச்சையாகிப் போய்.. விக்கிப் பாதங்களின் நடுவிலேயே முகம் குப்புற புரண்டு மூர்ச்சையாகிப் போனான்.
அவன் சொன்ன சொல்லைக் கேட்டு.. இருவருக்குமே மூச்சை அடைத்தது.
“யம்மா.. நீ போய் உன் குழந்தையைக் கவனி…நான் இந்த பன்னிப்பயல.. இங்கேயே கட்டிப் போட்டுட்டு வரேன்” என்று சொல்ல,
அங்கிருந்து அந்த பள்ளமான பாதைக் கடந்து.. கானகம் கடந்து.. கூழாங்கல் தரை கடந்து.. ஆற்றை நோக்கி ஓடவாரம்பித்தாள் ஐஷூ.
*****
ஸ்ரீதருக்கோ.. அவன் கானகம் நோக்கி விரைய, விரைய.. குழந்தை வீறிட்டு அழும் குரல்.. வரவர மிகச் சமீபமாகக் கேட்பது போல இருந்தது.
பிறன் மனையைத் தன் மனையாளாக பெண்டாள எண்ணம் கொண்ட அந்த நயவஞ்சகனுக்கு,
பிறன் குழந்தையை தன் குழந்தையாக ஏற்கும் எண்ணமோ, குழந்தையை மறுபடியும் ஐஷூவிடம் ஒப்படைக்கும் எண்ணமோ இல்லை!!
அதனால் ஆளில்லா ஆற்றோரத்தில் குழந்தையை ஈவிரக்கமின்றி விட்டு விட்டு, நாய், நரி வந்து தின்னட்டும் என்ற குரூர எண்ணத்துடன் விட்டுச் சென்றான் அந்தக் கொடியவன்
ஸ்ரீதருக்கோ.. அவன் விரைந்த மண்பாதையில்.. சரசரவென சறுக்கியது அவனது வலிய கால்கள்.
அங்கிருந்ததோ குட்டிக்குட்டி காங்கிரீட் கற்கள்!! அதில் விழுந்தவனின் உடல் பின்புற உடை.. அப்படியே கிழிய.. உள்ளே எங்கும் இரத்த மூட்டம்!!
வலிக்கிறது!!
இருப்பினும் வலி.. அவனை எள்ளளவும் அவன் குழந்தையைத் தேடும் பணியிலிருந்து தடுத்து நிறுத்தவேயில்லை.
எழுந்து ஓடினான் அவன்!!
கானகத்தில் அவன் பாதங்கள் பதிந்த போது.. பாதணிகள் பிய்ந்து போனது. இருப்பினும்.. அவன் இதயவறை எங்கிலும் எதிரொலித்து.. அவனை உலுக்கியது குழந்தையின் குரல்!!
பாசி படர்ந்த கற்களில் கால் வைத்தவன் வழுக்கினான். கால் புரண்டு.. நகம் உடைந்து.. தொடை என்பு வலித்தது.
கன்னங்கரேலென்ற கரிய முகம் கொண்ட மந்திகள்.. காட்டுக்குள் ஓடும் அவனை.. கூட்டம் கூட்டமாக மரத்துக்கு மரம் தாவி பின்தொடர முனைந்தது.
மந்தி எழுப்பிய சத்தத்தில்… முன்னந்தி மாலையில்.. சிறகை படபடவென அடித்துக் கொண்டு பறந்தது கோரமான பல்லுடையை வௌவால் கூட்டம்!!
அந்த வலிய ஆண்மகனின் உடலில் இருந்த ஒட்டுமொத்த செல்லுமே.. தீவிரமாக வேலை செய்ய, கானகம் தாண்டி, கூழாங்கற்களின் தரையை அடைந்தான் ஸ்ரீதர்.
கால்கள், கற்களில் பட்டுப் பட்டு.. அவன் அடிப்பாதங்களின் தோல் கிழிந்து இரத்தம் அங்கேயும் எட்டிப்பார்க்கலாயிற்று.
அந்தக் கூழாங்கற் படைகளின் முடிவிடத்தில், கற்களைத் தொட்டும் தொடாமலும் அமைதியாக ஓடிக் கொண்டிருந்தது கங்கை.
அவன் கண்கள் தன் வாரிசைத் தான் தேடியது.
அங்கே அவன் கண்ட காட்சியோ.. அவன் நெஞ்சைத் தூக்கிப் போடச் செய்தது.
கூழாங்கற்களின் மேலே.. வெறும் பிளாங்கட்டின் மேலே படுத்திருந்தது குழந்தை.
இது பூப்போன்ற உடல் கொண்ட குழந்தை என்று அவனுக்குத் தெரியும். ஆனால் கூழாங்கற்களுக்குத் தெரியுமோ??
தன் நுனி நாவு வெளித் தெறிய.. அடித்தொண்டை வறள… கத்தி அழுது கொண்டே இருந்தது குழந்தை.
தகப்பனான ஸ்ரீதருக்கோ.. நின்று துடித்தது இதயம்.
ஓர் மந்தி வேறு.. குழந்தையின் ப்ளாங்கட்டை இழுத்துக் கொண்டு நிற்க, தலை சுற்றியது அவனுக்கு.
நொடியும் தாமதியாமல் கூழாங்கல் எடுத்து.. குறி பார்த்து மந்திக்கு அடிக்க,
தன் மஞ்சள்கரைப் பற்களைக் காட்டி சீறிக் கொண்டே ஓடியது மந்தி.
ஓடி வந்து குழந்தையை எடுத்தவன்.. நெஞ்சோடு அணைத்துக் கொண்டான் ஸ்ரீதர்.
எத்தனையோ முறை அர்ஜூனை மன்னித்து விட்டவனுக்கு.. இம்முறை அர்ஜூனை மன்னிப்பதா என்று நினைக்கவும் முடியவில்லை.
அவன் விளையாடியது.. ஒரு பாவமும் அறியாத குழந்தையின் உயிரோடு…
தந்தையின் வாசம்.. அந்த சிசுவும் அறிந்ததோ.. இல்லை… தந்தையின் கைகளின் அரவணைப்போ.. இல்லை தந்தை மேனி சூடோ… எதுவோ ஒன்று.. அவன் குழந்தையை கையில் ஏந்தியதும் அதன் அழுகையை நிறுத்தச் செய்தது உடனடியாக.
குழந்தையை அள்ளி நெஞ்சோடு அணைத்து.. குட்டி குட்டி முத்தங்கள் வைத்தான் அவன் கண்ணீரோடு.
“இல்லைடா தங்கம்.. ஒண்ணுமில்லை.. ஒண்ணுமில்லை.. அப்பா வந்துட்டேன்டா..அப்பா வந்துட்டேன்.. இனியெதுவும் ஆக விடமாட்டேன்டா கண்ணா..” என்று முத்தம் வைத்துக் கொண்டே…
இன்னும் குழந்தையை இறுக அணைத்துக் கொண்டான் ஸ்ரீதர்.
அந்த நேரம் பார்த்து என்னக் காலக் கொடுமையோ… வருணபகவானும் தான்…. கோரமான இடியை அனுப்பி.. சோவென பெருமழையையும் அனுப்ப,
குழந்தையை நெஞ்சோடு அணைத்துக் கொண்டு, கானகம் நோக்கி ஓடினான் அவன்.
மீண்டும் வந்த வழியே நடந்தான் ஸ்ரீதர். கூழாங்கற் தரை கடந்தான்; கானகம் நுழைந்தான்!!
நில்லாமல் பெய்து கொண்டே இருந்தது மழை. மணலோடு, நீர் கலந்து.. செம்மண் நீராக, ஆற்றை நோக்கி ஓடியது நீர்.
சுழற்றியடித்தது சூறாவளிக் காற்று. மரங்களோ காற்றின் தாளத்துக்கு கோரமாக ருத்ரதாண்டவம் ஆடியது.
என்ன நேர்ந்தது இயற்கைக்கு… அவன் மேல் இரக்கம் கொள்ளாவிடினும்.. அவன் கையிலிருந்த பிஞ்சுக்காவது இரக்கம் கொள்ளலாம் அல்லவா??
ம்ஹூஹூம்.. இரங்கவேயில்லை இயற்கை!!
ஒருவழியாக கானகத்தின் ஆரம்ப எல்லைக்கு வந்து நிம்மதி பெருமூச்சு விட்ட போது, எதிலேயோ இடறியது அவனின் கால்கள்.
சற்றே மேட்டிலிருந்தவன்.. இடறி உருண்டு கொண்டே போன போதும் கூட.. இறுதி வரை.. ப்ளாங்கட்டிற்குள் சுருண்டு, படுத்திருந்த குழந்தையைப் பிடித்திருந்த வலதுகையை விடவேயில்லையே அவன்!!
இது தான் பாசப்பிணைப்பு என்பதா??
உருண்டு சென்றவனின் உடலெங்கும் சேற்றுக்குளியல்!! இடது கையோ சென்று.. ஓர் பெரிய பாறாங்கல்லின் இடுக்கில் இடித்துக் கொள்ள,
அவன் முழங்கை என்பு திரும்பிக் கொள்ளும் ஒலி அவனுக்கே கேட்கிறது.
தூரத்தில் எங்கோ, “பேபிக்கண்ணாஆஆஆ.” என்று அலறும் ஒலி கேட்கிறது ஏதோ கிணற்றுக்குள் இருந்து ஒலிப்பது போல.
அதைத் தொடர்ந்து விக்கியின் குரல், “ஸ்ரீதராஆஆஆ!!” என்று.
அவன் கண்களைத் திறவாமல்.. இழுத்து இழுத்து மூச்சு விட்டுக் கொண்டே நின்றான்!!
ஓடி வந்த மனையாள்.. அவன் அருகே அமர்ந்து, “பேபிக்கண்ணா” என்று ஊனுருக, உயிர் உருக கதறுவது புரிய.. மெல்ல கண் திறந்தவனின் வலது கையும் அணைப்பைத் தளர்த்தியது.
அங்கே அவன் நெஞ்சாங்கூட்டில் பத்திரமாக சுருண்டிருந்தது.
“நம்ம குழந்தையை நான் காப்பாத்திட்டேன் ஐஷூ..!!” என்றவனுக்கு,
அவளது கலங்கிய முகம் ஏதோ செய்ய, “என்னை வேணாம்னு தூக்கியெறிஞ்சுட்டுப் போன.. ஐஷூ.. என்.. ப்.. பொண்.. டாட்டி.. ஐஷூ… எனக்காக.. வடிக்கிற.. இந்தக்.. கண்.. ணீர்.. இந்தக்.. கண்.. ணீர்.. “இது போதும் எனக்கு!!”வலியில் முணகும் ஹஸ்கி குரலில் சொன்னவன், மூர்ச்சையானான்.

{28}

அவன் மூடப்பட்ட இமைகளின் பின்னே இருந்த கண்மணிகளோ… அங்குமிங்கும் மெல்ல அசைந்தன.
கடினப்பட்டு கண்களைப் பிரித்தவனின் பரந்த மார்பில், சற்றும் எதிர்பாராத வண்ணம் பஞ்சுக்குவியலின் அழுத்தம்!!
‘தனக்கு என்ன நடக்கிறது?’என்று புரியாமல் அதிர்ந்தவனின் நாசி…
அவன் பல இரவுகளில் அவஸ்தையுடன் தொலைத்த தன் மனைவியின் பிரத்தியேக வியர்வை மணத்தை நுகர, மெல்ல மெல்ல ஆசுவாசப்பட்டான் ஸ்ரீதர்.
கூடவே காதோரம் அவள் குரல்!! அவளது அழகு மனையாளின் குரல்!!
பாலைவனத்தில்.. நெடுந்தூரம் பயணப்பட்டுக் கொண்டிருந்தவனின் உடலில் பனிமழைச் சாரல் பொழிந்தாற் போன்று உள்ளே குளுகளுவென்றிருந்தது அவனுக்கு.
“பேபிக்கண்… ணாஹ்” என்றவளுக்கு அதன் பின் வார்த்தைகள் எழ வெகுநாழியானது. சொற்ப நேரத்திற்கு அழுகை தான் வந்ததே ஒழிய, வார்த்தைகள் தான் வரவில்லை.
பின்னே.. தன் உயிரைக் கொடுத்து.. குழந்தை உயிரை மீட்டவனாயிற்றே அவள் கணவன்??
கணவன் நெஞ்சோடு தலை புதைத்து.. குலுங்கிக் குலுங்கி அழுது கொண்டிருந்தவளுக்கு.. இன்னும் உடல் நடுங்கிக் கொண்டு தானிருந்தது.
அவள் நாசி நுனியோ அழுகையில் செர்ரிப் பழம் போல சிவந்திருக்க,
குழந்தையை அணைத்துப் பாதுகாத்த.. அதே அடிபடாத கையால்.. அழும் மனைவியையும் அணைத்துப் பிடித்துக் கொண்டான் ஸ்ரீதர்.
காயங்கள் வலிக்கின்றன; அதை விடவும் அவள் கண்ணீர் வலிக்கிறது.
அவள் கண்ணீர்த் துளிகள்.. அவன் மார்பை நனைத்துக் கோலமிட்டுக் கொண்டிருந்தது.
அழுகையை முயன்று அடக்கிக் கொண்டவளுக்கு இம்முறை விம்மல் வந்தது.
அந்த விம்மலுடனேயே,
“எ.. என்னால.. ஒரு வன் ஹவர் கூட நீ இல்லைன்னதும் தாங்க முடியலை ஸ்ரீ!! நீ கண்ணு முழிக்கும் வரைக்கும் நான் நானாக இல்லை பேபிக்கண்ணா!! … நா.. நான்.. எப்படி உன்னை விட்டு லைஃப்லோங் பிரிஞ்சிருந்திருக்க முடியும்?? நினைச்சுப் பார்க்கவே முடியலை பேபிக்கண்ணா.. நான்.. ந்நா.. உஉஉன்.. பொப்.. பொண்டாட்டி.. .. ஸ்ரீதர் பொண்டாட்டி எங்கேயும் போக மாட்டேன்… உன் கூடவே தான் இருப்.. பேன்.”என்று பேசிக் கொண்டே சென்றவளுக்கு நா தள்ளாடவே செய்தது.
தன் மார்பிலிருந்து தலை உயர்த்தியவனின் பார்வை.. விழித்திரை கலங்க அழும் மனைவியை காதலுடன் பார்த்தது.
அவன் கை மெல்ல நீண்டு.. அவள் கண்ணீரைத் துடைத்து விட, காய்ந்து போன இதழ்களோ, “அ.. அழாதேடி.. பொ.. ண்டாட்டி..” என்று சொல்ல,
தன் அழுகை.. கணவனுக்கு கஷ்டத்தைக் கொடுக்கிறது என்பதை அறிந்து கொண்ட அந்த பதிவிரதையும் தான் அழுவாளோ?
சட்டென தன் இரு கன்னங்களையும் அழுந்த துடைத்துக் கொண்டவள்,
வைராக்கியம் நிறைந்த விழிகளுடன், “ம்ஹூஹூம்… இ.. இல்.. ல.. நா.. நான் அ.. அழ மாட்டேன்…” என்றாள்.
அத்தனை வலிகளும், காயங்களும், உடற்சோர்வும் அவனை ஆட்டிப்படைத்தாலும் கூட, கண் முன்னே நிழலாடுகிறது.. நடந்த கூத்துக்கள் எதுவுமே அறியாமல் வெள்ளந்தியாக சிரிக்கும் குழந்தை!! அவன் குழந்தை!!
“க… ண்.. ணா.. எஎஎஎ.. ன் கண்ணா”-கம்மிப் போன குரலில்.. தன் மனைவியைப் பார்த்து குழந்தையைக் கேட்டான் அவன்.
அங்கே மருத்துமனை அறையில் பிரத்தியேகமாக கேட்டது விக்கி சித்தப்பாவின் குரல்.
திரும்பிப் பார்த்த ஸ்ரீதருக்கோ.. அப்போது தான் தன் அழகு மனைவியைத் தவிர தன் தாய், தகப்பனும், அவளின் தந்தை, சித்தி மற்றும் குழந்தையை ஏந்திக் கொண்டு இந்துவும், கூடவே சித்தப்பாவும் இருப்பதே புரிந்தது.
சித்தப்பாவோ, ஸ்ரீதரின் வலிமையான கையை ஆதரவாகப் பற்றிய படி, “அவனுக்கு ஒண்ணும் ஆகலை மச்சி.. இதோ பாரு.. நல்லா தான் இருக்கான் மச்சி” என்று இந்து கையிலிருந்த குழந்தையை சுட்டிக்காட்ட அப்போது தான் ஸ்ரீதரின் விழிகள் ஆசுவாசம் எய்தியது.
ஐஷூவைத் திரும்பிப் பார்த்தவனின் விழிகள் மட்டும் கண்ணீரில் சலம்பிப் போயிருந்தது.
தலைவனின் கண்ணீர் எந்த தலைவிக்குத் தான் பொறுக்கும்?
கண்ணீர் துடைத்து தலை கோதினாள் ஸ்ரீதரின் தேவி!!
மீண்டும் அழுகை வந்து தொண்டையை அடைக்க, மெல்ல குனிந்து.. கணவன் நெற்றியில் முத்தமிட்டவள் சொன்னாள்,
“அந்.. த பயங்கரமான காட்டில்.. குழந்.. தையை என் கையில தந்துட்டு.. நீ கண் மூடின அந்த நொடி!!! … எ.. என் உலகமும் இருட்டான ஃபீல்!! … சத்திய.. மா… இந்தப் பிரிவு, ஊடல்.. அந்த வலி.. இது எல்லாம் போதும் பேபிக்கண்ணா… இனி உன்னை விட்டு ஒரு நிமிஷம்.. ஒ.. ஒரு நிமி.. ஷம்… கூ.. கூட… பி.. பிரியவே என்னால முடியாது..”என்று.
அவனுக்கும், தன் காதல் மனைவி.. நனவிலும் தான் கேட்க விரும்பும் காதல் சொற்கள் உதிர்க்க… உடம்பெல்லாம் புல்லரித்தது.
அவளையே இமைக்காமல் பார்த்தவன் சொன்னான், “இனி நானும்.. என்ன நடந்தாலும் உன்னை விட்றதா இல்லை!!!” என்று.
அதைக் கேட்டு.. கண்ணீருடன் மெல்ல இவள் நகைக்க, தொடர்ந்து சொன்னான் ஐஷூவின் பேபிக்கண்ணா.
காதல் மீதூறும் ஹஸ்கி குரலில், “சண்டைப் பிடிச்சுக்கலாம்!! .. ஒருத்.. தரை ஒருத்தர் திட்டிக்கலாம்!! .. அடிச்சுக்கலாம்!! .. பிடிச்சுக்கலாம்!! ..ஆனால் நமக்குள்ள மட்டும்..!!. உனக்கு எப்போவுமே நான் பேபிக்கண்ணா தான்.. எனக்கு எப்போவுமே நீ.. என் காலேஜ் பியூட்டி.. என் பொண்டாட்டி ஐஷூ தான்..!!”என்றான் ஸ்ரீதர்.
பல மாதங்கள் கழித்து.. கணவனிடம் கிடைத்த நெருக்கம், காதுக்குள் ஒலிக்கும் தாபக்குரல் எல்லாமும் சேர்ந்து அவளை ஏதோ செய்ய மெல்ல தன் காதல் தலைவனை நோக்கிக் குனிந்தாள் தேவி.
குனிந்தவள் சுற்றுமுற்றும் திரும்பி.. அவர்கள் காதல் நாடகத்தை இதழில் புன்னகையுடன் கண்டு கழிக்கும் பெரியவர்களைப் பார்த்தாள்.
பின் நேரெதிரே இருக்கும் சித்தப்பாவைப் பார்த்தாள்.
அதன் பின் கணவன் மட்டும் கேட்கக் கூடிய விதத்தில் குரல் தாழ்த்தியவள் ,
“ ‘சண்டைப் பிடிச்சுக்கலாம்!! .. ஒருத்தரை ஒருத்தர் திட்டிக்கலாம்!! .. அடிச்சுக்கலாம்!! .. பிடிச்சுக்கலாம்!! ஓகே.. பட் இன்னொன்னு விட்டுட்டீங்களே?”என்று கேட்க,
அவன் விழிகள், ‘என்ன அது?’ என்பது போல சுருங்கியது.
அந்தப் பார்வையில் நயனம் தாழ்த்தி, நாணம் கொண்டவள் சொன்னாள், “ரொம்ப காதல் ஜாஸ்தியாயிருச்சுன்னா.. கட்டில் காலையும் உடைச்சுக்கலாம்!!”என்று.
அவள் கூற்றில்… அவளது பேபிக்கண்ணாவின் இதழ்களில் விரிந்தது ஓர் மந்தகாசப் புன்னகை!!
ஆண்களின் புன்னகை தான் எத்தனை அழகு!! வெள்ளைவெளேரென்ற பற்வரிசையுடன்.. கம்பீரமான அந்த மீசையும் சேர்ந்து சிரிக்கும் அழகை.. இமைகொட்டாமல் பார்த்து இரசித்தாள் அவள்.
அவள் ஸ்ரீதர் காதுக்குள் அப்படி என்ன சொன்னாள்? என்று புரியவில்லை தான். இருப்பினும் ஸ்ரீதர் முகம் அது தம்பதியர் மட்டும் பேசும் அந்தரங்கம் என்பதை காட்டிக் கொடுத்தது மற்றவளுக்கு.
கணவன் காதோரம் கண்ணீர் மல்க கிசுகிசுப்பவளா, அதே ஸ்ரீதரைப் பார்த்து, “நீ எனக்கு வேண்டாம்!!” என்றது?? என்றிருந்தது பெரியவர்களுக்கு.
என்ன தான் அர்ஜூன் கிறுக்குத்தனமான களகம் விளைவித்திருந்தாலும் கூட, அதுவும் ஒரு வகையில் ஐஷூவுக்கு ஸ்ரீதரின்றி வாழவே முடியாது என்பதை தெள்ளத் தெளிவாக காட்டிக் கொடுக்கவே செய்தது.
ஒரு வருடத்திற்கு பிறகு..
படித்த படிப்பின் உபயோகத்துக்காக வேலை என்று அலுவலகம் சென்று வந்து கொண்டிருந்தவளை, வேலைக்கு செல்ல விடாமல் தடுத்தான் அவன்.
அவனிடம் கணவனின் சம்பாத்தியத்தில் தான் பெண் வாழ வேண்டும் என்ற ஆணாதிக்கம் இல்லை.
மனைவி வேலை என்ற பெயரில் கஷ்டப்பட்டு உழைப்பது தான் பிடிக்கவில்லை.
அன்றொரு நாள்.. காதலின் ஆழம் தொட்டு மீண்டு வந்த அழகிய கூடலின் பின்னர்.. அவனது மயிரடர்ந்த வெற்று மார்பில் அடைக்கலமாகியிருந்தது அவள் ஒரு பக்கக் கன்னம்!!
கணவனின் வேகத்தில் இன்னும் பூமி வராத.. ஓர் சொர்க்கம் சென்ற மனநிலையிலேயே தவித்துக் கொண்டிருந்தவளின் காதுகளில் ஒலித்தது அவன் குரல்!!
அவளுக்காக சிந்தித்துப் பேசும்.. இதயம் தொட்ட அவன் குரல்!!
“அந்த வேலையை விட்டுடுடி பொண்டாட்டி.. இப்போ என்ன? .. அந்த வேலைக்கு போறதால் உனக்கொரு சிக்ஸ்டி தவுசன்ட் வருதா? ..
அதை மாசாமாசம்.. உன் சம்பள டேட் அன்னைக்கு டான்னு உன் பேங்கில் போட்றேன்.. அது உன் காசு… என்ன வேணா செலவு பண்ணிக்கோ.. யாருக்கு வேணும்னாலும் கொடுத்துக்கோ.. சல்லிபைசாவுக்கு கணக்கு கேட்க மாட்டேன்..நீயும் கணக்கு காட்டத் தேவையில்லை…
ப்ளீஸ்டி பொண்டாட்டி.. ஃபுல்நேர ஹோம் மேக்கரா இரு.. எதுக்காக கஷ்டப்படணும்?? நான் களைச்சுப் போய் வீடு வந்தா..காஃபி போட்டு தந்து.. என் மூடை மாத்த… ஃப்ரஷ்ஷா.. சிரிச்ச முகமா நீ இருக்கணும்..
அதை விட்டுட்டு.. நீயும், என் கூட வேலை விட்டு களைச்சுப் போய் வீடு வருவ..?லைப் போரடிக்கும்..!!” என்ற தலைவனின் காதலில் ஈர்க்கப்பட்டவள்..
முழுநேர இல்லத்தரசியாக.. காதலோடு கணவனையும், குழந்தைகளையும் கவனித்துக் கொள்ளும் பதிவிரதையானாள்.
***
அன்றைய மாலைப் பொழுதின் மயக்கத்தில்..
வீட்டில் அத்தையும், மாமாவும், திருகோணமலையில் இருக்கும் ‘திருக்கோணேஷ்வரம்’ கோயிலுக்கு தல யாத்திரை சென்றிருக்க..
அங்கே கிடைத்த அழகான தனிமையில்…!!
தூக்கம் களைந்து… மெல்ல மாடிப்படிகளை விட்டும் இறங்கி வந்தவளின் கண்கள், அவளது பேபிக்கண்ணாவையும்,
அந்தப் பேபிக்கண்ணா பரிசளித்த தன் குட்டி பேபிக்கண்ணாவையும் தான் தேடியது.
அந்த ராதையின் கண்களுக்கு துவாராகாவின் அரசனே கண்ணில் பட.. மெல்ல அவனை நாடிச் சென்றாள் அவள்.
சமையலறையிலே… எதையோ ஸ்பூனால் கரைத்துக் கொண்டிருந்தான் அவளது கணவன்.
பரந்து.. விரிந்த.. அவளுடைய இரு கைகள் சேர்ந்தாலும் அணைத்துப் பிடிக்க முடியாத திண்ணமான சாக்லேட் நிற முதுகு!!
முதுகின் வனப்பை சற்றே மறைத்து.. ஆண்மைக்கு அழகு சேர்க்கும் ஸ்லீவ்லெஸ் பனியன்!!
வீட்டுக்கு அணியும் ஷார்ட்ஸ் என.. அணிந்திருந்தவனைக் கண்டதும்,
‘இவன் என் சொத்து!’ என்று உள்ளம் முழுக்க ஆசைக் கிளர்ந்தெழவே, மெல்ல சென்று தன் கணவனின் முதுகை உரிமையுடன் அணைத்துக் கொண்டாள் அவள்.
மனைவியின் கைகள் அவனை அணைப்பது புரிய.. முதலில் விறைத்த அவன் உடல் மெல்ல மெல்ல இளகத் தொடங்கியது.
அவனது திடகாத்திரமான முதுகில், ‘நச்’சென்று மோதிக் கொண்டிருந்தன அவனது அழகு மனைவியின் திண்மைக் கோளங்கள்!!
பின்னங்கழுத்தில் வந்து வந்து உரசும் அவளது உஷ்ணமான மூச்சுக்காற்று!!
அவள் தரும் மென்மையான அழுத்தம்!!
உள்ளே உள்ளம் சாவதானமாக சிறகடித்துப் பறக்க, மெல்ல அரும்பியது ஓர் காதல் புன்னகை அவன் முகத்தில்!!
“ஹேய் பொண்டாட்டி.. என்ன? பாதியிலேயே எழுந்து வந்துட்ட?தூங்கலையா? ” – இரு டம்ளர்களுக்குமாக பாலை மாற்றி மாற்றி ஊற்றி, சூடாற்றிக் கொண்டிருந்தவன், மனைவியைத் திரும்பிப் பாராமலேயே கேட்டான்.
குழந்தை, குட்டி என்று வருவதற்கு முன்னர் தான்.. தம்பதியர்களுக்கு மதிய நேர உறக்கம் என்பது… கூடலின் களைப்பில் விளையும் சுகமான தூக்கம்!!
அதுவே குழந்தை, குட்டி என்று வந்ததன் பின்னர்.. தம்பதியர்களுக்கு மதிய நேர உறக்கம் என்பது.. குழந்தையை சமாளித்த களைப்பில் விளையும் அசதியான தூக்கம்!!
இந்த அழகான தம்பதியர்களுக்கும் இரண்டாவது வகையான உறக்கமே!!
கணவனின் ஜில்லென்ற முதுகில் தன் சூடான கன்னம் பதித்துக் கொண்டே,
“எங்கே தூங்குறது? நான் தான் நீ பக்கத்தில் இல்லாமல் தூங்க மாட்டேன்னு..உனக்குத் தெரியாது?? தூக்கத்துலே.. உன்னைத் தேடினேன்… நீ இல்லை.. திடீர்னு முழிச்சுப் பார்த்தால். .. பக்கத்துல உன்னையும் காணோம்.. பேபியையும் காணோம்..சரின்னு எழுந்து வந்தேன்.. இங்கே நின்னுட்டிருக்க?”என்றவள், காதல் மிகுதியில் கணவன் முதுகுக்கு.. சத்தமே வராமல் குட்டிக் குட்டி முத்தங்கள் பதிக்கலானாள்.
அவள் தூக்கத்தில் தன்னை தேடியிருக்கிறாள் என்றதும் அவன் புன்னகை இன்னும் விரிந்தது.
“கண்ணாவுக்கு ரொம்ப பசி..அவன் வேற சீக்கிரம் எழுந்திருச்சு… “ப்பா.. ப்பா”ன்னு கன்னத்துல தட்டி தட்டி என்னை எழுப்பி விட்டுட்டான்..இது அவனுடைய பால் சாப்பிட்ற டைமாச்சுல? திரும்பி உன்னை எழுப்பலாம்னு பார்த்தேன் .. அசந்து தூங்கிட்டிருந்த.. எழுப்ப மனசு வரலை.. அதான் நானே கவனிச்சுக்கலாம்னு..அவனை தூக்கிட்டு எழுந்திருச்சு வந்தேன்..” என்றவன் கரங்கள் சூடாற்றிய பாலை, பால்புட்டியில் அடைத்துக் கொண்டிருந்தது.
“ஸாரி… கொஞ்சம் தூங்கிட்டேன்..” என்று அசடுவழிய புன்னகைத்துக் கொண்டே சொன்னவளின் கைகள், இன்னும் இன்னும் இறுக்கத்தைக் கூட்டி சுற்றி வளைத்தன.
இவனுக்கோ, ஐஷூவின் செய்கையில் உடல் இளகினாலும் கூட மனைவியை நோக்கி.. உணர்ச்சிகள் ததும்ப.. திரும்பவேயில்லை அவன்.
அதுக்கும் ஓர் வலிய காரணம் இருந்தது. அதை அவன் வாய் விட்டு சொல்லவும் செய்தான்.
“ஹேய் பொண்டாட்டி.. முதல்ல உன் கையை எடு.. கண்ணா பார்த்தான் அவ்வளவு தான்..” என்று சொல்லி முடிக்க முன்னர்… கேட்டது அவர்களின் செல்லக்கண்ணாவின் குரல்.
தூரத்திலிருந்து.. அழுமூஞ்சியுடன் தன் பிஞ்சு எட்டுக்கள் எடுத்து வைத்து.. ஓடி வந்தவன், தன் தந்தையுடன் ஒட்டி நிற்கும் தாயின் கால்களைப் பற்றித் தள்ளி விட்டு,
“ம்..மா..ம்மா..நோ ஹக்கின் ப்ளீஸ்… ம்மா..”என்று அழுகுரலில் மொழிய,
‘இதோ வந்துட்டான்.. உன் கண்ணா!!’ என்று பெருமூச்சு விட்டுக் கொண்டே, கணவனிடமிருந்து ஒதுங்கினாள் அவள்.
தாய் விலகியதும், தந்தையை அண்ணாந்து நோக்கி இரு கை விரித்த குழந்தை.. தனக்கேயுரித்தான மழலைக் குரலில்,
“ப்பா.. ப்பா.. டூத்து (தூக்கு)..” என்று கூற, பூவாக மலர்ந்தது ஸ்ரீதரின் முகம்.
“வாடா!! வாடா!! கண்ணா!! ” என குழந்தையைக் கொஞ்சியபடி தந்தை கை நீட்ட, வேகமாக தாவி அணைத்துக் கொண்டே கிளுக்கி நகைத்தது குழந்தை.
ஒரு கையில் கண்ணாவை அநாயசமாக ஏந்தியவன், மறுகையால் பால் கொடுக்க ஆரம்பித்தான்.
“யாதவ் கண்ணா”- அவர்கள் முதற்குழந்தைக்கு வைத்த பெயர் அது.
அவள் வைத்த பெயர் ‘யாதவ்’, ஸ்ரீதர் அழைக்கும் பெயர் ‘கண்ணா’. இரண்டும் சேர்த்து ‘யாதவ் கண்ணா’!!
ஹாலில் விளையாடிக் கொண்டிருந்த.. மொழுமொழுவென்று..
தாழியில் வெண்ணெய் திருடித் தின்னும் அந்த கண்ணாவின் சாயல் கொண்டு பிறந்திருக்கும், அவர்களது ‘குட்டிக் கண்ணாவுக்கு’ தாய், தந்தையின் சின்னஞ்சிறிய சரசமும் புரிந்ததுவோ??
ஓடி வந்து விட்டான்!!
தாயை விட.. அவன் மிகவும் அன்பு வைத்திருக்கும் தந்தையை, தாய் உறவு கொண்டாடும் போது.. குழந்தைகளுக்குள் எழும் சின்ன பொறாமையே அது!!
உலகத்திலேயே அழகான பொறாமை!! குழந்தைகளின் பொறாமை!!
ஸ்ரீதரும் அந்த அழகான பொறாமையில் தான் மனம் இளகிப் போய் நின்றிருந்தான்.
அங்கே, தன்னை ஒதுக்கித் தள்ளி விட்டு.. கணவனுடன் உறவாடும் குழந்தையை பாசமும், சின்ன பொறாமையும் போட்டி போட பார்த்துக் கொண்டிருந்தாள் ஐஷூ.
தாய் என்ன சொல்கிறாள் என்பது புரியாமல்.. குழந்தை தாயையே பார்த்திருக்க, இவளோ போலிக் கோபம் மீதூற சொன்னாள்,
“நீ இப்போ..அம்மாவைக் கட்டிப்பிடிக்க விடாமல்.. அப்பாவை நல்லா கட்டிப் பிடிச்சிட்டே இரு.. ஆனால் ஆப்டர் டென் யர்ஸ்… ‘என் ஃப்ரெண்ட்ஸ் எல்லாருக்கும் தம்பி, தங்கச்சி இருக்காங்க.. எனக்கு மட்டும் ஏன்மா இல்லை?’ன்னு வந்து கேளு.. அப்போ இருக்கு உனக்கு??” என்று.
குழந்தைக்கோ தாய் என்ன சொல்கிறாள் என்று புரியவில்லை.
இருப்பினும் தாய் தன் அகன்ற நயனங்கள் ஆட்டி ஆட்டி, கை விரல்கள் காட்டிக் காட்டிக் கதைக்க.. தாய் தன் மீது கோபம் கொள்கிறாள் என்பது மட்டும் புரிந்தது.
தாய் இதே போல தந்தையை திட்டும் போது.. தந்தை.. ‘ஈ’யென்று தன் முத்துமூரல்கள் காட்டி சிரித்து வைத்து, தாயை மலையிறக்குவதை அவதானித்துப் பழகிய குழந்தையும்,
பால் அருந்துவதை நிறுத்தி விட்டு,
தன் நான்கே நான்கு அணில் பற்கள் தெரிய..கண்கள் ‘ஈ’யென்று நகைத்து வைக்க,
அந்தக் குட்டிக் கண்ணனின் சிரிப்பிலும் தான் மயங்காதாரும் உளரோ??
இவள் பெற்றவள் அல்லவா?? குழந்தையின் செய்கையில் பாகாய் உருகிப் போயிற்று பெற்றவள் உள்ளம்!!!
ஸ்ரீதரோ வாய் விட்டு நகைத்துக் கொண்டே, “பாரேன்.. என் கண்ணா அப்படியே.. என் ட்ரிக்ஸை யூஸ் பண்றான்.. இவன் பொழைச்சுக்குவான் ஐஷூ!!” என்று கன்னத்தில் முத்தம் வைக்க,
அதை ஏக்கத்துடன் பார்த்துக் கொண்டிருந்தது இன்னொரு குழந்தை
இலேசான பெருமூச்சு வெளிப்பட, குழந்தையைப் பார்த்தவள், “பெத்தது மட்டும் தான் நானு.. மத்த எல்லாத்துக்கும் அப்பா!! அப்பா!! அப்பான்னு உன் பின்னாடி அலையுறான்..” என்றுரைக்க,
துணைவியின் ஆற்றாமை புரிய, அவளை தோளோடு கையிட்டு அணைத்துக் கொண்டவன்,
அவள் காதோரம் கிசுகிசுப்பாக,
“விடுடீ பொண்டாட்டி… இப்போ என்ன நம்ம கண்ணாவுக்கு தம்பி, தங்கச்சி வேணும்.. அவ்வளவுதானே… பார்த்துக்கலாம்!! அதுக்கு நான் கியாரண்டி!! ” என்று சட்டெனக் கண்ணடித்து சில்மிஷப் பார்வையுடன் சொல்ல,
அந்த அந்திமாலைப் பொழுதில் மேற்கு வானின் சிவப்பைத் தோற்கும் படி சிவந்தது அவள் கன்னக்கதுப்புக்கள்!!
அவள் மட்டும் அன்று, அவசரப்பட்டு விவாகரத்து எடுத்திருந்தால்.. இன்று அவளது குழந்தைக்கு.. தந்தையன்பு என்பது பூரணமாக கிடைத்திருக்குமா??
இல்லை அவளாலும் தான்… பேபிக்கண்ணாவை முழுமையாக பிரிந்திருக்கவும் முடியுமா?
பெரிய தவறு செய்யாமல் தப்பித்தோம் என்று பல தடவைகள் அவள் எண்ணி மகிழ்ந்ததுண்டு.
சின்னவனும், தந்தை மேல் உயிரையே வைத்திருந்தான்.
சராசரிக் குழந்தைகள் பேச்சு வரும் போது, அம்மா என்று சொல்ல, குட்டிக் கண்ணா அழைத்தது “அப்பா” என்று தான்.
குளியலறை பாத்டப்பில்.. குட்டி குட்டி வாத்து பொம்மைகள் நிரப்பி.. தண்ணீரை.. குழந்தை அடித்து அடித்து விளையாடிக் கொண்டிருக்க.. அதை இரசித்துக் கொண்டே குழந்தையை குளிப்பாட்டிக் கொண்டிருந்தாள் அவள்.
மிதமான சூட்டில், குளித்துக் கொண்டிருந்த யாதவனோ, திடீரென்று வாயெல்லாம் பல்லாக புன்னகைத்துக் கொண்டே, “அப்பா” என்றான் அவன்.
குழந்தையிடம் தான் கேட்டது சரிதானா? என்று கேள்வி எழ.. கண்களை அகல விரித்து ஜர்க்காகி நின்று விட்டாள் அவள்.
நிஜமாகவே தன் குழந்தை “அப்பா” என்றானா?? இல்லை அது ‘அம்மா’ வாக இருந்திருக்க வேண்டும்! எல்லா குழந்தையும் முதலில் அம்மா என்று தானே சொல்லும்??
வாத்து பொம்மையை எடுத்து ஆட்டி ஆட்டிக் காட்டி, “அம்மா சொல்லு கண்ணா.. அம்மா சொல்லு.. அம்மா.. அ.. அம்.. மா”என்று ஒவ்வொரு எழுத்தாக அவள் உச்சரித்துக்காட்ட,
தண்ணீரில் கையை ஓங்கியடித்து.. தாயின் உச்சந்தலை, கூந்தல், முகம் எல்லாம் நனைத்தவன், சிரித்துக் கொண்டே சொன்னான்,
“ப்..பா..”என்று.
அதற்குப் பிறகு… அவளுக்கு கையும் ஓடவில்லை. காலும் ஓடவில்லை. கணவன் மேல் அன்பு கொண்டிருக்கும் அந்த மனைவியோ..
பாத்ரூமூக்குள் வைத்தே.. வீடியோ கால் எடுத்தாள் ஆபிஸிலிருக்கும் அன்பு கணவனுக்கு.
வழமையாக சாதா கால் எடுக்கும் மனைவி.. இன்று வீடியோ கால் எடுத்திருப்பது பார்த்ததும்.. நிலைமை ரொம்ப சீரியஸ் என்று எண்ணியிருந்திருப்பான் போலும்.
முக்கியமான கான்ஃபரன்ஸை விட்டு வெளியே வந்தவன், சற்றே பதற்றத்துடனேயே மனைவியின் அழைப்பை ஏற்றான்.
அவன் கண்கள்.. திரையில் தெரியும் பேரழகியான மனைவியின் கண்களிலோ, முகத்திலோ களேபரம் தெரிகிறதா என்று ஆராய்ந்து,
‘அப்படியேதும் தென்படவில்லை’ என்றதும் தான் அமைதியானது.
“ஏன்மா கால் பண்ண??”- மென்மையாகவே கேட்டான் அவன்.
அவளோ பாத்டப்பில் குளித்துக் கொண்டிருக்கும் குழந்தையைக் காட்டி, ஆனந்தக் கண்ணீர் மல்க, “இங்கே பாருங்களேன்.. இவன் “அப்.. அப்பா” சொல்றான்..” என்றவள்,
குழந்தையிடம் திரும்பி,
“கண்.. ணா.. அப்பா.. அப்பா.. அப்பா சொல்லு..”என்று இவள் வேகத்துடன் கேட்க,
திரையில் தெரிந்த தந்தையைக் கண்டதும் வெட்கம் வந்தது பிஞ்சுக்கு.
சுட்டுவிரலை வாய்க்குள் அதக்கி.. நாணிச் சிரித்துக் கொண்டே
“ப்பா…” என்று சொல்ல, அதைக் கேட்டவனின் இதய வானுக்குள்ளே ஆயிரம் மத்தாப்பு வெடித்தது.
கால்கள் தரையில் பாவாமல்.. ஆகாயத்தில் பறந்தவனுக்கு, கான்ஃபரன்ஸாவது.. வேலையாவது??
“ஐஷூ… அ.. அவன்.. அப்பா சொல்றான்டி.. என் பையன்.. என்னை அப்பான்னு சொல்றான்…” என்றவன் கண்களிலும் ஆனந்தக்கண்ணீர் துளிர்விட,
இவள், “ஆமா” என்று தலையாட்ட,
தன் வாரிசை நோக்கியவன், “கண்ணா.. அப்பா.. அப்பா… நான்..அப்பா.. வரேன்..” என்று உச்சகட்ட மகிழ்ச்சியில் ஏதேதோ பிதற்றியவன்,
தன் மேலிடத்துக்கு என்ன சொன்னானோ.. ஏது சொன்னானோ? அடுத்த அரைமணித்தியாலத்தில் வீட்டில் இருந்தான்.
கேஎப்சி சிக்கன் பக்கெட், பர்கர்ஸ் மற்றும் கோக் என களைகட்டியது ஸ்ரீதரின் வீடு.
பையன் “அப்பா” சொன்னதை வீடியோ எடுத்து இன்ஸ்டாகிராமிலும், பேஸ்புக்கிலும் போட்டு அதகளப்படுத்தியிருந்தான் ஸ்ரீதர்.
ஸ்ரீதர் தந்தை, தாய் ராஜேஷ்வரியம்மாள் எல்லாரும்… தத்துநடை நடக்கும்.. குட்டிக்கண்ணாவைப் பிடித்து வைத்து,
“தாத்தா சொல்லுடா கண்ணா.. சாக்கி வாங்கி தரேன் தாத்தா.. “தாத்..தா”..தாத்தா சொல்லு கண்ணா”
“தாத்தா..சொல்றது ஈஸின்னு நினச்சிங்களா? இந்த வயசுல உங்க தாத்தாவை நீங்களே கூப்பிட்டிருக்க மாட்டீங்க.. என் பேரன் மட்டும் கூப்பிடணுமாக்கும்… அவனுக்கு பாட்டி தான் ஈஸி..
உங்களை விட என் பேராண்டிக்கு பாட்டி என்னை தான் ரொம்ப பிடிக்கும்.. இப்போ பாருங்க.. அவன் என்னா அழகா பாட்டி சொல்வான்னு.. பாட்டி சொல்லுடா கண்ணா.. பாட்.. டி” என்று எத்தனையோ சூட்சுமங்கள் செய்தும்,
அவன் புன்னகையுடனேயே தாத்தா, பாட்டியை அலட்சியம் செய்து.. தந்தையை சுட்டிக் காட்டி,
“ப்.. பா..” என்றே சொன்னான்.
குழந்தை எத்தனையோ முறை, “ப்…பா.” என்று அழைத்த பின்னும் கூட.. அவன் அழைக்கும் ஒவ்வொரு முறையும் முதன்முறையாக அழைத்துக் கேட்பது போல பரவசம் பிறந்தது ஸ்ரீதருக்குள்.
தன்னிடம், கை நீட்டிக் கொண்டே ஓடி வரும் குழந்தையை.. குனிந்து தூக்கி.. தட்டாமாலை சுற்றி.. கன்னத்தில் அழுந்த முத்தம் வைத்த ஸ்ரீதர் புதிதாகப் பிறந்தான் அன்று.
அந்த நேரம்…
மதிய உணவுக்காக வீடு வந்த மெக்கானிக் சித்தப்பா,
வீடு முழுதும் விரவிக் கிடக்கும் கேஎப்சி சிக்கன் வாசனையை மோப்பம் பிடித்துக் கொண்டே உள்ளே வந்து,
“என்னடா சிக்கன் வாசனை தூக்குது? என்ன ஸ்பெஷல்?.. பையனுக்கு ப்ரமோஷன், கிமோஷன் கிடைச்சிருச்சா..? இல்லை.. உன்னை மாதிரி சின்ஸியரா.. பொண்டாட்டிக்கு சேவகம் பண்ற குடும்பஸ்தன்லாம் வேலைக்கு வேணாம்னு தூக்கிட்டாங்களா??அதனால.. இனி இருபத்திநாலு மணிநேரமும் ஐஷூ கூட இருக்கலாம்ன்ற சந்தோஷத்தில் ட்ரீட் வைக்குறியா? ” என்ற வண்ணம்,
டீபோய் மீதிருந்த சிக்கன் பக்கெட்டில் ஒரு லெக்பீஸை எடுத்து சுவைபார்க்கவும் செய்தான்.
சித்தப்பா பேசியதை கணக்கில் எடுக்காத ஸ்ரீதரோ, தன் சித்தப்பாவை சுட்டிக்காட்டி,
“அப்போ இது..?” என்று உறவுமுறைக் கேட்க, எப்போதும் தன்னுடன் சேர்ந்து குறும்பு செய்யும் சித்தப்பாவைப் பிடித்துப் போன குழந்தையோ,
தன் மிழற்றும் குரலில்,
“சி.. ப்பா..” என்று கூற,
அதைக்கேட்ட சித்தப்பா கையிலிருந்த லெக்பீஸ் மீண்டும் பக்கெட்டுக்குள்ளேயே நழுவி விழுந்தது.
வாய்க்குள் அகப்பட்டிருந்த சிக்கனை மெல்லாமல், குழந்தையை நாடி மந்திரத்துக்கு கட்டுண்டவன் போல நடந்து வந்தவன்,
குழந்தையின் கன்னத்தை வருடி,
“டேய் இந்த ஃபேமிலிலேயே.. இந்த யூத் சித்தப்பா ஃபீலிங்க்ஸ் புரிஞ்சிக்கிட்டதே நீ ஒருத்தன் தான்டா..”என்று குழந்தையை, ஸ்ரீதர் கையிலிருந்து தூக்கி கன்னத்தில் முத்தம் வைத்தான்.
ஆனால் வேண்டுமென்றே, சித்தப்பாவை கலாய்க்க நாடிய ஸ்ரீதர், “என்ன சித்தப்பா போங்காட்டம் ஆடுறியா? எனக்கும் சித்தப்பா.. என் பையனுக்கும் சித்தப்பாவா? .. நீ அவனுக்கு சின்ன தாத்தாடா..” என்று சொல்ல,
கடுப்பில் உச்சுக் கொட்டிக் கொண்டே, ஸ்ரீதரை முறைத்துப் பார்த்தவன்,
“ப்ம்ச்சு.. டேய் நல்லா பாருடா.. என்னைப் பார்த்தா.. தாத்தா மாதிரியா இருக்கு… இன்னும் ஒரு முடி கூட நரைக்கலைடா… அதுக்குள்ள தாத்தா சொல்ற??? ரைட்டு விடு.. நான் இவன் சித்திக்கு புருஷனாகப் போறவன்.. அப்போ நான் இவனுக்கு என்ன முறை வேணும்?? சித்தப்பா தானே?” என்று கூற அப்போதும் விடவில்லை ஸ்ரீதர்.
“சித்தப்பா மறுபடியும் போங்காட்டம்.. நீ இன்னும் இந்துவை கட்டலைல? அப்போ எப்படி நீ சித்தப்பா.. நீ சின்ன தாத்தா தான்!!” என்றவன்,
தன் குழந்தையை நோக்கி, “டேய் கண்ணா இது உன் சின்ன தாத்தாடா.. சின்ன தாத்தா.. சின்ன தாத்தா சொல்லு.. “சின்ன தாத்.. தா”” என்று சொல்லிக் காட்ட,
குழந்தையும் தந்தையுடன் இணைந்து மெக்கானிக் சித்தப்பாவை கலாய்க்க நாடியது போலும்.
“சித்.. தாத்.. ஆ”என்று தந்தை மொழிந்த “சின்ன.. தாத்.. தா” என்ற மெட்டிலேயே தலையாட்டி மொழிய,
ஹய்யோடா என்று தலையில் கை வைத்து நிற்கும்படியாயிற்று சித்தப்பாவுக்கு.
அவன் நிற்கும் தோரணைக் கண்டு..வெடிச்சிரிப்பு கிளம்பியது அங்கு நின்றிருந்தவர்கள் மத்தியில்.
எதற்கு சிரிக்கிறார்கள் என்று புரியாவிட்டாலும் தானும் “எதற்கும் சிரித்து வைப்போம்” என்று சிரித்து வைத்தது குழந்தையும்!!
***
தன்னுடைய பைக் கீயை ஒற்றை விரலால் சுற்றிக் கொண்டே, ஸ்ரீதர் வீட்டு வாசற்படியேறி வந்தவனின் கண்களில் விழுந்தான் ஸ்ரீதர்.
கண்ணாடி சுவர்கள் கொண்டு ஆக்கப்பட்டிருக்கும் ஸ்ரீதர் வீட்டு சமையலறையில் இருக்கும் டைனிங் டேபிளில், தனியாக அமர்ந்து செல்லை நோண்டிக் கொண்டிருக்கும் ஸ்ரீதர் கண்களுக்குப் படவே,
நேரே அவனை நாடிச் சென்றான் விக்கி சித்தப்பா.
“மச்சீஈ.. மச்சீஈஈ…” என்று ஸ்ரீதரை நோக்கி கத்திக் கொண்டே வந்தவனை, ஏற இறங்கப் பார்த்தான் மேனேஜர் ஸ்ரீதர்.
இவனோ, அந்த முனை டைனிங் டேபிளில் ஸ்ரீதர் அமர்ந்திருக்க.. அவனுக்கு நேரெதிரே நின்ற வண்ணம்,
“நீ சொன்ன மாதிரியே..அந்த பொக்கேய…” என்று ஏதோ சொல்ல வர,
விக்கியின் சொல்கேட்டு அதிர்ந்து போனான் ஸ்ரீதர்.
அமைதியாக அமர்ந்திருந்தவனின் முகத்தில் கலவரம் பூத்தது. சட்டென கையிலிருந்த செல்லை டேபிளில் வைத்து விட்டு சித்தப்பாவைப் பார்த்தவன்,
இதழ்களுக்கு ஒற்றை விரலால் கேடயமிட்டு, மறைத்தவன்,
“உஷ்!!! உஷ் !!…”என்று சொல்ல அதன் பொருள் விளங்காமல் தவித்தான் மெக்கானிக் சித்தப்பு.
இடுங்கிய புருவங்களுடன் இவனும், “என்ன உஸ்ஸூ.. உஸ்ஸூ… சொல்றதை கேளு மச்சி.. அப்புறம் சொல்ல வந்ததை மறந்துடுவேன்..” என்றவன் அதற்குப் பிறகு ஸ்ரீதரைத் திரும்பியும் பார்த்தானா?
ஒருவேளை பார்த்திருந்தால்.. சொல்ல வந்ததை அப்படியே பாதியிலேயே நிறுத்தியிருக்கலாம்.
சித்தப்பாவோ.. அருகிலிருந்த ஃப்ரிட்ஜைத் திறந்து.. அதற்குள் நுழைந்து,
ஏதாவது சாப்பாடு ஐட்டம்கள் இருக்கிறதா என்று நோட்டம் விட்ட வண்ணமே,
“மச்சி நீ சொன்ன மாதிரியே.. “பூ பூ”ன்ற பேரில்.. ஃப்ரஷ் ஆர்கிட்ஸ் அனுப்பிட்டேன்… இன்னைக்கே வந்துரும் மச்சி.. கல்யாணமாகி இத்தன வருஷமாச்சு.. இதுக்கு அப்பறம் ஏன்டா இந்த பூ பூ ன்ற பேரில் விளையாட்டெல்லாம்..”என்றவன்,
அதிலிருந்த ஒரு ஜூஸ் பாட்டிலை எடுத்துப் பருகியவாறே, “நேரா ஐஷூகிட்ட போய் நான் தான் உனக்கு கிப்ட்ஸ் அனுப்ச்ச பூ பூன்னு சொல்லிடேன்..” என்று கூற,
நம் ஸ்ரீதரோ.. தலையில் அடித்துக் கொள்ளாத குறையுடன் நின்றிருந்தான்.
அவன் கண்களோ சித்தப்பாவைப் பாராமல்.. சித்தப்பாவின் பின்னேயே தன் அவதானத்தை வைத்திருந்தது.
அதிலும் இதழோரம் இலேசாக குறும்புன்னகைப் படர.. ஸ்ரீதரின் தீட்சண்யம் மிக்க கண்கள், மிக மிக மிருதுவாக மாறிப் போயிருந்தது.
தன் குட்டு வெளிப்பட்டு விட்டதே என்ற எந்தத் திருட்டு விழியும் இன்றி ஸ்ரீதர் சொன்னான்,
“நான் எதுக்கு சொல்லணும்… அதான் நீயே சொல்லிட்டியே??”என்று.
“நான் எப்போ சொன்னே..?”- ஜூஸைப் பருகிய வண்ணமே புரியாமல் சித்தப்பா கேட்க,
அவன் முதுகுக்குப் பின்னே வெகுவெகு அருகாமையில் கேட்டது திருமதி. பேபிக்கண்ணாவின் குரல்!!
“விக்கி மாமா.. டிபன் சாப்பிட்றீங்களா?” என்று ஐஷூவின் குரலில் மெல்ல திரும்பிப் பார்த்தான் சித்தப்பா.
அங்கே ஐஷூவோ.. தன் சேலைக் கொசுவத்தை இடையில் சொருகி.. மார்புக்கு குறுக்கே இரு கை கட்டிய வண்ணம் நின்று.. ஒற்றைப் புருவம் மட்டும் உயர்த்தியிருக்கக் கண்டான் அவன்.
அவள் நின்றிருந்த கோலத்திலேயே, ஐஷூ அத்தனையும் கேட்டுக் கொண்டிருந்திருக்கிறாள் என்பது புரிய… சித்தப்பா ஜர்க்காகி நிற்கும் மனோநிலைக்குத் தள்ளப்பட்டான்.
கையிலிருந்த ஜூஸ் பாட்டிலை அப்படியே மேசையில் வைத்து விட்டு நிமிர்ந்தவன்,
“வேணாம்மா.. வெளியில் சாப்பிட்டுட்டு தான் வந்தேன்… நீ உன் பேபிக்கண்ணாவுக்கே கொடு…” என்ற வண்ணம் சித்தப்பா எஸ்ஸாக.. ஐஷூவின் மாறாத பார்வை, தற்போது கணவனைத் துளைக்கவாரம்பித்தது.
சேரிலிருந்து எழுந்து மனைவியை நாடி வந்தவனுக்கோ, எங்கே, ‘நான் தான் அந்த அநாமதேய கடிதம் எழுதிய “பூபூ” என்று ஏன் சொல்லவில்லை?”என்று கோபம் கொண்டு விடுவாளோ என்ற பயம் ஒரு பக்கம்!!
இப்போது தான் சனிப்பெயர்ச்சி முடிந்து.. சந்தோஷமாக சென்று கொண்டிருக்கும் வாழ்க்கையில் மீண்டும் ஏதேனும் அசம்பாவிதம் நிகழ்ந்து விடுமோ என்ற பதற்றம் ஒரு பக்கம்!!
மனைவியை நாடி வந்து, தன் காது நுனி பிடித்து.. தோப்புக்கரணம் போட்டவன், “ஸாரிடி பொண்டாட்டி..” என்றுரைக்க,
படபட பட்டாசாக வெடித்தாள் ஸ்ரீதரின் அழகு மனைவி.
“ஏ.. ஏன் இந்த நடிப்பு?? நான் தான் பூபூன்னு அன்னைய்க்கு லெட்டர் வந்தப்போவே ஏன் சொல்லலை?”- கோபத்தில் அவன் காதைப் பிடித்துத் திருகிய வண்ணமே கேட்டாள் ஐஷூ.
மனைவியின் திருகல் துளியளவும் வலிக்கவேயில்லை தான். இருப்பினும் வலிப்பது போலவே ஆக்டிங் கொடுத்தான் நம்மாளு.
“ஸ்..ஆ..ஸாரி…” என்றவனாக அவள் திருகலில் இருந்து கழன்று கொண்டவன்,
“அ.. அதை அன்னைய்க்கு.. காலேஜ்ல லாஸ்ட் டே அப்போ.. நான் உனக்கு ப்ரப்போஸ் பண்ணப்போவே ஷாக்கிங் சர்ப்ரைஸா.. நான் தான் உனக்கு கிப்ட் அனுப்ச்ச அந்த பூபூன்னு சொல்லலாம்னு இருந்தேன்.. பட் அதுக்குள்ளே என்ன என்னமோ ஆகிப்போச்சு..” என்றவனின் கண்களில் ஒரு நொடி மின்னல் போல வந்து போனது அன்றைய நினைவுகளின் தாக்கம்!!
கணவனின் முகத்தையே பார்த்திருந்தவளுக்கும், அவனின் மனோவேதனை புரிய.. அவளுக்கோ… உள்ளே ஏதோ வலித்தது.
அவனருகே நெருங்கி வந்து கழுத்தோடு மாலையாக தன் கைகளை சுற்றிக் கொண்டவள், அவன் விழியோடு தன் விழி பார்த்தாள்.
பிறகு சொன்னாள், “அப்போ இருந்த அந்த திமிர் பிடிச்ச ஐஷூவுக்கு அந்த பூபூ நீ தான்னு தெரிஞ்சிருந்தாலும்.. அதே மாதிரி தான் உன்னை உதாசீனப்படுத்தியிருப்பேன்..
ஆனால் பூபூவையும், அவன் லெட்டரையும் மிஸ் பண்ண ஆரம்பிச்சது.. இந்த ஐஷூவை சுத்தியிருந்த பணத்தை நேசிக்குற உலகம் விட்டுட்டுப் போனப்போ தான்..” என்று.
மனைவி எளிய விஷயமாக அதை எடுத்துக் கொண்டது அவனுக்கு திருப்தியைக் கொடுக்க,
அவளைத் தன்னோடு நெருக்கியணைத்த வண்ணம் காதலுடன் நகைத்தான் பேபிக்கண்ணா.
அப்போது இலேசாக சிலிர்த்துக் கொண்டாள் கண்ணனின் ராதை.
“ஆனால் எல்லாத்தையும் மன்னிச்சிடுவேன்டா.. அன்னைய்க்கு பூபூவுடைய கிப்ட் வந்தப்போ… பூபூ யாருன்னே தெரியாத மாதிரி ஆக்ட் பண்ணதை தான் மன்னிக்கவே மாட்டேன்..” என்று போலிக் கோபம் மீதூற சொல்ல,
சிரித்துக் கொண்டே தன் மனம் திறந்தான் இவன்.
“அன்னைய்க்கு எனக்குள்ளே ஒரு உரிமை சண்டை.. இவளுக்கு என்னை பிடிச்சிருக்கா? இல்லை பூபூவை பிடிச்சிருக்கான்னு..” என்று அவன் ஏதோ சொல்ல வர, அதை முடிக்க விட்டாளா இவள்??
கணவனின், சட்டைக்காலர் பட்டனைத் திருகியபடி.. தாபக்குரலில், “ம்ஹூம்.. இந்த உலகத்திலேயே எனக்கு.. என் சாக்லேட் பாய் பேபிக்கண்ணாவைத் தான் பிடிக்கும்…”என்று முந்தியடித்துக் கொண்டு சொன்ன மனைவியின் இதழ்களையே..
கள்ளுண்ட மந்தி போல் பார்த்திருந்து சாப்ட்லாஜிக்கின் மேனேஜர் மந்தி.

{29}

ஐந்து வருடங்களுக்குப் பிறகு,
சுபயோக சுப தினத்தில்,
பெரியவர்கள் கூடி நின்று அட்சதை தூவி வாழ்த்த…
ஸ்ரீதரின் சித்தப்பா விக்னேஷ்…
ஐஷூவின் தங்கை இந்திராவின் கழுத்தில், மூன்று முடிச்சிட்டு தன் திருமதியாக ஆக்கிக் கொண்டான்.
இந்துவின் படிப்பு நல்லபடியாக முடிந்து.. அவள் டாக்டர் பட்டம் பெறவும்,
விக்னேஷ் சித்தப்பாவும்.. தன் மனைவியின் தரத்துக்கு கல்வியில் உயர்நிலை அடையாவிட்டாலும்..
சமூகத்தில் தனக்கென்று ஓர் நிலையை அடையவும் இந்த ஐந்து வருடகால அவகாசம் இருவருக்கும் தேவைப்பட்டது.
அவர்களின் உண்மையான காதல், காத்திருந்தது; எதிர்கால லட்சியங்களை மனதில் நிறுத்தி.. காதல் சிற்றின்பங்களைத் தள்ளி வைத்து.. வாழ்வில் ஜெயிக்கவும் வைத்தது.
விக்னேஷூக்காக என்றே.. தான் சேமித்து வைத்திருந்த பெருந்தொகைப் பணத்தைக் கொடுத்த ஸ்ரீதர்,
“வாய் நிறைய உன்னை சித்தப்பா சித்தப்பான்னு கூப்பிட்டாலும்… நீ என் அம்மா வயிற்றில் பிறக்கலைன்னாலும்.. உன்னை கூடப் பொறந்த அண்ணனா தான் நினைக்குறேன் சித்தப்பா..
நீ அந்த ஒத்த ஷெட்டை வைச்சிட்டு மாரடிக்க.. நான் மட்டும் உன்னை கவனிக்காமல்.. முன்னேறிட்டே போனால் நல்லாவா இருக்கு..?
இதே உன் இடத்தில் நான் இருந்திருந்தால்.. என்னை அப்படியே விட்டுருவியா சித்தப்பா..? இல்லைல? அதையே தான் நானும் இப்போ பண்ணுறேன்” என்றவன்,
சித்தப்பா கையில் பணத்தைத் திணித்து,
“இந்த பணத்தை வைச்சுக்கிட்டு..உன் மெக்கானிக் ஷெட்டை டெவலப் பண்ணு… நாளை பின்ன.. பொண்ணு டாக்டர்.. பையன் சாதா மெக்கானிக்னு ஊர் சொன்னா.. என் மனசு தாங்குமா??”என்று கூறியவனின் கண்கள் கலங்க,
அதை மறைக்க முத்துமூரல்கள் காட்டி நகைத்து.. நிலைமையை சமாளிக்கும் கணவனையே விழுங்கி விடுபவள் போல பார்த்திருந்தாள் ஐஷூ.
இவன் என்ன மாதிரியான மனிதப் பிறவி??
தீயினால் சுட்ட புண் உள்ளாறும் – ஆறாதே
நாவினால் சுட்ட வடு” என்று வள்ளுவர் பெருமானே சொல்லியிருக்க, அவள் தலைவன் அவள் பேசிய அத்தனை பேச்சுக்களையும் மறந்தான் ;மன்னித்தான்.
அவள் நிலை தாழ்ந்ததும்..அவளை நோக்கி ஓர் ஏளனப்பார்வை சிந்திவிட்டு கடந்து செல்லும் நிலை வந்தும் மணந்தான்; வாழ்க்கை கொடுத்தான்.
பழிவாங்க சந்தர்ப்பம் கிடைத்தும்.. காதலிக்க சந்தர்ப்பம் உருவாக்கினான்.
அந்த கொடூரன்.. “அர்ஜூனுக்கு” இரத்தம் கொடுத்து, உதவி செய்தும்.. அந்த பாவி முதுகில் குத்திய பின்னும் இன்று வரை அவ்வுதவியை ஐஷூவிடம் கூட சொல்லிக் காட்டியிருக்கிறானா அவன்?
குழந்தையை கடத்திய குற்றத்துக்காக.. சிறை சென்று வந்த அர்ஜுன் ,
ஆக்ஸிடெண்ட்டில் கால்களை இழந்த பின்னும், ‘பார்த்தியா? ஒரு பாவமும் அறியாத நம்ம குழந்தையை கொல்லப் பார்த்தான்ல? அதற்கு கடவுளே கொடுத்தான்?’ என்று ஒருவார்த்தை கூட மனசார சொன்னானா அவன்?
இப்போது விக்னேஷ்.. கொழும்பு முழுவதிலும் ஐந்து மெக்கானிக் ஷெட்டிற்கு மேல் வைத்து நடத்தி..
தன் சட்டையில் ‘இத்தணூண்டு’ கூட அழுக்கு படாமல்.. நாற்பது பணியாளர்களுக்கு மேல்… சம்பளம் கொடுக்கும் முதலாளியாக விக்கி மாற அவள் தலைவன் தானே காரணம்?
இத்தனைக்கும் மேலாக முதல் குழந்தை மட்டுமே அனைத்து தம்பதியர்களுக்கும் சம்திங் ஸ்பெஷலாக இருக்க…
இந்த ஐந்து வருடங்களில் மூத்தவன் யாதவனைத் தொடர்ந்து பிறந்திருந்த, நான்கு வயதேயான “சந்தோஷ்” பிறந்த போதும் சரி..
முதல் குழந்தைக்கு இருந்த பரவசம், தவிப்பு, பாசம்.. அத்தனையையும் இளையவன் மேல் கொட்டியதும் கூட அவளை இன்னும் இன்னும் தன் தலைவன் பால் ஆகர்ஷிக்கவே செய்தது.
முதல் குழந்தைக்குப் போல.. இரண்டாவதுக்கும் குறைப்பிரவசம் நேர்ந்து விடவே கூடாது என்பதில் மட்டும் குறியாக இருந்தான் அவன்.
கணவனின் நடத்தைகள்!!
அவள் மீது அவன் காட்டும் காதல்!!
இரவில் மஞ்சத்தில் கோட்டான்கள் மட்டுமே விழித்திருக்கும் அந்த நடுநிசியில் கணவன் காட்டும் அசுரத்தனமான வேகம்!!
பகலில் குழந்தைகளோடு குழந்தையாய் மாறும் வெள்ளந்தி நேசம்!!!
எல்லாமே ஆயிரம் காதல் உணர்த்தும் அவளுக்கு.
கீழே விக்கி சித்தப்பாவும், இந்துவும் தங்கள் தேனிலவிற்காக, இலங்கையின் கொடைக்கானலான “நுவரெலியாவிற்கு” செல்ல.. விடைபெற ஆயத்தமாகிக் கொண்டிருந்தனர்.
தங்கையை வழியனுப்பி வைக்க, அறையிலிருந்து .. மாடிப்படியிறங்கி வந்தவளின் வயிற்றை.. பின்னோடு இருந்து இரு வலிய கரம் லபக்கென்று .. பற்றியிழுக்க,
தூக்கிவாரிப்போட்டது ஐஷூவுக்கு.
இந்த வீட்டில்.. அத்தனை உரிமையுடன்.. அவளது இடையைப் பற்றித் தூக்கியிழுக்கும் தைரியம் வேறு யாருக்குத் தான் உண்டு??
சாட்சாத் அது தன் கணவனே தான்.. என்று மனதுக்குள் எண்ணிக் கொண்டே.. திரும்பியவளின் கண்கள் சந்தித்தது தாபத்தில் சிவந்து போயிருந்த அவன் கண்களை!!
அவன் ஒரு கை, அவள் இடையை தன்னுடன் சேர்த்து அணைத்திருக்க.. மறு கையோ அவளது திரண்ட பின்னழகின் நீள அகலங்களை ஆராய்ந்து கொண்டிருந்தது.
கணவனின் கை தந்த அழுத்தத்தில் சொக்கி நின்று.. அவள் நிமிர்ந்த வேலை.. அவன் பரந்த மார்பில் அழுந்தப் பதிந்தது அவள் தனங்கள்!!
பெண்ணவள் தந்த மென்மை சுகத்தை கள்ளமற.. அப்பட்டமாகவே அனுபவித்துக் கொண்டிருந்தான் ஸ்ரீதர்.
அதிலும் தன்னை நோக்கி நிமிர்ந்த மனைவியின் செவ்வதரங்கள் கண்டும், பழரசம் அருந்த ஆசை பிறந்தது மீசை துடிக்கும் ஆண்மகனுக்கு.
அந்த இரும்பையும் ஈர்த்தது.. அந்த காந்த அதரங்கள்!!
அவன் மூச்சு இவள் நுரையீரலைத் தீண்ட.. இவள் மூச்சு அவன் நுரையீரலைத் தீண்ட.. எங்கும் உஷ்ணமான வளிமண்டலம்!!
அவள் இதழும், அவன் இதழும் சேரத் துடித்த அந்த சொற்ப இடைவெளியில்.. ஒற்றை சுட்டுவிரலால்.. மேயத்துடித்த அவன் வாய்க்கு வேலியிட்டாள் அவள்.
அப்போதும் காதல் மயக்கம் களையாதவன்..அந்த சுட்டுவிரல் வேலிக்கும் தான் முத்தமிட்டான்.
எச்சில் ஈரத்தின் உஷ்ணம் சொல்லியது தலைவனின் காதல் பரவசநிலையை.
அவனோடு இழைய.. தன்னை அவனுக்குள் புதைக்க.. படிக்க படிக்க திகட்டாத கட்டில் பாடம் படிக்க அவளுக்கும் ஆசை தான்!!
ஆனால் யாராவது வந்து விட்டால் என்ற எண்ணம்.. அவளை அவனோடு ஒன்ற விடவில்லை.
கணவனைத் தன்னிலிருந்தும் மெல்ல அகற்ற முனைந்தபடி, இரகசியம் பேசும் கிசுகிசு குரலில்,
“ஹேய் என்ன இது? என்னை வ்விடுங்க?.. போர்ட்டிகோவில் எல்லாரும் நின்னுட்டிருக்காங்க? உங்க சித்தப்பாவை.. வழியனுப்பி வைக்க வேணாமா?” என்று கேட்டாள் அவள்.
அவனோ.. மனைவி இடையை இன்னும் இன்னும் அழுந்தப் பற்றி, தன்னோடு இறுக்கி அணைக்க..
வெண்ணைய்யில் குழைத்து குழைத்து செய்தாற் போன்றிருந்த அந்த பேரழகியின் கன்னக்கதுப்புக்கள் செக்கச்செவேலென சிவந்து போனது.
அவன் கண்களோ.. தன் கண்பார்வை மட்டத்துக்கு கீழிருந்த அவள் இதழ்களையே கள்ளுண்ட மந்தி போல பார்க்க.. இன்னும் கொஞ்சம் சூடாகிப் போனவன்,
தாபம் சிந்தும் குரலில், “இன்னைக்கு இந்த பிங்க் கலர் சாரியில என்னைக் கொல்லுறடீ… உன்னைத் தவிர.. எனக்கு எதிலேயும் ஃபோகஸ் பண்ண முடியலை.. ஆயிரம் பேர் வந்து நின்னாலும் அஸால்ட்டா நின்னு ப்ரசன்டேஷன் பண்றவன்.. உன்னால அப்படிய்யயயே!!!” என்றவன்,
ஒருதரம் கண்கள் மூடித்திறந்தான்.
பின்.. அவள் சூடியிருந்த மல்லிகைச்சரம் முகர்ந்து, காதல் போதையை கண்களில் சுமந்தவன், “என் மனசு உனக்குப் புரியுதா? என்னையும் தான் கொஞ்சம் கவனியேன்.. உன் பேபிக்கண்ணா.. ரொம்ப தான் காஞ்சிப் போயிருக்கேன்..” என்று சொல்லிக் கொண்டே..
அவள் இதழ் காந்தத்தை நோக்கி அனிச்சையாக நகர்ந்தது அவன் முரட்டு அதரங்கள்.
இம்முறை அவன் வாயை உள்ளங்கையால் பொத்திக் கொண்டவள், “பேபிக்கண்ணா உங்க மனசு புரியுது .. ஃபர்ஸ்ட் மை சிஸ்டர்.. அப்புறம்..” என்று இழுக்க, முகத்தைப் பரிதாபமாக வைத்துக் கொண்டவன் கேட்டான்,
“அட்லீஸ்ட் ஒரு முத்தமாவது.. ப்ளீஸ்ஸ்ஸ்!!” என்று இழுக்க.. அந்த ஹஸ்கி குரலில் அப்படியே விழுந்தாள் அவள்.
தனக்கே தனக்கென்று சொந்தமான ஆண்மகனின் ஹஸ்கி குரல்!! மன்மதனின் மலர்க்கணைகளில் ஒன்றோ??
எந்தத் தலைவியையும் உன்மத்தம் அடையச் செய்யும் அந்தக் குரல்!!
தலைவி மதிமயங்கிப் போய் நின்றிருந்த இடைவெளியில், அவள் கையைத் தன்னிலிருந்தும் நீக்கியவன்,
அவள் கன்னம் பற்றி சரித்து.. அவள் மென்மையான அதரங்களில் தன் முரட்டு இதழ்கள் பதித்துக் கவ்விக் கொண்டான்.
கணவனின் அதிரடியில்.. உடலெங்கும் ஷாக் அடித்தது.. இளஞ்சிவப்பு நிற பட்டில்.. கை, கால் முளைத்த ஐந்தரையடி ரோஜா போல் நின்றிருந்த அந்த பேரழகிக்கு!!
அவனைத் தன்னிலிருந்தும் விலக்கித் தள்ள.. அவன் சட்டைக்காலரில் கை வைத்தவள்,
தன்னோடு அவனை இன்னும் இழுத்துக் கொள்ளலானாள்.
பெண்ணவளின் உள்ளம்.. ஆண்மகனின் தீண்டலில் ‘உல்டாவாகிப்’ போனது.
அவனை விட்டுப் பிரியவும் நாடவில்லை மனம்!!
அவள் மூச்செடுக்க சிரமப்படுவது உணர்ந்து.. அவன் மெல்ல தன்னை விலக்கிக் கொண்ட இடைவெளியில்.. தீடிரென்று கேட்டது அதிரும் சித்தப்பாவின் குரல்!!
“டேய் மச்சீஈஈஈ” என்று அவன் கத்திய கத்தலில்.. ஒரு முறை நின்று வந்தது ஐஷூவின் மூச்சு!!
இவள் அதிர்ந்தாலும், திரும்பி வெட்கப்பட்டுக் கொண்டு திருட்டு விழி விழித்துக் கொண்டு நிற்க, சித்தப்பாவோ தொடர்ந்தான்.
கிட்டத்தட்ட அலறியவனாக,
“என்னடா இது?.. என்னை ஹனிமூன் கொண்டாட வழியனுப்பி வைப்பேன்னு பார்த்தால்.. நீ சந்தடி சாக்கில்… யாருக்கும் தெரியாமல் ஹனிமூன் கொண்டாடிட்டிருக்க..? ஏற்கனவே இரண்டு?? இதில் மூணாவது அட்டெம்ப்ட்.. வேற..??” என்று கேட்க,
“மச்சி.. அது வந்து..” என்று ஏதோ சொல்லி இழுத்தான் ஸ்ரீதர்.
அதைக் கேட்கும் அளவுக்கு பொறுமையில்லாதவன், ‘நிறுத்து’ என்பது போல உள்ளங்கை காட்டியவன்,
“நிறுத்து மரியாதையா.. கீழே வந்து என்னையும், இந்துவையும் வழியனுப்பி வைச்சுட்டு.. உன் ரொமேன்ஸை கன்டினியூ பண்ணு” என்று விட்டு முன்னே நடக்க,
இலேசாக கசங்கியிருந்த கணவனின் சட்டைக்காலரை.. கைகளால் அயர்ன் பண்ணி விட்டவள், கணவனின் கைகளைப் பற்றிக் கொண்டு நடந்தாள்.
டாக்டர் பெண்ணோ.. இந்த ஐந்து வருடங்களில் ஐஷூவை விடவும் உயரமாக வளர்ந்திருந்தாலும் கூட, அது விக்கியின் உயரத்துக்கு தோதாகவே இருந்தது.
தான் வாங்கிய சொந்தக்காரில்.. மனைவியுடன் நுவரெலியாவுக்கு தேன்நிலவு!! வாழ்றான்டா சித்தப்பு!!
போகும் முன்பு.. இரு கை கூப்பி வணங்கியவன், தன் அண்ணனை நோக்கி,
“என் இனிய உறவுகளே, உங்கள் மெக்கானிக் சித்தப்பா.. கூடிய சீக்கிரமே.. “நீங்க பெரியப்பா ஆகிட்டீங்க”ன்ற செய்தியுடன் தான் திரும்பி வருவான்”னு சொல்லிக் கொண்டு விடைபெறுகிறேன்!!” என்றபடியே வண்டியில் ஏற,
தம்பியின் கலாய் புரிந்தாலும் கூட, அதற்கு ஏதாவது சொல்லியே பழக்கப்பட்ட ஸ்ரீதர் தந்தையும்,
“இந்த டயலாக்க.. ‘நான் ஐஷூ தங்கச்சிய லவ் பண்றேன்ணா’ன்னு வந்து நின்னியே.. அப்போவே எதிர்பார்த்தேன்டா.. !!” என்றார்.
சட்டென கை சேதப்பட்டவன் போல கையில் மறுகையை அடித்துக் கொண்டவன், “ச்சே.. இந்த விஷயம் எனக்கு தெரியாம போச்சே.. நீங்க என்கிட்ட இவ்வளவு எதிர்பார்த்திருக்கீங்கன்னு தெரிஞ்சிருந்தால்… அஞ்சு வருஷத்துக்கு முன்னாடியே உங்களை “பெரியப்பா” ஆக்கியிருப்பேனே?” என்று கூற,
அந்த கேலியில் போலிக் கோபம் மீதூற விக்கியின் வயசான அண்ணாவும், “அடி.. படவா ராஸ்கல்!!உனக்கு அந்த ப்ளேன் வேற இருக்கா?”என்று கையை ஓங்க,
“இன்னும் ப்ளேன் இருக்கு.. ஆனால் நான் வாய்ச்சொல் வீரன் இல்லை.. செயலில் அதை கூடிய விரைவில் நிரூபிக்கிறேன்!! தேவி வா போகலாம்!!”என்று இந்துவின் கைச்சந்து இடைவெளியில் கையிட்டுக் கொண்டே அழைத்துச் செல்லும் சித்தப்பாவின் கெத்தில் குபீரென்று பொங்கி வந்தது அனைவருக்கும் சிரிப்பு.
என்ன தான் விக்கியை கலாய்த்தாலும் கூட,
அவருக்குமே சித்தப்பா கொழும்பு நகர் அறியும் பிரபலமான மெக்கானிக் ஷெட் வைத்து முன்னேறியிருப்பது மகிழ்ச்சியே!!

அலங்கரிக்கப்பட்ட மாப்பிள்ளை காரும் நகர.. அங்கே கிளம்பியது வெடிச்சிரிப்பு!!
****
அடுத்த நாள் இரவு…
திருமணம் நடந்து தேன்நிலவு சென்றது என்னமோ இந்து தான்!!
ஆயினும் கூட, இன்றைய இரவில்.. புதுச்சேலை.. அதுவும் சீத்ரூ சேலை கட்டி… விரிந்த கூந்தலில்.. மல்லிகை சரம் சூடி.. கொஞ்சம் அளவுக்கதிகமாகவே உதட்டுச்சாயம் பூசி.. கொள்ளை அழகுடன் தயாராகி நின்றிருந்தாள் ஐஷூ.
சுவர்க்காபுரியின் மன்னன் இந்திரன் இருக்கிறானல்லவா இந்திரன்??
இந்திரனின் நாட்டியத் தாரகை மேனகை இருக்கிறாள் அல்லவா மேனகை??
அந்த மேனகை தான்.. மறுபடியும் தபஸ்வியின் தவம் களைக்க.. பூலோகம் வந்து விட்டாளோ?? என்று தேவர்களும் அதிசயிப்பர் பேரிகை முன்னாள் நின்றிருந்த பெண்ணைக் கண்டால்!!
அவள் மேனகை அல்ல.. ஸ்ரீதரின் தாரகை ஐஷ்வர்யா!!
ஆனால், அவள் கண்களிலே ஓர் சோகம்!!
இதழ்களிலே ஓர் வரட்சி!!
அறை முழுவதும் இருண்டிருக்க.. ஆங்காங்கே ஏற்றப்பட்டிருந்தது மெழுகுவர்த்திகள்!!
அந்த வெளிச்சத்தில்.. சீத்ரூ சேலையில்.. அவள் அங்கலாவண்யங்கள்.. மனோரம்மியமாக விளங்க..தங்கச்சிலை போல ஒளிர்ந்தாள் பெண்!!
பேரிகை முன்னின்று.. வளையல்கள் ‘சலசல’க்க அணிகலன் களைந்து கொண்டிருந்தவளின் தாபம் சிந்தும் அதரங்கள் முணுமுணுத்துக் கொண்டிருந்தது.
“அவனுக்காக ரெடியாகி இருந்தேன் பாரு.. என்னை சொல்லணும்.. யார் பார்க்க இந்த அலங்காரம்? இப்போவே மணி பன்னிரண்டு இருபது.. இதுக்கப்புறம் வந்து.. ‘ரொம்ப டயர்டா இருக்குமா.. நாளை பார்த்துக்கலாம்’னு சொல்லி மலைமாடு மாதிரி கட்டிலில் போய் படுத்துக்குவான்.. இந்த மேக் அப்.. லொட்டு லொஸூக்கு எல்லாமே வேஸ்ட்!!” என்றபடி..
அவள் அணிந்திருந்த கருநிற சேலைக்கு தோதாக அவள் பூண்டிருந்த நெக்லஸைக் கழற்ற கை உயர்த்திய வேளை,
அவள் வயிற்றை தழுவியது.. அந்த முரட்டுக்காளையின் வலிய கரங்கள்!!
மெல்ல தன்னை நோக்கி இழுத்து… அவள் ஷோல்டரில் தாடை புதைத்து, கன்னம் உரசி.. கிறங்கும் குரலில், “இன்னைக்கு ச்சும்மா கும்முன்னு இருக்க பொண்டாட்டி!!”என்று சொல்ல,
அவளுக்கோ இத்தனை நேரம் தன்னைக் காக்க வைத்த தலைவன் மேல் சிறு கோபம் மேலிட்டது அவளுக்கு.
அவனைத் தொடவிடாமல், உதறி விட்டவளுக்கு காதலை விட ஆத்திரம் மிகுந்தது.
மூக்குநுனி சிவக்கும் அளவுக்கு தனங்கள் ஏறி இறங்க மூச்சு வாங்க, “என்னை விடுங்க .. நாங்க ரெண்டு பேரும் கொஞ்சம் தனியா இருக்கட்டும்னு தான்.. அத்தையையும், மாமாவையும், பசங்களையும் என் அப்பா அழைச்சிட்டுப் .. போனாங்க.. நீங்க இப்போ விடியுற நேரம்.. வர்றீங்க..?” என்று கத்தியவளின் பெரிய கண்களில் இருந்து..
கண்ணீர் துளியொன்று வழிந்தது.
அதைக்கண்டு மனம் பதறினாலும்… அவன் பிடியிலிருந்து, தன் மனைவியை விடுவிக்கவேயில்லை அவன்.
அவள் மல்லிகைப்பூச்சரம் வேறு.. அந்த ஆண்மகனை மதிமயக்க.. அவள் கன்னத்தோடு.. தன் மீசை அதரங்களின் குறுகுறுப்பை மூட்டிக் கொண்டே,
“ஸாரிடி.. பொண்டாட்டி..!! இப்போ உன் புருஷன்.. மேனேஜர் ஆஃப் சாப்ட்லாஜிக்னு நினைச்சியா? .. இப்போ நானு சிஇஓ ஆப் சாப்ட்லாஜிக்!!.. கொஞ்சம் டைம் முன்னே பின்னே ஆகத் தான் செய்யும்..? இப்படி ஹார்ட் வர்க் பண்ணலைன்னா.. கூட ஷேர்ஸ் வாங்கியிருக்க முடியுமா? சாப்ட்லாஜிக்ஸ் கரன்ட் சிஇஓவாக மாறியிருக்க முடியுமா? ஹார்பர்ல இருந்து கூட்ஸ் வந்திருக்கு.. போய் பார்க்கத் தானே வேணும்.. உடையவன் பாராவிட்டால் ஒருமுழம் கட்டைன்னு சொல்றதில்லைஹ்!!”என்று பெருமூச்சை அவள் காதுக்குள் விட்ட வண்ணம் கேட்டான் அவன்.
இதுவரை கணவன் கைக்குள் அடங்கியிருந்தவள், அவன் பேசி முடித்ததும் மீண்டும் சிணுங்கத் தொடங்கினாள்.
சண்டைக்கு ஏதுவாக சிலிர்த்துக் கொண்ட ஸ்ரீதரின் மங்கை, “ ‘உடையவன் பாரா விட்டால் ஒரு முழம் கட்டை’ன்றது பிஸினஸ்க்கு மட்டுமில்லை.. தாம்பத்தியத்துக்கும் தான்..
விடுங்க.. உங்களுக்காக அலங்காரம் எல்லாம் பண்ணி ரெடியா இருந்தேன் பாருங்க.. என்னை சொல்லணும்..?” என்றவள், மீண்டும் நெக்லஸைக் கழற்ற..
கைகளைத் தூக்க…
அப்போது உயர்ந்து எழுந்த அவளது முப்பரிமாண திரட்சிகளின் அழகில்.. ஸ்ரீதரின் கண்கள் அகல நின்றது! நின்று துடித்தது இதயம்!!
நெக்லஸைக் கழற்ற உதவியவனின் பார்வை, அவளது மோகன விம்பம் காட்டும் கண்ணாடியில் நிலைத்திருக்க, இவனோ அவற்றைக் கண்களால் பருகிக் கொண்டே சொன்னான்,
“பொண்டாட்டி… உன்னை யாரு அலங்காரம் எல்லாம் இப்போவே களைக்கச் சொன்னா??.. அதை களைக்கத் தான் நான் இருக்கேனே..?” என்று கூறியவனின் கைகள் அத்து மீறின.
தன் உரிமை என்ற நினைப்பில்.. அவனது விரல்களும் அத்துமீறி.. அந்த பிரபஞ்சம் இனம் காணா பேரழகியின் ஒளித்து வைத்த பொக்கிஷ அறைகளுக்குள் நுழையப் போக,
அவன் கையைத் தன்னிலிருந்தும் உதறி விட்டு வெளியே வந்தாள் ஐஷூ.
இன்னும் கூட அவள் முகம் ஊடலின் கோபச் சிவப்பை பூசியிருந்தமையானது.. அவள் மலையிறங்கவில்லை என்பதை காட்டியது.
“விடு பேபிக்கண்ணா.. வரேன்னு சொல்லிட்டு என்னை ஏமாத்திட்டேல்ல?? உங்களை அப்பவே டைவர்ஸ் பண்ணியிருக்கனும்..”என்று..அவள் உதிர்த்த சொல்..அவள் உதிர்த்த கடைசிச் சொல்லில்… இம்முறை சிலிர்த்துக் கொண்டது ஐஷூவின் ஆண்சிங்கம்!!
இடுப்பில் கை வைத்து அவனைப் பார்த்தவனின் ஒற்றைப் புருவம் மேலுயர்ந்திருக்க, மறுபுருவம் இடுங்கியிருந்தது.
அவன் குரலோ ஆழ்ந்து ஒலிக்க,
“என்ன சொன்ன? என்னை அப்போவே டைவர்ஸ் பண்ணியிருக்கனுமா?.. இனி உன் வாயிலிருந்து.. இந்த வார்த்தை வரும்?
இன்னைக்கு உன் புருஷன் கொடுக்கப் போற ஷாக் ட்ரீட்மெண்ட்ல… செலிப்ரிட்டீஸ் டைவர்ஸ் பண்ணா கூட.. அதை சொல்ல வாய் திறக்க மாட்ட?..” என்றவன்,
தன் ஃபுல் ஸ்லீவ் சட்டையை மேலேற்றியவன், டையைத் தழற்றிக் கொண்டே,
அவளை நாடி வந்து, அடித்தொடைகளூடு ஒரு கை, இடையூடு ஒருகையிட்டு.. அலேக்கா கைகளில் ஏந்திக் கொள்ள,
இவளோ நிமிடத்தில் தான் அவன் கைகளுக்குள் சிறைப்பட்டதை எண்ணி வியந்து போனாள்.
இருப்பினும் தன் வியப்பை அடக்கி.. அவனை நோக்கி, “என்னை விடு.. பேபிக்கண்ணா.. விடுன்னு சொல்றேன்ல? டேய் விடுடா ராஸ்கல்!!” என்று எத்தனையோ அடைமொழிகள் கொடுத்தும்..
மஞ்சம் வந்து சேரும் வரை அவளை இறக்கி விடவேயில்லை!!
தரையில் துவண்டு கிடக்கும் பெண்மானாய் அவள் மஞ்சத்தில் வீழ்ந்திருக்க…
ஷேர்ட்டின் இரு பட்டன்களைக் கழற்றியவனுக்கு… தன் கண்முன்னே கிடக்கும் காதல் பெட்டகத்தைக் கண்டதும்.. திறந்து பார்க்க ஓர் அவசரம்!!
அவளது விரல்களோடு.. இவன் விரல்கள் பின்னிக் கொள்ள,
“வேணாம்.. பேபிக்கண்…”என்று அவன் பெயரை முழுமையாக உச்சரிக்கக் கூட விடாமல்.. அந்த சிவந்த அதரங்களைத் தாவிக் கவ்விக் கொண்டான் ஸ்ரீதர்.
அவளது ஸ்ட்ராபெர்ரி ஃப்ளேவர் லிப்ஸ்டிக் வேறு… புதுப்புது மயக்கத்தைக் கொடுக்க… அங்கே முகிழ்த்தது மாறனின் காதல் யுத்தம்!!
“விடு பேபிக்கண்ணா” என்று ஆரம்பத்தில் கத்தியவளின் ஒலிகள்,
இறுதியில், “பேபீஹ்!!! கண்.. ஆஹ்!!!” என்று எல்லாமே உச்சபட்ச பெருமூச்சுடன் வெளிவரும் முணகல்கள் ஆயிற்று!!
அவள் அணிந்திருந்த மாராப்பு.. அறையில் எங்கோ ஓர் மூலையில் கிடக்க.. ஸ்ரீதர்.. அந்நொடி தன் ஐஷூவின் மாராப்பாய் கடமை புரிந்து கொண்டிருந்தான்.
அவள் கைகளோ.. கணவனின் பின்னந்தலை கேசத்தில் மயிரளைந்து கொண்டிருக்க..
இதழ்கள் காதல் போதையில் மெல்லத் திறந்திருக்க..
இவனோ.. பிரம்மன் தனக்கே தனக்கென்று படைத்த அந்த பெண்மைப் பொக்கிஷத்துக்குள் மூழ்கி முக்குளித்துக் கொண்டிருந்தான்.
அவன் தீண்டலின் வலிமையை…. காதலோடு சுகித்துக் கொண்டிருந்தது மெல்லினம்.
மெல்லினமும், வல்லினமும் புணர்வது தமிழ் இலக்கணமாயின்.. இது காதல் இலக்கணம்!!
அன்பு கொண்ட காந்தள் மலர் விழியாளின் நகக்கண்கள்.. தலைவனின் முதுகில் ஆழப்பதிந்து காதல் வடுக்கள் கொடுக்க,
அவள் கழுத்தின் கீழே இவன் இதழ்கள் கொடுத்தன காதல் வலுக்கள்!!
இன்பம் துய்க்கும் இரவு… இப்படியே நீளாதா என்ற ஏக்கம் இரு காதல் ஜீவிகளுக்குள்ளும் பிறந்து.. அவர்களை ஆட்டிப்படைத்துக் கொண்டிருந்தது.
காம மயக்கம் தீரலாம்.. காதல் மயக்கம் தானும் தீருமோ??
இப்பூமியில் காதல் உள்ள வரை… ஆதாமும், ஏவாளும் சுகித்த காதல், பல கோடி யுகமாக… சுகமான புது ராகம் மீட்டத் தான் செய்யும்!!

இருவர் கூடலுக்கும்
துணை புரியும் காற்று

காற்றிடை வெளியும்
உணர்த்தும் என் காதல்

மெத்தையில் சிணுங்கும் நீ
உன்னை இதழ்களால்
இம்சிக்கும் நான்..

இந்த ஜென்மத்தில்
இது போதும் எனக்கு!

Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *