இதழ் சொல்ல துடிக்கின்றதே காதலை

இதழ் சொல்ல துடிக்கின்றதே காதலை

இதழ் சொல்ல துடிக்கின்றதே காதலை

இதழ் சொல்ல துடிக்கின்றதே காதலை

இதழ் சொல்ல துடிக்கின்றதே காதலை

இதழ் சொல்ல துடிக்கின்றதே காதலை

அத்தியாயம் – 32 :
மறுநாள் அதிகாலை நான்கு மணிக்கு வழக்கம் போல திருவிற்கு விழிப்பு வந்துவிட்டது… ஒரு பக்கமாக சாய்ந்து நிலையில் படுத்திருந்தவனின் கண்களில் கண்விழித்ததும் விழுந்தது அவன் மனைவியும் கட்டைவிரலை  சப்பியபடி தூங்கிக்கொண்டு இருந்த அவனின் மகளும் தான்… 
அவர்களை பார்த்ததும் திருவிற்கு உற்சாகமாக இருந்தது… அவன் வாழ்க்கையை மூன்றாண்டுகளுக்குப் பிறகு வண்ணமயமாக மாற்றிய தேவதைகள் அவர்கள் அல்லவா? 
சில நொடிகள் தன் மகளின் முகத்தை கனிவுடன் பார்த்துக் கொண்டிருந்த திரு பின்னர் தன் மனைவியின் புறம் தன் பார்வையை திருப்பினான்… அவன் தன் கவனத்தை அவள் மீது திருப்பிய அந்த நொடி  தற்செயலாக அவள் அவன் புறமாக திரும்பி படுத்தாள். 
‘கண்ணா லட்டு திங்க ஆசையா…’ என்று அவன் மனசாட்சி அவனை பார்த்து கேலியாக கேட்டது. 
‘ஏய் என்ன… என்  நிலைமையை பார்த்தா உனக்கு கூட வேடிக்கையா இருக்கா என்ன? எனக்கும் இந்த லட்டு திங்க ஆசையா தான் இருக்கு… ஆனா இப்போதைக்கு  என்னால இத ஆசைதீர பார்க்க மட்டும்தான் முடியும்… அதுவும் அவ தூங்கற நேரம்தான் முடியும்… அதனால என்ன டிஸ்டர்ப் பண்ணாத… என் வேலையை பார்க்க விடு… ‘என்று சொன்னவன் இமை சிமிட்டாமல் ராதாவின் முகத்தை தன் கண்களால் அள்ளிப் பருகினான். 
பின்னர் அவன் பார்வை தூக்கத்தில் விலகியிருந்த அவள் சேலையின் வழியே வெளிப்பட்ட  மார்பின் மீதும் இடுப்பின் மீதும் பதிந்து அவன் இளமைக்கு சோதனை வைத்தது… 
‘ஐயோ படுத்தறாளே… இவ இப்படியெல்லாம் தன்னோட அழக காட்டி என்ன தூண்டிவிட்டா நான் எப்படி கை காலை வச்சிக்கிட்டு சும்மா இருக்கறது…’ என்று புலம்பிய திருவிற்கு அந்த நொடியே அவளை ஆண்டு விட வேண்டும் என்ற ஆசை தோன்றியது… 
ஆசை வெறியாக மாறி தன் உணர்வுகளை தன்னால் கட்டுப்படுத்த இயலாத நிலை வரும் முன் இந்த அறையை விட்டு செல்வதே நல்லது… இல்லை எனில் நிச்சயம்  உணர்வுகளை கட்டுப்படுத்த முடியாமல் அவளை நெருங்கி விடுவோம்…  ஏற்கனவே  அவளை கட்டாயப்படுத்தி மணந்து கொண்டு விட்டோம்… அதுவே அவள் மனதில் நம் மீது தப்பான அபிப்ராயத்தை ஏற்படுத்தி இருக்கும்… 
இப்போது உணர்வுகளை அடக்க முடியாமல் அவளின் விருப்பத்தை மீறி அவளை  தொட்டு விட்டால் வாழ்க்கை முழுவதும் அழிக்கமுடியாத ஆறாத  ரணமாக அவள் மனதில் அது தங்கிவிடும்… அதனால் அவள் மனம் மாறும் வரை  காத்திருப்பதே நல்லது என்று அவனுக்கு தெரியும்… 
தன் மனைவி தன்னை ஏற்றுக் கொள்ளும் வரை காத்திருக்கலாம் என்று முடிவு செய்கிறானே… இவன் அவ்வளவு நல்லவனா என்று வாசகர்கள் நினைக்க வேண்டாம்… திருவிற்கு ராதாவை பற்றி ஒரு விஷயம் நன்றாக தெரியும்… அவள் வாழ்க்கையை அதன் போக்கில் வாழ்பவள்… அதனால் நிச்சயம் தான் நீண்ட நாட்கள் காத்திருக்க வேண்டிய அவசியம் இருக்காது… அதுவரை மட்டுமே தான் பொறுமை காத்தால் போதுமானது என்று அவன் ராதாவை பற்றி சரியாக கணித்து  வைத்திருப்பதால் மட்டுமே அவளை கட்டாயப்படுத்தி மணந்து கொண்டான்… தன் மனைவி என்று ஆகிவிட்ட பின் அவள் அந்த உறவை ஏற்றுக் கொள்ள சிறிது காலம் எடுத்தாலும்  அதன் பிறகு தன் வாழ்க்கையை மகிழ்ச்சியுடன் வாழ  முற்படுவாள் என்ற விஷயம் அவனுக்கு நன்றாகவே தெரியும்… அதனால் இருக்கும் நிலையைக் கெடுத்துக் கொள்ள விரும்பாமல் மீண்டும் ஒரு முறை அவளின் மொத்த உடலையும் தன் கண்களால் பருகிய திரு பின்னர் ஒரு பெரிய பெருமூச்சை வெளியேற்றிவிட்டு தங்களின் வயலை பார்க்கப் புறப்பட்டான்… 
திரு அறையை விட்டு வெளியேறும் வரை தூங்குவது போல கண்மூடிப் படுத்திருந்த ராதா அடுத்த நொடி கண்களைத்  திறந்தவள் சிரித்தபடியே தன் சேலை முந்தானையை சரி செய்தாள். 
“விட்ட விடிகாலையில உன்னோட ஆண்மைக்கு இந்த அளவுக்கு சோதனை போதும்னு நினைக்கிறன் மாமா…” என்று தனக்கு தானே முணுமுணுத்த ராதாவிற்கு திருவின் பெருமூச்சு நினைப்பு வந்ததும் சிரிப்பு அதிகரித்தது… 
அவளும் கடந்த மூன்று வருடமாக அதிகாலை நான்கு மணிக்கு எழுந்து பழக்கப்பட்டவள் தானே… அதனால் அவளுக்கும் திருவை போல நான்கு மணிக்கு விழிப்பு வந்து விட்டது… ஆனால் இனி இவ்வளவு சீக்கிரம் எழுந்து கொள்ள வேண்டிய அவசியம் இல்லாதது புரிந்ததால் அவள் இன்னும் சற்று நேரம் தூங்கலாம் என்று நினைத்து புரண்டு படுத்தாள்… 
சில நொடிகள் கழித்து யாரோ தன் முகத்தையே உற்றுப் பார்ப்பது போல இருந்தது… அடுத்த சில நொடிகளிலேயே அது யார் என்பது புரிந்து போனது… அதனால் அவள் கண்களை திறக்காமல் கண் மூடி அப்படியே படுத்து இருந்தாள்… 
அப்போது திடீரென்று அவளுக்கு தான் புரண்டு படுத்ததால் தன் சேலை முந்தானை விலகி இருப்பது தெரிந்தது… ஆனாலும் அவள் அதை சரி செய்ய முற்படவில்லை… தன் முந்தானை மறைக்காத எழில் கோளங்களையும் இடுப்பு  வளைவுகளையும் பார்ப்பது தன் கணவன் தானே… ‘பார்த்தால் பார்த்துக் கொள்ளட்டும்…’ என்று அலட்சியமாக  நினைத்தவள் மேலும், ‘பார்த்து பார்த்து  ஏங்கட்டும்… என் விருப்பத்துடன் திருமணம் செய்திருந்தால் நேற்று திருமணம் முடிந்திருந்த நிலையில்  என் மொத்த அழகும் அவனுக்கு விருந்தாக படைக்கப்பட்டிருக்குமே… என்ற நினைப்பில்  அவன் உடல் தகிக்கட்டும்… என்னை கார்னர் செய்து திருமணம் செய்ததற்கு இது தான் அவனுக்கு  தண்டனை…” என்று நினைத்தவளின் மனசாட்சி ‘ராதா இது அவனுக்கு மட்டும் தான் தண்டனையா… நேத்து சாயந்திரம் பட்டுவேட்டி  சட்டையில அம்சமா வந்தவன் மேல இருந்து கண் எடுக்க முடியாம நீ திணறல…’ என்று அவளை கேலி செய்தது… 
ஆம்… உண்மை  தான்… நேற்று சாயந்திரம் அவன் குளித்துவிட்டு பட்டு வேட்டி சட்டை அணிந்து வந்தபோது ராதாவால் அவன் மீதிருந்து கண்களை எடுக்க முடியவில்லை… 
காலை  திருமணத்தின் போது கூட அவன் வேட்டி சட்டைதான் அணிந்து இருந்தான் என்றாலும் ஏனோ அந்நேரம் அவள் மனதில் சிறு சஞ்சலம் இருந்ததால்  அவள் அங்கு அவன் புறம் தன் பார்வையைத் திருப்பவில்லை… ஆனால் எப்போது அவன் கட்டிய தாலி அவள் கழுத்தில் ஏறியதோ… அந்த நொடியே இனி இதுதான் தன் வாழ்க்கை… இதை நாம் நன்றாக அமைத்துக் கொள்வதும் அல்லது கடந்த காலத்தை நினைத்து கெடுத்துக் கொள்வதும் நம் கையில் என்பது அவளுக்கு தெளிவாக புரிந்தது… ஆனால் அதேசமயம் தன்னை கார்னர் செய்த திருமணம்  செய்தவனுடன் உடனடியாக சம்சார சாகரத்தில் மூழ்கவும் அவளுக்கு மனமில்லை… அதனால் அவனுக்கு  சிறு சிறு தண்டனைகள் கொடுத்த பிறகே அவனுடனான தன் வாழ்க்கையை தொடங்க வேண்டும் என்று அவள் முடிவு எடுத்திருந்தாள். 
அதன் முதல் கட்டமாக தான் நேற்று இரவு அவனை கீழே படுக்க வைக்க நினைத்து ஒரு போர்வையையும் தலையணையையும் அவன் வரும் முன்பே கட்டிலில் இருந்து கீழே தூக்கி போட்டாள்… ஆனால் அவள் நினைப்புக்கு மாறாக அந்த வாய் ஜாலக்காரன் தன் பேச்சினால் அவளை கீழே படுக்க வைத்து விட்டான்… உண்மையை சொல்ல வேண்டுமென்றால் ராதாவிற்கு அதில் துளியும் வருத்தம் இல்லை… அவன் தன்னைப் போலவே இருப்பதால் நிச்சயம் தங்கள் வாழ்க்கை சுவராஸ்யமாக செல்லும் என்று அவள் நினைத்தாள்.. 
படுக்கையில் இருந்து எழுந்து அமர்ந்த ராதா மேல் பக்கமாக சரிந்திருந்த முந்தானையை சரி செய்தவள், “என்ன மாமா… காலையிலேயே உனக்கு பெரிய சோதனை வந்திருச்சு போல… பரவால்ல உன்னோட உணர்வுகளை உன்னால கட்டுப்படுத்த முடியுது… இதே வேற எவனாவது இருந்திருந்தா இந்நேரம் என் மேல பாஞ்சி இருப்பான்…  என்ன தொடாதீங்கன்னு பொண்டாட்டி சொன்னா அத மதிச்சு எத்தனை ஆம்பள அவளை தொடாமல் இருப்பான்… அந்த மாதிரி ஆளுங்கள விரல் விட்டு எண்ணிடலாம்… நீயும் அந்த ரகம்தான் போல பரவாயில்லை…. கடந்த காலத்துல உன்னால நான் எவ்வளவு கஷ்டம் அனுபவித்திருந்தாலும்… இனி அப்படி நடக்காதுனு நான் நினைக்கிறன்… ஏன்னா நீயும் கொஞ்சூண்டு  நல்லவன்தான்…” என்று ராதா நினைத்தாள். 
ஆம்… ராதா அப்படிதான் நினைத்தாள்… அவள் மனம் நிகழ்காலத்தை ஏற்றுக் கொண்டு எதிர்காலத்தை நல்லபடியாக அமைத்துக் கொள்ள நினைத்தாலும் நடக்கும் ஒவ்வொரு சம்பவத்தையும் கடந்த காலத்துடன் முடிச்சிட தவறவில்லை… 
தவறுகளை மன்னிக்கலாம்… ஆனால் மறக்க முடியாது… தவறுகளை சீக்கிரம் மன்னிக்கும் நம் மனது அதை அவ்வளவு சீக்கிரம் மறப்பதில்லை… 
அது திருவிற்கும் தெரியவில்லை… ராதாவிற்கும் புரியவில்லை… நிகழ் காலத்துடன்  கடந்த காலத்தை முடிச்சுட்டு பார்க்கும் அவளின் இந்த செய்கை அவர்களின் வாழ்க்கையில் பிரச்சனையை ஏற்படுத்துமா? யாமறியோம்…

Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *