இதழோடு உறவாட வா 21

இதழ்… 21!!


“கனடாவுக்கு போயிட்டானா? எப்படி போனான்? என்னிடம் சொல்லாமல் எப்படி செல்லலாம்? என்ன ஆனது?” என்று ஒன்றும் புரியாமல் திருவிழாவில் தொலைந்த குழந்தை போல.. திக்குத் தெரியாத காட்டில் வழி மறந்த பிள்ளையை போல விழித்துக் கொண்டு நின்றவளை பார்த்த பரமேஸ்வரன் “அதிதி??” என்று அழைக்க..

“சார்..!”

“என்ன ஒரு மாதிரி டல்லா ஆகிட்ட?”

“ட்ராவல் டயர்ட் நஸ் சார்!” என்றவாறு அவள் கேபினை நோக்கி அந்த பட்டங்களையும் பட்டயங்களையும் ரொக்க பணத்திற்கான காசோலையும் சுமந்து சென்றவளுக்கு, அவை அதிக கனமாய் கனத்தது.

தங்கள் கேபினுக்கு வந்தவள் அப்படியே அமர்ந்து விட்டாள்.

அவளை சுற்றி என்ன நடக்கிறது? என்ன நடந்தது? எதுவுமே அவளுக்கு புரியவில்லை!

“எப்படி அவன் செல்லலாம்? அதுவும் இருவரும் ஈருடலாக அல்லாமல் ஓர் உடலாகவே மாறிய பின்பு எப்படி என்னிடம் சொல்லாமல் இவன் செல்லலாம்? நான் அவன் மனைவி தானே? மனைவி தானே?” என்று திரும்பத் திரும்ப இதே கேள்வி அவளுக்குள் ரீங்காரமிட்டு கொண்டு கேட்டுக் கொண்டே இருக்க..

“ஏய் அதிதி!! வந்துட்டியா?” என்றவாறு அவளை நோக்கி விரைந்து வந்த திவ்யா அவளது டேபிளில் இருந்த சான்றிதழையும் பரிசு தொகையையும் பார்த்து வியந்து பாராட்டினாள் மனதார!!

“வின் பண்ணுன கேஸ அப்படியே கொடுத்து இருக்காங்க! ஆனா இது உனக்கும் ரிஷி சாருக்கும் ஷேர் தானே?” என்று கேட்டாள்.

“அவர் மொத்தமா கொடுத்துட்டு போயிட்டார்!” என்றாள் அதிதி எங்கேயோ வெறித்தபடி..

“ஏய் அதி.. நானும் அந்த விஷயம் சொல்லத் தான் வந்தேன். எனக்கு மனசே ஆகல!” என்றாள். அதிதி புரியாமல் திவ்யாவை பார்க்க..

“நேத்து ரிஷி சார் வந்து நம்ம வைஸ் ப்ரின்ஸிப்பிலை பார்த்துட்டு போனதுமே இங்கு குசுகுசுன்னு ஒரே பேச்சு தான் நடந்துகிட்டு இருந்துச்சு. நேத்து எனக்கு அது புரியவே இல்லை. இன்னைக்கு தான் புரியுது!! நம்ம அனுசியா இல்ல.. அடுத்த ஹெச்ஓடியா புரமோட்டாகுறதுக்காக பரமேஸ்வரன் காதை கடிச்சுட்டு இருக்கா.. தெரியுமா?” என்று அதிர்ந்து கூறினாள் திவ்யா.
ஆனால் திவ்யா அளவுக்கு அதிர்ச்சி எல்லாம் அதிதியிடமில்லை..

அவள் ஏற்கனவே அதீத அதிர்ச்சியில் அல்லாவா இருக்கிறாள்? அதனோடு பார்க்கும் போது இவையெல்லாம் சிறு துரும்பு கூட கிடையாது!

“உனக்கு என்னடி ஆச்சு? இப்படி ரியாக்ஷன் கொடுக்கிற?” என்றவள் தொடர்ந்து அனுசுயா ஹெச்ஓடியாக வந்தால் என்னென்னவெல்லாம் நடக்கும்? எப்படி எல்லாம் தங்களை ஆட்டுவிப்பாள்? ஏற்கனவே செய்ததற்கெல்லாம் எப்படி பழிவாங்கும் முயற்சி செய்வாள்? அதற்கு பின்னும் நாம் இந்த காலேஜ்ல தான் இருக்கனுமா? 
என்று ஒரு ஒரு ப்ராஜெக்ட்டே செய்யும் அளவு விவரித்தாள்.

“ஐயோ என்னால் அவளை ஹெச்ஓடியா ஒரு நிமிஷம் கூட பார்க்க முடியாது டி அதி!” என்று தன் மனக்குமறல்களை வலிகளை எல்லாம் குமறிக் கொண்டிருந்த திவ்யாவை ஏதோ வீடியோ மட்டும் தெரிந்து ஆடியோ மியூட் போட்ட டிவியை பார்ப்பது போலவே பார்த்து வைத்தாள் அதிதி.

அவள் காது வழியே எதுவும் ஏறி மூளைக்கு செல்லவில்லை. அனைத்தும் ப்ளாக் ஆகி ப்ளாங்க் ஆக இருந்தது அந்த ஒருவனால்!!
அவன் ரிஷி தனஞ்ஜயன்!!

“என்னை விட்டுட்டு எல்லாம் செல்ல மாட்டான்! ஏதோ அவசரத்தில் தான் சென்று இருக்கிறான்! பிரின்சிபில் சொன்னாரே.. கனடாவில் ஏதோ ரிசர்ச் ஸ்காலராக ஜாப் வந்தது என்று! ஒருவேளை இங்கே வந்த பிறகு தான் தெரிந்திருக்கும் போல… அதனால் விரைந்து சென்று இருக்கலாம்! கண்டிப்பாக நமக்கு அழைப்பான்!!” என்று ஏக நம்பிக்கை அவளிடம்!!

ஒரு பெண்ணிடம் காதலை வாங்குவதை விட.. நம்பிக்கையை வாங்குவது பெரும் பேரு ஒரு ஆண் மகனுக்கு!!

அதை ரிஷி இத்தனை நாட்களில் சாதித்திருந்தான்! ஆம்.. அவளின் காதலையும் நம்பிக்கையையும் சேர்த்தே பெற்று.. கூடவே அவளையும் பெற்றவன்… இன்றோ???

எப்பொழுதும் பேக்கின் ஒரு ஓரம் தூங்கும் அலைபேசியை தனது ஆறாம் விரலாய் பாவித்து கைக்குள்ளேயே அடக்கி வைத்திருந்தாள் கன்னிகை கணவன் அவன் கால் பேசுவான் என்று! 

ஆனால் காலம் தான் விரைந்து ஓடியதே ஒழிய.. அவளனிடம் இருந்து சிறு புள்ளி கூட டெக்ஸ்ட் மெசேஜூம் வரவில்லை!! பின் எங்கிருந்து கால் வர??

ஏதோ பித்து பிடித்தவள் போல கல்லூரிக்கு செல்வதும் வீட்டுக்கு வருவதும் கிடைத்ததை உண்பதும் சில நேரங்கள் அவன் நினைப்பிலேயே மருகுவதும் என்று மூன்று நாட்களை கடத்தி இருந்தாள் அதிதி!

மூன்று நாட்கள் அன்னையிடமும் சரியாக பேசவில்லை. எப்பொழுதாவது அவரே போன் செய்தால்.. இரண்டு ஓர் வார்த்தை பேசி விட்டு வைத்து விடுவாள்‌ சின்னஞ்சிறுகளுக்கு தொந்தரவு கொடுக்க வேண்டாம் என்ற நினைப்பில் காயத்ரியும் அவ்வளவாக இவளை தொந்தரவு செய்யவில்லை. ஆனாலும் மகளின் சோர்ந்த குரல் அவருக்கு சற்று மன உளைச்சலை கொடுக்க.. அதை அப்படியே செல்லியிடம் அவர் பகிர்ந்தார்.

“என்ன டீச்சரமா.. ஊருக்கெல்லாம் பாடம் எடுக்குற நீங்க? உங்களுக்கு என்ன படம் எடுக்க வைக்கிறீங்களே?” என்று முகத்தை மூடிக்கொண்டு சிரித்த செல்வியை முறைப்பாக பார்த்தார் காயத்ரி.

“ஏற்கனவே நானே மனக்குழப்பத்துல இருக்கேன்! நீ வேற எதையாவது பேசி என்னை இன்னும் கடுப்பேத்தாம இரு.. என் பொண்ணு குரலே சரியில்ல! ரொம்ப சோர்வா பேசுறா.. சரியாவும் பேச மாட்டேங்குறா! என்ன காரணமா இருக்கும்னு‌ நானே யோசித்து யோசித்து மண்டை குழம்பியிருக்கேன். நீ ஏதாவது சொல்லுவேனு உன்கிட்ட சொன்னா நீ பாடம் எடுக்கிறவ.. பாட்டு படிக்கிறவனு நீட்டி முழங்குற…!” என்று கடிந்து கொண்டார் செல்லியை காயத்ரி.

“என்ன சொல்ல சொல்றீங்க டீச்சர்மா.. சின்ன வயசுலேயே நீங்களும் உங்க வீட்டுக்காரரை இழந்துட்டு அதிதி பாப்பாவோட இருந்துட்டீங்க.. அதனால சில விஷயங்கள் உங்களுக்கு மறந்து போயிருக்கும் போல..” என்றதும் காயத்ரி இன்னும் குழப்பமாக செல்லியை முறைத்தார்.

“பின்ன என்னங்க மா.. இப்ப தான் கல்யாணம் ஆயிருக்கு! சின்னசிறுசுக அப்படி இப்பிரிவு இருக்குமுங்க? நம்ம பிள்ளைக்கு சோர்வு இருக்குமா? இருக்காதா? பத்தாதத்துக்கு நம்ம மாப்பிள்ளையோட கடமை உணர்ச்சி தான் தெரியுமே! வேலையேனு கிடப்பாரு! அப்புறம் நம்ம புள்ள காலேசுல வேல.. வீட்டுல வேல.. அப்புறம்.. அப்புறம்.
 அப்புறம்.. அப்புறம் என்ன சோர்வு இருக்கத்தானே செய்யும்!” என்று வெட்கமாக இழுத்து அவர் கோபமாக முடிக்க.. இப்பொழுது சற்று மனம் தெளிந்து புன்னகைத்தார் காயத்ரி.

அவர் சிரிப்பை கண்டவர் “அப்பாடி ஒரு வழியா உங்களுக்கு தெரிஞ்சிருச்சு! புரிஞ்சிருச்சு!!” என்று பெருமூச்சு விட்டவரின் முதுகில் ஒன்று போட்ட காயத்ரி “வேலையை பாரு.. சும்மா கதை அடித்துக்கொண்டு இருக்குற!” என்று அவரை திட்ட..

“பாருடா!! இவ்வளவு நேரம் வேலை செய்யப் போனவள கூப்பிட்டு வச்சு இவங்க கதை பேசிட்டு, இப்ப நான் தான் பேசுறேனாம்.. நல்லதுக்கே காலம் இல்ல செல்லியம்மா..” என்று தன் போக்கில் பேசிக்கொண்டு வேலை பார்த்த செல்லியை கண்டு சிரித்துக் கொண்டார் காயத்ரி.

ஆனால் அந்த சிரிப்பிற்கு ஆயுசு கம்மி என்று அவருக்கு தெரியவில்லை!!

விடிய விடிய தூங்காமல் இருப்பதும்.. காலையில் மாமிக்கு முன்னரே எழுந்து பால் பாக்கெட்டை எடுத்து வந்து காய்ச்சி ஒரு கிளாஸ் பாலை குடிப்பதும் பின்பு வாசலையே விழி வைத்து பார்ப்பதும்.. ஒரு வேளை காலேஜுக்கு வந்திருப்பானோ என்று வேக வேகமாக கிளம்பி கல்லூரிக்கு செல்வதும்.. அங்கேயும் அவனை காணாமல் சோர்ந்து போவதும் என்று இதுவே வாடிக்கையானது அதிதிக்கு.

திவ்யாவின் வற்புறுத்தலால் இருவரும் கேண்டினில் உண்டாலும்.. மாலை முடிந்தவரை நேரத்தை காலேஜிலேயே நெட்டி தள்ளிவிட்டு வீட்டுக்கு வருபவள் சோர்ந்து போய் வாசல் கதவை பார்த்தப்படி அமர்ந்து விடுவாள்!

மூன்று நாளாக 3000 தடவை ரிஷியின் நம்பருக்கு
முயன்று பார்த்துவிட்டாள். ஆனால் லைன் கிடைப்பதாக காணோம்!! இதைப்பற்றி அன்னையிடம் கூட இன்னும் மூச்சு விடவில்லை. என்ன சொல்ல? அவரையும் பயமுறுத்த அவளுக்கு மனம் இல்லை! எதுவாக இருந்தாலும் என்னோடு போகட்டும் என்று தன்னுள்ளேயே மருகிக் கொண்டிருந்தாள்.

திவ்யாவுக்குமே இவளின் இந்த திடீர் மாற்றம் வியப்பையும் கூடவே பயத்தையும் அளித்தது! 

‘இப்படி சரியாக சாப்பிடாமல் உடம்பை பார்க்காமல் இருந்தால் என்னாவது?’ என்று தோழியின் உடல் நலத்தை பற்றிய பயம்.

‘ரிஷி சார் காலேஜ் விட்டு சென்று விட்டார் என்று தெரிந்த அன்றிலிருந்து தான் இவ இப்படி இருக்கிறா? ஒருவேளை டெல்லியில் போன இடத்தில் இவளையும் அறியாமல் மனதை பறிகொடுத்து விட்டாளோ? ஒன் சைடு லவ்வோ? அதனால்தான் இந்த பாதிப்போ?’ என்று யோசித்தாள். 

‘எப்படி இது சாத்தியம்? பிடிக்காமல் சண்டை போட்டவனிடத்தில் ஐந்தே நாட்களில் ஒருத்தி மனசை பறி கொடுக்க முடியுமா?’ என்று வியப்பு..

எதிர்பார்க்காத வியப்புகளையும்.. நடக்க முடியாத அதிசயங்களையும்.. ஏன் யாரும் செய்யாத கிறுக்குத்தனங்களையும் கொண்டதுதான் “காதல்” என்று பாவம் இந்த திவ்யா பெண் அறியவில்லை! 

ஒரு வேளை.. அவளை காதல் தாக்கும் போது அறியலாம்?


நாமே ஒருமுறை அதிதியிடம் பேசிப் பார்க்கலாம் என்று “ஏன்டி இப்படி இருக்க? உடம்ப நீயே கெடுத்துக்குற! உங்க அம்மா இப்படி உன்னை பாத்தா என்ன நினைப்பாங்க?” என்றதும் விசுக்கென்று அவளை பார்த்த அதிதியின் கண்களில் அத்தனை பரிதவிப்பு!! பயம்!!

“ரிலாக்ஸ்..! ரிலாக்ஸ்..!” என்று அவளை தட்டி கொடுத்து “நீ இப்படி இருக்கிறத என்னால கொஞ்சம் கூட பார்க்க முடியலடி! மனசு கஷ்டமா இருக்கு!” என்றதும் அவளை கண் கொண்டு பார்க்க முடியாமல் மீண்டும் தலையை குனிந்து கொண்டாள் அதிதி.

“இங்க பாரு டி!” என்று அதிதியின் தாடையை நிமிர்த்தி கண்களை நேராக பார்த்து “நீ ரிஷி சார லவ் பண்றியா அதி?” என்றதும் அதுவரை கண்களில் அணை கட்டி வைத்திருந்த கண்ணீர் அணையை உடைத்து வெள்ளமென அவள் கண்களில் வழிய தன் தோழி திவ்யாவையே பார்த்துக் கொண்டிருந்தாள் அதிதி பதில் கூறாமல்..

“ஏண்டி இப்படி என்னை சாவடிக்கிற? ஒன்னு ஆமா சொல்லு! இல்ல இல்லன்னு சொல்லு! நீ எதுவுமே சொல்லாம.. எப்ப பாத்தாலும் கண்ணில் இருந்து டேமை தொறந்து விட்டுக்கிட்டே இருந்தா என்னடி பண்றது? கார்ப்பரேஷன் குழாயில கூட கொஞ்ச நேரத்துல தண்ணி ஆஃப் ஆகிடும். ஆனா.. உன் கண்ணுல உள்ள பம்பு தண்ணி தீரவே தீராதா டி?” என்று திவ்யாவும் அவளை கலாய்த்து சிரிக்க வைக்க எவ்வளவு முயற்சி செய்தும், பலனில்லை!!

“ஒரு காதல் இப்படியா ஆளையே மாற்றும்?” என்று வியந்த திவ்யா “இந்த மானங்கெட்ட காதல் நமக்கு தேவையே இல்லை!” என்று தலையில் அடித்துக் கொண்டாள்.

“இன்னைக்கு என் கூட நீ வெளிய வா” என்று அவளை அழைத்துக்கொண்டு அருகில் இருக்கும் சிறு ஐஸ்கிரீம் பார்லருக்கு சென்றாள் திவ்யா.

எங்கும் எதிலும் ரிஷியே என்று அதிதியின் நிலை!
பின் எங்கனம் சுவைப்பாள் பெண் பனிக்கூழலினை!


“எனக்கு சாப்பிட முடியலடி! நீ வாங்கி கொடு நான் வீட்டில் போய் சாப்பிடுகிறேன்” என்றாள் மெல்லிய குரலில் அதிதி.

“உன் கூட ஒக்காந்து ஒரு ஐஸ்கிரீம் சாப்பிடலாம் நினைச்சேன் பாரு! என்ன சொல்லணும்?” என்று அவள் மட்டும் அவசரமாக உண்டு விட்டு அவளுக்கு பார்சல் வாங்கி கொடுத்ததும், மெல்லிய தலையசைப்புடன் பொம்மை போல அதுவும் கீ கொடுத்த பொம்மை போல நடந்து போகும் தோழியை கவலையாக பார்த்தாள் திவ்யா.

டெல்லியில் இரவு உலவி விட்டு வரும் பொழுது குல்பிக்காரனை பார்த்தவள் கண்களை சுருக்கி, ரிஷியின் புஜத்தை சுரண்டி குல்பி கேட்க.. அவனோ மறுத்தான்.

“இவனுங்ககிட்ட எல்லாம் அவ்வளவு குவாலிட்டியா இருக்காது.. வேண்டாம்!” என்றதும் அவள் மூஞ்சை தூக்கி வைத்துக் கொள்ள “பிடிவாதம்! பிடிவாதம்!” என்று அவள் மூக்கை பிடித்து ஆட்டியவன் வேறொரு ஐஸ்கிரீம் பார்லரில் வாங்கிக் கொடுக்க…

ஆசையோடு வாங்கிக் கொண்டவள் அறைக்கு வந்ததும் அவனை பார்க்க வைத்துவிட்டு சப்பு கொட்டி சாப்பிட்டாள்.

அதிலும் ஒற்றை புருவத்தை உயர்த்தி “வேணுமா?” என்று அவனிடம் கேட்பதும், பின்பு அஸ்கு பிஸ்கு என்று இவள் சுவைப்பதுமாய் அவளது குறும்புத்தனத்தை காட்ட ஒன்றும் பேசாமல் அவளை ஆழ்ந்த பார்த்தபடியே தனது சட்டை பட்டனை கழற்றிக் கொண்டிருந்தான் ரிஷி!

பாதி ஐஸ் கிரீம் கரைந்து கொண்டிருக்க.. “போதும். போதும்.. என்னால முடியல ரிஷி!” என்று அவனிடம் நீட்டினாள் அதிதி.

அவள் கையை அழுத்தி பிடித்துக் கொண்டே ஐஸ்கிரீமை நாக்கால் சுழட்டி எடுத்தவன், அவளை இன்னும் ஆழ்ந்து பார்க்க.. ஐஸ்கிரீமை விட அவனது பார்வையின் குளிர்ச்சியை அவளால் தாங்க முடியவில்லை.

“ரிஷி.. ஒன்னு கேட்டா தப்பா நினைக்க மாட்டீங்களே..?”

“ம்ம்ம்.. கேளு…” என்றான்.

“அன்னைக்கு அவ்வளவு பாயிண்ட் பாயிண்டா பேசினீங்க பஞ்சாயத்துல.. அப்புறம் ஏன் கல்யாணத்துக்கு சம்மதம் சொன்னிங்க?” வெகு நாளாக கேட்க வேண்டும் என்று அவளுக்கு எண்ணம் என்று கேட்டு விட்டாள்.

அவள் கையில் வழிந்த ஐஸ்கிரீமை நாக்கால் நக்கி இழுக்க.. அவன் நாக்கின் தீண்டலில்.. அவள் உடல் சிலிர்க்க.. அவன் பிடியில் இருந்த கையை உருவினாள்.

“கையை எடுக்காத.. அப்புறம் என் கையில் வைத்து சாப்பிட்டு என் கையும் ஐஸ்கிரீமா ஆகிடும்!” என்று அழுத்தமாக பிடித்துக் கொண்டவன்
“அது ஒன்னும் இல்ல ஆடு தானா வந்த மாட்டுச்சா.. அதான் புடிச்சு பிரியாணி போட்டாச்சு!” என்று கண் சிமிட்டி சிரித்தான்.

“ஏன் உனக்கு விருப்பம் இல்லையோ? வேணும்ன்னா சொல்லு..” என்றவன் அவள் கையை இழுத்து ஐஸ்கிரீமை மீண்டும் சுவைக்க.. 

“வேணாம்னு சொன்னா…” என்று இவள் வேண்டும் என்று கேட்க..

“சொல்லிடுவியா என்ன?” என்று மயக்கும் புன்னகை புரிந்தவனை மறுக்கும் எண்ணம் பெண்ணுக்கு இல்லை!!

உடைந்த ஐஸ்கிரீம் அவள் மீது விழ…

“அச்சோ.. டிரஸ்.. போச்சு.. டிரஸ்.. போச்சு.. ” என்று அவள் தட்டி விட.. 

“ஏய்.. ஒன்னும் ஆகாது.. ” என்றவன் அதை அவன் சுவைத்திட..

அவனின் தீண்டலில்.. பிடியில்.. கரைந்தது… ஐஸ்கிரீம் மட்டுமல்ல.. அதிதியும் தான்!!

“உண்மைய சொல்லு.. பிடிக்கலையா?” என்றான் இரகசிய சிரிப்போடு..

இதழுக்குள் மெல்லிய சிரிப்போடு “ம்ம்ம்ம்.. ” என்று தலையாட்டியவள்… மீதம் இருந்த கோனை வாய்க்குள் திணிக்க.. ரிஷி அவளின் பின் கழுத்தில் கையை நுழைத்து.. விசுக்கென்று அவனை நோக்கி இழுத்த அடுத்த நொடி அவளின் ஐஸ்கிரீம் அனைத்தும் அவன் வாய்க்குள் கரைந்தது.

மூச்சு விட மறுத்தவளாய் அவனின் இதழணைப்பில் அவள் கண்கள் சொருகி நிற்க…

அவளின் கீழ் உதட்டை கவ்வி இழுத்தவன் அவள் வாயில் மிஞ்சிய கோனை இவன் சுவைத்தான்.

அன்று நடந்த கூடல் ஊடல் கெஞ்சல் கொஞ்சல் எல்லாம் ஒவ்வொன்றாக அணிவகுத்து வர.. தன் கையில் வைத்து பார்த்திருந்த இல்லையில்லை வெறித்து கொண்டு இருந்த ஐஸ்கிரீமை தூர போட்டவள் “ஆஆஆஆஆ…!!” என்று தலையை பிடித்துக் கொண்டு அந்த வீடு அதிர கத்தினாள் அதிதி!

எந்த கவலையும் இன்றி சிறகு முளைத்த பட்டாம்பூச்சியாய் அந்த கல்லூரி வளாகத்தில் பறந்த திரிந்தவள் அதிதி.

பட்டாம்பூச்சிக்கு எட்டு நாட்கள் தானே வாழ்க்கையாம்! இவளின் வாழ்க்கையையும் இந்த பத்து பதினைந்து நாட்களுக்குள் மொத்தமாக முடித்து சிறகை உடைத்து உயிர்ப்பே இல்லாத ஜடமாக்கி விட்டு சென்று விட்டான் அவன்!!

அந்த அவன் அமெரிக்காவின் புகழ் பெற்ற ஒரு ஆய்வகத்தில் தான் மிக மும்முரமாக பணியாற்றிக் கொண்டிருந்தான்.

“ஹாய் ரிஷி.. லஞ்சுக்கு போகலாமா?” என்றபடி வந்து நின்ற லாரன்ஸை பார்த்தவன் “10 மினிட்ஸ்!” என்று சைகை செய்து அவனுடைய ஆராய்ச்சியை மிக உன்னிப்பாக செய்து கொண்டு இருந்தான்.

“இந்த இந்தியன்ஸ் எல்லாம் வேலை செஞ்சா ரொம்ப ஓவரா வேலை செய்றீங்க.. இல்லையா ஓவரா ரெஸ்ட் எடுக்குறீங்க.. உங்கள புரிஞ்சிக்கவே முடியலையே!” என்று தனது வேலையை பத்து நிமிடத்தில் முடித்து வந்த ரிஷியை பார்த்து கேட்டான் லாரன்ஸ்! மெல்லிய புன்னகை மட்டுமே ரிஷி இடத்தில்.

“அப்புறம் எப்படி போச்சு இந்தியா ட்ரிப்? அப்பா எப்படி இருக்காங்க?”
வழக்கமான பேச்சு கூடவே அவர்கள் ஆய்வுகள் பற்றிய பேச்சு என்று அந்த காபிடேரியாவே கலகலப்பாக இருக்க.. ரிஷி லாரன்ஸ் மற்றும் அங்கிருந்த மற்ற நண்பர்களோடு மெல்லிய புன்னகையோடு உரையாடியபடியே மதிய உணவை உட்கொண்டு இருந்தான்.

எந்தவித குற்ற உணர்வும் இல்லாமல்!
குற்றுயிராய் ஒருத்தியை விட்டு வந்ததைப் பற்றிய நினைப்பும் இல்லாமல்!!

ஆனால் இங்கே அதிதியோ உணவை கண்டாலே ஏதோ ஃபோபியா வந்தவளைப் போல அதை வெறுத்து ஒதுக்கி மூன்று நாட்களாக வெறும் பால் தண்ணீர் அவ்வப்போது திவ்யாவின் திட்டலால் சிறு சிறு உணவு என்று ஆளே உரு தெரியாமல் மாறி இருந்தாள்!

ஒரு காதல் என்னவெல்லாம் செய்கிறது?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *