இதழோடு உறவாட வா… 20

இதழ்… 20!!


“என்ன சயிண்டிஸ்ட் அம்பி.. வேலையும் ஹனிமூனையும் ஒரே வேலையா முடிச்சுண்டு வரேளா?” என்று சிரித்தார் கிரிஞ்ச் மாமி கிரிஜா, ரிஷி டெல்லி சென்று வருகிறோம் என்று கூறியவுடன்..

“இவங்கள கிரிஞ்ச் மாமின்னு கூப்பிடுறது சரியா தான் இருக்கு! எப்படி எல்லாம் பேசுறாங்க பாருங்க?” என்று நாணத்தில் சிவந்த முகத்தை காட்டாமல் அவசரமாக மாறி ஏறிச் சென்றவளை, பார்த்த மாமியும் கண்களால் அவளைக் காட்டி “ம்ம்ம்.. ம்ம்ம்” என்று ரிஷியிடம் கண் ஜாடை காட்ட, அவனுக்குமே சற்று லஜ்ஜையாக இருக்க “குட் நைட் மாமி!” என்றபடி விடைபெற்றான்.

“வயசு தான் ஆயிருக்கு.. இந்த மாமிக்கு கொஞ்சம் கூட இங்கீதமே தெரியல!” என்று மாமியை வறுத்து எடுத்தப்படி உடைமாற்றி வந்தவளை பார்த்து சிரித்துக்கொண்டவன், குளியலறை செல்ல துண்டினை தனது கழுத்தை சுற்றி போட்டுக் கொண்டு அவளைப் பார்த்து இன்னும் சிரித்தான்.

“உங்களுக்கு சிரிப்பா இருக்கு! ஆனா என் பொழப்பு இங்க சிரிப்பா சிரிக்குது!” என்று நொடித்து கொண்டவளை அருகே இழுத்து வாசனை பிடித்தவன், “கூல் அதி.. கூல்! புதுசா கல்யாணம் ஆன கபுள்ஸ பார்த்தா எல்லாருக்கும் இருக்கிற ஒரு சுவாரஸ்யம் தான்! கேலி பண்றது எல்லாம் சும்மா.. அவங்களுக்கு அவர்களுடைய கல்யாண முடிந்த நாட்கள் ஞாபகம் வந்திருக்கும். இப்போ எப்படியோ.. ஆனா அந்த நாள்ல எந்த கவலையும் இல்லாமல் சந்தோஷமா இருந்து இருப்பாங்க தானே! அதை நினைத்து இருப்பார்களாக இருக்கும்! ஃபீல் ஃப்ரீ அதி!” என்றான் அவள் நெற்றி முட்டி!

“போங்க போங்க.. போய் குளிச்சிட்டு வாங்க.. நான் ரொம்ப‌ டயர்ட்! தூங்கணும்” என்றாள் சோர்வோடு!

அவன் கண்கள் அவள் முகத்தை ஆசையாகப் பார்த்தது. குளித்து வந்தவளின் முகத்தில் இன்னும் ஈரத்தின் மிச்சங்களாய் ஆங்காங்கே நீர் துளிகள்.. பன்னீர் ரோஜா மேலிருக்கும் சிறு சிறு பனித்துளிகளாய் அத்துணை அழகாய் இருக்க… அவனை அவளுள் ஈர்க்க…

அதுவரை பார்த்திருந்தவனின் ரசனை பார்வை கணவன் பார்வையாக மாற… அவனின் அணைப்பின் அழுத்தங்கள் கூடிக் கொண்டே சென்றது.
அவன் பார்வை அவளின் மெல்லிய உணர்ச்சிகளை தட்டி எழுப்ப… அவனின் இழுப்பிருக்கு தன் போல சென்றவள், “போங்க போங்க.. குளிக்க போங்க!” என்று அவனை துரத்தி விட்டாள்.

“எதுக்கு இரண்டு தடவ குளிச்சிகிட்டு…” என்றவனை குழப்பமாக பார்த்தவள் பின் புரிந்து “ஓஹ்.. நோ…!” அவனை விலகி விட்டு ஓட… 

“ஹே.. எஸ்!” அவன் சிரித்தபடி அவள் எட்டிப் பிடித்து அவளோடு படுக்கையில் சரிந்தான். மெல்ல அவள் கன்னத்தில் கிள்ளினான். அவள் கன்னம் அத்துணை மென்மையாக இருக்க.. அவளுக்கோ அவன் அருகாமையில் தானாக முகத்தில் ஒரு டென்ஷன்.. நெஞ்சுக்குள் படப்படப்பு!

“நான் என்ன கடிச்சி திங்கவா போறேன்! எதுக்கு இவ்வளோ டென்ஷன் அதி! ரிலாக்ஸா இரு டி!” என்றான்.

“நான் எங்க டென்ஷன் ஆகுறேன்? அதுவா டென்ஷன் ஆகுது நீங்க பக்கத்துல வந்தாலே..!” என்றாள் உதட்டை கடித்து!
“ஏனாம்?” என்றவனின் மென் குரலில் காதல் மிகுத்து வந்தது!

“அதான் தெரியல..” என்று அவன் முகம் காண முடியாமல் அவன் நெஞ்சில் வஞ்சியவள் முகம் புதைத்துக் கொள்ள.. வெற்று மார்பின் அடுக்கடுக்கு ரோமங்கள் பஞ்சனையாய்!!
“தப்பாச்சே..!! இவ்வளோ நடந்த பிறகும் என் அருகாமை உன்னை இவ்வளோ டென்ஷன் ஆக்குதா? தப்பாச்சே இது!” என்றவன், 
அவள் காதோரம் குனிந்து “டென்ஷன போக்கிடுவோமா?” என்று சரசமாக கேட்டவன், மெல்ல அவள் கையை தன் கையில் எடுத்தான். அவள் உடம்பு அவன் வெம்மையில் தகித்தது. அவள் கை விரல்களை மெல்ல நீவினான். பின் குனிந்து ஒவ்வொரு விரலாய் முத்தமிட்டான். அவள் உடல் அவன் முத்த ஈரத்தில் சிலிர்த்து சிணுங்கியது. 
அந்த நச்சென்ற இச் சத்தத்தில் பெண்ணவள் காது மடல் கூட நாணி சிவந்தது!!
விரல் கொண்ட ஈரம் இதழ்களுக்கும் வேண்டுமென துடித்து வறண்டன!!
“லவ் யூ அதி” அவள் கையை பற்றி இன்னும் அருகே இழுத்தான். மெல்ல மெல்ல அவன் பக்கம் சாய்ந்தாள், உடலாலும்.. மனதாலும்!!
அவள் உடலின் உஷ்ணம் அந்த ஊட்டி குளிரிலும் கிடுகிடுவென உயர.. உடல் சொக்க.. மூச்சு படபடப்பானது!!
“போதுமே.. இரண்டு நாளாக.. டெல்லியில.. போதுமே..” என்றாள் திக்கி திணறி.
“அடியேய் அதி.. இந்த வயசுலாதான் இதெல்லாம் என்ஜாய் பண்ண முடியும்! அப்புறம் மாமி வயசான நீயெல்லாம் என் கிட்ட கூட வர மாட்ட! என்னையும் கிட்ட விட மாட்ட!” என்றான் சோகமாக!

“எ.. எதே…? மாமி வயசுலையா?” என்று அவள் அதிர..
“எஸ்..” என்றான்.
“போங்க..!” என்றாள்.
“வேண்ணா.. அப்போ பீச் பார்க்னு ஜாலியா சுத்தலாம்!”
“ம்ம்ம்!”
“படத்துக்கு போகலாம்!” 
“ம்ம்ம்!”
“ஹனிமூன் போகலாம்!”
“ம்ம்ம்.!”
“லவ் பண்ணலாம்!”
“ம்ம்ம்ம்”
“கூடவே லவ் மேகிங்கும்!”
“ம்ம்ம்!”
அவள் புரியாமல் அவன் சொல்வதற்கு எல்லாம் ம்ம்ம் கொட்டினாள்.
 “உனக்கு ஓகேனா எனக்கும் ஓகே அதி!” என்றான் அடக்கப்பட்ட சிரிப்போடு! அவனின் பேச்சு அப்போது தான் அவளுக்கு புரிய.. 
அவள் அரண்டு விலகும் முன் இறுக்கி பிடித்து முகத்தை எக்கி அவள் கண்களில் முத்தமிட.. அவள் கண் இமைகள் துடித்து அடங்கின!!
இதழ்களோடு இதழ்கள் உறவாட விட… உயிர் வரை உணர்வில் உறையும் ஓர் அழுத்தமாக முத்தம்! இதை சற்றும் இருப்பாராதவள் விலக முற்பட.. இன்னும் அழுத்தமாக இழுத்து புதைத்துக் கொண்டான் இதழ்களை!
‘இதழ்களை தானே விடமாட்டேன் என்கிறாய்?’ தலையசைத்து இதழ்களைப் பிரிக்க எத்தனிக்க.. விரிந்திருந்த கூந்தலில் விரல் நுழைத்து அசையாமல் இறுக பிடித்துக் கொண்டான். உணர்வு பெருக்கில் பெண்ணவள் கரங்கள் அவன் மார்பிலும் தோள்களிலும் ஊர்வலம் போக.. ஒரு கை கூந்தலை அழுத்தமாக பற்றியிருக்க மறு கை கொண்டு அவளது இல்லா இடையில் பொல்லா பிள்ளையாய் குறும்பு செய்தான்!
ஒற்றை முத்தத்தில் நிறைவு செய்யக்கூடியதாக தாம்பத்தியம்? இல்லை இல்லை ஒற்றை முத்தத்தில் ஆரம்பிக்க வல்லது! இந்நிலை போதாது பெண்ணே… இன்னும் இன்னும் வேண்டும்.. பேரின்ப நிலை..!! சித்தம் கலங்கி பித்தாக்க என்று எண்ணம் கொண்டவன் அவள் கழுத்து பகுதியில் முகம் புதைத்து தன் தேவையினை உணர்த்த..
“ரிஷி…” என்று கிறக்கமாக மெல்லிதாக ஒலித்த அவளது ஒற்றை சொல்லே போதுமா இருந்தது அவளது சம்மதத்திற்கு! அதற்குப் பின் யார் அவனுக்கு தடை போட? திகட்ட திகட்ட தின்று களித்தனர் தாம்பத்தியத்தின் இனிமையை இளம் ஜோடிகளுக்கே உரித்தான வகையில்..
அதன்பின் கெஞ்சலும் கொஞ்சலுமாய் மீண்டும் மீண்டும் கூடலாய் காதல் அரங்கேறியது!!
கண்விழித்த அதிதி அருகே பார்க்கும் ரிஷி இல்லை. இந்த ஒரு வாரமாக இப்படித்தானே! இரவெல்லாம் அவனோடு களித்து விட்டு களைப்போடு உறங்குபவள் மறுநாள் காலை வெகு நேரம் கழித்து விழித்தெழுவாள்.
“நைட் எல்லாம் உழைக்கிறது நானு.. நானே சீக்கிரம் எழுந்திடுறேன்! உனக்கு என்ன டி?” என்று தூங்கி விழித்து சோபையாக அமர்ந்திருக்கும் மனைவியின் மூக்கை பிடித்து ஆட்டுவான் ரிஷி!!
இன்றும அதை எண்ணியவாறு சிவந்த தன் மூக்கு நுனியினை துடைத்துக்கொண்டே இருந்தவள், எழுந்து குளித்துவிட்டு வந்தாள்.
 அவனது ட்ராலி இருக்கிறதா என்று பார்க்க? இல்லை! இதுவும் வழக்கம் போல் தான்! ரிஷி என்னதான் இங்கே இவள் கூட தங்கினாலும் உடைகள் துவைக்க கொண்டு செல்வது அவனது வீட்டுக்கு தான்.
“இங்கே துவைக்கலாமே?” என்று அவள் கேட்கும் போது 
“எனக்கு இதெல்லாம் பழக்கமே இல்லை. சின்ன வயசுல இருந்து மேய்டு தான் செய்வாங்க.. உன்ன செய்ய வைக்கவும் எனக்கு கஷ்டமா இருக்கு. அதான் எப்படியும் அப்பாவை பார்க்க போவேன் அங்க மேய்டு இருப்பாங்க இல்லையா.. கொடுத்துட்டு வாஸ் செய்து அயர்ன் பண்ணின டிரஸ எடுத்துட்டு வந்துருவேன்! சிம்பிள்!!”என்றான் சிரித்துக் கொண்டே ‌…
ஒரு வாரமாக டெல்லி சென்றதால் காலையில் அப்பாவை பார்க்க சென்றிருக்கலாம் என்று நினைத்துக் கொண்டாள்.
“அதிதி.. ஏய் .அதிதி..” என்று கீழிருந்து கிரிஜா மாமி அழைப்பது கேட்க “இதோ வந்துட்டேன் மாமி..” என்று ஈரத்தலையை துவட்டிக்கொண்டே கீழே செல்ல, மெச்சுதலாய் மாமியின் முகத்தில் ஒரு பாவனை வந்து சென்றது.
ஆனாலும் நண்பகலை தாண்டி விட்டதை அவர் உச்சியில் வந்த சூரியனை பார்த்து இவளையும் ஒரு பார்வை பார்க்க..
“நைட் டிராவல் செம டயர்ட் மாமி! அதான் அசந்து தூங்கிட்டேன்” என்று அவள் அசட்டு புன்னகை உதிர்க்க..
“சரி.. சரி..! என்ன பால் பாக்கெட் எடுக்கவே இல்லையா? அம்பி இன்னும் தூங்குறாரா? அவர் தூங்குனா இந்த வேலை நீ பார்க்க மாட்டியா?” என்றார் கண்டிப்போடு!
 அங்கே இவர்களுக்கென்று கிரிஜா மாமி ஒரு பையை தனியாக பாலுக்கு என்று வைத்திருக்க.. அதில் இன்னும் பால் எடுக்கப்படாமல் இருப்பதை சுட்டிக்காட்ட.. இவள் யோசனையோடு சென்று அதனை எடுத்தவள், “இல்ல மம்மி அவர் சீக்கரமே கிளம்பி காலேஜ் போயிட்டார்! மறந்திருப்பார் போல” என்று இவளே எடுத்துக் கொண்டு வந்தாள், பெரும் யோசனையோடு!!
அவனுக்கு போன் செய்யலாம் என்று பார்க்க.. அதற்குள் காயத்ரியிடம் இருந்து இவளுக்கு போன் வந்தது அவரிடம் பேசிக் கொண்டே காலை உணவாக பாலை மட்டும் காய்ச்சி குடித்தவிட்டு படுத்தவளுக்கு மீண்டும் தூக்கம் சொக்க.. அசந்து உறங்கிவிட்டாள்.
மீண்டும் விழித்தெழும்போது மாலையாகி விட்டிருந்தது. அருகில் இருந்த ஃபோனில் மணியைப் பார்த்தவள், “இவ்ளோ நேரமா தூங்கிட்டேன்? ஆப்டர்நூனுக்கு மேல காலேஜுக்கு போன நினைச்சேனே.. இப்படியா அதிதி தூங்குவ? அவர் சொல்றது போல நீ சரியான தூங்கு மூஞ்சி தான்!” என்று தலையில் தட்டிக் கொண்டு வெளியில் வந்து பார்க்க அப்பொழுதும் ரிஷி வந்திருக்கவில்லை.
 சில சமயம் இது போல் நடப்பது தானே! ஏதாவது வேலை என்று வந்தாலே அவன் வெள்ளைக்காரன் தான்! ‘இல்லை இல்லை வெள்ளைக்காரனுக்கு டஃப் கொடுப்பான்!’ என்று சிரித்துக் கொண்டே இரவுக்கு என்ன செய்யலாம் என்று பார்க்க வீட்டில் ஒன்றும் இல்லை.
சரி ஆர்டர் கொடுத்து விடுவோம் என்று இவர்கள் இருவருக்கும் சேர்த்து உணவுக்கு ஆர்டர் கொடுத்துவிட்டு ஃபோனில் இவள் நோண்டிக்கொண்டே இருக்கும் போது தான் திவ்யா அழைத்தாள்.
“என்னடி இன்னைக்கு காலேஜுக்கு வரல?” என்றாள்.
“இல்லடி டெல்லி போய்ட்டு வந்தது கொஞ்சம் டயர்ட்! வந்து படுத்தது தான் தெரியும். முழிச்சு பார்த்தா.. மத்தியானம் ஆயிடுச்சு.. சரி சாப்பிட்டு கிளம்பலாம் பார்த்த மறுபடியும் சொக்கிடுச்சு.. திரும்பவும் முழிச்சு பார்த்தால்.. சாயந்திரம் ஆயிடுச்சு டி! அதுக்கப்புறம் கிளம்பி வந்து எதுக்குன்னு தான் விட்டுட்டேன்!”
“நல்ல வேலை இன்னைக்கு நீ வரல! நாம எச்ஓடியுமே வரல. காலைல வந்தார் போல உடனே அவரும் போயிட்டாராம். இருந்திருந்தால் உன்னை கேட்டே தொலைத்து இருப்பார் என்னை! தப்பிச்சோம்டி! நல்லா ரெஸ்ட் எடுத்துட்டு நாளைக்கு வா போதும்” என்றாள் அக்கறையாக!
“அப்ப காலையில காலேஜுக்கு போய் இருக்கான். அதுக்கப்புறம் எங்க போனான்? ஒருவேளை அவங்க அப்பாவ பாக்க போய்ட்டானா? கரெக்ட் தானே.. நமக்கு நேரம் கொடுத்த மாதிரி அவங்க அப்பாவுக்கும் நேரம் கொடுக்கணும் இல்லையா? ஆனால் என்னிடம் சொல்லிட்டு போயிருக்கலாம்.. ரிஷி சார்!” என்று உதட்டைப் பிதுக்கிக் கொண்டாள்.
அவனது மொபைலுக்கு மீண்டும் அழைக்க தொடர்பு எல்லைக்கு வெளியே இருப்பதாக ஐவிஆர் வாய்ஸே வர.. சோகமான படுத்துக் கொண்டாள் பேதை!
ஏனோ இன்று தூக்கம் வரவே இல்லை. பத்து நாட்களாக தள்ளி இருந்தாலும் ஒரே படுக்கையில் தான் உறக்கம்! 
இந்த ஐந்து நாட்களாக ஒருவர் இன்றி ஒருவர் இல்லை என்பது போல இறுக்கமான பிணைப்போடு கூடிய அணைப்பில் தான் இருபது உறக்கம்!! 
ஆனால்.. இன்று தனித்து படுக்கவே துவண்டு போனாள் பேதை.
“நீ பொல்லாத ராட்ஷஸன் டா! நீ இருந்தாலும் என்னை படுத்தி வைக்கிற.. இப்படி இல்லைனாலும் உன் நினைவாலே என்னை படுத்தி வைக்கிற!” என்று தலையணையை தலைவனாக எண்ணிக் கொண்டு பிரிவினை ஏற்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தாள் அதிதி.
‘இவனைப் பார்ப்பதற்கு முன்னால்.. கிட்டத்தட்ட ஒரு வருடம் தனியாகத்தானே இருந்தோம். அப்ப எல்லாம் படுத்தவுடன் கண்களை சுழட்டும் உறக்கம் இன்று தள்ளிப் போனதென் காரணம் என்னவோ?’ என்று உறக்கம் வராமல் புரண்டு புரண்டு படுத்துக் கொண்டு இருந்தவள் நினைப்பை மொத்தமாய் ஆக்கிரமித்து இருந்தான் ரிஷி தனஞ்ஜயன்.
“ரிஷி சார் வரலையா டி?” என்று மரியாதையோடு கேட்கும் அதிதியை ஏதோ ஏலியன் போலவே பார்த்தாள் திவ்யா, மறுநாள் கல்லூரிக்கு வந்ததும்!
“எதே ரிஷி சாரா? என்னடி மரியாதை எல்லாம் பலமா இருக்கு? நம்ம பழைய ஹெச்ஓடி கூடவே வொய்ஸ் பிரின்ஸ்பல் பரமேஸ்வரன் அவரையே.. நாம பனங்காமண்டனு தானடி கூப்பிடுவோம்! யாருக்குடி நம்ம இப்படி எல்லாம் மரியாதை கொடுத்து இருக்கோம்?! அதி டெல்லி போனபோது பேய்க்கீய் உன்னை அடிச்சிடுச்சா? ஒரு பேய் இன்னொரு பேயை அடிக்காதே!” என்று தனக்குத்தானே கேட்டுக் கொண்டவள்,
“நீ நல்லா தானே இருக்க அதி? ஜுரம் காய்ச்சல் எதுவும் இல்லையே?” என்று அவள் கழுத்தை கன்னத்தை தொட்டுப் பார்த்தாள் திவ்யா.
“பிசாசு தள்ளி போடி! கூச்சமா இருக்கு.. தொடாதே!!” என்று அதிதி அவள் கையை தட்டி விட
“என்னது கூச்சமா இருக்கா? என்னடி புதுசு புதுசா ஏதேதோ சொல்ற? நமக்கெல்லாம் விஎம்எஸ் கிடையாதே டி! இனி கூச்சத்தையும் அந்த லிஸ்டில் சேர்த்துக் கொள்ள டி கண்ணு!” என்று அவள் கன்னத்தைப் பிடித்து வலிக்க கிள்ளினாள் திவ்யா.
அதிதிக்கோ முந்தைய நாள் இரவு ரிஷி கிள்ளியது நினைவு தன் போல வந்து போக… அந்தி வானமாய் சிவந்த போனது அதிதியின் முகம்.
மனதின் ஓரம் ரிஷியின் நினைவு வந்து வந்து சென்றாலும்… அன்றைய வேலைகள் அவளை இழுத்துக் கொள்ள இராபூச்சியின் ரிங்காரமாய் மனதின் ஓரம் இம்சித்துக் கொண்டிருந்த ரிஷியின் நினைவுகளை சுமந்து கொண்டே தன் வேலைகளை பார்த்துக் கொண்டிருந்தாள் அதிதி. 
சிறிது நேரத்தில் வந்த பியூனோ “அதிதி மேடம் உங்களை பிரின்ஸ்பல் வர சொன்னார்!” என்று விட்டு சென்றான்.
“எதுக்கு பிரின்சிபல் வர சொல்லி இருப்பார்?” என்று யோசனையுடைய அவள் காரிடரில் நடந்து சென்றாள். அவளைப் பார்த்த தனது வகுப்பில் இருந்த திவ்யா “அதி.. அதி.‌.” என்று மெதுவாக அழைக்க..
“என்ன?” என்று சைகையில் கேட்டவளிடம் “ஒரு முக்கியமான விஷயம் இங்கே வா!” என்று அழைத்தாள் திவ்யா.
 “பிரின்ஸ்பால் கூப்பிடுறாங்க வந்து கேட்கிறேன்” என்று வேகமாக சென்று விட்டாள் அதிதி.
“ரிஷி சார் பத்தி இவளுக்கு தெரியுமா? இவள எதுக்கு பிரின்சிபல் கூப்பிட்டுயிருக்கார்?” என்று யோசனையோடு திவ்யா தன் வகுப்பை கவனிக்க..
இங்கே பிரின்ஸ்பல் முன்னால் நின்று கொண்டிருந்த அதிதிக்கும் அதே யோசனைதான்! ‘எதுக்கு என்னை வரச் சொல்லி இருக்கிறார்கள்?” என்று முதல்வர் ரத்தினசாமியை பார்த்தாள். அருகே பரமேஸ்வரனும் அமர்ந்திருந்தார்.
“வாழ்த்துக்கள் மா! அதிதி!” என்று கூறியவர் “உன்னோட சர்டிபிகேட்ஸ் மெடல் கேஷ் அமௌன்ட்! இதெல்லாம் நேத்து காலைலேயே ரிஷி வந்து இங்கே கொடுத்துட்டார்” என்றதும் ‘அட.. ஆமா! இத நம்ம தேடவே இல்லையே?’ என்று யோசித்துக் கொண்டே மெல்ல புன்னகையை சிந்தினாள் அதிதி.
“கேஸ் அமௌன்ட் முழுவதையும் உன்கிட்டே குடுக்க சொல்லிட்டாரு!’ என்று அவளுடைய சர்டிபிகேட் மெடலோடு அந்த செக்கையும் சேர்த்தே கொடுக்க.. இவள் புரியாமல் யோசனையோடு வாங்கினாள்.
“என்ன இருந்தாலும் அவரோட கெய்டன்ஸில் நீ பண்ணினாலும் நீ தான் இதுல ஃபுல் அண்ட் ஃபுல் ஒர்க் பண்ணினனு உன் கிட்டயே மொத்த அமோண்ட்டையும் கொடுக்க சொன்னார்!” என்றார் பிரின்சிபல்.
 ‘சொன்னார்! சொன்னார்?? என்றால் என்ன அர்த்தம்?’ என்று புரியாமல் அதிதியின் மனதுக்குள் சிறிது படபடப்பு தோன்றி பெரும் மத்தளமாய் கொட்ட.. கை நடுக்கத்தோடு அதனை வாங்கிக் கொண்டாள்.
“ரிஷி சார்..” என்றவளுக்கு அதற்கு மேல் பேசவே முடியவில்லை‌. ‘என்ன பூகம்பம் வருமோ?’ என்று வெளியே எம்பி குதிக்கும் இதயத்தோடு அவர்களை பார்த்திருந்தாள் அதிதி.
“அவர் பேட் லக்! ரொம்ப திறமையான பர்சன்! டெடிக்கேட் பெர்சன் கூட! நம்ம காலேஜுக்கு கொடுத்து வைக்கல.. அவருக்கு ரிசர்ச் ஸ்காலரா கனடாவுல ஜாப் கிடைச்சு அங்க போயிட்டார்” என்று அள்ளாமல் கொள்ளாமல் பெரும் அணுகுண்டை அதிதியின தலையில் இறக்கினார் பிரின்சிபல் ரத்தினசாமி!
“ஹ்ஆஆஆ…” என்று மூச்சடைத்து நின்றாள் அதிதி!
அதேநேரம் மேலே விமானத்தில் பறந்து கொண்டு இருந்தான் அமெரிக்காவை நோக்கி ரிஷி!
அங்கிருந்து மேகப் பொதிகளை பார்த்தான். அந்த மேக பொதிகளுக்கு வெகு கீழே மிக மிக புள்ளியாய் தேய்ந்து சென்று கொண்டிருந்தது நிலங்கள்!! அந்நிலங்களில் நடுவில் இருந்த வீடுகளில் ஒன்றில் அவனை எண்ணி கண்ணீரில் கரைத்துக் கொண்டிருந்தாள் அதிதி.. ரிஷியின் பத்தினி!!


இதழோடு உறவாட வருவானா??

























Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *