இதயம் நழுவியது உன்னிடம்
இதயம் நழுவியது உன்னிடம் – 14
ஐயோ! இவர் ஏன் இப்போ வந்தார் என்ற பயம் தான் வந்ததது உண்மையில் அபிக்கு.
வேகமாக வந்தவன், “ஹாய் அபி! எப்படி இருக்கே?”
“நல்லா இருக்கேன். அங்கிள், நீங்க எல்லாரும் எப்படி இருக்கீங்க?”
ஆல் குட், இங்க ஒரு வேலையா வந்தேன், கிளம்ப போனேன். அப்போ தான் உன்னை பார்த்தேன். இங்க தான் டியூஷன் எடுக்கிறியா? (யப்பா சாமி உலக மகா நடிப்பு டா என்று கவுண்டமணியின் குரலிலேயே நக்கல் அடித்தது மனசு).
இரண்டு நாள் முன்பே, அவர்கள் கார் எல்லாம் அவளுக்கு தெரியும் என்பதால் அர்ஜுனின் காரை ஓசி வாங்கிக்கொண்டு வந்து அவள் எப்போது சென்டரில் இருந்து வெளியே வருகிறாள், டியூஷன் எப்போ முடிகிறது, ஹாஸ்டல் போறது எல்லாம் பார்த்து விட்டான்.
அர்ஜுனிடம் பேசி விட்டு வந்த பின், மிகவும் யோசித்தான் கவின். அவன் சொன்னது போல் மேலும் அபியை எந்த தொந்திரவும் பண்ண கூடாது என்று முடிவெடுத்தான். ஆனால் இரண்டு நாள் சென்றும் அவன் மனது அமைதியடையவே இல்லை. வேலையில் இருக்கும் போது கொஞ்சம் அடங்கும் மனது மறுபடியும் துள்ளும். அதை அடக்க வழி தெரியாமல் திணறினான் கவின்.
ஐந்து நாள்!! இது வரை மனம் விரும்பிய, நினைத்த அனைத்தையும் நடத்திக்கொண்டு கவலை என்றால் என்னவென்றே தெரியாத கவின், அவன் வாழ்க்கையில் முதன் முறையாக இந்த ஐந்து நாட்களும் துன்பமா, ஏக்கமாக, கவலையா என்னவென்றே புரியாத உணர்ச்சியால் அலைக்கழிக்கப்பட்டான்.
அதை எவ்வாறு போக்கி கொள்வது என்று புரியாமல் அல்லாடினான்.
நான் தான் இப்படி இருக்கேன், அபி எப்படி இருக்கா பார்ப்போம் என்று அர்ஜுனிடம் காரில் வந்து அவள் சென்டர் வாசலில் காத்திருந்தான். சும்மா பார்த்து விட்டு போக எண்ணி தான் அவன் வந்தது ஆனால் ஒரு பையனுடன் சிரித்து பேசியபடி வந்த அபியை பார்த்தவனுக்கு சுறு சுறு வென கோவம் பொங்கியது.
நான் ஒருத்தன் இங்கே அல்லாடிகிட்டு இருக்கேன், இவ எவ்ளோ ஜாலியா இருக்கா!!
முதல்ல யாரு அவன், என்கிட்ட யோசிச்சு யோசிச்சு பேசுவா, சிரிப்பா! இப்போ எப்படி சிரிக்கிறா பாரு என்று பொறாமையில் வெந்தான்.
பியூச்சர் பத்தி யோசிக்க வேணாம், இப்போதைக்கு அபிகிட்ட தான் இருக்கு என் பீஸ் அப் மைண்டோட கன்ட்ரோல். ஐ நீட் ஹெர் வித் மீ. ஆனா மறுபடியும் பழைய ரூட் ஒத்துவராது என்று தெரிந்தவன், புதிதாக யோசித்தான்.
இவன் எதுக்கு இப்போ பேச்சை வளர்கிறான் என்று நினைத்தாலும், “ஆமா இது தான் அவங்க வீடு” என்றாள்.
“நடந்தே போய்டலாமா ஹாஸ்டல்க்கு?”
கடவுளே!! என்று நொந்து கொண்டாலும், ம்ம்ம்.. பிப்டீன் மினிட்ஸ் தான் ஆகும் என்றவள் அவன் மேலும் ஏதோ கேட்க வர, அதற்கு மேல் பொறுமையாக இருக்க முடியாமல் ரோட்ல போற வர்றவங்க எல்லாம் நம்மளை வேடிக்கை பார்க்கிறாங்க.. நீங்க கிளம்புங்க ப்ளீஸ் என்றாள்.
இதற்கு எல்லாம் அசந்துருவானா கவின்? அவள் என்ன செய்தாலும் சமாளிக்க தயாராக தான் வந்து இருக்கிறான்.
சரி வா, இங்க பக்கத்தில ஒரு காபி ஷாப் இருக்கு. அங்க போலாம். அப்புறம் நானே உன்னை ஹாஸ்டல்ல ட்ராப் பண்றேன் என்று அவளை தலை சுத்த வைத்தான்.
நீங்க கிளம்பிட்டேன்னு சொன்னீங்க, நீங்க போங்க என்னால லேட் ஆக போகுது என்று சமாளிக்க பார்த்தாள்.
அவளை பார்த்தால் அவனுக்கே பாவமாக தான் இருந்தது. போவதற்கு எப்படி தவிக்கிறாள். ஆனால் ஸாரி கண்ணம்மா என்று மனதிற்குள் சொல்லிக் கொண்டவன், அதெல்லாம் ஒன்னும் பிரச்சனை இல்லை என்றான் சிரிப்பை அடிக்கியபடி.
“இல்ல.. நானும் படிக்கணும்.. அதான்.. ப்ளீஸ்.. ஸாரி நான் போகணும்” என்றாள் அபி..
அவளின் மறுப்பு அவன் முகத்தை கன்ற வைத்தது. அவன் அவளிடம் பேசி பழக விரும்பும் அளவு இல்லாவிட்டாலும் அவன் மேல் அவளுக்கு ஒன்றுமே இல்லை. அதனால் தான் தன்னை தவிர்க்க நினைக்கிறாள். இதற்கு மேலும் வற்புறுத்துவதில் அர்த்தம் இல்லை என்று புரிய, ஓக்கே ஒரு மாசம் தெரிஞ்சவன் கிட்ட ஒரு பத்து நிமிஷம் ப்ரண்ட்லியா பேச கூட உனக்கு இஷ்டம் இல்லேல… ஐ அன்டெர்ஸ்டாண்ட் என்று கோவமாக போய் காரில் ஏற போனான்.
அவன் முகம் கன்ற, கோவமாக பேசியவுடன் இவளுக்கு ஒரு மாதிரியாகி விட்டது…. பின்னாலே ஓடினாள்.
காரில் ஏற போனவன், இவள் வந்ததை பார்த்ததும் துள்ளி குறைக்காத குறை தான். அவ்வளவு சந்தோஷப்பட்டான். இவள் கெஞ்சினாள் மிஞ்சுவதையும் மிஞ்சினால் கெஞ்சுவதையும் புரிந்துக் கொண்டவன் பேசாமல் இருந்தான்.
ஒரு ஹாப் அன் ஹவர் தான்.. ஓக்கே.. என்னை திரும்பி கொண்டு வந்து விட்டுடனும். சரியா
கரும்பு தின்ன கூலியா? ஷுயர்! சொல்லணுமா நீ அதை.. வா வந்து ஏறு! உற்சாகமாக முன் கதவை திறந்து விட்டான்.
இவங்க அம்மாவுக்கு மட்டும் இது தெரியணும் என்று நினைத்தபடி ஏறி அமர்ந்தாள் அபி. இது தேவையில்லாத வேலை என்று தெரிகிறது. ஆனால் அவன் அப்படி முகத்தை தூக்கி வைத்துக் கொண்டு செல்லும் போது எப்படியோ போடா என்று விட முடியவில்லையே… என்னை படுத்துறான் இவன்! நொந்து கொண்டாள் அபி.
நுங்கம்பாக்கத்தில் இருக்கும் ஒரு காபி ஷாப்பிற்கு அழைத்து வந்தான் கவின்.
காரை விட்டு இறங்கவே ரொம்ப யோசித்தாள் அபி. ப்ளீஸ் இங்க இருக்கிறது பேரு மட்டும் என் பிரண்ட்ஸ் சொல்லி கேட்டு இருக்கிறேன். எப்படி கேட்கணும் கூட தெரியாது. பாருங்க அந்த பொண்ணுங்க எல்லாம் ஹைபையா இருக்காங்க. எனக்கு ஒரு மாதிரியா இருக்கு. ப்ளீஸ் நான் வரலை.
ஹே! யாரை பத்தியும் நீ யோசிக்காத. ஆடிட்டர் ஆக போற. செல்ப் கான்பிடன்ஸ் வேண்டாமா! உன்னை எந்த விஷயம் ரொம்ப பயமுறுத்துதோ அதே விஷயத்துக்குள்ள போய் அதை பேஸ் பண்ணனும்.அப்புறம் சே! இவ்ளோ தானா இதுனு அதில இருக்க பயம் போய்டும். ஈசி சைக்காலஜி.
இந்த என்விரான்மெண்ட் தான் உன்னை பயமுறுத்துது. வேற ஒன்னும் இல்லை. நான் தான் உன் கூடவே இருக்கேன்ல. கம். குட் கேர்ள் என்று அழைத்து போனான்.
அவனின் அக்கறை எப்போதும் தெரியும். ஆனால் இன்று ஏதோ புதிதாக இருந்தது. பிடித்தது ரொம்ப.
உள்ளே இவர்களை வித்தியசாமாக பார்க்க தான் செய்தார்கள். பார்க்கும் போதே நடை உடையில் மிடுக்காக இருக்கும் கவினுடன், மெருக்கேற்றாததால் அழகு கம்மியாக தெரியும் அபியையும் ஜோடியா இல்ல பிரண்ட்ஸா என்று சந்தேகத்துடன் பார்த்தார்கள்.
ஏன் இப்படி பார்க்கிறாங்க? சங்கோஜத்தில் கேட்டாள் கவினிடம்.
அவங்க உன்னை பார்க்கலை. அழகான பையன்னு என்னை பார்க்கிறாங்க. சோ நீ கண்டுக்காத.
ஓ! ஓக்கே ஓக்கே. என்ஜாய் என்று சிரித்தபடி அவளுக்கு அவன் ஆர்டர் பண்ணிய லாத்தேவில்( latte) கவனம் செலுத்தினாள்.
சிரிக்கும் அவளையே கண் எடுக்காமல் பார்த்தான் கவின். இவளுடன் இருக்கும் போது, மேஜிக் மாதிரி ஹாப்பியா மாறிடுதே மூட்!
சற்று நேரம் அவளையே பார்திருந்தவனுக்கு கடந்த ஒரு வாரமாக இருந்த மன பாரம் குறைந்தது போல் இருந்தது. என்ன என்ன என்று அலைந்து கொண்டிருந்த மனசு இது தான் என்று அமைதி அடைந்தது அவனுக்கே தெரிந்தது.
“என்னாச்சு? சைலண்ட் ஆயட்டீங்க?”
“அபி, ஒன்னு சொன்ன கோபப்படாம கேட்கணும்!!”
புதுசா என்ன சொல்ல போறானோ தெரியலையே என்று நினைத்தாலும் “சொல்லுங்க” என்றாள் கவனமாக.
“இதுக்கு முன்னாடி நடந்ததெல்லாம் மறந்துடு. லெட் அஸ் பி குட் பிரண்ட்ஸ். ஓக்கே வா! நாம சாதாரணமா பேசலாம் பழகலாம். உன்கிட்ட நான் உனக்கு பிடிக்காத மாதிரி நடந்துக்க மாட்டேன்.” சத்தியம் பண்ணாத குறையா அரசியல்வாதி போல் வாக்குறுதிகளை அள்ளி வீசினான் கவின்.
இது என்னடா புது வம்பு! இவங்க சங்காத்தமே வேண்டாம்னா, இவன் வாங்க பழகலாம்னு கூப்பிடுறான், திருதிருத்தாள் அபி.
“இல்லைங்க.. நம்ம பார்க்கிற சான்ஸ் ரொம்ப கம்மி. அதோட எனக்கு நிறைய படிக்கணும். இப்படி வெளில அடிக்கடி மீட் பண்றதும் நல்லா இருக்காது.”
அடிக்கடி இல்ல அபி, எப்பயாவது தான் மா( நம்பிட்டோம்). நான் வரப்போ நீ ஹெசிட்டேட் பண்ணாம வரணும்( அதானே, விஷயம் இங்க இருக்கு). அதுவும் இந்த மாதிரி ஹாப் அன் ஹவர் தான்.
மறுபடியும் வளைச்சு வளைச்சு இதே பேசி, ஒரு வழியா அபியை தலையாட்ட வைத்து விட்டான் கவின்.
இவனை நம்புறதா வேண்டாமா தெரியலையே. அவன் வந்து கூப்பிடுற அப்போ ஏதாவது சொல்லி எஸ்கேப் ஆக வேண்டியது தான். நினைத்துக் கொண்டாள் அபி! விடுவானா கவின்?
