இதயத்தை கயிறு கட்டி இழுப்பவள் இவளோ
1 : இதயத்தை கயிறு கட்டி இழுப்பவள் இவளோ…..
சவுடாம்பிகை ஏசி திருமண மண்டபம் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தது
அதன் முகப்பில் மணமகன் அன்புச்செல்வன் மணமகள் மாயா என்று கொட்டை எழுத்தில், தங்க நிற பிரேமில் பூக்களின் அலங்காரத்தில் திருமண மண்டபத்தின் வாயிலை அலங்கரித்துக் கொண்டிருந்தது
மணமேடையில் அமர்ந்து இருந்தான் அன்புச்செல்வன். நம் தமிழ் கலாச்சாரத்திற்கே உரிய மாநிற தேகம் அடர்த்தியான புருவம், எப்போதும் துடிப்புடன் இருக்கும் அவன் கண்கள் முறுக்கேறிய மீசை… அழுத்தமான உதடுகள்
பட்டு சட்டை பட்டு வேட்டியில் மாலையும் கழுத்துமாக திருமணக்கோலத்தில் வீற்றிருந்தான்
பாசம் காட்டுவதில் வெள்ளந்தி யானவன், தன் நெருங்கிய வட்டத்தில் மட்டும் அவன் அன்பு, தொழில் சார்ந்த இடங்களிலெல்லாம் செல்வன்
மாப்பிள்ளை கோலத்தில் மேடையில் அமர்ந்து இருந்தாலும்… தன் மாமா.. காசிநாதரிடம் பேசிக்கொண்டிருந்தான்.
காசிநாதர் உறவுமுறையில் அவனுக்கு மாமா இல்லை, அவனைப் பொருத்தவரை அவரும் அந்த குடும்பத்தில் ஒருத்தர்… தன் வளர்ச்சியை பார்த்து உச்சி முகர்பவர்…. அன்பு பாசம் வைப்பதில் அப்பழுக்கில்லாத மனிதர்
தொழிலில் தனக்கு அடுத்தபடியான விசுவாசமான மனிதர் என்றால் அவர்தான்..
அன்புச்செல்வன் சென்னை மாநகரில் 5 இடங்களில்… பெரிய சூப்பர் மார்க்கெட் வைத்திருக்கிறான்.
ஒவ்வொரு தளமும் பத்து அடுக்கு மாடிகளைக் கொண்டது, அங்கு வீட்டிற்கு தேவையான அனைத்து பொருட்களும் கிடைக்கும்.
தன் அப்பா இறந்த பிறகு அம்மாவின் வளர்ப்பில் கண்டிப்புடன் வளர்ந்த பொறுப்பான மகன், ஆறரை அடிக்கும் சற்றே உயரமானவன்.
இதுவரைக்கும் தொழில் தொழில் உன் கவனமெல்லாம் தொழிலிலேயே இருந்தது மாப்பிள்ளை… இப்பவாவது கொஞ்சம் குடும்பத்தையும் கவனி உனக்குனு ஒருத்தி உன் வாழ்க்கையில் இன்னும் கொஞ்ச நேரத்தில் வரப்போறா…? கனவு காண்பதை விட்டுவிட்டு இப்பவும் கடமை கண்ணிம் பேசிக்கிட்டு இருக்கே
தன் மாப்பிள்ளையை சற்றே கிண்டல் பண்ணினார்..காசி
அவர் அவனை கேலி பண்ணுவது இவன் அவர் காலை வாறுவதும் அவர்களுக்குள் அன்றாடம் நடக்கும் ஒரு சாதாரணமான விஷயம்..
தந்தை இல்லாத பையனாக தனித்து வளர்ந்தவன் தொழிலை கையில் எடுக்கும்போது ஆரம்பத்தில் நிறைய துயரங்களை ஏற்ற இறக்கங்களை சந்தித்து இருக்கிறான்
அப்போது எல்லாம் அவனுக்கு தோள் கொடுத்து அவனைத் தட்டிக் கொடுத்து அவன் இந்த நிலைக்கு உயர காரணமாயிருந்த முக்கியமானவர்களில் காசிநாதரும் ஒருவர்
தோட்டம், கழனி வசதி வாய்ப்பு என்று எதற்கும் குறைவில்லை இப்போது …. தொழில் நல்ல முறையில் போகிறது என்று ஓய்வு மட்டும் எடுத்துக்கொள்ளமாட்டான் காலில் சக்கரம் கட்டி ஓடிக் கொண்டே இருப்பான்..
தன் தொழில் ஸ்தாபனத்தில் வேலை பார்க்கும் அனைவருக்கும் மதிப்பு மரியாதை கொடுக்க தவறமாட்டான் அவர்களை தன்னுடைய சக மனிதர்களாகவே நடத்துவான்
அதனாலேயே எல்லோரும் அவனிடத்தில் பணிந்து போவார்கள்…தன் கீழ் வேலை பார்க்கும் எல்லோருக்கும் அவன் அன்பானவன் அதனால் அங்கே வேலை பார்க்கும் அனைவரும் அவனுக்கு இந்தப் பெயர் சரியாக பொருந்தியதாக கருதுவார்கள்
சரிங்க மாமா நீங்க போய் அம்மாவ வர சொல்லுங்க என்றான்
அன்புச்செல்வனை பொறுத்தவரை அவனுக்கு அம்மா அப்பா எல்லாமே அவர்கள் தான்
அன்புச்செல்வனின் தாய் அன்னபூரணி, பெயருக்கு ஏற்றார் போல் மற்றவர்களின் பசி ஆற்றுவதில் அன்னபூரணியே
அவர்களின் ஒரே கனவு தன் மகன் வாழ்க்கையை ஒரு நல்ல பெண்ணின் கையில் பிடித்துக் கொடுக்கவேண்டும் என்பது தான்
காலாகாலத்ததில் அதுவும் கைகூடி இதோ திருமணம் வரை வந்துவிட்டது..
இங்கே மணப்பெண்ணின் அறையில்
மணப்பெண்ணை திருமணக்கோலத்தில் தயார் செய்துகொண்டிருந்தார்கள்
சிவப்பும் தங்க நிறமும் கொண்ட அந்த திருமண பட்டு சேலை அவளின் மஞ்சள் நிற
தேகத்திற்கு இன்னும் எடுப்பாக இருந்தது
திருமணத்துக்கான மொத்த செலவும் மணமகன் வீட்டார் உடையதுதான்
இதுவும் அவன் ஏற்பாடுதான் அவளுக்காக ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து செய்து கொண்டிருந்தார்கள் அந்த பியூட்டிஷியன்
மாயா சந்திரசேகர் இன்னும் கொஞ்ச நேரத்தில்
மாயா அன்புச்செல்வன் ஆகப் போகிறாள்
அவளின் மஞ்சள் நிற தேகத்தில் கையிலும் காலிலும் செக்கச் செவேலென சிவந்திருந்த மெஹந்தி பார்ப்பவர்களுக்கு இன்முகம் காட்டி ஜொலித்து கொண்டிருந்தது
வட்டவடிவமான அவள் முகம் அதில் பிறை போல் அவள் நெற்றி, மீனலோசனி என்று பெயர் வைத்து இருக்கலாம் என்றால் அவளுக்கு மீன் போன்ற அழகான கண்கள், புசு புசு கன்னம் தேன் சொட்டும் பன்னீர் ரோஜா இதழ்கள்.. மூக்கின் நுனியில் கரிய அந்த மச்சம்…. அவளின் மஞ்சள் நிற தேகத்தில் அந்த மச்சம் அவள் முகத்திற்கு இன்னும் எடுப்பாக இருந்தது
பெண்மைக்கே உரிய தளிர் மேனி… ஒல்லியான தேகம் கொண்டவள்
அந்த சிவப்பு நிற காஞ்சிபுர பட்டு சேலையில் பிரம்மன் வடித்தானா செதுக்கினா என்பதுபோல் இருந்தால் அழகிய ஓவியமாக
ஆனால் ஒரு கல்யாண பெண்ணிற்கே உரிய எந்த கலகலப்பும் அவளிடத்தில் இல்லை… அவள் முகம் இறுகிப் போயிருந்தது.
மாயாவின் தந்தை சந்திரசேகர் ஒரு ஆபீஸில் கிளர்க்காக இருந்து ஓய்வு பெற்றவர், அம்சவேணி குடும்பத்தலைவி,
அண்ணன் ராக்கி Msc வேதியி யல் முடித்துவிட்டு பிரைவேட் ஸ்கூலில் டீச்சராக இருக்கிறான்.அவன் மனைவி காதம்பரி திருமணமாகி அவர்களுக்கு ஒரு பெண் குழந்தை இருக்கிறது
காதம்பரி தான் மாயாவின் அருகில் இருந்து அவளை தயார்படுத்த உதவிக் கொண்டு இருந்தாள்
மை தீட்டிய மீன் போன்று இருந்த அவள் கண்ணை இன்றைக்கெல்லாம் பார்த்துக் கொண்டே இருக்கலாம் அதில் மயங்கி விழாதே ஆண்களே இருக்க மாட்டார்கள் அப்படி ஒரு அழகு அவள் கண்கள்
இந்த கண்கள் இன்று ஏனோ ஒளி இழந்து இருந்தன. கடமையே என்று அவர்கள் சொன்னதையெல்லாம் உள்வாங்கிக் கொண்டிருந்தால் எந்த ஒரு எதிர்வினையும் இல்லை
பொண்ணை சீக்கிரமா அழைச்சிட்டு வாங்க என்று ஐயர் குரல் கொடுக்க….
திருமணக்கோலத்தின் முழு அலங்காரத்தையும் முடித்திருந்தவளை…தன் கை பிடித்து திருமண மேடைக்கு அழைத்து வந்தால் காதம்பரி
வெட்கமோ நளினமோ எதுவுமில்லை மாயா முகத்தில்
மணமேடையில் அன்புச்செல்வ னுக்குப் பக்கத்தில் வந்து காதம்பரி மாயாவை அமர வைக்க
உடல் இறுகி ஒருவித கோபத்தோடு அவன் பக்கத்தில் அமர்ந்தாள் மாயா
தன் பக்கத்தில் வந்தமர்ந்தவளை …. கல்யாண மாப்பிள்ளைக்கே உரிய ஆவலோடு நிமிர்ந்த ஆசையாய் ஒரு பார்வை அவன் பார்க்க
அவன் பக்கத்தில் அமர்ந்திருந்த அந்த மின்னலும் அவனை சுட்டெரிக்கும் சூரிய பார்வை பார்த்தது
ஒரு நிமிடம் தான் அந்தக் கண்களில் அப்படி ஒரு கோபம் மீண்டும் தன் தலையைத் தாழ்த்திக் கொண்டாள்
ஐயர் சொன்ன மந்திரங்களை எல்லாம் ஏதோ சின்ன குழந்தை சொல்லியபடி ஒப்புவிக்குமே அதுபோல் கடமையே என சொல்லிக் கொண்டிருந்தாள்
அன்புச்செல்வன் காசிநாதருக்கும் அவர் மனைவி லட்சுமிக்கு முறைப்படி பாதபூஜை செய்தான்
இங்கே மாயா தன் அண்ணன் ராக்கி தன் அண்ணி காதம் பரிக்கு பாதபூஜை செய்தால்
எல்லா சடங்குகளையும் செய்யும்போது நெஞ்சுவரை ஒருவித வெறுப்பு வெடித்து சிதறியது அவளுக்குள்
திருமணத்தின் ஒவ்வொரு சடங்குகளாக நிகழ்ந்து கொண்டிருக்க அதை எல்லாம் கண்குளிரப் பார்த்து கொண்டிருந்தால் அன்னபூரணி அன்பு செல்வனின் தாய்
இதோ தன் அம்மா கையால் தாலி எடுத்துக் கொடுக்க அதை இன்முகத்தோடு வாங்கிக் கொண்டு அவளின் சங்கு கழுத்தில் அந்த மங்கள நாணை பூட்டினான்
அந்த பொன் மஞ்சள் தாலியை அவன் அவள் கழுத்தில் கட்டும் போது அவள் கண்களின் ஓரம் நீர் பூத்தது
அவன் குங்குமத்தை எடுத்து தாலியிலும் அவள் நெற்றி வகுட் டிலும் வைக்க…. அவனின் இத்தகைய செயலால் அவளுக்கு உடம்பெல்லாம் எரிந்தது
அவன் அவளின் கைப்பற்றி அக்னி குண்டத்தை மூன்று முறை சுற்றி வர தீ பட்டது போல் திணறிப் போனாள்.
திருமணம் நல்ல முறையில் பெரியவர்களின் ஆசியோடு முடிந்தது.
திருமணத்திற்குப் பின் மண்டபத்தில் நிகழும் சடங்குகள் எல்லாம் முடிந்து
அன்புச்செல்வன் தன்னுடைய புத்தம் புது ஆடி காரில் வீட்டிற்கு புறப்பட்டான் தன் மனைவியோடு
ஜஸ்ட் மேரேஜ் என்ற வாசகத்தோடு ரோஜாப் பூக்களின் அலங்காரத்தோடு
காரின் பின் இருக்கையில் மாலையும் கழுத்துமாக அவனும் அவளும் அமர்ந்திருந்தார்கள்..அவன் உரிமையோடு அவள் தோளில் கை போட….. சட்டென்று அவன் கையை தட்டி விட்டதோடு மின்னல் வெட்டும் ஒரு கோபப்பார்வை பார்த்தால் மாயா
அவன் முகம் இறுகியது அவளின் இந்த செயலால் அவன் மீசை துடித்தது
அதற்குள் அவர்களின் பெரிய மதில் சுவரோடு தோட்டம் சூழ்ந்த அவர்கள் வீடு வந்து விட
தன் வீட்டிற்கு வந்த புது மண தம்பதியரை ஆலம் கரைத்து முறைப்படி வரவேற்றார்கள்
அன்னபூரணி பூஜையறையில் மாயாவை காமாட்சி அம்மன் விளக்கை
ஏற்ற செய்தால்
பெண் தோழியாக மாயாவுக்கு காதம்பரி தான் உடன் வந்தாள்
உறவுகள் வருவதும் போவதுமாக திருமண வீட்டில் இருக்க அன்னபூரணி தான் காதம்பரியி டம்… சின்னப்பொண்ணு காலையிலிருந்து எவ்வளவு நேரம் சடங்கு சம்பிரதாயத்தை எல்லாம் செஞ்சு செஞ்சு களைச்சுப் போய் இருப்பா மேல தம்பி ரூமுக்கு பக்கத்துல ஒரு ரூம் இருக்கு அதில் போய் ரெஸ்ட் எடுங்க என்று தன் மருமகளுக்கு பரிந்து கொண்டு அன்னம் சொல்ல
காதம்பரி மாயாவை மேலே இருக்கும் அந்த அறைக்கு அழைத்து வந்து கதவை அடைத்து…இதோ பார் மாயா நீ வந்ததும் வராததுமாய் உன் கோபத்தை எல்லாம் எல்லோரிடத்திலும் காட்டாதே கொஞ்சம் பொறுமையா இரு அப்போதுதான் நாம் நினைத்ததை சாதித்துக் கொள்ள முடியும் புரியுதா….?? முகத்தை கொஞ்சம் சிரிச்ச மாதிரி வச்சுக்கோ
உன் மீது யாருக்கும் எந்த சந்தேகமும் வரக்கூடாது மற்றவர்கள் எப்படியோ அன்புச்செல்வனிடத்தில் கொஞ்சம் கவனமா இரு
சடங்கு பற்றி விசாரிச்சிட்டேன் இன்னும் பத்து நாள் கழித்து தான் நாள் நன்றாக இருக்கிறதாம் எல்லாமே நமக்கு சாதகமாக தான் இருக்கிறது நீ ஒன்றும் கவலைப்படாதே, இந்தா
இதில் தூக்கமாத்திரை இருக்கிறது
உன் கஷ்டம் எல்லாம் கொஞ்ச காலம்தான் சரியாகிடும் மனசை போட்டும் குழப்பிக்காதே
எப்போதும் போல் இரு
மாயாவுக்கு சொல்லவேண்டிய புத்திமதிகளை எல்லாம் சொல்லிவிட்டு கதவை திறந்து வைத்தால் யாருக்கும் எந்த சந்தேகமும் வரக்கூடாது என்று காதம்பரி
இதோ பாரு அன்னம் சடங்கு சம்பிரதாயம் எல்லாம் பத்து நாள் கழிச்சி இருக்கட்டும் பொண்ணையும் மாப்பிள்ளையை பிரிச்சி வைக்க வேண்டாம்…. நம்ப அன்புக்கு தெரியாததா…? என்று லட்சுமி சொல்ல
எனக்கும் தெரியும் அண்ணி என்றால் அன்னம்…
அம்சவேணி மாடியறையில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்த தன் மகளைக் காண வந்தாள் தன் மருமகள் கதம்பரி
அங்கே இருக்க அவளை வேறு ஒரு வேலையாக அனுப்பிவிட்டு கட்டிலில் சோர்வாய் தளர்வாய் படுத்திருந்த தன் மகளின் தலையை கோதிவிட்டவளாய்
இதோ பாரு மாயா…. உனக்கு கல்யாணம் ஆயிடுச்சு …..நம்ம வீட்டில் இருக்கிற மாதிரி உன்னுடைய துடுக்குத்தனம் வால்தனம்…. இதையெல்லாம் கொஞ்சம் ஏறக்கட்டி வச்சிடு பொறுப்பான பொண்ணா நடந்துக்கோ எல்லார்கிட்டயும் நல்ல பேர் வாங்கு
மாப்பிள்ளை தம்பி ரொம்ப நல்லவர் என்று கேள்விப்பட்டேன் அவர் மனசு கோணாமல் நடந்துகோ…. தேவையில்லாத விஷயத்தை எல்லாம் தூக்கிப் போட்டிடு புதுசா வாழ்க்கையை ஆரம்பி உனக்கு இதெல்லாம் புரியும் என்று நினைக்கிறேன்
என்று வேணி சொல்ல
தன் அம்மாவின் புறமாக திரும்பி எதையோ சொல்ல வந்தவள்….. சொல்லவந்த வார்த்தையை தன் மனதுக்குள்ளேயே போட்டு பூட்டிக்கொண்டாள்
தன் பிறந்த வீட்டு மனிதர்கள் எல்லாம் விடை பெற்று போக அவளுக்கு அழுகை முட்டிக் கொண்டு வந்தது
போவதற்கு முன் காதம்பரி மாயாவின் காதில் ஏதோ குசுகுசுவென்று சொல்ல.. இங்கே அம்சவேணியின் வயிற்றுக்குள் புளியைக் கரைத்தது
கண் கலங்கியபடி நின்றிருந்த மாயாவின் கையை பிடித்து கொண்டு அன்னபூரணி ….இது இனிமே உன் விடு மாயா..!! செங்க ளாலும் சிமெண்ட்டாலும் கட்டப்பட்ட இந்த கட்டிடத்தை உயிருள்ள கோவிலா நீ தான் மாத்தணும், நானும் உன்
அம்மா மாதிரி தான்… கொஞ்ச நாள் அப்படித்தான் இருக்கும் போகப் போக எல்லாம் சரியாகிவிடும் என்று… அவள் மனதை தேற்ற முயன்றால் அன்னம்
தன் வீட்டு மனிதர்கள் போன சோகத்தில் இருந்த மாயாவை ஏதேதோ பேசிக் கொஞ்சம் தெளிவு படுத்தி இருந்தால் அன்னம்
தன் பட்டு சட்டையின் முழு கையை மடித்து விட்டு… பட்டு வேஷ்டியின் நுனியை பிடித்தபடி மாடியில் இருக்கும் தன் அறைக்கு வந்தான் அன்புச்செல்வன்
அவன் தொழில் தொடங்கிய பிறகு தனக்கு பிடித்த மாதிரி ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து அழகாக கட்டிய அவனுடைய வீடு…. அவன் ரசனையில் அழகை ஜொலித்துக் கொண்டிருந்தது தோட்டம் சூழ்ந்த இயற்கை கொஞ்சும் அழகிய பெரிய வீடு
இரண்டு மூன்று நாட்களாக திருமண சடங்கு காரணமாக ஏற்பட்ட அலுப்பு எல்லாம் போக வேண்டி வெந்நீர் குளியல் போட்டு மீண்டும் பட்டு சட்டை பட்டு வேஷ்டி உடுத்திக் கொண்டு வந்து கட்டிலில் அமர்ந்தான்.
அவனுக்குள் பலவிதமான முடிச்சுக்கள்..
அவனுடைய புத்தம் புது மனைவி மாயா கண்ணாடி வளையல்கள் சிணுங்க தலையில் மல்லிகைப்பூ சூடி அந்த மஞ்சள் நிற பட்டுச்சேலையில் அவன் அறைக்கு வந்தாள்
ஆனால் அவள் முகத்தில் புதுப் பெண்ணுக்கு உரிய எந்த ஒரு நளினமும் வெட்கமும் இல்லை.
கையில் கொண்டு வந்த பால் சொம்பை டேபிளில் வைத்தாள்
காலையில் அவள் கழுத்தில் தான் கட்டிய தாலி அவளுடைய நெஞ்சுப்பகுதியில் தொங்கிக் கொண்டிருந்தது
இந்தப் பாலை நீங்க குடிக்கணும் அம்மா சொன்னாங்க என்றால்
பிசிறில்லாத அழகிய அவள் குரல் தன் அறையில் முதல் முறையாக எதிரொலிக்க…. தன் மீசையை முறுக்கி விட்டு கொண்டவனாய்… அவளை ஒரு விதமான ஆசையோடு பார்த்தான்
அவன் பார்வை தீண்டலில் எரிச்சல் கொண்டவளாய்
நீங்க நினைச்சதை சாதிச்சி ட்டோம் என்கிற திருப்தி உங்களுக்கு இல்ல
எவ்வளவு நேரம் தான் இப்படியே கால்கடுக்க நிற்ப இப்படி வந்து கட்டிலில் உட்காரு என்றான்
அவளுக்கும் இரண்டு மூன்று நாட்களாக திருமண வேலையில் எல்லோருமாக சேர்ந்து அவளைப் பிழிந்து எடுத்ததால் கொஞ்ச நேரம் ஓய்வாய் அமர்ந்து இருந்தால் தேவலாம் என்று இருந்தது…
விஸ்தாரமான அவன் அறையில் தேக்கு மரத்திலான நுண்ணிய வேலைப்பாடுகளால் செய்யப்பட்ட அழகிய கட்டில் அது…
மாயாவின் வாழ்க்கை மிடில்கிளாஸ் பெண்ணுக்கே உரிய போராட்டமான வாழ்க்கை
வாடகை வீட்டில் காலம் தள்ளிக் கொண்டிருந்த அவளுக்கு இது போன்ற ஒரு பெரிய வீட்டில் தான் இருப்பது கூட கொஞ்சம் அதிசயமாகத் தான் இருந்தது
எல்லாமே வேகவேகமாக நடந்து முடிந்தது போல் இருந்தது..
மத்தவங்களுடைய உணர்வுகளுக்கு என்னைக்குமே மதிப்பளிக்க மாட்டீர்களோ என்றால் அவனை குற்றம்சாட்டும் விதமாய்..
அவள் சொல்ல வரும் விஷயம் புரிந்தவனாய்.. சட்டையை மேலும் மடித்து விட்டுகொண்டு தன்னுடைய வலக்கையால் தன் சிகையை கோதினான்
எனக்கு எது சரினு படுதோ அதை தான் செய்வேன் என்றான் தன் மீசையை நீவி விட்டபடி
உனக்கு தாலி கட்டி கணவன் மனைவியா நானும் நீயும் சேர்ந்து இருக்கின்ற முதல்ராத்திரி இது இப்படி இவ்வளவு தள்ளி உட்கார வேண்டிய அவசியம் இல்லை என்றான் அவளை ஆழ ஊடுருவி
ஒருத்தரை ஒருத்தர் விரும்பி கல்யாணம் செய்து கிட்டவங்களுக்கு நீங்க சொல்ற வார்த்தை பொருந்தும் என்றால்.
விருப்பமே இல்லாத ஒரு பெண்ணை கட்டாயத்தின் பேரில் தாலிகட்டி ஸ்கெட்ச் போட்டு தூக்கினதுக்கு பேரு கல்யாணம் இல்லை என்றால் உதட்டை சுழித்து
சென்னையிலே நீங்க அஞ்சாறு இடத்தில் சூப்பர் மார்க்கெட் வச்சிருக்கீங்க சொன்னாங்க
உங்க கடைக்கு வாங்கற பலசரக்கு பொருள் மாதிரி என்னை நீங்க தாலி கட்டி கூட்டி வந்து இருக்கீங்க
நான் நீங்க நினைக்கிற மாதிரி பொண்ணு எல்லாம் கிடையாது….?? தாலி கட்டிட்டீங்க மெட்டி போட்டுட்டீங்க கல்யாணம் ஆயிடுச்சுனு… நீங்க கட்டின தாலியை கண்ணில் ஒத்துகிட்டு கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருஷன் இருக்குற பொண்ணு சத்தியமா நான் கிடையாது..
எனக்குப் பிடிக்காத வாழ்க்கைக்குள் என்னைக்கும் நான் இருக்க மாட்டேன்
அப்போ ஒரு முடிவோட தான் வந்து இருக்க போல என்றான்…??
கண்கள் இடுங்கி கோபமாய் அவளைப் பார்த்தவாறு
ஆனா இங்க பாரு மியா எனக்கு ஒன்னு பிடிச்சிருச்சியிறுச்சி வச்சுக்கோயேன்…. சந்திர மண்டலத்திலேயே இருந்தா கூட தூக்கிட்டு வந்துடுவேன்.
அவன் தன்னை மியா என்று அழைப்பதில் அருவருத்தால் அவள்
மிடில் கிளாஸ் பொண்ணு தானே இவள் என உன் பணத்தை காட்டி….. உன் அந்தஸ்தை காட்டி என்னை விலைகொடுத்து வாங்கிட்டா…. நீ நினைக்கிற மாதிரி எல்லாம் நடப்பேன் என்று கனவு காணாதே..??
அப்….ப்பா எம்புட்டு சூடா இருக்கே கொஞ்சம் பாலை குடிச்சி… கூல் ஆகு பேபி….?
பத்து நாள் என்று சொல்லி சடங்கை தள்ளி வச்சுட்டாங்க இப்படி ஒரு அழகான மனைவி பக்கத்தில் இருக்கும்போது கையையும் காலையும் சும்மா வச்சிகிட்டு இருக்க முடியாதே எனக்கு என்ன செய்ய பேபி….??
நீ வேற எலுமிச்சம்பழம்
நிறத்தில்… ஜிவ்வுனு சுண்டி இழுக்கறியா?? என்று சொல்லியபடி அவன் அவள் அருகில் வர…
மாயாவோ எதற்கும் அசராமல் அப்படியே அமர்ந்திருக்க
என்ன பேபி கிட்ட வந்தா கண்ணகி மாதிரி எரிச்சிடுவேனு பார்த்தேன் இம்ம்புட்டு கூலா இருக்கே…
எனக்கு உன் மேல் இல் தக்க சய்யா இருக்கு உனக்கு…..???
அவன் இப்படி சொல்ல ஏகத்துக்கும் அவளுக்கு மேல்மூச்சு கீழ் மூச்சு வாங்கியது..
அவள் கோபப்படும்போது சிவக்கும் அவள் மூக்கின் நுனியின் கீழ் இருக்கும் அழகான மச்சத்தில் அவன் கண்கள் பதிந்து மீண்டன
பழக்கப்படாத இடம் பழக்கப்படாத வீடு பழக்கப்படாத புருஷன் எல்லாம் கொஞ்சம் அவளை அச்சுறுத்ததான் செய்தன… ஆனால் எதற்கும் அசராதவள் மாயா…. !! யாராலும் அவ்வளவு சீக்கிரம் புரிந்து கொள்ள முடியாதவள்….மாயம் செய்பவள்.
இப்போது அவன் அவள் பக்கத்தில் வந்து அவளை ஓட்டி அமர்ந்துகொண்டான் கிட்டத்தட்ட ஒரு நூலளவு இடைவெளியில்
இதுக்கு எல்லாம் காச்சு மூச்சு என்று கத்தும் இரகமில்லை அவள்
பேபி நீ என் பொண்டாட்டி நான் உன் புருஷன்….?
கற்கால மனிதன் போல் பேசும் அவனை வினோதமாக பார்த்தால் மாயா..
அன்புச்செல்வன் B.com MBA முடித்து விட்டு தொழிலை வெற்றிகரமாக நடத்துகிறான்.
தன் வீட்டிலுள்ளவர்கள் அவன் புகழை தான் இந்த ஒரு வார காலமாக பாடிக் கொண்டிருந்தார்கள்
எனக்கு உன்னை இப்போ ஹக் பண்ணனும் என்றான்.
தன் மீன் போன்ற கண்களால் அவனை வெறித்து முறைத்து அவள் பார்க்க
நீ நினைக்கிற மாதிரி எல்லாம் நான் மென்மையானவன்(soft character ) கிடையாது…. கொஞ்சம் முரடன்… பேரில்தான் அன்பு என்று அவன் அவளுக்கு தன் பெயரின் விளக்கம் கொடுக்க
தாலி கட்டியதால் கணவன் என்ற உரிமையை எடுத்துக் கொள்ள துடிக்கும் அவனை வினோதமாக பார்த்தால் மாயா
இந்த டிவி சீரியல்…. படம் இதெ ல்லாம் பார்த்து ரொம்ப கெட்டு போய் இருக்க மாயா நீ
நீ சொன்னதை எல்லாம் கேட்டதும் அப்படியே கொஞ்சம் மோட்டு வளையத்தை பார்த்து யோசிச்சிக்கிட்டு… சரிமா நாம நண்பர்களாகவே இருக்கலாம் சொல்லுவேன் எதிர்பார்த்தியோ….??
ஹா ஹா…. இந்த அன்புக்கு அதெல்லாம் செட்டாகாது
உன்னை கட்டி பிடிச்சிகணும் முத்தம் கொடுக்கணும் இப்படி நிறைய பண்ணுவேன் என்றான் தன் கன்னம் குழிவிழ சிரித்தபடி
இவன் கொஞ்சம் டேஞ்சர் தான் போலவே….??
பத்து நாள் இருக்கிறது என்று கொஞ்சம் தைரியமாக இருந்தவளுக்கு… உள்ளுக்குள் உதறல் எடுக்க ஆரம்பித்தது
தூக்க மாத்திரை போட்டு மொத்தமா பிலாட் ஆக்கிடனும் அப்போதுதான் நான் நினைச்சது போல் நடக்கும்….
கிருஷ்ணா என்னை இவனிடம் இருந்து காப்பாற்று என்று தன் இஷ்ட தெய்வத்திடம் பிரார்த்தனை வைத்துவிட்டு
பால் ஆறி போச்சி இன்னும் நீங்க குடிக்கல என்றால்…
பசி எடுக்கல மாயா….?? என்று அவன் தன் கையை தலைக்கு மேலே நீட்டி நெட்டு முறித்து கட்டிலில் சாய்ந்தபடி அவளை உச்சி முதல் உள்ளங்கால் வரை பார்த்து ரசித்தபடி அழகாய் அவளுக்கு போஸ் கொடுத்துக் கொண்டிருந்தான்
ஐயோ இது தப்பாச்சே நீ இந்த பாலை இப்போ குடிச்ச்சே ஆகனுமே…??
சரி சரி என் புது பொண்டாட்டி ரொம்ப தான் ஆசைப்படறா சரிசரி வா நானும் நீயும் சேர்ந்தே குளிக்கலாம் என்றான்
அவன் இப்படி சொல்ல கேட்டு அதிர்ந்தாள்
அவள் அதிர்ச்சியை பார்த்தவாறே செம்பில் இருந்த பாலை எடுத்து மடக் மடக் என்று குடிக்க ஆரம்பித்தான்
அப்பாடா…..என்று அவளுக்குள் ஒரு ஆழ்ந்த பெருமூச்சு..
கிட்ட வா மியா என்றான்…கிறக்கமாய்
எல்லாம் இன்னும் கொஞ்ச நேரம் தான் நீ மயங்கி சரிஞ்சிடுவே என்று நினைத்து கொண்டவளாய் அவள் அவன் அருகில் வந்து அமர்ந்தாள்
அருகில் வந்து அமர்ந்தவளின் மென் கருத்தை பற்றினான்
தன்னுள் மூண்டெழுந்த எரிமலை கோபத்தை கட்டுப்படுத்தி அது தன் முகத்தில் பிரதிபலிக்கா வண்ணம் தன் உதட்டை அழுந்தக் கடித்து மறைத்தால்
அதையும் மீறி அவன் தன் அருகில் நெருங்கி விட அவனின் சூடான மூச்சுக்காற்று அவளின் மேல் பட்டு தெறித்தது
தன் சட்டையின் மேல் இரண்டு பட்டன்களை கழற்றிவிட்டபடி மாயா என்று அவள் பெயரை உச்சரித்தபடி…. அவன் அவளை மேலும் நெருங்க
அவள் பெண்மையின் மேடு பள்ளங்கள்… அவன் அவளை நெருங்க நெருங்க தறிகெட்டு ஓடின்… இதயத்துடிப்போ ஜெட் வேகத்தில் ததிங்கிணத்தோம் போட்டன
சட்டையின் பட்டன்கள் கழன்று இருந்ததால் அதில் அவன் அணிந்திருந்த சிங்கப்பல் பதித்த செயின்…. அவனின் ஆசை போல் அவன் கழுத்தில் ஆடிக்கொண்டிருந்தது.
முரட்டுத்தனமான அவனை ஏறிட்டுப் பார்க்க முடியாமல் தன் நடுக்கத்தை குறைக்கும் விதமாய் தன் கை விரல்களை மடித்து அவள் தன் தலையை கவிழ்த்துக் கொள்ள…
மஞ்சள் அழகிடி நீ என்றான் அவளின் செவி மடல் உரசும் தூரத்தில்..
உன்னை ஹக் பண்ணு சொன்னேன் இன்னும் நீ என்னை கட்டிப்பிடிக்கல என்றான்
முதலிரவு அறையில் பல கனவுகளோடு காத்திருக்கும் கட்டிளம் காளையான அவன் ஏதேதோ ஆசைகளில் உளர
இங்கே மாயாவுக்கோ தன் நெஞ்சிகுழி ஏறி இறங்க நா வரண்டது
அப்படியே தொப்பென்று அவன் கட்டிலில் சாய…
இந்தியா பாகிஸ்தான் கிரிக்கெட் மேட்ச்சில் இந்தியா வின் பண்ண எபெக்ட் அவளுக்கு
இன்று தப்பிசோம்…ம்ம் இன்னும் ஒன்பது நாட்கள் நவராத்திரி போல் இந்த ஒன்பது நாட்களை யும் கடந்துவிட்டால்…. தான் நினைத்தது போல் தன் எதிர்காலத்தை அமைத்துக் கொள்ளலாம்..
விஸ்தாரமான கட்டில் என்பதால் கட்டிலின்… இன்னொரு ஓரத்தில் போய் ஓண்டிக் கொண்டால் மாயா
அடுத்தடுத்து இந்த ஒன்பது நாட்களும் அவள் செய்ய வேண்டிய திட்டங்களை மனதில் எண்ணிக் கொண்டபடியே அவள் கண்களை மூடினாள்
விதி அவளுக்கு எதிராக செய்யப்போகும் சதி தெரியாமல்
மாயா ஆழ்ந்து பெருமூச்சு எடுத்து உறங்கும் சுவாசம்கேட்டு அன்புச்செல்வன் இங்கே கண்விழித்தான்
தன் கை முஷ்டியை கோபமாக முறுக்கியபடி…. இந்த அன்பைப் பகைச்சிக்கிட்டா அவங்களுக்கு என்ன கதி ஆகும் நீபோக போக தெரிஞ்சிப்ப…
தன் சட்டை பட்டணை வேகவேகமாக கழற்றி தூக்கி தூர போட்டான்
இரக்கமே உருவான அவன் இரக்கமே இல்லாமல் அவள் அருகில் சென்று… அப்படியே அவளை முரட்டுத்தனமாய் அணைத்துக்கொண்டான்.
தூக்க மருந்து கலந்த பாலை குடிச்சது நானில்லை நீ என்றான் அந்த இருட்டிலும் அவன் கண்கள் தீப்பொறி என எரிமலைக் குழம்பாய் மின்ன…
நான் அன்புடி அன்புச்செல்வன்…!!
ரௌத்திரமாய் உள்ளுக்குள் கொந்தளித்த படி… அவன் தன் அணைப்பை மேலும் இறுக்க….
மாயாவின் நிலைமை என்ன….??
மாயா மாயம் செய்ய வருவாள்…..!!
என்றும் அன்புடன் உங்கள்
ஸ்ரீலதா
