ஆழியலையனை காதலி
அலை 13
பல வருடங்களாய் போற்றி வந்தேன்
என் அழகு பொருட்களை
இன்று நீ வந்ததும் ஒவ்வன்றிடமும் – குறை
பொருளிலா உன் பார்வையிலா?
தீபாலி முகம் கழுவி உடை மாற்றிவிட்டு அம்மா செய்த போண்டாவை ருசிப்பார்க்க கிச்சன் தேடி சென்றாள். இவளைப் பார்த்ததுமே அவள் தாய் ஒரு சிறு தட்டில் அவளுக்கான போண்டாவை வைத்துக் கொடுக்க “அம்மான்னா அம்மாதான்” என்று கூறியவாரே கிச்சன் மேடையிலேயே சாய்ந்து நின்றவாறு உண்ண ஆரம்பித்தாள்.
“ஆமா படம் பாக்குறேனு தானே சொல்லீட்டு போனா அதுக்கு இவ்வளவு நேரமா வெளியே சாப்பிட்டீங்களா இல்ல சுத்திட்டு வந்துட்டீங்களா” என்று தாயாக கேள்வி எழுப்பினார்.
“அம்மா படம் பார்க்கும் போதே வயிறு ஃபுல் ஆயிடுச்சு அதுக்கப்புறமும் ஹோட்டல் போய் ரெண்டு மணி நேரம் ஆற அமர உட்கார்ந்து சாப்பிட்டு தான் வந்தோம்”.
“அடியே ஒரு சாப்பாட்ட சாப்பிடுறதுக்கு உங்களுக்கு ரெண்டு மணி நேரமா இப்படி எல்லாம் பண்ண கூடாதுன்னு உனக்கு எத்தனை முறை சொல்லி இருக்கேன் இது நாம சாப்பாட்ட அவமானப் படுத்துற மாதிரி ஆயிடும்”.
“ஐயோ அம்மா ப்ளீஸ் வேணாமே நீ எப்பவும் சொல்ற மாதிரி நான் சாப்பாட மிச்சம் வைக்கவேயில்லை நான் வாங்குனது மொத்தமா காலி பண்ணிட்டேன் புரோமிசா உன் பொண்ண நம்புமா”.
“போண்டா காலி ஆயிடுச்சா”.
“இல்லம்மா இதோ ஒன்னு இருக்கு” என்று அவள் தட்டில் இருந்த ஒன்றை தூக்கி காண்பிக்க காலியான தட்டை மீண்டும் நிரப்பினார் அவளின் தாய்.
“அம்மா என்னதான் வெளியே போய் வயிறு முட்ட சாப்பிட்டாலும் என்ன மாயமோ மந்திரமோ தெரியல உன் கையால் ஏதாவது பண்ணால் மறுபடியும் பசிக்க ஆரம்பிச்சுடுது” என்று கூறி தட்டிலிருந்தவற்றை மீண்டும் காலி செய்தாள்.
“இன்னும் வைக்கவா” என்று அவள் தாய் கேட்க.
“இல்லம்மா இப்போதைக்கு இது போதும் இப்படி நான் சாப்பிட்டு இருந்தேனா அப்புறம் அப்பா வரும்போது அவருக்கு எதுவும் மிச்சம் இருக்காது” என்று கூறி சென்றாள்.
அறைக்கு வந்தவளுக்கே அப்போதுதான் தன் ஸ்கூட்டியில் வரும்போது அலைப்பேசி ஒலித்தது ஞாபகம் வர அதை தன் கைப்பையிலிருந்து எடுத்துப் பார்த்தாள் கார்த்திகேயன் தான் இருமுறையும் அழைத்திருந்தான்.
‘ஐயோ தீபாலி உனக்கு கொஞ்சம் கூட அறிவே இல்ல வீட்டுக்கு வந்ததும் எடுத்து பார்த்து இருக்கணும் அத விட்டுட்டு போய் போண்டா திண்னுட்டு வர’ என்று தன்னைத்தானே திட்டியவாறு அவனுக்கு அழைப்பு விடுத்தாள்.
அழைப்பு சென்ற இரண்டாவது நொடியே அந்த பக்கம் அழைப்பு ஏற்கப்பட்டது “ஹலோ பொண்டாட்டி ரொம்ப பிசியா இருக்க போல”.
“அது இல்ல இப்பதான் வீட்டுக்கு வந்தேன் ஏதாவது முக்கியமான விஷயமா”.
“ஆமா என்னோட குரல உனக்குள்ள பதிய வைக்கத்தான் போன் பண்னேன் அடிக்கடி பேசினா தானே என்னோட குரலும் உனக்கு தெரியும் இது முக்கியமான விஷயம் தானே”.
“ம்”.
“என்னாச்சு இன்னைக்கு ரொம்ப அலைச்சலா சோர்வா இருக்கியா”.
“அப்படி எல்லாம் எதுவும் இல்ல இன்னைக்கு பிரண்ட்ஸ் எல்லாம் சேர்ந்து மூவி பார்த்துட்டு அப்படியே வெளியே சாப்பிட்டு வந்தோம் மத்தபடி எதுவுமில்லை”.
“ம்”.
“இப்போ உங்களுக்கு என்ன ஆச்சு”.
“எனக்கும் உன் கூட மூவி பாக்கணும்”.
“அதுக்கு என்ன கல்யாணம் முடியட்டும் எத்தனை மூவி வேணாலும் பார்க்கலாம்”.
“ஏன் கல்யாணத்துக்கு முன்னாடி பாக்க கூடாதா என்ன?”.
“அப்படி இல்லை உங்களுக்கு வேலை இருக்கும்ல”.
“கல்யாணத்துக்கு அப்புறமும் அது இருக்கத்தான் செய்யும்”.
“இல்ல அப்போ நான் உங்க கூட இருப்பேனே”.
“உண்மை தான் ஆனால் எனக்கு இப்போ பார்க்கனும்னு தோனுது நெக்ஸ்ட் சண்டே நான் அங்க இருப்பேன் நம்ம ரெண்டு பேரும் மூவி போரோம் சரியா” என்று கேட்க அவளும் சம்மதம் தெரிவித்தாள்.
“ஓகே தீபாலி வேலை இருக்கு நான் உனக்கு அப்புறமா டைம் கிடைக்கும்போது கூப்பிடுறேன் பாய்” என்று கூறி வைத்தான்.
அவன் அழைப்பை அனைத்ததும் கண்ணாடி முன் போய் நின்று “உங்களை எனக்கு இப்பவே பிடிச்சிரும்னு நினைக்கிறேன் போலீஸ்கார்” என்று கூறி சிரித்தாள்.
“ஆனா எனக்காக நீங்க ஏதுவும் ஸ்பெஷலா பண்ண மாதிரி எனக்கு தெரியல ஆனாலும் நீங்க என்கிட்ட பேசுறத விதத்த பார்த்தா கல்யாணத்துக்கு முன்னாடியே என்ன உங்களை விரும்ப வச்சுருவீங்க போல இருக்கு ம்ம்? அப்டின்னா காதல் எப்படி இருக்குன்னு கூடிய சீக்கிரம் நானும் தெரிஞ்சுக்க போறேன் இந்த பீல் கூட சூப்பரா தான் இருக்கு” என்று கூறி தன் பிம்பத்தை பார்த்து தானே கண்ணடித்துக் கொண்டாள் “தீபாலி நீ வர வர ரொம்ப அழகா ஆயிட்டே போற” என்று திருஷ்டியும் கழித்து கொண்டாள் அவளது பின்பத்திற்கு.
அடுத்த ஒரு வாரம் எப்படி போனதென்றே தெரியாமல் ஞாயிற்றுக்கிழமைக்கு காத்திருந்தே போனது தீபாலிக்கு முதல் நாள் இரவே தாயை அமர வைத்து கீபோர்டில் இருந்த துணிகள் அனைத்தையும் ஒன்றன் பின் ஒன்றாகக் அவள் மேல் வைத்து காட்டி இன்று அணிவதற்காக பஞ்சுமிட்டாய் நிறம் என்று கூற முடியாத பிங்க் நிறம் என்றும் கூற முடியாத ஒரு சுடிதாரை எடுத்து வைத்திருந்தாள்.
ஷாம்பு போட்டு குளித்த முடியை கட்டிலில் அமர்ந்து காய வைத்துக் கொண்டிருந்தாள். இந்த ஒரு வாரத்தில் அவளை அவன் அழைக்காத நாளே இல்லை இவள் வீட்டிற்குள் நுழையும் சிறிது நேரத்திலேயே அவன் அழைத்திருப்பான் மற்ற நேரங்களில் அழைக்கும்போது நாளுக்கு நாள் நேரம் மாறினாலும் இந்த ஒரு நேரம் மட்டும் தவறாமல் அழைப்பு வந்துவிடும் . இது அவளுக்கு பிடித்திருக்கிறதா இல்லையா என்று அவள் யோசிக்க வில்லை ஆனால் அவன் அழைப்பு ஒவ்வொரு முறை வரும்போதும் அவள் இதழ்களில் புன்னகை பூத்தது உண்மையே.
அவனைப் பற்றியே ஏதேதோ யோசித்தவாறே உடைமாற்றி கண்ணாடி முன்பு அமர்ந்தால் அப்பொழுது திடீரென்று ஒரு யோசனை ‘நாம கண்டிப்பா முகத்தில் பெயின்ட் அடிச்சு தான் ஆகனுமா நாம என்னதான் பண்ணாலும் அந்த போலிஸ்கார் கண்டுக்க போறதில்லைனு அன்னைக்கே தெரிஞ்சிருச்சு ஒருவேளை உள்ளுக்குள்ள ரசிப்பாங்களோ தெரியலையே பரவாயில்லை எதுக்கும் எல்லாத்தையும் போட்டுப்போம்’ என்று அலங்காரத்தை ஆரம்பித்தாள்.
“தீபா இன்னும் எவ்வளவு நேரம் ஆகும்” என்று வெளியில் இருந்து அவளது அம்மா குரல் கொடுக்க “இதோ முடிஞ்சதுமா” என்று கூறி ஒழுங்காக இருந்த முடியை மீண்டும் வார ஆரம்பித்தாள்.
“சீக்கிரம் வாடா மாப்பிள்ளை வந்ததும் வந்துட்டாரு கூப்பிடுறார்னு சாப்பிடாம ஓடக் கூடாது” என்று அவர் மீண்டும் குரல் கொடுக்க “வரேன்மா முடிஞ்சுருச்சு” என்று கூறியவாறு இவளும் தன் பிம்பத்தை கண்ணாடியில் அங்கும் இங்கும் அசைத்து பார்த்து திருப்திப்பட்டு வெளியே சென்றாள்.
ஹால் சோபாவில் அமர்ந்திருந்த அவளது தந்தை தம்பி முன்பு போய் நின்று சுடிதாரை இரு கைகளாலும் பிடித்தவாறு சுற்றி காண்பித்து “நான் பாக்குறதுக்கு எப்படி இருக்கேன்” என்று கேட்டாள்.
“என் பொண்ணுக்கு என்ன வானத்தில் இருந்து இறங்கி வந்த தேவதை மாதிரி இருக்க” என்று அவள் தந்தை கூற தீபக் எழுந்து ஒரு முறை அவளை சுற்றி வந்து விட்டு “எப்பவுமே கௌதம் அண்ணா சொல்லுவாங்களே அந்த மாதிரியே இருக்கே” என்று கூற அவளும் வெட்கப்பட்டு சிரித்தாள் சரியாக அந்த நேரம் கௌதம் “ஏய் பிசாசே ரெடி ஆயிட்டியா ” என்று அழைத்தவாரே வீட்டிற்குள் நுழைந்தான் அப்போதுதான் அவளுக்கு தீபக் கூறியது புரிந்தது.
“டேய் நான் பாக்குறதுக்கு பிசாசு மாதிரி இருக்கேனா உன்ன கொல்ல போறேன் பாரு” என்று தீபக்கை விரட்ட அவனும் அவள் கைக்கு அகப்படாமல் ஓடி கொண்டே இருந்தான் “சொன்னது கௌதம் அவரை விட்டுட்டு என்ன தொரத்துற”என்று கூற அவள் முகத்தை தூக்கி வைத்துக்கொண்டு “நீ சொல்லு கௌ நான் இந்த ட்ரெஸ்ல நல்லா இருக்கேன் தானே” என்று கேட்டாள்.
“நீ நல்லா தான்டா இருக்க ஆனா இது என்ன பஞ்சு மிட்டாய் கலர்ல ட்ரெஸ் போட்டிருக்க” என்று கேட்க்க அவள் திரும்பி அங்கு நின்று கொண்டிருந்த தாயை முறைத்தாள்.
“இது ஒன்னும் பஞ்சு மிட்டாய் கலர் இல்லை கௌதம் அதவிட லைட் கலர் தான் என் பொண்ணு எவ்ளோ அழகா இருக்கா உங்க ரெண்டு பேருக்கும் பொறாமை என் பொண்ண பார்த்து நீ வாடா செல்லம் வந்து சாப்பிடு” என்று மகளை அழைத்து சென்றார்.
“அம்மா உண்மையை சொல்லுமா இந்த ட்ரெஸ் எனக்கு நல்லா தானே இருக்கு வேணும்னா அவங்க வர்றதுக்கு முன்னாடி நான் வேரை மாத்திட்டு வரட்டுமா” என்று கேட்க கௌதம் அவள் இரு தோள் மீதும் கை வைத்து “ரொம்ப அழகா இருக்கடி ஆண்டி வீட்டுக்கு வந்ததும் நல்லா சுத்தி போடுங்க இன்னைக்கு வெளியே போனால் சென்னை கண்ணு மொத்தமும் என் ஃப்ரண்டு மேல தான்” என்று கூறி அவன் தலையால் இவள் தலையில் முட்டினான் அப்போதுதான் அவள் முகத்தில் மீண்டும் புன்னகையே வந்தது.
தீபாலி சாப்பிட்டு முடித்ததும் அனைவரும் ஹால் சோபாவில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர் அவள் விழிகள் நொடிக்கொருமுறை வாசலைப் பார்த்து பார்த்து மீண்டு கொண்டிருந்தது கையில் மொபைலையும் வைத்துக்கொண்டு படபடப்பாகவே அமர்ந்து இருந்தாள்.
“தீபா மாமா போன் பண்ணாங்களா எப்ப வரும்னு சொன்னாங்க” என்று தீபக் கேட்க “இன்னிக்கு பண்ணலடா நேத்து பண்ணப்ப சொன்னாங்க இன்னைக்கு காலையிலயே வந்துட்றதா”.
“மாமா உண்மையாவே கொடுத்து வச்சவர் அக்கா எவ்வளவு மரியாதை கொடுக்கிற உன மாதிரி பொண்ணு கிடைக்க அவரு புண்ணியம் பண்ணிருக்கணும்” என்று கூற அவளும் புன்னகைத்தாள்.
“இப்பவே சொன்னா எப்படி தீபக் இப்பதானே பேசாவே ஆரம்பிச்சிருக்காங்க கொஞ்ச நாள் போனா தெரியும் வாடா போடானு கூப்பிடுவாளா இல்ல வேற எப்படி கூப்பிடுவாள்னு ” என்று கௌதம் கிண்டல் செய்ய அவளின் தாய் “இங்க பாருடாமா எப்பவுமே புருஷன் அந்த மாதிரிலாம் கூபிட கூடாது சரியா உனக்கு விருப்பம்னா பேர் சொல்லி கூப்பிடு வாடா போடானு எல்லாம் வேண்டாம்” என்று கூற அவளும் “சரி மா”என்று கூறி அவர் என் கழுத்தை கட்டிக்கொண்டாள்.
இன்னும் சிறிது நேரம் கழிந்ததும் அவளின் அப்பா “நீ போன் பண்ணி மாப்பிள்ளை எங்க வந்துட்டு இருக்கார்னு என்னனு கேளுமா” என.
“நீங்க சும்மா இருங்க தம்பி போலீஸ் வேற ஏதாவது முக்கியமான வேலைல இருக்க போறாரு அப்ப போய் போன் பண்ணிட்டே இருக்க முடியுமா வரும்போது வரட்டும் நீ பேசாம இருடா” என்று அவள் தாய் கூறினார் அவர்கள் பேசுவதைக் கேட்டுக் கொண்டிருந்த அவளின் முகத்தில் யோசனை வந்தமர்ந்தது அதே நொடியில் கௌதமும் பார்த்துவிட்டான்.
“நீங்க சொல்றது உண்மைதான் ஆன்ட்டி போலீஸ் வேலையில் இருக்கும் அவங்களுக்கு தனித்தனியா டைம் ஸ்பென்ட் பண்றது ரொம்ப கஷ்டம் ஆனா அவங்களுக்கு கொஞ்ச நேரம் கிடைச்சாலும் அது ரொம்ப நல்லாவே யூஸ் பண்ணிப்பாங்க இது என்னோட கருத்து நீ என்ன சொல்ற தீபி சார் உனக்கு ஒரு நாளைக்கு அட் லீஸ்ட் ஒரு வாட்டியாவது போன் பண்ண மாட்டாரு ” என்று கேட்க வந்த யோசனை நிமிடத்திற்குள் பறந்தோடியது ஏனென்றால் அவன் ஒரு நாளைக்கு மூன்று நான்கு தடவை அவளிடம் பேசுவான் எத்தனை வேலையிலும்.
தீபாலி அதையே யோசித்துக் கொண்டிருக்க வீட்டிலிருந்த அனைவரும் “வாங்க தம்பி வாங்க மாப்பிள்ளை வாங்க சார் வாங்க மாமா” என்ற வரவேற்பில் தெளிந்து பார்த்தாள் அவன் தான் அவள் முன்பு நின்றிருந்தான் அந்த நிமிடம் அவளுக்குள் மகிழ்ச்சியோடு ஏதோ ஒன்று அதிகமாக வந்திருந்ததை உணர்ந்தாள் ஆனால் அது என்ன என்று ஆராய அப்பொழுது அவளிடம் நேரமில்லை.
“மன்னிச்சிடுங்க லேட் பண்ணிட்டேன்னு நினைக்கிறேன்” என்று அவன் பொதுவாக மன்னிப்பு கேட்க அவளின் தாய் “அப்படியெல்லாம் எதுவுமில்லை தம்பி இப்பதான் சாப்பிட்டு பேசிட்டு இருந்தோம் உட்காருங்க நான் உங்களுக்கு காபி எடுத்துட்டு வரேன்” என்று கூற அவனும் அமர்ந்து கொண்டான்.
சிறிது நேரம் மாமியார் வீட்டு உபசரிப்புகளை ஏற்றவன் “சரிங்க மாமா நாங்க கிளம்புறோம் ஈவினிங்க் கூட்டிட்டு வந்து விடறேன்” என்று கூற அவர்களும் வழியனுப்பி வைத்தனர்.
அவன் தஞ்சாவூரில் இருந்து காரில் தான் வந்திருந்தான்.இவளுக்கு ஒரு பக்க கதவை திறந்து விட்டு அவனும் மறுபக்கம் சென்று காரை எடுத்தான்.
“என்ன மூவி டிக்கெட் போட்டு இருக்க” என்று அவன் காரை ஒட்டியவாறே கேட்க
“கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்” என்று கூறினாள். அவர்கள் முன்பு பேசும்போது அவளையே படத்தை தேர்வு செய்ய கூறியிருந்தான் அதனால் அவளே டிக்கெட்டும் புக் செய்திருந்தாள்.
“நீங்க இந்த படம் பாத்திருக்கீங்களா” என்று அவனிடம் பேச்சு வளர்க்க எண்ணி கேட்க.
“இல்ல நீ”.
“ம் பாத்துட்டேன்”.
“அப்றம் எதுக்காக இந்த படம் செலட் பண்ண வேற படம் பாக்க போயிருக்கலாமே”.
“எல்லாத்தையும் செக் பண்ணிட்டேன் எல்லாம் பார்த்த படம் தான் ஓடுது இது பாக்கலாம்னு தோணுச்சு” என்று கூறி தோளை குலுக்கினாள்.
“எந்தப் படம் வந்தாலும் பாத்துடுவ போல”.
“ஆமா வேற என்ன வேலை ஏதாவது ஒரு படம் வந்துச்சுன்னா கௌதம கூட்டிட்டு தியேட்டர்ல போய் பாத்துட்டு வர வேண்டியதுதான்”.
“ஃபேமிலியோட போனது இல்லையா”.
“எப்பவாச்சு ஃபேமிலி கூட மத்த நேரமெல்லாம் பிரண்ட்ஸோட தான்”.
“வீட்ல ஃப்ரீ டைம்ல என்ன பண்ணுவ”.
“எனக்குத் தெரிஞ்சு நான் ஃப்ரீ டைம்னு எதுவும் இதுவரை ஒதுக்கினது இல்ல வீட்ல ஃபுல்லா அம்மா அப்பா கூட மத்த நேரம் எல்லாம் வெளியே கௌதம் கூட இதுவரைக்கும் நான் வெளியே கௌதம் இல்லாமல் போனத விரல் விட்டு எண்ணிடலாம் தெரியுமா”.
” ஏன் தனியா வெளியே போக பயமா என்ன”.
“பயம் எல்லாம் எதுவும் இல்ல அப்படியே பழகிடுச்சு அப்படி எங்கேயாச்சும் தனியா போகனுனா கூட அவனே என்ன ட்ராப் பண்ணி பிக்கப் பண்ணிடக்குவான்”.
“உன்கிட்ட ஸ்கூட்டி இருக்குல வீட்டுல பார்த்தேன் நீ ஓட்ட மாட்டியா”.
“ஓட்டுவேனே அம்மாவ கோயிலுக்கு கூட்டிட்டு போறதுக்கு” என்று ஏதேதோ அவன் கேள்வி கேட்டுக் கொண்டே வர இவளும் பதில் கூறிக் கொண்டே சென்றாள் தியேட்டர் வரும் வரை.
தொடரும்….
