ஆராய்ச்சி…love

🙂

காதல் ஏன் சலித்துப்போகிறது? உயிருக்குயிராய் பழகிய காதல் ஏன் வெறுப்பைக் கொணர்கிறது? பார்த்துக்கொண்டே இருக்க விரும்பிய முகத்தை பார்க்காமல் தவிர்க்கும் சூழல் எல்லாம் ஏன் வாய்க்கிறது? மரியாதை எங்கு குறைகிறதோ அங்கு இவையெல்லாம் நிகழ்ந்தே தீரும். காதல் என்பதே மரியாதை தானே! உன்னை உன் உணர்வுகளை நான் பெரிதும் மதிக்கிறேன் என்ற நிலையில்தான் காதலே வரும். மரியாதை இழக்கப்படும் இடத்தில காதலுக்கு வேலையில்லை நன்றிகூறிச் சென்றுவிடும்.
உறவை உடைப்பதில் முதலிடம் பெண்ணுக்குதான். இயல்பாகவே அவள் மதிக்கப்படுவதை கொண்டாடப்படுவதை பெரிதும் விரும்புபவளாக இருக்கிறாள்.
ஆண் அதிகமதிகம் அவளைக் கொண்டாடிவிட்டு சட்டென்று நியூட்ரல்க்கு வரும்போது ஏதோ பெரிய இழப்பொன்று நேர்ந்ததாகக் கருதிக்கொள்கிறாள். மீட்சி தன்மை பெண்ணிடம் அதிகம். விரைவாக இயல்புக்கு திரும்புவாள். திரும்பியவள் விரும்புவதெல்லாம் மதிக்கப்படுதல் அங்கீகரிக்கப்படுதல். அது கிடைக்காத உறவிலிருந்து விரைவாக வெளியேறுகிறாள். உங்கள் mutual respect அளவைப் பொறுத்தே உங்கள் உறவின் ஆயுள்.

காதல் என்றால் காமம். காமமும் காதலும் வேறு வேறு அல்ல இரண்டும் ஒன்றோடொன்று பின்னிப்பிணைந்து உருண்டுகொண்டு இருக்கும் என்று சொல்லும் நவீன சிந்தனாவாதிகளுக்கு எளிய காரணமொன்று கிடைத்துவிடும். காமம் சலிக்கிறது அதனால் கூடவே காதலும் சலிக்கிறது ! புதியதை நாடச் சொல்கிறது passion

Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *