ஆசை முத்தம் தா அசுரா
அத்தியாயம் 6
துருவ் சென்றதும் ஆனி அக்னஸை தேடி கேண்டீனுக்கு சென்றாள் மதுமிதா. சரியாக ஆனி அக்னஸ் வருவதற்கு சில நொடிகளுக்கு முன்பு வந்து சமர்த்தாக அமர்ந்து கொண்டாள். கோபத்தில் வேக வேகமாக நடந்து மதுமிதாவின் முன்னே அமர்ந்தாள் ஆனி அக்னஸ்.
“ஹேய்.. உண்ணமைய சொல்லு.. கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி நீ எங்க இருந்த?”
“நான்.. நான்.. நான்.. இங்க தான் ரொம்ப நேரமா உட்கார்ந்துட்டு இருக்கேன்.. ஆமா நீ வர ஏன் இவ்ளோ லேட்?”
“அதுவா.. உன்னைய மாதிரி அச்சு அசலா ஒருத்திக்கூட என்னோட ட்ரீம் பாய் ஓடினதை பார்த்தேன்..”
“வாவ்.. என்னைய மாதிரியேவா?”
“ஆமாங்குறேன்.. அப்படியே உன்னைய மாதிரி இதே எல்லோ கலர் டப் அப்புறம் ப்ளாக் கலர் ஸ்கெர்ட் போட்டுட்டு ஓடுனாளா.. நானும் அவங்க பின்னாடியே ஓடுனேனா.. ஆனா அவங்க எங்கப் போனாங்கன்னே.. தெரியல.. நானும் ஆடிட்டோரியம் சந்து புந்தெல்லாம் பார்த்துட்டேன்.. எங்கேயுமே காணோம்..”
“அதெல்லாம் உன்னோட மனப்பிரந்தி டி..”
“அப்படியும் இருக்குமோ?”
“அப்படித்தான் இருக்கும்..”
“நான் எங்கப் பார்த்தாலும் அவனோட முகமே தெரியுதுடி.. அப்படின்னா உண்மையிலேயே நான் அவனை லவ் பண்றேன்னு நானே அர்த்தம்?!”
“ரொம்ப கஷ்டம்.. ரொம்ப கஷ்டம்..”
“என்னது?”
“இல்ல.. உனக்கு அவன் மேல் ரொம்ப இஷ்டமான்னு கேட்டேன்..”
“இஷ்டமாவா? அவனோட டீல் பாடி.. ஸ்மார்ட் லுக்.. ட்ரேட் மார்க் சிரிப்பு.. அப்படியே நான் டோட்டல் டேமேஜ் போ..”
“சரி.. சரி லேப்கு டைமாச்சு.. கிளம்பு.. சீக்கிரம்..” என்றவாறே இருவரும் காலை உணவை முடித்துக் கொண்டு வகுப்பிற்கு கிளம்பினர்.
*****************************************************
“டாடி.. நான் சொல்றதை ஏன் நீங்க நம்பமாட்டேங்குறீங்க? அவ ஒருத்தன் கூட ஊரு ஊரா சுத்துறா..”
“ஸ்டாப்பிட் ரீட்டா.. அவளுக்கு அந்த அளவுக்கு தைரியம் கிடையாது.. நீ வேறயாவது பார்த்ததுட்டு உலறாத..”
“நான் சொல்றதை யாருமே நம்பமாட்டேங்குறிங்க.. அதை ஃபுருப் பண்ண ஒரு வீடியோ கூட இல்ல.. ச்சே..”
“டார்லிங்.. அவ தான் அவ்வளவு தூரம் சொல்றாளே.. அதுக்காகவாவது நீங்க மது மேல ஒரு கண்ணு வைச்சா நல்லாருக்கும்..”
“டையானா அவளைப் பத்தி எனக்கு நல்லாத் தெரியும்.. அவ அதுக்கெல்லாம் சரிபட்டு வரமாட்டா..”
“ஏன் டார்லிங் இப்படி பண்ணா எப்படி?”
“என்ன?”
“அவளுக்கு சீக்கிரம் மேரேஜ் பண்ணி வைச்சுடுங்க.. அதுக்கப்புறம் அவ பாடு.. அவளை கட்டிகிட்டவனோட பாடு..”
“ச்சோ.. அவ ரொம்ப சின்னப் பொண்ணு டி.. பத்தொன்பது வயசு தான் ஆகுது.. இப்பவே கல்யாணம் பண்ணா நல்லாவா இருக்கும்?”
“அவ அம்மாவை நீங்க பதினெட்டு வயசுல தானே கல்யாணம் பண்ணீங்க.. சொத்துக்காக அவளையும் லவ்வுக்காக என்னையும் கல்யாணம் பண்ணீங்க..”
“இப்ப எதுக்கு பழைய கதையெல்லாம் பேசிட்டுருக்க?”
“க்கும்.. உங்களுக்கு ஞாபகப்படுத்தத் தான்.. என்னைய கல்யாணம் பண்ணும் போது என்ன சொன்னீங்க? எங்களுக்கு மட்டும் தான் சொந்தமா இருப்பீங்கன்னு சொல்லித் தானே கல்யாணம் பண்ணீங்க?”
“அதுக்கு என்ன இப்போ? என்னைக்கு உன்னையே கல்யாணம் பண்ணேனோ.. அன்னைல இருந்து உனக்கு உண்மையாத் தானே இருக்கேன்.. மதுவோட அம்மா அவளை வயித்துல சுமந்தப்போக் கூட உங்கக்கூடத் தானே இருந்தேன்.. மது அம்மாவோட இறுதி சடங்குக்கு என்னைய போகக்கூடாதுன்னு சொன்ன.. நானும் போகல.. மதுவை தூக்கக்கூடாது.. கொஞ்சக்கூடாதுன்னு சொன்ன.. இன்னைக்கு வரைக்கும் அவ கூட நான் சிரிச்சுக்கூட பேசுனதில்ல.. இவ்வளவு நாளும் நீ சொல்றதை நான் கேட்டேன்ல.. இந்த ஒரு தடவை நான் சொல்றதை நீங்க கேளுங்க..”
“டார்லிங் நான் உங்க நல்லதுக்கு தான் சொல்றேன்.. நீங்க ஏன் இந்த சின்ன விஷயத்துக்கு டென்ஷனாகுறீங்க? நம்ம கம்பெனில வேலை பார்க்குற யாரோ ஒருத்தனுக்கு அவளை கல்யாணம் பண்ணி வைச்சுடுங்க.. அதுக்கப்புறம் அவனாச்சு.. அவளாச்சு.. தண்ணி தெளிச்சு விட்டுடுங்க.. பெத்ததுக்காக ஏதோ அஞ்சு லட்சமோ ஆறு லட்சமோ அவ பேருல டெப்பாசிட் பண்ணி விட்டுருங்க..”
“மம்மி சிக்ஸ் லாக்ஸ் எல்லாம் ரொம்ப ஜாஸ்தி.. அவளுக்கு இருக்குற திமிருக்கு ஒத்த பைசா கொடுக்கக்கூடாது..”
“இப்ப என்னதான் பண்ணணுங்கிறீங்க?”
“அவளுக்கு மேரேஜ் ஏற்பாடு பண்ணுங்க..”
“என்னவோ பண்ணித் தொலைங்க..” என்றவாறே அங்கிருந்து வெளியேறினார் ராஜசேகர். சோஃபாவில் அமர்ந்திருந்த அம்மாவும் மகளும் ஹைஃபை கொடுத்து கொண்டனர்.
“மம்மி.. அவளுக்கு படிக்காதவனா? குடிகாரனா? பார்த்து கல்யாணம் பண்ணி வைக்கணும்.. அவ இனிமே என்னையப் பார்த்தா தலை தூக்கவே கூடாது..”
“அந்த கிழவனை மறந்துடாத.. அவே இருக்குற வரைக்கும் அவளை ஒன்னும் பண்ண முடியாது..”
“அப்போ அந்த கிசக்.. போட்டுடலாமா?”
“இது என்ன சினிமாவா? வாழ்க்கை.. அப்படியெல்லாம் பண்ண முடியாது.. ஆனா நீ சொன்ன மாதிரி ஒரு பையனை தேடி.. இந்த ஆளு முன்னாடி மட்டும் நடிக்க வைக்கணும்.. ஆனா அப்படி ஒருத்தனுக்கு எங்கப் போறது?”
“அட நம்ம நாட்டுல நல்லவன கண்டுபிடிக்குறது தான் கஷ்டம்.. கெட்டவனை கண்டுபிடிக்குறது ரொம்ப ஈசி.. அந்த மாதிரி ஒருத்தனுக்கு நான் கேரண்டி.. நான் கூட்டிட்டு வர்றேன்..”
“எப்படி?”
“அதுக்கு தான் நம்ம அலெக்ஸ் இருக்கானே.. அவனைப் பிடிச்சா போதும்.. அவனே யாரையாவது இழுத்துட்டு வந்துடுவான்..”
“ஆல்ரைட்.. எதுனாலும் சூட்டோடு சூட்டா பண்ணணும்.. சீக்கிரம் பையனுக்கு ஏற்பாடு பண்ணு.. எனக்கு லேடீஸ் க்ளப்ல மீட்டிங் இருக்கு..” என்ற டயானா, அங்கிருந்து கிளம்பிச் செல்ல, தனது தோழனான அலெக்ஸிற்கு அழைத்தாள் ரீட்டா.
“ஹலோ.. ஹாய் ரீட்டா.. என்ன திடீர்னு என் ஞாபகம் வந்துருச்சு போல?”
“அதெல்லாம் ஒரு மண்ணுமில்ல.. எனக்காக நீ ஒரு ஹெல்ப் பண்ணணும்..”
“சொல்லு.. உனக்காக என்ன வேணும்னாலும் பண்ணுவான் இந்த அலெக்ஸ்..”
“இதே டயலாக்கை தான் நேத்து அந்த ஆனி அக்னஸ்கிட்ட சொன்ன.. அதையே திருப்பி என்கிட்ட சொல்ற..”
“எதை சொல்லி என்ன ப்ரயோஜனம்? எந்த பிகரும் மடிய மாட்டேங்குதே?!”
“உன்னோட புலம்பலை எல்லாம் வேறு யார்கிட்டயாவது வைச்சுக்கோ.. இப்ப எனக்கு அர்ஜெண்ட்டா ஒருத்தன் வேணும்..”
“ச்சீ.. என்ன ரீட்டா.. இப்படி பச்சையா கேட்குற?”
“அட லூசே.. அர்ஜெண்டா ஒருத்தனை எனக்கு தெரிஞ்ச பொண்ணுக்கு கல்யாணம் பண்ணி வைக்கணும்.. அதுக்கு அசிங்கமா.. படிக்காதவனா.. குடிகாரனா.. எதுக்கும் உதவாதவனா வேணும்.. அப்படிப்பட்டவனெல்லாம் உனக்கு தானே நல்லா தெரியும்.. அதான் உனக்கு போன் பண்ணேன்..”
“இவ்வளவு தானா.. எனக்கு ஒரு ரெண்டு நாள் டைம் கொடு.. அந்த மாதிரி ஒருத்தனை கண்டுபிடிச்சு உன் முன்னாடி நிறுத்துறேன்.. ஆனா அப்படி நான் செஞ்சா எனக்கு என்ன தருவ?”
“நீ என்ன கேட்டாலும் தர்றேன்..”
“எங்க திரும்ப சொல்லு.. நீ என்ன கேட்டாலும் தர்றேன்..”
“இப்ப சொல்லிட்டு அப்புறமா பேச்சு மாறக்கூடாது..”
“மதர் ப்ராமிஸ்.. அந்த மாதிரி ஒருத்தன் கூட மதுவோட கல்யாணம் முடிஞ்ச அடுத்த செகண்ட்.. நீ என்ன கேட்டாலும் தர்றேன்..”
‘ஓஹோ.. அப்போ அந்த பொண்ணு மதுமிதாவா? பாவிங்களா.. அந்த பொண்ணுக்கா.. இந்த நிலைமை?’ என்று அலெக்ஸ் யோசித்துக் கொண்டிருக்க, இடையிட்டது ரீட்டாவின் குரல்.
“பட் ஒன் கண்டிஷன்.. இது அந்த ஆனிக்கு மட்டுமில்ல யாருக்கும் தெரியக்கூடாது.. அப்படி யாருக்காவது சொன்னன்னு தெரிஞ்சது.. முக்கியமான கேபிளை கட் பண்ணிடுவேன்..”
“ஓ.. ஓ.. ஓகே ரீட்டா.. நான் என் ஆயா சத்தியமா யாருக்கும் சொல்லமாட்டேன்..” என்ற அலெக்ஸ் சிறிது முரடனாக காட்சியளித்தாலும் மிகவும் நல்லவன். அவனது கரடு முரடான தோற்றம் மற்றவர்களை ரவுடி போல் எண்ணத் தோன்றும். கீழ்மட்ட ஆட்களில் இருந்து மேல்தட்டு வர்க்கத்தினர் வரை அனைவரையும் அவனுக்கு தெரியும். எந்தவித வேலையாக இருந்தாலும் முகம் சுழிக்காது செய்பவன். அப்படிப்பட்டவனுக்கு இருக்கும் ஒரே தோழி ஆனி அக்னஸ் மட்டுமே. ஆனி அக்னஸிற்கு இருக்கும் ஒரே பெஸ்ட் ப்ரண்ட் மதுமிதா மட்டுமே.. மதுவிற்கு ஏதாவதென்றால் ஆனி அழுது கரைந்துவிடுவாள் என்பது அலெக்ஸிற்கு நன்றாக தெரியும். இப்போது ரீட்டாவின் பேச்சை கேட்காவிட்டால், அவள் வேறு யாரையாவது தேடி சென்று விடுவாள். எல்லோரும் அலெக்ஸைப் போன்று நல்லவிதமாக யோசிக்கமாட்டார்களே?! இப்போது என்ன செய்வது என்று யோசித்தவன், நேரே ஆனி அக்னஸை தேடிச் சென்றான்.
****************************************************
“டெய்லி இந்நேரத்துக்கு நீ எங்க கிளம்புற?”
“சும்மா.. அப்படியே ஒரு ரவுண்ட் போயிட்டு வரப்போறேன்..”
“நானும் வர்றேன்னு சொன்னா.. வேணாங்குற.. ஏதோ பண்றேன்னு தெரியுது.. ஆனா என்னன்னு தான் தெரியமாட்டேங்குது..”
“உன்கிட்ட சொல்லாம வேற யார்கிட்ட சொல்லப் போறேன்? ஆனா இப்போ இல்ல.. டைம் வரும்போது நானே சொல்றேன்..”
“ம்ம்ம்.. இதையே சொல்லி எத்தனை நாளைக்கு தப்பிக்கப் போறேன்னு நானும் பார்க்குறேன்..” என்ற ஆனி அக்னஸை கட்டியணைத்து, அவளது கன்னத்தில் முத்தமிட்டு ஓடினாள் மதுமிதா.
“இப்போல்லாம் வெளிய ரொம்ப சந்தோஷமா கிளம்புறா.. கேட்டா ரீசன் எதுவும் சொல்லமாட்டேங்குறா? பார்ப்போம்.. எத்தனை நாளைக்கு மறைச்சு வைப்பான்னு.. கத்திரிக்கா முத்தினா கடைத்தெருவுக்கு வந்து தான ஆகணும்..” என்ற ஆனி அக்னஸிற்கு மட்டும் மதுமிதா யாருடன் செல்கின்றாள் என்பது தெரிய வந்தால், மதுமிதாவின் நிலையென்ன? அவர்கள் இருவரின் நட்பு நிலைக்குமா?
