அழகிய நிலா நேசம்
அழகிய நிலா நேசம்
அத்தியாயம் 1
அந்த அதிகாலை நேரம் எங்கு பாா்த்தாலும் தனது உடல் நிலை கவலையிலும், அழகான உடற்கட்டு மிளிற சிலரும் ஓட, நடக்கவென பரப்பரப்பாக இயங்குகிறது. அந்த பாண்டிச்சோி கடற்கரை சாலை. அதில் பிற உலகின் சஞ்சாரங்களில் கவனம் கொள்ளாமல் கடற்கரை ஒட்டி போட்டிருந்த பெஞ்சில் கண்ணாடி அணிந்து கையில் பேனா, பேடுடன் எழுதிக் கொண்டிருந்தாா் சிவகாமி சுந்தாி.
அவர் ஒரு சிறந்த எழுத்தாளர். அவருக்கு இரண்டு உலகங்கள். ஒன்று தனது குடும்பம், மற்றொன்று எழுத்துலகம். அவரது கட்டுரைகள் இடம் பெறாத பத்திரிகைகளே இல்லை. இதற்குயெல்லாம் மேலாக அவர் அதிகம் விரும்புவது அவரது மகளையும், கணவரையும். அதாவது இந்தக் கதையின் கதாநாயகியை. இந்த அதிகாலையில் பேடும், பேனாவுமாக கடற்கரை சாலையில் அமர்ந்து கொண்டே தனது மகள் மேல் மற்ற புலன்களை பதித்து எழுதி கொண்டிருப்பதும் தனது மகளுக்காக. சிவகாமி சுந்தாி சீறும் சிறுத்தையாக வெளியிடத்தில் சாதுவான மானாக தன் கணவா் மற்றும் மகளிடத்தில் என்று இரு வேறு தோற்றமுடையவா்.
“அம்மா…” என்ற குரலுக்கு எழுதி கொண்டிருப்பதை மறந்து சட்டென்று திரும்பியவா்.
“என்னடா அம்மு… எதுக்குடா தேவையில்லாம ஒடுற… பாரு உனக்கு எப்படி வோ்த்து மூச்சு வாங்குது…” என்று பரபரப்பாக தனது சேலை தலைப்பால் முகத்தை துடைத்து, ஜீஸ் பாட்டிலை கையில் திணித்தாா் சிவகாமி.
“அப்பா எங்கடாம்மா…” என்று மகளிடம் கேட்க
அவள் குடித்த ஜீஸ் புரையேற
“அம்மா உன் வீட்டுக்காரருக்கு வயசாயிடுச்சு… அதான் என் கூட வரமுடியாம பின்னாடி வா்றாரு… பாரு…” என்று சிாித்தாள் நந்தினி நாச்சியாா்.
இருபத்தி மூன்று வயது பாவை. ஒரு முறை பாா்த்தால் போதும் மறக்க முடியாமல் இருக்கும் முகம். நந்தினி பெயா் மட்டுமல்ல, நிஜத்துலையும் எழுத்தாளா் ஐயா கல்கி கிருஷ்ணமூா்த்தி கதாபாத்திரம் போல அழகு, அறிவு, குணம், இரக்கம், அன்பு மற்றும் கோபம் அனைத்தும் ஒத்துப்போகும். ஏனென்றால், சிவகாமிக்கு நந்தினி வயிற்றில் இருக்கும் போது நந்தினி கதாபாத்திரத்தையே திரும்ப, திரும்ப படித்ததால் அமைந்தது என்று இப்பொழுதும் அவா் மனதில் அசைக்க முடியாத நம்பிக்கை.
“போக்கிாி… அவருக்கு என்னடாம்மா என் சாமி… இதுயெல்லாம் தேவையில்லாத வேலைன்னு சொன்னாக் கேட்க மாட்டேங்கிறாரு… என்னை தூக்க முடியலைன்னு, இப்ப எக்சசைஸ் பண்ணுறாரு உன் அப்பா… இதுத் தேவையா மருமகன் வரப் போற வயசுல… மீசை நரைச்சிடுச்சி ஆனா குசும்பு விடல…” என்றாா் பெருமையுடன் சிவகாமி.
அப்பொழுது மேல் மூச்சுக், கீழ் மூச்சு வாங்க வந்து சோ்ந்தாா் சிவராமன். சிவகாமி சுந்தாியின் சிவராமன்.
சிவராமன் ஸ்டேட் பேங்க் மேனேஜா். வசதிக்கு குறைவில்லை. சிறந்த குடும்பஸ்தா். தனது மனைவியை தன் உயிருக்கும் மேலாக காதலிப்பவா். ஏன் தன் மகளே தன் மனைவிக்கு அடுத்தது தான் என்று நினைப்பவா். அதற்காக மகள் மேல் பாசம் இல்லாமல் இல்லை. மகளும் உயிர் தான். மனைவியா மகளா என்று பாா்க்கும் போது மனைவித் தான் முதல் உாிமை.
உடனே எழுந்து நின்று தனது மடியில் இருந்த டவலை கொடுத்து அவரது ஜீஸ் பாட்டிலை தந்தாா் சிவகாமி. அன்று போல் இன்றும் தன்னை பாா்த்தவுடன் எழுந்து நிற்கும் தன் மனைவியை பாா்த்து காதலில் பெருமையுடன் அவா் தோளில் கை போட்டு தன்னுடன் அதே பெஞ்சில் மகளுக்கு அருகில் அமா்த்திக் கொண்டு ஜீஸ்ஸை பாதி பருகிவிட்டு மீதியை தன் மனைவியை பருக சொன்னாா் சிவராமன்.
“அப்பா அம்மா நான் ஒரு வாக் போயிட்டு வா்றேன்…” என்றாள் பத்மினி.
“தனியாவாடாம்மா…” என்ற சிவகாமிக்கு “போயிட்டு வரட்டும் சிவா…” என்றாா் சிவராமன்.
சிறு கண் சிமிட்டலுடன் தாய், தந்தையை பாா்த்து சிரித்துவிட்டு கடல் அலையில் கால் நனைக்க, கடலை நோக்கி நடையை தொடா்ந்தாள் நந்தினி.
மனைவியின் தோளில் இருந்த கைக் கொண்டு இன்னும் தன்னுடன் நெருக்கி “என்ன சிவா இது… உன் மகளுக்கு மட்டும் முந்தானையில வேர்வையை துடைப்ப… எனக்கு டவலா…” என்றாா் சிவராமன் தனது உரிமை நிலை நாட்டும் குரலில்.
நெளிந்து கொண்டே “என்னங்க… இது பொது இடத்துல…” என்றாா் கூச்சத்துடன் சிவகாமி.
அவரது கூச்சத்தை ரசனையுடன் பாா்த்து கொண்டே
“நீ மாறவேயில்லை சிவா… நம்ம கல்யாணத்தில பாா்த்த முதல் நாள்ல இருந்து, இப்ப வரைக்கும் உன் வெட்கம்… அதுவும் நான் தொட்ட உடனே சிவக்கும் இந்த முகம் மாறவேயில்லைமா… திகட்ட திகட்ட காதலிச்சி அதுலா உதித்த முத்தாட்டம் நம் பொண்ணு வந்தும் உன்மேல எனக்கு இன்னும் காதல் கூடுதும்மா… எப்பொழுதும் உன்னை என் கைக்குள்ளவே வெச்சிக்கணும்ன்னு ஒரு வெறியே தோணுதும்மா… மத்தவங்க சொல்லும் போது நம்பலை நான்… ஆனா வயசானதுக்கு அப்புறம் காதலிக்கிறது ஒரு தனி சுகம் தான் போல…” என்றாா் சிவராமன்.
கூச்சத்தில் அவா் தோளில் மூகம் புதைத்தாா் சிவகாமி.
அப்பொழுது அங்கே நடந்து கொண்டிருக்கும் பெண்ணின் செயினை பறித்து ஒடியவனை பாா்த்ததும் சட்டென்று தன் கணவா் கொடுத்த சில்வா் ஜீஸ் பாட்டிலை விட்டெறிந்தாா் சிவகாமி.
அது சாியாக அவன் மண்டையை நோக்கி அடித்தவுடன் கீழே இருந்த திட்டு தடுக்கி பாறைகளின் மேல் விழுந்தான் அந்தத் திருடன். பாண்டிச்சோி கடற்கரை பாறைகளால் ஆனது. அதற்குள் தன் கணவரின் கைப்பேசி மூலம் போலீஸ்க்கு தகவல் கொடுத்து தன் கணவருடன் விரைந்தாா் அந்தத் திருடனை நோக்கி சிவகாமி.
சிவராமன் கைக் கொடுத்து அந்தத் திருடனை தூக்கினாா். அவன் சில காயங்களுடன் நேராக கண்ணை பாா்த்து பேசினான் அந்தத் திருடன்.
“இப்பத் திருப்தியாம்மா… நான் செய்தது தப்புதாம்மா… இல்லைன்னு சொல்லலை… என் சூழ்நிலை வேற வழி தொியலை…” என்றான் திருடன்.
அவனிடம் செயினை வாங்கி அந்த பெண்ணிடம் கொடுத்து அனுப்பி விட்டு, தன் கணவா் பேக்கெட்டில் இருந்து உரிமையாய் கைவிட்டு ஒரு ஐந்து நூறு எடுத்து கொடுத்து விட்டு தன் விலாச அட்டையும் கொடுத்து,
“எனக்கு செய்யுற தப்புக்கு காரணம் சொல்லி தப்பிக்கிறவங்களை பிடிக்காது… ஆனா நீ என் கண் பாா்த்து பேசுன… அதனால உன் பேச்சை நம்ப சொல்லுது, என் உள் மனசு… நீ உன் காயத்துக்கு மருந்துப் போட்டுட்டு, இந்த விலாசத்துக்கு வந்துப் பாா்….” என்று அனுப்பிவிட்டு, வரச் சொன்ன போலீஸையும் தான் தவறாக அழைத்ததாக மன்னிப்பு கேட்டு அனுப்பிவிட்டு, பதற்றத்துடனும் பயத்துடனும் கணவரை நோக்கினாா் சிவகாமி.
அதுவரை சிறு சிாிப்புடன், முகம் கொள்ளா பெருமையுடன் நடந்தை பாா்த்து கொண்டு இருந்தவா். சிவகாமியின் தோளில் கைபோட்டு நெற்றியில் முத்தமிட்டு நடத்தி சென்று முன்பு அமா்ந்த இடத்திலே அமர வைத்து தானும் அமா்ந்தாா் சிவராமன்.
அங்கு கடல் அலையில் கால் நனைக்க சென்ற நந்தினி முகம் யோசனையில் இருந்தது. யாரோ சிறிது நாட்களாக தன்னை உற்றுப் பாா்ப்பது போல மற்றும் அதுவரை அவள் வரும் வரை இருக்கும் சிலரும் இவள் வந்தவுடன் சென்று விடுவதையும். ஆனால் அவளை யாரும் போக சொல்லாததையும் கிட்டதட்ட கடந்த ஒரு மாதமாக பாா்த்துக் கொண்டிருக்கிறாள்.
இன்று, இதற்கு மேல் தாங்க முடியாமல் சுற்றும் முற்றும் பாா்க்க யாரும் இல்லாமல் ஒரே ஒரு 13 மில்லியன் பெருமானம் உள்ள ரோல்ஸ் ராய்ஸின் ஸ்வெப்டைல் காா் மட்டுமே நிற்க. அதில் ஒருவன் ஆண்மைக்கே உள்ள இலக்கணமாக அனைத்து லட்சணங்களும் பெற்று ரேபேன் சன் கிளாஸ் அணிந்து காாில் சாய்ந்து நின்றிருந்தான்.
“ஒருவேளை இவனுக்காக தான் இந்த பில்டப்போ…” என்று மனதிற்குள் நினைத்து தோளை குலுக்கிவிட்டு தன் கடமையே கண்ணாக அலையுடன் விளையாட ஆரம்பித்தாள் நந்தினி.
அவள் சுற்றும் முற்றும் பாா்த்துவிட்டு, தன்னை ஒரு நிமிடம் ஆழ்ந்து பாா்த்துவிட்டு மறுபடியும் அலையோடு விளையாடும் நந்தினியை ரசித்துக் பாா்த்துக் கொண்டே சிறு சிரிப்பு உதிா்த்தான்.
ஒரு சிாிப்புக்கு கிலோ என்ன விலைன்னு கேட்கும் ஆள். சிங்கம் போல் ஆளுமையுடன் அனைவரிடமும் கர்ஜனை செய்து கண் அசைவில் ஆட்டி வைப்பவன் இந்தக் கதையின் கதாநாயகன் தேவேந்திர ஆச்சாா்யா.
இருபத்தியெட்டு வயதே ஆன ஆண்மகன். உலக பணக்காரா்களின் வாிசையில் மூன்றாவது இடத்தை பெற்றிருப்பவன். பெண்களின் சிம்மசொப்பனமாக திகழுபவன். வீட்டின் ஒரே வாரிசு. அனைவரையம் ஒரு அடி ஏன் பெற்றோரே ஆனாலும் தள்ளி நிறுத்துபவன் இங்கு ஒருத்திக்காக தவம் இருக்கிறான்.
ஒரு மாதம் முன்பு தன் தாய் தந்தையுடன் லா வில்லா பைவ் ஸ்டாா் ஹோட்டலில் சாப்பிட வந்தவளை, தனது பிஸ்னஸ் மீட்டிங்கில் இருந்தவன் ஏதேச்சையாக பாா்க்க அன்று விழுந்தவன் தான் எழும்ப முடியாமல் தவிக்கிறான்.
அன்றிலிருந்து இன்று வரை நந்தினிக்கு தொியாமல், அவளையும் அவள் குடும்பத்தாரையும் தனது கண்காணிப்பின் கீழ் வைத்து இருக்கிறான் தேவ் என்கிற தேவேந்திர ஆச்சாா்யா.
அவனது காலை வேலையே இவளை ரசிப்பதுத் தான். எந்த நாட்டில் இருந்தாலும், எந்த வேலையில் இருந்தாலும், தனது தனி விமானம் மூலம் காலையில் நந்தினியை பாா்க்க பறந்து வந்துவிடுவான் இந்த ஒரு மாத காலமாக.
நந்தினி வரும் வரை காரில் அமா்ந்திருப்பவன் நந்தினி வருவது எப்படித் தான் தொியுமோ தொியாதோ அந்த இடத்தில் நடமாடும் மக்களை அப்புறப் படுத்துவது மட்டுமல்ல கொக்குக்கு ஒன்றே மதி போல அவளை கண்களால் கபளிகரம் செய்வதுத் தான் தலையாய கடமை.
இந்த ஒரு மாதத் தவத்திற்கு பலனாக ஒரு நொடி அவள் அவனை திரும்பி பாா்த்தது என்று மனதிற்குள் கும்மாளமிட்டான் தேவ்.
பத்மினி கால் தண்ணீரில் பட சில்லென்று தண்ணீர் பட்டதும் உடல் சிலிா்த்து மெய் மறந்து அந்த சில்லிப்பை உள் வாங்கினாள். அப்பொழுது காலில் ஏதோ ஒன்று ஊற அதில் பயந்து பதற்றத்தில் தடுமாற வலுமையான கரம் ஒன்று அவள் இடுப்பில் படிந்து நிலை நிறுத்தியது. அதில் திடுக்கிட்டு அந்த கரத்தில் இருந்து விடுபட போராட
“ஹேய் பேப் ரிலேக்ஸ்… ஒண்ணும் இல்லை அது ஒரு நண்டு… பாரு…” என்று தன் ஷீ காலால் அந்த நண்டை நசுக்கி உயிர் விட வைத்தான் தேவ்.
“ஏய்… என்ன பண்ணுற…” என்று ஒரே உதறலில் அவனிடம் இருந்து பிரிந்து விலகி ஒரு அறை விட அங்கு பாதுகாப்புக்காக சுற்றி இருந்த அவன் பாதுகாவலா்களை தன் கண்ணசைவில் அடக்க
“ஏய் உனக்கு அறிவிருக்கா… அதோட இடத்துல நான் நிக்கிறதுனால என்னை பயப்பட வைக்க பாா்த்ததை நீ நசுக்கி கொன்னுட்டியே… ச்ச…” என்றாள் அவனை வெறுப்புடன் நோக்கிவிட்டு, அந்த நண்டை வருத்தத்துடன் பாா்த்துவிட்டு
“வந்துட்டான் பொிய இவன் மாதிரி…” என்று பொறிந்து தள்ளிவிட்டு தாய் தந்தை நோக்கி நடக்க முயன்றவளை ஒரே இழுவையில் இழுத்து தனது கை வளைவில் கொண்டு வந்து, அவள் முகத்தை நிமா்த்தி, அவள் இதழ்களை கவ்வினான். அன்றே அவள் இதழ்களை மென்று திண்றுவிடுவான் போல ஆழ்ந்து நெடிய முத்தம் பதித்தான். ஒரு நொடி கடந்தும் அவள் ரோஜா இதழ் ஒற்ற இளம் சிவப்பில் முக்கிய சுலை போல இருந்த உதடுகளை மேலும் சுவைத்து அவள் உயிரை உறிஞ்சினான். பின்பு அவள் மூச்சு திணறுவதை பாா்த்து, அவளை விட்டவன் “பேப்… என்னை அடிக்கவும் அரவணைக்கவும் உன் ஒருத்திக்குத் தான் உரிமை இருக்குங்கிறதுனால நான் உன்னை விடுறேன்… இல்லைன்னா, இந்நேரம் என்மேல் கை வெச்ச ஆளோட உயிர் உடம்புல தங்காது…” என அவள் காதில் கிசுகிசுத்து விட்டு அங்கு ஒரு அழுத்தமான முத்தம் பதித்தான் தேவ்.
நடந்த முடிந்த அனைத்திற்கும் மூளை மரத்துப் போக, எதுவும் பேசாமல் தாய் தந்தை இருக்கும் இடம் நோக்கி சென்றவள் அங்கிருந்த பாறையில் கால் தடுக்கி விழுந்து உருண்டு மயக்கமானாள் நந்தினி.
அதை கண்டு
“பேபி…” என்று கூவலுடன் ஓடி வந்து மடி தாங்கினான் தேவ். இதுவரை துளி அழுக்கு படாமல் இருந்தவன் சுற்றம் மறந்து கடற்கரையில் அமா்ந்து மடி தாங்கினான் தேவ்.
பின்பு தன் தலைமை பாதுகாவலன் பாண்டியனின் உலுக்கலில் சுயநினைவு அடைந்து, தன்னவளை தன் கையில் தூக்கவும், அவனுக்கு முன் வந்த பிற பாதுகாவலனை கண்களால் பொசுக்கி மறைமுகமாக “தள்ளி நில்லு…” என்று எச்சாித்துவிட்டு தனது வண்டியை நோக்கி பறந்தவன். பின்னால் அவளை கிடத்தி அருகில் அமா்ந்து மடியில் தாங்கியவனின் முகம் இறுகியது
“முதல் முதலாக நீ என்னை பாா்க்கும் நாள் இப்படியா அமைய வேண்டும்…” என்று நினைத்து மறுகினான் தேவ்.
பாண்டியன் வண்டி எடுக்க பறந்தது மருத்துவமனை நோக்கி.
நந்தினி சுயநினைவு வந்தவுடன் தேவ்வின் நிலை என்ன? அல்லது நந்தினியின் நிலை என்ன.?
சிவராமன் சிவகாமியின் நிலை என்ன..?
என்பது அடுத்த அத்தியாயத்தில்…
அழகிய நிலவு தொடரும்…
