அத்தியாயம் : 15
அலைகடல் பிறைநிலா
முதலில் மென்மையாக துடங்கிய இதழ் யுத்தம் கௌதமின் மது போதையும்,இரு வருடங்கள் கழித்து இப்பொழுது தான் என் அவள் இதழ் மதுவை குடிக்கிறேன் எனும் வேளையில் அவனது வன்மையை வேகமாக கூட்டி கொண்டே இருக்க முதலில் அவளும் அந்த மென்மையில் லயித்தவள் அந்த வன்மையின் சுகத்திலும் சிறிது தன்னை இழந்து மூச்சுக்கு சிரமம் ஏற்படும் வேளையில் கௌதமின் கையும் அவளின் உடலில் அத்து மீற துடங்கிய நேரம் உன்னால் தான டா நான் மாறி போனேன் என்பது மனக்கண்ணில் வந்து போனது…
இதழோடு கவி பாடி கொண்டிருந்த வேளையில் அடுத்த கட்டத்திற்கு செல்ல துடித்த மனதை உடைத்து எரிவது போல ஜனனி தன் மென் கரத்தை வைத்து கௌதமை பிடித்து தள்ளினாள்….அவளால் அந்த இரும்பு மனிதனை முதலில் தள்ள முடியவில்லை.. அவனோ அவள் தள்ளியது ஒன்றும் போதையில் நினைவு இல்லை போலும்…
அவள் விலக நினைக்க அவனோ ஒருபுறம் இதழ் வன்யுத்தம் நடக்க மறுபுறம் அவள் விலக நினைக்க அவனோ அவளை விடாமல் அவள் இடையையும் தன்னோடு சேர்த்து குர்தாவின் உள்ளே உள்ள வெற்றிடையில் இருந்த அவன் கரம் மேலும் உள்ளே முன்னேறி செல்ல , கௌதமுக்கு பற்றி எரிய துடங்கிய மோக தீயை அணைக்க தெரியாமல் இப்பொழுதே அவள் வேண்டும் என்ற நிலைக்கு அவன் செல்ல,அவன் கை செய்த மாயத்தில் உருகிய அவளும் இனி என் மனதால் கூட என்னை கட்டுக்குள் கொண்டு வர முடியாது நானே அந்த மோகத்தீயில் வீழ்ந்து விடுவேன் என்று ஒரு எண்ணம் வர, அவள் பலம் பொருந்திய மட்டும் பிடித்து தள்ள இரண்டு அடி மட்டுமே அவளால் தள்ள முடிந்தது….ஏனெனில் மலரினும் மெல்லிய கரத்தை வைத்துக்கொண்டு எயிட் பேக் வைத்து இருக்கும் இரும்பு மனிதனை அவளால் தள்ள முடியுமா…
அந்த இரு அடி கூட மோகமும், போதையும் சேர்ந்து நிலை குழைந்து இருந்த சமயத்தில் தான் அந்த இரு அடி கூட நகர்ந்தது… அவளது இந்த செயலால் அவனது இரு விதமான போதையும் தெளிய சடுதியில் தான் செய்து கொண்டிருந்த செயலின் வீரியம் புரிய, இருந்தாலும் தன்னை எப்படி இவள் தள்ளி விடலாம் என்ற ஆணவம் கௌதமுக்கு தலை தூக்க அவள் மேல் உள்ள வெறியில் வேகமாக சென்று மது பாட்டிலை அப்படியே வாயில் கவிழ்த்து விட்டான்….முழு பாட்டிலை குடித்தவன் நேரே சென்று சோபாவில் கால் மேல் கால் இட்டு அமர்ந்தான்…
அவன் தனக்கு செய்த ஏமாற்றத்தை தாங்க முடியாமல் தான் கௌதமை பிடித்து தள்ளி விட்டாள் ஏதோ ஒரு வேகத்தில் செய்து விட்டாள் இதற்கான பதிலை அவள் கணவன் தனக்கு உடனே திருப்பி தருவான் என்பதை அறியாத பேதை பெண்….
அவள் தள்ளியதும் அவன் போய் குடித்ததை கண்டவள் அதிர்ந்தாள் கௌதம் குடிப்பாரா…. இந்த கணவனின் முகம் அவளுக்கு புதிது….வீட்டில் யாரேனும் இருக்கிறார்களா என்று கண்களாலேயே தேட யாரும் கண்ணில் எட்ட வில்லை…..அந்த பொண்ணு நிஷா எங்கே அவ குழந்தை எங்கே இதை எல்லாம் யோசித்து கொண்டிருந்தவள் குழந்தை என்றதும் தான் ஐயோ என்னோட வருண் குட்டி எங்கே?
கழுத்து வரை குடித்து இருந்தும் அவளது நடவடிக்கைகளை கூர்ந்து கவனித்து கொண்டிருந்த கௌதம் அந்நேரம் அவள் பார்க்க அவள் பார்வையை எதிர் கொண்டான்…அவளோ ஐயோ பார்க்கிறாரே நானாக பேசாவிட்டால் அவன் பேசமாட்டான் என்பதை அறிந்த சற்று முன் அவனை தள்ளிவிட்டது மனதில் இருந்தாலும் மெல்லிய குரலில் ஜனனி “குழந்தை” என்றாள்..
கௌதம், ” வாட்”…. தாடிக்கும் முறுக்கு மீசைக்கும் இடையே ஒரு நக்கல் சிரிப்பை அடக்கி கேட்டான்…
ஜனனியோ அவனது நக்கல் பார்வையை தவிர்த்து மேலே நோக்கி மெல்லிய குரலில், ” குழந்தை வேணும்” என்றாள்…
கௌதமோ, ” குழந்தை தர நான் ரெடி ஆனால் இதுக்கு எத்தனை வருஷம் ஓடி போறதா உத்தேசம்? என அதே நக்கல் பார்வையில் அவளுக்கு பதில் கூறினான்…
ஜனனிக்கோ அவன் பேசுவதை கேட்டு அதன் அர்த்தம் புரிந்து சிறு கோபம் துளிர் விட ” என் மகன் வருண் எங்கே? என்றாள்….
கௌதமோ என் மேல் கோபம் கூட பட தெரியுமா உனக்கு என நினைத்து ஒரு ஆச்சரிய பார்வையை ஒன்றை வீசி , “உன் மகனா அது யாரு?”…..என்றான் நக்கலாக
ஜனனி, “வருண் கிருஷ்ணா என் பையன் “… என்றாள் தெளிவாக….
கௌதமோ , “வருண் கௌதம் கிருஷ்ணா”.. திருத்தி கூறினான்..அதாவது எனக்கும் மகன் தான் என்று சொல்லாமல் சொன்னான்…
ஜனனியோ விடாமல் “வருண் என் பையன் ..அவன் என் பையன் எனக்கு மட்டும் தான் சொந்தம்….”
என சொல்லி கொண்டே இருக்க ஒரு கட்டத்தில் கௌதம் பொறுமை எல்லை கடந்தது…
ஜனனி ஒரோ முறையும் என் மகன் என் மகன் சொல்லும் போது கௌதமுக்கு கோபம் தலைக்கேறி பல்லை கடித்து “நான் இல்லாம தான் வருண் வந்துட்டானா” … என்று எழுந்து வந்து கோபத்தில் அருகே வந்து நின்று அவள் தோளை பிடித்து கேட்க,
அவனது தீடீர் தாக்குதலில் ஜனனியின் முகம் வெளிறி பயத்தில் நடுங்கி கண்ணில் கண்ணீர் குளம் கட்ட ,அவன் மேல் உள்ள பயம் தலை தூக்க பரிதாபமாக நின்றவளை பார்த்து அவள் கண்ணோடு கண்ணை கலக்க விட்டவன் இனியும் அவள் இங்கே நின்றால் நம்மை அறியாமலே அவளை அணைத்து விடுவோம் என்று நினைத்து, “அவுட் இனி ஒரு நிமிஷம் இங்கே இருக்க கூடாது”
என்றான்…
ஜனனி, “வ..ரு.. ண்”…. என தந்தி அடிக்க, அவன் “எனக்கும் பையன் தான் நான் பார்த்துக்கறேன் நீ போ”… என்றான் சூடாக… போகாமல் நின்றவளை அவனே கையை பிடித்து இழுத்து வெளியே தள்ளி விட்டு படுக்கை அறை கதவை அடைக்க போனான்..
ஜனனியோ திரும்பி திரும்பி பார்த்து கொண்டே செல்ல பார்க்க பாவமாக இருந்தது…ஆனால் கௌதமோ கொஞ்சமும் இளக வில்லை ….
ஆனால் அவனை காணாமல் போகமாட்டேன் என்று அடம்பிடித்து உள்ளே மறுபடியும் அவனை தள்ளி உள்ளே நுழைந்தாள்…கௌதமும் உள்ளுக்குள் சிரித்து அவளுக்கு வழி விட்டான்…
ஜனனிக்கோ மாலையில் இருந்து இரவு ஆகியும் குழந்தையை பார்க்காமல் தவித்து கொண்டிருக்க, கண்ணால் கூட குழந்தையை காட்ட வில்லை கௌதம்….குழந்தையை பார்க்காமல் என்னால் இருக்க முடியாதே …. இதற்கு மேல் பொறுமை இல்லை என வெகுண்டு எழுந்து ஜனனி “உங்களுக்கு தான் மனைவி குழந்தை னு இருக்காங்களே”..நிஷாவை நினைத்து ஜனனி கூற
கௌதமோ, “ஆமா பொண்டாட்டி குழந்தை இருக்கு அதுக்கு என்ன இப்போ”.. என்றான் ஏகாத்தாளமாக…
இவர்களது சண்டை வழு பெற இதற்கு எல்லாம் காரணம் ஆன ஜூனியர் கௌதம் எழுந்தான்…எழுந்ததும் அம்மா என்று அழ ஜனனியோ பார்த்தியா என்பதை போல அவனை ஏறிட்டு குழந்தையின் சத்தம் வரும் அறைக்கு விரைந்தாள்…
குழந்தையோடு வெளியே வந்தவளை ஏறிட்டவன் , கடுகடுவென இருந்த முகத்தை குழந்தையை பார்த்தும் கனிவாக மாற தனது தந்தையை கண்டதும் வருண் “ப்பா” என்க , அவனது அம்மாவிடமும் “ப்பா” என ஜனனிக்கு அறிமுகம் செய்ய அவளும் அழுது கொண்டே ஆமாம் என்றாள்….
குழந்தையின் மகிழ்ச்சியை கண்ட பெற்றவர்களும் மகிழ்ந்தனர் ஒருவருக்கு ஒருவர் அறியாமல்….இந்த வருண் தான் இவர்கள் வாழ்வின் அச்சாரம்…குழந்தையின் அப்பா விளி உயிர் வரை ஊடுருவ அவன் அருந்திய போதை கூட வியர்வையாய் வழிந்து ஓடியது….
இன்னும் உறக்க கலக்கத்தில் இருந்த குழந்தை சிணுங்கி அழ ஆரம்பித்தான்…அவள் தட்டி கொடுத்து என்ன செய்தும் அவன் கேட்கவில்லை… “ப்பா” என்று அழ கௌதமோ பார்த்தாயா என்பது போல ஜனனியை பார்த்தான்…
பின் இருவரும் கூட படுத்தால் தான் உறங்குவேன் என்று அடம் பிடிக்கும் குழந்தையை ஒன்னும் செய்ய இயலா தன்மையுடன் இருவரும் பார்க்க கௌதம் தான் முதலில் இறங்கி வந்து குழந்தையை வாங்கி படுக்க வைத்து தானும் படுக்க ஜனனியும் வர வேண்டும் என கூற அவளோ தயங்குவதை பார்த்து உள்ளுக்குள் மூண்ட கோபத்தை அடக்கி அவளை பார்க்க அவளோ மெல்ல வந்து குழந்தையின் மறுபக்கம் வந்து படுத்தாள்…இந்த இரவு இப்படி தொடங்கும் என ஜனனி , கௌதம் இருவரும் நினைக்கவே இல்லை… ஏன் 10 நிமிடங்கள் முன் வரை கூட நினைக்கவில்லை… ஆனால் நடக்கிறது…
ஒரு மணி நேரம் செல்ல வருண் உறங்கி இருக்க, கௌதமும் உறங்கி இருந்தான்…இருவரும் உறங்குவதை பார்த்து கொண்டே இருந்தவள் நீண்ட இரு வருடங்கள் இப்படி பட்ட நாள் இனி என் வாழ்வில் இடம் இல்லை என ஒதுக்கி வைத்தது எல்லாம் நடந்து கொண்டிருக்கிறது… மாலை முதல் நடக்கும் களேபரத்தில் உடலும் உள்ளமும் சோர்ந்து போக அவளை அறியாமல் உறக்கத்தை தழுவினாள்…
இடையே எழுந்த கௌதம் இந்த நாளுக்காக எத்தனை நாள் தவம் கிடந்து இருக்கிறான் மனைவி மகன் இவர்கள் அருகாமையில் தன்னை இழந்து ஆலோசித்தான்…ஒரு சில தீர்மானங்கள் எடுக்க வேண்டும் அதை கூறும் போது ஜனனி மிகவும் நரக வேதனை அனுபவிப்பாள்… ஆனால் செய்தே ஆக வேண்டும்…
இனியும் இவர்களை விட்டு என்னால் இருக்க முடியாது என்று முடிவெடுத்து குளியலறைக்குள் செல்ல அந்த அரவத்தில் விழித்தவள் மணி நான்கை காட்ட அப்பொழுது தான் தாம் இருக்கும் இடமே அறிந்தது… அதற்குள் கௌதம் வர, அவளிடம் வீட்டிற்கு சென்று அவளை தயாராகி குழந்தைக்கு வேண்டியதையும் எடுத்துட்டு வர சொல்ல அவளோ உறங்கும் வருணை பார்த்து தயங்கினாள்… அதற்கு கௌதம் நான் பார்த்து கொள்ளுவதாக கூற ஜனனியும் தலை ஆட்டினாள்…
வீட்டுக்கு சென்றவள் கௌதம் வந்த விஷயத்தையும் குழந்தை அங்கே உள்ள விஷயத்தையும் கூற கௌதம் வருவது அவர்களுக்கு முன்பே அறிந்ததால் இவள் கூறும் செய்தியையும் கேட்டு மட்டும் கொண்டனர்….ஆம் கௌதம் தான் ஜனனியிடம் சொல்ல வேண்டாம் என்று கூறி இருந்தான்….பிறகு குளித்து ரெடி ஆகி குழந்தைக்கு வேண்டிய சாதனங்களை எடுத்துக் கொண்டு கிளம்பினாள்…..
என்னதான் இருந்தாலும் ஜனனி மனதில் நிஷா வந்து குடைய கௌதமின் பால் சாய இருந்த மனதை அடக்கி , நிஷாவும் குழந்தையும் வருவதற்குள் வருணை அழைத்து கொண்டு வர வேண்டும் என்று எண்ணி கொண்டு இருக்க, வருணை கௌதம் தன் வாழ் நாளில் வருணை அனுப்ப மாட்டான் என்று அவளுக்கு தெரியவில்லை….
அவளிடம் ரெடி ஆகி வரும்படி சொன்னவனோ ஜனனியை பற்றி சிந்திக்க துடங்கினான்…அவனுக்கு தெரியும் தான் ஜனனிக்கு இன்று அதிர்ச்சி மட்டும் அல்லாமல் துக்கத்தையும் கொடுத்துள்ளோம் என்று…
ஆனால் ஜனனிக்கு இந்த அதிர்ச்சி வைத்தியம் வேண்டும்…அவனும் குழந்தையை காணாமல் தவித்து வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறானே…தவிப்பு எப்படி இருக்கும் , அந்த வேதனை எப்படி இருக்கும் என்பதை அவள் புரிந்து கொள்ளட்டும் என்று தான் மாலையில் ஜனனியை விட்டுவிட்டு வருணை மட்டும் அழைத்து வந்தது…..
அதுமட்டுமின்றி அவனுக்கு அவளோடு உரையாட வேண்டி இருந்தது… இப்பொழுதே பேசலாம்…ஆனால் குடித்து விட்டு உளருகிறேன் என கூறினாலோ அதனால் தான் தெளிவாக காலையில் பேசலாம் என்று முடிவு எடுத்தான்…
இதோ இப்பொழுது கௌதமின் வீட்டு அழைப்பு மணியை அடித்து கொண்டிருக்க யாரும் திறக்கவே இல்லை…ஜனனி மகன் எழுந்து இருப்பானோ என்ற தவிப்பில் கதவை தட்ட போக அது திறந்து இருந்தது…..
உள்ளே போய் பார்த்த ஜனனி அதிர்ந்தாள்…கௌதம் கீழே படுத்து கொண்டு புஷ் அப் எடுத்து கொண்டு இருக்க, வருண் கௌதமின் முதுகில் அமர்ந்து கொண்டு கார்ன் பிளேக்ஸ் சாப்பிட்டு கொண்டிருந்தான்…கௌதமும் வருண் ஒரோ வாய் சாப்பிடும் போதும் ஒரு முறை புஷ் அப் செய்து கொண்டு இருக்க , அதை பார்த்த ஜனனிக்கு ஏனோ மனதுக்குள் ஒரு குற்ற உணர்ச்சி உருவாக இந்த மகிழ்ச்சியை நான் இந்த இருவருக்கும் அளிக்காமல் இருந்து விட்டேனோ என்று ஜனனி நினைக்க தவற வில்லை…
தங்களை பார்த்து கொண்டு நிற்கும் மனைவியை புஷ் அப் எடுத்துக்கொண்டே கீழ் இருந்து மேலாக பார்த்தவன் அவன் எதிர் பார்த்தது போல அவள் கண்கள் சிவப்பை பார்த்தே அவள் நேற்று இரவு உறங்கவில்லை என்று முடிவுக்கு வந்தவன்…அவன் பார்வையை உணர்ந்தவள் என்ன பார்வை இது என்பது போல உடையை சரி செய்தாள்…
ஏனென்றால் அவள் அணிந்து இருந்தது ஒரு முழங்காலுக்கு கீழே வரை உள்ள பாவாடையும் ஒரு பனியனும் ஜனனியோ எக்கு தப்பாக நினைக்க அவளது முகத்தை வைத்தே அவள் என்ன நினைக்கிறாள் என்பதை அறிந்தவன் மனதுக்குள் சிரித்து வெளியே அவளை முறைத்தான்…
அவன் முறைப்பதை பார்த்து மெல்ல வருண் குட்டி என்று அழைக்க அப்பொழுது மகன் மெல்ல அங்கே இருக்கும் தாயை பார்த்து அம்மா என்று கௌதமின் முதுகில் இருந்து இறங்கி ஜனனியிடம் தாவினான்… குழந்தையை தூக்கி அணைத்து கொண்ட ஜனனி வருணின் குண்டு கன்னத்தில் முத்தம் வைத்து நல்ல தூங்குனிங்களா என்று கேட்க வருணோ ஆம் என்பது தலை அசைத்து சிரித்தான்….
அதற்குள் எழுந்து நின்ற கௌதம் அவளை பார்க்க ஜனனி, ” நாமா போலாமா”…என்று வருணிடம் கேப்பது போல அவனுக்கு நாங்கள் கிளம்புகிறோம் என்று சொல்லாமால் சொல்லி கிளம்பும் தயாராக..
கௌதம் கையை மார்பில் கட்டியபடி அவளையே ஒரு வித அழுத்தமாக பார்த்து,”போறதுக்கு முன்னாடி அந்த டேபிளில் இருக்கற பேப்பர்ரா பார்த்துட்டு போ” என்றான்….
அதில் என்ன பூகம்பம் காத்து இருக்கிறதோ என நினைத்து கொண்டே மெல்ல அந்த கடிதத்தை எடுத்து படித்தவள் இடிந்து போனாள் இப்படி ஒரு இடியை கௌதம் தன் தலையில் இறக்குவான் என்று அவள் எதிர் பார்க்கவில்லை…
ஒரு முறைக்கு இரு முறை படித்து பார்த்தாள் அதே வார்த்தைகள் தான், அந்த பேப்பரில் இருந்தது, ” என் காதல் வாழ்க்கைக்கு என் மகன் குறுக்கே இருப்பதால் எனது மகன் வருண் கிருஷ்ணா அவன் தந்தை கௌதம் கிருஷ்ணா விடம் வளர நான் சம்மதிக்கிறேன்….என்னால் வருணை கவனித்து கொள்ள இயலாது…இது நான் நல்ல மனநிலையில் தான் எழுதுகிறேன்…இனி என் மகனை உரிமை கோரி எங்கேயும் செல்ல மாட்டேன் என்று எழுதி இவள் கையொப்பிட்டு இருந்தாள்…
நான் இது எப்படி நம்பமாட்டேன் நான் இது எழுதி குடுக்கல என்று அழுது கத்த போனவளை கை உயர்த்தி தடுத்து வருணை பார்க்கும் படி கண் அசைக்க அவள் அமைதியானாள்… பின் வருணை அழைத்து வருணின் விளையாட்டு அறையை காட்ட குழந்தை அந்த இடம் பிடித்து போக அதில் மூழ்கினான் ….
அவளது கோபத்தை காட்டிலும் அதிக கோபத்துடன் வெளியே வந்து அவளை உற்று நோக்கி கௌதம் ,”என் பையன் முன்னாடி அழுது ஆக்ட் பண்ணி அவன் மைண்ட்ல சிம்பத்தி கொண்டு வரலாம்னு ஐடியாவா” என்றான்…
கௌதம், “இனி அவன் முன்னாடி என்கிட்ட உன் சத்தம் அதிகம் வந்துச்சு”… என கழுத்து இருக்காது என்பது போல அவள் சங்கு கழுத்தை வெறித்தான்…
இது பழைய கௌதமை நினைவு படுத்த , மறுபடியும் பயந்து “நான் இது எழுதவே இல்ல ..ஏன் இப்படி பண்றீங்க நீங்க வேண்டாம் ..என்று தானே தான் தனியா இருக்கேன் ..அப்புறம் ஏன் இப்படி எல்லாம் செய்யுறீங்க “…மெதுவாக அதே சமயம் அழுது கொண்டே கேக்க,
கௌதம், “கொஞ்சம் உன் அழுகையை நிறுத்து …இனி அழுத….நீ எழுதினேன்னு நானும் சொல்லலேயே”…. என்றான் கூலாக…அவள் பேந்த பேந்த விழிக்க,
கௌதம், ‘தனியா வாழனும்னு என்றால் நீ மட்டும் போய் தனியா இரு…என் பையன் இனி என்கூட தான் இருப்பான்” என்று தீர்க்கமாக கூறிவிட்டு ரெடி ஆக சென்று விட்டான்….அவளோ அழுவதா வேண்டாமா மேற்கொண்டு என்ன செய்வது என்று யோசிக்க கூட முடியாமல் செய்து விட்டான் கௌதம்…..
அவன் கூறி சென்றதும் பொத்தென்று அங்கே கிடந்த சோபாவில் அமர்ந்து வெறித்தாள்…நான் எப்போது கையெழுத்து இட்டு கொடுத்தேன் என்று யோசிக்க வீட்டை விட்டு வெளியே வரும் நேரம் வெற்று காகிதத்தில் கையொப்பம் இட்டது நினைவு வர தன்னுடைய மடத்தனத்தை எண்ணி அவளுக்கே அவள் தலையில் கொட்டலாம் என்று இருந்தது…
அதிலும் கௌதம் என்ன எல்லாம் எழுதி சேர்த்து இருக்கிறான் என்று நினைக்க நினைக்க அவளுக்கு எரிந்தது…. இந்த சூழ்நிலையில் அவனிடம் சண்டை இட முடியாது…அவளது மனசாட்சியோ எந்த சூழலிலும் உன்னால் அது முடியாது என்றது…அதை எல்லாம் அவளால் இப்பொழுது உணர முடியாது…காரணம் வருண்….என் பையன்…என் உதிரம் எனக்கு வேணும் என்ற முடிவோடு அவனுக்காக காத்து இருந்தாள்….
