அரசனின் அழகி
அரசனின் அழகி 19
அன்பு தன் காதலை சொல்லி அவளை ஆட்கொண்ட பிறகு.. அவ்வளவு மகிழ்ச்சியாக இருந்தான் ..ஆனால் தன் தங்கையின் வாழ்க்கையை குறித்து கவலை அவனை செல்லாய் அரித்தது.. அதை மறைக்காமல் தமிழிடம் சொல்ல..அன்பு மார்போடு ஓட்டிக்கொண்டவள்..
உங்களுக்கு எங்க அண்ணனப்பத்தி தெரியாது? அதான் பயப்படுறிங்க ..அவனுக்கு நேர்த்தி எப்படி முக்கியமோ? ..அதேமாதிரி அவனுக்கு சொந்தமான பொருளை யாருக்கும் எதுக்காகவும் விட்டுக்கொடுக்க மாட்டான் அது சின்ன பேனாவா இருந்தாக்கூட..அண்ணி எப்போ அவன் வாழ்க்கைக்கும் போனாங்களோ ?அப்போதே அவுங்க அவன் சொந்தம் ..ஒன்னு அவனுக்கேத்தாப்ப அவுங்கள வளைக்க பாப்பான. இல்ல அவன் வளைஞ்சி போவான்.. இது உங்க தங்கச்சி அவக்கிட்ட நடந்திக்கிற முறையில்தான் இருக்கு..இப்ப நா உங்கள் ஏத்துக்கிட்ட மாதிரி சீக்கிரம் அவுங்க வாழ்க்கையையும் மாறும் என்றாள்..
தன் மனைவி சொல்வது உண்மையே ..ஆனால் தங்கை அரசுவுக்கு பிடித்த மாதிரி நடந்து கொண்டு வாழ்வாளா? என்பது சந்தேகமே அவனுக்கு..அவன் அறிந்த தங்கை சுட்டிப்பெண்,அதேசமயம் தன்மானம் பார்க்கிறவள்..ஒருவர் நல்லமுறையில் அவளிடம் நடந்தால் அன்பையும் அவர்களுக்காக உயிரையும் கொடுப்பாள் ..அதேசமயம் தன்னை அவமானப்படுத்த நினைத்தால்..கண்ணுக்கு கண்,,பல்லுக்கு பல்தான்..அவள் நடைமுறையில் இதை அறிந்த அன்புவுக்கு கலக்கமாகவே இருந்தது ..ஆனால் தங்கை எது செய்தாலும் அவள் பக்கத்தில் தான் நிற்க வேண்டும் என நினைத்தான்..
ஆனால் நிலா அரசுவை தூக்கி போட்டுவிட்டு தன் பிறந்த இடம் வரும் போது ஏற்றுக்கொள்வானா?அன்பு…
அன்புடன் வாழ்க்கை காதலோடும் காமத்தோடும் ஒவ்வொரு நாளும் தங்கள் வாழ்க்கையை அழகுக்கு அழகு சேர்த்தனர்..
எவ்வளவு வேலையாக இருந்தாலும் இவளோடு ஒரு வேலை உணவாகிலும் கண்டிப்பாக உண்பான்..இரவு அத்தனை விஷயத்தையும் அவளிடம் பேசுவான் ..தன்னால் முடிந்த உதவியை அவளுக்கு செய்வான்..முக்கியமான முடிவுகள் அவளிடம் கேட்டு முடிவு எடுப்பான்.. மொத்தத்தில் அவளை தன்னில் பாதியாக..தன் அங்கமாகவே நினைத்து அவளுக்கு மதிப்பையும் மரியாதையும் கொடுத்தான்..
தமிழும் வள்ளுவனுக்கு ஏற்ற வாசுகியாய் .அவன் முழு அன்புக்கும பாத்திரமானாள் ..அவன் அன்புக்கு பதில் அன்பு செலுத்தினாள்..ஓய்வு நேரங்களில் ஆலைக்கு சென்று கணக்கு வழக்குகள் பார்ப்பது..அங்குள்ளவர்களிடம் அரட்டை அடிப்பது என நாட்கள்..செல்ல..ஊருக்கு போன ராதாவும்..இவளோடு வந்து இவளை தாங்க சந்தோஷம் குறைவில்லாமல் இருந்தது இவர்கள் கூட்டில் ..
இங்கு சென்னையில் அரசு அவளை வழக்கமாக காலேஜ் கூட்டிச்சென்றான்..ஒருநாள்கூட சேர்மனிடம் இருந்து போன் வராமல் இருந்ததே இல்லை ..எதையாவது செய்து வைப்பாள்.. இவன் எப்படியோ சேர்மனை சரி கட்டுவான்..
திருமணம் முடிந்து ஒருமாதம் சென்றிருந்தது ..காலை அரசு கிளப்பிக் கொண்டிருக்க..அவனிடம் வந்த நிலா..
“அரசமரம் கல்யாணம் முடிஞ்சி ஒருமாதம் ஆச்சு ..நீ என்னமோ ஓடவிடுவேனு சொன்ன ஒன்னையும் கானும்.”.என அவனை இடித்துக்கொண்டு மேஜையில் இருந்த அவன் செண்டை எடுத்துப்போட..
“ஏய் அழுக்கி உன்ன எத்தனை தடவை சொல்றேன் என் பொருளைத் தொடாதனு கேட்க மாட்டியா?..”
“அது நீ இப்படி காலையிலேயே என்ன திட்டினாதான் எனக்கு அந்த நாள் நல்ல நாளா அமையுது என்ன செய்ய அரசமரம் ..சரி சரி சீக்கிரம் சொல்லு எப்ப எங்க ஊருக்கு அனுப்பிவிடுவ.?. “
அவனுக்கு அவளை எப்போதும் பிடிக்காது இப்பவும் அப்படிதான் ..ஆனால் அவள் போகிறேன் என்று சொன்னால் மட்டும் இவனுக்கு பேய் பிடித்துவிடும் ..எதுவாக இருந்தாலும் நான்தான் முடிவு எடுக்க வேண்டும் ..அவள் சொல்லி தான் எதற்கு அவளை அனுப்ப வேண்டும் என அவளை விடாமல் வைத்திருகக்கிறான்..மொத்தத்தில் அவனும் அனுபவிக்கமாட்டான் அவளையும் அனுபவிக்க விட மாட்டான் ..வேறு யாரையும் அவளை அனுகவும் விட மாட்டான்.. அவள் அவனுடையப் பொருள் என்றே நினைத்து வைத்திருக்கிறான்..
“எதுக்கு உங்க ஊர்ல அப்படி என்ன வேலை வச்சிருக்க ?இப்படி அவசரப்பட்டு போக..”
“என்ன அரசமரம் இப்படி சொல்லிட்ட ..?கருத்தமச்சான பாத்து செட்டில் ஆகதான்..நமக்கு இந்த ஊர் செட் ஆகாது ..கருத்த மச்சான் கூட புல்லட்ல டுடடுபுனு மாமேன் தோள்ள கைவச்சி போகனும்..வயக்காட்டுவழி தெம்மாங்கு பாடிக்கிட்டே போகனும்”…
அவனுக்கு இவள் இப்படி சொன்னாள் போதும் ஹை பீரசர் ஏறிவிடும் ..அப்படி என்ன என் முன் இன்னொருவனை உயர்த்தி பேசுகிறாள் என வெறி வந்துவிடும்..
நிலாவும் வேண்டுமென்றே தான் அவனை சீண்டிக் கொண்டிருப்பாள்.. அவன் கோவப்பட்டால்..அவளுக்கு அல்வா சாப்பிடுவது மாதிரி..ரசிக்க ரசிக்க அவனை சீண்டி விளையாடுவாள்..அவன் எது செய்யாதே என்கிறானோ அதை செய்து விட்டுதான் மறு வேலைப்பார்ப்பாள்..
இந்த வீட்டை விட்டு போகும் எண்ணம் எல்லாம் அவளுக்கு. இல்லவே இல்லை..அரசுவைப்பிடிக்காது.. மற்றப்படி மற்றவர்கள் மேல் உயிரையே வைத்திருந்தாள்.. அதுவும் சிட்டூ என்றால் தன் தாயாக ,தோழியாக,அத்தனையாகவும் அவள் மனதை நிறைத்திருந்தாள்..
இவர்களிடம் யார் சொல்வது? பிடித்தத்திற்கும் வெறுப்பிற்கும் ஒரு நூலிழை வித்தியாசமே என்று..
இந்த வீட்டை விட்டு போகும் எண்ணம் இல்லாதவள்..அத்தனை உறவுகளையும் விட்டுவிட்டு வெளியே செல்வாள் என்று சொன்னால் நம்புவார்களா?.
இருவரும் கிளம்பி காரில் வர அரசு அந்த கோவில் பக்கத்தில் வண்டியை நிறுத்தினான் ..நிலா தினமும் அங்குள்ளவர்களுக்கு உணவு கொடுப்பதை வழக்கப்படுத்தி இருந்தாள் ..அரசுவும் அந்த இடம் வந்த உடன் வண்டியை நிறுத்தி அவள் வரும் வரை காத்திருப்பேன்..
பிடிக்காது பிடிக்காது என்று ஒருத்தரைப் பற்றி ஒருத்தர் நன்றாக தெரிந்து வைத்துக்கொண்டு.. பிடிக்காதது மட்டும் தேடி தேடி செய்தனர்..
காலேஜ் இறக்கி விட்டவன்..”இன்றைக்கு என்னடா பன்னி..சேர்மன ஓட விடலாம்னு ஐடியால இருக்கியா அழுக்கி?”..
“இன்னும் முடிவு பன்னல அரச மரம்..ஈவினிங் கிரவுண்டில் இருப்பேன் வந்து கூட்டிட்டுப்போ”..
“எங்க நீ ஈவினிங் வர இருக்க போற?.. அதுக்குள்ள இடையில எதாவது செஞ்சு எனக்கு போன் வரப்போகுது..நான் வந்து உன்ன கூட்டிட்டு போக போறேன்”..இதானே ஒரு மாசமா நடக்குது..
“ரொம்ப நல்லா தெரிஞ்சிவச்சிருக்க அரசமரம் ..இன்றைக்கு மதிய சாப்பாட்டுக்கு பிறகுதான் ஏதாவது செய்யலாம்னு இருக்கேன் அதனால ..மதியத்துக்கு மேல் தான் எமதர்மன் போன் வரும்” பாய் என்று குதித்தபடி உள்ளே ஓடி விட்டாள்..
“அது எப்படிதான் புதுசுபுதுசா பிரச்சினை கண்டுபிடிச்சி பன்றாளோ?..குரங்கு பிறவி..எப்படி தான் இவகூட சமாளித்து போறேனு எனக்கே தெரியல?..சீக்கிரம் டிவோஸ் பன்னனும் ..இவ கூட இன்னும் கொஞ்ச நாள் இருந்தா எனக்கு கிறுக்கு பிடிச்சிரும்”.. என நினைத்துக்கொண்டு கிளம்பினான்..
இன்று அவள் வேண்டாம் என நினைப்பவன் ..அவள் இன்றி தான் இல்லை என்று சோறு தண்ணீர் இன்று கிறுக்காக அலையப்போகிறான்…
அவள் சொன்னதைப் போலவே மதியம் ஒரு மணிக்கு போன் வந்தது அரசுக்கு..நிலா அவள் வகுப்பு மாணவர்கள் அனைவரையும் கூட்டிக்கொண்டு கிரவுண்டில் விளையாட சென்றுவிட்டதாக சொல்ல..பல்லைக்கடித்து கோவத்தை கட்டுப்படுத்தியவன்..வந்து கிரவுண்டில் பார்க்க ..அவள் மகிழ்ச்சியாக மாணவர்களோடு விளையாண்டு கொண்டிருந்தாள்..
அவளை பார்த்தவுடன் அவனுக்கு தோன்றியது.. எப்படி இவள் இவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறாள்?..எனக்கு எல்லாம் இருக்கிறது..நல்ல குடும்பம் ,பணம்,வசதி ஆனால் ஏன் என் மனதில் சிறிய வெற்றிடம் இருக்கிறது..எனக்கு ஏன் மகிழ்ச்சி இல்லை? என்றுதான் தோன்றியது..அவளைக் கொடுமைப்படுத்த வேண்டும் என்றுதான் நினைத்தான்..ஆனால் இதுவரை அவளை வருத்திப்பார்க்க மனம் இல்லை..சண்டையிட்டாலும் அவளைப் பொறுத்துக் கொண்டு செல்கிறான்..
அவன் மனம் முழுமையாக ,மகிழ்வாக அவள் வேண்டும் ..அவன் அழுக்கி வேண்டும் என்று தெரியும் போது.. அவள் பக்கத்தில் இருக்கப்போவது இல்லை ..
அவனை அவன் அன்பை தெரியாமலே இவன் இதயத்தை பிடுங்கி தன்னோடு எடுத்துச் செல்லப்போகிறாள்..
அவளை நோக்கி சென்றவன்..வா போகலாம் என்று தரதரவென இழுத்துக் கொண்டு காரில் தள்ளினான்.. முடிவு எடுத்துவிட்டான்.. இந்த எருமைமாட்டை இனி மேய்க்க முடியாது ..இனி அவளை காலேஜ் அழைத்து வரவேண்டாம் என..
அழுக்கி நாளையில இருந்து நீ காலேஜ் வரவேண்டாம்.. எனக்கு உன்னப்பாக்கிறதே பெரிய வேலையா இருக்கு.என்ன வேல வெட்டி இல்லாதவன் நினைச்சியா ?இனி வீட்டை இருந்து என் உயிர வாங்கு ..என்று கத்தினான்..
“ஏய் அரசமரம் உண்மைதான் சொல்றியா? நீ எனக்கு பன்னின முத நல்ல விஷயம் இதுவாதான் இருக்கும் ..அது என்னவோ கணக்கு சூத்திரம்,ஜியாமண்டிரினு சொன்னாலே எங்காதில பேயி பீசாசு, இரத்த காட்டேறினு தான் விழுது .இனி நாளையில இருந்து ஆறு மணிக்கு முழிக்க வேண்டாம்” என்று அவன் முகம் பார்க்க
அவன் அந்த எண்ணத்திற்கு ஆப்பு வைக்கும் விதமாக ..காலேஜ்தான் வேண்டாம் சொன்னேன்.. பட் ஆறுமணிக்கே எழும்பி வோர்க்கவுட் பன்னனும் பாரு வயித்துல குட்டி தொப்ப இருக்கு ” ..
“என்னது மறுபடியும் ஆறுமணிக்கே எழும்பனுமா?..அதெல்லாம் முடியாது அதோட தொப்ப இருந்தா உனக்கு என்ன? ..அதுக்கு என் கருத்த மச்சான் தான் கவலைப்படனும் ..நீ” என்று ஏதோ சொல்ல வாய் எடுக்க..
அரசு அவள் கையை பிடித்து முறுக்கி இருந்தான் ..
“விடு அரசமரம் வலிக்குது” என்று மற்றொரு கை வைத்து அவனை அடிக்க ..
“இங்க பாரு என் முன்னாடி இனி இப்படி சொல்ற வேலைய வச்சிக்காத.. டிவோஸ் ஆகும் வர யூ ஆர் மைன்..சோ இங்க இருக்கிறவர யூ ஆர் மை பிராபர்டி.. புரியுதா?”..
அவளும் அவனை அடித்துக் கொண்டு.. “நீ சொல்றத கேட்க மாட்டேன் விடுடா..என்னயே அடிக்கிறியா ..நீ நைட் தூங்கும் போது உன் தலையில் கல்லத்தூக்கி போடுறேன் ..ஐ கேட் யூ..போடா “என்று கையை உறுவிக் கொண்டு ..திரும்பிக்கொண்டாள்..
அரசு சிரித்துக்கொண்டே..”நானும் கேட் யூ தான்டி அழுக்கி.. என்றவனுக்கு.”. அவளை சீண்ட மிகவும் பிடித்தது..
வீடு வந்து சிட்டூவிடம்..”அத்த இனி காலேஜ் போக வேண்டாம்னு சொல்லிடீச்சி அரசமரம்..”என்று சிட்டூவைக் கட்டிக்கொண்டாள்..(உங்க இரண்டு பேருக்கும் டிவோஸ் கொடுத்தா எல்லாம் சரியா போகும்)..
“ம்ம் என்டி மருமகளே இத சொல்ல வைக்க உனக்கு ஒரு மாசம் ஆச்சா?.. நானா இருந்தா ஒரு நாள்ல்ல சொல்ல வச்சிருவேன்..உனக்கு இன்னும் பயிற்சி தேவடி “என்று பேசிக்கொண்டே உள்ளே செல்ல ..இதைக்கேட்டுக்கொண்டு இருந்த அரசு கூட்டுகளவானிக என்று திட்டிவிட்டு அறைக்கு சென்றான்..
இவர்கள் நாட்கள் சண்டையில் தொடங்கி சண்டையில் முடிய ..முடிவே இல்லையா ?என்பது போல் எல்லாவற்றிற்கும் முடிவு கட்டும் ஒரு நாளும் இருக்கும் அல்லவா?
வந்தது அந்த நாள் அரசு தன் காதலை புரிந்து கொள்ள..நிலா தனக்கும் அவனுக்கும் காலத்திற்கும் ஒத்துவராது என முடிவு எடுக்க..
உன் மேல் நான் கொண்ட
வெறுப்பு விருப்பாக மாறுமோ?..
கள்ளி நீ கள்வனைக் களவாடிச் செல்வாயோ?..
அருகில் நீ இருக்க மகழ்வை நான் எங்கோத் தேட..
நீதான் என் புன்னகை என்பதை
காலம் எனக்கு உணர்த்துமோ?..
இல்லை பிரிவு வந்து உணர்த்துமோ ?சகியே..
