அன்பனா? அரக்கனா..?!!!
மழைக்காலத்தில் காக்கும் குடையாய்…
வெயில் காலத்தில் வீசும் தென்றலாய்…
குளிர்காலத்தில் சூடேற்றும் போர்வையாய்..
இதம் அளிக்கிறாய்… நீ.. எனக்கு..!
இடை இடையே என்னைவிட்டு
தள்ளிச்சென்று இம்சை படுத்துகிறாய்..!
முத்தத்தில் மொத்தமாக என்னை
விழுங்கி… மூச்சு முட்ட முட்ட
திகட்ட செய்கிறாய்...!
முகத்தில் அறைந்தாற்போல்
பேசி… உன் மூச்சுக்காற்றுகாய்
ஏங்கவும் வைக்கிறாய்…!
சில நேரம்,மயிலிறகாய் வருடி
எனது மயிர்க்கால்களைச்
சிலிர்க்க செய்கிறாய்…!
பல நேரம், மிருகமாக மாறி
பெண்மானை விரட்டி…
வேட்டையாடி வேதனைப்படுத்துகிறாய்..!
இந்த முரண்பாடு…ஏனோ முரடா??
பட்டென்று , இந்த
பைத்தியக்காரிக்கு உணர்த்திவிடு…
நீ அன்பனா? அரக்கனா??? என்று…!!!
-ஸ்ருதி ஆதி
This…Kavithai.. dedicated to…my suja ma’s💚… favorite…story….’anniyane enai aarathithu vidu..!’…hero agniiii😍
