அடிக்க வரவா…
அவள் உறங்கிக் கொண்டிருந்தாள்.
திடீரென்று ஒரு உந்துதல் விழிப்பு வந்தது.
கண் முழித்துப்பார்க்க எதிரே ஒரு உருவம். உற்றுப்பார்க்க அது நகர்ந்தது.
இவள் எழுந்து படுக்கை விட்டு இறங்கி பின்னே செல்ல அது ஹாலுக்கு சென்று அங்கிருந்து வெளியேறியது.
இவளும் பின்னே செல்ல அது கேட்டை தாண்டி செல்ல இவளும் கேட்டில் கைவைத்து திறக்க அது அவளை சிவந்த விழிகளால் திரும்பி பார்க்க அவள் பயத்தில் அங்கேயே மயங்கி விழுந்தாள்.
காலை கண்விழிக்கும்போது அவளின் படுக்கையில் இருந்தாள். எப்படி இங்கு வந்தேன் என யோசித்தும் ஒன்றும் தெரியவில்லை.
சரி அம்மாவிடம் சொல்வோம் என சமையலறை செல்ல அங்கு அம்மா இல்லை. சரி அப்பாவிடம் சொல்வோம் என அவர் அறைக்கு செல்ல அங்கு அவரும் இல்லை.
என்னடா இது யாரையும் காணோம் என்று இவள் ஹாலுக்கு செல்ல அங்கே அனைவரும் சோகமாய் அமர்ந்திருந்தார்கள்.
அம்மா மட்டும் அண்ணனுக்கு ஏதோ ஒத்தடம் கொடுத்துக்கொண்டிருந்தார். இவள் சொல்ல வந்த விஷயம் மறந்து அட அண்ணனுக்கு என்னாச்சு என்று அவன் அருகில் போய் அமர்ந்தாள்.
அவன் இவளை முறைத்தான். என்னாச்சு எந்த பொண்ணுகிட்ட உதை வாங்கிட்டு வந்த என ரகசியமாக கேட்க அவன் இவளை அடிக்க வந்து பின் திரும்பி அம்மாவிடமே போய் விட்டான்.
என்ன ஆச்சரியம். என்னை அடிக்காமல் போகிறானே என வியந்தாள். மோடி ஆட்சியில
