அசுரனின் காதல் வதம்

This entry is part 4 of 6 in the series அசுரனின் காதல் வதம்

அசுரனின் காதல் வதம்

அசுரனின் காதல் வதம்

அசுரனின் காதல் வதம்

அசுரனின் காதல் வதம்

அசுரனின் காதல் வதம்

அசுரனின் காதல் வதம்

அசுரனின் காதல் வதம்

அசுரனின் காதல் வதம்

அசுரனின் காதல் வதம்

அசுரனின் காதல் வதம்

அசுரனின் காதல் வதம்

அசுரனின் காதல் வதம்

அசுரனின் காதல் வதம்

4
அசுரனின் காதல் வதம்!!

வெளியே சத்யாவிற்கு வேலி போடுவதற்கு, டவுசர் பாண்டி தலைமையில் பஞ்சாயத்து ரெடி ஆகிக் கொண்டிருந்தது…

 “இவன் மொட்ட பயலா இருக்கிறதாலதான் ஊரையே தன்னோட கைக்குள்ள வச்சிருக்காம்லேய்… அதனால என்ன நடந்தாலும் சரி, இன்னைக்கு அவளை ஒரு வழி பார்த்து கட்டி போட்டுடணும்.. என்ன நான் சொல்றது??” என வெள்ளை முடி தலைவர் பேச்சை ஆரம்பித்தார்..

“சண்டியர்  நாம சொன்னா கேட்பானா, அருவா எடுத்து வெட்டி விட்டுடாம..அவன் செய்வதுதான் சரின்னு சொல்லுவான்..”

“அதுக்கு தாம்லேய், வீட்டுக்கு நூறு ரூபாய் கொடுத்து எல்லோரையும் கூட்டிக்கொண்டு வச்சிருக்கு…  எத்தனை நாள்தான் அவன் காலுக்கு அடியில் கிடந்த சாவிங்க..  வட்டிக்கு பணம் வாங்கி நம்ம மொத்த ரத்தத்தையும் உறிஞ்சிக்  குடிக்க பார்க்கிறான்.  ஒரு நல்லநாள் பொழுது கொஞ்சம் கெடா எடுத்து சாப்பிட முடியுதா? இவனுக்கு வட்டி கொடுத்தே நம்ம குடும்பம் வறுமையில் வாடியது…  இவன் மட்டும் குடியும் கும்மாளமுமாக வாழ்றான்…. இன்னைக்கி விட்டோம், இனி சண்டியரை என்னைக்கும் பிடிக்க முடியாது..  அதனால எல்லாரும் மூடிக்கிட்டு ஒரு இடத்தில உட்காருங்க..  நான் கண்ண காட்டு போதும், மொத்தமா சேர்ந்து அவனுக்கு எதிரா பேசுங்க ..வழியே இல்லாம சண்டியன் அடங்கி தான் ஆகணும்” என்று ஒரு பெரிய தலை சத்தம் கொடுக்கவும்.. டவுசர் பாண்டி கொஞ்சம் போதை இல்லை , மூக்கு முட்ட போதை 

“லேய் என் பொண்ணுக்கு ஒரு கதையை சொல்லுங்கடேன்னு, உங்களை கூட்டிட்டு வந்தா அவன் அவன் ,அவன் சோக சொல்லிக்கிட்டு இருக்கீங்க..  என் பொண்ணு வாழ்க்கையை நாசம் பண்ணிட்டான்னு நான் இங்கே முக்காடு போட்டு உட்கார்ந்து இருக்கேன்.. “


“டவுசர் பாண்டி சும்மா போதையை போட்டுட்டு தளும்பாத..  உன் மகள் தான் இந்த ஊரைக் காக்க வந்த தெய்வமே!!அவள்தான் நாம இனி சண்டியரே பொட்டி பாம்பா அடக்கணும்..  இல்லனா நாளைக்கு நம்ம பிள்ளைகள் டவுசர் துணி கூட போட முடியாம கோவணத்தோடு அலைய விட்டிடுவான்.. இவனுக்கு வட்டி கட்டியே நாம சீரழிய போறோம்”..

“என் பொண்ணு வாழ்க்கைக்கு ஒரு வழிய ஏற்படுத்திக் கொடுத்தா சரிதேன்”..என்று டவுசர் பாண்டி.. டவுசரில் இருந்து ஒரு சரக்கை எடுத்து கீழே தட்டி மூடியை துறந்து குடிக்க ஆரம்பித்தார்..

துரை மல்லிகாவை கூப்பிட்டு அனைவருக்கும் காபி கொடுக்க சொல்ல.. காப்பி பட்டுவாடா நடந்தது பெண் பார்க்கும் படலம் போல…

காலையில் சோம்பல் முறித்து எழும்பிய சத்யா காலை கீழே வைக்கவும் ஆரா கீழே கிடந்தாள் ..

“இந்த அணில் குட்டி ஏன் இங்க வந்து படுத்திருக்கா.. ஓஓஓ பேய் , பூதம் கண்டு பயந்து வந்துட்டா போல சின்ன பாப்பாதான அதான் பயப்படுது ..நாமன்னா பேய் கிட்ட வட்டி டீலிங் பேசிடுவோம், எல்லாரும் நம்மள போல தைரியமா இருப்பாங்களா…இது என்ன வெளிய மீன்மார்கெட் போல சத்தம் கேட்குது” என்று கதவை திறந்து வந்தான் சத்யா..மேலே வெள்ளை பனியன், கீழே லுங்கி தலையை ஒரு கையால் வாரியபடி நடந்து வந்தவனை பார்த்ததும் எல்லாம் அங்கும் இங்கும் ஒளிய இடம் தேடினர் பயந்து…

“மாமா இந்த சல்லிபயல்கள உள்ள விட்டது யாருடேய்?” என்றான் ஒரு காப்பியை எடுத்து குடித்து கொண்டு..

“டேய் சத்யா பஞ்சாயத்து பண்ண வந்திருக்காங்கடேய்..”

“நான் என்ன சத்திரமா நடத்துறேன், ஊர் பஞ்சாயத்து நடக்க என் அரண்மனையை கொடுக்க ..இவன்கள காலி பண்ணுடேய் மாமா”…

“எப்பா சத்யா உன் மேதான்டே புகார்…”

“இந்த சண்டியர் மேல எவன்டேய் புகார் பண்ணினது”.. என்றவன் ஒற்றை புருவம் தூக்கியதில் அத்தனைக்கும் பித்தட்டம்  கலங்கி விட்டது…

“அது சாமி நம்ம பொண்ணு ஆரா!!”

“உன் பொண்ணுன்னு சொல்லுடேய் அது என்ன என் பொண்ணுன்னு பொது மொழி போடுற.. சொத்துல பங்கு கேட்க பார்க்கிறீயோ”… என்றவன்..

“லேய் ரன்வீர் கேட்டை இழுத்து மூடு..இன்னைக்கு பஞ்சாயத்து பண்ண வந்தவன்களுக்கு நான் பஞ்சாயத்து பண்றேன்” என்றதும் அரண்மனை கதவு மூடபட்டது தடியர்களால்..

“குளிச்சிட்டு வந்து வச்சிக்கிடுறேன்லேய் உங்கள..பஞ்சாயத்தா பண்றீங்க இந்தா வாறேன்…மாமா ஒரு நாதி வெளிய போவ கூடாது..வெளிய கால வச்சா, கரண்ட   கால்ல ஒரு வெட்டு போடு..எப்படி போறான்கன்னு பார்க்கிறேன்..”

“சரிடே சத்யா..அந்த பொண்ண எங்கடேய்..”

“என் ரூம்லதான் தூங்குறா”.. 

“மல்லி அக்காவ எழுப்ப சொல்லட்டா” 

“இங்க வெட்டி முறிக்கிற வேலையா அணிலுக்கு முழிச்சு வருவா .. வரும் போது பார்க்க சொல்லுடேய்..இவன்களுக்காக அவ தூக்கத்தை கெடுக்க முடியாது”.. என்றுவிட்டு அறையை நோக்கி லுங்கியை ஒரு காலால் தூக்கி கட்டி கொண்டு பஞ்சாயத்தையே அலற வைத்து விட்டு அதே அறைக்குள் சென்றுவிட்டான்…

அறையில் அணில் இன்னும் கனவு உலகம் விட்டு வெளியே வராமல் நல்ல தூக்கம் அவள் இருப்பதையே கவனிக்காமல் குளிக்க சென்றவன்.. குளித்து விட்டு வெளியே வந்து சட்டையை மாட்டி கொண்டிருக்கவும்,ஆரா மெல்ல எழும்பி உட்கார்ந்து சத்யா முகம் பார்த்து வெட்கம் கொண்டு  குனிந்து கொண்டாள்…


“என்ன அணில் செம தூக்கம் போல”… என்றான் கண்ணாடியில் அவளை பார்த்து கொண்டே..

“ஆமா சத்யா மாமா லேட்டா தூங்கினேன், அதான் முழிக்க லேட்டாகிடுச்சி..”

“இது என்ன புதுசா மாமா சொல்ற” என்றான் மீசையை சீவியபடியே..

“நீங்கதானே அண்ணா வேண்டாம் சொன்னீங்க அப்ப என்ன சொல்றது..”

“இதுக்கு அண்ணன் கூட பரவாயில்லை. போல அணில்..”

“என்ன நீங்க மாத்தி மாத்தி சொல்றீங்க நான் மாமான்னு பிக்ஸ் பண்ணிட்டேன்,. இனி சத்யா மாமாதான்..”

“அவளை ஒருமாதிரி பார்த்தவன்.. அப்பா டவுசர் பாண்டி பணத்தோட வந்துட்டான் போல..பரவாயில்லை உன் மேல பாசம்தான்.. ராவே பணத்தை ரெடி பண்ணிட்டான்.. நீ குளிச்சி எடுத்து வீட்டுக்கு கிளம்பி ரெடியாகு..”

“என்னது அதுக்குள்ள பணத்தை ரெடி பண்ணிட்டாரா..அய்யய்யோ!! அப்ப உங்க கூட இருக்க முடியாதா இனி”..என்று புதிதாக பிறந்த காதல் குழந்தை அழ ஆரம்பிக்கவும்..

“என்கூட நீ ஏன் அணில் இருக்கணும்.. பணம் வந்தா போவ வேண்டியதுதான.. போய் குளிச்சிட்டு சுத்தபத்தமா வா..அவன்க இருக்கான்கன்னு சாப்பிடாம கொள்ளாம வராத.. உன் வேலையை முடிச்சிட்டு மெதுவா வா அணில்..இவன்கயெல்லாம்.. ஒரு ஆளே இல்லை பார்த்துக்கலாம்…”

“சரி சத்யா மாமா”..என்று அவள் குளிக்க செல்லவும்

“ஏய் நில்லு நீ சத்யா சொல்லு மாமா சொல்லாத பிடிக்கல..”

“அது எப்படி இவ்வளவு வயசானவர சத்யா சொல்ல”..

“என்னடி நீ, நான் என்ன சுடுகாட்டுக்கு போற வயசிலேயா இருக்கேன்..  முப்பது வயசு தை வந்தாதான் வரும்…”

“ஐ அப்ப ஒன்பது வயசுதான் வித்யாசமா??”…என்றாள்..

என்ன வித்யாசம் அணில்..

“ஒன்னும் இல்ல சத்யாமாமா குளிச்சிட்டு வர்றேன்” என அவன் தோளில் கிடந்த துண்டை உருவிகொண்டு ஆரா ஓடினாள்..

ஏய் அது என் துண்டுடி..

“இனி எல்லாம் நம்மது சொல்லு மாமா” என பாத்ரூமிலிருந்து குரல் கொடுத்தாள் ஆரா…

“நீ பேசுறதே புரியலை போ”.. என்று நிதானமாக அமர்ந்து வட்டி கணக்கை பார்க்க ஆரம்பித்தான்.. 

குளித்துவிட்டு நெஞ்சுவரை கட்டிய உள்பாவடையோடு வந்தவள், சத்யாவை பார்த்து தன் உடலை மறைக்க துண்டை தேடிட.. அவள் சத்தம் கேட்டு நிமிர்ந்து பார்த்த சத்யா, மல்லு மாமி மாதிரி வந்து நின்ற அணில் குட்டியை பார்த்து, அவன்தான் பதறிப்போய் திரும்பி உட்கார்ந்து கொண்டான்..

“சண்டியர் இதுல மட்டும் பச்சை பிள்ளைதான் அதான் முதல் நாளே ஆசை வர வச்சிட்டார்”… என சத்யாவை மனதில் பாரட்டியவள்

“சாரி சத்யா மாமா,நீ இருந்தது பார்க்கலை, அதான் அப்படியே வந்துட்டேன்.. போட்டுக்க துணி இல்லை  எல்லாம் அழுக்கா இருக்குது…”

“அதுக்கு இப்படியா அணில் வருவ..உள்ள இருந்து கேட்டா எதையாவது எடுத்து தர மாட்டேனா.. குளத்துல குளிக்கிற மாதிரி இடையில கட்டிட்டு வந்து நிற்கிற..”

“நீங்க இருக்கிறது எனக்கு எப்படி தெரியும்”.. 

வுடு வுடு… நான் எதாவது எடுத்து தர்றேன் என்று சத்யா திரும்பவும்,ஆரா வந்து அவன் மேல் விழுந்தாள் ஈரத்தோடு.. 

“ஏய்ய்ய்ய்ய்ய்… எழும்பு அணில்”…. என்றான் கண்களை இறுக மூடியபடி..

“முடியல சத்யா மாமா “என்றாள் அவன் மேல் வேண்டுமென்றே ஒட்டி கொண்டு.. அவன் விலகி பெண்மையை ஆராதித்து நடப்பது ஆராவுக்கு அத்தனை பிடித்தமாக இருந்தது.. அதுவும் இவளிடம் லேகுவாக பேசுவது பயத்தை புறந்தள்ளி  சலுகையை கொடுத்தது..இப்படி சத்யாவோடு ஒட்டி உறவாடுவது பிடித்து போனது…கண்களை மூடி முகத்தை திருப்பி கொண்ட சத்யா..

இருங்க இருங்க நான் தள்ளுறேன்..

சரி தள்ளு விரசா சோலி கிடக்குது,,

தன் பூவரசம் காயை மெல்ல அவன் முகத்தில் வைத்து உரசியவளுக்கு இரவு நடந்த கனவு கூடல் நியாபகம் வந்தது இன்னும் அழுத்தி முகத்தில் தேய்க்க…

“என்னடி இது தலையணையை வச்சி முகத்தை உரசிட்டு இருக்க, சீக்கிரம் எழும்பு வெளிய  வேலை கிடக்கு”..

“தலையணையா.. வயசுக்கும் உருவத்துக்கும் இவர்கிட்ட என்னவோ யோசிச்சேன் இப்படி பால் குடிக்கிற சண்டியரா இருக்காரே”..

“மாமா இது தலையணை கிடையாது என்னோட அணில்”..

“அப்படின்னா!!” ..

“அப்படின்னா கை வச்சி பாருங்க புரியும்”…

“எனக்கு ஒன்னும் புரிய வேண்டாம்..எழும்பி போ முதல்ல காய்ச்சலுக்கு வர்ற மாதிரி உடம்பு உதறுது”..

ஆராதனா!! என்று பாண்டி சத்தம் கேட்டு சத்யாவை விட்டு எழும்பியவள் அவன் சட்டை ஒன்றை தூக்கி கொண்டு ஓடிவிட்டாள்..கண்களை திறந்த சத்யா…

“என்னது அது முகத்துல வந்து மோதிச்சி உடம்பு முழுக்க மின்னல் அடிச்ச மாதிரி இருக்குது…அவ அணில்னா என்னது..இத யாருகிட்ட கேட்டு தெளிபடுத்த.. எல்லா விஷயத்திலும் கில்லாடியாக இருக்கேன் இந்த பொண்ணுங்க சப்ஜெக்ட் மட்டும் புரியவே மாட்டைக்குது..புரிஞ்சி எதுக்கு..நமக்கு எதுவும் பொண்ணுங்க இடர்வாடு ,அந்த பக்கமே போகபோறது கிடையாதே!!” என்று சட்டையை உதறி கொண்டே வெளியே வந்தான்…

“சண்டியர் சட்டையெல்லாம் ஈரம் போல .. காலையிலேயேவா” என ஒருத்தன் இளிக்க.. ஓங்கி அவன்  குறுக்கில் மிதித்த சத்யா…

“நான் என்ன செஞ்சா உனக்கு என்னலேய்”..


“இ‌ல்லை சண்டியரே சட்டையில மஞ்சள்..  அதான் தெரியாம வாய்விட்டுட்டேன்..”

“மஞ்சள் வச்சா புது சட்டை கிடைக்குமாம் அதான் வச்சேன்”.. என்று ஹாலுக்கு போனவன்.. பெரிய தலை ஒன்றை இழுத்து கீழே போட்டு விட்டு நாற்காலியில் கம்பீரம் குறையாமல் அமர்ந்தவன்.. 

“சொல்லுங்கடேய் என்ன பிராது என் மேல…”

அது அது..

‘எவனாவது அழுது தொலைங்கடேய், அது அதுன்னு அவல் இடிச்சா என்ன அர்த்தம்”.. என்ற சத்யா கையை கழுவிவிட்டு சாப்பிட அமர்ந்தான்.. டவுசர் பாண்டி தைரியத்தை வரவழைத்து..

“என் பொண்ணுக்கு ஒரு நியாயம் தெரிஞ்சாகணும்..”

“முதல் மரியாதை படத்தை மல்லாக்க படுத்து பலதடவை பார்த்தியோ??” என்றான் மல்லி கொடுத்த தோசையை கறி குழம்பில் முக்கி தின்றபடி…

“லேய் யாராவது சாமியிட்ட பேசுங்கலேய் சண்டியர் பேச்ச பார்த்தா பயமா இருக்கு..”

பண்ணையார் வீரத்தை கடன்வாங்கி சத்யா எதிரில் வந்து அமர்ந்தனர்.

“பொட்டை புள்ளைய பணத்துக்காக தூக்கிக்கொண்டு வச்சு ராவு முழுவதும் உன் அறையில் வச்சிருக்க.. இது எவ்வளவு பெரிய கேவலம் தெரியுமாஅந்த பொண்ணுக்கு.. இனி அவளுக்கு யாரு வாழ்க்கை கொடுப்பா??”

“கொடுத்த பணத்தை தரலைன்னா, சத்யா கொள்ளுப்பாட்டிய கூட தூக்கிக்கொண்டு ரூம்ல வைப்பேன். அதை கேட்க இங்கே எவனுக்கும் நெஞ்சில உரம் இருக்கு..  துட்ட வாங்கிட்டு போனா கேட்கத்தானே செய்வேன்..”

“அதுக்கு வயசுக்கு வந்த பொட்ட புள்ள தூத்துக்குவியாடேய். என்னடா இது அநியாயமா இருக்கு. உன் கிட்ட பணம் வாங்குவதுக்காக எல்லாத்தையும் இழந்தாச்சு.. இதுவரைக்கும் பொண்ணுங்க மேல தான் கை வைக்காம இருந்த.. அதையும் செய்ய ஆரம்பிச்சுட்ட.. அதர்மம் தலை விரித்தாடுது.. இதைக் கேட்க ஆளே இல்லையா?”

“அதர்மம் தலை விரிச்சி ஆடினா.. அதுக்கு கொண்டை கட்டி … பூ வச்சிவிடு பெருசு..  அதை விட்டுட்டு .. இப்படி நடு வீட்டில உட்கார்ந்து என்ன குறை சொல்ற வேலைய வச்சுக்காத..  இன்னும் ஒரு வார்த்தை என்ன பத்தி ஏதாவது வந்துச்சு.. வாயில இருக்கிற மொத்த பல்லும் கொட்டி போகும் பாத்துக்கோ.  வயசானவன் எல்லாம் பார்க்க மாட்டேன்..  நெஞ்சில ஏறி நின்னு மிதிச்சிட்டு போயிட்டே இருப்பேன்”.. என்றான் சத்யா காப்பை மேலே தூக்கி விட்டபடியே..

“என்னடேய் எல்லாரும் அமைதியா இருக்கிங்க.. இன்னைக்கு பாண்டி வீட்டுக்கு நடந்த கதைதான் இனி நம்ம வீட்டுக்கும் நடக்கும் .. முதல்லயே இத வேரோட அறுக்கிறதுதான் நல்லது.. எல்லாரும் வாயை திறந்து பேசுங்கடேய்”  என்று மீசை கத்தவும் ஆளாளுக்கு சத்தம் போட ஆரம்பித்து விட்டனர்… 

“எவன் சொல்லியும்  எதையும் கேட்க மாட்டேன் முடிஞ்சதா பாருங்கடா..  பாண்டி 4 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் எடுத்து மேஜை மேல வைக்காம அணில  வெளியே வரமாட்டா..  என் கூட தான் இருப்பா என்னடே செய்விய?”

“என்ன சத்யா இது அந்த பொண்ணு வாழ வேண்டாமா.. “என்றார் ஒரு வயசான ஆசிரியர்..அவர் படிப்பின் மீது கொண்ட மரியாதையில் 

“அதுக்கு  என்ன செய்யணும்??..என்றான் தாடியை தடவிக்கொண்டே..

“அவள நீயே கல்யாணம் பண்ணிக்க..இனி அவள எப்படி வேற யாருக்கும் கட்டி வைக்க முடியும்..”

“அதானே ஓணான் எதுக்கு ஒன்னுக்கு போவுதுன்னு பார்த்தேன்.. கல்யாணம் கட்டி நீங்க சீரழியிறது பத்தாம என் வாழக்கையை சீரழிக்க ட வந்திங்களோ.. பணத்தை கொடுத்துட்டு  பொண்ண கூட்டிட்டு போ..இதுதான் முடிவு..சும்மா கல்யாணம் கட்டி வச்சி அவளுக்கு சாப்பாடு போட சொல்றீங்களா..போய்ஙகடா நொண்ணைகளா..நான் முரட்டு சிங்கிள்”… என்றான் கெத்து குறையாமல்…

“அது நீ என் பொண்ண தூக்ககுறதுக்கு முன்ன சாமி, என் பொண்ணு வாழ்க்கைக்கு ஒரு வழியை சொல்லுங்க..’

“வழிதான சொல்லிட்டா போச்சி,  அப்படியே நேரா போயி.. இடப்பக்கம் திரும்பி, வலப்பக்கம் திரும்ப சொல்லு .. அங்க பெரிய ஆறு ஓடுது அதுல போய் குதிக்க சொல்லிடு…”

“என்னடே இப்படி சொல்ற?முடிவு சொல்லுப்பா”..என்றார் ஆசிரியர் 

“என்கிட்ட கடன் வாங்குவது நீங்க.. காசு கொடுக்காம ஏமாத்துனது நீங்க, அப்புறம் நான் என்ன செய்யுறது.. கடனுக்கு பதிலா உன் பொண்ணு தூக்கினேன்.. நான் இப்படின்னு தெரிஞ்சு தானே என் கிட்ட கடன் வாங்குனிங்க.. இப்போ குறைசொல்ல கும்பலா வந்து உட்கார்ந்து இருக்கீங்களோ? அதுல உங்களுக்கு காப்பி வேற.. மாமா துரை, இதுல உட்கார்ந்து இருக்க அவ்வளவு பேரும் காபிக்கு பணம் கொடுக்காமல் வெளியே போகக்கூடாது”…


பஜ்ஜி வேற தின்னாங்கடேய்..என்றான் துரை மேல் தகவலாக, 

“ஓஓ அதுவேறையா? ஒரு காபி விலை 150 ரூபா,பஜ்ஜி ஐம்பது ஆக மொத்தம் 200 ரூபா‌ய்” என்றான் கந்துவட்டி காரன்…

“பைவ் ஸ்டார் ஹோட்டல்ல கூட  இவ்வளவு இருக்காதுடே..”

 “நான் கஷ்டப்பட்டு சம்பாதிச்ச பணத்தில், எவனுக்கு காப்பி வாங்கிக் கொடுக்கணும்னு அவசியம் கிடையாதுடேய்.. காசு  கொண்டுவராதவேன் ஜீபே மூலமா  காச குடுத்திட்டு வெளியே போக சொல்லு… இல்லையா, நம்ம வீட்ட கூட்டி பெருக்க சொல்லு நாலு நாள்.. எவன் வீட்டு பணத்துல எவன் திங்கிறது”.. என்று இவன் பஞ்சாயத்திற்கு தீர்ப்பு சொல்லிவிட்டான்..

“பொண்ணு பார்த்து கல்யாணம் கட்டி என்ன புதைகுழியில விழ வைக்க பார்க்கிறீங்களோடேய்.. இதுக்கெல்லாம் நான் விடுவேனா.. நான் சிங்கிள் சிங்கம் இபபடிதான் சுத்துவேன்”.. 

“இனி என் மகள வெட்டி தான் முக்கணும்!”  என்று பாண்டி தலையில் அடித்து அழ அரம்பிக்கவும் ..

“ஏய் பாப்பாவ பத்தி என்னடே சொல்ற,அது சின்ன புள்ள.. சாவு அது இதுன்னு” என்றான் கோவம் கொண்டு சத்யா..

“அதான் வாழ்க்கை நாசம் பண்ணிட்டியே இனி இருந்தா என்ன செத்தா என்ன”..என்று போட்ட போதையில் வீரம் கொண்டு வீம்பு பண்ணினார்..
 
“டவுசர் கிழிய போவுது,இடத்தை காலி பண்ணுடேய்”…

“நாலு லட்சம் பணத்தோட ,அவள வச்சி சோறு போட கூட நாலு லட்சம் தாரேன், கல்யாணம் பண்ணிக்க” என்றதும் ..சத்யா…

“நாலு லட்சமா,, எது உனக்கு அவ்வளவு பணம்..”

“கிழக்கால ஒரு புஞ்சை நிலம் இருக்கு ,அத வித்து தர்றேன் இனி அவள வாழ வைக்க முடியாது? நீயே கட்டிக்க..” 

“நாலு கூட்டல் நாலு எட்டு,, வட்டி ஒரு ஐம்பதாயிரம் இவளுக்கு சோறு துணிமணி ஒரு ஒரு லட்சம்.. படிக்க வைக்க எல்லாம் சேர்த்து பத்து லட்சம் வருமே பரவாயில்லையா..” என்றான் ராக்கெட் வட்டி போட்டபடி சத்யா… 

“சரி சாமி!!” …

“சரியா.. கேட்க நல்லாதான் இருக்கு, ஆனா எனக்கு கல்யாணம் பண்ண பிடிக்கலையே என்ன பண்ண.”..

“கூட ஐஞ்சு லட்சம் தர்றேன் சாமி.. என் மூத்த மகளுக்கு கல்யாணம் பண்ண சேர்த்து வச்ச நகை கொஞ்சம் இருக்கு அதையும் தர்றேன்” .. 

“அப்படியா சொல்லற !!”என்று சத்யா யோசனையாக நிற்கவும்..துரை வந்து…

“டேய் ஓவரா யோசிக்காத, பதினைஞ்சு லட்சம் வீட்டுக்கு வேலை செய்ய.. கூட்டி மொழுக ஒரு பொண்ணு, ஒரு நாள் வீட்டுல பொண்ணு இருந்தாலே எப்படி திவ்வியமா இருக்கு அதுக்காகவாவது அவள வாங்குடேய்”..

“அப்போ வாங்கலாமாடேய்..”

“வாங்கு வாங்கு நமக்கு இரண்டு பங்கு லாபம்தான்.. “

“இந்த டவுசர் பாண்டிக்கு அவ்வளவு சொத்து இருக்கா என்ன?? ..”

“ஆமாடேய் அவன் நிலத்துல இருக்குற மலை கிரானைட் மலைன்னு சொல்றாங்க.. உன்கிட்ட வந்துச்சுன்னா, பத்து லட்சம் கோடியா பெருகி போகும்..  அதனால வீட்டுக்கு வர்ற மகாலட்சுமியை அப்படியே கமுக்கமா அள்ளிக்கிட்டு வந்துடுடேய்..”

” நீ சொல்றது எல்லாம் நல்லாதான் இருக்கு மாமா, ஆனா எனக்கு இந்த கல்யாண வாழ்க்கையில் எல்லாம் நாட்டமே இல்லை.. அது என்னவோ பொண்ணு, கல்யாணம்னு சொல்லவே எனக்கு குமட்டிக்கிட்டு வருது.. என்ன பண்ணலாம்” ..

“அவ ஒரு ரூம்ல இருக்க போறா, நீ ஒரு ரூம்ல இருக்க போற.. இதுல என்னடா வந்தது..”

 “அப்படி இருந்தா சரிதான், ஆனால் இந்த அணில் அப்படி கட்டுப்பாடுடன் இருக்குமான்னு தெரியலையே .தாலியை கட்டுன உடனே  மேலே வந்து விழுந்துட்டா..”

” அதெல்லாம் நீ சொல்ற விதமா சொல்லி அவளை எல்லை தாண்டாம வச்சுக்கோடேய்.. பணம் முக்கியமா? இல்ல உன்னோட சிங்கிள் வாழ்க்கை முக்கியமான்னு யோசிச்சு முடிவெடு சத்யா..  இந்த மாதிரி எல்லாம் அடிக்கடி கிடைக்காது”..

” எனக்கு யோசனையா இருக்கு, ஒரு அஞ்சு நாள் கழிச்சு பதில் சொல்லவா” என்பதற்கு முன் பின்னாலிருந்து அவன் தோளை சுரண்டிய அணில் 

“இங்க பாருங்க சத்யா மாமா, இவ்வளவு அசிங்கமான பிறகு என்னாலயேயும் வெளியே தலைகாட்ட முடியாது..  அப்பா சொல்ற மாதிரி பணத்தை வாங்கிவிட்டு தாலியை கட்டி, இந்த வீட்டில் ஒரு ஓரத்தில் இருக்க வச்சீங்கன்னா உங்களுக்கு தேவையான வேலையையும் செய்துகிட்டு அப்படியே, படிக்கிற வேலையையும் நான் முடிச்சிடுவேன் கொஞ்சம் கருணை காட்டி அந்த மஞ்சள் கயிறு கழுத்தில் கட்டுங்களேன்”..

“உனக்காக  எல்லாம் கட்ட விருப்பமில்லை .. ஆனா உன்னை கட்டினா பணம் வரும்.. அதுக்காக தாலி கட்டலாம்” என்று நினைக்கிறேன் ..

“நினைச்சதே போதும் சத்யா.. லேய் டவுசர் பாண்டி அவன் ஒத்துகிட்டான்.. நிலத்து பத்திரத்தை எடுத்து கொண்டு வந்து சத்யா கையில கொடுத்து,வெத்து பேப்பர்ல கையெழுத்து போட்டு கொடு, அப்பதான் சிங்கம் தாலி மேல கைவைக்கும்..”

“போதும் சாமி!! இந்தா கொண்டு வர்றேன் “என்று சத்யா சொன்னது போல் கையெழுத்து பாண்டி போட்டு கொடுக்கவும்..மல்லி அக்கா ஆராவை எளிதாக அலங்காரம் பண்ணி கொண்டு சத்யா அருகில் விட்டார்.. 

“டேய் டவுசர் மாசம் மாசம் வட்டி கரெக்டா வந்திடுணும்..”

“சரி மாப்பிள்ளை.”.

“மாப்பிள்ளையா!! புதுப்புது முறையா வருதே ..” என்று தாலியை கையில் வாங்கிய சத்யா..யோசனையாக.. துரையிடம் திரும்பி..

“ஆமா இந்த தாலி எங்க உள்ளது..”

“அது எதுக்குடா உனக்கு, உன் மாமனார் வீட்டு காசுதான் உன் காசு கிடையாது..”

“அப்ப சரி … அணில் கிரானைட் மலைக்காக உன்ன கட்டுறேன்..என் பக்கத்துல வர கூடாது சரியா??”.. 

“எந்த மலை!!” என்று யோசித்த ஆரா எப்படியோ தாலியை கட்டினா சரிதான் என நினைத்து 

“சரி மாமா உங்க பக்கத்திலேயே வரல.. “என்றாள் அவனை இடித்து நின்றபடி… 

தாலியை எடுத்து சத்யா,” அந்த கிரானைட் மலையில கோடி ரூபாய் வரணும்.. அந்த காரணத்துக்காக சிங்கிள் சிங்கம் மிங்கிள் ஆகுது..” என்று அவள் கழுத்தில் தாலியை கட்டினான் சத்யா…. 

இரவு ” நான் ராஜா! நான் ராஜா!”என டவுசர் பாண்டி குடியில் ஆட..அவர் மனைவி ஜலஜா..

“யோவ்!! பொண்ண கூட்டிட்டு வர்றேன்னு அவனுக்கு கட்டி வச்சிட்டு .. இங்க ஆட்டமா ஆடுற ..”

“பின்ன ஆட மாட்டேனா, ஒத்த பைசா செலவலிக்காம என் மகளுக்கு கல்யாணம் கட்டி வச்சுட்டேன்.. அதுவும் ஆம்பளன்னா இவனை மாதிரி இருக்கணும்னு சொல்ற நல்லவனுக்கு, இதைவிட ஒரு தகப்பனுக்கு வேற என்ன வேணும்..”

“அவ்வளவு விவரமான பிள்ளையை எப்படியா ஏமாற்றி கல்யாணம் கட்டி வச்ச ..”

‘எல்லாம் அந்த தரிசு நிலத்தை காட்டிதான்..துரை காதுல விழற மாதிரி, தரிசு நிலத்தில இருக்குற மலை கிரானைட் மலைன்னு ஒரு பொய்ய எடுத்துவிட்டேன்..  அவனும் அதை நம்பி அப்படியே மாப்பிள்ளை காதல போட்டு கொடுத்துட்டான்.. ” 

“யோவ் அது வெறும் சுண்ணாம்பு மலைதான!!”

“அது நமக்கு தான தெரியும், அது தெரியாம ரெண்டும் ஏமாந்து போய் கல்யாணத்தை கட்டிக்கிட்டு முழிச்சுக்கிட்டு நிக்குது..  இனி என் மக எல்லாத்தையும் பாத்துக்குவா..  விவரமான ஆளு ஆரா.. நாலு வெத்தல, ஒரு பாக்கு சுண்ணாம்பு இதோட  கல்யாணம் முடிஞ்சது .. பாரு எத்தனை குவாட்டர் பாட்டில் அங்க இருந்து எடுத்துட்டு வந்திருக்கேன்..  எல்லாம் வெளிநாட்டு சரக்கு மாப்பிள்ளை வீட்டிலிருந்து அவருக்கு தெரியாம தூக்கிக்கிட்டு வந்தது .. “

“யோவ் அவர் நம்ம வூட்டு மாப்பிள்ளை “

“இனிமே மாப்பிள்ளை என்ன, மாமா என்ன? எல்லாம்  சரக்கு தானே..நான் குடிச்சு குடிச்சு ஜாலியா இருக்க போறேன்..  இனிமே சரக்குக்கு கூட செலவழிக்க வேண்டாம் ..அதுவும்  ஓசி தான்” என கொக்கரித்து சிரித்தார் சத்யா மாமனார் …

“மாப்பி  வச்சுட்டாங்கைய்யா ஆப்பு!!.. “

கிரானைட் மலையைக் காட்டி ஒரு பரங்கிமலையை கல்யாணம் கட்டி வெச்சுட்டாங்கடா, இனி உன் கற்பை காப்பாற்ற ஆளே இல்லடா…
சிங்கம் சிக்கி சின்னாபின்னம் ஆகும்!!

அசுரனின் காதல் வதம் தொடரும்……….

Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *