காதலே என் காதலே

This entry is part 2 of 2 in the series காதலே என் காதலே

காதலே என் காதலே

காதலே என் காதலே

Views: 16

காதலே என் காதலே

அத்தியாயம் 2

அம்மா அக்காவ, பொண்ணு பார்க்க எப்போ வராங்க?…

நாளை மறுநாள் வராங்கனு அப்பா சொன்னாரு….ஜாதகம் எல்லாம் அருமையா பொருந்திருக்குனு ஜோசியர் சொன்னாராம்… அதான்… உடனே கல்யாணத்த வைக்க முடிவு பண்ணிட்டாங்க..

மாப்பிள்ளை போட்டோ இருக்காமா… அக்கா போட்டோ அனுப்பிவிட்டீங்களா?

அவங்க நேர்ல பாத்துக்கலாம்னு சொல்லிட்டாங்க பாப்பா….

ம்ம்ம் சரிம்மா…

மிரு பாப்பா.. நீ நாளைக்கு காலைல கோவிலுக்கு போய் அக்கா பேர்ல அர்ச்சனை பண்ணிட்டு வா …அவள போக சொன்னா போகமாட்டா… நீ போறியா டா…

கண்டிப்பா போறேன்மா… இப்போ தூக்கம் வருதும்மா…. குட் நைட்….

என்ன குட்டிமா தூக்கம் வந்துருச்சா?

ஆமா ப்பா…

சரியா போய் படு…

ஓகே ப்பா…

ஏங்க மாமா… மாப்பிள்ளை வீட்டில அவரோட தம்பி இருக்காங்கல்ல நம்ம மிருவையும் கட்டிக் கொடுத்திரலாமா…

பையன் இருக்கான் டி…. நாம கேட்டு பாப்பபோம்… மிருக்கு ஓகேனா தா கல்யாணம் பத்தி பேசணும்… அவ குறிக்கோளுக்கு நாம தடையா இருக்க கூடாது டி..

சரிங்க மாமா… சாப்பிடுங்க…

தனு… நாளைன்னைக்கு அவங்க வரதுக்கு ஏற்பாடு பண்ணனும்…சாப்பாடு நம்ம ஹோட்டல்ல ஆர்டர் பண்ணிக்கலாம்… பாப்பாக்கு புடவை நகை எல்லாம் புதுசா எடுத்துக்குவோமா?

மாமா… விட்டா கல்யாணமே பண்ணிடுவிங்க போலயே… புடவை நகை எல்லாமே அதிகமாவே இருக்கு…. நிச்சயம் ஆனதுக்கு அப்புறம் அவளுக்கு பிடிச்ச மாதிரி எடுத்துக்கலாம்…

ம்ம்.. நீ சொன்ன சரியா தான் இருக்கும் டி ….

அடுத்த நாள் காலை….
அம்மா நா கோவிலுக்கு போய்ட்டு… ஷாப்பிங் போய்ட்டு வந்துறேன் ..
என் பிரண்ட் திவ்யா கூட…,போய்ட்டு வந்துறேன்..

ம்ம்ம்…. சரி அம்மு பாத்து போய்ட்டு வா…. வரும் போது திவ்யாவ வீட்டுக்கு கூட்டிட்டு வா… புள்ளய பார்த்து எவ்ளோ நாள் ஆச்சு..
ம்ம் சரிம்மா… என்று கிளம்பினாள்….

ஹாய் திவி…

வாடி எவ்ளோ நேரம் வைட் பண்றது…

சரி சரி வந்துட்டேன்ல வா போலாம்…
மிரு இன்னைக்கு நீ செம்மையா இருக்க டி.. பேஸ் எல்லாம் குளோவிங் ஆஹ் இருக்கு…
பேசியல் ஏதாச்சும் பண்ணியா..சும்மாவே உன்ன பாத்தா ஜொள்ளு ஊத்துவானுக இதுல நீ வேற இப்டி அழகா இருந்தா நானெல்லாம் எப்படி ஒரு பையன பார்த்து கரெட் பண்றது.. உன்ன தான் பாப்பானுங்க… இப்பவே உன்ன ஒருத்தன் அங்கேயே நின்னு பாக்குறான் பாறேன்

ஐயோ.. சீ சீ…அதெல்லாம் இல்லடி… அவன் வேற யாரையோ பாக்கறான் எனக்கு எப்பவும் நாச்சுரல் தா பிடிக்கும்னு உனக்கு தெரியாதா திவி…

தெரியும் ஆனா இன்னைக்கு எதோ வித்யாசம் தெரியுது…

ஒரு மண்ணும் இல்ல வா போலாம்.. என்று கோவில் சென்று பூஜை பொருட்களை வாங்கி விட்டு உள்ளே சென்றனர் ..சாமி கும்பிட்டு விட்டு வந்தனர்…. ஹே திவி வாடி கோவில் குளத்துல இருக்க மீனுக்கு பொறி போடலாம்… ப்ளீஸ் டி..

சரியா வா வந்து தொலைறேன்.. வரலைனா விடவா போற என்று இழுத்துக்கொண்டு சென்றாள் மிரு….

அப்போது திவ்யா.. நா போய் சர்க்கரை பொங்கல் வாங்கிட்டு வரேன்.. நீ புட் போட்டுட்டு இரு..

படி வழுக்குது டி..பார்த்து போ

ஓகே ஓகே டூ மினிட்ஸ் வந்துறேன் என்று திவி செல்ல… அங்கே மிரு திரும்பி வேடிக்கை பார்த்துக்கொண்டு படியில் கால் வைக்க வழுக்கி விழ பற்றுக்கோலாக ஒரு இரும்பு உடலை அணைத்து பிடித்து இருவரும் படி முழுவதும் உருண்டு குளத்தில் மூழ்கினர்… மூழ்கி மூச்சு திணறி தண்ணீரில் இருந்து வெளியில் வரவும் தான் இருவரும் முகத்தை பார்த்தனர்..அவனது கரம் அவளது இடையை இருக்கி பிடித்தவாறு நின்றான்..அந்நேரம் குளத்தின் மேல் உள்ள மரக்கிளையில் இருந்த மாலை இரவரின் கழுத்திலும் விழுந்தது…. அவன் விஷ்வாமித்திரன்…. இக்கத்தையின் நாயகன்.. பேர் போலவே கோவக்காரன்… தன் சொற்கள் அடுத்தவர் மனது புண்படுத்தும் என்று கொஞ்சம் கூட யோசிக்காமல் தேள் கொட்டும் வார்த்தைகளுக்கு சொந்தக்காரன்.. முரடன்…கர்வமிக்கவன்…இன்னும் நிறைய சொல்லலாம்.. போக போக அவனை பத்தி தெரிஞ்சுக்கலாம்…..

ஹேய் இடியட் அறிவில்ல உனக்கு இப்படி தான் கண்ண பின்னாடி வச்சுட்டு வருவியா…? முட்டாள்… என்று அவளை திட்டிக்கொண்டே அவள் அங்கம் முழுதும் அவன் கண்கள் ரசிகதான் செய்தது… பேசிட்டே இருக்கேன்.. ஹே…ள்.. என்று அவள் தோளை பிடித்து உலுக்கினான்…

அதில் சுயம் பெற்றவள்… சாரி சார்… சாரி எதிர்பாக்கம மோதிட்டேன்..என்று அவள் விலக பார்க்க முடியவில்லை.. அவள் கழுத்தில் கிடந்த மாலை அவனையும் சேர்த்து இழுத்தது…

ஹே நில்லு டி… என்னையும் சேர்த்து இழுக்குற… என்று கழுத்தில் கிடந்த மாலையை கழட்டி எரிந்தான்… பின் அவன் செல்ல..

மிரு கோபமாக அவனை ஹலோ சார்… டி சொல்ற வேலை எல்லாம் வச்சுக்காதீங்க… தெரியாம நடந்ததுக்கு சாரி கேட்டாச்சு..

அவன் அவளை முறைத்து அப்படி தாண்டி கூப்பிடுவேன் என்ன டி பண்ணுவ…?

ராஸ்கல் போடா.. பொறுக்கி என்று கூறினாள்….

விஷ்வாவிற்கு கோபம் வர யாரு டி பொறுக்கி… பொறுக்கி என்ன பண்ணுவானு காட்டுறேன் என்று அவளை வேகமாக எழுத்து தோளில் போட்டுக்கொண்டு அவனது கார் நோக்கி சென்றான்…

அவளோ பயத்தில் விடு டா.. என்னய..எரும ஐயோ திவி எங்க டி போன?..டேய் விட்றா என்று கத்தினாள்..

அவனோ அவளை காரின் உள்ளே போட்டு அவளது கைகள் இரண்டையும் தான் ஒரு கையால் பிடித்து அவளை நெருங்கி அவள் இதழை சட்டென கவ்வி கொண்டான்… அவள் கண்ணில் கண்ணீர் வர அதை போடுட்படுத்தாமல் முத்தத்தில் மூழ்கினான்… சிறிது நேரத்தில் அவளை விட்டு விலகினான்..
பொறுக்கி இத தாண்டி பண்ணுவான்..என்று முத்தமிட்டு சிவந்த அவளது உதட்டை மீண்டும் கவ்வினான்…அவள் உதட்டில் ரத்தம் கசிந்தது… அவளோ அதிர்ச்சியில் அவனை அடித்து கொல்லும் அளவு பார்த்துக்கொண்டு இருந்தாள்…
பின் அழுது கொண்டே ..,தன் தாவணி வைத்து அவன் முத்தம் கொடுத்த உதடுகளை அழுத்தி துடைத்து கொண்டே..எனக்கு எப்படி நீ முத்தம் கொடுக்கலாம் உன்ன என்ன அவனை கன்னத்தில் ஒரு அறை விட்டாள்… பின் கையில் கிடைத்த பொருள் கொண்டு அடித்தாள்… உனக்கு எவ்ளோ தைரியம் இருந்தா எனக்கு முத்தம் கொடுத்துருப்ப சீ உன்ன என்ன பன்றேன்னு பாரு டா பொறுக்கி .. உன்ன போலிசில் சொல்றேன் டா எருமகடா என்று வெளியில் இறங்க முற்பட்டாள்..

அவனோ அவளை என் மேல கை வைக்கிறியா? உன்ன என்று அவளைஅறைந்ததான்… பின் இழுத்து அணைத்து காதருகே என்ன உன்னால ஏதும் செய்ய முடியாது… என்ன பொறுக்கினு சொன்ன வாய்க்கு தண்டனை கொடுத்தாச்சு… இன்னும் நீ பேசுனத்துக்கு நா தண்டனை தரவேண்டாமா? நீ என்ன அடிச்சா நானும் உன்ன அடிப்பேன்.. பொண்ணுன்னு பொறுமையா இருந்தா இந்த விஸ்வா மேலயே கை வைப்பியா.. ஹான்… உன் கொழுப்ப அடகுறேன் டி..உன்ன என்ன அவன் அவளை நெருங்கும் நேரம் அவன் போன் அலறியது…

அதில் சுத்தரித்து அவனை வேகமா தள்ளி விட்டு..வேகமாக அவள் ஓடி வந்து திவ்யா விடம் சென்றாள்…
தோழியிடம் சென்றவள்..
நடந்ததைக்கூற…, திவி மிரு சொன்ன ஆளை பார்க்க சென்றால்.. அவனோ இரண்டு பேரை அடி வெளுத்துவிட்டு காரில் ஏறி ஜம்பமாக சென்றான்…

அவன் இது வரை பெண்ணை தொட்டதில்லை கோவத்தில் அவளை தொட்டு முத்தமிட்டானா இல்ல அவள் அழகு அவனை இழுத்ததா என்று அவனுக்கே புரியவில்லை ஆனால் அவள் மீது கோவம் மட்டும் எக்கச்சக்கம் இருந்தது ஆனால் அதையும் தாண்டி அவனது மனது அவளது அருகாமையை ரசித்தது…

மிரு இங்க நடந்தது வீட்டில் சொல்ல வேணாம் அப்புறம் அவங்க மனசு கஷ்டப்படும்…. அவன திரும்ப பார்த்தா ஏதாச்சும் செய்யாலாம்.. சரியா டி அவனை பார்த்தாலே பயங்கரமா இருக்கான் டி.. பெரிய ரவுடி போல அவனை ஏதாச்சும் செய்யனும்..

அவள் அழுகையோடு…, திவி… எனக்கு உடம்பெல்லாம் காய்ச்சல் வர மாதிறி இருக்கு டி… அம்மா கிட்ட என்ன சொல்றது பிளட் வருது டி லிப்ஸ்ல… என்று அழுதாள்…

ஹே ரிலாக்ஸ் டி… வீட்டுக்கு போய் பாத்துக்கலாம்… விடு அம்மாகிட்ட நா பேசிக்கிறேன் நீ கால் தவறி கீழ விந்துட்டேனு சொல்லிக்கலாம் ஓகேவா..

ம்ம் சரி டி… வீட்டுக்கு கிளம்பினர்….
வீட்டுக்கு சென்று அவள் அம்மாவிடம் சொல்லிவிட்டு தூங்கவைத்து பின் அம்மாவிடம் பேசிவிட்டு திவ்யா சென்றாள்..

தூக்கத்தில் மிருவுக்கோ அவன் அவளை கட்டி அணைத்து முத்தமிட்டதை நினைக்க கோவம் பற்றிக்கொண்டு வந்தது… உன்ன விடமாட்டேன் டா.. உனக்கு ஒரு நாள் இருக்கு சிக்குவ அப்போ பார்த்துக்குறேன்.. கனவிலும் அவன் கொடுத்த முத்தம் ஞாபகம் வர எரிச்சலுடன் எழுந்தால்.. டிவி யை ஆன் செய்து பாட்டவது கேக்கலாம் என்றால் அதிலும் முதக்காட்சியே… அவன் அருகில் இருந்தாள் கொல்லும் அளவு ஆத்திரம் வந்தது அவளுக்கு… ச்சை ஒரு பாட்டு கூட முதகாட்சி இல்லாம எடுக்க மாட்டாங்களா? என்று கடுப்போது சோபாவில் அமர்ந்து அப்படியே தூங்கிவிட்டாள்….

விடியல் என்ன வைத்திருக்கிறதோ!

 

 

Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *