காதலே என் காதலே
அத்தியாயம் 1
தனு தனு எங்க இருக்க இங்கன வா டி! என் அத்த மகளே ..
அச்சோ இந்தா வந்துட்டேன் சொல்லுங்க மாமா “காபி இந்தாங்க இதுக்கு தானே இப்படி கூப்பிட்டிங்க…
ம்ம்ம்…எப்பவும் உன் காபி தான் டி பெஸ்ட்….எங்க டி என்னோட செல்லங்கள் எழுந்தாச்சா..?
இன்னும் இல்ல மாமா… சின்னவ இப்போ தா எழுந்து குளிச்சுட்டு காலேட்ஜ்க்கு கிளம்புறா…இன்னைக்கு அவளுக்கு இறுதி ஆண்டு பரீட்சை ஆரம்பிச்சுருக்காங்க மாமா….
அதுக்கு சீக்கிரமே எந்திரிச்சிருச்சா பாப்பா…
ஆமாங்க மாமா, கோவிலுக்கு போக சொன்னேன் போயிருக்கா ..
அவளையும் உன்னமாதிரி கோவில் குளம்ன்னு பழக்க படுத்திட்டே…
பெரியவா தான் என்ன மாதிரி….ஸ்மார்ட் டி என் கெசல்யா..
மக்கும்..நீங்க தான் மெச்சிக்கணும் உங்க பொண்ண…. என்று நொடித்து கொண்டார்..
ஏண்டி, தனு நம்ம பெரிய பொண்ணுக்கு ஒரு வரன் வந்துருக்கு…. அடுத்த வாரம் வரேன்னு சொல்லிருக்காங்க…நான் தான் என் பொண்டாட்டி கிட்ட கேட்டுட்டு சொல்றேன்னு சொல்லிருக்கேன்.. வர சொல்லட்டுமா டி..ரொம்ப பெரிய இடம் நாம வசதிய விட பெரிய பணக்காரங்க ரெண்டு பசங்க இருக்காங்க.. இப்போ மூத்த பையனுக்கு பொண்ணு பாக்குறாங்க… நாம கௌசிய கேக்குறாங்க… ஜாதகம் அனுப்ப சொல்ராங்க…. என்ன பண்ணட்டும் டி என்று சோமசுந்தரம் கேட்டார்..
இதுல என்ன மாமா இருக்கு..நம்ம பெண்ணுக்கும் வயசு ஆகுது இல்லையா.. நானே இது பத்தி பேசலாம்னு நினைச்சேன்..நீங்க சொல்லிட்டீங்க.. அனுப்புங்க மாமா, பொருத்தம் இருந்தா கட்டி வச்சுறலாம்…இந்த வரன் ஆச்சும் அவளுக்கு அமையட்டும்…என சொன்னார்..
சரி டி தனு, அப்படியே நானும் இன்னைக்கு பையன் போட்டோ ஜாதகம் எல்லாம் வாங்கிட்டு வந்துறேன்….என் பொண்ணுக்கு ஓகே நா மட்டும் தா கல்யாணம்.
அப்போது தான் படுக்கையில் இருந்து எழுந்து வந்தாள் கௌசல்யா…
அம்மா எனக்கு காபி…என்று கீழிறங்கி வர
பல் விளக்குனா தான் காப்பி இல்ல நோ….
ப்ளீஸ் ம்ம்மா…..
டெய்லியும் இதே வேல தான் உனக்கு… உன் கூட பிறந்தவா காலைலயே குளிச்சுட்டு கோவிலுக்கு போய்ட்டா நீயும் தான் இருக்கியே…
அம்மா…, நாம பாப்பா உங்கள மாதிரியே ஸ்வீட்டு மா… நான் டேடி மாதிரி ..காபி கொடுங்க…ம்மா என்று அவள் அம்மாவை ஐஸ் வைத்து காபி குடித்துக்கொண்டே தந்தை அருகே உக்கார்ந்தாள்…
குட் மார்னிங் ப்பா…
குட் மார்னிங் டா…
அம்மா எப்ப பார்த்தாலும் திட்டிட்டே இருக்காங்க… போர் மம்மி…. எப்படி ப்பா இவங்கள கல்யாணம் செஞ்சுகிட்டீங்க… பாவம் பா நீங்க…
ம்ம் எல்லாம் விதி… என்ன செய்ய மாட்டிகிட்டேன்…
அங்கு வந்த தனலட்சுமி..,
இப்பவும் ஒன்னும் குறையல….உங்க அப்பாக்கு வேற கல்யாணம் கட்டி வச்சுக்கோ என்று சொல்லி கண் கலங்கி உள்ளே போய் விட்டார்…
உங்க அம்மா கோச்சுகிட்ட்டா, நா போய் சமாதானம் செய்றேன் இல்லனா.. மூஞ்ச தூக்கி வச்சுக்குவா….
கௌசல்யா கட்டை விரலை காட்டி ஆல் த பெஸ்ட் ப்பா.. என்றாள்..
அறைக்கு வந்த சோமசுந்தரம் சுந்தரம் கண்ணில் பட்டது… மூஞ்ச தூக்கி வச்சுட்டு இருக்கும் தனலட்சமி தான்..
தனு… தனு….. இங்க பாரு டி கோச்சுகிட்டியா… சும்மா விளையாட்டுக்கு பேசுனதுக்கு எல்லாம் யாராச்சும் அழுவாங்களா டி…
எனக்கு வயசாகிருச்சு..உங்களுக்கு என்ன பிடிக்கல..
உன்னை பிடிக்காம போகுமா டி என் மயிலு..சும்மா சொன்னேன் டி..
சும்மா சொல்லல யா நீ..மனசுல இருக்கிறது தா வாயில வரும்.
என்னது யா வா..சரி தான்..இப்போ பாரு..அப்போ நா இன்னும் இளமையை தா இருக்கேன் நீயே ஒத்துகிற… சரி செகண்ட் இன்னிங்ஸ் ஆரம்பிச்சற வேண்டிய தான்..
ம்ம் ஆரம்பிங்க.. எவ்வளவு கொழுப்பு இருந்தா என் முன்னாடியே சொல்லுவ சோமு… எவ வரேன்னு நானும் பாக்கறேன்…என்று அவரை அடிக்க பாய
ஆத்தாடி என் அத்த மகளுக்கு பொறாமையா இருக்கு போலயே…என்று மனைவியை அணைத்து கொண்டார்..
ம்ம் மாமா.. பாப்பா வெளில இருக்கு விடுங்க நா போய் சமைக்கணும்…
போய்க்கலாம் டி… என் உயிர் நீ தான் டி ..,உன்ன விட என்ன யாரும் இப்படி பார்த்துக்க மாட்டாங்க தனு… என்று நெற்றியில் முத்தமிட்டு பின் விடுவித்தார்..
முதுமை காதல் உண்மையான புரிதல் உள்ள காதல்…
சரி நாம இப்போ ஹீரோயின் பத்தி பார்க்கலாம்…. சோமசுந்தரம் தனலட்சுமிக்கு இரு மகள்கள் கௌஸல்யா… மிருணாளினி… மூத்தவள் கௌஸல்யா கொஞ்சம் இல்ல நிறையவே சுதந்திரமாக வளர்க்கப் பட்டவள்… ஒரு கம்பெனியை தனியாக நடத்தும் அளவு ஆளுமை பெற்றவள்…
இப்போது வெற்றிகரமாக அவர்களது கம்பெனியை நடத்தி கொண்டிருக்கிறாள்….
இளையவள் மிருணாளினி.. பேர் போலவே அமைதி கொண்டவள்…வீட்டில் மட்டும் சேட்டைக்காரி…..படித்து முடித்து மருத்துவ சேவை செய்ய ஆர்வம் மிக்கவள்.. நம் கதையின் நாயகி… அழகி… காண்போர் கண்ணெல்லாம் ரசித்து அவளை அடைய நினைக்கும் அளவுக்கு பேரழகி….
கௌசி இன்னைக்கு…,நாம கம்பெனியோட ஆடிட்டிங் மீட்டிங் இருக்கு நீ முதலில் போ நா பிறகு வரேன்…
ஓகே ப்பா…. சாப்பிட்டுவிட்டு அவள் கிளம்பிவிட்டாள்… அவளது தந்தையும் அவரது மனைவியிடம் ஜாதகம் வாங்கி மாப்பிள்ளை வீட்டுருக்கு கௌசல்யா ஜாதகத்திற்கு பதில் மிரு ஜாதகத்தை மாத்தி அனுப்பி விட்டு அலுவலகம் சென்றார்…
மாலை வேளை., வீட்டிற்கு வந்தனர்….கௌசி உங்கிட்ட கொஞ்சம் பேசணும்.. பிரஷ் ஆகிட்டு ஹால் வா
ஓகே ப்பா.. வரேன் எதாவது முக்கியமான விஷயமாப்பா..
ஆமா பாப்பா….. நீ கீழ வா பேசிக்கலாம்…
ஒரு யோசனையோடு…. அறைக்கு சென்று ப்ரெஷ் ஆகி வந்தாள்…
கௌசி… உனக்கு ஒரு வரன் வந்துருக்கு பாப்பா…. ஜாதகம் பொருத்தம் எல்லாம் பக்காவா இருக்கு உனக்கு கல்யாணம் செய்துக்க விருப்பமா டா? அப்பா சொல்றேன்னு நீ சொல்ல வேண்டாம் உனக்கு பிடிச்சா மட்டும் தான் கல்யாணம்….
அப்பா இன்னும் கொஞ்ச நாள் ஆகட்டுமே… ஆறு மாசம் கழிச்சு கல்யாணம் செய்துக்கிறேன் ப்ளீஸ் ப்பா….
இன்னும் பத்து வருஷம் கழிச்சு கூட செய்துக்கோ.. நாங்க இருக்கும் போதே உனக்கும் மிருக்கும் ஒரு நல்ல வாழ்க்கை அமைச்சு கொடுக்கலாம்னு இருந்தா… கல்யாணம் வேண்டான்னு சொல்ற.. வயசு ஏறிட்டே போகுது.. உனக்கு அடுத்து பாப்பா இருக்கா அவளுக்கு எப்போ நல்லது செய்றது நீயே சொல்லு…
அம்…..மா….., நா உங்களுக்கு சுமை ஆகிட்டேனா சொல்லுங்க ?அப்பா… பிடிக்கலைன்னா சொல்லுங்க நா இருந்து போயிடுறேன்…
அச்சோ அப்படி இல்ல குட்டிமா… நல்ல குடும்பம்… ஏகப்பட்ட சொத்து… இருக்கு அதைவிட மாப்பிள்ளை சுயமா உழைச்சு முன்னேறினவர்..,தங்கமான குணம் பாப்பா….. மாப்பிள்ளை ராஜா மாதிரி இருக்கார் கண்டிப்பா உனக்கு பிடிக்கும் டா உனக்கு நல்லது மட்டும் தான் இந்த அப்பா செய்வேன்..
உனக்கு இஷ்டம் இல்லனா வேணாம் டா…
சிறிது யோசித்து விட்டு… மாப்பிள்ளை கிட்ட சொல்லிக்கலாம்..என்று முடிவு எடுத்து ..,சரி ப்பா… உங்க சந்தோசம் தான் எனக்கு முக்கியம்… மாப்பிளை வீட்டில வர சொல்லுங்க ப்பா எனக்கு முழு சம்மதம்…..
அப்போது வீட்டிற்குள் வந்த மிரு… அம்மா… அப்பா… அக்கா நீயும் இங்கு தான் இருக்கியா?… என்ன விட்டுட்டு என்ன பிளான் பண்றீங்க மூணு பேரும்… ம்ம்ம்..
குட்டிமா நம்ம அக்காவுக்கு மாப்பிள்ளை பாத்துருக்கோம்….
ஐ.. சூப்பர்.. அக்கா வாழ்த்துக்கள்…. உனக்கு ஓகேவா அக்கா…. மாமா என்ன பன்றார்..
சரி தான் நீ முடிவே பண்ணிட்டியா…?
ஆமாக்கா…..
அதைவிடு.. எக்ஸாம் எப்படி பண்ணிருக்க…?
சூப்பரா பண்ணிருக்கேன் க்கா… ஒன் மந்த்ல ரிசல்ட் அண்ட் அடுத்து ஆறு மாதம் ஹவுஸ் சர்ஜென்… அப்புறம் சேவை செய்ய வேண்டிதான்….என்று சிரித்து கொண்டே கூற
ம்ம் குட் அம்மு….
அக்கா நீ கல்யாணம் முடிஞ்சதும் அங்கேயே போய்டுவியா… நா உன்கூட தூங்கமுடியாதா சண்டை பிடிக்கமுடியாதா… மிஸ் யூ அக்கா என்று குழந்தை போல் கேட்டாள்..
அக்கா எங்க போனாலும் உன்னையும் கூட்டிட்டே போறேன்… சரியா…?
மாமா வீட்ல இன்னொரு பையன் இருந்தா அவனை கல்யாணம் செஞ்சுகிட்டு உன்கூடவே வந்துருவேன்…
ம்ம்ம் இது கூட நல்ல ஐடியா தான்..ரெண்டு பசங்க இருக்காங்க பார்ப்போம்…
அக்கா பேசாம ரெண்டு பேரும் ஒருத்தரையே கட்டிக்குவோம்… அப்போ தா நாம பிரியமா இருப்போம்…
அடி கழுதைகளா பேசுற பேச்சை பாரு…. அடிச்சேன்னு வை நீ படிக்கற வேலைய பாரு… போ டி…என்று தனு கூறினார் ..
போ மா… என்று மாடியில் மிரு அவளது அறைக்கு வந்து அன்றைய வேலைகளை முடித்து படித்து விட்டு உறங்கி விட்டாள்…
இரவு சோமுவிடம்…. மாமா என்ன யோசிக்கிறீங்க?
ஒண்ணுமில்லடி…. நாம பொண்ணுங்க ரெண்டு பேரையுமே ஒரே வீட்டில் கட்டி கொடுத்தால் என்ன…நாம காலத்துக்கு பிறகு ஒருவருக்கொருவர் ஆதரவாக இருப்பாங்க ..
மாமா அதுக்கு அவங்க வீட்டில் ஒத்துக்கணுமே…
ம்ம் பாப்போம்… எல்லாம் விதி விட்ட வழி…
கௌசல்யா அறையில் தூங்காமல்..,யாருக்கோ போன் செய்து கொண்டிருந்தாள்…
எதிர்புறம் பூஜ்யமே… ஒரு கடுப்போடு…, போனை எரிந்து விட்டு படுக்கையில் விழுந்தாள்….
யாருக்கு மாப்பிள்ளை யாரோ… அதை யார் அறிவாரோ…
