என் நெஞ்சிலே… உன் ஊஞ்சலே…

என் நெஞ்சிலே... உன் ஊஞ்சலே

என் நெஞ்சிலே… உன் ஊஞ்சலே…

என் நெஞ்சிலே… உன் ஊஞ்சலே…

என் நெஞ்சிலே… உன் ஊஞ்சலே…

என் நெஞ்சிலே… உன் ஊஞ்சலே…

என் நெஞ்சிலே… உன் ஊஞ்சலே…

என் நெஞ்சிலே… உன் ஊஞ்சலே…

என் நெஞ்சிலே… உன் ஊஞ்சலே…

என் நெஞ்சிலே… உன் ஊஞ்சலே…

என் நெஞ்சிலே… உன் ஊஞ்சலே…

என் நெஞ்சிலே… உன் ஊஞ்சலே…

என் நெஞ்சிலே… உன் ஊஞ்சலே…

என் நெஞ்சிலே… உன் ஊஞ்சலே…

என் நெஞ்சிலே… உன் ஊஞ்சலே…

என் நெஞ்சிலே… உன் ஊஞ்சலே…

என் நெஞ்சிலே… உன் ஊஞ்சலே…

என் நெஞ்சிலே… உன் ஊஞ்சலே…

என் நெஞ்சிலே… உன் ஊஞ்சலே…

என் நெஞ்சிலே… உன் ஊஞ்சலே…

என் நெஞ்சிலே… உன் ஊஞ்சலே…

என் நெஞ்சிலே… உன் ஊஞ்சலே…

என் நெஞ்சிலே… உன் ஊஞ்சலே…

என் நெஞ்சிலே… உன் ஊஞ்சலே…

என் நெஞ்சிலே… உன் ஊஞ்சலே…

என் நெஞ்சிலே… உன் ஊஞ்சலே…

என் நெஞ்சிலே… உன் ஊஞ்சலே…

என் நெஞ்சிலே… உன் ஊஞ்சலே…

என் நெஞ்சிலே… உன் ஊஞ்சலே…

என் நெஞ்சிலே… உன் ஊஞ்சலே…

என் நெஞ்சிலே… உன் ஊஞ்சலே…

என் நெஞ்சிலே… உன் ஊஞ்சலே…

என் நெஞ்சிலே… உன் ஊஞ்சலே…

என் நெஞ்சிலே… உன் ஊஞ்சலே…

என் நெஞ்சிலே… உன் ஊஞ்சலே…

என் நெஞ்சிலே… உன் ஊஞ்சலே…

என் நெஞ்சிலே… உன் ஊஞ்சலே… 23,24

என் நெஞ்சிலே… உன் ஊஞ்சலே… 23,24

என் நெஞ்சிலே… உன் ஊஞ்சலே…

என் நெஞ்சிலே… உன் ஊஞ்சலே…

என் நெஞ்சிலே… உன் ஊஞ்சலே…

என் நெஞ்சிலே… உன் ஊஞ்சலே…

நெஞ்சிலே… 12



பொறுப்பாக நித்திலாவை பேருந்தில் ஏற்றிவிட்டு, மறக்காமல் அவளுக்கு டாட்டா காட்டி விட்டு, அதன் பின் சகுந்தலாவுக்கும் விஷயத்தை கூறிவிட்டு வீட்டுக்கு சென்றாள் மௌனிகா.

“வெளியில் எங்கே நிறுத்தினாலும் இறங்கி விடாதே!” என்று அவள் குடிப்பதற்கு தண்ணீர் பாட்டில் கொறிப்பதற்கு என்று சில ஸ்நாக்ஸ் வகைகளையும் சிறு சிறு துண்டுகளாக ஆப்பிள் கட் செய்து ஒரு பாக்ஸ்லேயும் போட்டுக் கொடுத்திருந்தாள் மௌனிகா!

செயல் என்னவோ மௌனிகாவா இருந்தாலும் அதன் பின் மூளை அனைத்தும் சகுந்தலா தேவி அதுவும் நித்திலாவே நன்கு அறிந்ததால்…

இரவு உணவு வேண்டாம் என்றவளை “நோ ப்ராப்ளம் நித்தி! இதில் ஆப்பிள கட் பண்ணி வச்சிருக்கேன். அதையே சாப்பிட்டுக்க! ஹெல்த்தி அண்ட் டயட்! நீ எதையாவது தின்னு போற வழியில எனக்கு வயிறு வலினு ஃபோன் பண்ணி புலம்புவ.. அதற்கு இதுவே பெட்டர்!” என்று அதையும் ஈசியாக முடித்தவளை கண்டு காண்டானது என்னவோ நித்திலாதான்.

 பின்னே எப்படி பால் போட்டாலும் அதற்கு கேட்டு போட்டு மூடும் மௌனிகாவையும் சகுந்தலாவையும் என்னதான் செய்வது??

“ஒரு பிள்ளையை ஹாஸ்டலுக்கு பேக் பண்ணி அனுப்புற அம்மா மாதிரியே இருக்குடி நீனும் சக்குமாவும் பண்ற வேலை” என்று முறுக்கிக் கொண்டாலும் தன் மீது அவர்கள் கொண்ட அக்கறையில் மனம் இனிக்க தான் செய்தது.

ஆப்பிள் துண்டுகளோடு ஒரு டூத் பிக்கும் இருக்க.. சிரித்துக் கொண்டே ஒவ்வொன்றாக சாப்பிட்டுக் கொண்டிருந்தாள் நித்திலா. அவள் அருகிலுள்ள பெண்மணியோ நன்கு உறக்கத்தில்…

இவளுக்கும் தான் உறக்கம் வருவேணா என்றது. வழக்கம் போல பாடலை ஹெட்போனில் கேட்டுக் கொண்டே தூங்கலாம் என்று பாடலை தெரிவு செய்ய… நேற்று அவன் பாடிய அனுப்பிய பாடல்…

//அறவே இல்லை உறக்கம்,
அதற்கும் இல்லை இரக்கம்,
இமைகள் ஒன்றாகே எப்போதும் சேராமல்,
இடையில் நின்றாயே இது நியாயம்மா?

பி.பி. ஏறி போச்சு இள ரத்தம்,
நெஞ்சில் கார்கில் போலே ஒரு யுத்தம்,
அடி அர்த்த ராத்திரி சம்மர் மாதிரி,
வெப்பம் தாக்குதடி கண்ணில்,
என்னை மின்னல் தாக்கவே,
தீயும் காற்றும் ஒன்று சேர்ந்ததோ உன்னில்,
நீ என்னை சுட்டதும், அனலில் இட்டதும்,
எந்த மட்டிலும் போ-போ-போதும்…//

அந்த பாட்டிலைக் கேட்டவுடன் சிரித்துக்கொண்டாள். “எந்த பாட்டையும் இவன் முழுசாவே பாடி அனுப்ப மாட்டானா? அது என்ன பிட்டு பிட்டா..” என்று தோன்றினாலும் அந்த சரணத்துக்குள்ளேயே அவளை சரணாகதி ஆக்கியிருந்தான் பாடகன்!!

கனகச்சிதமாக அவனின் மன இயல்பை காட்டும் படியாக தான் இருக்கும் அந்த பாடல் வரிகள் எல்லாம்!! அப்பாடலின் வரிகளை விட உயிர் உருக்கும் அவனது குரல் தான் இவளை சுண்டி இழுக்கும் அவனை நோக்கி…

ம்ம்ம்… என்று நீண்ட நெடிய பெருமூச்சு ஒன்றை விட்டவள், 
இது போல் நிறைவேறாத ஆசை எல்லாம் நெஞ்சில் நிறுத்தி தன்னை வஞ்சித்து கொள்ள அவள் தயாராய் இல்லை. ஆனாலும் மீண்டும் ஒரு அவனது குரல் ஏனோ காந்தமாய் அவளை ஈர்த்தது என்னவோ மறுக்க முடியாத உண்மை..!!

கூடவே அந்த முத்தம்!! ஒரு முறை மட்டுமே அவன் கொடுத்த முத்தம்… இவளுக்கோ நித்தமும் அவளை கொன்று தின்றது. 

எதிர்பார்க்காத கணத்தில்..
எதிர்க்கக் கூடத் தோன்றாமல் அதிர்ந்து நின்றவளின் வறண்ட இதழ்கள் அவனால் கொய்ப்பட்டது. உதட்டை கவ்விப் பிடித்து மென்றவனின் முத்தத்தில் பிரமித்து நின்றிருந்தாள் நித்திலா..!!

முத்தம்.. ஒற்றே ஒத்த முத்தம்??
அவளுள் பல மாயங்களை செய்தது!!
இத்தனை அழகானதா…??
இத்தனை உயிர்ப்பு உள்ளதா..??
இத்தனை ஆழமானதா…??
ஆனால் உள்ளுக்குள் என்னவோ செய்கிறதே…? மூச்சு கூட விட முடியாமல்… மூச்சு முட்டுவது போல.. உயிர் பிரிந்து விடுவது போன்ற இம்சை..

இதழ்களின் இடைவெளியில் அழகான இம்சை!!

மீண்டும் அந்த கணங்களே அவளுள் நிறைக்க.. மூளை ஸ்தம்பிக்க.. உணர்வுகளை உயிர்ப்பிக்க.. உலகை மறந்து அசைவற்றுப் போனாள் அக்கணம்!!
வலிய வந்து தன்னை நிறைத்தவனை இதழணைத்தவனை நினைக்கவே.. இப்போதும் உடல் சிலிர்க்க அவன் முத்தமிட்ட இதழ்கள் நடுக்கம் கொண்டது. தனது விரல்களால் நடுக்கத்தைத் தவிர்க்க இதழ்களை வருடியவளின் கண்கள் மயங்கின.

‘அன்றும் அப்படிதான் மயங்கி விழுந்தேன்!!’ மெல்ல கூறிக் கொண்டாள்.

முத்தம் இப்படித்தான் இருக்குமா..? உணர்வுகள் ஒன்று கூடி சுகமான சுமையாக இதயத்தை அழுத்த, பாதங்கள் தரையில் படாமல் வானில் பறந்த உணர்வு. அவள் அறியாத உணர்வு அது.. முத்தம்!
பிறந்ததில் இருந்தே.. 

இப்போதும் அவ்வுணர்வை நினைக்க பறப்பது போன்று இருக்க இரு கரங்களினாலும் முகத்தை மூடிக் கொண்டு சீட்டில் சாய்ந்துக் கொண்டாள்.

இருக்கையை பின்னால் சாய்த்து கொண்டே அந்த ஏசி பஸ்ஸில் ஜன்னல் ஊடே வெளியே அவளை கடந்து செல்லும் போஸ்ட் கம்பங்களையும் பெரிய பெரிய கட்டிடங்களையும் அதைத் தொடர்ந்து மரங்கள் செடிகள் வீடுகள் என்று அனைத்தையும் சுவாரசியமே இல்லா சுவாரசியத்துடன் பார்த்துக் கொண்டிருந்தாள்.

கண்களில் பட்டதெல்லாம் கருத்தில் பதியவில்லை! “ஏன் இன்னைக்கு பாடல் அவன் அனுப்பவில்லை?” என்று கேள்வியே அவள் மூளையை வண்டாய் குடைந்து கொண்டிருந்தது.

இப்படியாக சென்று கொண்டிருந்த பேருந்தில் அப்பொழுது போடப்பட்டிருந்த மெல்லிய பாடல்களும் நிறுத்தி விட… அனைவரும் அரைகுறை உறக்கத்தில்… 

சட்டென்று பேருந்து ஓரம் கட்டி நிறுத்தப்பட்டது. உள்ளே ஏசி என்பதால் சுகத்துக்கு பஞ்சம் இல்லாமல் சில பேர் தூங்கிக் கொண்டிருக்க.. பல பேர் என்ன என்ன ஆச்சு என்று எழுந்து வந்து முன்னால் இருக்கும் கதவை தட்டி நடத்துநரிடம் கேட்க… 

“என்னன்னு தெரியல சார்! டிரைவர் இறங்கி பார்த்துட்டு இருக்காரு நீங்க கொஞ்சம் வெயிட் பண்ணுங்க சார்! சரியாயிடும்!” என்றான்.

நித்திலாவும் அதைக் கேட்டுக் கொண்டிருந்தாள். கொஞ்ச நேரத்தில் சரியாகி விடும் என்று இவள் எதிர்பார்க்க.. கிட்டத்தட்ட 20 நிமிடங்கள் சென்றும் பேருந்து நின்ற இடத்தில் இருந்து நகரவில்லை!

இப்போது இன்னும் இரண்டு பேர் கேட்டு வந்த வண்ணம் இருக்க, இவளும் சென்று கேட்டவுடன் பஞ்சர் மேடம் என்றான் அந்த நடத்துனர்.

“கொஞ்ச நேரம் இறங்கி கீழே நிக்கலாமா? ஷேஃபான ப்ளேஸா?” என்று இவள் கேட்க..

“ஹைவேயில் நிக்குறோம் மேடம்! நிறைய பஸ் கார்லாம் போயிட்டு வந்திட்டு தான் இருக்கு. ஒரு சேஞ்சுக்கு வேணா இறங்கி கொஞ்ச நேரம் நின்னுட்டு, உள்ள போயிடுங்க மேடம்” என்றான்.

“ஓகே..!” என்றவள் இயற்கை காற்றை சுவாசிக்க சிறிது நேரம் வெளியில் வந்து நின்று ஆழ்ந்த மூச்சை எடுத்துக் கொண்டிருக்கும்போது அவளது ஃபோனில் மெசேஜ் வந்ததற்கான சத்தம்.

மனதில் ஒருவித எதிர்பார்ப்பு இருந்தாலும் அதனை முகத்தில் காட்ட வண்ணம் வேண்டா வெறுப்பாக பார்ப்பது போல, வாட்ஸ்அப் மெசேஜை ஓப்பன் செய்து பார்க்க.. அவள் நினைத்தது போலவே பிரணவ் இடம் இருந்து தான் வந்திருந்தது. 

உள்ளக்களிப்பை முகத்தில் இப்பொழுது காட்டாமல் இருக்க முடியவில்லை. அவன் தான் அருகில் இல்லையே என்று விட்டு, உதடு கடித்து சிரித்தவள் மெசேஜை ஓபன் செய்து பார்க்க… அவனிடமிருந்து தான் வாய்ஸ் மெசேஜ்.

“இப்பொழுது என்ன பாடல் பாடியிருப்பான்?” என்று ஒரு வித எதிர்பார்ப்புடன் அவள் ஹெட் ஃபோனை காதில் வைத்து கேட்க…

“நிதிலா… ஸ்ட்ரைட்டா ஒரு 20 ஸ்டெப்ஸ் வைச்சு வா.. ஐ அம் வெயிட்டிங் ஃபார் யூ!” என்றதோடு முடிந்திருக்க..

‘என்ன சொல்கிறான் இவன்?’ என்று புரியாமல் இரண்டு மூன்று முறை அதைக் கேட்டாள்.

அதற்குள் அடுத்த மெசேஜ். “பத்து தடவை கேட்டாலும் அதே தான் கேட்கும். கம் குயிக் நிதிலா” என்று!!

“வாட்???” அதிர்ந்தவள் அப்போது தான் அவன் சொன்னது சரியாக புரிந்து சுற்றும் முற்றும் பார்த்தாள். முதலில் ஹைவேயில் ஒன்றும் தெரியவில்லை. ஒரு கார் இவளை கிராஸ் செய்து போன அந்த வெளிச்சத்தில் அவனுடைய ரோஜ் ரோவர் சற்று தள்ளி நின்றிருப்பதை பார்த்தவள் திடுக்கிட்டாள்.

“என்ன இவன் இப்படி இறங்கிட்டான்?” என்று கை, கால் எல்லாம் லைட்டாக வியர்த்து வழிய..

“நோ பிரணவ்! நோ!! ஐ காண்ட்!!” என்று வாய் பேச முடியாமல் இவள் டைப் செய்து அனுப்ப..

“ஓஹ்.. சாய்ஸ் இஸ் யுவர்ஸ்! நீ மட்டும் வரலைன்னா அந்த பஸூல போறவங்களும் சேர்ந்து இதே இடத்துல தான் வெயிட் பண்ணிட்டு இருக்கனும்! நீ என் கூட கார்ல வந்த ஏற வரைக்கும்.. சோ பிட்டி!” என்று கூலாக முடித்திருந்தான்.

‘ரொம்ப நல்லதா போச்சு.. போடா! நானே அங்க போக பிடிக்காமல் தானே இருக்கேன். இப்படியே நிப்பாட்டினால் இது தான் சாக்குனு சக்குமா கிட்டே சொல்லிட்டு எஸ்கேப் ஆகி.. திரும்ப ரிட்டர்ன் சென்னைக்கே வந்துவிடலாம்!’ என்று இவள் குதூகலமாய் சிரிக்க…

“ஆமாம் நீ ஏதோ முக்கியமான அகேஷனுக்கு போறியாமே.. அப்படியா நிதிலா?” என்று வந்தது அடுத்து குறுஞ்செய்தி.

இவள் பதில் அளிக்கவில்லை. நான் முக்கியமான அகேஷனுக்கு போறேனு இவனுக்கு எப்படி தெரியும்? அதுவும் இந்த பஸ்ஸில் தான் போகிறேன்னு எப்படி தெரியும்? யார் அந்த கல்ப்ரிட்.. சக்குமாவா? மௌனிகாவா?” என்று யோசிக்க…

“ரொம்ப இல்லாத மூளையை போட்டு யோசிக்காத நிதிலா.. உன் பிரண்ட் மௌனிகா தான் சொன்னாங்க! அதுவும் நீ கரெக்ட் டைத்துக்கு போகலைனா.. உங்க மேம் கிட்ட இருந்து பயங்கர பாராட்டலாம் கிடைக்குமாமே? அப்படியா நிதிலா?” என்று வெகு நக்கலாக முடித்து இருந்தான் அடுத்த குறுஞ்செய்தியில்..

“ஃபுல் ஷிட்!” என்று இவள் இங்கு காலை உதைப்பதை தூரத்திலிருந்து சைடு மிரர் வழியாக பார்த்து ரசித்து இருந்தான் அந்த புண்ணியவான்.

“உனக்காக இப்படி வெயிட் பண்றது எனக்கு ஒன்னும் பிராப்ளம் இல்ல! என்ன உள்ள இருக்கிறது வெளியே தெரியாத அளவுக்கு தான் என்னோட கார் கண்ணாடி எல்லாம் இருக்கு. ஆனா பாவம்.. அந்த பஸ்ல இருக்குறவங்கள யாருக்கு என்ன அவசரமோ?” என்று பரிதாபப்பட்டு உச்சி கொட்டி முடித்து இருந்தவனை நேரில் கண்டால் இரண்டு அறை விட வேண்டும் என்று தோன்றியது அவளுக்கு.

அதுவும் தள்ளி இருந்து கொண்டு இப்படி வெறும் ஃபோன் குரலிலேயே தன்னை ஆட்டிப் படைக்கும் இவனை தலை முடியை பிடித்து இரண்டு ஆட்டாவது ஆட்ட வேண்டும் என்று வெகுவேகம் அவளுக்கு.

“நிதிலா.. ஒரு பாட்டு பாட வா?” என்று கேட்ட அடுத்த கணம்…

//புது ரூட்டில் தான்.. ஹெய்யா…
நல்ல ரோட்டுல தான்…
நின்றாடும் வெள்ளி நிலவு..//

அடுத்த பாட்டு வந்து விழ.. 

“உன்னை..!” என்று வேக வேகமான காலடிகளோடு அவன் காரை நெருங்க… “என்ன பேப்.. நான் சொன்னதும் அப்படியே நம்பிட்டு வந்துட்டுயிருக்க.. ஐ அம் ஜஸ்ட் கிட்டிங்.. நான் சென்னையில் இருக்கேன்!” என்றதும் பாதி தூரம் வந்தவள் அப்படியே அதிர்ந்து நின்று விட்டாள்.

‘இவன் சொல்வது பொய்யா? உண்மையா?’ என்று ஒரு கணம் யோசித்தவள் நம் செயலை தான் பார்த்த மாதிரி சொல்கிறானே இங்கே தான் இருக்கிறான் என்று மீண்டும் வேகமாக நடந்து வர..

“அப்பாடி மண்டையில் பல்பு எரிஞ்சுடுச்சு போல.. ஆமா கையில் இருக்கும் ஹேண்ட் பேக் ஓட வர! லக்கேஜ் உள்ளே இருக்கே.. அது வேணாம்மா நிதிலா…?” என்று இழுத்து அவன் கூற…

“அய்யோ..!” என்று தலையில் அடித்துக் கொண்டவள் மீண்டும் பேருந்தில் ஏறி தனது லக்கேஜை எடுத்துக்கொண்டு அங்கிருந்த நடத்துநரிடம், 

“கண்டக்டர் சார்.. பஸ் எடுக்க லேட் ஆகும் போல.. நான் கேப் புக் பண்ணி சொல்லிட்டேன். அதுல போகிறேன்” என்றவள் தனது லக்கேஜை எடுத்துக்கொண்டு இறங்கி கோபத்துடன் காலடிகளை வேகமாக எடுத்து வைத்து அவன் கார் அருகே போக.. கதவை திறந்தவன் “வெல்கம்.. நிதிலா!” என்றான் அழகாக கண்சிமிட்டி!!

அங்கிருந்து லக்கேஜை தூக்கி பின் பக்க சீட்டில் அவள் தூக்கி எறிய.. அவளின் கோபத்தை ரசித்தவன் ஃபோன் எடுத்து “உடனே கிளம்ப வேண்டாம்! ஒரு பத்து நிமிஷம் கழிச்சு கிளம்புங்க!” என்றான்.

அவன் சொன்ன விதமே அந்த பேருத்தின் டிரைவரோ இல்ல கண்டக்டரிடம் தான் பேசி இருக்கிறான் என்பது புரிய.. முகத்தை கடுப்போடு வைத்துக்கொண்டு இவள் திரும்பிக் கொள்ள…

//Never do this to me…
Don’t ever do this to me,
Baby… yaahhhhh….//

என்றவன் பாட… அவளோ திரும்பி அவனை முறைக்க…

//உன் பேர் சொல்லி சொல்லி,
என்னையே நான் மறந்தேன்…
உன் மின்னல் பார்வையில்,
என்னுயிரு நான் தொலைத்தேன்…//

“உங்க எப்ஃஎம்-ஐ நிறுத்துறீங்களா?” என்று அவள் கத்த…

“ஓகே.. அக்செப்டட்!” என்று இரு கையும் தூக்கிக் கொண்டவனின் கார் அந்த ஹைவேயில் விரைந்தது.

“நான் எங்க போறேன் தெரியுமா? எதுக்கு போறேன்னு தெரியுமா? எதுக்கு இப்படி என்னை கம்பெல் பண்ணி உங்க கூட கார்ல வர வச்சியிருக்கீங்க? நான் கவுன்சிலிங் கொடுத்தேன். அதோட முடிஞ்சிடுச்சி எல்லாம். நமக்குள்ள என்ன இருக்குனு இப்படி நீங்க ஃபாலோ பண்றது எனக்கு பிடிக்கல! நான் என்னோட மறுப்ப உங்க கிட்ட சொல்லிட்டேன். அதையும் தாண்டி நீங்க இப்படி பேசுறது.. பண்றது.. ஜஸ்ட் இரிடேட்டிங்!” என்று புலம்பிக்கொண்டே வந்தாள்.

அவள் என்னவோ சகஸ்ரநாம பூஜை செய்வது போல.. அதுவும் அவனுக்கே செய்வது போலவே அவளைப் பார்த்து சிரித்துக் கொண்டே வந்தான். ஒன்றும் பேசாமல் அவளை பேச விட்டு..

“உங்களோடது பலிக்காத ஆசை…!!”

“சலிக்காமல் போராடுவேன்!”

“வேணாமே ப்ரணவ்…!” அவள் கெஞ்ச

“வேணுமே நிதிலா…!” அவன் கொஞ்ச..

“இப்ப எதுக்கு நீங்க வந்தீங்க? எனக்கு போக தெரியாதா இல்ல பஸ் காரன் என்னை கொண்டு போய் கோயம்புத்தூரில் விட மாட்டானா? ஆமா கோயம்புத்தூருக்கு தானே என்னை கூட்டிட்டு போறீங்க?” என்று அவள் சந்தேகத்தோடு கேட்க அவளைப் பார்த்து ஆமாம் என்பது போல தலையசைத்தான்.

“அது ஒன்னும் இல்ல நிதிலா.. இன்னைக்கு என் பாட்டு வரலன்னு உத்து உத்து நீ வாட்ஸ் அப் சாட்ட பாத்துட்டு இருக்கனு ஒரு பட்சி சொல்லுச்சு.. அதனால தான் நேரடியாகவே பாடலாம்னு வந்தேன். ஆர் யூ ஹேப்பி பேப்?” என்று கண் சிமிட்டி சிரித்தான்.

அடுத்து அவள் பேச வரும்போது இடது சுட்டு விரலை அவள் உதட்டில் வைத்தவன் “கொஞ்ச நேரம் பேசாமல் தூங்கு.. எல்லாத்தையும் இப்பவே பேசணும் இல்ல! நமக்கு வாழ்க்கை பூரா இருக்கு.. ஐ மீன் லிவிங் இன் சொன்னேன்” என்று அவளை சற்று வெறுப்பேத்தினான்.

இனி அவனிடம் பேசுவது வேஸ்ட் என்று அவள் ஹாண்ட் பேக்கை கட்டிக் கொண்டு தூங்க முயல.. “ஜஸ்ட் வெயிட்!” என்றவன் காரை ஓரமாக நிறுத்தி அவள் சீட்டை சாய்வாக வைத்து நெக் பேண்டை எடுத்துக் கொடுத்தான். அவள் கழுத்தை சுற்றி வைத்துக் கொள்ள “இப்ப தூங்கு!” என்றதும் ஏனோ அவனின் இந்த அனுசரணை அவளுக்கு அழுகை தான் கூட்டி வர..

சீட் பெல்ட் போட வந்தவனை தட்டிவிட்டவள் “எங்களுக்கும் தெரியும்!” என்று ஒற்றை கண் சிமிட்டலில் கண்ணீரை உள்ள இழுத்துக்கொண்டு முகத்தை ஜன்னல் புறம் திருப்பி வைத்தவாறு உறங்க முயற்சித்தாள்.

மீண்டும் உறக்கம் வருவேனா என்று அவளுக்கு சண்டித்தனம் செய்ய.. புரண்டு புரண்டு படுத்தும் உறக்கம் வரவில்லை. அதுவும் ‘இவன் வண்டி ஓட்டும்போது நாம் தூங்கினால் இவனும் தூங்கிவிட்டால் என்ன செய்வது?’ என்பது போல அவனைப் பார்க்க..

“எனக்கு இப்படி லாங் ட்ராவல் எல்லாம் பழக்கம் தான்! நீ தூங்கு!” என்றான் அவளை மனதைப் படித்தவன் போல…

ஆனாலும் ஏதோ ஒன்று குறைந்தது. என்ன வழக்கம் போல அவன் பாடலைக் கேட்டுக் கொண்டே தூங்குவாள், இன்று அதில்லை.. அவனுக்கு தெரியாமல் ஹேண்ட் பேக்கிலிருந்து ஏர் பாடு எடுத்து காதில் மாட்டிக் கொண்டு.. அவள் மொபைலில் பாடலை தேடி வைத்தாள், அதுவும் அவனுக்கு தெரியாமல் அவனது பாடலையே கேட்டுக் கொண்டு அவள் வர…

முதலில் சாதாரணமாக இருந்தாலும் சற்றென்று அவளது வலது காதின் ஏர் பாடு பிடுங்கி தன் காதில் வைத்து கேட்டவன் சிரித்துக்கொண்டே “நிஜமே இங்க இருக்கு.. நிழல் வேணுமா? நான் உனக்கு பாட மாட்டேனா… நிதிலா? என்று ஆழ்ந்து கேட்க..

“ஒன்னும் வேண்டாம்!” என்று அவள் மொபைலை ஹேண்ட் பேக்கில் போட்டு விட்டு கண்களை இறுக்க மூடி சாய்ந்து கொண்டாள்.

கண்கள் தான் இறுக்க முடி இருந்தது. ஆனால் காதுகள் திறந்து இருக்க.. காதின் வழியே சற்று முன் அவள் கேட்ட பாடலின் அந்த ஆதார ஸ்ருதி மெல்ல மெல்ல இறங்க.. தன்னை மறந்து புன்னகையில் இதழ்கள் விரிய.. சற்று நேரத்தில் ஆழ்ந்த உறக்கத்திற்கு சென்று விட்டாள் நிதிலா.

கோயம்புத்தூர் டோல்கேட்டை தாண்டி சென்று விட்டார்கள். அவள் கோயமுத்தூர் செல்கிறாள் என்று தான் தெரியும். எங்கே என்று தெரியாது. அதனால் வழியில் தெரிந்த ஒரு ஹோட்டலில் காரை நிறுத்தியவன் தூங்கும் அவளை மெல்ல எழுப்ப, கண்திறந்து பார்த்தவள் இவனை பார்க்க.. 

அதிகாலையில் இவ்வளவு அருகில் அவளுக்கு பிடித்த க்ரெஷின் முகம் வெகு அருகில்.. புன்னகைத்தவாறே “குட்மார்னிங் ப்ரணவ்..” என்றவளின் தளிர் விரல்கள் அவளையும் அறியாமல் தன் முகத்துக்கு மிக அருகே இருந்த அவனது முடி அடர்ந்த கன்னங்களை மெல்ல வருட.. அவனும் அவளை ஆச்சரியமாக பார்த்திருந்தானே ஒழிய முகத்தை விலக்கவில்லை.

“ஐ லைக் யுவர் வாய்ஸ்! ஐ லவ் யுவர் வாய்ஸ்!” என்று அவள் மீண்டும் தூக்கத்துக்குள் சென்று விட..

“அடிப்பாவி.. நான் கூட ஒரு நிமிஷம் என்னதான் சொல்றியோனு நினைச்சேன்! என் குரலை தான் சொன்னியா?” என்று சிரித்துக் கொண்டவன் மீண்டும் அவளை எழுப்ப, எழுந்ததும் ரெப்ரஷ் அங்கே முடித்து இருவரும் சூடாக டீ குடித்துக் கொண்டிருக்க..

“எங்க போகணும்?” என்றான். அவள் லொகேஷனை தனது போனில் காட்ட… அதை தனது காரின் ஜிபிஎஸில் கனெக்ட் செய்தவன் அவ்வழியே சென்றான்.

இருள் புரியாத அதிகாலை வேளை.. ஆங்காங்கே சில கடைகளும் மனிதர்கள் மட்டுமே எழுந்ததற்கான அறிகுறிகள் தெரிய… இவர்கள் கார் சென்று நின்றது ஒரு பெரிய கல்யாண மஹால் முன்னே..

‘பிடிஎன் சன்ஸ் உங்களை அன்புடன் வரவேற்கிறார்கள்!’ என்ற பதாகைகள் ஆங்காங்கே இருக்க.. அவனுக்கு அதெல்லாம் கருத்தில் பதியவில்லை. அவள் இறங்கும் போகும் முன் கையை பிடித்தவன் “நான் சொன்னதை கொஞ்சம் யோசி நிதிலா?” என்றதும்…

அவனை திரும்பி பார்த்து “ஆல்ரெடி!! நான் சொன்னது தான். உங்களுக்கு நீங்க எதுக்காக கேக்குறீங்களோ அதுக்கு நான் பயன்பட மாட்டேன்!” என்றாள் அழுத்தம் திருத்தமாக…

அவனோ குறும்பு புன்னகையோடு அவளைப் பார்த்து “ஷாப்பிங் இல்லைனாலும் பரவால்ல விண்டோ ஷாப்பிங் மட்டுமாவது இருக்கும் தானே? இப்போதைக்கு எனக்கு அது போதும்! பை பை..!” என்றவன் காரை கிளப்பி சென்று விட்டான்.

‘அது என்ன விண்டோ ஷாப்பிங்?’ என்று புரியாமலேயே இவள் அந்த கல்யாண மஹாலுக்குள் நுழைந்தாள்???

“வாடியம்மா வா.. ஊரே கல்யாணத்துக்கு வந்துட்டு! அத்தகாரி நீ இப்பதான் வர!” என்று நொடித்தப்படி வரவேற்றாள் நித்திலாவின் பெரிய அண்ணி!



ஊஞ்சலாடும்….























Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *